Showing posts with label கருமம். Show all posts
Showing posts with label கருமம். Show all posts

Wednesday, 17 November 2010

கலாச்சாரமும் சில கழிசடைகளும் (அ) இது தாண்டா விபச்சாரம்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி. மண்ணே இல்லாத காலத்தில் தோன்றி என்ன மயிரை தின்றார்கள் என்று தெரியவில்லை. அது போய் தொலையட்டும்.  படி தாண்டா பத்தினி. இப்படி ஒரு சொல்லாடல் புனிதமான கலாச்சாரம் என்று இன்று பலரும் மயிரை தட்டிக் கொள்ளும் புடுங்கி கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. அது என்ன படி தாண்டா பத்தினி? அப்போ தாண்டி கடைக்கு போனா? படிக்க போனா? அவங்க எல்லாரும் விபச்சாரியா? இன்றைக்கு படிக்கவும் வேலைக்கும் போகாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? அய்யோ எங்க கலாச்சாரம் புனித கலாச்சாரம் என்று ஊளையிடும் கும்பல் இந்த அளவுகோலை ஏற்குமா?


புருஷன் செத்துட்டா பொண்டாட்டி உடன்கட்டை ஏறிடணும். இல்லாட்டி அந்த பெண்ணின் தலையை மொட்டையடிச்சி வெள்ளை சேலை கொடுத்து இருட்டில் உட்கார வைத்ததும் இந்த கலாச்சாரம் தான். அப்படி கணவனை இழந்த பெண் எதிரில் வந்து விட்டால் முண்டச்சி மூஞ்சில முழிச்சா போற காரியம் வெளங்குமா என்று அசிங்கப்படுத்தியதும் இந்த புடுங்கி கலாச்சாரம் தான். கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.

ஒரு காலத்தில் ஊரெல்லாம் குடுமி.பின்னர் பாகவதர் க்ராப் தான் பாப்புலர். இன்றைக்கு மிலிட்டரி கட்டிங். கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம். 

திருமணம் ஆயிரம் காலத்து பயிரோ இல்லை ஆறுமாசத்து மயிரோ ஆனால் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட சில சமூகங்களில் தாய்மாமனுக்கு முதல் உரிமை என்று மணம் செய்வார்கள். சில சமூகங்களில் அது மிகவும் தவறான விஷயம். சில திருமணம் மூன்று நாள். சில ஒரு வேளையில் முடியும். காதல் திருமணம் செய்தால் ஆள் வைத்து வெட்டிப் போடுவது ஒரு கும்பல் என்றால் நல்லா இருந்தா சரி என்று வாழ்த்துபவர்கள் ஒரு விதம். 

இரண்டு பேருக்கு பிடித்து போனால் அதில் திருமணம் என்ற ஃபார்மாலிட்டி எதற்கு என்று வாழ்வது அவர்கள் விருப்பம். மனம் ஒத்து போகாமல் வேண்டா வெறுப்பாக குடித்தனம் நடத்துவதை விட லிவிங் டுகெதர் எந்த விதத்தில் மோசமாக போய்விட்டது?

பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று வன்முறையாக அரை நிர்வாணமாக அலைய விட்டதும் இதே கழிசடை கலாச்சாரம் தான். பாட்டு கத்துக்கறதும் பவுடர் போடறதும் தேவடியா செய்றது என்று சொன்னதும் இதே கலாச்சாரம் தான். இதை மாற்ற முயன்ற போதும் இதே போன்று பல பன்றிகள் ஊளையிட்டு தான் இருக்கும். கல்யாணம் செய்வதோ செய்யாமல் சேர்ந்து வாழ்வதோ அவரவர் விருப்பம். அதெல்லாம் விபச்சாரம், ஆனால், நாங்கல்லாம் ரொம்ப கல்ச்சர்ட் என்று சொல்லும் கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று சொல்லுமோ? தன் அம்மாவோ தங்கையோ பாட்டு பாடினால் அவர்களை விபச்சாரி என்று சொல்வார்கள் போல.

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு. சிலர் திருமணம் அவசியம் என்று நினைக்கிறார்கள். சிலர் மனம் ஒத்துப் போனால் திருமணம் அவசியமல்ல என்று நினைக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்த பன்றிகள் லிவிங் டுகெதர் விபச்சாரம் என்றும் அதை ஆதரிப்பவர்கள் விபச்சாரிக்கு பிறந்தவர்கள் என்றும் தங்கள் வக்கிரத்தை வாந்தி எடுத்து ஊளையிடுகிறது. அப்படி பார்த்தால் காலையில் மணம் முடித்து அன்றே இரவில் மணவாழ்க்கையை ஆரம்பிக்கும் கலாச்சாரம் கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் என்று யாரேனும் சொல்லிவிடக்கூடும்.


அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம். 



லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.


டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.

Tuesday, 9 March 2010

ஷூத்தலை சாத்தானாரும் விண்ணைத் தாண்டி வருவாயாவும்...

பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்...அது மாதிரி எனக்கும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை..

சரி, கருமத்தை எங்கே ஆரம்பித்தால் என்ன?? எங்கிருந்து ஆரம்பித்தாலும் சாக்கடை சாக்கடை தான்...ஆனால் இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்று ஒரு த்ராபையான க்ராபிக்ஸ் உடன் ஆரம்பிக்கிறது....அவ்தார் போன்ற படங்கள் க்ராஃபிக்ஸில் கலக்கும் போது இப்படி கேவலமாகவும் க்ராஃபிக்ஸ் செய்யலாம் என்று நிரூபிக்கிறார்கள்....அடுத்து ஷகிலா போஸ்டர் தின்ற கழுதை தானே ஷகிலா என்று நினைத்துக் கொண்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுப்பது போல "யங் சூப்பர் ஸ்டார்" சிலம்பரசன் என்று டைட்டில் கார்டு....லிட்டில் சூப்பர் ஸ்டாரிலிருந்து ப்ரமோஷன்...இன்னும் கொஞ்ச நாள் கழித்து "கெழட்டு டூப்பர் ஸ்டார்" என்று டைட்டில் போடுவார்கள்...

சரி கதை?? அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத கதை இல்லை...ஊரில் எந்த வேலைக்கும் போகாது, எதையும் ஒழுங்காக செய்யாது அப்பன் ஆத்தா காசில் தின்று கொண்டு, என் கஷ்டத்தை எவனுமே புரிஞ்சிக்க மாட்டேங்குறான் என்று தாடி வளர்த்துக் கொண்டு திரியும் பல்லாயிரம் தறுதலைகளை ஒரு குவாட்டர் வாங்கிக் கொடுத்து "ஏண்டா, இப்படி திரியறே" என்று ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையென பின்மாயும் காலம் வரை அவன் அவளை எப்படியெல்லாம் காதலித்தான் என்று கதை சொல்லிக் கொண்டே இருப்பான்...

அவ அன்னிக்கி அப்படி லைட்டா திரும்பி பார்த்தா பாரு....சான்ஸே இல்ல...எனக்கு ரெண்டு வாரம் தூக்கமே இல்லடா...லவ்வுன்னா சும்மா அப்படியே தூக்கணும் மச்சான்...அப்படியே பொரட்டி போடணும்...அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் மச்சான்...இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பான்....கடைசியாக வாந்தியும் எடுப்பான்...

கவுதம் மேனனின் வாந்தி தான் கதை....உங்களுக்கு இருக்கும் ஒரே வேலை சன் டிவி சீரியல் பார்ப்பது தான் என்றால் இந்த கதைக்காக மாதம் ஒரு மானாட மயிலாட, வாரம் ஒரு பாராட்டு விழா என்று பொது வாழ்வில் உருகும் கருணாநிதி போல மெழுகாக உருகலாம்...என்ன கருமம்...எனக்கு வேறு வேலைகள் இருந்து தொலைப்பதால் என்னால் முடியவில்லை...ஒரு முழம் ஏறினால் பத்தடி சறுக்குகிறது....காலையில் சரியாக இருக்கும் மார்க்கெட் மதியம் "பொரட்டி போடுகிறது"...இல்லாவிட்டால் அப்படியே எதிர்பக்கமாக "தூக்குகிறது"
..டவுசர் கிழிந்து தொங்குகிறது....நாளைக்கு மார்க்கெட் திறந்தால் அந்த கிழிந்த டவுசரும் இருக்குமா இல்லை கோமணம் தான் மிஞ்சுமா என்று தெரியவில்லை...இதில் கவுதம் மேனனின் "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" வாந்தியை எப்படி துடைக்க?

சரி, கதை தான் அப்படி தீராக்குடிகாரனின் வாந்தி போல இருக்கிறது என்றால்...."வெரலு வித்த" காட்டப்படாது என்று சொல்லி விட்டார்கள் போல...சிம்பு என்ற சூப்பர் இஸ்டாரு ரொம்பவே நடிக்க ட்ரை பண்ணுகிறார்...இந்தா நடிக்கப் போறேன்...இந்த நடிக்கப் போறேன் என்று....கடைசி வரை! த்ரிஷா இப்படியே நடித்தால்(!) இன்னும் இரண்டு படத்தில் அன்னை தெரசா வேடத்தில் புக் செய்ய க்யூவில் நிற்பார்கள்...பிடித்து வைத்த இரண்டு ப்ளாஸ்டிக் பொம்மை போல வந்து போவதற்கு பெயர் ஒலகத் தரமான நடிப்போ என்னவோ?? எனக்கு ஒலகப்படம், ஒலக எளக்கியம் என்று ஒரு எளவும் தெரியாததால் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு இந்த படத்தை பார்க்க டிக்கட் வாங்கி தருகிறேன்...

கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!

ஊர் பக்கம் ஏதோ சொல்வார்கள்...பன்றியோட சேந்த கன்றும் ‍‍‍______(Fill up the blanks) தின்னுச்சாம்....கதை தான் இப்படி குடிகாரனின் பொலம்பலாக இருக்கிறது என்றால் எசைப் பொயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை...எசையெல்லாம் மறந்து விட்டதா இல்லை இந்த வாந்திக்கெல்லாம் எசைக்க வேண்டியிருக்கிறதே என்று பக்கத்து வீட்டு எருமையை கீபோர்டில் ஓட விட்டு விட்டு அவர் ஓடி விட்டாரா என்று தெரியவில்லை...(ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஓனர் செம்மொழி கண்டு செந்தமிழ் வளர்க்கும் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்!)...படத்தில் கன்னா பின்னாவென்று சத்தம் ச்சே...இசை...வருகிறது...கோமணப் பெண்ணே கோமணப் பெண்ணே என்று ஒரு பாடல்...என்னடா எழவு இது...இப்பிடில்லாமா பாட்டு எழுதுவாய்ங்க என்று கவனித்து கேட்டால் அது கோமணப் பெண்ணே இல்லை...ஓமனப் பெண்ணே!....

கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!

படத்தில எல்லாமே நெகடிவ்வா...ஒண்ணு கூட பாசிட்டிவ் இல்லியான்னு கேட்டா....இருக்கு...கதாநாயகனோட (ம்ம்ம்க்கும்...பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய கதாநாயகன்!) ஃப்ரண்டா ஒரு கேமரா மேன் வராரு...அவரு பேசுறது சென்னைத் தமிழ் மாதிரி இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.....ஆனா எலிஃபன்டுக்கு கர்சீப்ல கோமணம் கட்ன மாதிரி....மூணு மணி நேர படத்துல ரொம்ப கொஞ்ச நேரம்....

என்ன எழவுடா இது...ஒன் பொலம்பல படிக்கிறதுக்கு அந்த கருமம் பிடிச்ச படத்தையே பார்த்துடலாம் போல இருக்கே...இப்ப நீ என்ன தான் சொல்றன்னு கேக்குறீங்களா?? சரி, நீங்க கேக்குறதுன்னால சொல்றேன்...

படம் குப்பை...பின்பக்கம் துடைக்க கூட உதவாத ப்ளாஸ்டிக் குப்பை....

ஆனா, உங்களுக்கு ஒலகத்துல வேற எந்த கவலையும் இல்ல...வேற எந்த பிரச்சினையும் இல்ல...நீங்க உலகத் தமிழர்...ஆனந்த விகடன் தான் உங்க இதயத் துடிப்புன்னா ஒங்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்....கலையோட உச்சம்.....காதலோட மிச்சம்...(இன்ன பிற கருமாந்திரங்களை நீங்களே ஃபில்லப் செஞ்சுக்கங்க...ஒங்களுக்குத் தான் வேற வேலை இல்லியே!)

மீதிப் பேருக்கு...இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான்....

========================
கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு:

எனக்கு உண்மையில் என் நண்பர்களை குறித்து பயமாயிருக்கிறது...என் மீது என்ன கடுப்போ தெரியவில்லை, பயங்கர கொலைவெறியில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது....இல்லாவிட்டால் இந்த த்ராபையான படத்தை "நல்லாருக்கு" என்று பார்க்க சொல்வார்களா??

இந்த கலைக்காவியத்தை பார்த்து விட்டு ரஞ்சிதா படம் பார்த்த நித்யானந்தன் போல டென்ஷனாகி "இனிமே செய்வியா...இனிமே செய்வியா" என்று என் ட்ரைனரால் அடித்துக் கொண்டதில் ஷூவின் பாட்டம் பிய்ந்து தொங்குகிறது...என் தலை ஷூ ஷேப்புக்கு மாறிவிட்டது...தலை போனா பரவால்லை...பட்...டியர் ஃப்ரண்ட்ஸ்...ஷூ வாங்க ஒரு £273.55 அனுப்பி வைங்க!

(ஆமா, சாரு மட்டும் தான் ரெண்டாயிரத்துக்கு ஜட்டி போடுவாரா? நான் போட்ற ஷூவே இருபதாயிரம்...பட்...நான் ஒரு ஏழை பிச்சைக்கார பதிவன்னு சொன்னா நீங்க நம்பித் தான் ஆகணும்)
========================