Monday 31 August 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்!

அறிவிப்பு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள், பாத்திரங்கள்,அண்டா, குண்டா, சட்டி, பானை, ஊர், தெரு, கடை,இட்டிலி, சட்டினி, வடை, பொங்கல் எல்லாம் கற்பனையே...கண்டிப்பாக இருந்த, இருக்கின்ற, இனிமேல் இருக்கப் போகின்ற எவரையும் குறிப்பன அல்ல...அப்படி ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது வேதாளத்தின் பிழையே தவிர பதிவர் பொறுப்பல்ல!



அத்தியாயம் இரண்டு - சுழன்றும் ஏர் பின்னது உலகம்

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்...

"மாதி....சுட்ட மண் என்னிக்காவது திருப்பி ஒட்டியிருக்கா??"

வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மாதித்தன் முறைத்துக் கொண்டிருந்தான்...

"என்னா மொறைப்பு...பதவி போன பழைய சி.எம். மாதிரி பாக்குற...கேட்டதுக்கு பதில‌ சொல்லப்பு...."

"மண்ணாவது...மண்ணாங்கட்டியாவது...நீயும் உன் கதையும்....கதை சொல்றது தான் சொல்ற....அப்பிடியே என் ரெண்டு காதுலயும் எதுனா அழுக்குத் துணிய சொருகிட்டு கதை சொல்லேன்....நான் பாட்டுக்கு நிம்மதியா தூங்குவேன்..."

"சரி விடு....நான் கதையே சொல்லலை....பொக்கிஷம் திருட்டு சி.டி. கெடைச்சுது...பாக்குறியா..."

"என்னாது....பொக்கிஷமா....மாத்தி மாத்தி கடிதம் எழுதியே கபாலத்த பொளக்குறாய்ங்களாமே...அந்த படத்தை பாக்குறதுக்கு நான் பேசாம காங்கிரஸ் கட்சிலயே சேந்துடுவேன்...அய்யா சாமி...நீ கதைய ஆரம்பி....டாய்ய்ய்ய் கதை எங்கடான்னு ஏற்கனவே ரெண்டு செங்கல்லு வந்திடுச்சி...இப்பிடியே போனா வர்ற செங்கல்ல வச்சி யார்க்க்ஷையர்ல‌ ஒரு வீடே கட்டிரலாம்...."

"ஆங்....அது...."

வேதாளம் கதையை ஆரம்பித்தது...

===========================

மார்கழி மாத கோவை மாலை ஏழு மணிக்கெல்லாம் இருட்ட ஆரம்பித்திருந்தது....காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து லஷ்மி மில்லுக்குக்கோ புதூருக்கோ பீளமேட்டுக்கோ இல்லை அதையும் தாண்டியோ விரையும் மாநகர பஸ்கள்...வீட்டுக்கு லேட்டாய் போகும் குமாஸ்தாக்கள்...சேல்ஸ் பெண்கள்.....யமஹா வீல் மாத்த ஐநூறு ரூவாயா...ஏனுங்க நெம்ப ஜாஸ்தி சொல்றீங்களே...பேரம் பேசும் ஜீன்ஸ் பேண்ட்டுகள்...ஈரோடுன்னா பால்கோவா....மாம்பழம்னா மல்கோவா...அள்ளு அள்ளு ச்சீப்பா அள்ளு....ஈரோட்டையும் மாம்பழத்தையும் சேர்த்தே ஏலம் விடும் வியாபாரிகள்....காலையில இருந்து ஃப்ளோர்ல நின்னு காலெல்லாம் செம வலி மச்சான்...நைட்டுக்கு ஒரு நைன்டியாவது ஏத்துனா தான் தூக்கம் வருமாட்ருக்கு...பஞ்சு மில்லில் வாலிபத்தை தொலைத்த வாலிப வயோதிகர்கள்...ஊழலை ஒழிக்கும் கருணாநிதி அரசு போல பெயருக்கு இருட்டை விரட்டும் கார்ப்பரேஷன் விளக்கு கம்பங்கள்...நீங் என்ன சொல்லுங்....நம்ம நமீதா மாதிரி மலையாளத்தி ஒருத்தியும் கெடையாது...தம்ளன் தம்ளன் தானுங்...டாஸ்மாக் உற்சாகத்தில் குஜராத் நமீதாவை தமிழாக்கும் பரந்த உள்ள தமிழ் குடிமகன்கள்....

கணவனிடம் செல்லக் கோபம் கொண்ட புது மனைவி போல மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளிய பாப்பநாயக்கன் பாளையம் தனது இரவு வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது...இரவு வாழ்க்கை என்பது உண்பதும் சீரியல் பார்த்து கண்ணீர் சிந்துவதுமாகவே மாறிப் போய்விட்ட கலாச்சாரத்தின் பிம்பமாக பண்ணாரி அம்மன் உணவகத்திலிருந்து ஓடு போட்ட கூரை வழியே பூரி வாசனையும், பொங்கல் வாசனையும் இனம் பிரிக்க முடியா வாசனைகளுடன் புகை போல கசிந்து கொண்டிருந்தது...

உணவகம் என்றதும் கற்பனை குதிரைகளை பறக்க விடா தீர்கள்....அது ஒரு சிறிய மெஸ்...சிவா என்ற சிவராமனுக்கும், மாலு என்ற அவன் தங்கை மாலதிக்கும் அவன் அம்மாவுக்கும் அது வீடு....மாதக் கணக்கில் அக்கவுண்ட் வைத்து அங்கு சாப்பிடும் மில் சூப்பர்வைசர்களுக்கும் இன்ன பிற வாலிப வயோதிகர்களுக்கும் அது பண்ணாரி அம்மன் மெஸ்...சுருக்கமாக அம்மன் மெஸ்....டிவியும் சோஃபாவும் இருக்க வேண்டிய ஹாலில் நான்கு மேஜைகளும் சில பெஞ்சுகளும்...அது தான் மெஸ்...அதை தாண்டி ஒரு அறை.. அங்கு தான் சமையல்...அதை தாண்டி ஒரு அறை...அது மாலதியின் அறை மற்றும் எல்லாப் பொருட்களின் அறை...

"சிவா இட்லி எல்லாம் ரெடியாயிடுச்சி...உள்ள வர்றியா"

"இந்தா வந்திட்டம்மா..."

எப்படி பார்த்தாலும் இந்த மாசம் கொஞ்சம் இடிக்கும் போலருக்கே...இன்னும் ரெண்டு நாள் கடை நல்லா ஓடினா நல்லது......கணபதி மேன்ஷன்லருந்து ஒரு மூவாயிரம் வர வேண்டி இருக்கு...அதுவும் வராட்டி சேவிங்க்ஸ்ல இருந்து தான் எடுக்கணும்...

நோட்டையும் பேனாவையும் கீழே வைத்து விட்டு எழுந்திரிக்கும் சிவராமனை உங்களுக்கு தெரிந்திருக்கும்....பஸ்ஸில், ட்ரெயினில், துணிக்கடையில், டாக்டரின் அறைக்கு வெளியே கவலையுடன்... இன்னும் எத்தனையோ இடங்களில் எதிர்ப்படும் இருபத்தாறு வயது இளைஞர்களில் சிவராமனை நீங்கள் பார்த்திருக்கலாம்......எதிர்கால இந்தியா கையில் இருக்கிறதோ இல்லையோ தகப்பன் இல்லாத குடும்பம் இன்றைக்கு இவன் கையில் தான் இருக்கிறது...அதனால் கணக்கு வழக்கு கூட்டல் கழித்தல்கள்...

"என்னம்மா...சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாயிடுச்சா...மேன்ஷன்லருந்து ஏழு பார்சல் கேட்ருந்தாங்க....வர சொல்லிரவா..."

"எல்லாம் ரெடிடா...வரச் சொல்லு....அப்புறம்....மதியம் தரகர் வந்துட்டு போனாருல்ல....பையன் நல்ல பையனாருக்கான்...பள்ளிப்பாளையத்துல மில்லு சூப்பர்வைசர்...மாலதிக்கு முடிச்சிரலாமேடா..."

இது தினம் நடக்கும் பிரச்சினை...மாலுவுக்கு இப்பொழுது தான் பி.எஸ்.சி இரண்டாம் வருடம் ஆகிறது...அம்மாவுக்கு எத்தனை சொன்னாலும் புரிவதில்லை...அவள் பிரச்சினை அவளுக்கு...

"என்னம்மா....அந்த தரகர் தான் அறிவில்லாம அவசரப்படுறார்னா...நீங்க வேற...இன்னும் ஒரு வருஷம் தான...அவளும் படிச்சி முடிக்கட்டும்...கல்யாணம் வச்சா எப்படியும் ரெண்டு லட்சம் செலவாயிடும்...நம்ம கையிலயும் இப்ப அவ்ளோ காசு இல்ல...ஒரு வருசத்தில எப்படியாவது ஒரு ஒரு லட்சம் சேத்துட்டா இந்த வீட்ட ஒத்தி வைச்சி அவ கல்யாணத்தை முடிச்சிரலாம்...இப்பவே கல்யாணம்னு சொன்னா காசுக்கு நான் எங்க போறது...."

"சள்ளுன்னு விழுந்து புடுங்காதடா...மாலுவுக்கு மட்டுமில்ல...கல்பனாவையும் யோசி...அவளும் ஒனக்காக தான வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா...அவங்க வீட்டையும் யோசிச்சி பாருடா...எப்ப பார்த்தாலும் காசு காசுன்னு அதையே எண்ணிக்கிட்டு இருக்காத..."

வீட்டுக்கு தெரிந்தே காதலிப்பதில் இது ஒரு பிரச்சினை....கல்பனா...கல்பா...இவனை விட இரண்டு வயது குறைவு...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...ப்ளஸ் டூ பரிட்சைக்கு இவனிடம் படிக்க வந்ததில் இருந்து....காதலாகி கசிந்துருகி...ஒரே ஜாதி...ஒரே பொருளாதார நிலை..தூரத்து உறவு...எதிர்ப்பில்லாத ஏழு வருட காதல்....சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் கல்பாவே தலை....

சிவராமன் மெல்லிய இருட்டில் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்... இவளுக்கு தெரியுமா....கல்பாவை இன்னும் கைப்பிடிக்கவில்லை....ஆனால் தினந்தோறும் கனவு குடித்தனம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறேன்...இறுக்க கைகோர்த்து மருதமலை படி ஏறியேறிக் கொண்டு.....கல்பாவின் உள்ளங்கை சூடு இன்னமும் இருக்கிறது...ஆனால் காசு வேண்டும்....அவள் கால்கள் கூட தரையில் படாமல் தாங்க வேண்டும்...அதற்கு காசு வேண்டும்...எல்லாவற்றுக்கும் காசு வேண்டும்....அம்மாவுக்கு புரியவில்லை...

"சரிம்மா....தரகர்கிட்ட நான் பேசிக்கிறேன்...நீ மாலுக்கிட்ட எதுவும் சொல்லிக்கிட்டு இருக்காத...அவளாவது நிம்மதியா படிக்கட்டும்...."

"என்னவோடா...சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் செட்டிலானா தான் எனக்கு நிம்மதி..."

இதற்கு மேல் இங்கு நின்றால் அம்மா புலம்ப ஆரம்பித்து விடுவாள்....

"சரி சரி....விடு...அந்த சட்னி, சாம்பாரெல்லாம் எடு...நான் கொண்டு போய் மெஸ்ஸில வச்சிட்டு மேன்ஷனுக்கு ஃபோன் பண்றேன்...."

ஸ்னேகிதனே...ஸ்னேகிதனே....ரகஸிய ஸ்னேகிதனே.... அவனது மொபைல் ஃபோன் மெதுவாக பாட ஆரம்பித்தது...கல்பாவுக்கு பிடித்த பாட்டு...அவளே செட் செய்த ரிங் டோன்... ஏதோ புதிய நம்பர்...மெஸ் ஓப்பன் செய்யணும்....இந்த டைம்ல யார் ஃபோன் பண்றது...ஒரு வேளை மேன்ஷன்லருந்து கூப்பிடறாங்களோ...

"ஹலோ சிவா ஹியர்...."

"சிவா....நாந்தான்....கல்பா...."

ஏழரை மணி மெஸ் ஓப்பன் பண்ற டைம்னு கல்பாவுக்கு தெரியும்...இந்த டைம்க்கு கூப்பிட மாட்டாளே...

"சொல்லு கல்பா...என்ன திடீர்னு இந்த டைம்ல...."

"ஒண்ணுமில்ல...கொஞ்சம் பேசணும்..."

"இப்பவா...மெஸ் தொறக்கணுமே...சரி சொல்லு...என்ன வீட்ல யாருக்காவது ஒடம்பு சரியில்லையா....டாக்டர்கிட்ட கூட்டிப் போகணுமா..."

"அதெல்லாம் இல்ல சிவா..எல்லாரும் நல்லாத் தான் இருக்காங்க..."

"அப்புறம் என்ன..."

மறுமுனையில் கல்பனா தயங்குவது தெரிந்தது....

"என்ன கல்பா....எதுவும் பிரச்சினையா..."

"ம்ம்...ஆமா...நீ கொஞ்சம் அன்னபூர்ணா வரைக்கும் வர்றியா...."

கல்பா வீடு பக்கம் தான்...சாய் பாபா காலனி...அன்னபூர்ணா ஹோட்டல் பக்கத்தில்...

"என்ன கல்பா...டைம் ஏழரை ஆயிடுச்சி...நான் மெஸ் தொறக்கணுமே..நான் நாளைக்கு காலைல வர்றேன்....உங்க அப்பாக்கிட்ட பேசியும் ரொம்ப நாளாச்சி....இல்ல அர்ஜண்ட்னா போன்லயே சொல்லு..."

"ம்ம்....அது வந்து...ம்ம்ம்....எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் சிவா....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்...."

================ தொடரும் ====== ============

24 comments:

பழமைபேசி said...

ந்ம்மூர் விசயத்தை, ச்சும்மா உச்சத்துல வெச்சு வெளுத்து கட்டி இருக்கீங்க அண்ணாச்சி... நாலஞ்சு வாட்டி படிச்சேன் போங்க....

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
ந்ம்மூர் விசயத்தை, ச்சும்மா உச்சத்துல வெச்சு வெளுத்து கட்டி இருக்கீங்க அண்ணாச்சி... நாலஞ்சு வாட்டி படிச்சேன் போங்க....

31 August 2009 11:03
//

வாங்க பழமைபேசி அண்ணே...

கோயம்புத்தூர் மேட்டருக்கு கரெக்டா முதல் பின்னூட்டம் உங்கது தான் ;0))

பழமைபேசி said...

//மிஸஸ்.தேவ் said...

தொடரும் ..போடாம சொல்ல வந்த கதையை முழுசா சொல்லலாம் இந்த ஒரு தடவையாவது, ...

இல்லனா விக்ரமனுக்கு பதிலா வேதாளம் அதுசரியைக் கடத்தட்டும்
//

அண்ணாச்சி, இதை மனசுல வெச்சிட்டு இந்த இடுகையில கலக்கிட்டாருங்க பாருங்க...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//மிஸஸ்.தேவ் said...

தொடரும் ..போடாம சொல்ல வந்த கதையை முழுசா சொல்லலாம் இந்த ஒரு தடவையாவது, ...

இல்லனா விக்ரமனுக்கு பதிலா வேதாளம் அதுசரியைக் கடத்தட்டும்
//

அண்ணாச்சி, இதை மனசுல வெச்சிட்டு இந்த இடுகையில கலக்கிட்டாருங்க பாருங்க...

31 August 2009 11:07
//

கலக்கல் எல்லாம் இல்லீங்ணா...செங்கல் வருவதை தடுக்க சிறிய முயற்சி :0))

Mahesh said...

அப்பாடி... அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரு.... ஏனுங் இம்பூட்டு நாள் உறக்கம் புடிச்சு கெடந்தீங்?

//கணவனிடம் செல்லக் கோபம் கொண்ட புது மனைவி போல மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளிய பாப்பநாயக்கன் பாளையம் தனது இரவு வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.// கொஞ்சம் ராஜேஷ் குமார் பாணி..... :)

குடுகுடுப்பை said...

நல்லா வந்திருக்கு தலீவரே. சரக்கு புதுசா?
//

"என்னம்மா...சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாயிடுச்சா...மேன்ஷன்லருந்து ஏழு பார்சல் கேட்ருந்தாங்க....வர சொல்லிரவா..."//

திருவல்லிக்கேணில இருக்கும்போது சார் நாஷ்டான்னு ஒரு எட்டு வயதுப்பையன் மேன்சனில் யூனிபார்மோடு இட்லி/சப்பாத்தி விப்பான். பாவமா இருக்கும் சில நாட்கள் வாங்குவோம் பல நாட்கள் எங்களிடம் காசு இருக்காது.:) அந்த ஞாபகம் ஏனோ வந்துவிட்டது

கலகலப்ரியா said...

வாவ்... சத்தமே இல்லாம ஒரு நெடுந்தொடர் ஓடிக்கிட்டிருக்கு... சூப்பருங்க.. புக் மார்க் பண்ணி வந்து படிக்கறேன்..

KarthigaVasudevan said...

சத்தமே இல்லாம இன்னைக்கு படம் ஓடிட்டு இருக்கு தியேட்டர்ல!!!
படம் நல்லா இருக்கு ...மெகா சீரியல் மாதிரி டெய்லி வரணும்...இல்லனா செங்கல் எல்லாம் வராது !!!
வேதாளத்தின் தலைல சுத்தியலால அன்பா லேசா தட்டி அனுப்புவோம் .

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
அப்பாடி... அண்ணன் ஃபார்முக்கு வந்துட்டாரு.... ஏனுங் இம்பூட்டு நாள் உறக்கம் புடிச்சு கெடந்தீங்?
//

ஒறக்கம் இல்லீங்...மப்பு கொஞ்சம் சாஸ்தியாயி போச்சுங் ;0))

//
//கணவனிடம் செல்லக் கோபம் கொண்ட புது மனைவி போல மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளிய பாப்பநாயக்கன் பாளையம் தனது இரவு வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.// கொஞ்சம் ராஜேஷ் குமார் பாணி..... :)

31 August 2009 16:25
//

உண்மை மஹேஷ்...எனக்கு இது தான் பெரிய பிரச்சினையாயிருக்கிறது...எத்தனை தவிர்த்தாலும் எப்படியாவது யாருடைய பாணியாவது ஒட்டிக் கொண்டுவிடுகிறது...அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்...

வருகைக்கு நன்றி...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நல்லா வந்திருக்கு தலீவரே. சரக்கு புதுசா?
//

ஆமா....ஆமா...இப்ப நான் க்ரீன் டீக்கு மாறிட்டேன்ல?? :0))

//
"என்னம்மா...சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாயிடுச்சா...மேன்ஷன்லருந்து ஏழு பார்சல் கேட்ருந்தாங்க....வர சொல்லிரவா..."//

திருவல்லிக்கேணில இருக்கும்போது சார் நாஷ்டான்னு ஒரு எட்டு வயதுப்பையன் மேன்சனில் யூனிபார்மோடு இட்லி/சப்பாத்தி விப்பான். பாவமா இருக்கும் சில நாட்கள் வாங்குவோம் பல நாட்கள் எங்களிடம் காசு இருக்காது.:) அந்த ஞாபகம் ஏனோ வந்துவிட்டது

31 August 2009 16:49
//

அப்படியே கொசுவத்தியை இன்னும் கொஞ்சம் பத்த வச்சி ஒரு இடுகை போட்றது?? :0))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
வாவ்... சத்தமே இல்லாம ஒரு நெடுந்தொடர் ஓடிக்கிட்டிருக்கு... சூப்பருங்க.. புக் மார்க் பண்ணி வந்து படிக்கறேன்..

31 August 2009 18:42

//

வாங்க ப்ரியா...முதல் வருகைக்கு நன்றி....

நெடுந்தொடர்னு சொல்லிட்டீங்க...கொடுந்தொடரா மாறிடாம கீப் அப் பண்ண ட்ரை பண்றேன் ;0)))

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...
சத்தமே இல்லாம இன்னைக்கு படம் ஓடிட்டு இருக்கு தியேட்டர்ல!!!
//

வார வாரம் கண்டிப்பா படத்தை மாத்தணும்னு தியேட்டர் டேமேஜர் சொல்லிட்டார் :0))

//
படம் நல்லா இருக்கு ...மெகா சீரியல் மாதிரி டெய்லி வரணும்...இல்லனா செங்கல் எல்லாம் வராது !!!
வேதாளத்தின் தலைல சுத்தியலால அன்பா லேசா தட்டி அனுப்புவோம் .

31 August 2009 20:34
//

வேதாளத்து தலைல தான?? லேசா என்ன...நல்லா பலமாவே தட்டி அனுப்புங்க...எப்பிடியாவது அது மண்டை உடைஞ்சா சரி :0)))

(அப்பாடா....என் தலை தப்பிச்சுது!)

க.பாலாசி said...

கொஞ்சம் பயமுறுத்தும் தோணியிலும் தங்களின் பதிவு...(சில இடங்களில்)

இந்த தொடரை இப்போதுதான் படிக்கிறேன்..நன்றாக உள்ளது அன்பரே...தொடருங்கள் வாழ்த்துக்கள்...

KarthigaVasudevan said...

அது சரி said...
//
மிஸஸ்.தேவ் said...
சத்தமே இல்லாம இன்னைக்கு படம் ஓடிட்டு இருக்கு தியேட்டர்ல!!!
//

வார வாரம் கண்டிப்பா படத்தை மாத்தணும்னு தியேட்டர் டேமேஜர் சொல்லிட்டார் :0))

அது யாருங்க அந்த டேமேஜர்? பேரையும் நட்சத்திரத்தையும் சொன்னீங்கன்னா வினை தீர்க்கும் விக்ன விநாயகர் கோயில்ல அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாம் .

அது சரி(18185106603874041862) said...

//
க.பாலாஜி said...
கொஞ்சம் பயமுறுத்தும் தோணியிலும் தங்களின் பதிவு...(சில இடங்களில்)

இந்த தொடரை இப்போதுதான் படிக்கிறேன்..நன்றாக உள்ளது அன்பரே...தொடருங்கள் வாழ்த்துக்கள்...

01 September 2009 08:57
//

வாங்க பாலாஜி...முதல் வருகைக்கு நன்றி...

பயம்?? எனக்கு புரியலியே??

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...


அது யாருங்க அந்த டேமேஜர்? பேரையும் நட்சத்திரத்தையும் சொன்னீங்கன்னா வினை தீர்க்கும் விக்ன விநாயகர் கோயில்ல அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாம் .

01 September 2009 09:16
//

இந்த டூரிங் டாக்கீஸ் டேமேஜருக்கு வெளம்பரம் புடிக்காது...அதனால அவர் பேரு சீக்ரட் :0))...நான் ச்சும்மா ஆப்பரேட்டர்...

விக்ன விநாயகரை செளக்கியாமான்னு கேக்க சொன்னார் :0))

Unknown said...

தல உங்க எழுத்த படிக்கும்போது பட்டுக்கோட்டை பிரபாகர் ஞாபகத்துக்கு வர்றார். நல்ல துள்ளலான நடை. விடாம படிப்போம்ல

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
தல உங்க எழுத்த படிக்கும்போது பட்டுக்கோட்டை பிரபாகர் ஞாபகத்துக்கு வர்றார். நல்ல துள்ளலான நடை. விடாம படிப்போம்ல

02 September 2009 12:53
//

வாங்க முகிலன்...வருகைக்கு நன்றி....

பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியா இருக்கு?? இப்பிடியெல்லாம் ஓவரா புகழாதீங்க....ஏற்கனவே அந்த வேதாளத்துக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி...இப்பிடியெல்லாம் சொன்னா அப்புறம் தொங்குறதுக்கு சந்தன மரம் கேட்கும் :0))

KarthigaVasudevan said...

அது சரி said...

//ஏற்கனவே அந்த வேதாளத்துக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி...இப்பிடியெல்லாம் சொன்னா அப்புறம் தொங்குறதுக்கு சந்தன மரம் கேட்கும் :0))//


ஏன் சவுக்கு மரம் மறந்து போச்சாக்கும்!!!

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...
அது சரி said...

//ஏற்கனவே அந்த வேதாளத்துக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி...இப்பிடியெல்லாம் சொன்னா அப்புறம் தொங்குறதுக்கு சந்தன மரம் கேட்கும் :0))//


ஏன் சவுக்கு மரம் மறந்து போச்சாக்கும்!!!

03 September 2009 03:57
//

சவுக்கு மரத்துல எப்படி தொங்குறது?? அதுல கிளையே இருக்காதே?? வேதாளத்துக்கு புளியமரம் தான் ஃபேவரைட் :0)))

பழமைபேசி said...

//மிஸஸ்.தேவ் said...
சத்தமே இல்லாம இன்னைக்கு படம் ஓடிட்டு இருக்கு தியேட்டர்ல!!!
//

ஆனாலும் இன்னும் அந்த மலையாளப் படம் வந்த பாடில்லையே?

ராஜ நடராஜன் said...

வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சதிலிருந்து கதையில் மூழ்கி விட்டேன்.அதனால் எந்த எழுத்துக்கு பின்னூட்டம் போடறதுன்னு தெரியல.நல்லாயிருக்கு.

ராஜ நடராஜன் said...

ஆளாளுக ராஜேஸ்,பட்டுக்கோட்டை பிரபாகர்ன்னு உசுப்பேத்துறாங்க!ஆனா அதையும் மிஞ்சும் கதை சொல்லலுக்கு தகுதியான தொடரும்.மீண்டும் ஒரு நல்லாயிருக்கு.

ராஜ நடராஜன் said...

//சவுக்கு மரத்துல எப்படி தொங்குறது?? அதுல கிளையே இருக்காதே?? வேதாளத்துக்கு புளியமரம் தான் ஃபேவரைட் :0)))//

எங்க ஊருலயெல்லாம் முருங்கைக்காய் மரத்துலதான் குடியிருக்குமாக்கும்:)