Wednesday 30 June 2010

ர்ர்ர்ர்ர்ராவணன்!

சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பது போல எத்தனை உழன்றும் அவள் பின்னது மனம் என்று விடாது நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் மண் வேண்டேன் மனை வேண்டேன் என்று புலம்பியவன் கூட பெண் வேண்டேன் என்று சொன்னதாக தெரியவில்லை. ராமாயணம் மகாபாரதம் ஆரம்பித்து ரோமின் க்ளியோபாட்ரா, ஹெலன் ஆஃப் ட்ராய், ஆந்திராவின் சிவ பார்வதி என்று கவிழ்ந்த மன்னர்களும் அழிந்த சாம்ராஜ்யங்களும் நீளம்... பெண்ணின் காலடியில் வைக்கப்பட்ட தலைகளும் வளைந்து போன வாள்களும் அதிகம்...ஒழுக்கம்,சட்டம், மதம்,கலாச்சாரம் இன்ன பிற கருமாந்திரங்கள் என்று மூடி வைத்தாலும் கணப் பொழுதில் கட்டவிழ்த்து பாய இருளில் ஒரு எருமை எப்பொழுதுமே முரண்டு கொண்டு தான் இருக்கிறது.

வெறுப்பின் காரணமாக எதிரியின் மனைவியை கடத்தி, அவள் மேல் காதல் பட்டால்? அங்கு நிற்பது வெறுப்பா இல்லை காதலா? அவளைக் கொல்வதா இல்லை கொஞ்சுவதா?? உருகி உருகி காதலித்தாலும் அதை வெளிச் சொல்ல பிம்பம் அனுமதிக்காவிட்டால்? அப்படியே சொன்னாலும் அவள் அடுத்தவனின் மனைவி..உங்களின் ஒழுக்க கலாச்சார மதிப்புகள் என்னாவது? அதிலும் அத்தகைய ஒழுக்க மதிப்பீடை காக்க வேண்டிய கலாச்சார காவலனே நீங்கள் தான் எனில்? எல்லாவற்றையும் உதறி நீங்கள் சொன்னாலும் அவள் மறுத்தால்? தொட்டு விடும் தூரத்தில் இருந்தாலும் தொட முடியா தொலைவில் இருக்கும் பெண்ணை என்ன செய்வது? உள்ளிருந்து அரிக்கும் கரையான் போல உளுத்துப் போய்க் கொண்டே இருக்கும் மனதை என்ன செய்வது???

இதிகாச ராவணன் ஒரு மிகச்சிக்கலான பாத்திரம்...சிவ பக்தன், வீணை வாசிப்பான், பத்து தலை, மகா வீரன், எதிரில் நிற்பவன் கடவுளே என்றாலும் மயிரே போச்சி என்று பின் வாங்காதவன், அசுரன், அப்படில்லாம் இல்ல அவங்கப்பா ஒரு ரிஷி அதனால அவன் பிராமணன் என்றெல்லாம் அவனது புறவயமான பிம்பமே மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அகவயமான ராவணன் யார்? பெண்ணே காதல் கொள்ளும் அழகு என்று கம்பன் உருகும் சீதையை கடத்திய பின் அவன் மனநிலை என்ன? உண்மையிலேயே அவன் சீதையை விரும்பினானா இல்லை கடைசி வரை வெறுப்பும் பழி வாங்கும் உணர்ச்சியும் தான் இருந்ததா? அப்படி விரும்பியிருந்தால்...சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்....காதலில் அழுந்தும் மனம், காமத்தில் எரியும் உடல், எதிரியின் மனைவியை கொல்ல சொல்லும் புத்தி...மனம், உடல், புத்தி என்று அல்லாடி ஒரே மனிதன் மூன்றாக சிதைவதை....ஒரு மிக தீவிரமான உளவியல் கதையே சொல்லியிருக்கலாம்..

ஆனால், மணிரத்னத்தின் ராவணன்??
============

மணி ரத்னத்திற்கு ஒட்டு மொத்த சரக்கும் ஓவர் நைட்ல தீந்து போச்சா இல்ல‌ சரக்கு குடுக்குறவய்ங்க‌ மொதல்ல பழைய பாக்கியை செட்டில் பண்ணுங்க சார்...இனிமே இல்லன்னு கடைய மூடிட்டாய்ங்களான்னு தெர்ல.....பழைய ராமாயணம் டிவி சீரியலை பார்த்து அதை அப்படியே வில்லுக்கு பதில் கன்னு, அம்புக்கு பதில் புல்லட்டு மட்டும் மாத்தி பசு மாடு வைக்கோல் தின்னுட்டு சாணி போடறா மாதிரி சாணி போட்ருக்கார்... செத்த நாய் மேல எத்தனை லாரி ஏத்துனா என்னடான்னு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்வி ராஜ், ஏ.ஆர். ரெஹ்மான், சந்தோஷ் சிவன், பிரபு, கார்த்திக் எல்லாரையும் ஏத்தி எறக்கிருக்கார்...நாய் பீஸ் பீஸாயிடுச்சி.....

வழக்கமா தியேட்டர்ல குந்தியிருக்கவய்ங்க கண்ணை நோண்ட்றா மாதிரி வெரலை நீட்டி இல்லாட்டி கான்க்ரீட் கலக்குற மிக்சிங் மெஷின் மாதிரி வாயத் தொறந்து டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கத்த வச்சோ ஹீரோவை அறிமுகப்படுத்தறது தமிழர் பண்பாடு....ஆனால், மணியண்ணன் வித்தியாசமா சிந்திப்பவர் (இல்லியா பின்ன, பேன்டிட்ஸ்னு ஒரு திருடங்க படத்தையே சுட்டு திருடா திருடான்னு சொல்லி எடுக்க இன்னா கெத்து வேணும்?? தில்லு தொரைப்பா!)...ஹீரோ அறிமுகக் காட்சியில் விரலை நீட்டலை...ஒட்டு மொத்த பாடியையே நீட்டி குதிக்கிறான் (ஆத்துல தான், என்னோட மண்டைல இல்ல)...அப்படியே குதித்து அடித்துக் கொண்டு போயிருந்தால் ர்ர்ர்ர்ர்ராவணனும் இல்ல, கோவணமும் இல்லங்கிறதுனால போகலை...(ராவணனோட கோவணம் என்னாச்சின்னு கேட்டு தொலைக்காதீங்கய்யா...நான் பாக்கலை)..வந்துடறான்....வந்து???..கோவணத்தை காய வச்சி கட்டிக்கிட்டு பழங்காநத்த்ம் பஸ் ஸ்டாண்டு போயி பொரோட்டாவா போட முடியும்?..போட்ல போய் சீதையை கடத்துறான்...ஆனா ஐஸ்வரியா என்ன சாதாரண சீதையா? கடத்தும் போது அவங்க பயப்படறதெல்லாம் இல்லை...அதைப் பத்தி கவலைப்படறதும் இல்ல..என்னவோ கவிதை சொல்றாங்க...பதிலுக்கு ராவணனும் கவிதை சொல்றாரு...விட்டா அங்கின ஆத்துலயே மேடை போட்டு மைக் செட்டு வச்சி பாட்டுக்கு பாட்டு எடுக்கவான்னு சூப்பர் ஸிங்கர் போட்டியே நடத்துவாய்ங்க போல..எந்த கிட்நாப்பிங்ல இப்பிடி கடத்துறவனும், ஹாஸ்டேஜும் அந்தாதி போட்டி நடத்துனாங்கன்னு எனக்கு தான் ஒரு எழவும் தெரியலை...

ராவணனுக்கு பத்து தலை...இதை பத்து டைப்பான கேரக்டர்னு சொல்லலாம்...நம்ம மணி, இந்த சொல்லலாம்கிறதை கெட்டியா பிடிச்சிக்கிட்டு ஒரு பத்து பேரை வச்சி அவன் இப்படி, அவன் அப்படின்னு சொல்ல வச்சிட்டாரு...அடங்கொய்யால‌..இந்த வெண்ணைக்கு எதுக்குய்யா டைரக்டரு?? ராவணன் விக்ரம் அடிக்கடி பக் பக் பக் பக்னு சவுண்ட் விடறார்....நான் பேசும் போது அடிக்கடி ஃபக் ஃபக்னு சொல்வேன்....சென்சார்ல கட் பண்ணிடுவாங்கன்னு அதை பக் பக் ஆக்கிட்டாங்களா இல்லை ஆஸ்கர் வாங்குறதுக்காக ஆலிவுட்டு தரமான்னு தெரியல........

அப்புறம் ராமாயணம்னா அதுல முக்கியமா அனுமன் வந்தாகணும்..(வராட்டி ராமனுக்கு அல்லக்கை வேலை பாக்க‌ ஆள் லேதன்டி..)...அதனால கார்த்திக் வர்றாரு..இங்க தான் மணி சாரோட க்ரியேட்டிவிட்டி டாப் கியர்ல பிக்கப் ஆவுது..எப்பிடி வர்றாருன்னா இருட்ல கொரங்கு மாதிரி படுத்துருக்கார்...அப்புறம் மரத்துக்கு மரம் ஜம்பிங் பண்றார்...ஒரு சீன்ல ஐஸ்வர்யா ராயோட புருஷனா வர்ற ப்ரிதிவிராஜூக்கும் ராவணனுக்கும் நடுவுல தூது போறார்...(அந்த சீன்ல கார்த்திக்குக்கு வால் இல்லைங்கிறதுனால கால்ல தீ வைப்பாங்கன்னு நான் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்...நல்ல வேளை இல்ல!)

ஐஸ்வர்யா ராயை புக் பண்ணும் போது நீங்க இந்த படத்துக்கு சும்மா வெளம்பரம் தான், ஒண்ணும் நடிக்க வேணாம்னு சொல்லியே புக் பண்ணிருப்பாங்க போலருக்கு....ஒரே ஒரு சீனை தவிர வேற எங்கயும் நடிக்கலை....தலைவரு கூட ஃபோட்டோ எடுக்கும் போது நம்ம அல்லக்கையும் வந்து தலையை நீட்டறா மாதிரி நானும் இருக்கேன் ஃப்ரேம்லன்னு வந்து கூட கூட நிக்கிறாங்க....பெட்ரூம்ல பரதநாட்டியம் ஆடறாங்க....திடிர்னு புருஷன் பேரை சொல்லி நீங்க எங்க இருக்கீங்கன்னு கத்துறாங்க....அம்மணி மலையேறுனாலும் , ஆத்துல நனனஞ்சாலும் , வெயில்ல காஞ்சாலும் ....கடல்ல போற கப்பலுக்கு அடிச்ச பெயிண்ட் மாதிரி அவங்க மேக்கப்பு...ம்ம்ம்...ரொம்ப கெட்டி..என்னா ஆனாலும் சரி...ஒரு இஞ்ச்சு கூட கலையறதில்லை....அவங்களை சொல்லியும் தப்பில்லை...வெளம்பரம்னா பொண்ணுங்களை அழகா காமிக்கணும்னு ஒலக விதி...அதைப் பார்க்கணும்னு என்னோட விதி..ஒங்க விதி..தலைவிதி...என்ன ஒண்ணு, அம்மணிக்கு இப்பிடி செலவு பண்ணி சும்மா வர வைக்கிறதுக்கு பதிலா அந்த கேரக்டரை க்ராபிக்ஸ் செஞ்சிருக்கலாம்...செலவும் மிச்சம்..இன்னும் கொஞ்சம் நல்லாவும் நடிச்சிருக்கும்..

"ரெண்டு பழம் வாங்கச் சொன்னேன்..ஒண்ணு இங்கருக்கு...இன்னொன்னு எங்கடா....அதான்னே இது" வாழைப்பழக் காமெடி போல மண்ணைத் தோண்டி தின்பாயா படத்தில் இல்லாத இசையை காட்டி ஏமாற்றிய ஏ.ஆர்.ரெஹ்மான், இந்த படத்திற்கு "உசுரே போகுதே உசுரே போகுதே" ரேஞ்சில் இசை போட்டால் தில்லு தொரை மணியோ மசுரே போகுதே மசுரே போகுதே ரேஞ்சில் மட்டமாக படம் பிடித்து ஓட்டை சாக்கடையை அடைக்கும் அழுக்கு துணியைப் போல அந்த பாட்டை சொருகி வெச்சிருக்காரு......சிச்சுவேஷன் தெரியாம சாங்கை திணிக்கிறது என்ன டைரக்ஷனோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கய்யா.....

தில்லு தொரை தான் இப்படி செத்த நாயை ரவுண்டு கட்டி அடிக்கிறாருன்னா அவரு சம்சாரம் சுகாசினி சும்மா சொள்ட்டி சொள்ட்டி அடிக்கிறாங்க.....ராவணன் மாதிரி ஒரு கேரக்டருக்கு கருணாநிதியால கூட இவ்ளோ மொன்னையா வசனம் எழுத முடியாது...அவ்ளோ மொன்னையா இருக்கு...வர்ற கேரக்டரெல்லாம் லே, வே, டேன்னு தின்னவேலி தமிழ் பேசறாங்க.....திடீர்னு தஞ்சாவூர் திருச்சி தமிழுக்கு மாறி "நீங்க வந்துட்டீங்க..நான் சஞ்சலப்பட்டேன்" அப்படின்னு தட்டையா சுத்த தமிழ்ல சுத்தி விடறாங்க...

சரி நாய் தான் செத்துப் போச்சி...நம்ம தில்லு தொரை ராமனை வில்லனா காமிச்சாட்டாரு, ராவணன் மேல சீதைக்கு லவ்வு வர்றா மாதிரி காமிச்சாட்டாருன்னு ராமாயணத்துல வண்ணார் சொன்னா மாதிரி ஊருக்குள்ள அரசல் பொரசலா ஒரு பேச்சு...ஆஹா...நம்ம மணியண்ணன் மணியா ஒரு விஷயம் சொல்லிட்டாரு போலன்னு நானும் கிளைமாக்ஸ் வரையிலும் பார்த்தேன்...அது இன்னான்னா, ராமன் ஒரு சந்தேக பேர்வழி சைக்கோன்னு ஒரு புகார் இருக்கு...அப்படில்லாம் இல்ல, ராவணனை பிடிக்க சந்தேகப் பேர்வழி மாதிரி நடிக்கிறான், மத்தபடி அவனுக்கு சந்தேகமெல்லாம் இல்ல‌ அப்படிங்கிறா மாதிரி தான் வருது... அதே மாதிரி கடைசி வரைக்கும் சீதைக்கு ராவணன் மேல லவ் வர்றா மாதிரில்லாம் எதுவும் இல்ல...நம்ம புருஷன்கிட்ட என்ன சொன்னான்னு அவங்களுக்கு டவுட்டு...அதைக் க்ளியர் பண்ண தான் போறாங்க...லவ்வு இருந்தா அங்க போயி எதுக்கு புருஷன் சொன்னதை பத்தியே பேசணும்?? என்னங்கய்யா உங்க லாஜிக்கு??

இப்ப பார்க்கலாமா வேண்டாமான்னு கேக்குறவங்களுக்கு....கண்டிப்பா ஒரு தடவை பார்க்கலாம்...விக்ரம் பின்னிருக்கார்...படத்துல அவரை பார்க்கும் போது எனக்கு க்ளாடியேட்டர் ரஸ்ஸல் க்ரோ, ஜாக் நிக்கல்ஸன், ராபர்ட் டி நீரோன்னு ஞாபகம் வந்தது...பிரபு, ப்ரியா மணி, ப்ரித்வி ராஜ், வையாபுரி, ரெண்டே சீனுக்கு ஒரு ஓரத்தில வந்தாலும் ரஞ்சிதா அப்படின்னு நடிச்சவங்க எல்லாம் சிக்சர் அடிக்கிறாங்க...ரஹ்மான் ம்யூசிக், சந்தோஷ் சிவன் , மணிகண்டனின் கேமரான்னு எல்லா விஷயமும் பாசிட்டிவ்வா இருக்கு..

பெரிய நெகட்டிவ் மணி ரத்னம், சுகாசினி அப்புறம் ஐஸ்வர்யா ராய்.

இதிகாச ராவணனுக்கு பத்து தலை....

மணிரத்னத்தின் ராவணன்....முண்டம்!

==============================

Wednesday 9 June 2010

A quick note

As Vinavu has changed the content of the original post, I believe I am obliged to reciprocate that good deed.

As of June 08 2010, Vinavu has given the following statement.
நர்சிம் விவகாரத்தில் சந்தனமுல்லை தெளிவாக தன் நிலையை விளக்கிவிட்டார். இது தொடர்பாக வினவில் வெளிவந்த கட்டுரை பல உறுதிப்படுத்தல்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டாலும் சில விசயங்களுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வைக்க இயலாத சூழலில் பதிவுலகம் இருக்கிறது. இந்த நிலையை பதிவர்களும், வாசகர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே 'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!

True to their word, they have removed certain names and changed the words which inflicted so many scars on many unconnected people. Of course, they have removed the names, which I appreciate, but by no means it is going to compensate or solve the unnecessary complications it has created for those bloggers. And the mental pressure these bloggers endured during the last 5-6 days is totally uncalled for, and no words are ever going to soothe the scars. It's too big a price for being a blogger. Nobody should be forced to pay such a price, but they were.

With great power comes great responsibility. Internet, in particular blogs are a free playing field for everyone, but as I understand it, even greatest freedom has its own and very clear boundaries. The boundary lines are so simple and are drawn in bright red, but people are so adamant on not to see it. Poking nose into somebody's personal matter is a big no no, and pulling somebody's name in a very sensitive issue without their consent is something no decent people will do. For an instance, as my blog is in public, anybody who reads the post got the right to comment and criticise. But by no means, I repeat, by no means, anybody got any right to comment on my personal life. Simply, its out of question. And that's the boundary line. My real name, where I live, what I do for living, what caste I belong to (which is none if I have to say it), what religion I follow (which is atheism) should not matter to anybody reading my posts. But I understand, the lines are NOT really that clear in Tamil blog world.

I would like to thank all those people who phoned and emailed Vinavu. Thank you friends. This is what I had been shouting for ever since the first Vinavu post, written by (or partly written by) Mr. Sivaraman. I questioned about this in Sivaraman's blog itself, and Vinavu post also, but did not get any response from any of the parties. I did not have any personal agenda, but some of those unconnected people are my friends, and it would be shame on me if I just keep watching my innocent friends getting mauled for no reason. I know for sure, they are neither the reason nor anything to do with the core issue. It's good to see, at last (even though its extremely late by any standard) that they have relented. If only they have understood this right from the beginning so many unconnected people would not have been hurt, and the core issue would not have been diluted.

As of me, I am just an outsider like you, dont really know anything more than you do but what has happened over the last few days, does not inspire any confidence on anything related to blogging or bloggers. When I started blogging, by mistake I thought this would be a place to share thoughts, find some different views, and read some good literature...I was excited, b'cos as somebody living outside TN, its so interesting to share thoughts in Tamil. But I got to say, I have been proven wrong, wrong and wrong again. I keep trying to understand, but I keep failing. As far as I know, nobody ever made a million out of blogging. Nobody ever become a literary champion. Nobody ever made any significant change in the society. Even then, there are hidden agendas, back stabbing, name calling...all these are for what?? To what end? All these are for nothing? May be, there is something, which I dont know about. I admit my failure. As of current mood, I may or may not continue as a blogger. I am not sure, but I hope to keep visiting blogs as time permits.

Thats all I wanted to say. Thank you for reading.

(Sorry for using English..Just not in a mood to write anything at all, but felt I am obliged to say something because of my previous posts. I may remove them, if I feel to do so).

Saturday 5 June 2010

வினவு புகழ் சிவராமன் மன்னிப்பு கேட்பாரா?

வாய்ச் சொல்லில் வீரடி கிளியே
வஞ்சனைகள் செய்வாரடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே!

இது வேறு யாருக்கு பொருந்துகிறதோ நேற்று வரை நான் பெரிய மதிப்பு வைத்திருந்த அன்பின்(!) தோழர் சிவராமனுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

செய்த தவறுக்கு முகத்திற்கு முன் வந்து நெஞ்சில் வாள் பாய்ச்சுபவன் எதிரி. தவறை சுட்டிக் காட்டி கண்டிப்பவன் நண்பன். எதுவும் செய்யாமல் முதுகில் குத்துபவன்??? என்ன பெயர்?? முதுகில் குத்துபவர்களுக்கு என்ன பெயர்?? உலக இலக்கியங்களிலும், உலகப்படங்களிலும் சரி, உள்ளூர் இலக்கியங்களிலும் உள்ளூர் படங்களிலும் சரி...ஒரே பெயர் தான்...துரோகி...

எனக்கு நட்பு பெரிதல்ல கொள்கை தான் பெரிது..அதற்காக எந்த நட்பையும் இழக்க நான் தயாராக இருக்கிறேன். சொல்கிறார் அன்புக்குரிய தோழர்....நட்பா கொள்கையா என்று வந்தால் கொள்கை முக்கியம் தான்...ஆனால், கொள்கை வீரர்கள் யாரும் முதுகில் வாள்பாய்ச்சுவதில்லை தோழரே...அப்படி பாய்ச்சுபவன் பெயர் வீரனல்ல...வேறு ஒன்று!

வினவை ஆதரிப்போம் வாருங்கள்...அழைத்தார் அண்ணன்...அதிலே சொல்கிறார். "ஒருவேளை நான் எழுதியிருந்தாலும் அப்படித்தான் எழுதியிருப்பேன். ஏனெனில் வரிக்கு வரி வினவுத் தோழர்களின் இடுகையை ஆதரிக்கிறேன்.". ..அண்ணனின் நேர்மைத் திறம் அந்த "ஒருவேளை" என்ற ஒற்றை வார்த்தையில் தான் இருக்கிறது...அண்ணன் சொல்ல மறந்தது அல்லது மறைத்தது அந்த இடுகையை எழுதிக் கொடுத்ததே அவர் தான். சுகுணா திவாகர் (நன்றி சுகுணா) வந்து முகத்திரைகளை கிழித்த பின், இவரும் உலகின் ஒப்பற்ற நாட்டாமை வினவு(களும்) வருகிறார்கள்...ஆமாம், அவர் எழுதிக் கொடுத்ததும் இருக்கிறது...ஆனால், அது மட்டுமே இல்லை!

இந்த வெண்ணை வெட்டி விளக்கத்தை மணிகண்டன் அன்றைக்கு வினவு இடுகையில் கேட்கும் போதே சொல்லியிருக்கலாமே?? அல்லது பின் குறிப்பு சொன்ன கொள்கை வீரர் சிவராமன் அண்ணனாவது சொல்லியிருக்கலாமே??

இந்த வீரர் நர்சிம்மை (மறுபடியும் உங்கள் பெயரை இழுப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் நர்சிம். உங்கள் மீது எனக்கு எந்த வன்மமும் இல்லை, உங்களை வைத்து நான் பிழைப்பு நடத்தவும் முயற்சிக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி உங்கள் பெயரை கொண்டு வரத் தான் வேண்டியிருக்கிறது)...எங்கே விட்டேன்...ஆம், கொள்கை வீரர் அண்ணன் வீர வினவு புகழ் சிவராமன் நர்சிம்மை கண்டித்து அந்த இடுகையை தனது தளத்திலே எழுதியிருந்தால் இவரை மிகவும் மதிக்கலாம்...கொள்கைக்க்காக நட்பை துறந்த வீர நாட்டாமை என...ஆனால் சுகுணா திவாகர் சொல்லும் வரை வாய் திறக்கவில்லையே இவரும் இவரது நீதிமான் வினவு தோழர்களும்.

அடுத்து ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் உலக நீதித் தோழர், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர் சொல்கிறார்.

" “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன்? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது."

உலகப்படம் பார்த்து உலக இலக்கியம் படித்து நுண்ணர்வை வளர்த்துக் கொண்ட கொள்கை வீர கோமானே...நற்குடியில் பிறந்தவர்கள் பர்தா அணிவார்கள் என்று சொல்லி உலகில் பர்தா அணியாத சுமார் இருநூறு கோடிப் பெண்கள் நாறக்குடியில் பிறந்தவர்கள், கன்னமிடும் கள்வருக்கு அன்னமிடும் பெண்டீரை தாமாக தாரை வார்க்கும் கூட்டம், திறந்து வைத்த பண்டங்கள் என்று சொன்ன பதிவை எதிர்த்து நீங்கள் என்ன எதிர் வினை புரிந்தீர்கள்?? உலகப்படம் பார்த்து ஆஹா நமக்கு எவ்ளோ புரிகிறது என்று சுயமோகத்தில் மூழ்கி இருந்தீர்களா?... ஒன்றும் சொன்னதாகவே தெரியவில்லையே?? ஆமாம், நாங்கள் கலகலப்ரியாவுக்கு கம்பு தூக்கிக் கொடுத்தோம், ஆனால், நீங்கள் யாருக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருந்தீர்கள்?? இன்றைகு துள்ளிக் குதிக்கும் நியாயவான்கள் சிவராமன் அவர்களும் வினவுகளும் அன்றைக்கு எழுதுகிறார்கள்.


"ஆக முசுலீம் பெண்பதிவர் சுமஜ்லா தனது சுதந்திரம் பாதுகாப்பு கருதி இந்த பர்தா சங்கதியை பதிவு செய்திருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் நாளை ஒரு முசுலீம் பெரிசு ” காலம் கெட்டுக்கிடக்கு, நம்ம சுமஜ்லா பொண்ணு ஏதோ இன்டர்நெட்டுக்காரனுக கூட்டத்துக்கு போய்ட்டு வந்துச்சாமே?” என்று வாங்கிவிட்டால் என்ன செய்வது?".

அதாவது, பர்தா அணிந்தால் நற்குடி மற்றதெல்லாம் நாறக்குடி என்று எழுதினால் அகில உலக ஆணாதிக்க, பார்பனீய எதிர்ப்பு வாதிகளான அண்ணன் சிவரமானுக்கும் வினவுக்கும் அது சுகந்தம்...சொக்க தங்கம்...


இப்படி புனுகு பூசி எழுதியும், மவுனம் சாதித்தும் தங்கள் போலி முற்போக்க்குத் தனத்தை அவர்களுக்கே ஐயம் திரிபற நிறுவிக் கொண்ட சிவராமன் தான் இன்றைக்கு கேட்கிறார்... ரவுத்திரம் பழகும் மரண மொக்கை இந்து பதிவர் வீராங்கனை கலகலப்ரியா இதற்கு ஏன் ரவுத்திரம் கொள்ளவில்லை?? (என்ன எழுதினாலும் கலகலப்ரியா சொந்தமாக சொந்தப் பெயரில் எழுதுகிறார்...கலகலப்ரியா எழுதுவது மரண மொக்கை என்றால் ஒண்ணாங்கிளாஸ் பையன் போல எங்கோ படித்ததை வாந்தியெடுப்பதற்கு என்ன பெயர்? ஒளக எள‌க்கியத்தை அறிமுகப்படுத்துதல்??)

அட உலக அறிவாளிகளே...எத்தனை உலக இலக்கியம் படித்தும் உலகப்படம் பார்த்தும் உங்கள் அடிப்படை அறிவு இந்த அளவுக்குத் தான் இருக்கிறது....யாராவது மயிலாப்பூருக்கு வழி கேட்டால் இவன் எந்த ஜாதி, வடகலையா தென்கலையா என்று யோசிக்கும் அளவுக்கு துறு ஏறிப் போயிருக்கும் உங்கள் ஜாதி வெறி மூளைகளில் கடைசி வரை ஒன்று ஏறவேயில்லை...பர்தா நற்குடி பதிவு எந்த இரண்டு தனிப்பட்ட பதிவர்களுக்கிடையில் நடந்த பிரச்சினை அல்ல...பொதுப்படையாக அடிமைத் தனத்தை நிறுவ வைக்கப்பட்ட கூற்று. ஆனால், நர்சிம்மின் புனைவு பிரச்சினையில் நீண்ட காலமாக இரு பதிவர்களுக்கிடையில் நடந்து வரும் பிரச்சினையின் வெளிப்பாடு என்ற விதமாக இருக்கிறது...பொதுவாக எதுவும் தவறாக எழுதாத ஒருவர் (ஆமாம், நீங்கள் எத்தனை தான் பிரச்சாரம் செய்தாலும் இதற்கு முன்பு நர்சிம் இப்படி எழுதியதில்லை!) இப்படி திடீரென்று மயிரே போச்சி என்ற ரீதியில் எழுதினால் என்ன பிரச்சினை...ரெண்டு பக்கமும் தெரியாம எப்படி கருத்து சொல்வது என்ற நினைப்பிலேயெ பலரும் பெரும்பாலும் மவுனமாக இருக்கிறார்கள்...

ஆனால், பர்தா நற்குடி விஷயத்தில் ஆழ்ந்த மவுனம் சாதித்து தன் முற்போக்கை நிரூபித்த அண்ணன் சிவராமனுக்கு இது தான் கொண்டாட்டமாக போய்விட்டது. ஜாதிக்கு புனுகு பூசும் பழமைபேசி, கோமாளி குசும்பன், இந்து வீராங்கனை பதிவர் கலகலப்ரியா, லக்கி லுக்குக்கு உரிமை இல்லை என்றெல்லாம் பூந்து விளையாடி இருக்கிறார்....

பழமைபேசி அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி எந்த விஷயத்திலும் அடபுடா பொறுக்கி தாயோளி என்று பேசியதும் இல்லை...எழுதியதும் இல்லை. எனக்கே அவருடன் தீவிர கருத்து வேறுபாடு உண்டு...அது அவருக்குமே தெரியும்...ஆனாலும் இன்றைக்கும் அவர் தரம் தாழ்ந்து போவதுமில்லை...எனது ஜாதி என்ன என்று ஆராய்ச்சி செய்து XYZ ஜாதிக்காரனின் பொறுக்கித் தனம் என்று இடுகை இடுவதுமில்லை..

குசும்பனை பொறுத்தவரை என்றைக்குமே அவரது நிலைப்பாடு ஒன்றாகத் தான் இருக்கிறது. முடிந்தவரை பிரச்சினை தீர்க்க நினைப்பது தான் அவரது எண்ணமாக இருக்கிறதே தவிர என்றைக்கும் அவன் எந்த ஜாதி, இவன் எந்த ஜாதி என்று கண்டுபிடித்து அதை ஊதி விட்டு தனது அஜெண்டாவை நிறைவேற்றும் எண்ணம் அவருக்கு இல்லை.

ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டும் கட்சி அலுவலகத்தில் கதை பேசியும் "ஒளக இலக்கியம்" வளர்க்கும் உங்களை விட, மொட்டை மாடியில் ஒளகப்படம் பார்த்து அய்யோ எப்படில்லாம் கஷ்டப்படறாங்க...அதை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டான் என்று சிலாகிக்கும் உங்களை விட..வன்புணர்ச்சி வன்புணர்ச்சி என்று வரிக்கு வரி சொல்லிக் கொண்டே ஜேவிபி பற்றி வாய் திறக்காத வினவுகளை விட‌...கலகலப்ரியாவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும், உலக இனங்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டே குடும்பத்துடன் கற்பழிப்பு, கழுத்தில் டயரை மாட்டி எரித்துக் கொல்லுதல் என்று இனவெறி பிடித்த ஜம்னா விமுக்தி பெரமுனா(ஜேவிபி) என்ற பொறுக்கி கம்யூனிஸ்ட்டுகளாலும் ஜாதி மத இனவெறியர்களாலும் சொந்த மண்ணிலிருந்தே துரத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அதன் துயரமும் தெரியும்....அதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எல்லாராது வாழ்க்கையும் எழுத முடியாத வகையில் அவலமானதும் தெரியும். .. அவர் ஒன்றும் உங்களைப் போல உலகப்படம் பார்த்து துயரத்தை நிழலில் பார்த்தவரல்ல...ரத்தமும் சதையுமாக நேரில் பார்த்தவர்...பாதிக்கப்பட்டவர்.... இன்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரிலேயே நின்று போராடிக் கொண்டு தான் இருக்கிறார்......போலித் தோழர் சிவராமன், வினவு...நேரடியாகவே சொல்கிறேன்..உங்கள் எல்லாரையும் விட, ஒரு படி என்ன ஆயிரம் படி அவர் மேலாகத் தான் இருக்கிறார்.

எத்தனை நாள் வன்மமோ...தெரியவில்லை...கிடைத்த கேப்பில் நர்சிம்மை ஆதரிக்கும் லக்கி லுக் என்ற யுவகிருஷ்ணா....லக்கி லுக்குக்கு இனி எதையும் கேட்க எந்த தகுதியும் இல்லை என்று கொள்கை வீரர் சிவராமன் போட்டுத் தாக்கியிருக்கிறார். நர்சிம்மின் அந்த இடுகையிலேயே அந்த இடுகையில் ஒப்புதல் இல்லை என்று தான் அவர் சொல்லியிருக்கிறார். நற்குடி பர்தா பிரச்சினையிலும் கேபிள் சங்கரின் இடுகைக்கான பின்னூட்டத்தில் தான் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கும் இடுகை போடவில்லை...இதற்கும் இடுகை போடவில்லை....இரண்டு பிரச்சினையிலுமெ அவரது நிலைப்பாடு ஒன்றாகத் தான் இருக்கிறது. இடுகை போட்டால் தனது நிலை இது தான் என்று தெளிவாகவே "தனது தளத்தில்" இடுகை போடுவார். எல்லாரும் கருணாநிதியை கும்மிய போது கூட அவர் தனது நிலை என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். ஆனால், கொள்கைக்காக நட்பை துறப்பதாக சொல்லும் நீங்கள் சிவராமன்?? (என்ன மயிருக்குடா என்னை இழுக்கறிங்க என்று நீங்கள் கேட்டாலும்...மன்னிக்க லக்கிலுக்...சில பிம்பங்களை உடைக்க உங்கள் எழுத்துக்களின் அடிப்படையில் உங்களை இழுக்க வேண்டியிருக்கிறது)

போகிற போக்கில் செக்ஸ் டார்ச்சர் செய்தவர்கள், டார்ச்சருக்கு உள்ளானவர்கள் என்று சில பேருடைய பெயர்களையும் உதிர்த்திருக்கிறீர்கள்....என் பெயரை என்ன ஆதாரத்துடன் எழுதின என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.(மன்னிக்க நண்பரே...உங்கள் பெயரை எழுதினால் அவர்கள் செய்த தவறை நானும் செய்வதாகி விடும்...ஆனால், உங்கள் கேள்வியை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்)...இன்றைக்கு வரைக்கும் சிவராமனும் சரி, அவரது தோழர்களும் சரி அதற்கு பதில் சொல்லவில்லை....எந்த ஒரு பொறுப்பும் இன்றி சில பெண் பதிவர்களின் பெயரையும் எழுதியிருக்கிறீர்கள்.....உங்களின் கிசுகிசு எழுதும் வெறியை வெளிப்படுத்தியிருக்கிறீர்களே தவிர, அதனால் அவர்களின்,முக்கியமாக அந்த பெண் பதிவர்களின் குடும்ப வாழ்க்கையில் எத்தனை பிரச்சினை வரும் என்று யோசித்தீர்களா உலக அறிவாளி அவர்களே?? உள்ளூர் சமூகமே தெரியாமல் உலக இலக்கியம் பேசுவது கோழி முட்டையை பார்க்காதவன் டயனோஸர் முட்டையை கண்டுபிடித்ததாக சொல்வது போல இருக்கிறது...எவன் என்ன ஆனால் என்ன யார் குடி கெட்டால் என்ன எனக்கு வியாபாரம் நடந்தா சரி என்று எழுதுவதற்கு ஒரு பெயர் இருக்கிறது..அதற்கு பெயர் மஞ்சள் பத்திரிக்கை...

இந்த பிரச்சினையில் முதலில் ஜாதியை இழுத்தவர் தோழர் காமராஜ் (நர்சிம்மின் எழுத்தை கண்டிப்பதே பதிவின் அடிப்படை என்ற புரிதலில் அவரது இடுகைக்கு நான் ஓட்டும் போட்டிருக்கிறேன்)...இவர்கள் எல்லாரும் சொல்வது, "அவ பொறப்பு அப்படி மாப்ள" "நம்ம வளப்பு வேற" என்ற வார்த்தையாடலில் நர்சிம்மின் பார்ப்பன வெறி தெறிக்கிறதாம். (இந்த வார்த்தைகளை வைத்து தான் கொள்கைக் கோமான் சிவராமன் நர்சிம்மை பார்ப்பன வெறியன் என்று கண்டுபிடிக்கிறார்)...

ஆனால்...உலக இலக்கியம் படித்தும் "ஒளகப்படம்" பார்த்தும் அறிவை வளர்க்கும் பெருமதிப்புக்குரிய அறிவுஜீவிகளே...உலகப்படம் இருக்கட்டும்...உள்ளூர் சங்கதி தெரியுமா?? என்றைக்காவது மதுரையின் தெருக்களில் சட்டையின் கையை ஏற்றி விட்டுக் கொண்டு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையிட்டு இருக்கிறீர்களா? உருண்டு புரண்டு இருக்கிறீர்களா?? அதில் வந்து விழும் வார்த்தைகளை கவனித்து இருக்கிறீர்களா?? ஆனால்...நான் சண்டை போட்டிருக்கிறேன்.....அரிவாளால் வெட்டு வாங்கிய காயம் இன்றைக்கும் என் இடது காலில் இருக்கிறது....ஒன் பொறப்பே இப்பிடித் தானாடா என்று கேட்கப்பட்டிருக்கிறேன்...அதற்கு அர்த்தம் ஒங்க ஜாதியே இப்பிடித் தான்டா என்றில்லை..தாயளி...நீ பொறந்ததில இருந்தே இப்பிடித் தானாடா என்று தான்! நம்ம வளப்பு அப்பிடியில்ல மாப்ள என்று சொல்வது...பெரும்பாலும் வகையில்லாமலோ துணிவில்லாமலோ சரிக்கு சரியாக சண்டை பிடிக்க விருப்பமில்லாமலோ விலகிச் சொல்பவர்கள் சொல்வது...சந்தேகம் இருந்தால் அரசரடியிலோ அனுப்பானாடியிலோ பழங்காநத்தத்திலோ திருப்பரங்குன்றத்திலோ திருமங்கலத்திலோ வண்டியூரிலோ வாடிப்பட்டியிலோ அண்ணா நகரிலோ போய் சண்டைப் போட்டு பாருங்கள் ...என்ன அர்த்தத்தில் அந்த வார்த்தைகள் பேசப்படுகிறது என்று...உலக இலக்கியம் என்ற பெயரில் கட்டுரை மட்டுமே எழுதும் சிவராமனை விட, நர்சிம் நன்றாகவே நேட்டிவிட்டி எழுதுவார்...தேவையானால் அவரது "வெத்தலைப் பெட்டி" படியுங்கள்!

இன்றைக்கு நர்சிம் தான் செய்தது தவறு தான், மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி விட்டார் (அதை ஏற்கிறார்களா இல்லையா என்பது பாதிக்கப்பட்ட பதிவரின் முழு உரிமை...பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அவர் சொல்வது தான் முடிவாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு)..

ஆனால் தேவையின்றி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் குசும்பன், லக்கிலுக், கலகலப்ரியா,விதூஷ், பழமைபேசி, தண்டோரா, குசும்பன், செக்ஸ் டார்ச்சர் செய்த பதிவர்கள், செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான பதிவர்கள் ((நேம் டிராப்பிங் சிவராமன்?) என்று தன் வன்மத்தை தீர்த்துக் கொண்ட் சிவராமனும் வினவு கும்பலும் (ஆமாம், அதில் எழுதுபவர்கள் ஒருவர் என்று தெரியவில்லை) மன்னிப்பு கேட்பார்களா?? அதற்கான அறமும் துணிவும் நேர்மையும் அவர்களிடம் இருக்கிறதா??

தனிப்பட்ட சந்தேகம் 1: தோழர் சிவராமன் தான் வினவு என்ற பெயரில் எழுதுகிறாரா இல்லை வினவு தான் சிவராமன் என்ற பெயரில் எழுதுகிறாரா?? இல்லை இரண்டு பேரும் வேறு வேறு என்றால், சிவராமன் எழுதி வினவு தளத்தில் வேறு பெயரில் இதுவரை எத்தனை இடுகைகள் வந்திருக்கின்றன??

தனிப்பட்ட சந்தேகம் 2: தாம்ப்ராஸ் சங்கத்தில் நர்சிம்மின் தந்தை உயர் பொறுப்பில் இருக்கிறார்...அதனால் நர்சிம்மின் சிந்தனையே பார்ப்பன சிந்தனை என்று சொல்லும் சிவராமன் அவர்கள் ஆர்க்குட்டில் வன்னிய பேரவையில் சேர்பவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்?? அமெரிக்காக் காரன் கண்டுபிடித்த டெக்னாலஜியின் அடிப்படையில் அமைந்த ஆர்க்குட் போன்ற தளங்களில் கூட வன்னிய பேரவை, நாடார் பேரவை, செட்டியார் சங்கம், கவுண்டர் பேரவை என்ற் குழு அமைப்பதை குறித்து வினவு என்ன சொல்கிறது?? ஊருக்கு இளைச்சவன் ஆண்டி...குனிய குனிய கும்மு என்ற ரீதியில் பாப்பானீயம்??

பி.கு 1: முந்திய இடுகையில் நர்சிம்முக்கு கண்டனம்...இந்த இடுகையில் என்ன வக்காலத்து....நர்சிம் எதுனா ஓசி குவாட்டர் வாங்கி குடுத்தாரா என்று யோசிப்பவர்கள் இரண்டு இடுகையையும் மீண்டும் படிக்கவும்...எவரிடமும் வாங்கிக் குடிக்கும் தூரத்திலோ நிலையிலோ நான் இல்லை...நான் குடிக்கும் அளவுக்கு யாராலும் வாங்கிக் கொடுக்கவும் முடியாது!

பி.கு 2: இந்த இடுகையில் எனது சொந்த காரணங்களும் இருக்கிறது...எனது பதிவின் தலைப்பில் இருக்கும் In the end, we remember not the words of our enemies, but the silence of our friends....என்ற வரிகளை சிலர் கவனித்து இருக்கலாம்...அது இன்றைக்கு இந்த இடுகைக்காக எழுதப்பட்ட வரிகளல்ல...நான் பதிவு எழுத ஆரம்பித்த நாளிலிருந்தே அது தான் இருக்கிறது....நண்பர்கள் என்ற பெயரில் துரோகிகள் பாய்ச்சிய வாள்கள் இன்றைக்கும் என் முதுகில் இருக்கிறது.....எட்டு வருடமாக இல்லாது நேற்றிலிருந்து அதில் மீண்டும் ரத்தம் கசிய ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இந்த இடுகைக்கு ஒரு காரணம்.

பின் குறிப்பு 3: இதில் வினவு, சிவராமன் தவிர்த்து பெயர் எழுதப்பட்ட மற்ற பதிவர்கள் (குசும்பன், லக்கி லுக், பழமைபேசி, கலகலப்ரியா,விதூஷ், நர்சிம், தண்டோரா) எல்லாரிடத்திலும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...உங்களை இழுக்கும் நோக்கமில்லை...ஆனால், உங்கள் பெயர்கள் கொள்கை வீரன் சிவராமனால் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி எடுத்தாளப்பட்டிருக்கிறது. மன்னிப்பீர்களாக...

விடுபட்டு விட்ட முக்கியமான ஒன்று: இந்த விஷயத்தின் உண்மைத் தமிழனின் இடுகையை முற்றிலுமாக ஆதரிக்கிறேன்.