Friday, 25 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் காதல் சொல்லி வந்தாய்! -5

அத்தியாயம் ஐந்து: எங்கிருந்தோ வந்தான்

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு,அத்தியாயம் மூன்று, அத்தியாயம் நான்கு


காதல்....புதிரா புனிதமா? எப்பொழுதும் துடிக்கும் இதயமா இல்லை அவ்வப்போது உதிரும் முடியா? ஒரே ஒரு முறை பூக்கும் மலரா இல்லை வெட்ட வெட்ட வளரும் களையா? உணர்வுகளின் சங்கமமா இல்லை உடல்களின் புணர்ச்சியா? காதலா காமமா? காமத்தின் வேஷம் காதலா...காதலின் மறுபுறம் காமமா? ஆறு வயதில் வருவது காதலா இல்லை அறுபது வயதில் வருவது காதலா? காதலுக்காக காதலை துறத்தல் காதலா இல்லை காதலுக்காக உயிரை துறத்தல் காதலா? காதலித்து தோற்றவர்கள் காதல் வெற்றியா இல்லை காதலிக்கப்படாமலேயே காதலிப்பவர்களின் காதல் உச்சமா? அது இலக்கியமா இல்லை இலக்கணமா? அதுவா இதுவா?

எது காதல்....எது தான் காதல்?? எது வெற்றி எது தோல்வி? எது உச்சம் எது வீழ்ச்சி?? சமன்படாத சமன்பாடுகளின் விடை அறிந்தவன் எவன்? ஒரு கோடி விடைகளில் சரியான விடை எது??


"லவ் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கல்பனா?....."

மகேஷ் கேட்டதும் கல்பனாவிற்கு திக்கென்றிருந்தது....ஒரு வேளை...இவனுக்கு சிவராமனைப் பற்றி தெரிந்திருக்குமா...இல்லை இவனுக்கு யாருடனாவது காதலா....நம்மளை மாதிரியே வேறு வழியில்லாம பெண் பார்க்க ஒத்துக்கிட்டானோ.....இவன் கதை எனக்கெதுக்கு....நான் லவ் பண்றேன்ன்னு சொல்லிடலாமா....ச்சே....எதுக்கு இவன்கிட்ட போய் என் கதைய சொல்லணும்...

"லவ்...ம்ம்ம்..எப்படி சொல்றது...திடீர்னு கேக்கறீங்க....வேணும்னா...."
மகேஷ் மெதுவாக நெற்றியில் அடித்துக் கொண்டான்...


"ஸாரி...ஸாரி.......இடியாட்டிக் கொஸ்டின் இல்ல.....திடீர்னு லவ் பத்தி உங்களை கேட்டா நீங்க என்ன சொல்வீங்க.....அது...நான் சொல்ல வந்தது வேற....கரெக்டா சொல்றதுன்னா...நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்...அதான்...."

இரவு...பகல்...குளிர்...வெயில்...நெருப்பு...நீர்...இருட்டு....வெளிச்சம்...ஆண்...பெண்...உலகம் இரண்டாகவே இருக்கிறது....என்றைக்கும்...எப்பொழுதும்...இப்பொழுதும்....
கல்பனாவிற்கு ஒரே சமயத்தில் சந்தோஷமாகவும் ஏனோ வெறுமையான ஒரு துக்கமாகவும் இருந்தது...ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா....இவனுக்கு வேற ஒரு லவ் இருக்கு....அப்ப இந்த கல்யாணம் நடக்காது...சந்தோஷம்....இவனுக்கு வேற ஒரு லவ்வரா....யார் அந்த பெண்...காரணம் இல்லாமல் வெறுமை....வெறுமை சூழ் உலகு...


"ஓ...உங்களுக்கு ஏற்கனவே லவ் இருக்கா...."

"ஆமா கல்பனா...சின்ன வயசுலருந்தே லவ்...அது கொஞ்சம் பெரிய கதை..."
"நீங்க என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல...உங்க வீட்ல என்னை பிடிக்கலைன்னு சொன்னா போதும்..."


"இல்ல அது சரியா இருக்காது...உங்கள்ட்ட சொல்லணும்..."

கல்பனாவுக்கு எரிச்சலாக இருந்தது...இவன் யாரை லவ் பண்ணா எனக்கென்ன...லவ் பண்றதை பெத்தவங்க கிட்ட பேச துணிச்சல் இல்லை...பெண் பார்க்க வந்துட்டு இங்க வந்து கதை பேசிக்கிட்டு இருக்கான்...இவனுக்கெல்லாம் எதுக்கு காதல்....

"சரி சொல்லுங்க..."

"ம்ம்ம்...ஏன் எதுக்குன்னு தெரியாது.. அவங்க பேர் கூட தெரியாது...ஆனா சில பேரை பார்த்தாலே பிடிச்சிரும் இல்ல...அது மாதிரி....நான் அப்ப ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்தேன்...ப்ளஸ் டூ....அப்ப தான் அந்த பொண்ணை பார்த்தேன்...என்னை விட ஒரு நாலு வயசு ஜூனியரா இருக்கும்....ஒரு மாதிரி துறுதுறுன்னு ரொம்ப க்யூட்...."

ஸ்கூல் படிக்கும் போதே லவ்வா....சரிதான்....

"அப்பவே லவ்வா??"

"ம்ம்ம்....அது லவ்வுன்னு சொல்ல முடியாது...ஒரு மாதிரி அஃபக்க்ஷன்னு வச்சிக்கங்களேன்....ச்சே...பொண்ணு ரொம்ப க்யூட்டா இருக்கு....நாம லவ் பண்ணா இப்படி ஒரு பொண்ணைத் தான் பண்ணனும்னு ஒரு மாதிரி தாட்ஸ்...அது அப்படியே மனசுல நின்னுடிச்சி....எந்த பொண்ணை பார்த்தாலும் அந்த பொண்ணோட கம்பேர் பண்ணி மார்க் போட்ற மாதிரி....."

மார்க் போட்றதா....கல்பனாவுக்கு சிரிப்பாக இருந்தது....

"மார்க் போட்றதுன்னா....இது அறுவது...இது எழுபது....இது ஃபெயில்னு பசங்க மார்க் போட்ற மாதிரியா....சரி...உங்க லவ்வரை விட யாருமே மார்க் அதிகம் வாங்கியிருக்க முடியாதே...."

மஹேஷ் பெரிய பாரத்தை இறக்கி வைத்தவன் போல சிரித்தான்.... "கரெக்ட்...எந்த பொண்ணுமே அவளை விட அதிக மார்க் வாங்கலை....கிட்டத்தட்ட பத்து வருஷம்....லவ் இன்னும் டீப்பா தான் ஆகிக்கிட்டு இருக்கு..."

"சரியாப் போச்சி...அப்ப அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான...எதுக்கு என்னை பெண் பார்க்க வந்தீங்க....வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னா?"

"அது...ரீஸன் அதில்ல....ம்ம்ம்ம்...எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு...ஆனா அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியலையே..."

ம்ம்க்கும்...ஒன் சைட் லவ்வுக்கு தான் இவ்ளோ பில்டப்பா....ஆளு வெளிய தான் அழகா இருக்கான்...உள்ள கொஞ்சம் லூஸா இருப்பான் போலருக்கே...கல்பனாவுக்கு பெரிதாக‌ சிரிக்க தோன்றியது...ச்சே...வேணாம்...இப்ப சிரிச்சா...பாவம்...

"அப்ப பத்து வருஷமா ஒன் சைட் லவ்வா...இவ்ளோ நாளா லவ் பண்றீங்க...பேசாம அந்த பொண்ணுக்கிட்டயே கேட்ருக்கலாமே..."

மஹேஷ் சிரித்தான்...

"கேட்ருக்கலாம்...சான்ஸ் கிடைக்கலை....சரி...இப்ப கேக்குறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா கல்பனா?...."

=============================

"சார்....இங்க ரெண்டு தோசை....கேட்டு ரொம்ப நேரமாச்சிங்...."

"ஸாரிங்க....அது அங்க சப்ளை பண்ணதுல விட்டு போயிடுச்சி...உங்களுக்கு ரெண்டு பூரி....வேற....."

"பூரி இல்லைங்....ரெண்டு தோசை....முறுகலா...."

"ஆங்...ரெண்டு தோசை...."

இன்னேரம் பெண் பார்க்க வந்திருப்பாங்களா....பத்து மணிக்கு ஃபோன் பண்றேன்னு சொன்னா....எட்டு மணி தான் ஆகுது....ச்சே...இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...க‌ல்பாவுக்கு ஃபோன் செஞ்சா என்ன....வேணாம்...இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்..... ஏனோ சில நேரங்களில் காலம் மிக மெதுவாக நகர்கிறது....

சிவராமன் சமையல்கட்டை நோக்கி கத்தினான்....

"இங்க ரெண்டு பூரி...."

==================================

மே மாத வெயில்...கழுத்தெல்லாம் வியர்த்து முகம் கறுக்கும் நிலையில் மழை வரும் என்று குடையுடன் நடப்பவர்கள் எவருமில்லை....திடீரென்று மழை வந்து தொப்பலாக நனைவது போல்...ஏதோ லவ்....வீட்ல சொல்ல முடியாம இங்க பொண்ணு பார்க்க வந்து தொல்லை பண்றான்....நினைத்துக் கொண்டிருந்த கல்பனா அதை எதிர்பார்க்கவில்லை....

"என்னது....நானா....நீங்க....நீங்க...நான் உங்களை பார்த்ததே இல்லியே..."

"ஆமா....கல்பனா...நான் சொன்ன அந்த க்யூட் கேர்ள்...உங்களை தான் நான் பார்த்தது....உங்க அப்பா தான் எனக்கு ட்வெல்த்ல பிஸிக்ஸ்...நீங்க என்னை பார்க்கலை...உங்க வீட்ல தான் நான் உங்களை பார்த்தேன்...அன்னிலருந்து....என்னோட பேங்க் பாஸ்வேர்ட் கூட கல்பா தான்....கல்பா மகேஷ்....பாஸ்போர்ட்ல கல்பனா மகேஸ்வரன்....நல்லாருக்குல்ல...."

யார் இவன்....பத்து வருஷம்....ஒரு நாள்....ஒரு நாள் கூட பார்த்ததில்லை....இன்றைக்கு....எங்கிருந்து வந்தான்...

"ஸாரி...கல்பனா...இல்ல கல்பா....உங்க ஷாக் எனக்கு புரியுது....இவன் யார்னு யோசிக்கிறீங்க இல்லியா....ம்ம்ம்ம்...பெரிசா சொல்ல ஒண்ணுமில்ல....மகேஷ்....ஸன் ஆஃப் கார்த்திக்கேயன்....பி.ஈ....எம்.பி.ஏ.....இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்...கோல்ட்மன் ஸாக்ஸ்ல மார்க்கெட் அனலிஸ்ட்....நியூயார்க்ல வீடு....ரஜினிகாந்த்....ஹாரிஸன் ஃபோர்ட்...டானியல் க்ரெய்க்..மாட் டேமன் ஃபேன்....ஆஃபிஸ் பார்ட்டில பியர்...வீக் என்ட்ல மட்டும் கொஞ்சம் விஸ்கி...எப்பனா சிகரெட்...அழகான பொண்ணுங்களை மட்டும் அப்பப்ப சைட் அடிக்கிறது....என்னைக்காவது சொந்தமா பேங்க் ஓப்பன் செய்யணும்னு ஒரு சின்ன ஆசை...ரொம்ப நல்லவனுமில்ல....கெட்டவனுமில்ல....இப்ப சொல்லுங்க...இல்ல...போங்க வாங்க...ஒரு மாதிரி டிஸ்டன்ஸா இருக்குல்ல...இப்ப சொல்லு கல்பா...உனக்கு என்னை பிடிச்சிருக்கா...."

பாலக்காடு தாண்டிய காற்று கோவையில் மெல்ல மார்கழி பனியாய் இறங்க ஆரம்பித்திருந்தது....சுட்டெரிக்கும் சூரியனில்லை...கண்ணை கூச வைக்கும் வெளிச்சமில்லை...உடலுடன் உடல் உரசலை வெறுக்க வைக்கும் வியர்வை இல்லை...பனி விழும் இரவுகள் படைக்கும் கடவுளின் நேரம்...குளிருக்கு இதமாக விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்....இரவுகள்....சாத்தானின் நேரமும் கூட...

"இப்பிடி திடீர்னு கேட்டா....என்னன்னு....."

"இல்ல கல்பா...லவ்வை சொல்றதுக்கு முன்னாடி நான் க்வாலிஃபைடா இருக்கணுமில்ல.....பத்து வருஷமா இதைக் கேட்கத் தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...ப்ளீஸ்....இப்ப சொன்னா நல்லது....பிடிச்சி தான் இருக்கணும்னு நான் சொல்லலை...ஆனா....என்னை பிடிச்சிருக்கா இல்லையா..."

நான் நோக்குங்கால் நிலம் நோக்கி நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்....நிலம் நோக்குவதன் காரணம் இதை சொன்ன வள்ளுவனுக்கு தெரியுமா...ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்....தன் முகத்தை மறைப்பதும் அதில் ஒன்றாக இருக்கலாம்....

அடர் சிவப்பில்...மெல்லிய வெண்மையில்...புதிதாய் பூக்க ஆரம்பிக்கும் மாதுளை மொட்டுக்களை பார்த்த படி கல்பனா மெதுவாய் பேசினாள்.....

"பிடிச்சிருக்கு...."

===============================

இவ்ளோ நேரம் கதை சொல்றேன்...ஒரு சத்தத்தையும் காணோமே...தூங்கிட்டானோ....க்ளைமாக்ஸ் சீனில் புள்ளி விவரம் அடுக்கும் புரட்சிக் கலைஞர் போல வேகமாக கதை சொன்ன வேதாளம் திடீரென்று நிறுத்தி விட்டு பக்கத்தில் அழுக்கு பாட்டிலில் இருந்த அழுக்கு தண்ணீரை மாதித்தன் முகத்தில் பொளேரன்று கொட்டியது...

"ஏய்ய்....ய்ய்.....என்னா...யாரு....அடச்சீ....சனியனே...எதுக்கு இப்ப தண்ணி ஊத்துன...."

"ஹிஹி...ஹிஹ்ஹிஹி....அது ஒண்ணுமில்ல மாதி...நெம்ப நேரமா சத்தமே இல்ல...அதான்...தூங்கிட்டியோன்னு பார்த்தேன்...."

"மூஞ்சைப் பாரு....ஒன் எழவு பெரிய எழவாருக்கு....சரி...தண்ணி ஊத்துனது தான் ஊத்துன.....இந்த பாழடைஞ்ச குகைல எதுனா தண்ணி வச்சிருப்பியே....அதை ஒரு க்ளாஸ்ல ஊத்து...."

வேதாளம் இளித்த‌து......

"இல்லாமையா....செவிக்கு உணவில்லா போழ்து வயிற்றுக்கும் சிறுது ஈயப்படும்..."

"ம்ம்ம்க்கும்...காதுல ஈயத்தை ஊத்தறது பத்தாதுன்னு கிட்னிக்கு வேறயா....ஈயி...ஈயி....அப்பிடியே ரெண்டு சிக‌ரெட்டையும் ப‌த்தை வையி..."

ப‌தில் பேசாத‌ வேதாள‌ம் இர‌ண்டு க்ளாஸ்க‌ளில் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்ற‌ ஆர‌ம்பித்த‌து....
===============தொடரும் ======================

25 comments:

அது சரி said...

அழகிரிக்கு கருணாநிதி தலைமையில் ஐம்பத்தோரு பவுன் தங்கச்சங்கிலி வழங்கும் விழா!!!

பழமைபேசி said...

நடுநிசி நாயகருக்கு நயனதாரா நாட்டியத்துடன் நன்றி நவிலுதல்!

பழமைபேசி said...

//கேட்ருக்கலாம்...சான்ஸ் கிடைக்கலை....சரி...இப்ப கேக்குறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா கல்பனா?...."
//

பெரிய ஆப்பு, கணக்கா அடிச்சாம் பாருங்க!

அது சரி said...

//
பழமைபேசி said...
நடுநிசி நாயகருக்கு நயனதாரா நாட்டியத்துடன் நன்றி நவிலுதல்!

25 September 2009 01:21
//

நடுநிசி நாயகர்....பட்டத்துக்கு நன்றிங்ணா...

ஆமா, அது என்ன...நயந்தாரான்னா நாட்டியமும் கூடவே வந்துடுது?? :0))))

பழமைபேசி said...

//
"பிடிச்சிருக்கு...." //

சிவராமா, போடாப் போ... காந்திவரத்துலயும், உப்புக்கார சந்தையிலும் போயி சட்ட துணிமணியெல்லாம் கிழிச்சிப் போட்டுட்டு திரி, போடா, போ!

பழமைபேசி said...

நாட்டியத்துகூட நயனமா? நயனத்தோட நாட்டியமா??

குடுகுடுப்பை said...

இந்த பாகம் நல்லாருக்கு, ஆனால் அவன் சொல்லப்போவதை யூகிக்கமுடிகிறது.

இந்தக்காதல், கல்யாணம் இதெல்லாம் மனித நாகரிகம் கண்டுபிடித்த மிகப்பெரிய கொடுமை சாமி.

முகிலன் said...

குடுகுடுப்பை சொன்ன மாதிரி அவன் கல்பாதான் அவன் காதலி என்பதை நீசே வாகிவிட்டது. ஆனால் கல்பா சொன்ன பிடிச்சிருக்கு???

வானம்பாடிகள் said...

குகைல கூட டாஸ்மாக் தொறந்துட்டாங்களா? :))

Mahesh said...

/சரி...இப்ப கேக்குறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா கல்பனா?...." //

அனதர் ஒன் டு பைட் த டஸ்ட்... ஹ ஹ ஹ ஹ ஹ.........

கலகலப்ரியா said...

//எப்பொழுதும் துடிக்கும் இதயமா இல்லை அவ்வப்போது உதிரும் முடியா? //

ஆ..! கவிதை கவிதை! நின்னு நின்னு.. வேற வேற இடத்ல துடிக்கும் இதயமா இருக்கும்..!

//"கரெக்ட்...எந்த பொண்ணுமே அவளை விட அதிக மார்க் வாங்கலை.//

பொன் குஞ்சு..

//
"சார்....இங்க ரெண்டு தோசை....கேட்டு ரொம்ப நேரமாச்சிங்...." //

இடைல இது இப்போ ரொம்ம்ம்ம்ம்ப அவசரமா...

//பனி விழும் இரவுகள் படைக்கும் கடவுளின் நேரம்...குளிருக்கு இதமாக விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்....இரவுகள்....சாத்தானின் நேரமும் கூட...//

அட அட அட..

//எதுக்கு இப்ப தண்ணி ஊத்துன...."//

ஆமாம் ஏஏஏன்?! நல்லாதானே போய்க்கிட்டிருக்கு..

:((.. முடியல.. இதுக்கு அம்புலிமாமா சஸ்பென்ஸ் தேவலாம் போலயே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அது சரி said...

//
பழமைபேசி said...
//
"பிடிச்சிருக்கு...." //

சிவராமா, போடாப் போ... காந்திவரத்துலயும், உப்புக்கார சந்தையிலும் போயி சட்ட துணிமணியெல்லாம் கிழிச்சிப் போட்டுட்டு திரி, போடா, போ!

25 September 2009 01:26
//

யாரு சட்டைய?? :0)))

அது சரி said...

//
பழமைபேசி said...
நாட்டியத்துகூட நயனமா? நயனத்தோட நாட்டியமா??

25 September 2009 01:27

//

எப்பிடி பார்த்தாலும் ரெண்டும் சேர்ந்து தான இருக்கு....புகைய விடாதீங்க தல...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
இந்த பாகம் நல்லாருக்கு, ஆனால் அவன் சொல்லப்போவதை யூகிக்கமுடிகிறது.
//

இது சஸ்பென்ஸ் கதை இல்ல தலைவரே...(அப்புறம் என்ன எழவு கதைடான்னு கேக்கப்படாது...)...இப்படித்தான் வரும்னு மிஸஸ்.தேவ் ரெண்டு இடுகைக்கு முன்னாடியே சொல்லிருந்தாங்க....

//
இந்தக்காதல், கல்யாணம் இதெல்லாம் மனித நாகரிகம் கண்டுபிடித்த மிகப்பெரிய கொடுமை சாமி.
//

லிஸ்ட்ல சேத்துக்கிட்டேன்...உங்க விடை ஒரு கோடியே இருவத்தேழு லட்சத்து நூத்தி பதிமூணு :0)))

ஆமா, இந்த பின்னூட்டம் உங்க தங்கமணியாருக்கு தெரியுமா?? :0)))

அது சரி said...

//
முகிலன் said...
குடுகுடுப்பை சொன்ன மாதிரி அவன் கல்பாதான் அவன் காதலி என்பதை நீசே வாகிவிட்டது. ஆனால் கல்பா சொன்ன பிடிச்சிருக்கு???

25 September 2009 04:11
//

வாங்க முகிலன்...

கல்பா சொன்ன பிடிச்சிருக்கு...ம்ம்ம்...பின்னாடி தெரிய வரலாம்...:0))

அப்புறம்..போன அத்தியாத்தில் வந்த அந்த ராகுல் த்ராவி, க்ரிக்கெட், இன்ஸ்விங்...இப்ப திருப்பி படிச்சா காரணம் இருககா மாதிரி தெரியும் :0)))

அது சரி said...

//
வானம்பாடிகள் said...
குகைல கூட டாஸ்மாக் தொறந்துட்டாங்களா? :))

25 September 2009 04:55

//

அதெல்லாம் இல்ல....வேதாளம் ஒரு நடமாடும் டாஸ்மாக் :0)))

அது சரி said...

//
Mahesh said...
/சரி...இப்ப கேக்குறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா கல்பனா?...." //

அனதர் ஒன் டு பைட் த டஸ்ட்... ஹ ஹ ஹ ஹ ஹ.........

25 September 2009 16:04
//

மகேஷுக்கு தெரியாததா??? :0)))

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//எப்பொழுதும் துடிக்கும் இதயமா இல்லை அவ்வப்போது உதிரும் முடியா? //

ஆ..! கவிதை கவிதை! நின்னு நின்னு.. வேற வேற இடத்ல துடிக்கும் இதயமா இருக்கும்..!
//

என்னது கழுதையா?? எங்க....எங்க??

//"கரெக்ட்...எந்த பொண்ணுமே அவளை விட அதிக மார்க் வாங்கலை.//

பொன் குஞ்சு..
//

அப்பிடியே வாங்குனாலும் வெளிய சொல்ல மாட்டோம்....:0)))

//
"சார்....இங்க ரெண்டு தோசை....கேட்டு ரொம்ப நேரமாச்சிங்...." //

இடைல இது இப்போ ரொம்ம்ம்ம்ம்ப அவசரமா...
//

அவய்ங்க அவசரம் அவய்ங்களுக்கு :0)))


//
:((.. முடியல.. இதுக்கு அம்புலிமாமா சஸ்பென்ஸ் தேவலாம் போலயே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

//

அம்புலி மாமா சஸ்பென்ஸா?? :0)))

ம்ம்ம்..நான் ஆக்சுவலா சஸ்பென்ஸ் எழுத ட்ரை பண்ணலை ப்ரியா....ப்ராக்டிகல் ப்ராப்ளம்....கதை முழுசா எழுதுனா ரொம்ப பெரிசா போயிடும்...அதுக்காக அங்கங்க ப்ரேக் பண்ண வேண்டியதாயிருக்கு.....அந்த ப்ரேக் ஒரு லாஜிக்கல் பாய்ண்ட்ல இருக்க ட்ரை பண்றேன்...அவ்வளவு தான்...ஸோ....தேர் ஆர் நோ சஸ்பென்ஸஸ் இன் திஸ் ஸ்டோரி...

இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...

கலகலப்ரியா said...

//இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...//

அடங்...! வார.. மாத இடுகை இல்லாம.. நாளிடுகை ஆக்கிடுங்கையா.. சந்தா விவரம் பேசித் தீர்த்துக்கலாம்..

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...//

அடங்...! வார.. மாத இடுகை இல்லாம.. நாளிடுகை ஆக்கிடுங்கையா.. சந்தா விவரம் பேசித் தீர்த்துக்கலாம்..

25 September 2009 23:24
//

ஆக்கிடுவோம்...பொறுப்பாசிரியர்: மெகா சீரியல் மஹாதேவன் ..நீங்க வேணும்னா துணை ஆசிரியரா இருந்துக்கங்க...குடுகுடுப்பையாரை நிர்வாக ஆசிரியரா ஆக்கிடலாம் :0)))

மங்களூர் சிவா said...

/

இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...
/

இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையா??

எனி ஹெள கல்பாவோட முடிவு ரொம்ப பிடிச்சிருக்கு!
:))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...//

அடங்...! வார.. மாத இடுகை இல்லாம.. நாளிடுகை ஆக்கிடுங்கையா.. சந்தா விவரம் பேசித் தீர்த்துக்கலாம்..

25 September 2009 23:24
//

ஆக்கிடுவோம்...பொறுப்பாசிரியர்: மெகா சீரியல் மஹாதேவன் ..நீங்க வேணும்னா துணை ஆசிரியரா இருந்துக்கங்க...குடுகுடுப்பையாரை நிர்வாக ஆசிரியரா ஆக்கிடலாம் :0)))//

ஆ..! வாட் அன் இன்சல்ட்..! எனக்கு பொறுப்புமில்ல.. மானேஜ் பண்ணவும் தெரியலன்னு சொல்லாம சொல்லிட்டியளே.. :((.. அவ்வ்வ்வ்... செரி போவட்டும்.. பின்னூட்டம் போட்டு துணை ஆசிரியர் வேலைய கான்டினியூ பண்றேன்..

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
/

இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...
/

இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையா??

எனி ஹெள கல்பாவோட முடிவு ரொம்ப பிடிச்சிருக்கு!
:))

26 September 2009 06:09
//

என்னது...கல்பா முடிவு பிடிச்சிருக்கா??

சிவான்னு பேர் வச்சிக்கிட்டு சிவராமனோட வயித்தெரிச்சலை வாங்கி கொட்டிக்காதீங்க :0)))

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//இது வரை சொன்னது எல்லாமே முன்கதை...நான் சொல்ல வர்ற கதை இனிமே தான் வரும்...//

அடங்...! வார.. மாத இடுகை இல்லாம.. நாளிடுகை ஆக்கிடுங்கையா.. சந்தா விவரம் பேசித் தீர்த்துக்கலாம்..

25 September 2009 23:24
//

ஆக்கிடுவோம்...பொறுப்பாசிரியர்: மெகா சீரியல் மஹாதேவன் ..நீங்க வேணும்னா துணை ஆசிரியரா இருந்துக்கங்க...குடுகுடுப்பையாரை நிர்வாக ஆசிரியரா ஆக்கிடலாம் :0)))//

ஆ..! வாட் அன் இன்சல்ட்..! எனக்கு பொறுப்புமில்ல.. மானேஜ் பண்ணவும் தெரியலன்னு சொல்லாம சொல்லிட்டியளே.. :((.. அவ்வ்வ்வ்... செரி போவட்டும்.. பின்னூட்டம் போட்டு துணை ஆசிரியர் வேலைய கான்டினியூ பண்றேன்..

//

இன்ஸல்ட் பண்றதுன்னு இல்ல...ஆனாப் பாருங்க...மெகா சீரியல் மஹாதேவனுக்கு எதுனா பதவி இல்லாம இருக்க முடியாது....வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாருக்கு பதவி கொடுக்காம இங்க பேட்டைல யாரும் கடை நடத்த முடியாது...மீதி இருக்க ஒரே ஒரு பதவியை உங்களுக்கு எந்த கட்சி நிதியும் வாங்காம குடுத்துட்டேன்...

கொஞ்சம் பொறுங்க...ஊழல் வழக்கு, வருமானமே இல்லாம சொத்து சேர்த்த வழக்குல குடுகுடுப்பையாரை எப்படியும் எஃப்.பி.ஐ. உள்ள வச்சிரும்....அதுக்கப்புறம் நீங்க தான் நிர்வாக ஆசிரியர்....டீல்?

:0)))

கலகலப்ரியா said...

//
கொஞ்சம் பொறுங்க...ஊழல் வழக்கு, வருமானமே இல்லாம சொத்து சேர்த்த வழக்குல குடுகுடுப்பையாரை எப்படியும் எஃப்.பி.ஐ. உள்ள வச்சிரும்....அதுக்கப்புறம் நீங்க தான் நிர்வாக ஆசிரியர்....டீல்?

:0)))//

யப்பே.. நோ டீல்.. நோ டீல்.. இந்த அரசியலுக்கு நான் வரலை.. நாளைக்கு என்னை உள்ளுக்கு அனுப்பிட்டு யார் நிர்வாகத்த பிடுங்கிப்பாங்களோன்னு பயந்துக்கிட்டே இருக்கணும்பா..

ஆமாம் கதை ஆரம்பிக்கவே காணோமே.. என்ன ப்ளான்..?