Sunday 25 July 2010

ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..

சாருவின் மனங்கொத்தி பறவை: ஆழ்துளை கிணறு உள்ளே விழும் குழந்தை தீயணைப்பு படை மீட்பு, துளையை மூடாத பொறுப்பில்லாத தொழிலாளிகள். இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். சாநிக்கு எழுதுவதற்கு சுய சொறிதல் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை. மனம் கொத்தி பறவை. மண்ணாங்கட்டி பறவை என்று வைத்திருக்கலாம். ஆனந்த விகடன் ஏற்கனவே பின்பக்கம் துடைக்கு டிஷ்யூ பேப்பர் அளவு தரம். இப்பொழுது துடைத்த டிஷ்யூ பேப்பர் போல இருக்கிறது.

சுய சொறிதலை விற்றே ஒருவன் எழுத்தாளனாகும் நிலை கேடு கெட்ட தமிழ் சூழலில் தான் இருக்கிறது. நேபாள மொழியிலோ இல்லை மணிப்புரி மொழியிலோ இந்த அவல நிலை இல்லவே இல்லை. இப்படி சொறிபவன எழுத்தாளன் என்றால் அஸ்ஸாமில் செருப்பால் அடிப்பார்கள். ஆனால் தமிழில் பத்திரிக்கையில் எழுத வைக்கிறார்கள். பின்னர் எப்படி ஐயா தமிழர்கள் படிக்க வருவார்கள்? அதனால் தான் கருணாநிதி இலக்கியவாதியாகவும் முத்தமிழ் அறிஞராகவும் ஆகிவிட்டார்.

அறிஞர் என்றதும் வேறு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. திராவிட இயக்கத்தாருக்கு எதுகை மோனை மீது என்றுமே தீராத தாகம் உண்டு. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று எகனை மொகனையில் முழங்கிய தஞ்சாவூர் தட்சிணாமூர்த்தி பெயரை மாற்றிக் கொண்டு கருணாநிதி ஆனார். கானாவுக்கு கானா...கலைஞர் கருணாநிதி. அப்படின்னா ஆனாவுக்கு ஆனா...அறிஞர் அண்ணா. நெடுஞ்செழியன்? காசா பணமா போட்டுக்க..நானாவுக்கு நானா...நாவலர் நெடுஞ்செழியன்.

லஸ் கார்னரை லூஸ் கார்னர் என்று சொல்ல வேண்டும். சாரு இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஓசியில் அவர் குடிக்க மட்டுமே போவார். ஓசியில் ப்ளாக் கிடைத்தது என்று எழுத ஓடி வந்து விடவில்லை. எழுத வரும் முன் நானூறு வருடம் படித்திருக்கிறார். கூகிள் மேப் வருவதற்கு முன்னரே ஸ்கூல் புக்கில் மேப் பார்த்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிரில் குண்டித் துணி இல்லாமல் அலைந்திருக்கிறார். எல்லாம் படித்து விட்டு அப்புறம் என்னை மாதிரி எவனும் எழுத மாட்டெங்குறான் என்று கடுப்பாகித் தான் எழுத வந்திருக்கிறார். இப்பொழுது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் எழுதுகிறார்.

ஒரு நாளைக்கு இருபத்து நாலு மணி நேரம் தான் இருக்கிறது என்று எனக்கு மீண்டும் மீண்டும் கடிதம் வருகிறது. ஐய்யா நான் பிச்சைக் காரன். விந்து விற்பவன் (என் எழுத்தை சொல்லவில்லை). ஆனால் எழுத்தை விற்க மாட்டேன்...தமிழ் சூழலில் அதை எவனும் வாங்க மாட்டேன் என்கிறான். நான் பிச்சை எடுக்கிறேன். தினமும் ஆறு மணி நேரம் தெருவில் போக வர இருபப்வர்களிடன் பிச்சை எடுக்கிறேன். யாரும் வராவிட்டால் பார் போய் ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன்...இப்படி தான் இந்த முப்பது மணி நேரம்.

தமிழ் வளமான மொழி. ஒன்று சொன்னால் சரியாக வேறு அர்த்தம் வந்து தொலைக்கும். முந்திய பத்தியை பாருங்கள். உத்தம தமிழ் எழுத்தாளன் என்னை பத்தி எழுத்தாளன் என்கிறான். அவன் குற்றாலத்தில் குளிக்கும் போது அவனை துண்டுடன் பார்த்த ஒரே தமிழ் எழுத்தாளன் நான் தான். நான் இருநூறு வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனை பேர் போந்தேவின் கழுதை படித்தீர்கள்?

என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.

தமிழ் சூழலை குறை சொல்லிக் கொண்டே என்ன மயிருக்கு தமிழில் எழுதற என்று அஞ்சனா கேட்கிறாள். அஞ்சனம் என்றால் கறுப்பு. ஆனால் அஞ்சனா கறுப்பல்ல. செம அழகி. இப்படி அழகான பெண்கள் எனக்கு கடிதம் எழுதுவதாக எனக்கு நானே கடிதம் எழுதுவதை கூட வயிறெரிகிறார்கள். தமிழர்களுக்கு வயித்தெரிச்சல் அதிகம். உத்தம தமிழ் எழுத்தாளன போல என்னால் தமிழ் சினிமாவுக்கு எழுத முடியாது. டேனி பாயலிடமும் ரோஜர் கும்ப்ளேவிடமும் சான்ஸ் கேட்டிருக்கிறேன். மிச்சம் மீதி இருந்தால் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். பிச்சைக்காரனுக்கு பிச்சை போடாதவர்களை பற்றி என்ன சொல்ல? ஸ்டேன்லி குப்ரிக்கிடம் கேட்கலாம். அவர் செத்துப் போய்விட்டதாக சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.

ஏன் இப்படி எல்லாரையும் திட்டிக் கொண்டே இருக்கிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். நான் யாருக்கும் நண்பனில்லை. எனக்கும் யாரும் நண்பனில்லை. தமிழ்நாட்டில் என்னுடன் நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே பயப்படுகிறார்கள். அந்த ஒரு தமிழ் எழுத்தாளனுக்கும் இல்லாத அளவுக்கு எனக்கு நண்பர்கள் அதிகம். அதிலும் பெண் நண்பிகள் அதிகம். நானே உருவாக்கிக் கொள்வதால் அதில் கஞ்சத் தனம் பார்ப்பதே இல்லை.

இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.

இத்தனை தூரம் சொல்லியும் இருநூறு வருடமாக எழுதியும் ரஞ்சனா மாத்ரிதில் இருந்து ஃபோன் செய்து கேட்கிறாள். முட்டாள் தமிழர்கள் மட்டுமே Madrid என்பதை மாட்ரிட் என்று உச்சரிப்பார்கள். அதை மாத்ரித் என்று தான் ஸ்பெயில் சின்ன குழந்தை கூட உச்சரிக்கும். ஸ்பெயின் அழகான மொழி.

நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.

மதிய நேரத்தில் எழுத வேண்டிய விஷயமா இது? இந்த கருமத்திற்கு தான் நான் ஆனந்த விகடன் போன்றவைகளை படிப்பதில்லை. அதை தமிழர்கள் மட்டுமே படிப்பார்கள். நானோ தமிழனே இல்லை என்று ராஜராஜ சோழனிடமே நேரில் போய் அறிவித்தவன்.நான் ஏன் ஆனந்த விகடன் எல்லாம் படிக்க வேண்டும்?

பஸ்ஸில் இப்படி தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தால் வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்.

அதை தானே அய்யா நானும் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருக்கிறேன். சனிப்பிணம் தனியாக போகாது என்று சொல்கிறார்கள். அதை முதலில் சொல்லியது என் அப்பத்தா. இதைச் சொன்னால் நீதான் தமிழன் இல்லையே என்கிறார்கள். அதை விடுங்கள். சனிப் பிணம் தனியாக போகிறதோ இல்லையோ சனிக்கிழமை சாருவை படித்தவன் தனியாக தண்ணியடிக்க போவான். வர்ற கடுப்புக்கு அவனும் பாவம் வேறு என்ன தான் செய்து தொலைவான்? சரி போய்ட்டு வாடா என்று நானும் விட்டு விட்டேன்.

அது என்ன அய்யாங் டொய்ங் என்று கேட்கிறார்கள். அது எப்படி ஓரு ஏழை பிச்சைக்கார ப்ளாக் எழுத்தாளன் என்றால் மட்டும் உங்களால் கேட்க முடிகிறது. இந்த கேள்வியை ஆனந்த விகடனை பார்த்து கேட்டிருக்கிறீர்களா? முதலில் அங்கே போய் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள். டப்ளினில் மீட் பண்ணலாம். ஆனால் இனிமேல் அடிக்கடி இப்படி அய்யாங் டொய்ங் வரலாம். நான் ஒரு குழந்தை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. நாளைக்கு எமினமின் ம்யூஸிக் ஃபெஸ்டிவல் போவதாக ப்ளான் செய்திருக்கிறேன். திறந்தவெளிக் கொண்டாட்டம் தான். திறந்தவெளி என்றால் ஓப்பன் ஆடிட்டோரியம் என்று மட்டுமே தமிழர்களுக்கு புரிகிறது. என்ன செய்ய?

==================================================

Tuesday 13 July 2010

அறிவுஜீவி அண்ணன் சிவராமனுக்கு.....

முக்கிய அறிவிப்பு: எனக்கும் "அன்பின்" அண்ணன் சிவராமன் அவர்களுக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையோ இல்லை வாய்க்கா வரப்பு தகராறோ இல்லை...எனக்கு பாப்லோ நெருதா, பூக்கோ, போர்ஹே, உம்பர்ட்டோ எக்கோ என்று எவரையும் தெரியாது....ஆனால், சாத்தான் வேதம் ஓதுவதை போன்ற ஆதாரமற்ற, போகிற போக்கில் அள்ளி விடும் இடுகைகளை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இடுகை...

நான் கேப்பிடலிஸ்ட் என்பதும், போலி நாட்டாமைகளை எனக்கு பிடிப்பதில்லை என்பதும் மற்றொரு காரணம்.

//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//

போலியோ மருந்து கண்டுபிடிக்கும் முன் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? இப்பொழுது எத்தனை பேருக்கு அந்த நோய் வருகிறது? அப்படியே வந்தாலும் எந்த நாடுகளில் வருகிறது? அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளிலா?

//அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
//

உங்கள் வாதமே உங்கள் முகத்தில் அறைகிறது...உங்கள் வாதப்படி, உலகம் முழுவதும் அம்மை தடுப்பூசி போடப்படுகிறது...ஆனால், அம்மைத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்களா? அப்படியானால், இந்தியாவில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் ஆறு கோடியாக இருக்கலாம்...ஆனால் உண்மை அப்படி இல்லை...இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 110 கோடி...(இல்லை, இந்த எண்ணிக்கையும் பார்ப்பானீய பொய் என்பீர்களா?)

//மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது. //

கம்யூனிஸ நாடுகளால் ஒரு கருமமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக எவன் எதை கண்டுபிடித்தாலும் அய்யோ முதலாளித்துவம் சுரண்டுகிறது என்று பின்புறத்தில் அடித்துக் கொண்டே அதை திருடும் சோவியத் மனப்பான்மை தவிர இந்த வரிகளில் வேறு எதுவும் இல்லை.

உங்களுக்கு ஒரு ஐடியா.... கம்யூனிஸ கருணைக் கடவுள் ஸ்டாலின் பற்றி போலந்தில் போய் பிரச்சாரம் செய்து பாருங்கள்...ஒரு செருப்பல்ல, ஒரு லட்சம் செருப்புகள் உங்கள் முகத்தில் எறியப்படும்...

//மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு -

மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. //

மருந்துகள் ஒற்றை மருத்துவனால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே ஆதிக்க மனப்பான்மை...தவிர, அன்றைக்கிருந்த மக்கள் தொகை என்ன? இன்றைக்கிருக்கும் மக்கள் தொகை என்ன? ஒற்றை மருத்துவனை நம்பி அழிந்து போன கிராமங்கள் எத்தனை?

//1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.//

உணரப்பட்டன? ஒற்றை வரியில் திருட்டு தனமாக கடப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் நேர்மைத்திறம்...

இவை எதுவும்....மார்க்ஸாலோ எங்கல்சாலோ சொல்லப்படவில்லை...மாவோவாலும், லெனினாலும் கண்டுபிடிக்கப்படவில்லை...விடாத ஆராய்ச்சியாலும், அந்த ஆராய்ச்சியை நடத்த முதலீடு செய்த சிலராலும் தான் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர ஓவர்நைட்டில் உணரப்படவில்லை......துண்டு பிரச்சாரம் செய்பவர்கள் எதையுமே கண்டுபிடித்ததாக சரித்திரம் பதிவு செய்யவில்லை...

//இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. //

விவசாயிடமிருந்து நெல்லை வாங்கி, அரவை மில்கள் விவசாயிக்கே அரிசி விற்கின்றன....இதில் என்ன தவறு?? நெல்லை யாரும் தின்ன முடியாது...

//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//

ஏன் உங்கள் துண்டு பிரச்சார பீரங்கியை முடுக்கி விட்டு, மஞ்சள் காமாலை ஆட்கொல்லி நோயல்ல, அது ஒரு வரம் என்று பிரச்சாரம் செய்திருக்கலாமே?

உணவு முறையை ஒழுங்குபடுத்துவது நோய்வராமல் வேண்டுமானால் தடுக்கலாம்...ஆனால் நோய் வந்தவர்களுக்கு என்ன செய்வது? எல்லாரும் அவனவன் பிரச்சினையை அவனே பாத்துங்கங்க..இருந்தா இருங்க செத்தா சாவுங்க என்று விட்டுவிடுவது பைத்தியக்கார அரசாங்கம் செய்யும்...இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்யும் (ஆனால், பொலிட்பீரோ மெம்பர்கள் சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)...

ஆனால், கொஞ்சமாவது பொறுப்புள்ள அரசாங்கங்கள் அப்படி இருக்க முடியாது.

//தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//

பொத்தாம் பொதுவாக தடை செய்யப்பட்ட மருந்து...வழக்கமான உங்கள் யோக்யதை தெளிவாக தெரிகிறது...

என்ன மருந்து தடை செய்யப்பட்டது? என்ன காரணங்களால், எந்த வயதான, எந்த உடற்கூறு உள்ள நபர்களுக்கு தடை செய்யப்பட்டது? எந்த ஆதாரமும் தராது எதற்கு உளறி வைக்கிறீர்கள்?

//'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.//

மீண்டும் முட்டாள்தனமான வாதம்...

உண்மையல்ல என்று ஸ்டேட்மென்ட்...தொடர்ந்து "தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ" என்ற சொல்லாடல்... அப்படியானால், நிறுத்தியது என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள்...

ஆக, இந்த தடுப்பூசிகள் உண்மையிலேயே சில நோய்களை வராது தடுத்திருக்கின்றன அல்லது குணப்படுத்தியிருக்கின்றன...ஆனால், இப்படி தடுப்பூசிகள் இல்லையென்றால் மட்டும் இந்த புதிய நோய்களோ இல்லை வேறு புதிய நோய்களோ வந்திருக்காது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

//எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. //

ஆமாம்...தானாகவே ஏற்படும்...(அப்புறம் எதற்கு இவர்களால் தோன்றியது, அவர்களால் ஏற்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?) தானாகவே மறையும்...

னால், அப்படி மறைவதற்கான காலம் என்ன? போலியோ நோய் வந்தவர்களின் கால்கள் என்றைக்கு நேராகி இருக்கின்றன? யானைக்கால் வியாதி என்றைக்கு தானாகவே குணமாகும்? எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேருக்கு தானாகவே குணமாகி இருக்கிறது??

//1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...//

சரி, இதற்கு என்ன ஆதாரம்? பைத்தியக்காரனின் திருமொழிகளை மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது. தவிர, 1950களில் உலக மக்கள் தொகை என்ன? இன்றைக்கு மக்கள் தொகை என்ன? எத்தனை சதவீதம்? இன்றைக்கு போலியோ நோய் கண்டவர்களின் எண்ணிக்கை என்ன?

அப்படிப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகம்? மருந்து பயன்படுத்தும் ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக, கம்யூனிஸ்டுகளால் நாசம் செய்யப்பட்ட நாடுகளிலா?

//அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.//

அம்மோனியம் சல்பேட் : இது நைட்ரஜன், ஹைட்ரஜன், கந்தகம், ஆக்ஸிஜனின் கூட்டுக் கலவை...கத்தரிக்காயில் கந்தகம் இருக்கிறது...குடிக்கும் நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இருக்கின்றன...முட்டையிலும் கோழிக்கறியிலும் இருக்கும் எல்லாப் புரோட்டீன்களுக்கும் அடிப்படை நைட்ரஜன்...நடைமுறையில் பலரும் பல விதத்தில் அம்மோனியம் சல்ஃபேட் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...எத்தனை பேர் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவி இருக்கிறது?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையாகவே உருவாவது, அல்லது உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது...மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் கூட கார்ஸியோஜெனிக் தான்...புற்று நோய் வரவைக்கும் தன்மை கொண்டது...அரிப்பு தன்மை கொண்டது...அதனால் சுவாசிக்காமல் நிறுத்தி விடலாமா?

உங்களின் மற்ற திரிபு வாதங்கள் கம்யூனிஸ்டுகளின் துண்டு பிரச்சாரம் தான்...அதற்கு வழக்கம் போல எந்த மரியாதையும் கிடையாது. முடிந்தால் ஆதாரம் கொடுங்கள்...

//சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் -

ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...

இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?//

சுற்றுப்புற சீர்கேட்டை களைய வேண்டியது தான்...ஆனால் இன்றைக்கு சுற்றுப்புறத்தை சீர்கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சைனா...உங்களை போன்ற கம்யூனிஸ்டுகள் அதை முதலில் சரி செய்யலாம்...ஆனால் மாட்டீர்கள்...ஊருக்கு உபதேசம், பொலிட்பீரோ மெம்பருக்கு ஏசி கார் என்பது தானே கம்யூனிஸம்!

உங்கள் ஒட்டு மொத்த இடுகையும் குப்பை என்பதை நிறுவ ஒரு எளிய கேள்வியே போதும். ஐம்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் ஆயுட்காலம் என்ன? இன்றைக்கு ஆயுட்காலம் என்ன? அன்றைக்கு கொள்ளை நோயால் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு எத்தனை கிராமங்களுக்கு அந்த கதி ஏற்படுகிறது?

மீண்டும் மீண்டும் கம்யூனிஸமும், நீங்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்யும் முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால், ஒரு ஆச்சரியம்...எப்படி இதுவெல்லாம் பார்ப்பானீயம், ஆணாதிக்கம், சாதி வெறி என்று நிறுவாது விட்டீர்கள்? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருகிறதோ?

பின்குறிப்பு: போர்ஹெ தெரியாதவர்களுக்கும் பூக்கோ படிக்காதவர்களுக்கும் நாட்டாமை சிவராமன் பதில் சொல்வதில்லை என்பதால் இவை பதில் எதிர்பார்த்து வைக்கப்பட்ட கேள்விகள் அல்ல... நாட்டாமைகளின் முகம் எத்தனை போலியாக உளுத்துப் போயிருக்கிறது என்பதை காட்டவே இந்த கேள்விகள் ...

மருத்துவ ரீதியான விளக்கங்களுக்கு டாக்டர் ப்ருனோவின் இந்த இடுகையை பார்க்கவும்...டாக்டர் ப்ரூனோ உண்மையான டாக்டர்...திடீர் நாட்டாமை, போலி பகுத்தறிவுவாதிகள் போல போலி டாக்டரோ இல்லை திடீர் டாக்டரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

====================================