
மொரார்ஜி தேசாய்னு ஒரு நல்லவரு வல்லவரு இருந்தாரு...இந்திரா காந்தியவே எதிர்த்து நின்னவருன்னு பெருசுங்க எல்லாம் சொல்வாங்க...அவரு தன் பிஸ்ஸை தானே குடிப்பாருன்னு அவரப்பத்தி ஒரு நியூஸு கூட உண்டு...
அப்படிப்பட்ட "ஒண்ணுக்கு" புகழ் மொரார்ஜி தேசாய் விகடனுக்கு 1987ழுல ஒரு பேட்டி குடுத்துருக்காரு....படிச்சி பார்த்தா....எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாத ஒரு மனிதன் பிரதமர் பதவிக்கு போறது இந்தியா மாதிரி சாபக்கேடுள்ள நாட்ல மட்டும் தான் முடியும்...
விகடன் பேட்டி முழுசா இங்க எழுதக் கூடாதுங்கிறதுனால...ஒரு பகுதி மட்டும்...
கேள்வி: ஸ்றீலங்காவின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டிருக்கவே கூடாது.
கேள்வி: சமீபத்தில் இந்திய அரசு உதவியளித்தது கூடவா??
பதில்: ஆமாம்..இந்தியா இதை செய்திருக்கக் கூடாது..நம் மக்கள் வேறு நாட்டில் இருந்தால் மெஜாரிட்டியின் ஆதிக்கத்தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விரும்பவில்லையென்றால் திரும்பி விட வேண்டியது தானே? பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு ஸ்ரீலங்கா உதவி செய்தால் நாம் ஒப்புக் கொள்வோமா?
கேள்வி: தமிழர்களுக்கு அரசாங்கம் சில அடிப்படை உரிமைகளைக்கூட வழங்கவில்லையே?
பதில்: அடிப்படை உரிமை இல்லாமலா ஆறு தமிழ் மந்திரிகள் அந்த அரசாங்கத்தில் உள்ளனர்?
கேள்வி: அவர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளை ஒப்புக் கொள்பவர்கள் ஆயிற்றே?
கேள்வி: நான் உங்கள் கருத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன். தமிழன் என் பதால் biased opinion உங்களுக்கு உள்ளது. நான் அங்கு சென்றபோது கூடத் தமிழர்களிடம் கூறினேன். லங்கா அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், நான் உதவிக்கு வரு வதாக உறுதியளித்தேன். ஆனால், தீவிரவாதி களின் நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை.
கேள்வி: லங்கா அரசாங்கம் பொதுமக்களை அல்லவா படுகொலை செய்கிறது?
பதில்: பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது.
அதாவது இந்த மொக்கையனுக்கு இலங்கை பிரச்சினை பற்றி ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை...முதலில் ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல...அவர்கள் தமிழர்களே தவிர இந்தியர்கள் அல்ல!!. பல நூற்றாண்டுக்கு முன்னரே, சொல்லப் போனால் இந்தியாவில் ஆங்கில ஆட்சி ஏற்படும் முன்னரே இலங்கையில் உரிமையுடன் இருந்தவர்கள். பல தலைமுறையாக, இலங்கையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே வாழ்பவர்கள்...அவர்ககுக்கு இந்திய பாஸ்போர்ட்டோ இந்திய குடியுரிமையோ இல்லை....ஒருவர் ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் அந்த நாட்டின் குடிமகன் ஆகிறார் என்று உலக நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்ட அடிப்படை மனித நாகரீகம் கூட இந்த மனிதரிடம்(???) இல்லை!
அடுத்து....சிங்களர்கள் மெஜாரிட்டியாம்...அதனால் அடங்கி போக வேண்டுமாம்...மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை...தன் உரிமையை கேட்டால் கூட மொரார்ஜி போன்ற பதவிக்காக வால் பிடிப்பவர்களுக்கு அது தீவிரவாதமாக படுகிறது...
முக்கியமாக கவனிக்க வேண்டியது...லங்கா அரசாங்கம் பொதுமக்களை படுகொலை அல்லவா செய்கிறது என்ற கேள்விக்கு இந்த நல்லவனின் பதில்... "பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது."
அதாவது....அரசாங்கம் படுகொலை செய்கிறதே என்ற கேள்விக்கு இவரின் பதில்...அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்! தாய் முன்னிலையில் மகளை கற்பழித்தாலும், குழந்தைகள் முன்னிலையில் தாயை கற்பழித்தாலும் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்....மொரார்ஜியாக இருந்தால் அப்படி தான் செய்வார்!!!
இந்த பேட்டி கொடுக்கப்பட்ட 1987ல்...ஈழத்தமிழர் துயரம் உச்சமாக இருந்த வருடங்கள் 1980கள்...அந்த சூழ்நிலையில், இப்படி ஒரு ஆதிக்க வெறி பிடித்த பேட்டி கொடுக்க வேண்டுமானால், ஒன்று இந்த நபருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்...இல்லை, இவர் ஹிட்லரின் நெருங்கிய தோழராய் இருக்க வேண்டும்!
அதெல்லாம் சரி, "பிஸ்ஸு" புகழ் மொரார்ஜி தேசாய் செத்து சுண்ணாம்பாயி பல வருஷம் ஆயிடுச்சி...இப்ப எதுக்கு இந்த பதிவுன்னு கேக்குறவங்களுக்கு...
இருக்கிறது நண்பர்களே....இந்த நபர் இந்தியாவின் பிரதமராக இரண்டு வருடம் சாணி கொட்டியதாக தெரிகிறது...
நாட்டின் பிரதமராக இருந்த ஒரு நபருக்கே ஈழப்பிரச்சினை பற்றியோ, மனித உரிமைகள், உலக சமுதாயம் ஏற்றுக் கொண்ட நடைமுறைகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருக்கும் போது, இன்றைக்கு அரசு நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு நபர்களுக்கு என்ன விதமான அறிவு இருக்க முடியும்??