Monday, 21 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய் - 4

அத்தியாயம் நான்கு - கறுப்பு குதிரை
"ராகுல் த்ராவிட் இஸ் ஆன் செவன்டி ட்டூ...ஆன் ஹிஸ் வே ட்டூ ய ஃபேபுலஸ் சென்ச்சுரி...த வால் இஸ் ப்ரூவிங் ஹவ் ஸ்ட்ராங் இட் இஸ்..."

டி.வி.யில் யாரோ உற்சாகமாக அலறிக் கொண்டிருந்தார்கள்...முகங்கள் முகங்கள்...காவி பச்சை வெள்ளை நிறங்களில் கிரிக்கெட் மைதானமெங்கும் முகங்கள் முகங்கள்...காற்றில் கூச்சலிடும் கைகள்...தரையில் பதிய மறுக்கும் கால்கள்...

கையில் பேட்டுடன் ராகுல் த்ராவிட் கால்களை நகர்த்திக் கொண்டிருந்தார்...ஓப்பனிங்கில் ஆரம்பித்து முப்பத்தாறாவது ஓவர்..சச்சின் டென்டுல்கரில் ஆரம்பித்து எம்.எஸ்.தோனி வரை போய் விட த்ராவிட் மட்டும்....எல்லா பால்களையும் அழகாக சமாளித்து....

அந்த பால் அப்படி ஒன்றும் டேஞ்சர் என்று சொல்ல முடியாது... ..மீடியம் ஃபாஸ்ட்...வழக்கமான் இடத்தில் பிட்ச் ஆகி...வைட் போல விலகி சென்று...ஓ...நோ...திடீரென்று ரிவர்ஸ் ஸ்விங்க்.......அவுட்...த்ராவிட் அவுட்....த வால் இஸ் கான்.....பெரும் சத்தத்தில் டி.வி. கூச்சலிட்டது....

பார்த்துக் கொண்டிருந்த கல்பனா மணியை பார்த்துக் கொண்டாள்...மூன்று மணி.....இன்னும் கொஞ்ச நேரம் தான்...ஆறு மணிக்கு அவர்கள் வந்து விடுவார்கள்....

அந்த மகேஷ் எப்படி இருப்பான் என்று தெரியவில்லை.... நேற்றைக்கு இரவெல்லாம் சண்டையிட்டு கடைசியில் அப்பா கெஞ்ச ஆரம்பித்து விட்டார்... ரொம்ப நல்ல பையன்.... என்னோட பழைய ஸ்டூடன்ட்....அமெரிக்காவுல வேலை....நீ மட்டும் சரின்னு ஒத்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது....ஒனக்கு பின்னாடி ரெண்டு தங்கச்சிங்களையும் எப்படின்னா கரையேத்திருவேன்....எல்லாம் இப்ப உன் கைல தான் இருக்கு கல்பனா...

கெஞ்சுகிற ஒரு மனிதரிடம்...பிறந்த நாளிலிருந்து பார்த்து பார்த்து வளர்த்து....கைப்பிடித்து நடக்க வைத்து....தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று...அவள் டென் த்தில் பள்ளியில் முதல் மார்க் வாங்கிய போது தெருவில் எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்து...காலேஜ் டிஸ்டன்சா இருக்கு...கையில காசு இருந்தா உனக்கு ஒரு வண்டி வாங்கி கொடுத்துடுவேன்...இப்ப இல்ல...டெய்லி நானே உன்னை ட்ராப் பண்றேன்...பொண்ணுன்னா பாட்டு மட்டும் தான் கத்துக்கணும்கிறதெல்லாம் பழைய பேஷன்....இப்ப டென்னிஸ் ஆட்றது தான் ஃபேஷன்...அவளை டென்னிஸ் க்ளாஸில் சேர்த்து விட்டு..... அப்படிப்பட்ட அப்பாவிடம் என்னவென்று சொல்வது.....

"என்னப்பா இது....உங்களுக்குத் தான் சிவா மேட்டர் எல்லாம் தெரியும்ல....அப்புறம் எப்படிப்பா....நான் நாளைக்கு பொண்ணு பார்க்க வரவங்க கிட்ட எப்படி சரின்னு சொல்ல முடியும்....சிவாவுக்கு நான் என்ன பதில் சொல்றது...."

"ம்ம்ம்....என்னம்மா இது.....ஃப்ரண்ட்ஸுன்னு தான் நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்....நீயும் அப்படியே நினைச்சிக்க...சிவா கேட்டா நான் பேசிக்கிறேன்....உறவுக்காரங்க...நான் சொன்னா கேப்பாங்க......அவனுக்கும் நானே நல்லதா ஒரு பொண்ணு பார்த்து முடிச்சி வைக்கிறேன்....அவனுக்கு பிஸினஸ் நடத்தக்கூட எதுனா காசு அரேஞ்ச் பண்ணி கொடுக்கலாம்....பாவம் அவனும் கஷ்டப்பட்றான்...."

கல்பனாவுக்கு மீண்டும் எரிச்சலாக இருந்தது.....சுயநல நாக்கு எப்படியெல்லாம் புரள்கிறது....

"அசிங்கமா பேசாதீங்கப்பா....அதெல்லாம் எனக்கு தெரியாது....நான் நாளைக்கு முடியாதுன்னு தான் சொல்லப் போறேன்....அதுக்கப்புறம் அது உங்க பிரச்சினை...."

அப்பா முகத்தை திருப்பி கொண்டார்.... "உன் இஷ்டம்மா...நீ உன்னை மட்டும் பார்க்கிற....எனக்கு மூணு பொண்ணுங்க....நான் எல்லாரையும் பார்க்கணுமே...உன்னைய தான் மூத்த பையன் மாதிரி நினைச்சிக்கிட்டு இருந்தேன்...நீ சரின்னா உன் தங்கச்சிங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும்....முடியாதுன்னா என்ன சொல்றது....நான் பிச்சை எடுத்தாவது அவங்களையும் கரையேத்தி தான் ஆகணும்...."

மேலே எதுவும் பேசாமல் அப்பா வெளியே புறப்பட்டு சென்று விட்டார்....அதிக டென்ஷனுடன் இருந்தால் புகைப்பது அவர் பழக்கம்....அதற்காக இருக்கலாம்...

டி.வியில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகளை இழந்து போராடிக் கொண்டிருக்க கல்பனாவுக்கு உள்ளுக்குள் வியர்க்க ஆரம்பித்தது.....இன்னும் மூன்று மணி நேரம் தான்...என்ன சொல்லப் போகிறேன்...எப்படி சொல்லப் போகிறேன்...

====================================

"எங்க பாட்டனுக்கு கும்பகோணம்....வெள்ளைக்காரன் காலத்துல கோயம்புத்தூரு பாலக்காடு, ஊட்டியெல்லாம் பாக்குறதுக்கு நல்ல ஆளு வேணும்னு இங்க ரயில்வேல தொரையே கூப்டாராம்....கும்மோணத்தான்னா அப்பிடி ஒரு மரியாதை...அப்படித்தான் இங்க செட்டில் ஆனது...இன்னிக்கும் எங்க அப்பாரு ஊர்னு சொன்னா அது கும்மோணம் தான் பாத்துக்கங்களேன்.....அவரு இருக்க வரைக்கும் வருஷா வருஷம் குல தெய்வ கோயிலுக்கு திருவிழான்னா கும்மோணம் கெளம்பி போய்டுவாரு... "

மாப்பிள்ளையின் அப்பா சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அம்மாவோ பெரிய சிரிப்புடன் தன் பிள்ளையின் பெருமையை முரசறைந்து கொண்டிருந்தாள்....

"எங்க வீட்டுக்காராரு கூட அதிகம் இல்ல....ஆனா மகேஷுன்னு தான் எங்க வீட்ல விதிவெலக்கா அடி முடி காணா மகேசன் மாதிரி அப்பிடி ஒரு ஒயரம்...நெகு நெகுன்னு...நான் நிமிந்து பாத்து தான் பேச வேண்டியதாயிருக்கு....கை நிறைய சம்பளம்...ஆளும் நல்லா இருக்கான்.....அமெரிக்காவுல வேல....வீட்டுக்கு ஒரே புள்ள...எங்கடா எதுனா வெள்ளைக்காரிய கூட்டிக்கிட்டு வந்துருவானோன்னு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு தான் இருந்தேன்னு வச்சிக்கங்களேன்...என் கையால தாலி எடுத்து குடுத்தா குல தெய்வத்துக்கு கொடை குடுக்கறதா நேந்துக்கிட்டு இருக்கேன்....ஒங்க பொண்ணு புண்ணியத்துல எங்க சாமிக்கு இந்த வருஷ கொடை போங்க...."

இதற்காகவே கூட்டி வருவார்கள் போல....வந்திருந்த கும்பலில் ஒருவர் தனது கடமையை செய்ய ஆரம்பித்தார்....

"அதெல்லாம் இருக்கட்டும்க்கா...இப்ப பொண்ணு பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லிட்டா மேற் கொண்டு பேச வேண்டியதை பேசி முடிக்கலாம்ல..."

"என்னத்தை பேசறது....பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...காசு பணமெல்லாம் கூட வேணாம்....பொண்ணை இப்பவே எங்க கூட கூட்டிக்கிட்டு போலாம்னு இருக்கேன்...."

கல்பனாவின் அப்பா சந்தோஷமாக சிரித்தார்.... "பெரியவங்க பளிச்சின்னு சொல்லிட்டீங்க....எங்களுக்கு முழு சம்மதம்....மேல நீங்க என்ன கேக்கறீங்கன்னு சொல்லிட்டா தேதி குறிச்சிடலாம்...."

தன்னிடம் சம்மதம் கேட்பார்கள் என்று நினைத்திருந்த கல்பனாவுக்கு திக்கென்றிருந்தது....அப்பா நேற்று பேசியது என்ன...

இதை எப்படியோ தெரிந்தவன் போல‌ இது வரை அதிகம் பேசாமல் சிரிப்புடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் மறுப்பவன் போல தலையை அசைத்து பேச ஆரம்பித்தான்....

"இருங்கம்மா....நான் பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணுமே...."

மகேஷின் அம்மா மனோரமா ரசிகை.... "ஆமாடா...கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பேசிக்கிட்டே தான இருக்கப் போற...அதுக்குள்ள என்ன....சரி சரி போய் பேசிட்டு வா...."

===============================

பிடிக்கலை...இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை...எப்படியாவது சொல்லி விட வேண்டியது....மகேஷை பற்றி கவலை இல்லை....அவன் யாரோ நான் யாரோ...அப்பா தான் உடைந்து போய் விடுவார்....அவரிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்....விற்பனை செய்ய நான் என்ன சட்டியா பானையா....தங்கை வாழ்க்கையை பார் என்று தான் சொல்வார்....சம்பந்தப்பட்ட நித்யாவும் நந்தினியும் கூட இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்....நந்தினி இப்ப தான் ப்ளஸ் டூ....எதுவும் புரியாது....நித்யாவிடம் பேசலாம்...அப்பாவிடம் நித்யாவையே பேச வைக்கலாம்....அட...மாதுளை மரம் பூக்க ஆரம்பிச்சிடுச்சே...ச்சே...பூவெல்லாம் ரொம்ப அழகாயிருக்கு....நாளைக்கு ஒழுங்கா தண்ணி ஊத்தனும்...பேசணும்னு சொன்னான்....எங்க இந்த மகேஷை இன்னும் காணோம்....

தோட்டத்தில் இருந்த மாதுளை மரம் கல்பாவின் கைபட்டு ஒவ்வொரு இலையாக இழந்து கொண்டிருக்க மகேஷ் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்....

"ஸாரி..நான் செருப்பு போடாது வந்துட்டேன்...ஷூ மாட்ட கொஞ்சம் லேட்டாயிடுச்சி...."

முதல் வார்த்தையே ஸாரியா....இன்னும் எத்தனை ஸாரியோ....எதுக்கெல்லாம் ஸாரியோ....கல்பாவுக்கு கொஞ்சம் சிரிப்பாக இருந்தது....

"ம்ம்ம்...பரவாயில்ல...."

"ம்ம்ம்ம்....ஈவ்னிங் ஆயிட்டா கோயம்புத்தூர் கொஞ்சம் ச்சில்லுன்னு ஆயிடுதுல்ல..."

"ம்ம்ம்...ஆமா..."

"நீங்க பி.எஸ்.ஸி. தான....எந்த காலேஜ்..."

"பி.எஸ்.ஜி"

"அட...நானும் அங்க தான்...ஆனா இஞ்சினியரிங்...ஹ ஹாஹ்ஹ்ஹா...."

பெரிதாய் ஜோக் சொன்னவன் போல சிரித்தவனை கல்பனா நிமிர்ந்து பார்த்தாள்... சராசரிக்கும் அதிகமான உயரம்...மங்கலான மெல்லிய இருளில் சிரிக்கும் கண்கள்...கூர்மையான மூக்கு....கருப்பும் இல்லாது வெளீரென்று வெளுப்பும் இல்லாது இரண்டும் கலந்த நிறம்....கலைந்து கிடக்கும் தலை...தானாக கலைந்ததா இல்லை கலைத்து விடப்பட்டதா என்று தெரியவில்லை...கொஞ்சம் சின்ன வயசு அஜித் மாதிரி தான் இருக்கான்...ம்ம்ம்....அதான் அவங்க அம்மா ரொம்ப அலட்டிக்கிறாங்க....

மீண்டும் அவனே பேச ஆரம்பித்தான்....

"ம்ம்ம்....உங்க டைம்பாஸ் என்ன....டி.வி....சினிமா..."

"டே டைம்ல வேற என்ன பண்றது....டி.வி. தான்....ஆனா எனக்கு டி.வி. பிடிக்காது....புக் படிப்பேன்...ஈவ்னிங் அப்பப்ப டென்னிஸ்...."

"அய்யோ...டென்னிஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....நானும் விளையாடுவேன்...என்ன புக் படிப்பீங்க...அகதா க்றிஸ்டி....டானியல் ஸ்டீல்..."

"ம்ம்ம்ம்....அக‌தா க்றிஸ்டி அவ்வளவா படிக்கிறதில்ல...டானியல் ஸ்டீல் ஓக்கே...தமிழ்ல தான் நிறைய படிக்கிறது....பால குமாரன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன், ஜானகி ராமன் இந்த மாதிரி...."

"ம்ம்ம்...நான் அவ்வளவு படிச்சதில்ல...சும்மா அப்பப்ப ஃப்ளைட்ல ட்ராவல் பண்றப்ப எதுனா படிக்கிறது தான்..."

கல்பனாவுக்கு அலுப்பாக இருந்தது....இது என்ன அர்த்தமில்லாத பேச்சு....

"என்னவோ பேசணும்னு சொன்னீங்க..."

"ம்ம்ம்....அது ஒண்ணுமில்ல...சும்மா பேசணும்னு ஒரு ஆசை...சோனியா காந்தி பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க...."

கல்பனாவுக்கு அவன் தவிப்பு சிரிப்பாக இருந்தது....

"இதை கேட்க தான் இவ்ளோ நேரம் ட்ரை செஞ்சீங்களா...."

மகேஷூம் சிரித்தான்.... "இல்ல கல்பனா....அது வேற...டக்குன்னு எப்பிடி கேக்குறதுன்னு தெரியலை...அதான்...இப்ப கேக்கவா..."

"சரி கேளுங்க..."

தன் பங்குக்கு தானும் இரு இலையை பறித்து கசக்கிய மகேஷ் மாதுளை இலையை முகர்ந்து கொண்டு எங்கோ பார்த்த படி பேசினான்....

"ம்ம்ம்....அது....லவ் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கல்பனா?"

============ தொடரும் =========================

28 comments:

அது சரி said...

கருணாநிதிக்கு திமுக வழங்கும் அண்ணா விருது....

பழமைபேசி said...

மனுசன் படிச்சுட்டு வர்றதுக்குள்ள, நமக்கு நாமேவா? பொறுங்க அப்பு... நடுநிசி நாயகன் அது சரி அண்ணாச்சிக்கு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் உயரிய விருது காத்திருக்கிறது....

அது சரி said...

//
பழமைபேசி said...
மனுசன் படிச்சுட்டு வர்றதுக்குள்ள, நமக்கு நாமேவா? பொறுங்க அப்பு... நடுநிசி நாயகன் அது சரி அண்ணாச்சிக்கு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் உயரிய விருது காத்திருக்கிறது....

21 September 2009 01:29
//

இதென்ன ஆச்சரியமாயிருக்கு...அண்ணன் வெட்டாப்புல போயிட்டதால நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்....

எப்படி இருக்கீங்க அண்ணாச்சி???

பழமைபேசி said...

//ம்ம்ம்ம்....அக‌தா க்றிஸ்டி அவ்வளவா படிக்கிறதில்ல...டானியல் ஸ்டீல் ஓக்கே...தமிழ்ல தான் நிறைய படிக்கிறது....பால குமாரன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன், ஜானகி ராமன் இந்த மாதிரி...." //

கல்பனா, உங்க ஊர்க்காரன் ஒருத்தன் வலையில எழுதறான்... அதெல்லாம் படிக்க மாட்டியா நீ? எதுக்கு ச்சும்மா கவுறு திரிக்கிற?

பழமைபேசி said...

//இதென்ன ஆச்சரியமாயிருக்கு...அண்ணன் வெட்டாப்புல போயிட்டதால நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்....

எப்படி இருக்கீங்க அண்ணாச்சி???//

சாயந்திரமா வீட்டுக்கு வந்து, நாளைக்கு போக துணிமணிகளைத் தேய்ச்சு, இப்பத்தான் ஒரு புட்டிய ஒடச்சி உக்காரவும், உங்க இடுகை வரவும் சரியா இருந்ததுங்க அண்ணாச்சி.... நல்லா இருக்கேன்... நீங்க? ஆணி கொஞ்சம் அதிகந்தான்........

அது சரி said...

//
பழமைபேசி said...
//ம்ம்ம்ம்....அக‌தா க்றிஸ்டி அவ்வளவா படிக்கிறதில்ல...டானியல் ஸ்டீல் ஓக்கே...தமிழ்ல தான் நிறைய படிக்கிறது....பால குமாரன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன், ஜானகி ராமன் இந்த மாதிரி...." //

கல்பனா, உங்க ஊர்க்காரன் ஒருத்தன் வலையில எழுதறான்... அதெல்லாம் படிக்க மாட்டியா நீ? எதுக்கு ச்சும்மா கவுறு திரிக்கிற?

21 September 2009 01:33
//

அதான...!!!

அடுத்த தடவை பார்க்கும் போது கல்பனா கிட்ட கண்டிப்பா கேட்டுடறேன்...:0)))

அது சரி said...

//
பழமைபேசி said...
//இதென்ன ஆச்சரியமாயிருக்கு...அண்ணன் வெட்டாப்புல போயிட்டதால நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்....

எப்படி இருக்கீங்க அண்ணாச்சி???//

சாயந்திரமா வீட்டுக்கு வந்து, நாளைக்கு போக துணிமணிகளைத் தேய்ச்சு, இப்பத்தான் ஒரு புட்டிய ஒடச்சி உக்காரவும், உங்க இடுகை வரவும் சரியா இருந்ததுங்க அண்ணாச்சி.... நல்லா இருக்கேன்... நீங்க? ஆணி கொஞ்சம் அதிகந்தான்........

21 September 2009 01:35
//

இப்ப தான் புட்டி முடிஞ்சது...கதையும் முடிஞ்சது...:0)))

இப்ப தூக்கம் வருது...இப்பவே திங்கள் கிழமை ஆயிடுச்சி...இன்னும் கொஞ்ச நேரத்துல வேலை பார்க்கணும்....ச்சே....

கலகலப்ரியா said...

//
மகேஷின் அம்மா மனோரமா ரசிகை...//

அது செரி.. =))

//கலைந்து கிடக்கும் தலை...தானாக கலைந்ததா இல்லை கலைத்து விடப்பட்டதா என்று தெரியவில்லை..//

ரொம்பத் தேவை...

//
கல்பனாவுக்கு அலுப்பாக இருந்தது....இது என்ன அர்த்தமில்லாத பேச்சு.... //
இப்டிதாங்க.. கொல்லுறாய்ங்க.. அவ்வ்வ்வ்...

//
தன் பங்குக்கு தானும் இரு இலையை பறித்து கசக்கிய மகேஷ் மாதுளை இலையை முகர்ந்து கொண்டு எங்கோ பார்த்த படி பேசினான்....//

ஹிஹி..

"ம்ம்ம்....அது....லவ் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கல்பனா?" //

ஆரம்பிச்சிட்டாய்ங்கடா.. ஆரம்பிச்சிட்டாய்ங்க..

(ஆரம்பத்ல இருந்து முடியற வரைக்கும்.. செம ஃப்ளோங்க.. என்ன கிரிக்கெட் தெரியாததால அதெல்லாம் ஸ்கிப்ப்ட்.. ஹிஹி..)

excellent work.. keep it up..

குடுகுடுப்பை said...

இந்தப்பாகம் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. அதுக்காக ஒரு குத்துப்பாட்டு போட்டா பதிவுக்கு விறுவிறுப்பு ஏத்தமுடியும் அப்படியே எழுதுங்க.

அது சரி said...

//
கலகலப்ரியா said...

//
கல்பனாவுக்கு அலுப்பாக இருந்தது....இது என்ன அர்த்தமில்லாத பேச்சு.... //
இப்டிதாங்க.. கொல்லுறாய்ங்க.. அவ்வ்வ்வ்...
//

ம்ம்ம்க்கும்....எங்க பிரச்சினை எங்களுக்கு....இதெல்லாம் யாருக்கு தெரியுது :0)))

//
(ஆரம்பத்ல இருந்து முடியற வரைக்கும்.. செம ஃப்ளோங்க.. என்ன கிரிக்கெட் தெரியாததால அதெல்லாம் ஸ்கிப்ப்ட்.. ஹிஹி..)

excellent work.. keep it up..

//

ஃப்ளோவுக்கு என்ன பிரச்சினை...ரெண்டு பைன்ட் பியர்...மூணு சிகரெட் இருந்தா ஃப்ளோ தானா வரும் :0))))

நன்றி ப்ரியா...கீப் அப் பண்ண ட்ரை பண்றேன்...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
இந்தப்பாகம் எனக்கு அவ்வளவா பிடிக்கலை. அதுக்காக ஒரு குத்துப்பாட்டு போட்டா பதிவுக்கு விறுவிறுப்பு ஏத்தமுடியும் அப்படியே எழுதுங்க.

//

உங்களை உள்ள பிடிச்சி போட்டுட்டதா நேத்து தான் ஒரு நியூஸ் படிச்சேன்...அதுக்குள்ளவா வெளிய விட்டுட்டாய்ங்க?? :0))

குத்து பாட்டு தான?? கதைல குத்து பாட்டு போடக்கூடாதுன்னு யார் சொன்னா??
அடுத்து போட்ருவோம்.... :0))))

முகிலன் said...

நான் பதிவு வந்ததும் படிச்சிட்டேன் - ரீடர்ல. பின்னூட்டம் போட இங்க வர வேண்டியதா இருக்கு..

கதை நல்லா போகுது, ஆனாலும் போன எபிசோட்ல இருந்த விறுவிறுப்பு இதுல இல்லீயோன்னு தோணுது. ஒருவேளை நீங்க ராகுல் ட்ராவிட் பத்தி எழுதுனதுனாலன்னு நினைக்கிறேன். அடுத்த தடவ சேவாக் இல்லைன்னா யுவராஜ்னு எழுதுங்க. பரபரப்பா இருக்கும்.;-)

கலகலப்ரியா said...

//
ஃப்ளோவுக்கு என்ன பிரச்சினை...ரெண்டு பைன்ட் பியர்...மூணு சிகரெட் இருந்தா ஃப்ளோ தானா வரும் :0))))//

அடடே.. இப்டி உங்க வெற்றி ரகசியத்த பீர் பாட்டில் மாதிரி போட்டு உடைக்கிறீங்களே.. நாம காப்பி பண்ண மாட்டோம்பா.. மத்தவங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப யூஸ்புல்லா இருக்கும்.. °+"*ç%&/

கலகலப்ரியா said...

ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... (நாடோடிகள்.. நாடோடிகள்.. )

மங்களூர் சிவா said...

/
பழமைபேசி said...

கல்பனா, உங்க ஊர்க்காரன் ஒருத்தன் வலையில எழுதறான்... அதெல்லாம் படிக்க மாட்டியா நீ? எதுக்கு ச்சும்மா கவுறு திரிக்கிற?
/

ஹா ஹா
:)))

அது சரி said...

//
முகிலன் said...
நான் பதிவு வந்ததும் படிச்சிட்டேன் - ரீடர்ல. பின்னூட்டம் போட இங்க வர வேண்டியதா இருக்கு..

கதை நல்லா போகுது, ஆனாலும் போன எபிசோட்ல இருந்த விறுவிறுப்பு இதுல இல்லீயோன்னு தோணுது. ஒருவேளை நீங்க ராகுல் ட்ராவிட் பத்தி எழுதுனதுனாலன்னு நினைக்கிறேன். அடுத்த தடவ சேவாக் இல்லைன்னா யுவராஜ்னு எழுதுங்க. பரபரப்பா இருக்கும்.;-)

22 September 2009 05:25
//

நன்றி முகிலன்...

அந்த ராகுல் த்ராவிட் மேட்டர்...ம்ம்ம்ம்....அப்புறமா சொல்றேன்...:0))))

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//
ஃப்ளோவுக்கு என்ன பிரச்சினை...ரெண்டு பைன்ட் பியர்...மூணு சிகரெட் இருந்தா ஃப்ளோ தானா வரும் :0))))//

அடடே.. இப்டி உங்க வெற்றி ரகசியத்த பீர் பாட்டில் மாதிரி போட்டு உடைக்கிறீங்களே.. நாம காப்பி பண்ண மாட்டோம்பா.. மத்தவங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ப யூஸ்புல்லா இருக்கும்.. °+"*ç%&/

22 September 2009 07:29
//

இது அப்படி எல்லாம் ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லியே....டாஸ்மாக்ல என்னை மாதிரி ஏகப்பட்ட பேரு ஃப்ளோவுல இருப்பாங்க....:0)))

அது சரி said...

//
கலகலப்ரியா said...
ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... (நாடோடிகள்.. நாடோடிகள்.. )

//

நான் நாடோடிகள் பார்க்கலை...அதனால நீங்க சொல்றதோட உண்மையான மீனிங் பிரியல :0))))

படம் பார்த்துட்டு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி பதில் சொல்றேன்....:0)))

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
/
பழமைபேசி said...

கல்பனா, உங்க ஊர்க்காரன் ஒருத்தன் வலையில எழுதறான்... அதெல்லாம் படிக்க மாட்டியா நீ? எதுக்கு ச்சும்மா கவுறு திரிக்கிற?
/

ஹா ஹா
:)))
//

கவுறு திரிக்கிறதுன்னா சிவா அண்ணனுக்கு அவ்ளோ சிரிப்பா...:0)))

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் கதை டச் விட்டுப் போச்சா,ஒண்ணுமே பிரியல.அதனாலே பின்னோக்கிப் போறேன்.

ஆமா!நடுநிசி நாயகன் பட்டம் எப்ப வாங்கினீங்க?

கலகலப்ரியா பின்னூட்டங்கள் லகலக:)

ராஜ நடராஜன் said...

இப்படி சம்மணங்கால் போட்டு நான் பந்தியில உட்கார்ந்துகிட்டு இருந்தா மத்த வேலைகளையெல்லாம் கவனிக்கிறது யாரு?

(தனிமெயில்ல பின்னூட்டங்களைப் பார்த்தீங்கன்னா புரியுமென நினைக்கிறேன்)

Saravana Kumar MSK said...

தல. பின்னூட்டம் தான் போடல. ஆனா நாளையும் கரீட்ட்டா படிச்சிட்டேன்.. வழக்கம் போல் உங்களின் செம நட.. :)

நச்ன்னு இருக்கு.

அடுத்த பகுதி எப்போ??

Saravana Kumar MSK said...

ஆனா மாதி, வேதாளம் எங்கே..??

எம்.எம்.அப்துல்லா said...

வந்ததுக்கு அடையாளம் :)

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
இப்படி சம்மணங்கால் போட்டு நான் பந்தியில உட்கார்ந்துகிட்டு இருந்தா மத்த வேலைகளையெல்லாம் கவனிக்கிறது யாரு?

(தனிமெயில்ல பின்னூட்டங்களைப் பார்த்தீங்கன்னா புரியுமென நினைக்கிறேன்)

24 September 2009 12:48
//

கவனிச்சேன் நட்ராஜ் அண்ணே...

ஒரே நாள்ல நாலு பாகத்தையும் படிச்சிருக்கீங்க...உங்களுக்கு அபார பொறுமை :0))

ஆமா, ஈஜிப்ஷியன் செக்ரட்டரி கொடுத்த கிழங்கு எப்படி இருந்துச்சி?? :0)))

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
தல. பின்னூட்டம் தான் போடல. ஆனா நாளையும் கரீட்ட்டா படிச்சிட்டேன்.. வழக்கம் போல் உங்களின் செம நட.. :)

நச்ன்னு இருக்கு.

அடுத்த பகுதி எப்போ??

24 September 2009 12:52

//

எங்கடா, நம்ம சரவணன் ஆளையே காணோமேன்னு யோச்சிக்கிட்டு இருந்தேன்...ஆமா, என்ன ஒண்ணும் எழுத மாட்டேங்கறீங்க?? எழுதுங்க பாஸ்!

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
ஆனா மாதி, வேதாளம் எங்கே..??

24 September 2009 12:53

//

படிக்கிறவங்களுக்கு நேரம் இல்லாததுனால அவங்க அக்கப்போருக்கு சென்ஸார் :0)))

அது சரி said...

//
எம்.எம்.அப்துல்லா said...
வந்ததுக்கு அடையாளம் :)

26 September 2009 08:18
//

அப்படியே இடது கை ஆட்காட்டி விரலை காட்டுங்க...மை வச்சி விட்றேன்...:0)))