சனிப்பெயர்ச்சி எனக்கு சரியில்லை. இதுக்கு முன்னாடி சரியா இருந்துச்சா என்று கேட்காதீர்கள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை. எனக்கு என் ராசியே தெரியாது என்பதால் எந்த ராசிக்கு பெயர்ந்தாலும் எனக்கு சரியில்லை. அது தான் கதை.இப்படி எதையாவது காரணம் வைத்து ஆரம்பித்தால் தான் நானூறு வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கும் என் சொந்த கதை சோகக் கதையை திரும்ப புலம்ப ஆரம்பிக்க முடியும். (ஆஹா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... - கோவிந்தன்)
அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஒரு படத்தில் நடித்தாலே போதும். டேனியல் க்ரெய்க் ஒரு படத்தில் தான் நடித்தார். அதுவும் சாதாரண ஜேம்ஸ்பாண்ட் படம். இப்பொழுது அவரை தெரியாதவர்களே இல்லை. அவருக்கு லண்டனில் நாலு சொந்த வீடும் ப்ரைவேட் ஜெட்டும் இருக்கிறது. ஆனால் விஜய் எத்தனை வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறார்? கனவில் கூட ப்ரைவேட் ஜெட் வாங்க முடியுமா அவரால்? மனோரமா. நம் காலத்தில் ஆயிரத்து ஐநூறு படம் நடித்தவர். இன்றைக்கும் அவரது பெயர் தமிழ்நாடு தாண்டி எங்கும் தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாடு உருப்படுமா ஐயா? தமிழ் கலாச்சாரம் செத்து விட்டது என்று நான் முன்னூறு வருடம் முந்தியே சொல்லி விட்டேன்.( வட போச்சே - கோவிந்தன்) (கலாச்சாரம். ச் வராது - பிரபல தமிழ்பதிவர்)
வீட்டுக்கு வந்தா ஒரு பத்து நாள் இருக்க மாதிரி வாயேன். பண்டாரம் பரதேசி மாதிரி வந்தா ரெண்டு நாள்ல ஓடணுமா என்கிறாள் அம்மா. பிரச்சினை கிட்னி தான். அம்மாவுக்கெல்லாம் பயப்பட நான் ஒண்ணும் அம்மாக்கோண்டு இல்லை. ஆனால் அவள் பார்க்கும் மெகா ஸீரியலை ரெண்டு நிமிடம் பார்த்தாலே என் கிட்னி கிழிந்து விடும் போலிருக்கிறது.
கண்டுக்காத அம்மா, சோறு கிடைத்தாள் போதும் என்று இருக்கும் அப்பா, விதம்விதமாய் கொடுமைப் படுத்தும் அம்மாவின் காதலன், கொஞ்சமும் அன்பே இல்லாத கர்ப்பிணிப் பெண்ணை (யாருக்கு யாரு மேல அன்பில்லை? ஒண்ணுமே புரியலியே - கோவிந்தன்) காட்டில் விட்டு செல்லும் கணவன், சோறு கூட போடாத மாமியார்.இது கோகிலா மெகா ஸீரியல் கதை இல்லை. எக்ஸைலின் முக்கிய பாத்திரமான அஞ்சலியின் கதை. மெகா ஸீரியல் கொடுமை தாங்க முடியாமல் தான் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்தேன். அதையே நாவல் வடிவில் மீண்டும் படிக்க வேண்டி இருக்கிறது. (எறங்கின பஸ்லயே திரும்பி ஏத்தி விடறாய்ங்களே - கோவிந்தன்)
தீப்பொறி ஆறுமுகம், கலைஞர் கருணாநிதி, மக்கள் நடிகர் ராமராஜன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்,வைகைப்புயல் வடிவேலு, அல்டிமேட் ஸ்டார் அஜீத்.(இதுக்கு பேரு தான் நேம் ட்ராப்பிங் - கோவிந்தன்). பெயருக்கு முன் பட்டம் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டில் அண்டர்வேர் போடாமல் லுங்கி கட்டுவது போல. சாருவுக்கு அவரது தற்கொலைப்படையினர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கலகக்கார ஞானி. புரட்சிக்காரர் என்று கூப்பிட முடியாது. புரட்சி செய்வது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மிடில்க்ளாஸ் குமாஸ்தா அம்பியான நானே கூட புரட்சி செய்வது எப்படி என்று ரெசிப்பி எழுதியிருக்கிறேன். புத்தகத்தின் பின்னட்டையில் சாரு இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர், கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி என்று பதிப்பாளரே சொல்கிறார். (அவனே சொல்லிட்டானா? - கவுண்டமணி. அண்ணே ஒரு வெளம்பரம் - செந்தில்)
ஆண் பெண் இரண்டாக நீர் சுகித்திருக்கும் படி படைத்தோம். பைபிள். அறுபது வயது எழுத்தாளர் உதயா முப்பது வயது அஞ்சலியை படுக்கையில் கிடத்தி ஆடைகளை களைந்து பிளம்பர் வேலை...கதை ஆரம்பிக்கிறது. (இந்த கலகத்தையெல்லாம் நான் எட்டாங்கிளாஸ்ல தமிழ் புக்குக்கு நடுவுல மறைச்சே படிச்சிட்டனே - கோவிந்தன்)
அதற்கு பின் வெகு நேரம் வருவது அஞ்சலி உதயாவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் கடிதம். கடிதம் கடிதம். கடி. தம். அப்படி லவ் பண்றேன், இப்படி லவ் பண்றேன். உன் குரல் கேட்டாலே ஆர்கஸம் வந்துடுது. (நான் கூட ஒரு படத்தில நாக்கை அறுத்துக்கிட்டேன் - லிவிங்ஸ்டன்)
ஆனால் அஞ்சலி எழுதும் கடிதத்தில் ஒரு நல்ல விஷயம். பக்கங்களை வேகமாக திருப்பி விடலாம். நானூத்து முப்பது பக்கத்தை பிரபல அறிஞர் ஆவி மதன் ஒரே இரவில் படித்திருக்கிறார். எழுத்தாளர் உதயா முதன்முதலாகஃப்ரஞ்ச்சில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். எனக்கு ஃப்ரஞ்ச் தெரியாது. (கடவுள் இருக்காண்டா கொமாரு - கோவிந்தன்)
அஞ்சலி உதயாவுக்கும், உதயா அஞ்சலிக்கும் மாறி மாறி மாறி மாறி கதற கதற ..ச்சை. இனிமேல் தினத்தந்தி படிப்பதில்லை. கடிதம் எழுதியது போக வருவது ப்ளாஸ்டிக் க்ளாஸ் 300, ஆடு வெட்டும் கத்தி 1, காய் வெட்டு கத்தி 1, பச்சை மிளகாய்- 2 கிலோ, மிளகு 250 கி, ஓல்டு சிந்தால் சோப் -4, மாங்காய் - 2 கிலோ, பகார்டி -4, ரெமி மார்டின் -2. எட்டு பக்கத்திற்கு பிச்சாவரத்தில் கார்னிவல் கொண்டாட தேவையான குறிப்புகள். நாவல் நானூறு பக்கம் ஐயா. எப்படித் தான் நிரப்புவது.
கலகக்கார ஞானி சாருவின் ப்ளாக்கிலிந்து உதயா நிறைய திருடி இந்த நாவலில் உபயோகித்திருக்கிறார். பல பல ப்ளாகுகள் எழுத்துக்கள் கூட மாறாது இந்த நாவலில் வருகிறது.சாரு அடுத்த முறை உதயாவை பார்க்கும் போது பேசிக் கொள்வார்.
உதயா ஒரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர். உண்மையில் அவன் தான் கலகக்காரன். பதிமூன்று வயது அஞ்சலிக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திவாகர் நாயின் திவாகர் நாய் இல்லாமல் வருவதில்லை திவாகர் நாயின் கையைக் காலை வெட்டிப் போட துடிக்கும் உதயா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் பற்றி பெருமையாக பேசுகிறான். ஐரோப்பாவில் ஓரினச் சேர்க்கைக்கே தடை இருந்த போது டாஞ்சியர்ஸில் ஏகப்பட்ட பையன்கள் ஒவ்வொரு விடுதியிலும் கிடைப்பார்களாம். இவர்கள் எல்லாம் விரும்பியே செய்தார்களா இல்லை செக்ஸ் டார்ச்சர் செய்யப்பட்டார்களா என்பதெல்லாம் உதயாவுக்கு தேவையில்லை. டாஞ்சியர்ஸில் கிடைப்பார்கள், அதனால் அது எழுத்தாளர்களின் புகலிடம். பெரும் கலகம். மாபெரும் புரட்சி. (அவங்களுக்கெல்லாம் பையன்களை புணர்ந்தால் தான் இலக்கியம் வருமா? - கோவிந்தன்)
தினமலருடன் ஒவ்வொரு ஞாயிறும் வாரமலர் என்று புத்தகம் வரும். அதில் வரும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் அத்தனை பரிசுகள் கொடுத்தால் நோபல் கமிட்டி திவாலாகி விடும் என்பதால் கொடுப்பதில்லை. எழுதுபவர்களும் அதைக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதில்லை. அது அவர்கள் பிரச்சினை. நமக்கென்ன வந்தது. கதை அதுவல்ல. அதில் திண்ணை என்று ஒரு பகுதி வரும். காந்தி 1942 வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற போது அவரது கோவணத்தை தொட்டு பார்த்த வெள்ளையர்கள் இந்திய துணி எத்தனை மென்மையாக இருக்கிறது என்று வியந்தார்கள், அதைக் காப்பி அடித்து தான் மான்செஸ்டரில் ஓரு ஆலையே நிறுவினார்கள். இட்லிக்கு உளுந்து ஊறப்போடும் போது அதனுடன் கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்தால் இட்லி குஷ்புவைப் போல குண்டாக அழகாக வரும். பார்வதி குளிக்கப் போகும் போது தன் அழுக்கை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி காவலுக்கு வைத்துப் போனாள். பார்வதியை பார்க்க வந்த சிவனை அந்த பிள்ளை உள்ளே விட மறுக்கவே சிவகணங்கள் தலையை துண்டித்து விட்டனவாம். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி அழுது புலம்பவே சிவனின் கட்டளைப்படி ஒரு யானையின் தலை பிள்ளைக்கு பொறுத்தப்பட்டது. இவர் தான் இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம் அருளும் பிள்ளையார்.காரைக்குடி முக்குறுணி பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொளுக்கட்டை படைத்தால் நாட்டுக்கே அரசரகலாம். இப்படி அரிய பெரிய தகவல்கள் எல்லாம் திண்ணையில் கிடைக்கும். எக்ஸைலிலும் கிடைக்கும்.
நான் இருபத்தைந்து வருடமாக நூறு பேருக்குத் தான் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழ் சமூகமே என்னைத் துரத்துகிறது. (கணக்கு உதைக்குதே - கோவிந்தன்) தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்று உதயா புலம்பிக் கொண்டே இருக்கிறார். அய்யா, பேரன்பும் கருணையுள்ளமும் உள்ளவரே. எழுதியதையே எழுதினால் எப்படி ஐயா படிப்பார்கள்? எத்தனை முறை தான் படிப்பது? எழுதி முடித்ததும் எழுதியவன் இறந்து விடுகிறான்.பின் நவீனத்துவம். சில எழுத்துகளை படிக்கும் போதே வாசிப்பவனும் செத்தொழிகிறான். வேலாயுதம் படத்தை நூறு முறை பார்த்தவர்கள் கை தூக்குங்கள்.
படம் என்றதும் ஞாபகம் வருகிறது. மொகாபத்தேன் என்று ஒரு படம். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய். பெரிய நட்சத்திர பட்டாளம். படம் செம மொக்கை. என் வாழ்க்கையில் அப்படி ஒரு அறுவை படத்தை பார்த்ததில்லை. மூன்று மணி நேர படத்தில் நான் நூற்று அறுபது நிமிடம் தியேட்டருக்கு வெளியே பாரில் தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் ஒரு நன்மை. அதற்கு பின் நான் எந்த ஹிந்தி படமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. காசும் மிச்சம். நேரமும் மிச்சம்.
எக்ஸைல் படிக்கும் போது அடிக்கடி தோன்றியது மொகாபத்தேன் தான். எதற்காக வேலை விட்டு நேரம் விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று என் மீதே கடும் வெறுப்பாக இருக்கிறது. இந்த நேரத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எதுவும் உருப்படியாக இல்லாவிட்டால் மெகா ஸீரியலாவது பார்க்கலாம்.
(அது தான் தெரியுதுல்ல வெண்ண. தேகம் படிச்சிட்டே இப்படித் தான் பேயடிச்சவன் மாதிரி பொலம்பிக்கிட்டு இருந்த. பின்ன புடுங்கறதுக்கா இந்த புக்கை வாங்கிப் படிக்கிற. பிக்காலி ஃபெல்லோ - கோவிந்தன்)
கோவிந்தா, நீ சொல்வது சரி. நான் இந்த புத்தகத்தை படித்திருக்கவே வேண்டியதில்லை. ஆனால் உதயாவின் ரசிகர் மன்றமும் தற்கொலைப்படையும் இந்த நூற்றாண்டின் மாபெரும் இலக்கியம் என்ற ரீதியில் இதை கூவிக் கொண்டிருக்கிறார்கள். ( இவர்களெல்லாம் மெகா ஸீரியலோ தமிழ்ப்படமோ பார்க்காதவர்கள் போலிருக்கிறது. கொடுத்து வைத்த புண்ணியவான்கள் - கோவிந்தன்). ப்ளாக், ட்விட்டர், பஸ், ப்ளஸ் போன்ற இடங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வினை இது. ஒன்று இதையெல்லாம் விட்டு விலக வேண்டும். அப்பொழுது இந்த கூச்சல் எனக்கு தெரியாது போய்விடும். அல்லது எனக்கு தமிழ் எழுதப்படிக்க மறந்து போக வேண்டும். தமிழை மறப்பது கஷ்டம் தான். ஆனால் எக்ஸைல் போன்ற மாபெரும் இலக்கியங்களை படிக்காமல் இருக்க அது தான் வழி என்றால் அதற்குமே நான் சித்தமாக இருக்கிறேன்.
எக்ஸைல் - வாசிப்பவர்கள் போக வேண்டியது.
Showing posts with label அய்யாங்...டொய்ங்... Show all posts
Showing posts with label அய்யாங்...டொய்ங்... Show all posts
Sunday, 1 January 2012
Wednesday, 1 June 2011
கொல்கத்தா சேரிகளும் ஜெயமோகனும் கொஞ்சம் அறச்சீற்றமும் (அ) அய்யாங்...ட்ட்டொய்ங் 5
இந்த தலைப்பிலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. அய்யாங் டொய்ங் என்பதை விட அய்யகோ ட்ட்டொய்ங் என்பது தான் சரியாக இருக்கும். போய்த் தொலைகிறது விடுங்கள். கெடப்பது கெடக்கட்டும் கெழவனை தூக்கி மனையில் வை என்பது போல ஆகிவிடும்.
எனக்கு வாசிப்பறிவும் இல்லை. புண்ணாக்கும் விற்பதில்லை. கருவாடு வேண்டுமானால் கிடைக்கும். அய்யா சேரியில் வாழ்வதற்கு க்யூவில் நிற்பவர்கள் எத்தனை பேர். அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களும் கடன் வாங்கியாவது வீடு கட்டுபவர்களும் சேரியில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒரு டவுட்டு தான்.அய்யகோ அம்மாவின் அரசு இந்த நிலையை மாற்றுமா. ஏழையாய் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கிறது என்று உருகும் இலக்கியவாதிகளும் முற்போக்கு என்னய்யா முற்போக்கு எனக்கு பிற்போக்கு தான் தெரியும் முற்போக்கு பதிவர்களும் அதை சேரியில் இருக்க நேர்பவர்களிடம் போய் அறிக்கை விட்டு பாருங்கள். அப்புறம் தெரியும் சேதி.
என்ன கருமத்துக்கு இந்த பழமொழி என்று உடனடியாக சீறாதீர்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்கள். போய் க்யூவில் நில்லுங்கள். டோக்கன் அப்புறம் தருவார்கள். சேரின்னு சொன்னா, ஆஹா வாழ்க்கைன்னா அங்க தான்யா இருக்கு என்று வெளம்பர ஃபீலிங். அப்படில்லாம் இல்லை என்று சொன்னால் போச்சு. அதெப்படி சொல்லலாம் சேரின்னா முகம் சுளிக்கிறது பார்ப்பானீயம் பாட்டி சுட்ட பணியாரம். கெளம்பி விடுவார்கள். ஓவர் டைமெல்லாம் உண்டாம்.
எனக்கு வாசிப்பறிவும் இல்லை. புண்ணாக்கும் விற்பதில்லை. கருவாடு வேண்டுமானால் கிடைக்கும். அய்யா சேரியில் வாழ்வதற்கு க்யூவில் நிற்பவர்கள் எத்தனை பேர். அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களும் கடன் வாங்கியாவது வீடு கட்டுபவர்களும் சேரியில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒரு டவுட்டு தான்.அய்யகோ அம்மாவின் அரசு இந்த நிலையை மாற்றுமா. ஏழையாய் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கிறது என்று உருகும் இலக்கியவாதிகளும் முற்போக்கு என்னய்யா முற்போக்கு எனக்கு பிற்போக்கு தான் தெரியும் முற்போக்கு பதிவர்களும் அதை சேரியில் இருக்க நேர்பவர்களிடம் போய் அறிக்கை விட்டு பாருங்கள். அப்புறம் தெரியும் சேதி. எட்டுக்கு எட்டு அறை அதில் மூணு பேர். அறை என்றால் ஒரு ரூமில் பத்து பேர் இருக்கும் சென்னை மேன்ஷன் என்று நினைத்துக் கொண்டால் நீங்கள் மேல்தட்டு சுகவாசி. அறைக்கு கீழே சாக்கடை. அதன் மேல் ஒரு சிமெண்ட் தட்டு. அதற்கு மேல் ஒரு கிழிந்த கட்டில். அதில் நீங்கள் உட்கார்ந்தால் உங்களுக்கு மேலே ஒருத்தன் படுத்திருப்பான். அவன் பெயர் ரங்கநாதன் இல்லை. இப்படி ஒரு அறை இருந்தாலே அது ஆகப்பெரிய விஷயம். இதைத் தான் நமது இலக்கியவாதிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு போய் குடித்தனம் நடத்துவார்களா. அய்ய்ய்ய்ய்யாங்ங்ங்ங்....
சேரியில் சுகம் காணும் ஏழைப் பங்காளர்கள் எப்படியோ சுகமாய் இருக்கட்டும். பிரச்சினை அதுவல்ல. வடகிழக்கு போன ஜெயமோகன் அங்கயே இருந்திட கூடாதா என்று கேட்காதீர்கள். அமெரிக்கா போனாலும் ஆஸ்ட்ரேலியா போனாலும் கம்ப்யூட்டர் கிடைக்காத பூட்டான் போனாலும் அவர் எழுதிக் கொண்டு தான் இருப்பார். என்ன சொல்ல வந்தேன். வட கிழக்கு போன ஜெயமோகன் கொல்கத்தா ஆமாம் கல்கத்தா என்று இருந்தால் மக்கள் வாழ்வில் வறுமை. கொல்கத்தா என்று மாற்றியதால் எல்லாரும் ப்ரைவேட் ஜெட்டில் போய்க் கொண்டிருக்கிறார்கள், ஒன்று எழுதியிருக்கிறார்.
படித்த உடனே உங்கள் ரத்தம் கொதிக்க வேண்டும். எதற்கு என்றெல்லாம் யோசித்தால் நீங்கள் ஜாதி வெறியன். வக்கிரம் பிடித்தவன். அல்லது பிடித்தவள். ஆணாதிக்க வாதி பட்டம் இலவசமாய் எனக்கு கிடைக்க வேண்டாம்.
தெளிவாகவே இருக்கிறது. கிராமங்களில் நில உடைமை சமூக அமைப்பு அப்படியே பேணப்பட்டதால் தலித்துகள் இடம் பெயர்ந்தார்கள். இதையெல்லாம் கவனித்தால் அறம் சீற முடியாது. சீறி விட்டு அப்புறமாக யோசிப்பது தான் அறம்.
ரொம்ப நேரம் வேண்டாம். ஒரு தம்மடிக்கும் நேரம் போதும். அய்யோ நான் தம்மடிக்க மாட்டேன் என்று சொல்லும் அம்மா பிள்ளைகள் நகத்தை கடிக்கலாம். பிரச்சினை இல்லை. யோசியுங்கள். நில உடைமை சமூகத்தில் அதிக பாதிப்பு யாருக்கென்று. குறிப்பாக எந்த வர்க்கத்தினர் எந்த சாதியினர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்று. ஜாதி வெறியன் பூணுலை நகர்த்தி போடுகிறான் என்று ஒரு பின்னூட்டம் வரப்போகிறது. ஆனால் உண்மை என்னவெனில் நில உடைமை சமூகம் ஜமீந்தார் சமூகம் என்று சொன்னால் புரியும் இந்த அமைப்பால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அவர்கள் நிலம் வைத்திருந்தாலும் குற்றம் என்ற நிலை தான் இருந்தது. இன்னும் சில இடங்களில் இருக்கிறது. இந்த கொடூரத்திற்கு ஆட்படாது வேறு வழியின்றி கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று ஜெயமோகன் சொன்னால் தலித்துகள் போய் கொல்கொத்தா சேரியாகி விட்டதா என்று பொங்குகிறார்கள்.
தலித்துகள் இடம் பெயர்ந்தால் சேரியாகி விடுமா என்றால் தலித்துகள் இடம் பெயர்ந்ததால் அல்ல, பெரும் அளவிலான மக்கள் இடம் பெயரந்தால் எந்த இடமும் அப்படித் தான் ஆகும். திருவிழா முடிந்து ஊரெல்லாம் குப்பை. தொழில் வசதியும் வளமையும் இல்லாத நகரம் மக்கள் இடப்பெயர்ச்சியால் சேரியாக தான் மாறும். தினமும் வீட்டை துடைத்து வைக்க மாதம் ரெண்டு லட்சம் சம்பளம் கிடைப்பது இல்லை.
அம்மா ஆடு இலை ஈ உடுக்கை ஊஞ்சல். ஏ ஃபார் ஆப்பிள் பீ ஃபார் பிஸ்கட். ஜெயமோகன் சொல்ல வருவது மேற்குவங்க இடதுசாரிகள் போலி சமத்துவம் பேசிக் கொண்டே நிலப்பிரப்புத்துவ சமூகத்தையே நிலைநிறுத்தினார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்ட தலித்துகள் வங்காளத்தின் ஒரே பெரு நகரமான கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். ஏற்கனவே தொழில் வளம் அழிக்கப்பட்டிருந்த கல்கத்தா இடப்பெயர்ச்சிக்கு ஈடு கொடுக்கவில்லை. இடம் பெயர்ந்தவர்களின் வறுமை காரணமாக சேரி போன்ற நிலை ஏற்பட்டது. ஒன்னாங்கிளாஸ் பாடம். இதற்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டி இருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் மனிதகுல விரோதிகளா முப்பது ஆண்டுகளாக ஒரு மாநிலத்தை ஆண்டவர்கள் மனித குல விரோதிகளா. என்று கேட்கிறார்கள். நான் மூணாங்கிளாஸ் ஃபெயில். அய்யா மாநிலம் அல்ல, சோவியத் யூனியன் என்ற மாபெரும் நாட்டையே ஆண்டார்கள். எத்தனை வருஷம். அவர்கள் மனித குல தொண்டர்களா. ஸ்டாலினால் புதைக்கப்பட்டவர்களின் கால் நகம் கூட உங்களை மன்னிக்காது. மாவோவால் கொல்லப்பட்டவர்களின் புதை குழி மீது நின்று உங்கள் அறிவுஜீவி கேள்விகளை எழுப்புங்கள். ரொம்ப நோண்டாத உள்ள இருக்கவன் வெளிய வந்து அப்பிட போறான். நான் சொல்லவில்லை. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது.
விக்ரமுக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது. எனக்கு முற்போக்கு பட்டம் கூட கிடைக்காமல் இருப்பது என்னால் பொறுக்க முடியவில்லை. எத்தனை நாள் பிற்போக்கு பதிவனாக இருப்பது. எதையாவது பார்த்தோ பார்க்காமலோ அறச்சீற்றம் அடந்து நானும் முற்போக்காக போகிறேன். சமத்துவம், சமூக நீதி, கேள்வி கேட்பவன் ஆதிக்க வாதி, குற்றம் சாட்டுபவன் சாதி வெறியன். ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த மந்திரி மீது வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. சரியாக சொல்கிறேனா? இனி நானும் ஒரு முற்போக்கு பதிவன்.
===============================
Labels:
அய்யாங்...டொய்ங்..,
மொக்கை,
ஜெயமோகன்
Tuesday, 31 August 2010
பம்பரக்கண்ணு..பச்சமொளகா...இஞ்சி மரப்பா....இனிக்க வச்சா... (அ) அய்யாங்...ட்டொய்ங்..4
நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் நாசமாய் போங்கள். எனக்கும் பாமா விஜயத்துக்கும் கொஞ்சம் கூட ராசியில்லை.பின்னர் என்ன? கலாநிதி மாறன் வழங்கும் சிங்கம் தயாநிதி மாறன் வழங்கும் எந்திரன் எல்லா இடத்திலும் மாஃபியா ப்ரதர்ஸ் இல்லை மாறன் பிரதர்சை பார்த்து கடுப்பாகி பாமா விஜயம் பார்க்க ஆரம்பித்தால் அதையும் நான் கண்டுபிடிக்கவில்லை. டோண்டு ராகவனின் சமீபத்திய பதிவில் லிங்க் இருந்தது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் சனியன் முடிய மாட்டேன் என்கிறது. இரண்டு நாட்களாக பார்த்து இன்று முடித்து விடலாம் என்றால் எழவு இன்றைக்கும் பார்க்க முடியாது போலிருக்கிறது. மூன்று கணவன்மார்களில் பாமாவுக்கு யாருடன் தொடர்பு என்று இன்றைக்கும் தெரிய போவதில்லை. ஒரு ஏழை பிச்சைக்கார மொக்கை பதிவனுக்கு தான் எத்தனை பிரச்சினைகள்.
என்ன கேடு என்று கேட்காதீர்கள் அய்யா. சுந்தர்ஜி பஸ்ஸை பார்த்து அய் பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள். அதுவும் பிரபல பதிவர் என்று. எனக்கே தெரியாமல் நான் எப்பொழுது பிரபலமாகி தொலைத்தேன் என்று தெரியவில்லை. சரி போய்த் தொலையட்டும் சாருவே பிரபலமாக சிங்கிள் பாட்டில் குத்தாட்டம் போடும் போது மரண மொக்கையன் ஆன எனக்கு என்ன பிரபலமானால் நல்லது தான். நாலு காசு பார்க்கலாம் என்றால் இந்த மெய்நிகர் உலகில் பிரபலமாகி என்ன செய்து தொலைப்பது என்று தெரியவில்லை. சிங்கிள் பாட்டில் ஆட சாருவுக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைக்குமா என்று கவலையாக இருக்கிறது.
தமிழ்மணத்தில் மகுடம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். மண் குடம் கொடுத்தாலாவது சுண்டக்கஞ்சி காய்ச்சலாம். மகுடத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மெய் நிகர் உலகில் பிரபலமாகி விட்டேனாம்.மெய் உலகத்தில் பிரபலாமானால் என் மெய்யை காட்டி எழவு மெய் நிகர் உலகத்தில் படிப்பவர்களுக்கு தமிழ் வேறு தட்டுப்பாடு. மெய் என்றால் பாடி. அதாவது உடம்பு. என்ன சொன்னேன்? மெய் உலகில் பிரபலமானால் என் மெய்யை காட்டி ஏதாவது விளம்பரத்தில் வந்து கும்பி வளர்க்கலாம். மெய் நிகர் உலகத்தில் பிரபலமாகி என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸில் ஜட்டி கூட வாங்க முடியாது. அது என்ன எப்ப பார்த்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டி என்று கேட்கிறார்கள். உலகத்திலேயே தமிழ்நாட்டில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் தான் ஜட்டி விலை மலிவு என்று கருணாநிதி ஆதாரத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார். படித்து தொலையுங்கள். எல்லாத்தையும் மொக்கை பதிவனே சொல்ல முடியாது. இதில் நான் மொக்கையா சாதா மொக்கையா என்று வேறு கேள்வி இருக்கிறது.ஸ்பெஷல் மொக்கை இல்லை. அது தெரியும்.
அது என்னய்யா மெய் நிகர் உலகம்? இங்கு என்ன மெய்யாக இருக்கிறது? ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில். மெய் நிகர் உலகில் எந்திரனுக்கு மாபெரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மெய் உலகத்திலோ பாடல் வந்த அன்றே பத்து லட்சம் சி.டி. விக்கிறார்கள். சிங்கம் மொக்கை என்றார்கள். அது என்னடாவென்றால் சூப்பர் ஹிட்டாக போகிறது. விஜய் படம் மொக்கை என்று எழுதி விட்டு முதல் ஆளாக பார்க்க போகிறார்கள். கருணாநிதி அந்தோ கதி என்றார்கள். அவரானால் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சவால் விடுவது போல மானாட மயிலாட உளியின் ஓசை என்று இம்சை செய்கிறார்.
பெண் உரிமைக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனிலோ இல்லை சைனாவிலோ எந்த பெண்ணாவது ஜனாதிபதியை விடுங்கள் பொலிட்பீரோ மெம்பராக இருப்பதாக கூட தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள் எத்தனை வருடம் சோவியத் யூனியனை ஆண்டார்கள்? எத்தனை வருடமாக சைனாவை ஆள்கிறார்கள். அத்தனை வருடத்திலும் தகுதியாக ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை? இது மெய் உலகமா, மெய் நிகர் உலகமா இல்லை பொய் உலகமா. என்ன கருமாந்திரம். வர வர வோட்கா அடித்தால் ஒரு மயிறும் ஏற மாட்டேன் என்கிறது. இல்லாவிட்டால் இப்படி கேள்வி வருமா.மாயா மாயா எல்லாம் மாயா என்று ரஜினிகாந்த் சொன்னால் மனிஷா கொய்ராலா ரொம்ப கிழவியாகிட்டா என்கிறார்கள். வேண்டுமானால் பொய் நிகர் உலகம் என்று சொல்லுங்கள். எல்லாம் மாயா. கேரளா போனால் கிடைப்பது கட்டஞ்சாயா. மொக்கை கவிஞன் என்று ப்ரூவ் பண்ணியாக வேண்டும். வேறு என்ன.
பொய் நிகர் உலகத்தில் என்னவோ செய்கிறார்கள். செய்தால் எனக்கென்ன? எனக்கு மெய் தான் முக்கியம். பாடியை சொல்லவில்லை. மெய் உலகத்தை சொல்கிறேன்.வினவு சொல்கிறார். பெரிய கட்சி சிறிய கட்சி எதை வைத்து அளப்பது. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வரும் ஆட்களை வைத்து சுந்தர் அளப்பாரா என்று கேள்வி வேறு. அய்யா, சுந்தர் எப்படி அளப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால், மொக்கை பதிவன் எப்படி அளப்பான் என்றால் அந்த கட்சி ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்று தான் அளப்பான். பாதிப்பு என்றால் பொய்நிகர் வாழ் தமிழர்களுக்கு புரிந்து தொலைக்காது என்பதால் இம்பாக்ட். ஒரு கட்சியின் இம்பாக்ட்டை வைத்து தான் அது பெரிய கட்சியா சிறிய கட்சியா இல்லை லெட்டர் பேடு கட்சியா என்று அளப்பது. நீங்கள் ஒட்டு மொத்த சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நான் எதுவும் சொல்லவில்லை. நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். நல்லதோ கெட்டதோ போலி திராவிட குடும்ப கட்சிகளும் தலைவர் சூழ் காங்கிரஸ் கட்சியும் கடப்பாறை பிஜேபியும் ஏற்படுத்தும் பாதிப்பில் சொல்லிக் கொள்ளும் சதவீதமாக கூட நீங்கள் ஏற்படுத்துவதில்லை. அய், நாங்க சிதம்பரத்துல தமிழ் ஓத வைச்சோம் மூணு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செஞ்சி வைச்சோம் என்று சொல்வதெல்லாம் நல்லது தான். ஆனால் உத்தப்புரமும் திண்ணியமும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு போனால் வேறு எங்காவது இருக்கும்.
சூர மொக்கை பதிவன் சொன்னால் என்ன சூத்தை காட்டினால் என்ன என்று நினைக்காதீர்கள். எனக்கு பாராளுமன்றம் என்பதே உங்கள் வழியாக தான் தெரியும். பாராளுமன்றம் பன்றித் தொழுவம் நக்சல் பாரி பாதையே நமது பாதை என்று துண்டு பிரசுரம் விட்டது மக இகவா இல்லை இடது/வலது/போலி/ மார்க்சிய/லெனிய/மாவோயிஸ்ட் அமைப்புகளா? சரி யார் விட்டால் என்ன எனக்கு பாராளுமன்றம் என்பதை விட பன்றித் தொழுவம் எப்படி இருக்கும் என்றே பார்க்கத் தோன்றியது. இதை பார்க்கும் போது நான் ஐந்தாம் கிளாஸ் தான் படித்தேன். கட் அடித்து விட்டு தியேட்டருக்கு போனால் அங்கே சுவற்றில் எழுதி இருந்தது. நான் அஞ்சாங்கிளாஸ் முடித்து இருபது வருடம் ஆகப் போகிறது. இன்னமும் பாராளுமன்றம் இருக்கிறது. அந்த தியேட்டரும் இருக்கிறது. மயிராண்டிகள் என்னை அன்றைக்கு உள்ளே விடவில்லை என்பது வேறு கதை. அப்புறம் சொல்கிறேன்.
பச்சை மிளகாயா பூசணிக்காயா என்றால் சிவப்பு மிளகாய்க்கு என்னாயிற்று. சரி விடுங்கள். அது சிவப்பு மிளகாய் விற்றவர்கள் பிரச்சினை. நமக்கு என்ன. பச்சை மிளகாய் பொய் நிகர் உலகத்தில் இல்லாது மெய் உலகத்தில் இருந்தால் உபயோகம் தான். ரசம் வைக்கலாம். ஆனால் அய் அழகா இருக்கே என்று கண்ணில் தேய்த்தால் அப்புறம் தெரியும் சேதி. விருப்பமிருப்பவர்கள் உங்கள் கண்ணில் தேய்த்துக் கொள்ளுங்கள். என் கண்ணில் தேய்த்து தொலைக்காதீர்கள். நான் கெட்ட வார்த்தை பேசி நீங்கள் கேட்டதில்லை.
நாக்கூசாமல் சொல்கிறார்கள். கூச்சப்பட்டு எழுதுவதில்லையாம். அப்படி எழுதாதவர்கள் மொக்கை பதிவர்களாம். அய்யா புரட்சி போராளிகளே நீங்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக சொன்ன பதிவை எடுத்துக் கொண்டு ஓடி வந்த அல்லக்கைகள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? மேல் கீழ் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாருக்காவது புரிகிறதா? மேல் வாய் எனக்கும் புரிகிறது. அது என்ன கீழ் வாய்? நான் கேட்கவில்லை. பொய் நிகர் உலகத்தின் புரட்சி போராளிகள் முன்பு எழுதிய வரிகள் தான். மாவோவின் அபார புரட்சி பற்றி நான் எழுதினால் அசிங்கமாக படம் போடுகிறார்கள். இந்த இடுகையை பெண்களும் படித்து தொலைக்கலாம் என்பதால் அந்த படம் இங்கு வராது. சுருக்கமாக சொன்னால் அந்த படத்தின் அர்த்தம் Cock Suckers. இங்கிலீஷ் தெரியாதவர்கள் யாரிடமும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இது தான் இவர்களின் புரட்சி. என்ன சொன்னான் என்பதை விடு. சொல்பவனின் கோமணத்தை பிடுங்கு.அம்மணமாக்கு. வாழ்க கொள்கை. வளர்க புரட்சி. எல்லாரும் புரட்சி செய்யுங்கள்.
பொய் நிகர் உலகத்திலேயே இது தான் இவர்களின் பச்சை மிளகாய். அப்படியானால் மெய் உலகத்தில் எப்படி இருக்கும்? புரட்சியை கேள்வி கேட்பவன் நடுத்தெருவில் அம்மணமாக்க படலாம். அது மக்கள் விரோத சிந்தனை இல்லையா என்று கேட்காதீர்கள். அது மக்களுக்கான என்டர்டெயின்மெண்ட். சீசரின் ரோமில் க்ளாடியேட்டர்கள் இருந்தார்கள்.
இதை எழுதியதற்காக நாளை நான் அம்மணமாக இருக்கும் படம் வரலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. பாத்ரூமில் குளிக்கும் போது கூட அம்மணமாக இருக்க முடியவில்லை என்றால் நான் பேசாமல் ஏதேனும் கம்யூனிஸ்ட் நாட்டுக்கே குடியேறி விடலாம். வேறு என்னதான் செய்து தொலைப்பது.
இத்தனை எழுதிய பின்னரும் அது என்ன பச்சை மொளகாய் இஞ்சி மொரப்பா என்று எழவெடுப்பவர்கள் கையில் நிறைய காசிருந்தால் டென், டவ்னிங் ஸ்ட்ரீட் வரவும். அடுத்த மாதம் தேதி தருகிறேன்.இப்பொழுது நான் பாமா விஜயம் பார்க்க வேண்டும். எனக்கு நாகேஷ் மேல் தான் சந்தேகம்.அவருடன் தான் பாமாவுக்கு தொடர்பிருக்க வேண்டும். எதற்கும் முழுதாய் பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்.
பாமா விஜயம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பை சொடுக்கலாம். மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் கார்த்திக்கின் அப்பா முத்துராமன், நாகேஷ், பாலையா நடித்தது.படம் மிக நீளமாக இருந்தாலும் விஜய் படங்களை விட பெட்டர். இணைப்புக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் டோண்டு ராகவன் அவர்களுக்கு சொல்லவும்.
====================
Labels:
அய்யாங்...டொய்ங்..,
எதிர் வினை,
வினவு
Thursday, 19 August 2010
புரட்சி செய்வது எப்படி (அ) அய்யாங்...டொய்ங்.. 3
இனிமேல் புரட்சியைப் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். பொலிட்பீரோவை கூட்டி எடுத்த இறுதி முடிவு. பின்னர் என்ன ஐயா? மாவோவின் புரட்சி பற்றி எழுதினாலும் எழுதினேன் புரட்சின்னா என்ன, எப்படி புரட்சி செய்வது என்று துளைத்து எடுக்கிறார்கள். மொபைல் ஃபோனை ஆஃப் பண்ணி வைப்பது எனக்கு பிடிக்காது. கால் மேல் கால் போட்டால் அந்த காலை சொல்லவில்லை, என்ன செய்வது? வேறு வழியில்லாமல் ஆஃப் செய்து விட்டேன்.
புரட்சி பற்றி என்னை எழுத தூண்டியதே முகிலன் தான். சரி அவர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் புரட்சிக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காமல் அவரை மிடில் கிளாஸ் முகிலன் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் கூட பெரிய ஆச்சரியம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சுயமாக யோசித்து லெனின் சொன்னதை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்.
சரி போய்த் தொலையட்டும், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் கடன் வாங்கி எழுதுபவன் இதை எழுத மாட்டேனா? எழுதித் தொலைக்கலாம் என்றால் புரட்சி எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அய்யா அது என்ன கத்தரிக்காயா வெண்டைக்காயா இல்லை மலிவு விலையில் விற்க சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டியா? புரட்சி ஐயா புரட்சி. அன்னம்மா கிழவி மீனு மீனு என்று விற்றதை போல இப்பொழுதெல்லாம் இணையத்தில் புரட்சி புரட்சி என்று கூவிக் கூவி விக்கிறார்கள்.சில மண்டபங்களில் கூட விற்பதாக கேள்வி. எனக்கு இதில் பெரிய பிரச்சினை இருக்கிறது. இணைய புரட்சிகளில் எது போலிப் புரட்சி எது போளிப் புரட்சி என்று ஒரு எழவும் தெரியவில்லை. அதையெல்லாம் நம்பி ஏமாந்து போய் அப்புறம் கமிஷனர் ஆஃபிஸில் க்யூவில் நின்று தொலைக்காதீர்கள்.
புரட்சி எப்படி இருக்கும் என்றால் கொஞ்சம் உருளைக் கிழங்கு சைஸில் ஆனால் சிவப்பாக இருக்கும். சக்கரை வள்ளிக் கிழங்கை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். அய்யா அது ஸ்வீட் பொட்டட்டோ. சிவப்பாக இருப்பது ஸ்வீட்டாம். அறிவு உள்ளவர்கள் வெள்ளைக்காரனின் வர்க்க விரோத போக்கை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இல்லை, புரட்சி இன்னும் நல்ல சிவப்பாக இருக்கும் என்றால் அப்ப பீட்ருட்டு என்கிறாள் லூஸி. எங்கு போய் முட்டிக் கொள்ள?
இப்படி புரட்சியை கண்டுபிடிப்பதே பெரும் பிரச்சினை என்பதால் வாங்கப் போகும் போது ஏற்கனவே புரட்சி செய்தவருடன் போவது நல்லது. அதுவும் கூட்டுப் புரட்சி செய்தவராய் இருந்தால் இன்னும் உத்தமம். அது என்ன கூட்டு புரட்சி.எல்லா எழவையும் நானே சொல்லித் தொலைக்கிறேன். பொறுங்கள். புரட்சி செய்ய பொறுமை அவசியம். கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது என்றாலும் அவர்களே பொறுமையாக இருக்கும் போது உங்களுக்கு என்ன?
புரட்சியை கொண்டு வந்தால் மட்டும் போதாது.அதை செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது. முதலில் புரட்சியை நீள வாக்கில் கத்தரிக்காயை போல அரிந்து கொள்ளுங்கள். நல்ல உயர்தர சிவப்பு ஒயின் எடுத்து அதில் தடவுங்கள். ஃப்ரெஞ்ச் ஒயினோ சிலே ஒயினாகவோ இருப்பது உத்தமம். ஏழைகளாக இருப்பவர்களும் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் டாஸ்மாக் சரக்கில் ஊற வைக்கலாம். சுவை கொஞ்சம் மட்டம் தான். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அளவு புரட்சி செய்வதே பெரிய விஷயம் என்பதால் பரவாயில்லை. அதற்காக வெள்ளை ஒயின் சேர்ப்பது வர்க்க விரோத மனப்பான்மை. அப்படி செய்பவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.
புரட்சி ஒரு பக்கம் ஊறும் போது ஒரு பெரிய வெங்காயம் ஆமாம் பெரியார் சொன்ன அதே வெங்காயம் தான். வெங்காயத்தை கண்டுபிடித்ததே பெரியார் தான் என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை கெடுக்க நான் தயாரில்லை. பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள். எட்டு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, ஆறு பல் பூண்டு, சோம்பு, சீரகம், கொஞ்சம் வறுத்த வெந்தயம், ஆந்திரா குண்டு மிளகாய் பதினெட்டு எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லாம் அரைத்த பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி அது வதங்கும் போதே ஒரு கொத்து கறுவேப்பிலையும் சேருங்கள். நன்றாக வதங்கியதும் புரட்சி ஊறிக் கொண்டிருக்கும் சிவப்பு ஒயினை இதில் கொட்டி அப்படியே மசாலா சேர்த்து வெட்டி வைத்த புரட்சியையும் சேர்த்து நன்றாக தளதளவென்று சிவப்பாக வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஐயா. நீங்கள் புரட்சி செய்து விட்டீர்கள். இதையே ஏழைகளின் கல்யாணத்திலோ அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தும் போதோ செய்தால் அது கூட்டுப் புரட்சி.
புரட்சி செய்வது எப்படி என்று நான் சொன்னால் அதுல கோழிக்கறி போட்டா சூப்பரா இருக்கும் என்கிறாள் ஜெயந்தி. அய்யா, புரட்சி செய்வதே கோழிக்கறி வாங்க முடியாத ஏழைகளுக்காக தான். இதில் கோழி சேர்க்கலாமா என்று கொழுப்பெடுத்தவன் தான் சொல்வான். புரட்சி காலையில் பூரிக்கு நன்றாக இருக்கும். பூரி செய்ய முடியாது புரட்சி மட்டும் செய்பவர்கள் அதை மட்டுமே கூட தின்னலாம். அதிகம் போனால் பின்பக்கம் புடுங்கி விடும் என்பதால் கொஞ்சமாக தின்பது நலம்.
நான் இப்படி மாய்ந்து மாய்ந்து புரட்சி செய்வது பற்றி எழுதினால் பார்ப்பானீய ஆணாதிக்க தொழிலாளர் விரோத தேசிய இனங்களை ஒடுக்கிய கஸின் கோயம்பத்தூரில் இருந்து போன் செய்து எந்திரன் பாட்டு கேட்டியா ச்சும்மா அதிருதுல்ல என்கிறான். எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?
Labels:
அய்யாங்...டொய்ங்..,
சூர மொக்கை,
மொக்கை
Wednesday, 18 August 2010
எந்திரனும் ஏழைப் பங்காளன்களும் (அ) அய்யாங்...டொய்ங்.. 2
நாலு நாள் ஊரில் இல்லாமல் திரும்பி வந்து பார்த்தால் எந்திரனை எதிர்த்து இணையத்தில் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ஒரு வேளை படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை. பொரச்சி வருகுது பொரச்சி வருகுது என்று ஏழைப் பங்காளர்கள் அட்வான்ஸாகவே ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. அவர்களும் எவ்வளவு நாள் தான் காத்திருப்பார்கள்?
இதைச் சொன்னால் ஆமா நான் கூட ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன், சிவாஜி வந்து ரெண்டு வருஷம் ஆச்சு என்கிறார் முகிலன். அய்யா, நான் அதைச் சொல்லவில்லை. ஒரிஜினலாக ஒரு புரட்சி வரப் போகுது என்று கம்யூனிஸ்டுகள் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பிரகாஷ் காரத் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். அதெப்படி சொல்லலாம் என்று அவர் மீது பாய்ந்து தொலைக்கிறார்கள் ஆதிக்க வாதிகள். அவர் சொல்வதில் தவறென்ன? அவர் என்ன தானாகவா சொல்கிறார்? அவருக்கு முந்தி இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற தோழர் அதையே தான் சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஒரிஜினல் இல்லை. மாவோ சொன்னதாக அவர் சொன்னார். மாவோ லெனின் சொன்னதை சொன்னார். லெனின் ஜார் மன்னரின் கடைசி குழந்தை வரை கொன்று மனித நேயத்தை நிலை நாட்டிய பின் புரட்சி வென்றது என்று அறிவித்து விட்டார்.
அதெப்படி குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மனித நேயம் என்று கேட்கிறார்கள் பாசிஸ்டுகள்.லெனின் சொன்னதை கேள்வி கேப்பவனுக்கு சுய அறிவு இல்லை. மார்க்ஸ் என்ன சொல்லியிருக்கிறார்? மாவோ என்ன செய்தார்? இது எதுவும் தெரியாமல் ஓசியில் ப்ளாக்கும் ஓட்டை கம்ப்யூட்டரும் இருக்கிறது என்று வாதாட கிளம்பி விடுகிறார்கள்.
சொந்தமாக சிந்திப்பவர்கள் மாவோ சொன்னதை ஏற்று நடப்பார்கள். செய்ததை திரும்பி செய்து தங்கள் தெருவில் புரட்சி புரிவார்கள். அப்படி மாவோ என்ன செய்து விட்டார் என்று கேவலமாக பேசுகிறார்கள்.
மாவோ மக்களுக்காக உயிரை கொடுத்துப் போராடியவர் என்று நான் சொன்னால் ஆமா, மக்கள் உயிரைத் தானே என்று நக்கல் செய்கிறார்கள். மாவோ தன் உயிர் மற்றவர் உயிர் என்று பிரித்து பார்த்ததில்லை. அதனால் தான் புரட்சி முழு வெற்றி பெறும் முன்னரே ஷியாங்க் கே ஷேக்கை எதிர்த்து நடந்த போரில் ஒரு லட்சம் பேரை பட்டினி போட்டு கொன்றார். மக்கள் செத்தால் என்ன, புரட்சி ஜெயிக்க வேண்டும்.
ஊரையெல்லாம் காப்பாற்றும் ரங்கநாதனே அக்கடா என்று படுக்கும் போது மாவோவுக்கு களைப்பு வராதா? பாவம் அவரும் எவ்வளவு நாள் தான் போராடுவார் எத்தனை பேருக்கு தான் புரட்சி செய்வார்? சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள். ஒரு லட்சம், ரெண்டு லட்சம், பத்து லட்சம் ஒரு கோடி. ம்ஹூம். சீனாவில் மக்கள் தொகையோ பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்காக மக்களால் அரசு நடத்தும் சிந்தனைத் தொட்டி (Think Tank) மாவோ சிந்தித்தார், செயல்பட்டார், அடுத்த புரட்சியை மலர வைத்தார். பிள்ளை பெறுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். ஆஹா, இதுவல்லவா புரட்சி இது எனக்கு தெரியாது போயிற்றே என்று லெனின் மாஸ்கோவில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து நொந்து கொண்டார். நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.
இதையெல்லாம் சொன்னால் மயிராண்டி குடிச்சிட்டு ஒளறாதடே. நம்மூரு சேப்பு சட்டைங்க நல்லவனுவ என்கிறான் "டயரு" தங்கராஜ். அவன் சொல்வதும் கூட உண்மை தான். டாட்டாவுடன் ஒப்பந்தம் போட்டு நந்திகிராமத்தில் அடிதடி நடத்தினார்களே தவிர, மாவோ போல நந்திகிராம் மக்களை பட்டினி போட்டு கொல்லவில்லை. ஏழைப்பங்காளர்களுக்கு புரட்சி செய்ய வாய்ப்பு தராமல் மக்கள் ஊரை விட்டு ஓடிவிட்டார்களாம். அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்? இந்தியா விளங்குமா? உருப்படுமா?
Labels:
அய்யாங்...டொய்ங்..,
மொக்கை
Sunday, 25 July 2010
ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..
சாருவின் மனங்கொத்தி பறவை: ஆழ்துளை கிணறு உள்ளே விழும் குழந்தை தீயணைப்பு படை மீட்பு, துளையை மூடாத பொறுப்பில்லாத தொழிலாளிகள். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். சாநிக்கு எழுதுவதற்கு சுய சொறிதல் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை. மனம் கொத்தி பறவை. மண்ணாங்கட்டி பறவை என்று வைத்திருக்கலாம். ஆனந்த விகடன் ஏற்கனவே பின்பக்கம் துடைக்கு டிஷ்யூ பேப்பர் அளவு தரம். இப்பொழுது துடைத்த டிஷ்யூ பேப்பர் போல இருக்கிறது.
அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.
சுய சொறிதலை விற்றே ஒருவன் எழுத்தாளனாகும் நிலை கேடு கெட்ட தமிழ் சூழலில் தான் இருக்கிறது. நேபாள மொழியிலோ இல்லை மணிப்புரி மொழியிலோ இந்த அவல நிலை இல்லவே இல்லை. இப்படி சொறிபவன எழுத்தாளன் என்றால் அஸ்ஸாமில் செருப்பால் அடிப்பார்கள். ஆனால் தமிழில் பத்திரிக்கையில் எழுத வைக்கிறார்கள். பின்னர் எப்படி ஐயா தமிழர்கள் படிக்க வருவார்கள்? அதனால் தான் கருணாநிதி இலக்கியவாதியாகவும் முத்தமிழ் அறிஞராகவும் ஆகிவிட்டார்.
அறிஞர் என்றதும் வேறு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. திராவிட இயக்கத்தாருக்கு எதுகை மோனை மீது என்றுமே தீராத தாகம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எகனை மொகனையில் முழங்கிய தஞ்சாவூர் தட்சிணாமூர்த்தி பெயரை மாற்றிக் கொண்டு கருணாநிதி ஆனார். கானாவுக்கு கானா...கலைஞர் கருணாநிதி. அப்படின்னா ஆனாவுக்கு ஆனா...அறிஞர் அண்ணா. நெடுஞ்செழியன்? காசா பணமா போட்டுக்க..நானாவுக்கு நானா...நாவலர் நெடுஞ்செழியன்.
லஸ் கார்னரை லூஸ் கார்னர் என்று சொல்ல வேண்டும். சாரு இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஓசியில் அவர் குடிக்க மட்டுமே போவார். ஓசியில் ப்ளாக் கிடைத்தது என்று எழுத ஓடி வந்து விடவில்லை. எழுத வரும் முன் நானூறு வருடம் படித்திருக்கிறார். கூகிள் மேப் வருவதற்கு முன்னரே ஸ்கூல் புக்கில் மேப் பார்த்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிரில் குண்டித் துணி இல்லாமல் அலைந்திருக்கிறார். எல்லாம் படித்து விட்டு அப்புறம் என்னை மாதிரி எவனும் எழுத மாட்டெங்குறான் என்று கடுப்பாகித் தான் எழுத வந்திருக்கிறார். இப்பொழுது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் எழுதுகிறார்.
ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் தான் இருக்கிறது என்று எனக்கு மீண்டும் மீண்டும் கடிதம் வருகிறது. ஐய்யா நான் பிச்சைக் காரன். விந்து விற்பவன் (என் எழுத்தை சொல்லவில்லை). ஆனால் எழுத்தை விற்க மாட்டேன்...தமிழ் சூழலில் அதை எவனும் வாங்க மாட்டேன் என்கிறான். நான் பிச்சை எடுக்கிறேன். தினமும் ஆறு மணி நேரம் தெருவில் போக வர இருபப்வர்களிடன் பிச்சை எடுக்கிறேன். யாரும் வராவிட்டால் பார் போய் ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன்...இப்படி தான் இந்த முப்பது மணி நேரம்.
தமிழ் வளமான மொழி. ஒன்று சொன்னால் சரியாக வேறு அர்த்தம் வந்து தொலைக்கும். முந்திய பத்தியை பாருங்கள். உத்தம தமிழ் எழுத்தாளன் என்னை பத்தி எழுத்தாளன் என்கிறான். அவன் குற்றாலத்தில் குளிக்கும் போது அவனை துண்டுடன் பார்த்த ஒரே தமிழ் எழுத்தாளன் நான் தான். நான் இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் போந்தேவின் கழுதை படித்தீர்கள்?
என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.
என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.
தமிழ் சூழலை குறை சொல்லிக் கொண்டே என்ன மயிருக்கு தமிழில் எழுதற என்று அஞ்சனா கேட்கிறாள். அஞ்சனம் என்றால் கறுப்பு. ஆனால் அஞ்சனா கறுப்பல்ல. செம அழகி. இப்படி அழகான பெண்கள் எனக்கு கடிதம் எழுதுவதாக எனக்கு நானே கடிதம் எழுதுவதை கூட வயிறெரிகிறார்கள். தமிழர்களுக்கு வயித்தெரிச்சல் அதிகம். உத்தம தமிழ் எழுத்தாளன போல என்னால் தமிழ் சினிமாவுக்கு எழுத முடியாது. டேனி பாயலிடமும் ரோஜர் கும்ப்ளேவிடமும் சான்ஸ் கேட்டிருக்கிறேன். மிச்சம் மீதி இருந்தால் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். பிச்சைக்காரனுக்கு பிச்சை போடாதவர்களை பற்றி என்ன சொல்ல? ஸ்டேன்லி குப்ரிக்கிடம் கேட்கலாம். அவர் செத்துப் போய்விட்டதாக சொல்கிறார்கள்.
அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.
ஏன் இப்படி எல்லாரையும் திட்டிக் கொண்டே இருக்கிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். நான் யாருக்கும் நண்பனில்லை. எனக்கும் யாரும் நண்பனில்லை. தமிழ்நாட்டில் என்னுடன் நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே பயப்படுகிறார்கள். அந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத அளவுக்கு எனக்கு நண்பர்கள் அதிகம். அதிலும் பெண் நண்பிகள் அதிகம். நானே உருவாக்கிக் கொள்வதால் அதில் கஞ்சத் தனம் பார்ப்பதே இல்லை.
இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.
இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.
இத்தனை தூரம் சொல்லியும் இருநூறு வருடமாக எழுதியும் ரஞ்சனா மாத்ரிதில் இருந்து ஃபோன் செய்து கேட்கிறாள். முட்டாள் தமிழர்கள் மட்டுமே Madrid என்பதை மாட்ரிட் என்று உச்சரிப்பார்கள். அதை மாத்ரித் என்று தான் ஸ்பெயில் சின்ன குழந்தை கூட உச்சரிக்கும். ஸ்பெயின் அழகான மொழி.
நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.
நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.
மதிய நேரத்தில் எழுத வேண்டிய விஷயமா இது? இந்த கருமத்திற்கு தான் நான் ஆனந்த விகடன் போன்றவைகளை படிப்பதில்லை. அதை தமிழர்கள் மட்டுமே படிப்பார்கள். நானோ தமிழனே இல்லை என்று ராஜராஜ சோழனிடமே நேரில் போய் அறிவித்தவன்.நான் ஏன் ஆனந்த விகடன் எல்லாம் படிக்க வேண்டும்?
பஸ்ஸில் இப்படி தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தால் வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்.
அதை தானே அய்யா நானும் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருக்கிறேன். சனிப்பிணம் தனியாக போகாது என்று சொல்கிறார்கள். அதை முதலில் சொல்லியது என் அப்பத்தா. இதைச் சொன்னால் நீதான் தமிழன் இல்லையே என்கிறார்கள். அதை விடுங்கள். சனிப் பிணம் தனியாக போகிறதோ இல்லையோ சனிக்கிழமை சாருவை படித்தவன் தனியாக தண்ணியடிக்க போவான். வர்ற கடுப்புக்கு அவனும் பாவம் வேறு என்ன தான் செய்து தொலைவான்? சரி போய்ட்டு வாடா என்று நானும் விட்டு விட்டேன்.
அது என்ன அய்யாங் டொய்ங் என்று கேட்கிறார்கள். அது எப்படி ஓரு ஏழை பிச்சைக்கார ப்ளாக் எழுத்தாளன் என்றால் மட்டும் உங்களால் கேட்க முடிகிறது. இந்த கேள்வியை ஆனந்த விகடனை பார்த்து கேட்டிருக்கிறீர்களா? முதலில் அங்கே போய் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள். டப்ளினில் மீட் பண்ணலாம். ஆனால் இனிமேல் அடிக்கடி இப்படி அய்யாங் டொய்ங் வரலாம். நான் ஒரு குழந்தை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. நாளைக்கு எமினமின் ம்யூஸிக் ஃபெஸ்டிவல் போவதாக ப்ளான் செய்திருக்கிறேன். திறந்தவெளிக் கொண்டாட்டம் தான். திறந்தவெளி என்றால் ஓப்பன் ஆடிட்டோரியம் என்று மட்டுமே தமிழர்களுக்கு புரிகிறது. என்ன செய்ய?
==================================================
Labels:
அய்யாங்...டொய்ங்..,
மொக்கை
Subscribe to:
Posts (Atom)