Monday, 28 December 2009

மதம்...திறக்கக் கூடாத கதவு??

எச்சரிக்கை 1: இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு, நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று முகத்திரை இடுவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் மதங்களையும் கடவுளையும் மறுப்பவன் என்ற முறையில் எனக்கு எந்த மதத்தின் மீதும் மதிப்பில்லை...என் பெற்றோரின் மதமான இந்து மதமும் இதில் அடக்கம்...மனம் சார்ந்த பதிவு என்பதை விட இது முழுக்க முழுக்க மதம் குறித்த பதிவு...எழுத்து மிக நேரிடையாக இருக்கக் கூடும்....If you can't call shit as shit, please LEAVE NOW!.

எச்சரிக்கை 2: கன்னமிடும் கயவருக்கு அன்னமிடும் பெண்டீரை தாமாக தாரை வார்க்கும் கூட்டம்....திறந்து வைத்த பண்டங்கள் என்று பெண்களை ஏதோ தின்பண்டம் போல எழுதும் பதிவரை கண்டிக்க வக்கில்லாத போலி முற்போக்கு பதிவர்கள், என்னை இந்து வெறியன் என்றோ, கொண்டை என்றோ, பூணூலை உள்ள போடு என்றோ சொல்லக் கூடும்....முத்திரைகள், பாரம்பரியம், கலாச்சாரம், போலி முற்போக்குவாதிகள், குறிப்பாக மதநூல்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்பதால் கெட்ட வார்த்தைகளும் இருக்கலாம்... YOU HAVE BEEN WARNED! AND YOU HAVE THE CHOICE TO CLOSE THIS BROWSER WINDOW AT ANY TIME. NOW ITS UP TO YOU TO PROCEED!!!
எச்சரிக்கை 3: முன்கதை தெரியாமல் இடுகையை தொடர்ந்தால் முடியை பிய்த்துக் கொள்ள நேரிடலாம் என்பதால் தயவு செய்து இந்த இடுகைகளை படித்து விட்டு தொடரவும்...
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_27.html
http://sumazla.blogspot.com/2009/12/blog-post_25.html
http://kalakalapriya.blogspot.com/2009/12/blog-post_25.html
http://ojasviviji.blogspot.com/2009/12/blog-post_5312.html

================

யார் பர்தா அணிந்தால் எனக்கென்ன? அணியாவிட்டால் எனக்கென்ன? பர்தா அணிந்தால் நற்குடி...இல்லாவிட்டால்? ம்ம்ம்...சரி, நற்குடி இல்லை நாறக்குடி என்றே இருந்தாலும் எனக்கென்ன போச்சு? யார் எப்படிப் போனால் எனக்கென்ன? பல பிரபல பதிவர்களும், முற்போக்கு பதிவர்களும் செய்தது/செய்வது போல வெறுமனே மெளனம் சாதித்து கொண்டு இருக்கலாம் தான்...எந்த எதிர்வினையும் புரியாது மெளனமாய் இருந்தால் பின்னாளில் முற்போக்கு பதிவர் என்ற முத்திரையாவது மிஞ்சும்....என்னை யாரும் நற்குடி இல்லை என்றோ தேவடியா மவன் என்றோ நேரடியாக சொல்லவில்லை...உண்மையில் இது என் பிரச்சினை இல்லை என்று கூட சொல்லிவிட முடியும் தான்....அவரவர் உடை அவரவர் விருப்பம்...இதில் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை? ம்ம்ம்...அப்படியும் சொல்லிவிட முடியாது...என்றைக்கு நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு வேலைக்கு போன என் தோழி அடையாளம் சொல்ல ஒரு உடல் பாகம் கூட இல்லாது கருகி எரிந்து போனாளோ அன்றைக்கே மதமும், மத அடையாளங்களும், மதத்தால் சொல்லப்படும், செய்யப்படும் விஷயங்களும் என் பிரச்சினை ஆகிவிட்டது...


பர்தா பற்றி பேசும் போது இங்கு பிரிட்டனில் கண்கள் மட்டுமே தெரியும் படி பர்தா அணிந்து வேலைக்கு போனதால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு டீச்சர் பற்றிய கதை ஞாபகம் வருகிறது....வீட்டில் இருக்கும் போது பர்தா அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பள்ளி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது கண்கள் மட்டும் தெரியும் படி உடை உடுத்துவது அவர்களின் கல்வியை பாதிக்கிறது...முறையான கல்வி குழந்தைகளின் மனித உரிமை என்று கோர்ட் டீச்சரின் கேஸை தள்ளுபடி செய்துவிட்டது...(இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அந்த பள்ளி சர்ச் ஆஃப் இங்கிலண்டினால் நடத்தப்படுவது...இவர் வேலைக்கான இன்டர்வியூவுக்கு போன போது பர்தா அணியவில்லை!)...இவர் வெளியிட்ட அறிக்கையில் பர்தா அணிவது தனது மத உரிமை என்று சொல்லியிருக்கிறார்... அதே சமயம், அதே இஸ்லாமை பின்பற்றுவதாக சொல்லும், பல கொடூர கொலைகளை செய்த தலிபான் பன்றிகள் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முகத்தில் இருந்து பர்தாவை விலக்கி விட்டு ஆசிட் ஊற்றும் கொடூரத்தை எப்படி புரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை...நாளை எனக்கு ஒரு பெண் பிறந்து அவள் எல்.கே.ஜி போகும் போது அவள் முகத்திலும் ஆசிட் ஊற்றப்படுமோ என்று கவலை ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை...

பர்தா அணிபவர்கள் நற்குடி என்றால், அணியாதவர்கள் என்ன என்ற கேள்வியை வாசிப்பவர்களுக்கே விட்டு விட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும், அதன் அடிப்படையையும் பற்றியே யோசிக்கிறேன்... உண்மைதான்....என்ன உடை அணிய வேண்டும் என்பது மிக நிச்சயமாக தனி மனித உரிமை...ஆனால் அந்த உடை மத ரீதியான உடை என்றால் கேள்விகள் எழுவதை நிச்சயமாக தவிர்க்க முடியாது....குறிப்பாக முகத்தை மூடும் உடைகள்.... பலர் கூடும் பொதுவான இடத்தில் முகம் மறைக்கும் இவர்கள் சொல்ல வருவது என்ன? உங்களுடன் கலக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை, எங்களை தனித்து விடுங்கள் என்பதா?? அப்படி தான் எனில், மற்ற சமுதாய மக்கள் இவர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து ஒதுக்குவதை தடுக்க முடியாது....பின்னாளில், நாங்கள் ஒதுக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம் என்று குறை சொல்ல எந்த இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை....You will reap what you sow!

=====================

சில மாதங்களுக்கு(??) முன் உன்னைப் போல் ஒருவனில் வரும் , பேக்கரியில் எரித்துக் கொல்லப்பட்ட் ஒரு முஸ்லிம் பெண்ணை பற்றி வரும் ஒரு மோசமான வசனத்தை பதிவர்கள் பலரும் கண்டித்து எழுதியிருந்தார்கள்....அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விமர்சனமே....ஆனால் அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியே பெற்றது....

படத்தை கிழித்த பதிவர்கள், படத்தின் வெற்றியை குறித்து எதுவும் ஆராய்ந்ததாக தெரியவில்லை... படத்தை விட, படத்தின் வெற்றியே எனக்கு முக்கியமாக தெரிகிறது....தமிழ் சினிமாவுக்கே உரிய குத்து பாட்டு, நாயகனின் குத்து டயலாக், வடிவேலு/விவேக் காமெடி, ஹிட்டான பாடல்கள் என்று எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத இந்த படம் வெற்றி பெற என்ன காரணம்?? உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், இந்த வெற்றி தரும் செய்தி மிக கவலைக்குரியது... மத ரீதியாக பிளவுபட்டிருக்கும், தீவிரவாதி என்றால் முஸ்லீம் என்று நினைக்கும் ஒரு மனநிலையை தான் இது காட்டுகிறதா? இந்த மன நிலை சரியா தவறா என்றால்....மிக நிச்சயமாக தவறு தான் ஏனெனில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, எல்லா சமுதாயத்து மக்களும் வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

ஆனால், மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு, பெங்களூர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், லண்டனில் ட்யூப் ரயில் குண்டு வெடிப்பு, நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல், மீண்டும் மும்பையில் பொது மக்கள் மீது கொடூரமான கொலை வெறி துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்து வரும் விஷ்யங்களால் மக்களின் மனநிலை "உன்னைப் போல் ஒருவனை" வெற்றி பெறச் செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒப்புக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதன் நியாய தர்மங்களை விவாதித்தாலும் இது தான் உண்மை!

======================
இந்த சூழ்நிலையில் பர்தா அணிந்தால் நற்குடி என்றும், திறந்து வைத்த பண்டங்கள் என்று எழுதுவது மிக கசப்பான உணர்வையே தருகிறது....என்னதான் இது மதம் சார்ந்த பதிவல்ல, மனம் சார்ந்த பதிவு என்று அறிவித்தாலும் திறந்து வைத்த பண்டங்கள் என்ற எழுத்துக்களில் தெறிப்பது மிகத் தீவிரமான மத உணர்வே என்றே புரிந்து கொள்ள முடிகிறது...இவர் சொல்லும் க்றிஸ்த்மஸ் வாழ்த்துக் கூட....ஸாரி....தவறாகவே புரிந்து கொள்ளப்படலாம்!

==========================
பி.கு. 1: முற்போக்கு பதிவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் நமக்கென்ன வந்தது என்று சும்மா இருக்கும் போது நற்குடி என்ற சொல்லாடலின் விபரீதத்தை சுட்டிக்காட்டி பின்னூட்டமிட்ட/இடுகையிட்ட பதிவர்கள் கோவி.கண்ணன், துளசி டீச்சர், சஞ்சய் காந்தி, கலகலப்ரியா, "மயில்" விஜி ராம், உண்மைத் தமிழன், குடுகுடுப்பை, பிரபாகர், செல்வேந்திரன், இன்னும் பலருக்கும் நன்றி...உங்களில் எல்லோருடனும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், துணிச்சலாக பேசும் உங்கள் போன்றாரால் தான் கருத்து விவாதம் என்பதே சாத்தியமாகிறது...

பி.கு. 2: இது போன்ற சென்சிட்டிவான இடுகைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று எனக்கு மிகவும் பிடித்த‌ பதிவர் வடகரை வேலன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்....அவர்களின் நல்ல மனதையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டாலும் சில விஷயங்களை என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை...

பி.கு. 3: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்றாலும் தியாக ராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத், பெரியார், பார்ப்பனர்கள், ஜெயலலிதா, கருணாநிதி, சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று எந்த விஷயத்தை பேசினாலும் யாருக்காவது மனம் புண்படத் தான் செய்யும் என்பது எழுதப்படாத உண்மை...இதைப் படிப்பவர்களில் யார் மனமேனும் புண்படுமாகில், I am Sorry, but I have no other way!

பி.கு. 4: இடுகையில் எழுதப்பட்டிருப்பவை என் எண்ணங்கள் மட்டுமே...இதைப் படிப்பவர்கள் வெட்டியோ/ஒட்டியோ தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் எனது புரிதலுக்கு உதவி செய்யும்...நன்றி!

படம் உதவி: BBC மற்றும் The New York Times

Monday, 14 December 2009

....என்னைத் தவிர.


எத்தனை முறை கிழித்தாலும்
ஏதேனும் ஒன்று
ஒட்டிக் கொண்டே இருக்கிறது....

ஒன்றல்ல இரண்டல்ல‌
எண்ண ஆரம்பித்தால்
கணிதத்தின் வரம்பு மீறி...

அடிக்கடி நடப்பது தான் என்றாலும்
அன்றைக்கு...
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்றே ஆரம்பித்து....
எல்லாம் சுழியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது....

அவர் மகன் இவர் பேரன்
இந்த ஊர்க்காரன்
அந்த ஊர்க்காரன்

அவன் தம்பி இவள் அண்ணன்...
எத்தனை ஊர்கள் எத்தனை பேர்கள்....
எல்கேஜி பையன்...
எட்டாங்கிளாஸ் பி ஸ்டூடண்ட்...
டென் த் சி....ட்வெல்த் ஏ...

அவளோட ஆளு...
இவளுக்கு டாவு...
எம்மாவின் எக்ஸ் பாய்ஃப்ரண்ட்...
எங்க பொண்ணு ஹஸ்பெண்ட்...
அவனோட அப்பா...
இவளோட மாமா...

எதிர்வீட்டு பையன்..
மேல்வீட்டு பையன்...
தினமும் சிரிக்கும் பெயர் தெரியாத நண்பன்...

மார்க்கெட் அனலிஸ்ட்..
Fat Cat Banker...

நான் ரெசிடன்ட் இன்டியன்...
இந்தியத் தமிழன்...
தமிழ்நாட்டுத் தமிழன்...
ஏஷியன் ப்ரிட்டிஷ்...

எத்தனை முறை கிழித்தாலும்
எல்லோரும் இருக்கிறார்கள்....
என்னைத் தவிர!

Thursday, 26 November 2009

பிடிக்காத பத்தும் சில பதில்களும்........

//
ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....": இந்தப்பதிவுக்கு பின்னூட்டமோ, உங்களுக்கு பதில் சொல்வதிலோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லை. இருப்பினும் நான் மிக மதிக்கும் பதிவர்கள் சிலரின் மதிப்பை நீங்கள் பெற்றிருப்பது இங்கிருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிகிறது. மகிழ்ச்சி. அவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் என் கருத்தை தெரியப்படுத்த விரும்பி இந்தப் பின்னூட்டம். 'அழுக்கின் அழகு' சிறுகதை ஒரு ஃபார்மெட்டுக்குள் எழுதப்பட்ட கதை. மேலும் அந்தக்கதையின் முடிவில் பின்குறிப்பாக.. //அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன்.// என்ற என் கருத்தையும் தந்துள்ளேன். எல்லா படைப்புகளுமே படைப்பாளியின் முழு தத்துவார்த்தத்துடன் மலர்ந்துவிடுவதில்லைதான். எழுத்துக்களும் பல சமயங்களில் அரசியல் சாயம் பூசிக்கொண்டுதான் எழுதப்படுகின்றன. அதையும் மீறி அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக்கதையை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடும்தான். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள பத்தியில் எவற்றின் தொடர்ச்சியாக என்னை கலாச்சார காவலன் என்று சித்தரித்திருக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. //பெரும்பாலான‌ ப‌திவுக‌ள் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளின் ம‌று பிர‌தியாக‌வே இருக்கின்ற‌ன‌....காந்தி புனித‌மான‌வ‌ர், யாம‌றிந்த‌ மொழிக‌ளில் த‌மிழ் தான் இனிமை, குடிப்ப‌ழ‌க்க‌ம் ச‌முதாய‌த்தின் மிக‌ப் பெரிய‌ தீமை, தாய்மை வ‌ண‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்ப‌டி நிறைய‌....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழ‌கு..// இது உங்கள் கூற்று. இதன் ஒரு வரியை உங்களுக்கு எதிராக திருப்பினால் எவ்வளவு அநாகரீகமாக மாறிவிடும்.? எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பில்லாத உங்களை என்ன சொல்வது நான்? அதையும் தவிர்த்து பெண்கள் உடைகளை திருத்தமாக அணிவது என்ற கருத்தை நான் சொல்லவந்ததாகவும், அது கலாச்சார காவலர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட மேற்கூறிய பிற குற்றச்சாட்டுகளுக்கு என் பதிவுகளிலிருந்து எடுத்துக்காட்டு தரமுடியுமா? அல்லது பெண்கள் விஷயம் மட்டும்தான் என்னுடையது, பிற பிறரைப்பற்றியது எனில் அவற்றின் இணைப்புகளையும் தரவேண்டியதுதானே? மாற்றுக்கருத்தும், பிடிக்காதவற்றைச் சொல்வதும் இயல்பானது என்றே நான் எண்ணுகிறேன். அதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். சரியான வாதம் இருக்கவேண்டும். சாட்டப்பட்டவர் வெட்கி ஒத்துக்கொள்வதாக இருக்கவேண்டும். மாறாக என் குறித்தும், நண்பர் பரிசல் குறித்தும் நீங்கள் சொல்வதைப்போல இருக்கலாகாது என நான் நினைக்கிறேன். பரிசல்காரன் மிகக்குறுகிய காலத்தில் 500க்கும் அதிகமான ஃபாலோயர்களையும், 3 லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் பெற்ற புகழ்மிக்கவர். இது அவரது எழுத்தால் எத்தனை பேரை கவர்ந்திருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. அத்தனை பேரைக்கவர்ந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அதை இப்படித்தான் பதிவு செய்வதா.? நீங்கள் எழுதிய வரிகளில் கண்ணியமோ, குறைந்த பட்ச நியாயமோ இருப்பதாகப் படுகிறதா உங்களுக்கு.? இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம். வாழ்த்துகள்.! (இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.)
//

ஆதி,

நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து நானும் அதை எழுதவில்லை...நீங்கள் மிக மதிக்கும் சில பதிவர்களுக்கென்று சொல்லிவிட்டதால் எனக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல விருப்பமில்லை...ஆனால் என் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெளிவுபடுத்த இந்த பதில்...

முதலாவதாக விகடனுக்கோ இல்லை இன்ன பிற பிரபல இதழ்களுக்கோ எப்படி கதைகள் எழுதப்படுகின்றன என்று எனக்கு தெரியாது...அவர்களே ஃபார்மட், தீம் எல்லாம் கொடுப்பார்களா என்பதும் எனக்கு தெரியாது...ஆனாலும் அதன் ஃபார்மட் குறித்து எனக்கு எந்த எண்ணமும் இல்லை...அது அவர்கள் பிரச்சினை...எழுதுபவர்கள் பிரச்சினை...வாசிப்பவனுக்கு தேவையில்லாத ஒன்று...

அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அழுக்கின் அழகை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதும் எனக்கு தெரியாது...என்னால் மிக சாதாரண விஷயங்களையே புரிந்து கொள்ள முடிவதில்லை...ஆனால், அந்த குறிப்பிட்ட கதையில் சாஃப்ட்வேர் பெண்களை (மட்டும்) நீங்கள் குறிப்பதாக நான் எண்ணவில்லை....சாஃப்ட்வேர் பெண்கள், சித்தாள்கள் என்ற உருவகங்களை நீக்கி விட்டு அழுக்கின் அழகு என்ற தலைப்போடு புரிந்து கொண்டால்???

இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு ஒன்று அழகு என்றால் மறு நிகழ்வு என்னவென்று அர்த்தமாகிறது??? அசிங்கம் என்றல்லவா?? சரி....அந்த பெண்கள் கவர்ச்சியான உடை அணிகிறார்கள்....ஆண்களை கவர விரும்புகிறார்கள்....அப்படி எடுத்துக் கொண்டாலும் அது எப்படி அசிங்கம் என்றாகும் என்பது எனக்கு புரியவில்லை....இனக்கவர்ச்சி என்பது எல்லா உயிருக்கும் இருக்கும் மிக மிக சாதாரண அடிப்படையான உணர்வு... ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....ஆனால் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்...இல்லாவிட்டால் அசிங்கம் என்ற‌ ரீதியில் பேசும் தவறான கலாச்சார கருத்தே எனக்கு அர்த்தமாகிறது.... இப்படித் தான் இருக்க வேணும் பொம்பள???????

உண்மை தான்....நீங்கள் என்ன பொருளில் எழுதினீர்கள் என்று யாருக்கும் தெரியாது....அது உங்களுக்கும் பதிப்பித்த விகடனுக்கும் தான் வெளிச்சம்.....இது போன்ற கதைகள் 1940/50களில் வந்த பழைய விகடன்களில் பார்த்திருக்கிறேன்...விகடன் இன்னமும் அதே காலகட்டத்தில் இருப்பதை புரிந்து கொள்ளாதது என் பிழையே...

உங்களை கலாச்சார காவலராக சித்தரிக்கும் நோக்கமில்லை...ஆனால் என் புரிதலில் எது போன்ற எழுத்துக்கள் அநீதியான செத்துப் போக வேண்டிய‌ கலாச்சாரத்தை சித்தரிக்கின்றன என்பதன் உதாரணமாகவே அந்த சுட்டி கொடுக்கப்பட்டது....மற்றவர்களின் சுட்டியும் கொடுத்திருக்கலாம்...ஆனால் உங்கள் பதிவுக்கு அடிக்கடி வந்து போவதால் முகவரி நினைவில் இருந்தது...மற்றவை இல்லை...

என் எழுத்தில் கண்ணியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்...பொறுப்பில்லாத எழுத்து என்றும்...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி....கட்டமைப்புகளின் அளவுகோல் படி நான் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று...என்ன செய்வது....என்னால் முடிந்தது இவ்வளவு தான்...ஆதலால் என்னை கண்ணியத்துடன் மன்னிக்க... ஆனால் யாரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ அவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும் என்பதே கொஞ்சம் கூட என் நோக்கமல்ல...அது எனக்கு தேவையில்லாத வேலை....பரிசல்காரன் மிக பிரபலமானவர் என்பதும் அவரது எழுத்து நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது, அவருக்கு நிறைய வாசகர்கள் உள்ளார்கள் என்பதும் மிக உண்மை...அதை யாரும் மறுக்க முடியாது....மறுப்பது என் நோக்கமும் இல்லை...ஆனால் அவர் எழுத்து எனக்கு பிடிக்கவில்லை என்பது மட்டுமே நான் எழுதியது....

// இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம். வாழ்த்துகள்.! //

யாரேனும் பாராட்டுவார்கள் என்பதற்காக நான் எதுவும் எழுதுவதில்லை.. அப்படி எழுதுவது தன்னை விற்பனை செய்வது என்பது தனிப்பட்ட முறையில் என் எண்ணம்....நான் நினைப்பதை எழுதுகிறேன்...படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டுகிறார்கள்...இல்லையேல் இல்லை...

// (இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.) //

தொடரின் நோக்கம் சிதறிவிட்டதாக வருத்தப்படுகிறீர்களா?? ஸாரி, இது கொஞ்சம் காமெடியாக இருக்கிறது....உண்மையில் இன்டர்நெட் என்பதே கூட இன்ட்ரானெட்டாக வேறு ஒரு நோக்கத்திற்கு கண்டுபிடிக்கப்பட்டு இன்டர்நெட்டாக உருமாறி இருக்கிறது....நாம் உபயோகிக்கும் பல விஷயங்கள் வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையே...உருமாற்றம் என்பது வளர்ச்சியின் அடையாளம்....அதனால் யார் இந்த தொடரை உருமாற்றி இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும்....இல்லை நான் தான் மாற்றி விட்டேன் என்றால் அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே...

பெயர்ப் பட்டியல்களை இடுவது மேதாவிலாசமா??? ஏன் ஒரே ஒருவரை தான் பிடிக்க வேண்டும்/பிடிக்க கூடாதா?? சரி..உங்கள் வழிக்கே வந்தாலும் பிடித்தவர்/பிடிக்காதவர் பட்டியலில் இருப்பவர்களோ இல்லை வாசிப்பவர்களோ யோசிக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...வெறுமனே என் விருப்பத்தை சொல்லும் முயற்சி...பலர் கருணாநிதியை பிடிக்காது, ரஜினிகாந்த்தை பிடிக்காது, விஜயை பிடிக்காது என்று கூட சொல்லியிருக்கிறார்கள்....இதைப் படிப்பவர்களோ இல்லை ரஜினிகாந்த்தோ ரூம் போட்டு ஏன் என்று யோசிக்கப் போகிறார்களா??? மன்னிக்க...எனக்கு நம்பிக்கையில்லை....
=============================

அடுத்து பதிவர் ராமலஷ்மி அவர்களுக்கான பதில்...

//

ராமலக்ஷ்மி has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....
":
அன்புள்ள அதுசரி,
எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுத முடியாதுதான். இங்கே நீங்கள் கூறியிருப்பது ஏற்கனவே என் சுதந்திரதினப் பதிவில் நீங்கள் முன் வைத்த் கருத்துதான். அதை பிரசுரிக்கவும் செய்துள்ளேன். என்னை பெரிய கவிஞர் என நான் சொல்லிக் கொள்ளவில்லை. எனது பதிவொன்றிலேயே ‘நான் எழுதுபவையும் கவிதைகள்தானா’ எனத் திகைத்து நின்ற போது ‘அப்படியெல்லாம் யோசித்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே முடியாது’ என நண்பர்கள் தந்த ஊக்கத்தில்தான் தொடர்ந்து எழுதினேன் என்றே குறிப்பிட்டிருப்பேன். உங்கள் போன்ற சிலருக்கு என் படைப்புகள் அத்தனை கஷடத்தைக் கொடுத்திருப்பதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதையெண்ணி என் எழுத்துக்கு எந்த வேகத் தடையும் விதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
பிரபலங்களோடு சேர்த்து பேசியிருப்பதாகப் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டுமெனில் நானும் ஒரு பிரபலத்தை உதாரணப் படுத்துகிறேன். எனிட் ப்ளைட்டனை ஆரம்ப காலத்தில் பிபிசி குழந்தைகளுக்கு எழுதும் இவரைப் பேட்டி காண்பதா என ஒதுக்கியதைப் பற்றி ஒரு செய்தியை சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தேன். அதற்காக அவர் எழுதுவதை நிறுத்தி விடாமல் தன் பாணியிலேயே தொடர்ந்து, வெற்றியும் கண்டார். வலைப்பூவின் கட்டற்ற சுதந்திரம் எப்படி விரும்பியதைப் பதிய வழிவகுத்திருக்கிறதோ அதே போல விரும்புவதைச் சுட்டி வாசிக்கவும் சவுகரியம் தந்துள்ளது. விருப்பமற்ற பின் உங்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாமென அக்கறையின்பால் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனங்கள் என்றைக்கும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் இது போன்ற விமர்சனங்களா என்று என்வரையில் எனக்குத் தெரியவில்லை. எனது சில கவிதைகளை [அப்படி நான் கூறிக் கொள்பவற்றை] ‘இணையத்திலிருந்து’ என்ற குறிப்புடன் செய்தித்தாள்கள் சிலவற்றின் வாரமலர்களில் அவர்களாகவே எடுத்து வெளியிடுகிறார்கள். இணைய இதழ்களும், பத்திரிகைகளும் என் படைப்புகளை அங்கீகரித்தே வருகின்றன. (இதை அச்சீவ்மெண்ட் என்றும் சொல்ல வரவில்லை). எளிமைக்காகவே என் எழுத்துக்களை விரும்புபவரும் உள்ளார்கள். உங்களுக்குப் பிடிக்காததால் எல்லோருக்கும் பிடிககாதென அர்த்தமில்லை என நீங்களே சொன்னபடி, பிடித்த அந்த வெகு வெகு சிலருக்காக மட்டும் தொடர்கிறேன். என்றைக்கேனும் என் படைப்புகளில் சில பள்ளிப்பாடத் திட்டத்தில் வருமேயானால் அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையுமே கொள்வேன்:)!
மிக்க நன்றி.
அன்புடன்
ராமலக்ஷ்மி

//

அன்புள்ள ராமலஷ்மி, உங்கள் எழுத்துக்கு வேக தடை போடுவது என் நோக்கமல்ல...நீங்கள் கஷ்டப்படுத்துவதாகவும் நான் சொல்ல வரவில்லை...உங்கள் இடுகைகளை வாசித்தது என் சுயவிருப்பத்தின் பேரில் நிகழ்ந்தது...அதை நீங்கள் கஷ்டப்படுத்துவதாக எப்படி சொல்ல முடியும்???

கவிதைகளா என்று கேள்வி எழுப்பியது மீண்டும் என் தனிப்பட்ட விருப்பின் பேரில் தானே தவிர, நான் கேள்வி எழுப்பியதாலேயே அவை கவிதைகள் இல்லை என்று ஆகிவிட முடியாது.....இது தான் கவிதை, இது தான் இலக்கியம் என்று எந்த வரைமுறையும் இல்லை...யாரும் செய்யவும் முடியாது....ஆனால், தனிப்பட்ட முறையில் கவிதையோ இல்லை வேறு எந்த இலக்கியமோ சம கால வாழ்க்கையின் ஏதாவது ஒரு பக்கத்தையாவது பதிவு செய்ய வேண்டும்...இலக்கியத்தில் நிகழ்வுகள் மட்டுமே இருக்கும்...நீதி போதனைகளும் அறிவுரைகளும் ஏன் குறைந்த பட்சம் ஒரு மெஸேஜூம் கூட இருக்காது....அவை நிகழ்வுகளின் அடிப்படையில் வாசிப்பவனால் உணரப்பட வேண்டும் என்பது என் எண்ணம். போதனைகளையும் நன்னெறி நூல்களையும் இலக்கியம் என்பது சுய முன்னேற்ற புத்தகங்களை இலக்கியம் என்று சொல்வது போல இருக்கிறது....(மீண்டும்...இவை எனது சொந்த கருத்துக்களே தவிர, நான் எதையும் வரையறை செய்ய முற்படவில்லை)

மற்றபடி, நீங்கள் விரும்பிய படியே உங்கள் படைப்புகள் பள்ளி பாடத்திட்டத்தில் வர வாழ்த்துக்கள்...என்னைக் கேட்டால் அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே சொல்வேன்...:0)))

மிக்க நன்றி...

அன்புடன்,
அது சரி

Monday, 23 November 2009

தொலைந்து போன பின்னூட்டங்கள்....

Adhimoola Krishnan and Ramalakshmi had left a message in my previous post, but for some reason it got lost. I will try to restore it, but until I succeed, those comments will appear on this post. So, this is not a real post.. only a placebo.

Thank you Adhimoola Krishnan and Ramalakshmi. I'll try to post a reply as soon as time permits, may be in a day or two. Sorry for the delay...


Now over to Adhimoola Krishnan and Ramalakshmi.

==========================

ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....":

இந்தப்பதிவுக்கு பின்னூட்டமோ, உங்களுக்கு பதில் சொல்வதிலோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லை. இருப்பினும் நான் மிக மதிக்கும் பதிவர்கள் சிலரின் மதிப்பை நீங்கள் பெற்றிருப்பது இங்கிருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிகிறது. மகிழ்ச்சி. அவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் என் கருத்தை தெரியப்படுத்த விரும்பி இந்தப் பின்னூட்டம்.

'அழுக்கின் அழகு' சிறுகதை ஒரு ஃபார்மெட்டுக்குள் எழுதப்பட்ட கதை. மேலும் அந்தக்கதையின் முடிவில் பின்குறிப்பாக..

//அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன்.//

என்ற என் கருத்தையும் தந்துள்ளேன். எல்லா படைப்புகளுமே படைப்பாளியின் முழு தத்துவார்த்தத்துடன் மலர்ந்துவிடுவதில்லைதான். எழுத்துக்களும் பல சமயங்களில் அரசியல் சாயம் பூசிக்கொண்டுதான் எழுதப்படுகின்றன. அதையும் மீறி அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக்கதையை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடும்தான். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள பத்தியில் எவற்றின் தொடர்ச்சியாக என்னை கலாச்சார காவலன் என்று சித்தரித்திருக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

//பெரும்பாலான‌ ப‌திவுக‌ள் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளின் ம‌று பிர‌தியாக‌வே இருக்கின்ற‌ன‌....காந்தி புனித‌மான‌வ‌ர், யாம‌றிந்த‌ மொழிக‌ளில் த‌மிழ் தான் இனிமை, குடிப்ப‌ழ‌க்க‌ம் ச‌முதாய‌த்தின் மிக‌ப் பெரிய‌ தீமை, தாய்மை வ‌ண‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்ப‌டி நிறைய‌....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழ‌கு..//

இது உங்கள் கூற்று. இதன் ஒரு வரியை உங்களுக்கு எதிராக திருப்பினால் எவ்வளவு அநாகரீகமாக மாறிவிடும்.? எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பில்லாத உங்களை என்ன சொல்வது நான்? அதையும் தவிர்த்து பெண்கள் உடைகளை திருத்தமாக அணிவது என்ற கருத்தை நான் சொல்லவந்ததாகவும், அது கலாச்சார காவலர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட மேற்கூறிய பிற குற்றச்சாட்டுகளுக்கு என் பதிவுகளிலிருந்து எடுத்துக்காட்டு தரமுடியுமா? அல்லது பெண்கள் விஷயம் மட்டும்தான் என்னுடையது, பிற பிறரைப்பற்றியது எனில் அவற்றின் இணைப்புகளையும் தரவேண்டியதுதானே?

மாற்றுக்கருத்தும், பிடிக்காதவற்றைச் சொல்வதும் இயல்பானது என்றே நான் எண்ணுகிறேன். அதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். சரியான வாதம் இருக்கவேண்டும். சாட்டப்பட்டவர் வெட்கி ஒத்துக்கொள்வதாக இருக்கவேண்டும்.

மாறாக என் குறித்தும், நண்பர் பரிசல் குறித்தும் நீங்கள் சொல்வதைப்போல இருக்கலாகாது என நான் நினைக்கிறேன்.

பரிசல்காரன் மிகக்குறுகிய காலத்தில் 500க்கும் அதிகமான ஃபாலோயர்களையும், 3 லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் பெற்ற புகழ்மிக்கவர். இது அவரது எழுத்தால் எத்தனை பேரை கவர்ந்திருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. அத்தனை பேரைக்கவர்ந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அதை இப்படித்தான் பதிவு செய்வதா.? நீங்கள் எழுதிய வரிகளில் கண்ணியமோ, குறைந்த பட்ச நியாயமோ இருப்பதாகப் படுகிறதா உங்களுக்கு.?

இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம்.

வாழ்த்துகள்.!

(இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.)

=========================

ராமலக்ஷ்மி has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....":

அன்புள்ள அதுசரி,

எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுத முடியாதுதான். இங்கே நீங்கள் கூறியிருப்பது ஏற்கனவே என் சுதந்திரதினப் பதிவில் நீங்கள் முன் வைத்த் கருத்துதான். அதை பிரசுரிக்கவும் செய்துள்ளேன். என்னை பெரிய கவிஞர் என நான் சொல்லிக் கொள்ளவில்லை. எனது பதிவொன்றிலேயே ‘நான் எழுதுபவையும் கவிதைகள்தானா’ எனத் திகைத்து நின்ற போது ‘அப்படியெல்லாம் யோசித்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே முடியாது’ என நண்பர்கள் தந்த ஊக்கத்தில்தான் தொடர்ந்து எழுதினேன் என்றே குறிப்பிட்டிருப்பேன். உங்கள் போன்ற சிலருக்கு என் படைப்புகள் அத்தனை கஷடத்தைக் கொடுத்திருப்பதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதையெண்ணி என் எழுத்துக்கு எந்த வேகத் தடையும் விதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

பிரபலங்களோடு சேர்த்து பேசியிருப்பதாகப் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டுமெனில் நானும் ஒரு பிரபலத்தை உதாரணப் படுத்துகிறேன். எனிட் ப்ளைட்டனை ஆரம்ப காலத்தில் பிபிசி குழந்தைகளுக்கு எழுதும் இவரைப் பேட்டி காண்பதா என ஒதுக்கியதைப் பற்றி ஒரு செய்தியை சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தேன். அதற்காக அவர் எழுதுவதை நிறுத்தி விடாமல் தன் பாணியிலேயே தொடர்ந்து, வெற்றியும் கண்டார். வலைப்பூவின் கட்டற்ற சுதந்திரம் எப்படி விரும்பியதைப் பதிய வழிவகுத்திருக்கிறதோ அதே போல விரும்புவதைச் சுட்டி வாசிக்கவும் சவுகரியம் தந்துள்ளது. விருப்பமற்ற பின் உங்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாமென அக்கறையின்பால் கேட்டுக் கொள்கிறேன்.

விமர்சனங்கள் என்றைக்கும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் இது போன்ற விமர்சனங்களா என்று என்வரையில் எனக்குத் தெரியவில்லை. எனது சில கவிதைகளை [அப்படி நான் கூறிக் கொள்பவற்றை] ‘இணையத்திலிருந்து’ என்ற குறிப்புடன் செய்தித்தாள்கள் சிலவற்றின் வாரமலர்களில் அவர்களாகவே எடுத்து வெளியிடுகிறார்கள். இணைய இதழ்களும், பத்திரிகைகளும் என் படைப்புகளை அங்கீகரித்தே வருகின்றன. (இதை அச்சீவ்மெண்ட் என்றும் சொல்ல வரவில்லை). எளிமைக்காகவே என் எழுத்துக்களை விரும்புபவரும் உள்ளார்கள். உங்களுக்குப் பிடிக்காததால் எல்லோருக்கும் பிடிககாதென அர்த்தமில்லை என நீங்களே சொன்னபடி, பிடித்த அந்த வெகு வெகு சிலருக்காக மட்டும் தொடர்கிறேன். என்றைக்கேனும் என் படைப்புகளில் சில பள்ளிப்பாடத் திட்டத்தில் வருமேயானால் அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையுமே கொள்வேன்:)!

மிக்க நன்றி.

அன்புடன்

ராமலக்ஷ்மி


Wednesday, 18 November 2009

எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....



விடாது பெய்யும் மழை...வருவதாக சொல்லிவிட்டு ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டதால் கேன்ஸல் செய்த நட்பு....

பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்று எல்லாரும் எழுதி விட்டார்கள்...ரொம்ப‌ நல்ல‌வ‌ன் வ‌டிவேலு போல‌ பிடித்த‌தை ம‌ட்டும் எழுதிய‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள்...இன்றைய‌ த‌மிழ் சினிமா பிடிக்க‌வில்லை, அர‌சிய‌ல் பிடிக்க‌வில்லை, என‌க்கு பிடித்த‌வ‌ர்க‌ள் எல்லாம் செத்து போய்விட்டார்க‌ள் என்று எழுதிய பொத்தாம் பொதுவான‌ த‌யிர்வ‌டைக‌ள்...(ந‌ன்றி: சாரு நிவேதிதா)...அம்மா சுட்ட‌ தோசை பிடிக்கும்.....பாட்டி சுட்ட‌ வ‌டை பிடிக்கும்...முத‌ல் முத‌ல் போட்ட‌ அரைக்கால் ட‌வுச‌ர் பிடிக்கும்...இற‌ந்த‌ கால‌த்தின் பிர‌திநிதிக‌ள்....

நான் எழுதி பெரிதாக எதுவும் கிழிக்கப் போவதில்லை என்றாலும் இருத்தலியத்தின் அவசியம் பொருட்டும் போரடிக்கும் போது புகைக்கும் வழக்கத்தை நிறுத்தும் முயற்சியின் பொருட்டும்....வெறுப்பாக‌ இருக்கும் போது அடுத்த‌வ‌ர்க‌ளையும் வெறுப்பேற்றும் என் வ‌ழ‌க்க‌த்தின் கார‌ண‌மாக‌வும்...

பிடிக்காத‌தை சொல்வ‌தே நோக்க‌ம்...த‌லைவாழை இலை போட்டு ல‌ட்டும் ப‌க்க‌த்தில் கொஞ்ச‌ம் உப்பும் வைப்ப‌து போல‌...பிடித்த‌தும்....

அர‌சியல்வாதி:

பிடிக்காத‌து: த‌லிபான்க‌ளின் த‌மிழ‌க‌ பிரிவு செய‌லாள‌ர் ராம‌தாஸ், நாட‌க‌ மேதை க‌ருணாநிதி, மதச்சார்பற்ற அணி என்று சொல்லிக் கொண்டே மதக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள், சோனியா காந்தி, போலி ஏழைப் பங்காளன் ராகுல் காந்தி, மாயாவதி

பிடித்த‌து: க‌ம்யூனிஸ்டாக‌ இருந்தாலும் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் ந‌ல்ல‌ ம‌னித‌ர் என்ப‌தால் ந‌ல்ல‌க்க‌ண்ணு, வைகோ, க‌ருணாநிதியின் போலி‌ அர‌சிய‌லை பின்ப‌ற்றாது கொஞ்ச‌மாவ‌து முன்னேற்ற‌ அர‌சிய‌லை செய்யும் ஸ்டாலின்.

டைர‌க்ட‌ர்:

பிடிக்காத‌து: பார‌தி ராஜா (வேத‌ம் புதிது த‌விர்த்து), விக்ர‌ம‌ன், பேர‌ர‌சு, ஷ‌ங்க‌ர், கெள‌த‌ம் மேன‌ன்
பிடித்த‌து: கே.எஸ். ர‌விக்குமார், ம‌ணி ர‌த்னம், பாலா

இசை:

பிடிக்காத‌து: இளைய‌ராஜா.

பிடித்த‌து: எம்.எஸ். விஸ்வ‌நாத‌ன், ஏ.ஆர். ர‌ஹ்மான், தேவா.

ந‌டிக‌ர்:

பிடிக்காத‌து: எதையுமே சாதிக்காம‌ல் வாய் கிழிய‌ பேச‌ ம‌ட்டுமே செய்யும் சிம்பு... ஒரிஜின‌ல் பில்லாவை ரீமேக் செய்து குட்டிசுவ‌ராக்கிய‌தால் அஜீத்...காரணமின்றி சூர்யா

பிடித்த‌து: நிறைய‌ பேர்...குறிப்பாய் நாகேஷ், பிர‌காஷ் ராஜ், நாஸ‌ர், க‌ம‌ல்ஹாச‌ன், விக்ர‌ம், ர‌ஜினி காந்த்.

நடிகை:

டிக்காதது: ஸ்ரேயா,த்ரிஷா...இப்பொழுது புதிதாய் தமன்னா.

பிடித்தது: அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கும்....தற்போதைக்கு நாடோடிகள் அனன்யா.

பாட‌லாசிரிய‌ர்:

பிடிக்காத‌து: க‌ந்த‌சாமி ப‌ட‌த்துக்கு பாட‌ல் எழுதிய‌ ந‌ப‌ர்(விவேகா??)....ச‌மீப‌ கால‌த்தில் இவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ பாட‌ல்க‌ளை கேட்ட‌தாய் ஞாப‌க‌ம் இல்லை...

பிடித்த‌து: க‌ண்ண‌தாச‌ன்... ப‌ட்டுக்கோட்டை க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம்....வைர‌முத்து...வாலி...முக்கிய‌மாய் தாம‌ரை

எழுத்தாள‌ர்:

ப‌டித்த‌து மிக‌ மிக‌க் குறைவு என்ப‌தால் பெரிதாய் எதுவும் இல்லை...ப‌டித்த‌வ‌ரை..


பிடிக்காத‌து: ர‌ம‌ணிச் ச‌ந்திர‌ன். இவர‌து நாவ‌ல் ஒன்றை புதிதாய் வாங்கி மூன்று அத்தியாய‌ங்க‌ள் ப‌டித்து விட்டு கிழித்து எறிந்த‌து ஞாப‌க‌ம் இருக்கிற‌து...சாரு நிவேதிதா இவ‌ர‌து எழுத்தை ம‌ல‌ம் என்று சொல்லியிருந்தார்...உண்மை தான்...

பிடித்த‌து: எழுத்து ந‌டைக்காக‌ ஜெய‌ மோக‌ன்...ப‌ளீரென்று அறையும் உண்மைக்காக‌ சாரு நிவேதிதா. (நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எஸ்.ராவின் யாம‌ம் குறித்து பெரிதாய் பேசுவ‌தால் ப‌டிக்க‌லாம் என்றிருக்கிறேன்...என‌க்கு பிடிக்காவிட்டால் ந‌ண்ப‌ரிட‌மிருந்து காசை திருப்பி வ‌சூலிக்கும் உத்தேச‌ம் இருக்கிற‌து...காசை ரெடி ப‌ண்ணிக்க‌ங்க‌ ஃப்ர‌ண்ட்...)

விளையாட்டு:

பிடிக்காத‌ விளையாட்டு: ஃபுட் பால்...செம‌ போரிங்...

பிடித்த‌ விளையாட்டு: ர‌க்பி....செம‌ காமெடி :0)))

ம‌னித‌ர்க‌ள்:

பிடிக்காத‌து: ஜாதி, ம‌த‌ அபிமான‌ம் உடைய‌வ‌ர்கள், கலாச்சார காவலர்கள். வெறிய‌ர்க‌ள் என்றில்லை அத‌ன் பிடிப்பு உடைய‌வ‌ர்க‌ளுட‌ன் கூட‌ என்னால் ஒத்துப் போக‌ முடிய‌வில்லை.... மாட்டுக்க‌றி/ப‌ன்றிக் க‌றி டேஸ்ட் பிடிக்க‌வில்லை அத‌னால் நான் சாப்பிட‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளுட‌ன் என்னால் நெருக்க‌மாக‌ முடிகிற‌து...அல்க‌ஹாலின் ஸ்மெல் என‌க்கு பிடிக்க‌வில்லை அத‌னால் நான் குடிக்க‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளை புரிந்து கொள்ள‌ முடிகிற‌து....ஆனால், நான் இந்து அத‌னால் மாட்டுக் கறி சாப்பிட‌ மாட்டேன், நான் முஸ்லீம் அத‌னால் நான் அல்க‌ஹாலை தொட‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ளுட‌ன் என‌க்கு எந்த‌ ஒட்டுத‌லும் இல்லை...அவ‌ர்க‌ளிட‌மிருந்து வில‌க‌வே முய‌ற்சிக்கிறேன்....அதைப் போல‌ சாதியும்....

பிடித்த‌து:தாய்மையிலிருந்து த‌மிழ் வ‌ரை கேள்வி எழுப்புப‌வ‌ர்க‌ள்...க‌ருத்துக்க‌ளில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் வெளிப்ப‌டையான‌வ‌ர்க‌ள்....க‌லாச்சார‌ம்...பார‌ம்ப‌ரிய‌ம் என்று சொல்ல‌ப்ப‌டுவ‌தையும்(!)... ம‌ர‌பையும் உடைப்ப‌வ‌ர்க‌ள்.

ப‌திவ‌ர்க‌ள்:

பிடித்தவர்கள்: நிறைய‌ப் பேர்...பெய‌ர்க‌ள் என் ப்ளாக் லிஸ்டில் இருக்கிற‌து...இதில் விடுப‌ட்ட‌ சில‌ பெய‌ர்க‌ள் உண்டு...விரைவில் சேர்க்க‌ வேண்டும்...குறிப்பாக‌ அய்ய‌னார், ந‌ர்சிம்,செல்வேந்திர‌ன்.....

பிடிக்காதவர்கள்: இது பிடித்த‌தை விட‌ மிக‌ மிக‌ அதிக‌ம்....பிறந்த நாள் வாழ்த்து பதிவர்கள், ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் என்று எழுதுபவர்கள், வெங்கட்ராமன் கிருஷ்ணன் நோபல் வாங்கியதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்கிறான் என்று க்ரெடிட் திருடுபவர்கள்.... என்ன கருமம்டா சாமி!

பெரும்பாலான‌ ப‌திவுக‌ள் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளின் ம‌று பிர‌தியாக‌வே இருக்கின்ற‌ன‌....காந்தி புனித‌மான‌வ‌ர், யாம‌றிந்த‌ மொழிக‌ளில் த‌மிழ் தான் இனிமை, குடிப்ப‌ழ‌க்க‌ம் ச‌முதாய‌த்தின் மிக‌ப் பெரிய‌ தீமை, தாய்மை வ‌ண‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்ப‌டி நிறைய‌....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழ‌கு...

இதை த‌விர‌ குறிப்பாக‌ சொல்ல‌ வேண்டுமானால் பதிவர் ப‌ரிச‌ல்கார‌ன்....என்ன‌வோ தெரிய‌வில்லை....இவ‌ர‌து இடுகைகள் ந‌ன்றாக‌ க‌ழுவிய‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டை ந‌க்கிய‌து போல‌ இருக்கிற‌து...எந்த‌ உண‌ர்வும் தோன்றுவ‌தில்லை.... அடுத்து ப‌திவ‌ர் ராம‌ல‌ஷ்மி....இவ‌ர‌து க‌விதைக‌ள்(?) எட்டாம் வ‌குப்பு பாட‌ம் போல‌ இருக்கிற‌து...ஸாரி...லேட்ட‌ஸ்ட் க‌விதை ஆறாம் வ‌குப்பு பாட‌ம்....Inane!....அப்புற‌ம் ப‌திவ‌ர் அவிங்க‌ ராசா...இவ‌ர‌து எழுத்தும் க‌ருத்தும் ந‌ன்றாக‌ இருந்தாலும் இடுகையில் அடிக்கும் அபார‌மான‌ மெகா சீரிய‌ல் நாட‌க‌த்த‌ன‌ம்....ஸ்ஸ்ஸ்ஸ்...ய‌ப்பா.... நீண்டு கொண்டே போவ‌தால்....இத்துட‌ன்.

(பி.கு. புடுங்கி மாதிரி பேசாத‌... நீ எழுதுற‌து என்ன‌ பெரிய‌ ம‌யிரா என்று யாரும் கேட்க‌ தேவையில்லை...அவ‌ர்க‌ள் எழுதுவ‌து நன்றாக இல்லை என்று சொன்னால் என் எழுத்து ந‌ன்றாக‌ இருக்கிற‌து என்று அர்த்த‌மாகாது...)

Thursday, 29 October 2009

நான் கடவுள்.....


நான் ஏன் இருட்டு சந்துக்குள்....அதுவும் அந்த சந்துக்குள் போக வேண்டும்...வேறு வழியாக போயிருக்கலாம்....அது வழக்கமாக போகும் பாதை கூட அல்ல...சிட்டி சென்டரிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி பகல் நேரத்திலேயே அந்த சந்து இருட்டாகத் தான் இருக்கும்....ஒரு பழைய சர்ச்...விக்டோரியா மஹாராணி காலமோ இல்லை செயின்ட் பால் அவர் கையாலேயே கரசேவை செய்தாரோ என்று யோசிக்கும் வகையில் அங்காங்கே இடிந்து...ஜன்னல்கள் நொறுங்கி.......Danny loves sTACY...Cat is a SLAG...Blair is a fucker...Man U sucks....Emily fucked everyone in Manchester....கோணல்மானலாய் கறுப்பு, நீலம், சிவப்பு என்று கிடைத்த் நிறத்தில் சுவரில் தெறிக்கும் காதல்...கருத்து சுதந்திரம்...கடுப்பு....உச்சியில் இருக்கும் சிலுவை மட்டும் இல்லாவிட்டால் அது சந்திரமுகி பங்களா...அருந்ததீ அரண்மனை என்று சொல்லிவிடலாம்...அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் சில பிச்சைக்காரர்கள்...உடைந்த கிடார்கள்....கிழிந்த ட்ரம்ஸ்கள்....நசுங்கிய பியர் கேன்கள்...சில காலி பாட்டில்கள்...பழைய புத்தகங்கள்...விரிக்கப்பட்ட துண்டில் சில காசுகள்...அழுத்தமாய் வீசும் கஞ்சா வாசனை...அழுக்காய் கிழிந்த உடையில் சில மனிதர்கள்....அவர்கள் மீது பயம் இல்லாவிட்டாலும்....என் வீட்டுக்கு குறுக்கு பாதையாய் இருந்தாலும்... அந்த சந்தை ஏனோ நான் தவிர்த்து விடுவதே வழக்கம்...

கொழுப்பு...குடி போதை என்றும் சொல்லலாம்...இரவு ஒரு மணி ஆகிவிட்டது...ஸம்மர் டைம் முடிந்து விண்டர் ஆரம்பித்ததில் ஒரு வேளை சன் ரைஸ் ஆகியிருந்தால் மதியம் மூன்று மணிக்கே சன் செட்....என் கை எனக்கே தெரியாத இருட்டு....காது ஓட்டையில் ஊடுருவி கிட்னியை ஃப்ரீஸ் ஆக்கும் குளிர்...இந்த கருமம் போதாது என்று விட்டு விட்டு பெருந்தூறலாய் மழை வேறு....ரேச்சலின் பர்த்டே பார்ட்டி...வழக்கத்தை விட அதிகமாய் போதை....குறுக்கு சந்தில் போனால் சீக்கிரம் வீடு போகலாம்...புத்திசாலித் தனம் என்று கூட சொல்லலாம்....

சந்தில் நுழைந்து....அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...அன்னைத் தமிழ் நாட்டினிலே அனைவருக்கும் சொந்தம்டா...தலைவர் பாட்டை கொஞ்சம் சத்தமாக பாடிக் கொண்டு....இங்கிலாந்துல இருந்துக்கிட்டு என்ன அன்னைத் தமிழ்நாடு...அப்பத்தா தமிழ்நாடு....ஒக்காளி இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் கூட இல்ல....

பாதி தூரம் நடந்திருப்பேன்...ம்ம்ம்....என்ன கருமம் பிடிச்சே ஊரோ...ஒருத்தனையும் காணோமே.....

அது ஒரு முட்டாள் சந்து....நேராய் போனால் சர்ச்...ஆனால் சர்ச்சை ஒட்டி சந்து ஒரு எழுபது எண்பது டிகிரியில் திடீரென்று திரும்பும்...சந்தை வெட்டி இன்னொரு சந்து...முட்டு சந்து...சந்தின் முடிவில் ஒரு பெரிய சுவர் இருந்தால் அது முட்டு சந்து தானே....கொஞ்சம் கவனிக்காவிட்டால் அப்படி ஒரு சந்து இருப்பதே தெரியாது....அதற்குள்ளிருந்து எவனாவது/எவளாவாது உங்கள் மீது பாய்ந்த பின்னரே கவனிப்பீர்கள்......Fucking stupid turn.....என்பது போல...

நான் அந்த சந்தை கவனிக்காது கடந்து போயிருக்கலாம்...அதான் முன்னாடியே சொன்னேனே...கொழுப்பு...போதை...எவனாவது/எவளாவது திடீரென்று பாய்ந்து விட்டால்....எப்பொழுதும் எனக்கிருக்கும் ஜாக்கிரதை...அல்லது விதி யாரை விட்டது....

முட்டு சந்தை கடக்கும் முன் அனிச்சையாய் தலையை வலப்பக்கம் திருப்பி....நல்லவேளை....அப்படி யாரும் என் மீது பாயவில்லை....ஆனால்.....

சர்ச்சின் சுவர் மீது சாய்ந்து ஒருவன் தரையில் உட்கார்ந்திருந்தான்...இல்லை...சுவரை முதுகுக்கு கொடுத்து அரைகுறையாக படுத்திருந்தான்....கால்கள் இரண்டும் நீட்டி...வழக்கமான பிச்சைக்காரர்களின் தூங்குநிலை தான்...பெரிதாய் சொல்வதற்கில்லை....ஆனால்....அவனுக்கு முழுதாய் முகம் காட்டி....எனக்கு பக்கவாட்டில் முகம் காட்டி....யாரவன்...பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான் போல...

தூரத்தில் இருக்கும் ஏதோ லைட்டில் இருந்து வெளிச்சம் படுவதால் பிச்சைக்காரனின் முகம் மட்டுமே தெரிகிறது....நின்று கொண்டிருப்பவன் முகம் பக்கவாட்டில் லேசாக....கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்....வெள்ளை நிற முழுக்கை சட்டை....இளைஞன்...வயது...உடலைப்பின் படி...இருபத்தெட்டு இருக்கலாம்...ஆறடிக்கு பக்கமாய் நல்ல உயரம்...நீள நீளமாய் கைகள்....குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல்....சரியான உடல்வாகு...டென்னிஸ் விளையாடுவான் போல...சீராக வெட்டப்பட்ட கறுப்பான தலைமுடி....உருவ அமைப்பை பார்த்தால் கண்டிப்பாக வெள்ளைக்காரன் இல்லை....பாகிஸ்தானியாகவே பங்களாதேஷியாகவோ இல்லை இந்தியனாகவோ இருக்கலாம்....இவன் ஏன் பிச்சைக்காரனை மிரட்டிக் கொண்டிருக்கிறான்....

இருங்கள்...பிச்சைக்காரன் என்றா சொன்னேன்...இல்லை...வெளிச்சத்தில் பார்த்தால் படுத்திருப்பவன் பிச்சைக்காரன் மாதிரி இல்லை...தலை கலைந்திருக்கிறது...முகத்தில் ஒரு வார தாடி....ஒரு வேளை அது அவன் ஸ்டைலாக கூட இருக்கலாம்....அவன் உடைகளும் கூட அழுக்காக இல்லை...நல்ல உடைகள்...இள‌ நீல நிறத்தில் முழுக்கை சட்டை...அடர் கருப்பில் ஜீன்ஸ்...இல்லை...பேன்ட்....கழுத்தில் ஒழுங்காக முடிச்சிடாத டை....ஆனால் கசங்கி இருக்கிறது....குடி போதையில் விழுந்து விட்டானோ....வயது....முகத்தின் தசைகள் இறுகி இருக்கிறது....நீட்டிய கால்களும் தளர்ந்து தரையில் ஊன்றிய கைகளும் உறுதியாக இருப்பது போலத் தான் தெரிகிறது...வயது சொல்வது கஷ்டம்....நாற்பதுக்கும் அறுபதுக்கும் இடையில்...இவனை கிழவன் என்று சொல்வதா இல்லை நடுவயசா....சரி...என்னை விட வயதானவன்...அதனால் கிழவன் என்று வைத்துக் கொள்வோம்....அவனைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போலவும் இல்லை....சைனாக் காரன் போலவோ இந்திய துணைக்கண்டன் போலவோ இல்லை...ஒரு மாதிரி வெளுப்பான நிறம்....இந்த மங்கலான வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை....ஆனால் அவன் லேசாக சிரிப்பது மட்டும் தெரிகிறது....

எவன் எப்படி போனால் என்ன....என்ன பிரச்சினையோ...ஏதேனும் கஞ்சாவாக இருக்கலாம்....நான் தாண்டிப் போயிருக்கலாம்...ஆனால்...அவனவன் விதி அவனை தேடி வருமாமே....இப்பொழுது உட்கார்ந்திருந்த வயது தெரியாத கிழவன் நின்று கொண்டிருப்பவனிடன் ஏதோ சொல்கிறான்....வாக்குவாதம் போலிருக்கிறது....

"நீ ஒரு முட்டாள்....வடிகட்டிய முட்டாள்....நான் யார் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாய்...."

அட...தமிழ்...நம்ம ஊர்க்காரங்க போலருக்கே... நினைத்துக் கொண்டிருக்கும் போதே நின்று கொண்டிருந்தவனும் ஏதோ சொல்கிறான்....

"கிழிஞ்சது போ....அந்த மயிரத் தான் அரை மணி நேரமா கேட்டுக்கிட்டு இருக்கேன்....யார் நீ...ஏன் இங்க விழுந்து கெடக்க....வீடு எங்கன்னு சொல்லு...ஒரு டாக்ஸி பிடிச்சி அனுப்பி வைக்கிறேன்...."

ஓ....இவனும் நம்ம ஊர்தான் போலருக்கே...பாவம்....எதுனா ஹெல்ப் பண்ணலாம்....என்னை மறைத்த திருப்பத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கையில்...

கிழவனின் பதில் ஊசியாய் காதில் இறங்கியது....

"நாக்கை அடக்கி பேசு....என்னைத் தெரியவில்லை....முட்டாள்....நான் தான்....கடவுள்...."
========================

இரண்டு



சரி தான்....தனித் தமிழன் மட்டுமல்ல...தண்ணித் தமிழன் போல...எத்தனை ரவுண்ட் அடித்தானோ...எனக்கு லேசாக சிரிப்பு வந்தது...நின்று கொண்டிருந்தவனும் இதையே நினைத்திருக்கலாம்...

"அடடா....கடவுள் இப்படி நடுத்தெருவுல க்வாட்ட்ர் அடிச்சிட்டு குப்புற கெடப்பான்னு எங்கம்மா சொல்லலியே....சரி...விடு...உன் வீடு எங்கருக்குன்னு சொல்லு...இல்லாட்டி உன் பசங்க ஃபோன் நம்பர் குடு...பேசி வரச் சொல்றேன்...."

கிழவன் முறைப்பது தெரிந்தது...

"கடவுளுக்கு ஏதடா வீடு....எல்லாம் என் வீடு....எல்லாம் என் மக்கள்...உனக்கு வேண்டுமானால் ஏதேனும் வரம் வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்....செயின்ட் ஜெம்மா பள்ளியில் மூன்றாவது படிக்கும் உன் மகள் ஆர்த்திக்கு இன்னும் சிறிது நேரத்தில் காய்ச்சல் வரப் போகிறது....உன் டாக்டர் மிஸஸ் கிப்சனுக்கு ஃபோன் செய்து அவளைக் காப்பாற்று...இன்னும் சிறிது நேரத்தில் பெரிய மழை வரும்....அதற்கு முன் இங்கிருந்து கிளம்பு...."

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியாக இருந்தது....என்ன இது...கிழவன் அள்ளி விடுகிறான்....ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ....

தூரத்தில் நின்று கொண்டிருந்தவன் பின் வாங்குவது தெரிந்தது...லேசாய் பின் நகர்ந்து...அவன் குரல்...பேயடித்தவன் போல....குழறலாய்...

"யேய்....நீ..நீ..ஒனக்கு எப்பிடி என் பொண்ணு பேரு தெரியும்....நீ...நீ...சாமியாரா...."

கிழவன்....வேண்டாம்....எனக்கு பயமாக இருக்கிறது....கடவுள்....கடவுள் வெற்றி பெற்றவன் போல மெதுவாக சிரித்தார்....மங்கலான இருட்டிலும் சிரிப்பில் ஒரு களை தெரிந்தது....

"இல்லை மகனே....சாமியார் அல்ல...நான் தான் சாமி....நான் தான் கடவுள்...உனக்கு சந்தேகமிருந்தால் என்ன வேண்டும் சொல்...இப்பொழுதே தருகிறேன்...."

நின்று கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ....

"எனக்கு....எனக்கு....ரொம்ப குளிருது....ஒரு பாக்கெட் டன்ஹில் சிகரெட்டும் ஒரு ஸிப்போ லைட்டரும் வேணும்...."

கடவுள் மந்தகாசமாய் சிரித்தார்...கீழே ஊன்றியிருந்த வலது கை உயர்த்தி...சாய்பாபா சாமியார் போல....வெறுங்கை விரித்து..மூடித் திறக்க....

ஒரு புத்தம் புதிய டன்ஹில் சிகரெட் பாக்கெட்டும்...ஒரு ஸிப்போ லைட்டரும்....

தூரத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டது....

நின்று கொண்டிருந்தவன் முழங்காலிட்டு சிகரெட்டை பவ்யமாய் வாங்கிக் கொண்டான்..

"மை காட்...மை காட்...சாமி...எனக்கு இன்னொரு பெரிய ஆசை...கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே..."

"நீ என் குழந்தை...என் பிம்பம்...கேள் மகனே...கேள்...."

"அது வந்து சாமி....வந்து...எனக்கு...எனக்கு ப்ரிட்னி ஸ்பியர்ஸை கிஸ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை...."

கடவுள் திருவிளையாடல் சிவாஜி போல பெரிதாக சிரித்தார்....

"ப்ரிட்னி இப்பொழுது லாஸ்வேகஸில் குடித்துக் கொண்டிருக்கிறாள்...அவளது விதிப்படி இன்றைக்கு மூன்று விநாடிகள் முகம் தெரியாத ஒருவன் அவளை முத்தமிட வேண்டும்....எல்லாம் விதிப்படி நடக்கும்....இதோ....நீ கேட்ட ப்ரிட்னி ஸ்பியர்ஸ்...."

அந்த கும்மிருட்டில்....பளிச்சென்று சிறிய ஒளியுடன்....மறைப்பதை விட காட்டுவதே முக்கியம் எனும் பார்ட்டி ட்ரஸ்ஸில்...ஓ மை காட்....ப்ரிட்னி...நிஜமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ்....கையில்...அது என்ன...ஐஸ் வோட்காவா...இல்லை மார்ட்டினியா....

இது கனவா...இல்லை நிறைய குடித்து ஹலுசினேஷனா....நம்ப முடியாத திகைப்புடன் நான் யோசித்துத் கொண்டிருக்கும் போதே அவன் ப்ரிட்னியை இறுக முத்தமிட்டு முடித்து....ப்ரிட்னி மறைந்து....மீண்டும் மங்கலான இருட்டு....

கடவுள் மீண்டும் பேச ஆரம்பித்தார்...

"இப்பொழுது நம்புகிறாயா....நான் கடவுள்....ஆனால் நீ...மகனே நீ ஒரு முட்டாள்....கடவுளே வந்தாலும் உனக்கு என்ன கேட்க வேண்டும் என்று தெரியவில்லை...சரி சரி கிளம்பு...உனக்கு நேரமாயிற்று....உன் மகள் ஆர்த்தியை போய்ப் பார்...."

"நம்புகிறேன்....கடவுளே....நீர் கடவுள்....நீர் தான் கடவுள்...."

குனிந்து வணங்கியவனின் கைகள் அவனது முழங்காலின் கீழே பின்பக்கமாக இருந்த பாக்கெட்டில் எதையே துழாவுவது தூரத்தில் இருந்து எனக்கு தெரிந்தது....என்ன தேடுகிறான்....ஒரு வேளை சூடம் கொளுத்த போகிறானா....

நிமிர்ந்தவனின் கையில்....அந்த மங்கலான இருட்டை கிழித்துக் கொண்டு...இரு புறமும் கூராக..... ....

ஒரு கத்தி பளபளத்தது.....

============== ==============

மூன்று

இது நான் வழக்கமாக வெண்டைக்காய் வெட்டும் கத்தியல்ல...அது ஒரு புறம் மட்டும் தான் கூர்மையாக இருக்கும்....அதுவும் கூர்மை என்று சொல்ல முடியாது....குறைவாக மொன்னை....ஆனால் இது....தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது...ராயல் நேவியில் இருந்து லீவில் வந்த மார்க்கோ காட்டிய கத்தி போல...குத்துவதற்கே செய்த கத்தி....இருபுறமும் கூர்மையாக...


என்ன செய்கிறான் இவன்....கடவுளிடமே வழிப்பறி செய்கிறானா...

என்னைப் போலவே கடவுளும் குழம்பி இருக்க வேண்டும்....அவர் முகத்தில் சிரிப்பும் மந்தகாசமும் மறைந்து....போலி சர்டிஃபிகேட் கொடுத்து இன்டர்வியூவில் மாட்டிய தெலுங்குகாரன் போல...விழித்தார்...

"என்ன செய்கிறாய் நீ...."

"ஒன்றுமில்லை...நீ யாரென்று தெரியாமல் முட்டாள்தனமாக வரம் கேட்டுவிட்டேன்...இப்பொழுது புரிந்து விட்டது...நீ தான் கடவுள்...."

கடவுளின் குரல் கோபமாக ஒலித்தது....

"உன்னை படைத்தவனுக்கு மரியாதை கொடு...."

"மரியாதை...என்ன மயிருக்கு உனக்கு மரியாதை....எதுவும் செய்ய முடியாததால் எதுவும் செய்யாமல் இருப்பவனை மன்னிக்கலாம்....ஆனால் எல்லாம் செய்ய முடிந்த நீ செய்து கிழித்தது என்ன....உனக்கு எதுக்குடா மரியாதை..."

"நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை...."

"புரியலையா....போடாங்.....என்னை படை...என்னை படைன்னு யார்னா உன்னை கேட்டாங்களாடா....ஒனக்கு பொழுது போகலைன்னா மனுஷங்களை படைச்சிருவியாமே....ஒக்காளி....நாங்க என்ன உன் போதைக்கு ஊறுகாயா...."

கத்தியுடன் நின்றிருந்தவனின் குரல் காரமாக இருந்தது....

"என்ன போதை...என்ன ஊறுகாய்....மகனே....நீ குடித்திருக்கிறாய்....மழை வரும் முன் ஒழுங்காக வீடு போய் சேர் என்று சொன்னேன்....நீ கேட்கவில்லை....இப்பொழுது பார்....மழை வந்துவிட்டது...."

என்னால் நிஜமாகவே நம்ப முடியவில்லை....கடவுள் சொல்லி முடிப்பதற்குள்...சடசடவென்று....பலமாக....மிக பலமாக....மழை கொட்ட ஆரம்பித்தது....நான் நிஜமாகவே கடவுளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....

கத்தியுடன் நின்றிருந்தவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை....

"மழை வந்தா என்ன...மயிரா போச்சி....உன்கிட்ட கேக்காம விடுறதில்ல....ஊரை கொள்ளையடிச்சி பத்து தலைமுறைக்கு சொத்து சேக்குறவனெல்லாம் மேல மேல தான் போயிக்கிட்டு இருக்கான்....கவுன்சிலரா இருந்தவன் எம்.எல்.ஏ ஆகிடறான்...எம்.எல்.ஏ மந்திரி ஆகிடறான்....அவன் பேரன் ஊர்ல பொறுக்கித் தனம் பண்றான்...நல்லவங்க....ஒன்னும் தெரியாத கொழந்தைங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சாவுறாங்க...சோத்துக்கே இல்லாம சாவுறாங்க...தேவடியா பசங்க குண்டு வச்சி சாவுறாங்க....இல்ல இனவெறி இறையாண்மைங்கிற பேர்ல கொல்றானுங்க...அப்புறம் அந்த பொணத்தைக் காட்டியே ஓட்டு வாங்குறானுங்க....இதுக்கெல்லாம் நீ என்ன செஞ்ச...."

சோவென்று பெய்த மழையில்.....கடவுளின் உதடுகள் அசையவில்லை...மெளனம்...

"இன்னாடா....கேக்குறோமில்ல....சொல்டாங்க வெண்ணை....."

கடவுளுக்கு பயம் உண்டா....கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் முகம் வியர்க்குமா...

கடவுளின் முகம் வியர்த்திருந்தது...குரல் நடுங்கியது....

"அது....அதெல்லாம் விதிப்படி நடக்கிறது....இப்படித்தான் நடக்கணும்கிறது விதி....அதை நான் நினைச்சாலும் மாத்த முடியாது...."

"எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்னா நீ என்ன மயிருக்குடா இருக்க....."

அவன் கடவுளை நோக்கி கத்தியுடன் முன்னேறினான்....

================ =================

நான்கு

கடவுளுக்கு அவன் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்....

"வேண்டாம்....வேண்டாம்....முட்டாள் தனமாக ஏதாவது செய்துவிடாதே...."

கழுத்து திருகிய கோழி போல கடவுளின் அலறல் அந்த சந்தில் எதிரொலித்தது....இதுவரை சாய்ந்திருந்த சுவற்றில் இருந்து வேகமாக எழ முயன்றார்....

அவன் அதை விட வேகமாக இருந்தான்....அவன் இடக்கால் உயர்ந்து கடவுளின் முகத்தை சுவற்றில் அழுத்தி தேய்த்தது....இடது கை கடவுளின் கலைந்த தலை மயிரை கொத்தாக பற்றியது....

கடவுள் இரு கைகளாலும் அவன் காலைப் பற்றி தன்னை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தார்....அவன் வேகமாக இருந்தான்....கத்த வாயெடுத்த கடவுளின் வாயில் ஷூக்கால் திணிக்கப்பட்டது....

கடவுளின் முழி பிதுங்க...தலை மயிரை இறுகப் பற்றி....குரல் வெளிவராது காலால் தடுத்து....அவன் வலது கை ஓங்கி....

கத்தி கடவுளின் வயிற்றை கிழிப்பதை தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்....கடவுளின் தொப்புளில் கத்தியை சொருகி....நேர்கோடாய் மேலிழுத்து....மீண்டும் கீழே கொண்டு வந்து....வலது பக்கமாய்....ஆங்கில L போல நகர்த்தி.....

மான்செஸ்டரின் குளிர்கால இரவில்....மழையுடன் மழையாக கடவுளின் ரத்தம் கலக்க....கொட்டும் மழை கண் நனைக்க...திறந்த வாய் நிறைக்க....வலப்பக்கம் தலை சாய்த்து.....கடவுள்....செத்துப் போயிருந்தார்....

============ ============

ஐந்து

கடவுளை கொன்று முடித்து....கத்தியை நனைத்திருந்த ரத்தத்தை அவரின் உடையிலேயே துடைத்து முடித்த அவன்....கடவுளின் இறந்த உடலை காலால் நகர்த்தி விட்டு....இது வரை அவர் சாய்ந்திருந்த சுவரில் நின்றவாறே சாய்ந்து கொண்டு....பாக்கெட்டை துழாவி ஒரு சிகரெட்டை எடுத்து....ஸிப்போ லைட்டரால் பற்றவைத்து....ஆழமாக இழுத்து...புகையை வெளியே விட்டு...என்னை நோக்கி திரும்பினான்....

முட்டாள் தனம்...போதை...கொழுப்பு...திமிர்....என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்....கடவுளின் மரணத்தை பார்த்த அதிர்ச்சியில் நான் என் மறைவிடைத்திலிருந்து வெளியே வந்திருந்தேன்....இந்த நிலையில்....இந்த நிலையில்....அவனால்....என்னை நன்றாக பார்க்க முடியும்....என்னாலும் அவனை.....

என்னை நோக்கியவன்...ச்சும்மா ஜாலிக்கு பூனை காதை கிள்ளிட்டேன்...நீ அதை பாத்துட்டியா என்று சிரிக்கும் குழந்தை போல....மெல்ல சிரித்தான்...

உயிர்வரை ஊடுருவும் குளிரில்....கடும் மழையில்....அந்த இரவின் மங்கலான வெளிச்சத்தில்.....

அவன் முகம் நானாகயிருந்தது........

(திருட்டு பயலே என்று யாரும் பின்னூட்டம் போடும் முன்...இதில் கதை மட்டுமே என்னுடையது...அடிப்படை கருத்து நீட்ஷேவுடையது...ஆல்சோ, இதை எழுத எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது....படிப்பவர்கள் ஒரு இரண்டு நிமிடம் செலவு செய்து கதையின் குறைபாடுகளை சொன்னால் நல்லது....நன்றி...)

Tuesday, 20 October 2009

செம்மொழியும் ரெட் ஜெயண்ட் மூவிஸூம்....ஒரு பழைய பாட்டும்

செய்தி ஒன்று :

த‌மிழக முதல்வர் காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருப்பதற்கு இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆர்வலர்களும், தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் முதல்வரை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/10/18/tn-its-now-world-classical-tamil-meet-as-iatr-opts.html

செய்தி இரண்டு:

முதல்வர் கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" வழியாக வழங்கும் "ஆதவன்" படம் தீபாவளியன்று வெளியானது...

ஆதவன் பாட்டை யூட்யூப்ல பார்த்து டவுசர் டர்ரானப்ப இந்த பழைய எம்.ஜி.ஆர்/பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு கிடைச்சது....பாட்டுக்கும் செய்திக்கும் நிச்சயமா சம்பந்தமில்ல...



Sunday, 18 October 2009

ஈலி ஈலி லாமா சபக்தானி.....



அதிகாலையில் எழுந்து வழக்கம் போல முகம் துடைத்து
கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

துடைக்க முடியாத முந்திய இரவுகளின் நினைவுகள் அலையடிக்க....
நாளான ஸ்காட்ச் விஸ்கி போல சிவப்பான கண் துடைத்து...

நேற்றைக்கும் அதன் முந்திய நாளுக்கும்
சென்ற வாரத்திலும் சென்ற மாதத்திலும்
செய்தது போல பல் துலக்கி....குளித்து....
அனிச்சையாய் பிபிசி நியூஸ் பார்த்து...
காய்ந்து போன பிரட்... ஆம்லெட் போட நேரமில்லை....

லண்டனின் அதிகாலை குளிரில் கை விறைத்து
வேகமாய் பறக்கும் கோழி பண்ணை போல‌
நிற்காமல் செல்லும் ட்யூப் பிடித்து...

விரும்பாத காதலாய் முகத்தில் முகம் உரசி
என் கழுத்தில் எவனோ எவளோ உதடு உரசி
எதேச்சையாய் பின்புறம் தழுவும் உடல் உதறி....

எத்தனை செய்தாலும்.....
அன்று நிச்சயமாய் ஒரு சந்தோஷம்...
இன்றைக்கு வெள்ளிக் கிழமை....

வெள்ளிக் கிழமை இரவுகள்....
க‌டவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவை....

============================

விழிப்பு....பயணம்...வேலை...உணவு...முயக்கம்...தூக்கம்...
எந்திரமாய் வாழ்க்கை....தீராத கவலைகள்....
கவலை சூழ் உலகில் மதுவை கண்டுபிடித்தவன் தேவன்....
அதை கடன் அட்டைக்கு விற்பவன் அதி தேவன்...

எல்லார் கையிலும் மதுக் கிண்ணம்....
பதினெட்டு...இருபது...
இருபதும் இன்றி முப்பதும் இன்றி இடையில்...
முப்பது தாண்டி...நாற்பது தாண்டி....

கொண்டாடத்தில் சில....
துக்கம் மறைக்க....மறுக்க...தூக்கம் பிடிக்க சில...

முற்றிலும் மறைக்கும் ஜீன்ஸ் பேண்ட்கள்...
கடவுள் போல் இருப்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் உள்ளாடைகள்....
இல்லாத‌தை இருப்பதாக காட்டும் மந்திரவாதிகள்...

தோள் தட்டி அழைக்கும் தேவதைகள்....
சிரிப்புடன் மறுக்கும் அழகான ராட்சசிகள்...

அவனவன் விருப்பத்திற்கு அவனவன் பார்க்க கடவன்.....
ஏவாளை ஜெயித்த ஆதாம் எவன்....

=====================

முகம் முழுதும் வியர்த்து...
கையில் கோப்பை ஏந்தி....
சில மணிநேரம் கவலை மறந்து....
என்னவென்றே புரியாத பாடலுக்கு ஆடும் போது....

ட்ட்ட்டொம்ம்ம்ம்...

சிந்திக்கும் நேரமில்லை....ஆனாலும்...
குடி போதையில் எவரேனும் குப்புற விழந்திருக்கலாம்...

சில விநாடி புரியவில்லை...என்னவென்று....
புரிந்த போது...

என்னை சுற்றிலும் புகை...
தேவதைகள் இருந்த இடமெங்கும் நெருப்பு...

என் கைகள்...என்னை விட்டு தள்ளி...

எரிந்து கொண்டிருந்தது...

இல்லை....இன்றைக்கு இல்லை....
நான் இன்றைக்கு சாக....விரும்பவில்லை...
அதுவும் நிச்சயமாக....
தோல் உரிக்கப்பட்ட கோழி போல....
நெருப்பில் வெந்து சாக எனக்கும் விருப்பமில்லை....

கண் எரித்த புகை விலக்கி பார்த்த போது....
கால தாமதம்....

காலையில் நான் போட்டிருந்த கறுப்பு பேண்ட்...
முந்திய இரவு பாலீஷ் செய்த ஷூக்கள்....
இடுப்புக்கு கீழ் இல்லை....எதுவும் இல்லை...
என் கால்கள் என்னிடம் இல்லை....

உள்ளும் புறமும் ஒன்றாக...
என் ரத்தம் உள் மட்டுமின்று வெளியிலும்.....
நகர முடியாது என் மீது விழுந்து கிடக்கும் உடல்கள்....
சென்ற வினாடியில் தேவதைகள்....
இந்த வினாடி அழுத்தும் பிணங்கள்....

======================

கட்டாத வீட்டு லோன்...
திவாலான என் பென்ஷன் ஃபண்ட்...
தள்ளிப் போன மகளின் காலேஜ் ஃபீஸ்...
விவாகரத்து செய்து காம்பன்சேஷன் கேட்கும் முன்னாள் மனைவி..
விற்க முடியாத பழைய ஃபோர்டு கார்...
திவாலாக காத்திருக்கும் என் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்...
கீழே கீழே போகும் ஸ்டாக் மார்க்கெட்....

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி... மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

இராக் படையெடுப்புக்குக்கு...
எங்கள் பதில்....
ஏதேனும் காட்டுமிராண்டி கும்பல் நாளை குதூகலிக்கலாம்...

ஐந்து வயது தானென்றாலும்
பள்ளிக்கு போனால்...
பெண் முகத்தில் ஆசிட்
என்ற தலிபான்கள்....
ஆஃப்கனை விட்டு வெளியேறாவிட்டால்....
அறிக்கை விட்டு கொக்கரிக்கலாம்...

ஆஃப்கன் பிரச்சினையை எழுதினீர்களா...
இராக் ஆக்கிரமிப்பை எழுதினீர்களா...
குஜராத் கலவரத்தை எழுதினீர்களா...
பார்ப்பன பூனூல் தெரிகிறது...
உன் கொண்டை நீ எங்கு போனாலும் தெரிகிறது....
எல்லா குண்டுகளையும் காமன்மேன் தலையில் போடு...

சுகுணா திவாகர்கள் நாளை இடுகையிடலாம்....
முற்போக்குவாதிகள் நாளை என் மரணத்துக்கு காரணம் சொல்லலாம்.....
நியாயம் கற்பிக்கலாம்...
சூடு பறக்க தங்கள் வாதத் திறமைகளை நிரூபிக்கலாம்...
இன்ஷா மார்க்ஸ் என்று தன்னடக்கம் காட்டலாம்...

ஆனாலும்...

ஆஃப்கனில் அமெரிக்க படைகள் நுழைய நான் ஆணையிடவில்லை...
இராக் செல்லும் முன் என்னை யாரும் கேட்கவில்லை...
நான் பிறந்த மூன்றாம் நாள் செத்துப் போன தாய் மீது சத்தியமாக‌...
குஜராத் கலவரங்களுக்கு நான் காரணமில்லை...
பிறந்த நாள் முதல் இதுவரை நான் மும்பை போனதேயில்லை.....

==============

கைகள் சிதறி கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

பதினொரு வயதில் காஜா பீடி...
காசு கிடைத்தால் வில்ஸ் ஃபில்டர்...
பள்ளி எஜுகேஷனல் டூர்... பொய் சொல்லி...பெயர் தெரியாத விஸ்கி...
ஆறாங்கிளாஸ் படிக்கும் போது எட்டாம்கிளாஸ் பெண்ணுக்கு லவ் லெட்டர்.... பத்தாவது படிக்கும் போது அஞ்சரைக்குள் வண்டி...

க‌ஷ்டப்பட்டு ப்ளஸ்டூ...கடினமாய் படித்து என்ட்ரன்ஸ்...
கடும் போட்டியில் எஞ்சினியரிங் காலேஜ்....
சின்ன சின்னதாய் கலவரங்கள்...

ங்கோத்தா சொல்லுடா....ம்மாள சொல்லுடா....
சின்ன சின்னதாய் ஹாஸ்டல் ராக்கிங்....

நீ இல்லன்னா நான் செத்துருவேண்டி...
காதலித்து....
அப்பனின் ஜாதி வெறியால்....
எவனுக்கோ மனைவியாய் போய்....
என் பெயரை மகனுக்கு சூட்டியவளிடம்
சின்ன சின்ன பொய்கள்.....

====================================

கைகள் சிதறி..... கால்கள் சிதறி....
வெறும் முண்டமாக...
உதடு கிழிந்து...முகம் கருகி...
மார்பு கிழிந்து ரத்தம் ஒழுகி....
ஈரல் முழுதும் புகை சூழ்ந்து...
மூச்சு திணறி நான் சாகும் போது....

எல்லாம் ஞாபகம் வந்து....

கடைசியில் ஒன்று...
மறந்தே போனது...

ஈலீ...ஈலீ...லாமா சபக்தானி......
=================================

ஈலி ஈலி லாமா சபக்தானி....ஜீஸஸ் க்ரைஸ்ட் கடைசியாக சொன்ன ஹீப்ரு வாசகங்கள் என்று நம்பப்படுகிறது....இதற்கு அர்த்தம் "என் தந்தையே...என் தந்தையே....ஏன் என்னை கைவிட்டீர்"....

(You dont know NewYork Love....Let me show you....உற்சாக பந்தாய்....துக்கத்தில் அழும்போது இறுக்கி அணைக்கும் காதலியாய்....One day I'll be running this bank...and...you'll be likcking my foot....You Bastard.....Fucking Bastard....Nil Carboarandom Illegitmiti....But I tolerate you....just for your stupid smile.....பெண்களின் வலிமைக்கு உதாரணமாய்....எல்லாம் சொல்லி....எந்த கனவும் நனவாகாமல்.....ந்யூயார்க் ட்வின் டவர் தாக்குதலில் கருகி உயிர் இழந்த என் உயிர்த்தோழி Kirstine McKinnessக்கு அவளது பிறந்த நாளில் இந்த எழுத்து சமர்ப்பணம்....

I promise you this Kirstie....The fight with Taliban is not a fight between Taliban and America...It's a fight between Taliban Assholes and the human civilisation....We shall not stop until the Taliban and like minded assholes are annihilated!

Tuesday, 13 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள்- காதல் சொல்லி வந்தாய்! - 8

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு,அத்தியாயம் மூன்று,அத்தியாயம் நான்கு, அத்தியாயம் ஐந்து, அத்தியாயம் ஆறு, அத்தியாயம் ஏழு




அத்தியாயம் எட்டு - சுட்ட மண்!

"மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."

வேதாளம் சொன்னதும் மாதித்தன் தலையை தடவிக் கொண்டான்...

"என்ன கருமம்டா இது...என் தலை முதல்வர் பதவி மாதிரி ஆயிப் போச்சே...வர்றவன் எல்லாம் அதுக்கே குறி வைக்கிறான்...சரி சரி கைய அவுத்து விடு...எதுனா சொல்றேன்..."

"அதெல்லாம் அவுக்க முடியாது மாதி...நீ சும்மா வாயில சொல்லு...கையா பேசப் போவுது...."

"அவுத்து விட்டு பாரு....என் கை எப்பிடி பேசுதுன்னு காமிக்கிறேன்..." முறைத்து கொண்டே மாதித்தன் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறிக் கொண்டான்...

"ஏய்ய்....மாதி....இப்ப எதுக்கு பாறையில ஏறுற...ஒபாமாவுக்கெல்லாம் நோபல் குடுத்துட்டாய்ங்க....எங்க முத்தமிழ் வித்தகருக்கு கோயபல்ஸ் விருது கூட குடுக்கலைன்னு எதுனா தற்கொலை செய்ய போறியா...."

"அட சனியனே...அதுக்கெல்லாம் டீக்குடிக்க வேற ஒடன்பொறப்புங்க இருக்காங்க...என்ன பெரிய ஓபாமா...அவருக்கெல்லாம் வேற யார்னா கொடுத்தா தான் விருது...எங்க ஐயாவுக்கு வேணும்னா அவரே குடுத்துப்பாரு...எடுத்துப்பாரு...அப்படி எல்லா விருதும் தீர்ந்து போச்சின்னா கலை உலக படைப்பாளி...டவுசர் கிளிச்ச தொடைப்பாளின்னு எதுனா புதுசா உருவாக்கிடுவோம்....இப்ப ஒனக்கு தீர்ப்பு சொல்லணுமா வேண்டாமா..."

"ஆமா...பெரிய சாலமன் பாப்பையா...அப்படியே சொல்லிட்டாலும்....சொல்லு....சொல்லித் தொலை...."

"நாட்டாம நாஞ் சொல்ற தீர்ப்புக்கு உச்சிபுளிகுடி பண்ணாரி அம்மன் சத்தியமா எட்டு ஊரு பதினெட்டு பட்டியும் கட்டு படணும்...இது நாட்டாமை உத்தரவு உத்தரவு உத்தரவு...."

வேதாளம் குரல் கொடுத்தது...

"நாட்டாம...இன்னும் தீர்ப்பே சொல்லலியே..."

"அடச்சே....எவன்டா அது...காப்பு கட்றதுக்கு முன்னாடியே மாடு அடக்க வர்றவன்...முந்திரிக் கொட்டை மாதிரி....சொல்வோமில்ல..."

அந்த இருட்டில் வேதாளத்தை குத்து மதிப்பாக முறைத்த மாதித்தன் பேச ஆரம்பித்தான்....

========================

"முட்டாள் வேதாளமே...நீ ஆள் தான் மொட்டை...இப்பொழுது உன் அறிவும் மொட்டையாகி விட்டதா இல்லை கள்ளச் சாராயம் காய்ச்சும் போது உன் அறிவையும் அடுப்பில் வைத்து எரித்து விட்டாயா...

சிவராமனை காதலித்த கல்பனாவுக்கு மகேஷை பிடித்திருப்பது சரியா....என்ன கேள்வி இது...உலகத்தின் அடிப்படை சலனம்....ஆதி சிவனின் சலனத்தால் தான் அண்ட சராசரங்களும் விரிந்தது...இது உண்மையோ இல்லையோ சராசரி மனிதனின் சலனம் தான் உலக இயக்கம்....அலையில்லாத கடலும் சலனமில்லாத மனமும் இங்கு இல்லை...மனிதன் சலனமற்று போகும் நாளில் அகில உலகமும் உறைந்து போகும்...ஆசை தான் துன்பத்திற்கு காரணம்....ஆனால் துன்பம் மட்டுமல்ல உலக இயக்கத்திற்கும் அது தான் காரணம்...

கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது உண்மை....சூழ்நிலை காரணம் என்று கடைசியில் அவள் சொல்வது தன்னை தானே ஏமாற்றுவதே...இது சரியா தவறா....உண்மையில் எது சரி எது தவறு...எது இயல்பு எது கட்டமைப்பால் திணிக்கப்பட்டது......வன்முறை இயல்பா இல்லை அஹிம்சை இயல்பா...கல்பனாவுக்கு சிவராமனை பிடித்திருந்தது...அதே சமயம் மகேஷையும் பிடித்திருக்கிறது...சிவராமனை பிடிக்க சில காரணங்கள்....மகேஸ்வரனை பிடிக்க சில காரணங்கள்...மகேஷ் மீது அவளுக்கு ஏன் காதல் வரக் கூடாது என்பதற்கு காரணங்கள் அவளிடம் இல்லை...ஆனால் ஒரு பெண் இரு ஆண்களை காதலிக்க முடியுமா என்றால்...சமூகம் மறுக்கலாம்....இல்லை...முடியாது...நடக்காது....நடக்கக் கூடாது...என்று கலாச்சார காவலர்கள் அலறலாம்...ஆனால் இயற்கை கலாச்சாரங்களுக்கும் அதன் காவலர்கள் என்று தன்னை தானே அறிவித்துக் கொண்டவர்களுக்கும் கட்டுப்பட்டது அல்ல...முடியும்....ஒரு ஆணின் மனம் இரு பெண்களிடம் சலனப்படும் போது பெண்ணின் மனமும் சலனப்படலாம்...படும்....ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற சமூக கட்டுப்பாடே அதை தவறா சரியா என்று கேள்வியாக்குகிறது.....அலை கடலுக்கு அணை கட்ட முடியுமா...கடல் போல மனமும் விடாமல் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது...கண்ணகியின் கணவனுக்கு மாதவியிடம் மன சலனம் என்றால் கல்பனாவுக்கு மகேஷிடம் சலனம்...காதல்....காதலுக்கு என்பதன் வரைமுறை யாருக்கும் தெரியாத போது இது காதல் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்.....காதல் என்பது என்ன....முகத்திரைகளை விலக்கிப் பார்த்தால் அது காமமாகவும் இருக்கலாம்....பல வண்ணம் காட்டும் அப்பட்டமான சுயநலமாகவும் இருக்கலாம்...அல்லது ஸிக்மன்ட் ஃப்ராய்ட் சொல்வது போல நார்ஸிசம்...சுய மோகமாகவும் இருக்கலாம்...

ஆக...சிவராமனை காதலித்த கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது இயற்கை விதிகளின் படி சரியே....அது சமூக நியதிகளின் படியும், கலாச்சார விதிகளின் படியும் தவறாக இருக்கலாம்...ஆனால் கலாச்சாரங்கள் உருமாறும்...கால தேவனால் என்றாவது ஒரு நாள் உருத்தெரியாமல் அழிக்கப்படும்..சிந்து சமவெளி கலாச்சாரமும் சங்கம் வளர்த்த பாண்டிய கலாச்சாரமும் தஞ்சையில் செழித்த சோழர்களின் கலாச்சாரமும் இன்று கடலுடன் போய்விட்டது..ஆனால் இயற்கை இன்றைக்கும் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது..."

க்கும்....தொண்டைய செருமிக் கொண்ட மாதித்தன் சிறிது நிறுத்தினான்....

"நாட்டாம....தீர்ப்ப முழுசா சொல்லு...அப்ப சிவராமன் மேட்டரு...."

"அட....இருடே...ஒரு தம்ம அடிச்சிட்டு அந்த கேஸை பைசல் பண்ணுவோம்...."

வேதாளம் மாதித்தனுக்கும் சேர்த்து ஒரு தம்மை பற்ற வைக்க குகையில் புகை சூழ்ந்தது....

================================

"அடுத்து சிவராமன்....அவன் கலாச்சார கட்டமைப்புகளின் பிரதிநிதி...ஆனால் அவனது காதல் உச்சமானது....மனித மனத்தின் மற்றொரு விசித்திரம்...விடாது அலை மட்டுமல்ல...மனித மனம் யாருடனாவது எதற்காவது போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறது....போர் போர்...கொல் கொல்...என்றே வாளுடன் அலைகிறது....சிவராமனால் தனக்கு ஒரு போட்டியை சகிக்க முடியவில்லை...கல்பனா தனக்கே என்று தான் வகுத்த எல்லைக்குள் இன்னொருவன் பிரவேசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...அவனை பொறுத்த வரை அது உச்சமான காதல்...மலை உச்சியில் இருப்பவன் கீழே விழுந்தால் மரணிப்பதே நல்லது....அதீத காதலுக்கும் அதீத வெறுப்புக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்...இது விளிம்பு நிலை மனம்...எந்த நேரத்திலும் விளிம்புகளை உடைக்கும்....கல்பாவின் மனம் மகேஷிடம் சலனமடைந்ததுமே சிவராமனின் காதல் செத்து விட்டது...அது சுட்ட மண்....உடைந்த கண்ணாடிகளை கூட உருக்கி மீண்டும் உருவாக்கலாம்...ஆனால் சுட்ட மண்ணில் பயிர் செய்தவர்கள் யார்...சுட்ட மண் செத்த மண்...அதில் எதுவும் வளராது...சிவராமன் காதலித்தது தன்னை காதலித்த கல்பனாவையே...மகேஷையும் காதலிக்கும் கல்பனாவை அல்ல...மலை உச்சியில் இருந்து வீழ்ந்த அவன் காதல் செத்து விட்டது...எதற்காக போரிட்டானோ அந்த காதல் செத்த பின் அவனுக்கு வேலையில்லை...இது புரிந்தே சிவராமன் விலகினான்...அதனால் அவன் விலகியது சரியே...ஆணாதிக்க மனோபாவம் என்று சொல்ல முடியாது...செத்து போன காதலின் துக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...."

தீர்ப்பு சொல்லி முடித்த விக்ரமாதித்தன் நிறுத்தினான்...

"என்ன வேதாளமே...உன் சந்தேகம் தீர்ந்ததா...."

வேதாளம் மண்டையை சொறிந்தது....

"ஒண்ணியும் பிரியலியே....இப்ப இன்னாங்கிற நீ...சரிங்கிறியா தப்புங்கிறியா...."

"சரியா போச்சி போ...விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு அப்பா அனுமன்னு சொன்னானாம்....கலாச்சார அளவுகோல்களையும் கட்டமைப்பு திணிப்புகளையும் விடுத்து இயற்கையின் விசித்திர ஆட்டங்களின் படி அவர்கள் இருவரும் சரி...சரி...சரி...இது தான் இந்த பதினெட்டு பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு....சரி சரி...தீர்ப்பு தான் சொல்லிட்டேன்ல...இப்ப கைய அவுத்து விடு...ரெண்டு பேரும் கெளம்பி மந்திரவாதிகிட்ட போலாம்...உன்னை அவன் கிட்ட ஒப்படைச்சிட்டா என் கடமை முடிஞ்சது...."

வேதாளம் நக்கலாக இளித்தது....

"இன்னா மாதி....என்னை என்ன லூசுன்னு நினைச்சியா உன் கூட வர....நான் கெளம்புறேன்...நீ வேணும்னா மந்திரவாதி கிட்ட போ...."

"அட சனியனே...இந்த தடவை நான் அந்த தாடிக்காரனுக்கு என்ன பதில் சொல்ல....சரி இந்த கை கட்டையாவது அவுத்து விட்டுட்டு போ...."

"ஹிஹி..ஹீ....அது மந்திர கயிறு மாதி....நீ பதில் சொன்ன இருபத்தியெட்டாவது நிமிஷம் தானே அறுந்துடும்....அப்படி தான் செட் பண்ணியிருக்கேன்...."

"அது என்ன இருபத்தெட்டு நிமிஷம்...."

"ஓ அதுவா....அது நான் இந்த ஓட்டைக் கார்ல இந்த காட்டை விட்டு ஓட ஆகுற டைம்...."

சொன்ன வேதாளம் குடுகுடுவென்று ஓடி அந்த இருட்டில் மறைந்தது!
============================
அழுகிய தக்காளி...கெட்டுப் போன முட்டை....காலியா போன குவாட்டர் பாட்டில்....விழாத லாட்டரி...பழைய தினத்தந்தி....அரை லோடு செங்கல்... அரை குறையா உடைச்ச கருங்கல்....இது எதுவும் வீசாம அமைதியாய் இருக்கும் தமிழிஷ் தமிழ்மணம் வாக்காள பெருமக்களே....இது வரை நாட்டாமை மாதித்தன் தீர்ப்பை கேட்டீர்கள்...அடுத்து நன்றி நவில வருவது அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்க உதவி துணை பொறுப்பு செயலாளரும்....லண்டன் இருபத்தி எட்டாவது வட்ட குஜமுக இணை செயலாளருமான லண்டன் ட்யூப் ரயிலுக்கே டிக்கட் எடுக்காத மாவீரன்... உங்கள் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மக்கள் தொண்டன்....வருங்கால முதல்வர்..."அது சரி" அவர்கள்....

==========================
பதிவர் பேருரை

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாக்காள பெருமக்களே...தாய்மார்களே...தந்தைமார்களே....இளைஞர்களே...இளைஞிகளே...முன்னாள் இளைஞர்களே...இன்றைய பதிவர்களே...எதிர்கால பதிவர்களே...பின்னூட்டம் மட்டுமே எழுதும் பின்னூட்டவாதிகளே....தமிழ் மணமானாலும் சரி, தமிழிஷ் ஆனாலும் சரி...எனக்கு ஓட்டே போடாத எதிர்க்கட்சி நண்பர்களே...

முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்...கல்பனாவும் சிவராமனும் செய்தது சரியா தவறா...சரியோ தவறோ உங்கள் அளவுகோல் என்ன...

நாட்டாமை மாதித்தன் தீர்ப்பு சரியா தவறா...உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...கருத்துக்களை "நாட்டாமை மாதித்தன், நம்பர் 17, அஞ்சாவது குறுக்கு சந்து, ஓல்டு மாங்க் புரம், பிரிஸ்டால், BS1 8VK, யுனைட்டட் கிங்க்டம்" என்ற முகவரிக்கு அனுப்பலாம்...(கண்டிப்பாக ஸ்டாம்ப் ஒட்டவும்)

தவிர, என் எழுத்து பற்றியுமான கருத்துக்களையும் கொட்டலாம்....குறிப்பாக கதையில் எந்த இடம் சொதப்பியது...மொத்தமே சொதப்பல் தான் எதைன்னு சொல்றது என்றால் அதையும் சொல்லலாம்....

உங்களிடம் நன்றி கூறி குவாட்டருக்கு சைடாக வடை வாங்கப் போவது...அன்புடன் "அது சரி"

=======முடிந்தது....ஸ்ஸ்ஸ்...யப்பாடா...=========