Sunday 21 September 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் எட்டு

காலும் கலாச்சாரமும்

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


"விக்கிரமா, கணவன் இருக்கும் போதே விஜி இன்னொரு ஆண்மகன் மீது காதல் கொண்டது சரியா?"

வேதாளத்தின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் விக்கிரமன் த‌லையை த‌ட‌விக்கொண்டான்.

====================

"என்ன மாதித்தா... பேச்சையே காணோம்? ஆயிர‌ம் வ‌ருச‌த்துக்கு முன்னாடி ட‌க்கு ட‌க்குன்னு ப‌தில் சொல்லுவ‌? இப்ப‌ என்ன‌? மாப்பு, ஒன‌க்கு வ‌ச்சிட்டேனா ஆப்பு..."

"ஆப்பும் இல்லை, இலவச அடுப்பும் இல்லை. என்னை த‌மிழ் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளிட‌ம் மாட்டி விட‌ நீ ச‌தி செய்வ‌து போல‌ தெரிகிற‌து. அத‌னால் யோசிக்கிறேன்..."

"என்ன மாதி.. எத்தினி பேரு வ‌ந்தாலும் அட‌ங்காது வாள் வீசும் ஒன‌க்கே இவ்ளோ ப‌ய‌மா??"

"வாள் வீசினால் ப‌ய‌மில்லை வேதாள‌மே.. ஆனால் ஆசிட் வீசினால்? துப்பாக்கிக‌ளுக்கு ப‌ய‌மில்லை. ஆனால் துடைப்ப‌த்துட‌ன் வ‌ந்தால்..ஆயிர‌ம் பேர் வ‌ர‌ட்டும்.. ஆனால், கலாச்சார‌ காவ‌ல‌ர்க‌ள் ஆட்டோ அனுப்புவார்க‌ளே.. "

"என்ன‌ மாதித்தா.... ஷ‌கீலா ப‌ட‌ம் பார்க்க‌ போகும் ப‌த்தாங்கிளாஸ் பைய‌ன் மாதிரி ப‌ய‌ப்ப‌டுறா... என்ன‌தான் ஆச்சி ஒன‌க்கு..."

"முட்டாள் தாள‌மே... ஆயிர‌ம் வ‌ருட‌ங்களாக‌ தொங்கி கொண்டிருந்தும் உன‌க்கு அறிவு வ‌ள‌ர‌வில்லை. த‌மிழ் க‌லாச்சார‌த்தை கேள்வி கேட்பதும் ஒன்று..த‌ற்கொலைக்கு த‌யாராவ‌தும் ஒன்று... அது ஒள‌க‌ நாய‌க‌னின் குணா ப‌ட‌ம் பார்ப்ப‌து போல்... த‌ற்கொலைக்கு அஞ்சாத‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே செய்ய‌ முடியும்..."

வேதாள‌ம் வெறுப்பான‌து..

"மாதித்தா.... ஒள‌க‌ நாய‌க‌ன், ஒல‌க்கை நாய‌க‌ன் என்று நீ ஏன் யார் யாரையோ இழுக்கிறாய்?? நான் என்ன‌ யாருக்கும் புரியாத‌ மாதிரியா பேசுகிறேன்.. ப‌தில் தெரிந்தால் சொல். இல்லையேல் பின்புற‌ம் தெரிய‌ இங்கிருந்து ஓடிப்போ..என‌க்கு வேறு முக்கிய‌ வேலைக‌ள் இருக்கிற‌து.."

"ஆமா, நீதான் ஒல‌க ஷேர் மார்க்கெட்ட‌ காப்பாத்த‌ போற‌.. ஒன்னோட‌ பெரிய‌ எள‌வா போச்சி வேதாள‌மே... எவ‌னாவ‌து என் மூஞ்சில் ஆசிட் ஊத்தப்போற‌து உறுதி...அப்புற‌ம் எந்த‌ பொண்ணும் கெடைக்காம நான் "என்ன‌ மாதிரி ராம‌ன் உண்டான்" னு வ‌ஜ‌ன‌ம் பேச‌ப்போற‌தும் உறுதி.... ச‌னிய‌ன்..கேட்டுட்ட.. சொல்லி தொலைக்கிறேன்..."

ஜாக்கெட்டை த‌ட‌வி த‌ம்மை ப‌ற்ற‌ வைத்து கொண்ட‌ விக்கிர‌மாதித்த‌ன் பேச‌ ஆர‌ம்பித்தான்...

===========================

"அறிவு கெட்ட‌ வேதாள‌மே..ஆள் வ‌ள‌ர‌ அறிவும் வ‌ள‌ர‌ வேண்டும் என்று சொல்வார்க‌ள். ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ நீ ஆளும் வ‌ள‌ர‌வில்லை..உன‌க்கு அறிவும் வ‌ள‌ர‌வில்லை..

விஜி செய்த‌தில் என்ன‌ த‌வ‌று? க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன், புல்லான‌லும் புருச‌ன் என்று அவ‌ள் த‌ன் வாழ்க்கையை ம‌ண்ணாக்கி கொள்ள‌ வேண்டுமா என்ன‌? வாழ்க்கை என்ப‌து ஒரு முறை தான். த‌ன் வாழ்க்கையை குடிகார‌ க‌ண‌வ‌னுக்காக‌வும், பேராசை பிடித்த‌ மாமியாருக்காக‌வும் விஜி நாச‌மாக்கி கொள்ள‌ வேண்டிய‌தில்லை.புல்லாகவும், கல்லாகவும் இருக்கும் புருசன்களை மண்ணாக்குவதில் எந்த தவறும் இல்லை.

பிடிக்காத‌ க‌ண‌வ‌னுட‌ன் வாழ்ந்து, பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு வித நோய்த்தனமே.அப்ப‌டியே வாழ்ந்தாலும் அவ‌ளுக்கு ப‌ல‌ன் என்ன‌ கலாச்சார‌ காவ‌லி என்று ப‌ட்ட‌ம் கொடுக்க‌ப்போகிறார்க‌ளா சிலை வைக்க‌ப்போகிறார்க‌ளா? க‌ண்ண‌கிக்கு சிலை வைத்த‌தால் க‌ண்ண‌கிக்கு என்ன‌ லாப‌ம்? க‌ழ‌க‌ க‌ண்ம‌ணிக்க‌ளுக்கு தான் லாப‌மே த‌விர‌, க‌ண்ண‌கிக்கு ஒரு பைசா லாப‌மும் இல்லை.

க‌லாச்சார‌த்தின் ச‌வ‌க்குழியை தோண்டுவ‌தாக‌ குறை சொல்கிறாய். அது க‌லாச்சார‌ம் என்ப‌தின் அர்த்த‌மே தெரியாத‌ மூட‌ர்க‌ள் சொல்வ‌து.

க‌லாச்சார‌ம் என்ப‌து என்ன‌... வாழ்க்கையிலிருந்து வ‌ந்த‌து தான் க‌லாச்சார‌மே த‌விர‌, க‌லாச்சார‌த்திலிருந்து வாழ்க்கை வ‌ர‌வில்லை. வாழ்க்கை மாற‌, க‌லாச்சார‌மும் மாறித்தான் ஆக‌வேண்டும். மாறாத‌ எந்த‌ விஷ‌ய‌மும் அழியும். If something doesn't move then it's possibly dead.

அத‌ற்கு க‌லாச்சார‌மும் விதி வில‌க்க‌ல்ல‌. த‌மிழ் நாட்டில் க‌லாச்சார‌ம் க‌ள்ள‌ச்சாராய‌ம் போல் ஆகிவிட்ட‌து. காய்ச்சுப‌வ‌ன் த‌ருவ‌து தான் ச‌ர‌க்கு..

க‌ண‌வ‌ன் இருக்கும் போது இன்னொரு ஆண்ம‌க‌ன் மீது காத‌லா??

என்ன‌ த‌வ‌று? த‌ன் க‌ண‌வ‌னை தேர்ந்தெடுக்க‌ விஜிக்கு எந்த‌ வாய்ப்பும் த‌ர‌ப்ப‌ட‌வில்லை. அவ‌ள் காத‌லித்தாள். காத‌லிப்ப‌து ஒருத்தியை, காசுக்காக‌ ம‌ண‌ப்ப‌து இன்னொருத்தியை என்றிருக்கும் க‌லாச்சார‌த்தால் அவ‌ன் விஜியை கைவிட்டான். காத‌ல் என்றாலே விப‌ச்சார‌ம் என்று நினைக்கும் த‌மிழ் க‌லாச்சார‌த்தால், விஜியால் த‌ன‌து காத‌லுக்காக‌ போர‌ட‌ முடிய‌வில்லை. அது அவ‌ள் த‌வ‌ற‌ல்ல.

டேபிளுக்கு அடியில் லஞ்சம் வாங்கிக்கொண்டு கலாச்சாரம் பேசுபவர்களுக்காகவும், இரண்டு ரூபாய்க்கு ஊசிப்போட்டுக் கொண்டு கோடீஸ்வரர்களாக கட்சி நடத்தும் சில டாக்டர்களுக்காகவும் அவள் தனது வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

இப்ப‌டி க‌ழுத்தை நெறிக்கும் க‌லாச்சார‌த்தை விஜி தூக்கி எறிந்த‌தில் எந்த‌ த‌வ‌றும் இல்லை. காலுக்குத்தான் செருப்பே த‌விர‌, க‌லாச்சார‌ செருப்புக்காக‌ காலை வெட்டிக்கொள்ள‌ முடியாது. காலைக் க‌டிக்கும் க‌லாச்சார‌ செருப்பை க‌ழற்றி வீசிய விஜியை எப்படி குறை சொல்ல முடியும்?"

==================================

விக்கிர‌ம‌னின் ப‌திலை கேட்ட‌ வேதாள‌ம் குடு குடுவென்று ஓடிப்போய் அருகில் இருந்த‌ ம‌ர‌த்தில் ஏறிக்கொண்ட‌து..

"மாதித்தா.. உன் ப‌தில் ச‌ரியே..க‌லாச்சார‌த்தை காக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ விஜி த‌ன‌து வாழ்க்கை அழித்து கொள்வ‌தில் என‌க்கும் உட‌ன்பாடில்லை"

"ஆனால், நீ ஒரு த‌வ‌று செய்து விட்டாய். நீ அமைதி காத்திருக்க‌ வேண்டும். ஆனால், உன் ப‌திலால், க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை நிமிட‌ங்க‌ளாக‌ நீ காத்து வந்த‌ மவுன‌ம் க‌லைந்துவிட்ட‌தால் இனி நீ என்னை பிடிக்க‌ முடியாது..."

விக்கிர‌ம‌ன் க‌டுப்பானான்.

"இது பெரிய‌ போங்கா இருக்கே..."

"போங்கோ, பேங்கோ, அது என‌க்கு தெரியாது மாதித்தா. நீ இன்று தோற்றுவிட்டாய்...அடுத்த‌ வார‌ம் வா.. முடிந்தால் என்னை பிடித்து செல்.."

விக்கிர‌ம‌ன் த‌ன‌து ஒமேகா வாட்ச்சை பார்த்துக்கொண்டான். ந‌ள்ளிர‌வு ஆயிற்று... ஏதாவ‌து கிள‌ப் ப‌க்க‌ம் போனால் ஒரு நாலு ர‌வுண்டாவ‌து அடிக்க‌லாம்...ஆனால் அந்த‌ ஸ்பானிஷ் சிட்டு போன‌து போன‌து தான்....

அடுத்த‌ வார‌ம் இந்த‌ வேதாள‌த்தை பிடிக்காம‌ல் விடுவ‌தில்லை..

க‌றுவிக்கொண்டே விக்கிர‌ம‌ன் த‌ன‌து காரை நோக்கி அந்த‌ இருட்டில் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

=========விஜியின் கதை முற்றிய‌து ===========

இவ்ளோ ப‌டிச்சிட்டீங்க‌... அப்பிடியே இதையும் ப‌டிச்சிடுங்க‌...

ப‌திவ‌ரின் பின் குறிப்பு

இந்த‌ க‌தையை எழுத‌ ஆர‌ம்பித்த‌ பின், நான் எதிர்பாராத‌ சில‌ அதிர்ச்சிக‌ள்..

முத‌ல் அதிர்ச்சி, இதை எட்டு பாக‌ங்க‌ளாக‌ எழுத‌ நேரிடும் என்ப‌து. ஒண்ணாங்கிளாசில் இருந்து என‌க்கு பிடிக்காத‌ விஷ‌ய‌ம் எழுதுவ‌து. முக்கிய‌ கார‌ண‌ம் சோம்பேறித்த‌ன‌ம். ஏதோ ஒரு போதையில் (அதாவ‌து, குடி போதையில்), எழுத‌ ஆர‌ம்பித்த‌ விஷ‌ய்ம் இப்ப‌டி எட்டு பாக‌ங்க‌ளாக‌ போகும் என்ப‌தை நான் எதிர்பார்க்க‌வில்லை. எண்ணித்துணிக‌ க‌ரும‌ம்..... க‌ரும‌ம், எனக்கு ஒரு நாளும் நினைவிருப்ப‌தில்லை. தொடரை ஆரம்பிக்கும் முன் வரை மொத்தமாக எழுதியது நான்கு மொக்கைகள் (சரி, சரி, அதி மொக்கை பதிவுகள்). நம்புங்கள், நிஜமாகவே தொடர் எழுதி யாரையும் கொடுமைபடுத்த நான் கனவிலும் நினைக்கவில்லை.

இர‌ண்டாவ‌து அதிர்ச்சி,இதை ப‌டித்த‌ சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் கேட்ட‌ (கேட்கும்) கேள்வி...

ந‌ண்ப‌ர் செல்வ‌ க‌ருப்பையா, நீங்க‌ள் தான் விஜியின் கும்ப‌கோண‌த்து காத‌ல‌னா என்று கேட்டிருந்தார். ம‌ற்றும் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் (என‌து யுனிவ‌ர்சிட்டி ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ர்), கேட்ட‌து... நீ தான் க‌தையில் வ‌ரும் ஆன்ட‌ர்ச‌னா?...

இல்லை சாமி... ப‌க்த‌ ஹ‌ரி தாஸ் ப‌ட‌ம் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கும், தசாவதாரம் விமர்சனம் எழுதியவர்களுக்கும், சமீபத்தில் பத்து பத்து விமர்சனம் எழுதிய அண்ணன் லக்கி லுக், 21 படத்திற்கு விமர்சனம் எழுதிய கயல்விழி அவர்களுக்கும் (மன்னிச்சுக்குங்க கயல்விழி, லக்கி லுக், நான் தப்பிக்கிறதுக்கு உங்கள யூஸ் பண்றேன்), படத்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌மோ அதே அள‌வு ச‌ம்ம‌ந்த‌மே என‌க்கும் இந்த‌ க‌தைக்கும்.

வேதாள‌ம் விக்கிர‌ம‌னுக்கு சொல்லிய‌ க‌தையை ஒட்டுக்கேட்டு எழுதிய‌து த‌விர‌ பெரிய‌ தொட‌ர்பில்லை.

விஜி என‌க்கு தோழியே த‌விர‌, காத‌லி அல்ல‌. Friend க்கும் Girl Friend க்கும் வித்தியாச‌ம் தெரியும்.

இந்த‌ குழ‌ப்ப‌த்திற்கும் கார‌ண‌ம் நானே. முக்கிய‌ பிர‌ச்சினை, இந்த‌ க‌தை ந‌ட‌ந்த‌ கால‌த்தை நான் சொல்ல‌வில்லை. இது 1996ல் ந‌ட‌ந்த‌ க‌தை. ( க‌தையில் எந்த‌ இட‌த்திலும் செல் ஃபோன் வ‌ர‌வில்லை. கார‌ண‌ம் அந்த‌ கால் க‌ட்ட‌த்த்தில் இன்டியாவில் செல் ஃபோன் அதிக‌ம் இல்லை, க‌ண்டிப்பாக‌ விஜியின் ஊரில் இல்லை). 1996ல் நான் ரொம்ப ச்சின்ன பையன் என்பதால், நான் ஆட்டத்திலேயே இல்லை.

இதை சொல்லாத‌த‌ற்கு கார‌ண‌ம் என‌து எழுத்தின் பிழையே. எப்ப‌டி எழுதுவ‌து, எதை எழுதுவ‌து என்று நான் திட்ட‌மிட‌வில்லை. த‌விர‌ என‌க்கு விஜியும், ஆன்ட‌ர்ச‌னும் மிக‌வும் நெருங்கிய‌வ‌ர்க‌ள் என்ப‌தால் அவ‌ர்க‌ள‌து Character, Background ப‌ற்றி சொல்ல‌ வேண்டும் என்று தெரிய‌வில்லை. So, thats missing too. இதுவும் என‌து த‌வ‌றே!

முற்றுப்புள்ளி வைக்க‌, " நீ கொஞ்ச‌ம் லூசு.... ஏன்டா அழ‌கா ட்ர‌ஸ் ப‌ண்ணிக்கிட்டு இப்பிடி தெருப்பொறுக்கி மாதிரி கெட்ட‌ வார்த்தையா பேசுற‌" என்று அவ்வ‌ப்பொழுது, மிக‌ முக்கிய‌மான (அதாவது, யார்ட்டனா நாம மூச்சை போட்ற சமயத்தில) ச‌ம‌ய‌ங்க‌ளில் என் காலை வாரினாலும் விஜி ஒரு நெருங்கிய‌ தோழி அவ்வ‌ள‌வே. நான் விஜியின் காத‌ல‌னோ, க‌ண‌வ‌னோ அல்ல‌!

இது வ‌ரை இதை பொறுமையாக‌ ப‌டித்த‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கும், பின்னூட்ட‌மிட்ட‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி...

ந‌ம‌க்கு அரை லோடு செங்க‌ல்லு என்று ஆர்ட‌ர் செய்த‌ அதிர‌டி ம‌க்க‌ளுக்கு....

அண்ணேய்ங், என்ன‌ உட்ருங்க‌ண்ணே... எல்லாம் அந்த‌ மொட்டை வேதாள‌ம் ப‌ண்ண‌து...


வேதாள‌ம் அடுத்த‌ வார‌ம் ஒரு க‌தை சொல்லும் என்று தெரிகிற‌து. முடிந்தால் நான் அதை உங்க‌ளுக்கு சொல்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,

டாஷ் டாஷ் டாஷ்

Saturday 13 September 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் ஏழு

கரை உடைந்த காவிரி


அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.


அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


சிறப்பு அறிவிப்பு: மின் வெட்டுக்கும், மின் தடைக்கும் வித்தியாசம் உண்டு. அது போல, பதிவரே கெட்ட வார்த்தை எழுதுவதற்கும், கதையின் பாத்திரங்கள் கெட்ட வார்த்தையில் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. இந்த பாகத்தில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு நான் காரணம் இல்லாவிட்டாலும், மின்வெட்டுத்துறை மந்திரி போல் இல்லாமல், நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.


இருட்டில் நடந்து போன விக்கிரமாதித்தனை நெடு நேரம் காணாமல் போகவே, வேதாளம் பெருங்குரலிட ஆரம்பித்தது.

"மாதித்தா...மாதித்தா....எங்கே போய் தொலைந்தாய்.."

"அடச்சே, நாட்டுல மனுசன நிம்மதியா ஒதுங்க கூட விடமாட்டாய்ங்க.."
புலம்பி கொண்டே வந்தான் விக்கிரமாதித்தன்.

"ஏய் மொட்டையே.. ஏன் இப்படி கூவுகிறாய்"

"ஒண்ணுமில்ல மாதித்தா. போயி ரொம்ப நேரமாச்சா, அதான் ஆளவந்தான் பாத்த ரசிகன் மாதிரி அப்பிடியே இன்டர்வெல்ல ஓடிட்டியான்னு நெனச்சேன்.."
"ஓடி ஒளிய நான் என்ன இந்தியாவின் மத்திய மந்திரியா? விட்டால் எனக்கு ஓடுகாலி பட்டமே குடுத்துறுவ போல இருக்கு"

"கவலைப்படாதே மாதித்தா. அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். கண்டவனுக்கும் கொடுக்க இது என்ன டாக்டர் பட்டமா..."

"அதையெல்லாம் குடையாதே தாளமே. அப்புறம் உலுக்கி பாத்தேன், கலக்கி பாத்தேன்.. மரத்தில் தொங்குற வேதாளம், அதுக்கு காட்டுவேன் பாதாளம்னு யாராவது கலம்பகம் பாடி விடுவார்கள்"

"அதை விடு மாதித்தா... ஒதுங்கிற‌துக்கு இவ்ளோ நேர‌மா.."

"ஆமா, இதுக்கெல்லாம் டைம் டேபிளா போட‌ முடியும்.. நீ வெட்டிப்பேச்சு பேசாம‌ல் க‌தைக்கு வா..."

"யார் நானா? வெட்ற‌துக்குன்னே த‌மிழ் நாட்டுல‌ ஒரு ம‌ந்திரி இருக்கார்..அவ‌ரு பேரு கூட‌ ஏதோ ஒரு காடு தான்..."

இளித்த‌ வேதாள‌ம் க‌தையை மீண்டும் தொட‌ர்ந்த‌து...

================================================

விக்கிர‌மா, உன் விதி உன் கையில் என்ப‌து உன‌க்கே புரியாவிட்டால், உன் விதியை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதிவிடுவார்க‌ள். விஜிக்கும் அது தான் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

க‌லாச்சார‌த்தை காப்பாற்றுவ‌த‌ற்கென்றே ஊருக்கு நாலு பேர் இருப்பார்கள். த‌மிழ் நாட்டில் இது கொஞ்ச‌ம் அதிக‌ம். ஊரில் நாலு பேரை த‌விர‌ ம‌ற்ற‌ எல்லாரும் க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளாக‌ இருப்ப‌து அந்த‌ நாட்டில் தான்.

மேஜைக்கு அடியில் கை நீட்டி காசு வாங்கிக்கொண்டே என்ன‌ இருந்தாலும் ந‌ம்ம‌ க‌லாச்சார‌ம்னு ஒண்ணு இருக்கில்ல‌ சார் என்று சொல்லும் ஒழுக்க‌ சீல‌ர்க‌ளை நீ இங்கு தான் த‌ரிசிக்க‌ முடியும்.

அப்ப‌டிப்ப‌ட்ட சில‌ ஒழுக்க‌ சீல‌ர்க‌ள் அன்று இர‌வே விஜியின் விதியை எழுத‌ தீர்மானித்தார்க‌ள்.

நிலாக்காலம் என்றாலும் மேகங்கள் சூழ் ந்ததால், வானம் விஜியின் வாழ்க்கை போலவே இருண்டிருந்தது.

தோப்பு முத்துராம‌ லிங்க‌ம் முத‌லில் ஆர‌ம்பித்தார். ஊரில் பெரிய‌ தோப்பு இவ‌ருடைய‌து என்ப‌தால் அந்த‌ பெய‌ர். அந்த‌ தோப்பு உண்மையில் கொப்ப‌ர‌ங்கொண்ட‌ மாரிய‌ம்ம‌ன் கோவிலுக்கு சொந்த‌மான‌து என்ப‌தோ, தமிழ்நாட்டு கலாச்சாரப்படி இவ‌ர் அதை வ‌ளைத்துவிட்டார் என்ப‌தோ ந‌ம‌க்கு தேவையில்லாத‌து. க‌லாச்சார‌ துரோகிக‌ள் என்று ந‌ம‌க்கு பேர் வ‌ருவானேன்?

"ந‌ட‌க்க‌க்கூடாத‌தெல்லாம் ந‌ட‌ந்து போச்சி சுப்பிர‌ம‌ணி... ந‌ம்ம‌ வூட்டு பொண்ணு இப்பிடி வெள்ள‌க்கார‌ங்கூட‌ ஓடிப்போயிட்டான்னு தெரிஞ்சா ந‌ம்ம‌ள‌ எவ‌ன் ம‌திப்பான்? காறி துப்ப‌மாட்டான்? மொத்த‌ ஊருக்குமில்ல‌ அசிங்க‌மா போச்சி"

க‌டை கணேச‌ன் இடை ம‌றித்தார்.

"நீங்க‌ என்ன‌ங்க‌ பேசிக்கிட்டு. இதெல்லாம் போயி வெளிய‌ சொல்லுவாங்க‌ளா? க‌முக்க‌மா முடிச்சிடுவோம். இதுல‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌து யாரு... ந‌ம்ம‌ ச‌ந்திர‌னும் அவ‌ன் குடும்ப‌மும் தான். இந்தா அவ‌ன் அம்மா வ‌ந்திருக்காங்க‌..பெரீம்மா சொல்லட்டும், என்ன‌ ப‌ண்ற‌துன்னு. மொத்த‌மா அத்து விட்ர‌லாமா இல்ல‌ ச‌ந்திர‌னுக்கு சுப்பிர‌ம‌ணி பொண்ண‌ சேத்துகிற‌ இஷ்ட‌மா.. சொல்லுங்க‌ பெரீம்மா.. பெரிய‌வ‌ங்க‌ நீங்க‌ தான் சொல்ல‌ணும்... "

விஜி அங்கேயே இருந்தாலும், அவ‌ளை ஒரு பொருட்டாக‌வே இவ‌ர்க‌ள் ம‌திக்க‌வில்லை.

க‌டும் கோப‌த்தில் இருந்தாலும் விஜியின் மாமியாருக்கு விஜியை விட்டுவிட‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை.

தாய் ம‌ன‌ம் என்று நினைத்துவிடாதே விக்கிர‌மா. பேய்க‌ளுக்கு கூட‌ த‌ன‌து அடுத்த‌ வேளை உண‌வு ப‌ற்றி க‌வ‌லை உண்டு. வீட்டில் ச‌ம்பாதிக்கும் ஒரே ஆளான விஜியை விட்டுவிட்டால், அடுத்து என்ன‌ செய்வ‌து என்ப‌து மாமியாரின் க‌வ‌லை.

"என்ன‌த்த‌ செய்யிற‌து. இப்பிடி குடிகேடியா வ‌ந்து சேந்திருக்காளே. வெளிய‌ சொன்னா மான‌ம் போவுது. ப‌ண்ற‌தெல்லாம் ப‌ண்ணிட்டு குத்துக‌ல்லாட்டாம் உக்காந்து இருக்கா பாரு"

"ச‌ரிங்க‌ பெரிம்மா. பொண்ணு ப‌ண்ண‌து த‌ப்பு தான். அதான் த‌ப்பு ந‌ட‌க்கிற‌துக்கு முன்னாடியே க‌ண்டு பிடிச்சிட்ட‌ம்ல‌...பொண்ணு த‌னியா இருக்கவும் கொஞ்ச‌ம் அப்பிடி இப்பிடி இருந்திருச்சி போல‌. ஆம்பிளையா இருந்தா வ‌ய‌சுல‌ எல்லாரும் இப்பிடி தான்னு விட்ர‌லாம். பொம்பிளைய‌ அப்பிடி விட‌ முடியுமா? முள்ளுல‌ சேல‌ உளுந்தாலும், சேல‌ மேல‌ முள்ளு உளுந்தாலும், சேதார‌மாவுற‌து சேல‌ தான‌? கிளிஞ்சிறாம‌ நாம‌ தான் ப‌க்குவ‌மா பாத்துக்க‌ணும். இப்ப‌ என்ன‌ சொல்றீங்க‌..."

"சொல்லு சொல்லுன்னா என்ன‌த்த‌ சொல்ல‌ சொல்றீங்க‌? அத்துவிட‌ தான் என‌க்கும் ஆச‌. ஆனா, குடும்ப‌ மான‌ம் ச‌ந்தி சிரிக்குமே.. அத‌னால‌, வேற‌ வ‌ழி இல்ல‌. இவ‌ இருக்க‌ட்டும். ஆனா இனிமே த‌னியா இருக்க கூடாது"

"சொல்ற‌த‌ தெளிவா சொல்லுங்க‌ம்மா"

"என்ன‌த்த‌ தெளிவா சொல்ற‌து... இனிம‌ இவ‌ ல‌ண்ட‌னுக்கோ இல்ல‌ மெட்ராசுக்கோ த‌னியா போவ‌க்கூடாது. எம் ம‌வ‌னையும் கூட்டி கிட்டு போவ‌னும். அவ‌ன் சொல்ற‌ப‌டி கேக்கணும். ஆம்பள‌ சொக‌த்துக்கு தான‌ அலையுறா, க‌ட்டுன‌வ‌ன் கூட‌ இருந்தா ப‌டி தாண்ட‌ வேண்டாமில்ல‌..."

"பெரிய‌வ‌ங்க‌ பெரிய‌வ‌ங்க‌ தான். என்ன‌ தான் கோவ‌த்துல‌ இருந்தாலும், பிரிக்க‌ ம‌ன‌சு வ‌ர‌ல‌ பாத்தீங்க‌ளா... பெரிம்மா, நீங்க‌ சொல்ற‌து ச‌ரியாப்ப‌டுது. அப்பிடியே செஞ்சிருவோம்..."

" இந்தாம்மா விஜி...கேட்டீல்ல‌. இனிம‌யாவ‌து பெரிய‌வ‌ங்க‌ சொல்ற‌து கேளு. குடும்ப‌ மான‌த்த‌ காத்துல‌ ப‌ற‌க்க‌ விடாத‌. சுப்பிர‌ம‌ணி, ஒம் பொண்ணுக்கு ந‌ல்ல‌தா நாலு சொல்லி அனுப்பு... என்ன‌ம்மா... போம்போது உம் புருச‌னையும் கூட்டிகிட்டு போ... இனிம‌யாவ‌து ஒழுக்க‌மா ந‌ட‌ந்துக்க‌...."

மண்ணை கூட பூமாதேவி என்று சொல்வது இந்திய கலாச்சாரம். ஆஹா, மண்ணுக்கு எத்தனை மரியாதை என்று மகிழ்ந்து விடாதே விக்கிரமா. எத்தனை மிதித்தாலும் மண் எதிர்த்து பேசுவதில்லை. பெண்ணும் மண்ணும் ஒன்று என்பது தான் இதன் உள்ளர்த்தம். அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரையும் பெண்ணும் தாங்க வேண்டும் என்பது சொல்லாம‌ல் சொன்ன மொழி.

விஜிக்கு உள்ளே எரிந்த‌து. என‌க்கு ஒழுக்க‌ம் போதிக்க‌ இவ‌ன் யார்... இவ‌னுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்?

==============================

விக்கிர‌மா.. மிக‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கும் மிக‌ கொடிய‌வ‌ர்க‌ளுக்கும் வித்தியாச‌ம் ஒரு நூலிழையே. இவ‌ர்க‌ள் விளிம்பு நிலை ம‌னித‌ர்க‌ள். திடீரென்று திருந்தி திருடன் வால்மீகி ராமாயணம் எழுதுவான். க‌டும் சோத‌னைக‌ளால் மிக‌ ந‌ல்ல‌வ‌ர்கள் நிலை மாறி, கொடிய‌வ‌ர்க‌ளையும் அஞ்ச‌ வைப்பார்க‌ள். நீரில் மூழ்க வைத்தால், ஒரு நாளும் நீந்தாதவன் கூட உயிரை காப்பாற்ற நீந்த முயற்சிப்பான்...

க‌லாச்சார‌த்தால் க‌ழுத்து நெறிக்க‌ப்ப‌ட்ட‌ விஜி மூழ்கிக்கொண்டிருப்பவ‌னின் க‌டைசி முய‌ற்சி போல‌ மெதுவாக‌ பேச‌ ஆர‌ம்பித்தாள்.

"எனக்கு இஷ்டமில்ல..."
=============================================

சென்னையிலிருந்து காலையில் கிள‌ம்பிய‌ ஆன்ட‌ர்ச‌னின் கார் ஒரு வ‌ழியாக‌ கும்ப‌கோண‌த்தை அடைந்திருந்த‌து.

காதலியின் கரம் மட்டுமல்ல, அவள் கால் பட்ட மண்ணும் கூட சந்தோஷமே. விஜி பிறந்த ஊர்.... இந்த தெருவில் நடந்து போயிருப்பாள். இந்த கோவிலில் கும்பிட்டுருப்பாள்.... இந்த ஆற்றில் மீன் பிடித்திருப்பாளோ.. இந்த மனிதர் விஜிக்கு தெரி ந்தவரா.... விஜிக்கு இவரை தெரியுமா....ல‌வ் யூ விஜி....
ஆன்ட‌ர்ச‌னுக்கு விஜியை பார்க்க‌ப்போகிறோம் என்ற‌ ச‌ந்தோஷ‌மும், எப்ப‌டி இருக்கிறாளோ என்ற‌ க‌வ‌லையும் அவ‌ஸ்தையை ஏற்ப‌டுத்திய‌து...

"'ave you found the address mate..."

டிரைவ‌ருக்கு ஆன்ட‌ர்ச‌னின் ஆங்கில‌ம் புரிய‌வில்லை. ஆனால், அட்ர‌ஸ் என்ப‌து தெளிவாக‌ புரிந்த‌து.

"டிரை ப‌ண்ணிட்ருக்கேன் சார்.... இங்க‌ன‌ தான் இருக்க‌னும்... நாம‌ கும்மோன‌ம் அவ்ள‌வா வ‌ந்த‌தில்லையா... அதான்... சின்ன‌ ஊரு சார். மெட்ராசுன்னுனா க‌ரீக்டா போயிருவேன்..."

ஆன்ட‌ர்ச‌னுக்கு அவ‌ன் சொன்ன‌து எதுவும் புரிய‌வில்லை. ஆனால், try....Correct ஒருவாறாக‌ புரிந்த‌து.

This taaamil must be a difficult language. Such a long answer for a simple question.....ah well....I like Taaamil...I like VeeJee....

ஒரு வ‌ழியாக‌ விஜியின் வீட்டை க‌ண்டுபிடித்தார்க‌ள்...

ஆன்ட‌ர்ச‌னுக்கு த‌ய‌க்கமாக‌ இருந்த‌து. விஜி இருப்பாளா இல்லையா?

இல்லாவிட்டால் என்ன‌ சொல்வ‌து... இருந்தாலும்... அவ‌ளை கேக்காம‌ல் வ‌ந்து விட்டோமே..

I 'ave come this far... no point in being reluctant...let's see....

ஆன்ட‌ர்ச‌ன் விஜியின் வீட்டு க‌த‌வை த‌ட்ட‌ ஆர‌ம்பித்தான்....

======================================
"என‌க்கு இஷ்ட‌மில்ல‌...."

விஜியின் மாமியார் கொதித்தாள்.

"என்ன‌டி இஷ்ட‌மில்ல‌.."

"நான் எதுக்கு உங்க‌ புள்ளைய‌ ல‌ண்ட‌னுக்கு கூட்டிகிட்டு போக‌ணும்? கூட்டிப்போக‌ முடியாது. என்ன‌ ப‌ண்ணுவீங்க‌"

"என்ன‌டி...புருச‌னை க‌ழ‌ட்டி விட்டுட்டா ஊரு மேய‌லாம்னு பாக்கிறியா..தெரியும்டி உன்ன‌ ப‌த்தி... நாலு பிச்ச‌ காசு ச‌ம்பாதிக்குறோம்னு திமிரு...இப்பிடி தேவிடியாத்த‌ன‌ம் ப‌ண்ண‌ வ‌க்கிது..."

அதிக‌மாக‌ அழுத்தினால் காற்றும் வெடிக்கும். விஜிக்கு பிற‌ந்த‌ நாள் முத‌ல் அதுவ‌ரை அட‌க்கி வைத்திருந்த‌ எல்லா துக்க‌மும் ஒட்டு மொத்த‌மாக‌ வெடித்தது...

"யார‌ தேவிடியான்னு சொல்றீங்க‌.. நான் ஆம்பிள‌ அப்பிடி தான் இருப்பேன்னுட்டு ஒத்த‌ பைசா ச‌ம்பாதிக்காம‌, பொண்டாட்டி காசுல‌ குடிச்சிட்டு சுத்துறானே உங்க‌ ம‌க‌ன், அவ‌ன‌ கேளுங்க‌... அது பொட்டைத்த‌ன‌ம். விருப்ப‌மில்லாம‌ ப‌டுத்துக்கிட்டா அது புருச‌னா இரு ந்தாலும், அது தேவிடியாத்த‌ன‌ம்...இப்பிடி, காசு காசுன்னு அலைய‌றீங்க‌ளே, அது அது தான் தேவிடியாத்த‌ன‌ம்"

"இப்பிடி பொறுக்கியாவும், உருப்ப‌டாதாவ‌னாவும் இருக்கிற‌ உங்க‌ ம‌க‌னை துக்கி வ‌ச்சிக்கிட்டு ஆட‌றீங்க‌ளே அது தேவிடியாத்த‌ன‌ம்...அவ‌ன‌ எதுக்கு நான் ல‌ண்ட‌னுக்கு கூட்டிக்கிட்டு போக‌னும்? என‌க்கென்ன‌ த‌லைவிதியா இவ‌ன‌ நான் வ‌ச்சி காப்பாத்த‌னும்னு..."

விஜியின் மாமியார் அதிர்ச்சியில் நின்றாள். எது சொன்னாலும் ச‌ரிங்க‌ அத்த‌ என்று சொல்லும் விஜியா இது.... புதிதாக‌ ப‌ட‌ம் காட்டுகிறாள்..

பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் காலத்திலிருந்து தமிழ் நாட்டில் வழக்கமாக உபயோகிக்கும் ஆயுதம் தாலி சென்டிமென்ட். விஜியின் மாமியாரும் அதையே பிரயோகித்தாள்.

"யாரடி தேவிடியான்ற... நாற முண்ட...ரொம்ப ஆடாத‌... ம‌யிலே ம‌யிலேன்னா எற‌கு போடாது...ரொம்ப‌ ஆடினா மொத்த‌மா அத்து விட்ருவேன் பாத்துக்க.."

"அத்து விடுங்க‌...என‌க்கு பிடிக்க‌லை.காசு காசுன்னு அலையுற‌ உங்க‌ளையும் பிடிக்க‌லை. குருடா போனாலும் குடிக்கிற‌த விட‌மாட்டேன்னு அலையுற‌ உங்க‌ ம‌க‌னையும் பிடிக்க‌லை. இப்பிடி நாயா வாழ்ற‌துக்கு நான் த‌னியா வாழ்ந்துக்கிறேன். அத்து விடுங்க‌..."

"தெரியும்டி. நீ எந்த‌ தைரிய‌த்துல‌ பேசுற‌ன்னு. புருச‌ன‌ அத்து விட்டுட்டு அந்த‌ வெள்ள‌க்கார‌ன் கூட‌ கூத்த‌டிக்க‌ தான‌ இப்பிடி பேசுற‌..."

"அப்பிடியே வ‌ச்சுக்க‌ங்க‌. என‌க்கு அவ‌ர‌ பிடிச்சிருக்கு. ம‌ன‌சுல‌ ஒருத்த‌னை வ‌ச்சிகிட்டு, இன்னொருத்த‌ன் கூட‌ வாழ‌ என‌க்கு இஷ்ட‌ம் இல்ல‌..."

"அட‌ நாச‌மா போற‌வ‌ளே... அந்த‌ அள‌வுக்கு போச்சா...உன்ன‌ விட‌க்கூடாதுடி.."

மாமியார் விஜியின் மேல் பாய‌வும், ஆன்ட‌ர்ச‌ன் உள்ளே வ‌ர‌வும் ச‌ரியாக‌ இருந்த‌து.....

====================================

யாரும் கதவை திறக்காததால், தானே திறந்து கொண்டு திடீரென்று உள்ளே நுழைந்த ஆன்டர்சனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அவ‌னுக்கு முத‌லில் விஜியும், க‌லைந்திருந்த‌ அவ‌ள் த‌லை முடியும் தான் க‌ண்ணில் ப‌ட்ட‌து.

What happened...Who are these people....

எதிர்பாராம‌ல் நுழைந்த‌ அவ‌னை க‌ண்ட‌தும் விஜிக்கும் ஆச்ச‌ரிய‌மாக‌, அதே ச‌ம‌ய‌ம் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்த‌து.

ப்ரைய‌ன்.. வ‌ந்துவிட்டாயா..என்னை, என்னைத்தேடியா வ‌ந்தாய்..ஒரு நாள் தானே ஆயிற்று. அத‌ற்குள் என‌க்காக‌ வ‌ந்துவிட்டாயா..

ஆனால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை. விஜி ஒரு வெள்ளைக்கார‌னை காத‌லிப்ப‌து தான் அவ‌ர்க‌ளுக்கு தெரியுமே த‌விர‌, அவ‌ன் ல‌ண்ட‌னில் இருப்ப‌தாக‌ தான் அவ‌ர்க‌ள் நினைத்திருந்தார்க‌ள். அவ‌ன் கும்ப‌கோண‌த்திற்கே தேடி வ‌ருவான் என்ப‌து அவ‌ர்க‌ள் நினைத்திராத‌ ஒன்று....

விஜி முத‌லில் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள்.

"Brian...What are you doing here... how come..you are..."

"ah..VeeJee.. I was a bit worried...so..is everything alright..What's going on here...."

விஜியின் மாமியாருக்கு பொங்கிய‌து... இந்த‌ வெள்ளைக்கார‌ன் இங்க‌யே வ‌ந்து விட்டானே..

"என்ன‌டா அவ‌ள்ட்ட‌ பேச்சு. எங்கிட்ட‌ பேசுடா..."

"VeeJee... who's this... your mom?.. Whats she saying.."

"My mother in law. She is angry and..."

"Oh...Is there anything I can do"

"No Brian...you can't.."

விஜி புதிய‌ ப‌ல‌த்துட‌ன் பேச‌ ஆர‌ம்பித்தாள்.

"இத‌ பாருங்க‌..என‌க்கு உங்க‌ பைய‌ன் கூட‌ வாழ‌ இஷ்ட‌ம் இல்ல‌. நான் போறேன். அவ்வ‌ள‌வு தான்..."

"க‌ட்டின‌ புருச‌ன‌ தூக்கி எறிஞ்சிட்டு போறேங்கிறியேடி.. நீ நாச‌மா தான் போவ‌, ந‌ல்லாருக்க‌ மாட்ட‌.."

தோப்பு முத்துராம‌லிங்க‌த்துக்கும் புரிய‌வில்லை.. சுதாரித்து கொண்டு பேச‌ ஆர‌ம்பித்தார்.

"என்ன‌ம்மா பொண்ணு நீ...புருஷ‌ன‌ விட்டுட்டு ஓடிப்போற‌து ந‌ல்லா இருக்கா..ஊர்ல‌ என்ன‌ பேசுவானுங்க‌.. ஓடுகாலின்னு சொல்லுவானுங்க‌. ந‌ம்ம‌ குடும்ப‌த்துக்கு இது தேவையா.. ந‌ம்ப‌ ஊருக்கார‌னுங்க‌ள‌ இனிமே எவ‌னாவ‌து ம‌திப்பானா? அட‌ அவ‌னுங்க‌ள‌ விடு... ந‌ம்ம‌ க‌லாச்சார‌ம்னு ஒண்ணு இருக்கில்ல‌? அதைக்கூட‌ தூக்கி எறிஞ்சிட்டு போற‌து கொஞ்சங்கூட‌ ந‌ல்லால்ல..."

விஜிக்கு அட‌க்கி வைத்திருந்த‌ ஆத்திர‌ம் பொங்கிய‌து.

"இவ்வ‌ள‌வு பேசுறீங்க‌ளே, ஆனா குடிச்சிட்டு பொறுப்பில்லாம‌ சுத்திக்கிட்டு இருந்த‌ என் புருச‌ன‌ ஏதாவ‌து கேட்ருப்பீங்க‌ளா? கல்யாணத்துக்கு வரதட்சனைல இருந்து சீர் செனத்தின்னு காசு, காசுன்னு பறந்த எம்மாமியார என்னைக்காவது கேள்வி கேட்ருக்கீங்களா? அப்ப‌ எங்க‌ போச்சி உங்க‌ க‌லாச்சார‌ம்? ஊர்க்கார‌னுங்க‌ ம‌திக்க‌ணும்கிற‌துக்காக‌ இன்னும் எத்த‌னை நாள் வாழ்ற‌து? இப்பிடியே அவ‌ன் ம‌திக்க‌ணும், இவ‌ன் ம‌திக்க‌ணும்னு பிடிக்காத‌ புருஷ‌ன் கூட‌ இருந்தா என்ன‌ நானே ம‌திக்க‌ முடியாது..பைத்தியம் தான் பிடிக்கும். நான் போறேன்..முடிஞ்சா என்ன‌ த‌டுத்து பாருங்க‌.. "

விக்கிர‌மா, காவிரி க‌ரையோர‌ம் என்றாவ‌து ப‌ய‌ண‌ம் செய்திருக்கிறாயா? நெல்வ‌ய‌ல்க‌ள், வாழைத்தோப்புக‌ள், க‌ரும்பு வ‌ய‌ல்க‌ள்..வெற்றிலை தோட்ட‌ங்க‌ள்..அமைதியாக‌ செல்லும் காவிரி.... இந்த‌ காவிரியும் க‌ரை உடைப்பாளா...

உடைப்பாள்... க‌டும் ம‌ழை வ‌ரும்போதோ ஆக்கிர‌மிப்பு கட்டுக்க‌ட‌ங்காம‌ல் போனாலோ உடைப்பாள்...

அவ‌ள் க‌ரை உடைத்தால் அது ஒரு வெறியாட்ட‌ம்..... க‌ரும்பு வ‌ய‌ல்க‌ளை காணாது அடிப்பாள்...செழித்த‌ திமிருட‌ன் நின்ற‌ வாழைக‌ள் அடியோடு அழுகிப்போகும்... நெல்வ‌ய‌ல்க‌ள் வெறும் சேறாகும்.. வெற்றிலை தோட்ட‌ங்க‌ள் வெறும் ம‌ண‌ல் காடாகும்... க‌ரை உடைத்த‌ காவிரியை த‌டுப்ப‌வ‌ர் எவ‌ருமில்லை....

பிள்ளைப்பூச்சி என்று விஜியை கிள்ளி எறிய‌ வ‌ந்த‌ க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ள் க‌ரை உடைத்த‌ காவிரியை பார்த்து திகிலுட‌ன் நின்றார்க‌ள்.

விஜி அதுவ‌ரை பேசாம‌ல் நின்ற‌ த‌ன் பெற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் திரும்பினாள்.

"என்ன‌ப்பா ஒண்ணும் பேச‌ மாட்டேங்கிறீங்க‌.. உங்க‌ளுக்கு பிடிக்க‌லையா? என‌க்கு வேற‌ வ‌ழி தெரில‌. இதுவ‌ரைல‌ என‌க்கு பிடிச்ச‌ எதையும் நான் செய்ய‌ல‌. உங்க‌ளுக்கு பிடிச்ச‌த‌ தான் செஞ்சிருக்கேன்... இந்த‌ ஒரு த‌ட‌வை நான் என‌க்கு பிடிச்ச‌த‌ செஞ்சிக்கிறேன்.... நான் வ‌ர்றேம்பா...வ‌ர்றேம்மா.. உங்க‌ள‌ விட்டுட்டு போக‌லை. திரும்பி வ‌ருவேன்..என‌க்காக‌, கொஞ்ச‌ நாள் பொறுத்துக்க‌ங்க‌..."

"Brian....did you come for me..."

"I don't understand VeeJee.. What sort of question is this.."

"I'll explain it later... Shall we go now?"

ந‌ட‌ந்த‌து எதுவும் புரியாம‌ல் குழ‌ப்ப‌த்தில் இருந்த‌ ஆன்ட‌ர்ச‌னுக்கு முக‌ம் ம‌ல‌ர்ந்த‌து.

"Yes VeeJee.."

விஜியும், ஆன்ட‌ர்ச‌னும் காரில் ஏறிக்கொண்ட‌ன‌ர்...

க‌லாச்சார‌ காவ‌ல‌ர்க‌ளும், விஜியின் பெற்றோரும் வாய‌டைத்து நிற்க‌, அந்த‌ ந‌ள்ளிர‌வில் கார் சென்னையை நோக்கி ப‌ற‌ந்த‌து.

======================================

ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான காவிரி கலாச்சார கரைகளை உடைத்ததை சொல்லி வேதாளம் கதையை முடித்தது.

"கேட்டாயா விக்கிரமா கதையை...திருமணம் என்பதே இருவருக்கான உடன்படிக்கை தான். உனக்கு முடியாவிட்டால் நான் காப்பாற்றுவேன், எனக்கு முடியாவிட்டால் நீ தான் துணை. அதனால் தான் என் மனைவியே, உனக்கு வாழ்க்கை துணை என்று பெயர்.."

"விக்கிரமா, திருமணத்தின் தத்துவமே இது தான். ஒருவருக்கு ஒருவர் துணை என்பது தான் இணை என்பதன் முழு தத்துவமே.. ஒரு கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்தின் பால் இயங்குவது.. ஒழுக்க விதிகளே ஒரு கலாச்சாரத்தை தீர்மானிக்கிறது...கலாச்சார விதிகளை உடைப்பது அந்த கலாச்சாரத்தின் சவக்கிடங்கை தோண்டுவதற்கு சமம்".

"விஜியின் கணவன் குடிகாரனே...ஆனால், அவன் விஜியின் காதல் தெரிவதற்கு முன் அவன் விஜியை கொடுமைப்படுத்தவில்லை. மாமியார் காசு ஆசை பிடித்தவள் தான், ஆனால் அவள் ஒன்றும் வித்தியாசமாக செய்யவில்லை. எல்லா மாமியாரும் செய்வதை தான் அவளும் செய்தாள். எல்லா மனிதருக்கும் இருக்கும் பண ஆசையே அவளுக்கும் இருந்தது. விஜி என்ற தனிப்பட்ட பெண்ணிற்கும் அவளுக்கும் விரோதமில்லை."

"இப்படி இருக்கையில், சரியாக கண் தெரியாத கணவனுக்கு துணையாக விஜி இருந்திருக்க வேண்டாமா?? வயதான பெண்ணான மாமியாரை கொஞ்சம் அனுசரித்து அன்பினால் திருத்த முயற்சி செய்திருக்க வேண்டாமா?? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற தமிழ் கலாச்சாரத்தில் பிறந்த விஜி, வேசி வீட்டுக்கு போனாலும் அவனுக்கு நீதி கேட்பேன் என்ற கற்பின் இலக்கணமான கண்ணகி வழி வந்த விஜி, இப்படி புதிதாக வாய்ப்பு கிடைத்தது என்று கண் தெரியாத கணவனை தூக்கி எறியலாமா? கலாச்சாரத்தின் சாவுக்குழியை தோண்டலாமா?? கணவன் இருக்கும் போதே, இன்னொரு ஆண்மகன் மேல் காதல் கொள்ளலாமா??"

"விக்கிரமா... இந்த கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்..."

வேதாள‌த்தின் சாப‌த்தை கேட்ட‌ விக்கிர‌ம‌ன், த‌ன் த‌லையை த‌ட‌விக்கொண்டு ப‌தில் சொல்ல‌ த‌யாரானான்.....

=====விக்கிர‌ம‌னின் ப‌தில்?....அடுத்த‌ ப‌திவில்...==============


Tuesday 9 September 2008

நெருப்பென பெய்கிறது பனிமழை

நெருப்பென பெய்கிறது பனிமழை

சுட்டன கால்கள் ஓடுகிறது நீர்

தேடுகிறேன் இன்னும் கிடைக்கவில்லை

கவலையில்லை மீண்டும் நாளை

அதோ ஒரு பாதச்சுவடு

வேறு யார் இங்கே இல்லை அது நானா

அதே நேரம் தினந்தோறும்

சுற்றி சுற்றி வருகிறது கடிகாரம் முடிவே இல்லாமல்

மீண்டும்

நெருப்பென பெய்கிறது பனிமழை

Friday 5 September 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் ஆறு

சித்தனும் பித்தனும்



அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!




தம்மை ஊதி முடித்த வேதாளம், ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கவே விக்கிரமனே பேச ஆரம்பித்தான்.

"என்ன தாளமே, ஓலைப்பாயில் ஒண்ணுக்கு போவது போல பேசிக்கொண்டிருப்பாய். இப்ப என்ன, ஆட்சி போன அம்மா மாதிரி அமைதியாகி விட்டாய்?"

"விக்கிரமா, அடக்கி வாசி. ஆட்சி போனாலும் ஆட்டோக்கள் பல அவர்கள் வசம் இருப்பதாக சொல்கிறார்கள்"

"கோட்டையில் இருந்தாலும், கொட நாட்டுக்கு போனாலும் சிலருக்கு குடை சரிவதில்லை. இருக்கட்டும் வேதாளமே. நீ சீக்கிரம் கதையை ஆரம்பி. குசேலன் முதல் காட்சி பார்த்த ரசிகன் போல உனக்கு என்ன துக்கம்??"

"அவனவனுக்கு ஆயிரம் துக்கம் விக்கிரமா. அதெல்லாம் உனக்கு எதற்கு?"

எரிச்சலுடன் பேசிய வேதாளம், கதையை மீண்டும் ஆரம்பித்தது.
============================

"மாதித்தா, க‌ட்ட‌றுப்பவ‌ர்க‌ள் ப‌ல‌ரும் க‌ட்ட‌றுக்க‌ வேண்டும் என்று தீர்மானித்து செய்வ‌தில்லை. காத‌லில் விழுந்தாளே த‌விர‌, விஜிக்கு அதை க‌ண‌வ‌னிட‌மோ இல்லை பெற்ற‌வ‌ர்க‌ளிட‌மோ சொல்ல‌ தெரிய‌வில்லை. அதே ச‌ம‌ய‌ம் யாரிட‌மும் சொல்லாம‌ல் ஆன்ட‌ர்ச‌னுட‌ம் வாழ‌வும் அவ‌ளுக்கு விருப்ப‌மில்லை. ஓடிப்போன‌வ‌ள் என்று பெய‌ரெடுக்க‌ யாருக்குத் தான் விருப்ப‌ம் இருக்கும்?"

"விக்கிர‌மா, நீ புரிந்து கொள்ள‌ வேண்டும். விஜ‌ய‌ல‌ட்சுமி புதுமைப்பெண்ணோ, புர‌ட்சிப் பெண்ணோ இல்லை. ப‌டிப்ப‌து பிடித்திருந்த‌து. ப‌டித்தாள். காத‌ல் வ‌ந்த‌து. காத‌லித்தாள். காத‌லுக்கு எதிர்ப்பு வ‌ந்த‌து. காத‌ல‌ன் கைவிட்டான். பெற்ற‌வ‌ர்க‌ள் ஏற்பாடு செய்த‌ ஒருவ‌னை க‌ல்யாண‌மும் செய்து கொண்டாள். வேறு வ‌ழியில்லை என்ப‌தால் வேலைக்கு போனாள். ஏன் அவ‌ளுக்கு என்று சுய‌ உண‌ர்வு இல்லையா என்று நீ கேட்க‌லாம். காவிரி, இல்லை அர‌ச‌லாற்றின் க‌ரையில் ஒரு சிற்றூரில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ பெண், என்ன‌ செய்வாள் என்று நீ எதிர்பார்க்கிறாய்? த‌மிழ் நாட்டில் நீ ச‌ந்திக்கும் ப‌ல‌ கோடி பெண்க‌ளில் அவ‌ளும் ஒருத்தி, அவ்வ‌ள‌வே!"

"பொறுக்கியாக‌வும், பொறுப்ப‌ற்ற‌வ‌னாக‌வும் இருந்த கோவ‌ல‌னுக்காக‌ நீதி கேட்ட‌ க‌ண்ண‌கி தான் இன்றும் த‌மிழ் நாட்டின் க‌ற்பு தெய்வ‌ம். காத‌லியாக‌ இருந்த‌ மாத‌வி, த‌ன‌க்காக‌ நீதி கேட்ட‌ கார‌ண‌த்தினால் விலைமாதுவாக‌ மாறிப்போனாள். க‌ல் தோன்றி ம‌ண் தோன்றா கால‌த்தே முன் தோன்றிய‌ மூத்த‌ குடியின் விசித்திர‌ நியாய‌ங்க‌ளை ...."

வேதாள‌ம் பேசிக்கொண்டே போக‌ விக்கிர‌மாதித்த‌ன் அவ‌ச‌மாக‌ குறுக்கிட்டான்.

"நிறுத்து, நிறுத்து. நீ உயிருக்கு உலை வைத்து விடுவாய் போலிருக்கிற‌து. கொஞ்ச‌ம் தானே அடித்தாய், அத‌ற்குள் உன‌க்கு போதை ஏறிவிட்டதா? நீ கதையை மட்டும் சொல். கலாச்சாரத்தில் கை வைக்காதே".

"கை என்ன‌, காலும் வைப்பேன்"

முறைத்த‌ வேதாள‌ம், விஜியின் க‌தையை மீண்டும் ஆர‌ம்பித்த‌து.

======================================

சென்னையிலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ கார் அதிகாலையில் ஒரு வ‌ழியாக‌ கும்ப‌கோண‌த்தை அடைந்த‌து. வ‌ழியெல்லாம் விஜியின் மாமியார் த‌ன‌து கெட்ட‌ வார்த்தைக‌ள் மூல‌மே த‌மிழின் நீள‌, ஆழ‌, அக‌ல‌ங்க‌ளை காட்டினாள்.

அந்த இருள் பிரியாத வேளையில் காரில் இருந்து இறங்கிய விஜியை பார்த்த‌ அவ‌ள் தாய்க்கு வ‌யிற்றுக்குள் துக்க‌ம் சுருண்ட‌து.

நான்கு ஆண் ம‌க்க‌ளுக்கு பின், த‌வ‌மாய் இருந்து போராடி பெற்ற‌ பெண். வீட்டுக்கு ஒரே பெண் என்ப‌தால் செல்ல‌மாய், பார்த்து பார்த்து வ‌ளர்த்த‌ என் குழ‌ந்தை. இன்று க‌லைந்த‌ த‌லையும், க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளும், க‌ன்றிய‌ க‌ன்ன‌ங்க‌ளும்....

எப்ப‌டி வ‌ள‌ர்த்தேன்...ஒரு நாளும் உன்னை திட்டிய‌து கூட‌ இல்லையே. இன்று எவ‌னோ ஒருவ‌னிட‌ம் அடி வாங்க‌வா உன்னை பெற்றேன்.. அவ‌ளால் தாங்க‌ முடிய‌வில்லை. வயிறு எரிந்தது.

"அய்யோ, என்னால‌ முடிய‌லையே. என்ன‌டி இது இப்ப‌டி இருக்க‌.."

விஜியின் மாமியார் முந்திக் கொண்டாள்.

"நூல‌ப்போல‌ சேல‌, தாய‌ப் போல‌ புள்ள‌. ஒம்ம‌வ‌ ஒன்ன‌ மாதிரி தான‌ இருப்பா... வ‌ந்துட்டா என்னமோ..."

விஜியின் தாயார் திகைத்தாள்.

"பெரிய‌வ‌ங்க‌ அப்ப‌டியெல்லாம் சொல்லாதீங்க‌ ச‌ம்ம‌ந்தி. அவ‌ சின்ன‌ பொண்ணு. ஏதோ தெரியாம‌ ப‌ண்ணிட்டா..."

"ஒண்ணும் தெரியாத‌ பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்பா.....ஓடுகாலிய‌ எங்க‌ த‌லையில‌ க‌ட்டிட்டு சின்ன‌ புள்ளையாமில்ல‌ சின்ன‌ புள்ள‌..."

விஜியின் தாய்க்கு பொறுக்க‌வில்லை.

"ரொம்ப‌ பேசாதீங்க‌ ச‌ம்ம‌ந்தி. ஒங்க‌ புள்ள‌ குடிக்காம‌ ஒழுங்கா இருந்தா ஏன் இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்க‌ போவுது..."

"எம்புள்ள‌ய‌ ப‌த்தி பேசாத. அவன் ஆம்பிள. பொட்ட‌ச்சிய ஒளுங்கா வ‌ள‌க்க‌ துப்பில்ல‌. பேச‌ வ‌ந்துட்டா பெருசா.... "

"பெரிய‌ ஆம்பிள‌. ஒத்த‌ பைசா ச‌ம்பாதிக்க‌ துப்பில்லாத‌வ‌னெல்லாம் ஊருல‌ ஆம்பிள‌ன்னு சொல்லிக்கிட்டு அலையுறான்..."

"யார‌டி சொன்ன‌....ஓடுகாலிய‌ பெத்துட்டு ஒன‌க்கு பேச்சு வேற‌ கேக்குதோ..."

விக்கிர‌மா, த‌மிழ் நாட்டின் மிக‌ச்சிற‌ந்த‌ பொழுதுபோக்குக‌ளில் வேடிக்கை பார்ப்ப‌தும் ஒன்று. அந்த‌ அதிகாலையில் ந‌ட‌ந்த‌ இந்த‌ எதிர்பாரா நிக‌ழ்ச்சியை கண்டு களிக்க‌ க‌ல்தோன்றி, ம‌ண் தோன்றா கால‌த்து மூத்த‌ குடிக‌ள் ஆர்வ‌முட‌ன் கூடினர்.

கூட்ட‌ம் சேர்வ‌தை பார்த்த‌ விஜியின் த‌ந்தை த‌ன‌து மான‌ம் குறித்து பெரும் க‌வ‌லை அடைந்தார்.

"என்ன‌து, பொம்ப‌ளைங்க‌ளா பேசிக்கிட்டு... ந‌டுத்தெருவில‌ ஏன் அசிங்க‌ம் ப‌ண்றீங்க..... நாலு பெரிய‌ ம‌னுச‌ங்க‌ள‌ வ‌ச்சி பேசி தீத்துகிடுவோம்..."

க‌ண‌வ‌னின் குர‌லுக்கு விஜியின் தாய் அட‌ங்கினாலும், மாமியார் அட‌ங்குவ‌தாக‌ தெரிய‌வில்லை.

"என்ன‌த்த‌ பேசுற‌து.... ஒரேடியா தீத்துற‌ வேண்டிய‌து தான்..."

விக்கிர‌மா, இந்திய‌ நீதிம‌ன்ற‌ங்க‌ளில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் அவ‌ர்க‌ளின் பேர‌னுக்கு பேர‌ன் ,அதுவும் அதிர்ஷ்ட‌ம் இருந்தால் தான் தீர்ப்பை கேட்க‌முடியும் என்ப‌தால், ப‌ல‌ கிராம‌ங்க‌ளில் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் தீர்ப்ப‌ளிப்ப‌து உண்டு.



பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் என்றால், த‌மிழ் சினிமாவில் வ‌ரும் ம‌ர‌த்த‌டி ப‌ஞ்சாய‌த்து என்று நினைத்து விடாதே விக்கிர‌மா. இது ஊரெல்லாம் கூடுவ‌து இல்லை. நாலு ம‌னித‌ர்க‌ள் ஓரிட‌த்தில் கூடி, அவ‌ர்க‌ளுக்குள் பேசி முடிவெடுப்ப‌து.



விஜியின் வாழ்க்கைக்கு தீர்ப்பு சொல்ல‌ கிராம‌ பெரிய‌ ம‌னித‌ர்க‌ள் என்று த‌ங்க‌ளை தாங்க‌ளேவோ அல்ல‌து கைத்த‌டிக‌ளாலோ அழைக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் அன்று மாலையே கூடுவ‌தாக‌ முடிவான‌து.


க‌டும் க‌ளைப்பில் இருந்த‌ விஜி, இது எதுவும் அறியாம‌ல் சுருண்டிருந்தாள்...
======================



பார்க் ஷெராட்ட‌னில் அதிகாலையில் எழுந்த‌ ஆன்ட‌ர்ச‌னுக்கு என்ன‌ செய்வ‌து என்று தெரிய‌வில்லை. காதலியை காணாவிட்டால் தேடலாம். ஆனால் அவள் மற்றவனின் மனைவியாகவும் இருந்தால் என்ன செய்வது?

விஜியின் வீட்டுக்கு ஃபோன் செய்ய‌லாமா? வேண்டாமா?

அவ‌ன் முடிவெடுத்து ஃபோன் செய்த‌ நேர‌த்தில் ச‌ந்திர‌ன் த‌ன் தின‌க்க‌ட‌மையாக‌ ம‌துக்க‌டைக்கு போயிருந்தான். ஃபோனை எடுப்ப‌வ‌ர் யாருமில்லை.

ஆன்ட‌ர்ச‌னுக்கு அத‌ற்கு மேல் என்ன‌ செய்வ‌து என்று புரிய‌வில்லை. விஜிக்கு என்ன‌ ஆயிற்று? வீட்டில் சொல்லிவிட்டாளா? ஏதேனும் ஆகியிருக்குமா?

ப‌ல‌ பெண்க‌ளை மிக‌ அல‌ட்சிய‌மாக‌ உத‌றிய‌ அவ‌னுக்கு முத‌ல் முறையாக‌ ஒரு பெண் கார‌ண‌மாக‌ விய‌ர்த்த‌து. விஜியை பார்த்தே ஆக‌ வேண்டும். ஆனால் எப்ப‌டி? மெட்ராஸ் ஒன்றும் ல‌ண்ட‌ன் இல்லையே....

அவ‌னுக்கு திடீரென‌ அந்த‌ யோச‌னை உதித்த‌து..

உட‌ன‌டியாக‌ விஜியின் இந்திய வங்கி முக்கிய அதிகாரிக்கு ஃபோன் செய்தான்.

"Hi...Morning. This is Brian Anderson from ---- Bank. Could I speak to Mr. Saxeeena please...."

மும்பையில் ஸ‌க்சேனாவுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. ல‌ண்ட‌னில் முக்கிய‌ அதிகாரி, சென்னையிலிருந்து எப்ப‌டி... என்ன‌ பிர‌ச்சினை..

"Very good morning Mr.Anderson.... This is Saxena speaking..... How are you sir?"

"I am very fine Mr.Saxeeena...Thank you...I'm....just wondering... could you please do me a favour?"

"Sure Mr.Anderson... Is there any problem?... Are you calling from Madras...Sorry, I was not aware that you are visiting India...."

"No. no problem...Mr.Saxeena....I...I want to speak to one of your employees.....She is from your Madras office. She was on training in London....Is it possible..ah..can I get her contact details...."

ஸ‌க்சேனாவுக்கு விய‌ர்த்த‌து. ல‌ண்ட‌னிலிருந்து ஒரு முக்கிய‌ அதிகாரி மெட்ராசுக்கு நேரில் வ‌ந்து விசாரிக்கும் அள‌வுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து? யார் இந்த‌ பெண்?? அவ‌ள் என்ன‌ செய்துவிட்டாள்....

"Is there any problem Sir.... I apologise if anything had gone wrong.."

"No, no. Mr.Saxeena. nothing wrong. She is a friend...I'm holidaying here...so, I just....just.. wanted to see her...I tried the number she gave me....but...no response..."

ஸ‌க்சேனாவுக்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. இந்த‌ வெள்ளைக்கார‌ர்க‌ளை புரிந்து கொள்ள‌வே முடிவ‌தில்லை. பிஸின‌ஸ் மீட்டிங்கில் எத‌ற்கும் விட்டு கொடுக்காம‌ல் குடைவார்க‌ள். இப்ப‌டி ப‌த்தாயிர‌ம் மைல் தாண்டி ஒரு பெண்ணை தேடியும் திரிவார்க‌ள்...

"Oh...thats very nice of you Brian. Leave it to me....What's her name.."

"VeeJee...."

"VeeJeeee??...very unusual name....you got her full name?..."

"mmh...yeah...its VeeJee....VeeJee...Supp...Supraaamaaniyaane.."

ஸ‌க்சேனா சிரித்தார்.

"Oh Brian....I think you are trying to say Viji Subramaniyan..."

"Yeah... that's the one..."

"Give me half an hour Brian...I'll get back to you..."

"Thank you Mr.Saxeeena... Much appreciated..."

"No problem Brian...Always a pleasure...."

=========================

ஸ‌க்சேனா உட‌ன‌டியாக‌ சென்னை அலுவ‌ல‌க‌த்தை தொட‌ர்பு கொண்டார். விஜி ல‌ண்ட‌னில் டிரைனிங்கில் இரு ந்த‌தும், அவ‌ள் வீடு உண்மையில் கும்ப‌கோண‌ம் என்றும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.

=========================

"Good morning Mr.Anderson.... This is Saxena from Mumbai..."

"Hi... Mr.Saxena.....You got the details....."

"Sure I have....But she is not in Madras....She's gone to Kumbakonam..."

"Kumb...kumbanam?....what's it?..."

"Kumbakonam...It's her native town. about 300km south of Madras...are you still going to see her?"

ஆன்ட‌ர்ச‌னுக்கு த‌ன‌து த‌விப்பை வெளிக்காட்ட‌ விருப்ப‌மில்லை.

"ah....I'm not sure Mr.Saxeena.... but I travel around...If I visit anywhere nearby i'll give it a try.....give me the details anyway..."

ஸ‌க்சேனா ஒவ்வொரு எழுத்தாக‌ சொல்ல‌ சொல்ல‌ பிரைய‌ன் எழுதிக்கொண்டான்.

"Thank you very much Mr.Saxeena.....Much appreciated....Sorry for all the troubles...."

"No problem Brian... You are most welcome.."

=============================

"மாதித்தா, க‌ட‌வுளைக் க‌ண்ட‌வ‌னும், காத‌ல் கொண்ட‌வ‌னும் ஒன்றே. காரணங்களை அவர்கள் அலசுவதில்லை. காரியங்களின் கடினத்தை யோசிப்பதும் இல்லை. முன்ன‌வ‌ன் சித்த‌ன் ஆகிறான், பின்ன‌வ‌ன் பித்த‌ன் ஆகிறான்."

"அந்த காலை நேரத்தில் ஆன்டர்சன் பித்த நிலையில் தான் இருந்தான். எங்கோ ல‌ண்ட‌னில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ பிரைய‌ன் ஆன்ட‌ர்ச‌ன், இத‌ற்கு முன் கேள்விப்ப‌ட்டிராத‌, எந்த‌ திசையில் இருக்கிற‌து என்று கூட‌ தெரியாத‌ ஒரு த‌மிழ்நாட்டு ந‌க‌ர‌த்திற்கு ப‌ய‌ண‌ப்ப‌ட‌ வேறு என்ன‌ கார‌ண‌ம் இருக்க‌ முடியும்? அவ‌னால் அந்த‌ ஊரின் பெய‌ரைக்கூட‌ உச்ச‌ரிக்க‌ முடிய‌வில்லை என்ப‌து கூட‌ அவ‌னுக்கு உறைக்க‌வில்லை..."

விஜியை பார்த்தே தீருவ‌து என்று முடிவெடுத்த‌ ஆன்ட‌ர்ச‌ன் பார்க் ஷெராட்ட‌னின் ரிச‌ப்ஷ‌னை அணுகினான்.

=========================

"Good Morning Sir....What can I do for you.."

"ah, Good Morning. I would like to make a little travel...Can you arrange a taxi for me please..."

"Sure Sir..We have beautiful cars for our guests....Where do you want to travel...."

"mmh, Kumb..kumbaanam....Here..., this is the address.."

"Oh, Kumbakonam....No problem Sir....give me five minutes...The car will be ready for you.."

"Thank you.."

ஆன்ட‌ர்ச‌னின் கார் கும்ப‌கோண‌த்தை நோக்கி கிள‌ம்பிய‌ போது காலை ப‌த்த‌ரை ம‌ணி ஆகியிருந்த‌து. த‌மிழ் நாட்டு சூரிய‌ன் த‌கிக்க‌ ஆர‌ம்பித்தான்...

=====================================================

சொல்லிக் கொண்டே வ‌ந்த வேதாள‌ம், வ‌ழ‌க்க‌ம் போல் க‌தையை திடீரென‌ நிறுத்திய‌து.

விக்கிரமாதித்தனுக்கு எரிச்சலாக இருந்தது.

"என்ன‌ தாள‌மே, திடீரென‌ நிறுத்தி விட்டாய். உன‌க்கு இதே பொழ‌ப்பா போச்சி. பெரிய‌ ச‌ஸ்பென்ஸ் வ‌க்கிற‌தா நென‌ப்பா?"

"ச்சேச்சே அப்ப‌டியில்லை மாதித்தா. மூணு ம‌ணி நேர‌ம் விடாம‌ல் பேச‌ நான் என்ன‌ வைகோவா? தொண்டை வ‌ற‌ண்டு விட்ட‌து. ஏதாவ‌து சோடா கீடா ஏற்பாடு செய்யேன்.."

"சோடாவா? சோடா பாட்டில் இருந்தால் அதை அப்ப‌வே உன் ம‌ண்டைல‌ ஒட‌ச்சிருப்பேனே? நான் என்ன‌ பெட்டிக்க‌டை ந‌ட‌த்துரேன்னு நென‌ச்சியா?"

"ம்ம்ம். நாய‌ர்ட்ட‌ சோடா கேட்ட‌து என் த‌ப்பு தான். நாய‌ர்ட்ட‌ ச்சாயா தான‌ கெடைக்கும்"

ந‌க்க‌ல‌டித்த‌ வேதாள‌ம், மீதி இரு ந்த‌ விஸ்கியில் கொஞ்ச‌ம் வாயில் ஊற்றிக்கொண்ட‌து.

"விக்கிரமா, ஏத்துன‌து எல்லாம் எற‌ங்கிருச்சி. திருப்பி ஏற‌ கொஞ்ச‌ம் நேர‌ம் ஆகும். நீ பிஸ்ஸ‌டிக்கிற‌துன்னா போயிட்டு வா"

வேதாள‌த்தை முறைத்த‌ விக்கிர‌மாதித்த‌ன் அந்த‌ காட்டு ப‌குதியில் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

===================== தொட‌ரும்===================

Monday 1 September 2008

இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??

ஆஹா, அடுத்த தொடர ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யான்னுட்டு யாரும் தெறிச்சி ஓட வேண்டாம், சீக்கிரமா முடிச்சிர்றேன்.

நேத்து தினமலரை புறட்னப்ப, இந்த ஃபோட்டோ பாத்து திகைச்சி போயிட்டேன்.

ஏதோ, புள்ளியாரு விழாவாம், எங்க, பாரீசுல!.

புள்ளையாரு தான் தொந்தியும் தொப்பையுமா இருக்காருன்னா, இவனுங்க அதுக்கு சவால் விடறானுங்க!

பானை வயித்த வச்சிகிட்டு ஒவ்வொருத்தனும் ப்பப்பரபேன்னு போஸ் குடுக்குறத பாரு!

இதுல பொம்பிளிய வேற கயிரு கட்டி தேர‌ இளுத்தாங்களாம். இந்த கருமத்துக்கு, கார இளுத்தாலாவது பெட்ரோல் செலவு கொறையும்.

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான்.

பாரீசு போனாலும், பாங்காக் போனாலும்

இவ‌ய்ங்கெல்லாம் திருந்த‌வே மாட்டாய்ங்க‌ளா??



(ப‌ட‌ம் உத‌வி: தின‌ம‌ல‌ர்)

உங்களுக்கு எதுனா தோணுதா??