Monday, 17 November 2008
சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு - தொடர்ச்சி...
முதலில், என் பதிவில் எந்த இடத்திலும் ஜாதி பற்றி குறிப்பிடவே இல்லை..ஏனெனில் எனக்கு எந்த ஜாதியும் இல்லை, எந்த ஜாதி மீதும் தனிப்பட்ட பிடிப்போ, மரியாதையோ இல்லை.எந்த ஒரு விஷயத்தையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுடன் பேசுவதே எனக்கு விருப்பமில்லை..அது யாராக இருந்தாலும், எந்த ஜாதியாக இருந்தாலும்!
ஜாதி நம்பிக்கை உடையவர்கள் முடிந்தால் உங்கள் ஜாதி கண்ணாடியை சிறிது நேரம் கழட்டி வைத்து விட்டு படியுங்கள்..இல்லையேல் இத்துடன் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.. நான் யாரையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நீங்கள் படிப்பதால் எனக்கு சில லட்சங்கள் வரப்போவதும் இல்லை.. எனவே பிடித்தால் படியுங்கள்..இல்லையேல் போய்க் கொண்டே இருக்கலாம்..I simply don' care!
இனி...
1. உண்மையில் அன்று நடந்தது என்ன? இரண்டு மாணவ(?????) குழுக்கள் சட்டக்கல்லூரியில் அடித்து கொண்டனர். இதற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஜாதியாகவும் இருக்கலாம் இல்லை வேறு காரணங்களாகவும் இருக்கலாம்.. என்ன காரணமாக இருந்தாலும் உருட்டு கட்டை, கம்பிகளுடன் அலையும் ஒரு கும்பலையும், கத்தியுடன் திரியும் ஒரு கும்பலையும் என்ன விதமான மாணவர்களாக பார்க்க முடியும்?? இவர்கள் நிஜமாகவே படிக்க வந்தவர்கள் தானா??
கல்லூரிகளில் மாணவர்களுக்குள் பிரச்சினை வருவது புதிதல்ல. ஆனால், எத்தனை மாணவர்கள் கொலை வெறியுடன் கத்தி, கட்டையுடன் திரிகிறார்கள்?
உங்களில் எத்தனை பேர் கல்லூரியில் படித்திருக்கிறீர்கள்? நீங்கள் இப்படி தான் கத்தி, கட்டையுடன் அலைந்தீர்களா?
2. நடந்த சம்பவம் ஏதோ உடனடி சம்பவமாக தெரியவில்லை.முன் கூட்டியே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருப்பதாக தெரிகிறது..இப்படி கொலைக்கு திட்டமிடுபவர்களை மாணவ மணிகள் என்று கொண்டாட வேண்டுமா??
3. இந்த சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்..டாட்டாவின் மகன்களோ, பிர்லாவின் பேரன்களோ இல்லை...பிள்ளை படித்து முடித்ததும் வேலைக்கு போவான்..குடும்பத்தை முன்னேற்றுவான்..அக்கா, தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைப்பான்..அவன் படிக்க வாங்கின கடனை அடைப்பான்...இப்படி பல கனவுகள், திட்டங்களுடன் கடன் வாங்கி படிக்க வைக்கும் பெற்றோரும் இருக்கக் கூடும்....ஆனால், எதைப் பற்றியும் கவலை இல்லாமல், கொலை வெறியுடன் அலையும் நபர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை.
4. சரி, இவர்கள் ஜாதிக்காகவே சண்டையிட்டதாக வைத்துக் கொண்டாலும், இவர்கள் சண்டையிட்டால் இல்லை கொலை செய்தால் ஜாதி பிரச்சினை தீர்ந்து விடுமா? இதற்கு முந்தைய ஜாதிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களின் இன்றைய நிலவரம் என்ன?? அவர்களின் குடும்பங்கள் என்ன நிலைமையில் உள்ளன??
கலவரத்தில் ஈடுபட தூண்டி விட்டவர்கள் இன்று கட்சி தலைவர்களாகவும், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகளாகவும் இருக்கிறார்கள்...அடுத்து வரும் தேர்தலில் எந்த தொகுதி வேண்டும், எத்தனை தொகுதி வேண்டும் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..அவர்களின் வாரிசுகள் டெல்லியிலும், சென்னையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்..
ஆனால், ஈடுபட்டவர்கள்? அவர்கள் செத்து சுண்ணாம்பாகி விட்டார்கள். அவர்கள் வாரிசுகள் வேலை, வசதி இன்றி வறுமையில் இருக்கிறார்கள்.. இதை சந்தேகப்படுபவர்கள் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் விசாரித்து அறியலாம்..
தூண்டி விடுபவர்கள் ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு, வறுத்த முந்திரியும், இம்போட்டட் விஸ்கியும் குடித்துக் கொண்டு அடுத்து எவனை கொல்லலாம், எந்த பஸ்ஸை எரிக்கலாம் என்று விவாதித்து கொண்டிருக்கிறார்கள்..
5. அடுத்து போலீஸ்.. நீங்கள் எந்த கல்லூரியிலாவது குறைந்த பட்சம் ஒரு வாரம் படித்திருந்தால் கூட தெரியும்.. பொதுவாக, கல்லூரியின் மதிலுகளுக்குள் உள்ளே நடக்கும் பிரச்சினையில் போலீஸ் தலையிடுவது இல்லை..இருக்கிற வேலையில இது எதுக்கு புதுசா என்ற அவர்களின் சுயநலமும் ஒரு காரணம் என்றாலும், ஒரு கல்லூரிக்குள் நடக்கும் பிரச்சினையில் போலீஸ் அவ்வளவு எளிதாக தலையிட முடியாது..உண்மையிலேயே கல்லூரி முதல்வர், கல்லூரி சேர்மன், போலீஸ் உயர் அதிகாரி, அந்த வட்டார எம்.எல்.ஏ, எம்.பி, தமிழக முதல்வர் அளவுக்கு விவாதித்து தான் தலையிட முடியும்..
சரி, இந்த பிரச்சினையில் போலீஸ் தலையிட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும்? "ஏய், ஓதுங்கி போங்கப்பா" என்றால் இந்த கூட்டம் விலகியிருக்குமா? இருக்காது...அடுத்து?? போலீஸ் தடியடி நடத்த வேண்டி வரும்.. போலீஸ் தடியடி நடத்தினால் என்ன ஆகும்?? இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடந்த சண்டை போலீஸ் வக்கீல்கள் என்றும், அரசுக்கும் ஜாதிகளுக்கும் இடையிலான சண்டையாகவும் மாறும்..தென் மாவட்டங்களில் சில சிலைகள் உடையும்.. வட மாவட்டங்களில் சில பஸ்கள் கொளுத்தப்படும்..சிலர் உயிருடன் கொளுத்தப்படுவார்கள்..சிலர் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்...
இதில் எந்த ஜாதிக்காவது எந்த பலனாவது உண்டா? ஒரே ஒரு பலன் உண்டு..புதிய ஜாதி தலைவர்கள் உருவாவர்கள்..அவர்கள் மகன்களும், பேரன் பேத்திகளும் மந்திரி ஆவார்கள்...ஸ்விஸ் பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்வார்கள்...பத்திரிக்கைகளுக்கும், சில டீ.வி.களுக்கும் சில நாட்கள் செய்தி பஞ்சமில்லை...
ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், அதில் செத்தவர்கள், அவர்களின் குடும்ப நிலைமை? செத்தவர்கள் அடையாளம் தெரியாமலே புதைக்கப்படக்கூடும்...கேட்பாரின்றி அவர்கள் மண்ணில் அழுகிக் கொண்டிருப்பார்கள்..அவர்கள் குடும்பங்கள் உயிருடன் செத்துக் கொண்டிருக்கும்...
6. என் முந்தைய பதிவுக்கு பின்னூட்டமிட்ட ஹரிஜனா என்பவர் சொல்கிறார்..
//ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு. //
நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. நான் ஜாதி சங்க தலைவனோ இல்லை ஜாதியை வைத்து இரண்டு சட்டசபை தொகுதி, ஒரு எம்.பி. தொகுதி என்று பேரம் பேசுபவனோ இல்லை.
//நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.
வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.//
நான் பதிவு போட வேண்டும் என்று யாரும் அழவில்லை..அது போல இவர் பின்னூட்டம் போட வேண்டும் என்றும் நான் அழவில்லை..
ஆனால் இவர் சொல்வதில் ஒரு விஷயம் சரியானது..பதிவு போடுவது வெட்டி வேலையே.. எதை எடுத்தாலும் ஜாதியுடன் பார்க்கும் காமாலை கண்களுக்கு மத்தியில் வேறு விதமாக பாருங்கள் என்று சொல்வது கூட தவறு தான்..
அடுத்து அந்நியன் என்பவர் அனானியாக எழுதுவது..
//உனக்குள்ள என்ன பெரிய பருப்புன்னு நினைப்பா!!! ஒழிஞ்சவன விடு. ஒழிச்சவன் மட்டும் உலகத்துல நல்லது பண்ணிடுவனா!!! //
நான் பருப்பும் இல்லை..செருப்பும் இல்லை. ஒழிச்சவன் நல்லது பண்ணுவான் என்றும் நான் எங்கும் சொல்லவில்லை. நான் சொல்ல வருவது ரொம்ப சிம்பிள்...நடந்தது இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையில் வழக்கமாக நடக்கும் மோதல்..அவ்வளவே.
//ஒருவேளை அவனும் உன்னப்போல வலையம் எழுதுவான். அவனை தட்டி எவன் கேட்ப்பான். பிரட்சினையின் வீரியம் தெரியாமல் ம*** போல எழுத்தாதே!!!//
சரி, பிரச்சினையில் வீரியம் தெரிந்த இவர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.ஒரு வேளை இவர் சில பேரை வெட்டி சாய்க்க போகிறாரோ என்னவோ?
அப்படி எண்ணமிருந்தால் செய்யுங்கள்...அவர்கள் உங்கள் ஜாதி காக்க வந்த தெய்வங்கள் என்று கூட கும்பிடுங்கள். எனக்கு ஆட்சேபம் இல்லை..
8. இங்கு பின்னூட்டமிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு எதிர் கருத்து இருந்தால் தவறில்லை..ஆனால் அதை எழுதும் போது அநாகரீகமாக எழுதி உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்...அப்படியெல்லாம் இல்ல, எனக்கெல்லாம் தரமே இல்லை...என்று கேவலமாக எழுதினால் அது உங்கள் பாடு!
=======================
Saturday, 15 November 2008
சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு
சட்டக்கல்லூரி கலவரம் பற்றி பல பதிவர்கள் எழுதி தீர்த்து விட்டார்கள்..அதனால் நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்..
வழக்கமாக போலீசுக்கு ஒரு கொள்கை உண்டு. பொது இடத்தில் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இரண்டு ரவுடி கும்பல்கள் சண்டையிட்டு கொண்டால் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள்..இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
ஏனெனில் எந்த ரவுடி கும்பலில் எவன் செத்தாலும் போலீசுக்கும் சமுதாயத்திற்கும் லாபமே. இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை..
சட்டக் கல்லூரி கலவரத்திலும் போலீசார் இந்த அணுகுமுறையையே பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. அடிதடி நடந்த இடம் ட்ரெயின் ஸ்டேஷனோ, இல்லை மக்கள் வந்து போகும் இடமோ இல்லை. கல்லூரி உள்ளே நடந்து இருக்கிறது..
சரி, சண்டை போட்டது யார்? படத்தில் ஒருவன் கத்தியுடன் ஓடி வருகிறான்..மற்றொரு கும்பல் உருட்டு கட்டை, இரும்பு கம்பியுடன் திரிகிறது.
உண்மையில் மாணவர்களாய் இருந்தால், கத்தியும் இரும்பு கம்பியும் எப்படி வரும்? ஆக இவர்கள் மாணவர்கள் என்பதை விட, ரவுடிகள் என்பது தான் சரி.
கல்லூரிக்கு வருவதாலேயே எல்லாரும் மாணவ மணிகள் என்று ஆகிவிட முடியாது..ஆக அடித்துக் கொண்டிருப்பது இரண்டு ரவுடி கும்பல்கள் என்று தெரிகிறது.
இந்த கும்பலில் எவன் ஒழிந்தாலும் யாருக்கு நஷ்டம்? இவர்களா வந்து சட்டத்துறையை காப்பாற்ற போகிறார்கள்? இல்லை சட்ட மேதைகளாக போகிறார்களா??
நாட்டுக்கு நஷ்டமா? சமுதாயத்திற்கு நஷ்டமா? ஒரு வேளை அவர்கள் வீட்டுக்கு வேண்டுமானால் நஷ்டமாக இருக்கலாம்..ஆனால், இத்தகைய பிள்ளைகள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று அவர்கள் கூட நினைக்கக்கூடும்..
இப்படிப்பட்ட ரவுடி கும்பலில் எவன் ஒழிந்தாலும் சரி என்று "கண்டுக்காமல்" விட்ட காவல் துறையை பாராட்டுகிறேன்!
Saturday, 30 August 2008
வேடிக்கை மனிதர்கள்!
முதலில் எழுதும் எண்ணமில்லை. எழுதி என்ன ஆகப்போகிறது? என்னை எழுத வைத்தவர்கள் இதை படிக்கப் போவதுமில்லை.
நீங்கள் குடித்ததுண்டா? காஃபி, டீயை கேட்கவில்லை. ஆல்கஹால் ஏதேனும், ஒரு முறையாவது குடித்ததுண்டா??
இல்லவே இல்லையா? நீங்கள், நீங்கள் தான் எனக்கு வேண்டும். உங்களுடன் தான் பேச விரும்புகிறேன்.
உங்களை யாராவது குடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்?? குடிக்காதவர்கள் அயோக்கியர்கள், குடும்பத்தை கெடுப்பவர்கள் என்று குற்றம் சாட்டினால் என்ன சொல்வீர்கள்??
குடிக்காமல் இருப்பது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்ல மாட்டீர்களா??
அப்படி இருக்கையில், எனக்கு புரியவில்லை, குடிப்பவர்கள் எல்லாம் சமூக வியாதிகள், இழிவானவர்கள் என்ற பிம்பம் ஏன்? யாரேனும் உண்மையை சொல்லுங்கள், குடிக்காதவர்கள் அனைவரும் நல்லவர்களா?
ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? கையில் காசில்லாததால், குடிக்காதவனுமா?? ஒரு ப்யூன் 200 ரூபாய் தான் லஞ்சம் வாங்குறான், ஆனால், கலெக்டர் 50,000 கேக்குறான், ப்யூன் தான் ரொம்ப நல்லவன் என்று சொல்வது போல் இருக்கிறது.
இவர்கள் தரும் அட்வைஸ்கள் கடும் கொலை வெறியை தான் ஏற்படுத்துகின்றன.
"காசு கொழுப்பு உனக்கு".
என்னவோ, இவன் எனக்கு பிச்சை போடுவதைப் போல!
இல்லை, இவர்களுக்கு உண்மையில், யார் மீதாவது எந்த அக்கறையாவது உண்டா? சாணி வீச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்ற சந்தோஷமே!
இவர்கள் சித்தரிப்பது போல, ஒருவன் நாள் முழுவதும், வேண்டாம், தினந்தோறும் குடித்தால், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஷேர் மார்க்கெட்டில் இருக்க முடியுமா? இல்லை, 66 கிலோ என்று எடையை மெய்ன்டெய்ன் செய்ய முடியுமா?? சாணி வீச ஏதோ ஒரு சாக்கு, அவ்வளவே!
தினமும் உண்பதும், உறங்குவதும், கணவன்/மனைவியுடன் முயங்குவதும் தான் வாழ்க்கை என்று இருக்கும் இவர்களைப் பற்றி சொல்ல முடியாதா??
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம்வாடி துன்பம் மிக உழன்று,
நரைகூடி கிழப்பருவம் எய்தி,
கொடுங்கூற்றுக்கு இரையென பின் மாயும்
வேடிக்கை மனிதர் போல
வீழ்வெனென்று நினைத்தாயோ,
சொல்லடி பராசக்தி!
என்று பாரதி, இவர்களை தான் பாடினான் என்று எங்களுக்கு திருப்பி சொல்ல தெரியாதா??
அவனவன் வாழ்க்கை, அவனவன் வலி, அவனவன் வழி!
விட்டு விடுங்கள்.
அடுத்து, காதல் பற்றி இவர்கள் பேசி வருவது.
...வேண்டாம், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
(கடந்த சில நாட்களாக நடந்த தனிப்பட்ட பிரச்சினை, வலியின் விளைவே இந்த பதிவு. எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லாததால், இங்கு எழுதிவிட்டேன். படிப்பவர்கள் மன்னிக்கவும்!)