Sunday 29 June 2008

மெய்புல அரைகூவலர்களுக்கு!

சாரு நிவேதிதாவின் "குட்டி கதைகள்" படித்ததும் இது நினைவுக்கு வந்தது. சென்னை இன்டர்நேஷனல் டிபர்ச்சரில் ஒரு போர்ட் இருக்கும். "மெய் புல அறைகூவலர்க்லுக்கு" --
இதற்கு என்ன அர்த்தம்? என்னுடன் வந்திருந்த நண்பர்களை கேட்டேன். ஒருவனுக்கும் தெரியவில்லை. பின்பு வேறு ஒரு இடத்தில் இதே வாசகத்தை ஒரு குறியுடன் பார்த்த பொது புரிந்தது. Physically Challenged! இத்தனை கேவலமாக தமிழ் படுத்திய முட்டாளை செவிட்டில் அறைய வேண்டும் என்ற வெறி வந்தது. வேண்டாம். ஏதேனும் கழக கவிஞர் ஆக இருக்க கூடும். அல்லது கோடம்பாக்க கவிப்பேரரசுகளாக இருக்கலாம்.


இது படித்ததும் 11, 12 ஆம் வகுப்பில், தமிழில் கம்ப்யூட்டர் சயன்ஸ் புத்தகம் நினைவில் வந்து தொலைத்தது. அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்த அயோக்கியனை கழுவில் ஏற்ற வேண்டும். உதாரணத்துக்கு சில. விசை பலகை (key board), கோப்பு மேலாண்மை (file management ), சுழி எண் (zero). இன்னும் பல கொடுமையான வார்த்தைகள். தனது தமிழ் புலமையை கட்டவேண்டும் என்ற வெறியில் எவனோ செய்தது! அல்லது தமிழ் நாட்டில் இருப்பவனுக்கு, தமிழில் படிப்பவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேவையா? என்ற திமிராகவும் இருக்கலாம்.


ஏர்போர்ட் உள்ளே இன்னும் கொடுமை. ஒரு காபி 80 ருபாய். அல்லது நாப்பது ரூபாய். அதாவது அவன் நீங்கள் எந்த கரன்சி கொடுத்தாலும் மீதி தர மாட்டான். உங்களிடம் பிரிட்டிஷ் பவுண்ட் இருந்தால், காபி ஒரு பவுண்ட். யு.எஸ். டாலர் இருந்தால் காபி ஒரு டாலர். (அதற்காக ஒரு ருபாய் கொடுத்தால், ம்ம்ன், அதெல்லாம் வெவெரம்! ).

சரி, எங்கோ ஆரம்பித்து எங்கோ பொய் விட்டது. அடுத்த ரௌண்ட ரெடி பண்ணிக்கிறேன்.!!

(பின் குறிப்பு: எனக்கு இன்னும் இந்த கி போர்டு பழகவில்லை. அதனால், எழுத்து பிழைகள்)

இளைய ராஜாவும், திருவாசகமும்

குடிப்பதில் உள்ள அடுத்த பிரச்சினை எவனையாவது திட்ட வேண்டும் என்று தோன்றும். மதுரை பக்கம் "வஞ்சி புட்டான்" அப்படிம்பாங்க. பொன்னமராவதி பக்கம் சோத்துக்கு தொட்டு கொள்வதை "வெஞ்சனம்" னு சொல்வாய்ங்க. நமெக்கல்லாம் குடிச்சா எவனையாவது "வஞ்சி புடுறது" தான் வெஞ்சனம். வழக்கமா கூட படிக்கிற ஜாரிங்களை (ஜாரின்னா என்னன்னு தெரியுமில்ல?? ) திட்றதுல ஆரம்பிக்கும். ங்கோத்தா, அவளுக்கு பெரிய .... நெனைப்பு.... நம்ம பக்கத்தில தான் அவளுக்கு லைன் வுட்ற பார்டி உக்காந்திருப்பான். (அதுக்காக தான ஆரம்பிச்சதே!) . அவன் அவளுக்கு சப்போர்ட்டா வருவான். (உன்னை மாறி நாய்க்கெல்லாம் அவள பத்தி என்ன தெரியும்.... ) அப்படியே அவனை சூடேத்தி விட்டு, அடுத்த ரவுண்ட் கரெக்ட் பண்றதுக்கு இது ஒரு வழி. இன்னும் நெறைய வழி இருக்கு. வெறும் மூன்ருவா எடுத்து போய்ட்டு, ஒரு குவாட்டர் ஓல்ட் மங்கும், பரோட்டாவும் அடிக்கிறதெல்லாம் தொழில் ரகசியம். தெரியாதவங்களுக்கு அப்புறம் சொல்றேன்.


இப்ப, நம்ம ராசா மேட்டருக்கு வருவம். ஒரு காலத்தில நமக்கும் ராசா மியூசிக் புடிக்கும். ஏன்ன்னா அப்பெல்லாம் ராசா மட்டும் தான் மியூசிக் போடுவாரு. வாரம் நாலு படம், நாய் குட்டி போட்ட மாற்றி அவர் மியூசிக்ல ரிலீஸ் ஆகும். நாமளும் ஆக வழி இல்லாம அந்த படத்தை பாத்து தொலைப்போம். (அந்த ஊருல குடிக்கின்றது, சினிமா தவிர வேற பொழுது போக்கு? ).


ஆக, இப்படி நம்ம இசை ரசனை, இசை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தது.(?!!)

முரண் தொடையின் முதல் பக்கம்!

எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.
ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை. குடித்து விட்டால் விளையும் விபரீதங்களில் இதுவும் ஒன்று.

இதை தப்பி தவறி யாராவது படித்து விட்டால்.... உங்களுக்கு ஒரு உறுதி சொல்கிறேன்.
இந்த பக்கங்களில் உருப்படியாக எதுவும் இருக்காது. அப்படி தப்பி தவறி ஏதேனும் உருப்படியாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால்.... கொஞ்சமா குடிங்க சாமி. இப்படியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாய்ந்க?