Wednesday, 29 December 2010
கடுங்குண பெருவழுதியும் தாருவின் காகமும்
ஞாபகம் தான் பெரிய பிரச்சினை. இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுவது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஹிஸ்டரி க்ளாஸ் கட் பண்ணியதன் விளைவு. நரசிம்மவர்ம பல்லவன் மகேந்திரன் இரண்டாம் புலிகேசியா மூன்றாம் புலிகேசியா. தொலையட்டும். ஏதோ ஒரு நம்பர். கடுங்குண பெருவழுதிக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு என்று வசனம் சொல்லாதீர்கள். இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டால் எல்லாருக்குமே பீதியில் பேதியாகும். எதிரே சூரிய வெளிச்சத்தில் கம்பம் பளபளத்தது. போர்க்காலத்தில் நெய்க்கு பஞ்சம். ஆமணக்கு எண்ணெய் தடவி இருப்பார்கள் போலிருக்கிறது. கேஸ்டர் ஆயில். பெருவழுதியை யானை மீது ஏற்றி கம்பத்தின் நுனியில் உக்கார வைத்தால் படைவீரர்களுக்கு அன்றைய வேலை முடியும். அரசு வேலை என்றாலும் டென் ட்டூ ஃபோர் இல்லை.கருணாநிதி ஆட்சிக்கு வர இன்னமும் காலம் இருக்கிறது. .அவர்களும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள். மீதியை நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை பார்த்துக் கொள்ளும். இது கொஞ்சம் காமெடி. நியூட்டன் வரும் முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்தது.
என் முகத்தில் பல்லி ஒன்று விழுந்து ஓடியது. பத்து மணிக்கு மேல் படுத்திருந்தால் பல்லி விழுமோ. என்ன எழவோ. காலையில் பல்லி முகத்தில் விழித்தால் என்ன பலன். சித்தியானந்தாவை கேட்கலாம். அவர் தான் இப்பொழுது பாப்புலர் சாமி. ஆனால் அவர் கதவை மூடிக் கொண்டு எப்பொழுதும் பிஸி.டோரை திற ஏரு வரட்டும் என்று ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாராம். தமிழ் இலக்கியம் வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.
புரண்டு படுத்தால் ஃபோன் அடிக்க ஆரம்பித்து விட்டது. தாரு. தாருவை உங்களுக்கு தெரியாது என்றால் நீங்கள் அவரை தினமும் படிக்காத கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவர். பிரபல எழுத்தாளர். தமிழில் தான் எழுதுகிறார். பூடான், மணிப்புரி, சிக்கிம், மேகாலயா. பொங்கல் லாட்டரி இல்லை. இங்கெல்லாம் அவருக்கு கட் அவுட் இல்லாத இடமே இல்லை. மேகாலயாவில் காடுகளை அழித்து இவரது கட் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். பூடானுக்கு இங்கு இருந்து தான் ஏற்றுமதி. பூடான் இந்தியாவில் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு இட்லி தின்றால் இப்படி தான் மூளை செத்துப் போகும்.
பெருவழுதியை யானை மீது ஏற்றி இருந்தார்கள். பெருவழுதி என்றால் வயதான கிழவன் என்று நினைக்காதீர்கள். குடும்ப பெயர். வயதென்னவோ இருபது சொச்சம் தான். ஆனாலும் அவன் கறுத்த முகம் வெளுத்து போய் இருந்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் எல்லாம் இல்லை. மரண பயம்.இனி தப்பிக்க வழி இல்லை. இப்படி கழுவில் ஏற வேண்டும் என்பது விதி. குல சாபம். தமிழ் குலம்.
தாருவின் குரல் சங்கீதம் போல் இருக்கும். அவருக்கு மட்டும். இன்னைக்கு ஈவ்னிங். ரிலீஸ் பண்றேன். தாரு இப்படி அடிக்கடி ரிலீஸ் பண்ணுவது வழக்கம் தான். மம்மி ரிடர்ன்ஸ். நோ வொண்டர். கண்டிப்பா வந்துடு. என் புக் ரிலிசூக்கு தமிழ்நாடே திரண்டு வரும்னு டைம்ஸ் ஆஃப் பூடான்ல போட்ருக்காங்க. என்னைத் தவிர எழுத யார் இருக்கா. மூணு லட்சம் பேரு வரணும். அண்ணா சாலைல நிக்க இடம் இருக்கக்கூடாது. இருந்தா தமிழ் இலக்கியம் செத்துடுச்சு.மன்சூர் அலிகானுக்கு இப்பொழுதெல்லாம் வாய்ப்பே கிடைப்பதில்லை.
யானை மீது இருந்த கடுங்குண பெருவழுதியை பாகன் அங்குசத்தால் குத்தினான். பெருவழுதிக்கு முறைக்கவும் தெம்பு இருக்கவில்லை. பரிதாபம். பாகனின் முகத்தில் வெள்ளையாய் பற்கள். இப்பொழுதெல்லாம் யானை பயப்படுவதே இல்லை. அங்குசத்தை கூர் தேய்க்க வேண்டும். சொல்லிக் கொண்டே பெருவழுதியின் இடுப்புத் துணி விலக்கி தொடையில் மெல்ல மெல்ல குத்தினான். அங்குசம் ஒரு அரை இஞ்ச் போயிருக்கும். பெருவழுதி கால்கள் வழியே சிவப்பு நிறம் வழிந்தது.
நான் போன போது அரங்குக்கு பின்னால் நாலு பேர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். டாஸ்மாக் வாசம். தாருவுக்கு டாஸ்மாக் பிடிக்காது. எல்லாம் ஃபாரீன் சரக்கு தான். அஜீத் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணாங்களாம். பீர் எல்லாம் மனுஷன் குடிப்பானா. அதான். ஒரு லிட்டர் சரக்கு. ஒரு வாளி தண்ணி. மிக்ஸ் பண்ணி கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணப் போறோம். அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம். அடுத்த வருடம் டிவி விளம்பரம். மஞ்சள் பையில் சிக்கன் பிரியாணி, ஓல்டு மங்க் ரம், ஊறுகாய்.இனி தமிழ் இலக்கிய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. மூணு லட்சம் பேரு. எப்படியும் ஒரு லட்சம் பேர் வந்துடுவாங்க. கரூரில் கொங்கு முன்னேற்ற கழக மாநாடு. முப்பது லட்சம் பேர் வருகிறார்களாம். மணல் ஓடும் அமரவாதி ப்ரிட்ஜ். கழக கண்மணிகள் கட்டியது. தாங்குமா என்று தெரியவில்லை.
கந்தவேலா டைரக்டர் காகத்தை ரிலீஸ் செய்தார். அப்படியே போய் இருக்கலாம். இந்த நாவல் ஒரு தேவிகா புத்தகம். இதை வீட்டில் வெளியில் கம்மாக் கரையில் என்று எங்குமே படிக்க முடியாது. அவர் வேறு எங்கு வைத்து படித்தார் என்று தெரியவில்லை. ரூம் போட்டு படித்திருப்பார் போல. தாரு பெய்லீசும் ஷிவாஸ் ரீகலும் அடிக்காமலயே உற்சாகம்.தானாக வந்து ஆடு மாட்டுகிறது.
பாகன் கடுங்குண பெருவழுதியை கழுவில் தூக்கி வைத்தான்.
வெளியில் வந்து இருட்டான இடத்தில் மறைந்து நின்று கொண்டேன். கொஞ்சமாய் வெளிச்சம். யாரும் என்னை பார்க்க முடியாது. காகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே...............
========================
Monday, 6 December 2010
நந்தலாலாவும் தரை டிக்கட்டும்
ஆனால், உலகத் திரைப்பட நிபுணர்களையும் தரைடிக்கட்டுகளையும் ஒருங்கிணக்கும் ஒற்றை புள்ளி உண்டு. அம்மா என்று சொல்லித் தொலைக்காதீர்கள். தமிழ்படம். அம்மாவே இல்லாதவனுக்கும் இருப்பது நட்பு. அம்மாவையும் அப்பனையும் வெட்டி ஜெயிலுக்கு சென்றவனுக்கு கூட ஏதாவது நட்பு இருந்து தான் தீரும். அவனை எவருமே நட்பாக நினைக்காவிட்டாலும் அவன் யாரையாவது நட்பாக நினைத்துக் கொண்டிருப்பான்.
எப்படி திட்டமிட்டு யாரையும் காதலிக்க முடியாதோ அப்படியே திட்டமிட்டு நட்பும் ஏற்படுத்த முடியாது. ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத நேரத்தில் தான் உண்மையான நட்புகள் ஏற்படுகின்றன. சிறிய ஓடையாக ஆரம்பித்து பெருநதியாக பிரவாகமெடுக்கும் நதியைப் போல. நந்தலாலா நட்பெனும் நதியின் ஓட்டம். நதிக்கே உரிய சுழிவுகள், தடைகள், பெருக்கெடுப்பு.
அம்மாவை பார்ப்பதற்காக பள்ளியிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவனுக்கும் அதே நோக்கத்துடன் மனநிலை தவறியவர்களுக்கான இடத்திலிருந்து தப்பி வரும் நடுத்தர வயது ஆளுக்கும் நட்பு. எங்கே என்றால் இருவரும் மூத்திரம் அடிக்க போகும் இடத்தில். யோசித்து பார்த்தால் என்னுடைய எல்லா நட்புகளும் இப்படி தற்செயலாக நிகழ்ந்தவை தான். உண்மையில் அப்பொழுது ஏற்படுவது நட்பு கூட அல்ல. ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த நதியும் பெருநதியாக பிறப்பதில்லை.
சந்தேகத்துடனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் முயற்சியுடனும் தொடரும் நட்பு போக போக பலமாகிக் கொண்டே போகிறது. கிளைநதிகள் போல இடையில் வந்து சேரும் மேலும் சில நட்புகள்.
ஒரு காட்சியில் மனநிலை தவறியவர் போல வரும் மிஸ்கினை பலர் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்பொழுது அந்த வழியாக வரும் பழைய நண்பர்களை கண்டவுடன் மிஸ்கினுக்கு வரும் பலம். நண்பனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவர் ஆடும் கொண்டாட்டம். அழகிய குறுங்கவிதை. அனுபவித்தவர்கள் பாக்கியவான்கள்.
மிஸ்கின், விபச்சாரி பாத்திரத்தில் வரும் ஸ்னிக்தா(?), சிறுவன் அகி ஒரு ட்ரக்கின் பின்னால் உட்கார்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். அகி உயிரைப் போல பாதுகாத்து வரும் அவன் அம்மாவின் படம் காற்றில் பறந்து போகிறது.மிஸ்கினை உலுக்க அந்த பாத்திரம் நல்ல உறக்கத்தில். ஸ்னிக்தா சத்தம் போட்டு ட்ரக்கை நிறுத்தி ஓடோடிப் போய் அந்த படத்தை எடுக்கிறார். அகி அதைப் பிடிங்கிக் கொண்டு ஓடுகிறான். அப்பொழுது ஸ்னிக்தாவின் முகம் காட்டும் உணர்ச்சிகள். In the end we remember not the words of our enemies but the silence of our friends. Martin Luther King.
லாரியின் ஹார்னை திருடி விட்டதாக மிஸ்கினை அடித்து நொறுக்கும் டிரைவர். மிஸ்கின் சொல்லும் ஒரே வரியில் அதிர்ந்து போய் அப்படியே உறையும் இடம். ஒரே ஒரு வசனம் கூட இல்லை. கடைசி வரை அந்த பாத்திரத்துக்கு வசனமே இல்லை. ஆனால் அந்த முகபாவங்கள். அந்த பாத்திரம் வரும் அத்தனை காட்சிகளும் உறைந்து போன இசை போல.
சில நேரங்களில் நட்பின் வார்த்தைகள் வாள் போல. ஒற்றை அல்ல. பல வாட்கள் ஒரே நேரத்தில். மென்டல் என்று சொன்னதற்காக ஆட்டோ ட்ரைவரை அடித்து நொறுக்கும் மிஸ்கின், அதே வார்த்தையை சொல்லும் ஒரு ஆறு வயது பையனிடம் எதுவும் செய்ய முடியாமல் கதறும் இடம். நட்பு சுகம் மட்டுமல்ல, அது உயிர் வாதையும் கூட. உயிருடன் தோலை உரிக்கும் வாதை.
இந்த படத்தில் பல குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த முக்கியமான குறியீடு கடைசி காட்சியில் அம்மாவை மனநல விடுதியில் சேர்த்து விட்டு மிஸ்கின் வெளியே வருகிறார். அவர் உள்ளிருந்த இடம் இருட்டாகவும் வெளியே வருமிடம் வெளிச்சமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் இருளும் ஒளியுமே மிகப் பெரிய குறியீடு.நட்பெனும் பிரமாண்ட வெளிச்சம்.
சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் கவிதையின் சுகம் அதன் அனுபவமே.விளக்கம் அல்ல.பனிக் கொட்டும் நள்ளிரவில் கொஞ்சமான போதையுடன் விஸ்கியும் சிகரெட்டுமாக இப்படி ஒரு படம் பார்ப்பதும் கூட கவிதையின் கொண்டாட்டமே.கவிதை கலைமகள் என்று எவன் சொன்னான்?
நதி போல நகரும் படத்தில் பிரச்சினை என்றால் ஸ்னிக்தாவின் பாத்திரம் துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவன் அகி கடைசியில் ஸ்னிக்தாவை அம்மாவாக ஏற்க எந்த காரணமும் இல்லை. சில இடங்களில் இல்லை பல இடங்களில் இளையராஜா படுத்துகிறார். மெளனம் மிகப் பெரிய இசை. தமிழ்ப்பட சாபம் போல கடைசியில் வரும் காட்சிகள்.
இந்த படம் கிகுஜிரோவின் காப்பியா இல்லை இன்ஸ்பைரேஷனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்படி பார்த்தாலும் இது நிச்சயம் பார்க்க வேண்டிய படமே. இயக்குனர் மிஸ்கினை விட நடிகர் மிஸ்கின் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இயக்குனர் மிஸ்கினை பிடிக்காவிட்டாலும் நடிகர் மிஸ்கினுக்காக.
இது காப்பியா ஒரிஜினலா என்ற விவாதத்தை நான் வேண்டுமென்றே விலக்குகிறேன். நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், இந்த படம் காப்பியாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் மிஸ்கினுக்கு என் வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் நடிகர் மிஸ்கின் இயக்குனரை தாண்டிப் போய்விட்டார். அதற்காக, மிஸ்கின் ஐ லவ் யூ என்று சொல்லத் தோன்றுகிறது.
Tuesday, 23 November 2010
பூனைகளின் கதை
தனித்தே புரண்டு படுத்த ஒரு பின்னிரவில்
என் பிணங்கள் மூடி தூர்ந்து போன என் கல்லறையின்
மண் விலக்கி வெளி வந்த அவன்
என் முகம் தொட்டு கதை சொல்ல ஆரம்பித்தான்.
கடவுள் கதை நிறைய உண்டு
காதல் கதை உனக்கே தெரியும்.
பாட்டி சொன்ன கதையல்ல
பார்க்கப் போகும் கதையும் அல்ல.
கடுவன் பூனை தாய்ப் பூனை
குட்டிப் பூனை
காமத்தில் கால்பரவாது செல்லும் பூனை
பல திருட்டுப் பூனைகள்
திருடுவது பூனை குணம்
கருமமே கண்ணாய் சில பூனைகள்
கனவிலே சில பூனைகள்
எந்நேரமும் மீசை முறுக்கி சில பூனைகள்
வெள்ளை கறுப்பு பழுப்பு என்று பல நிறம்
எல்லாப் பூனையும் தினம் வரும்
தினம் போகும்.
வருமிடம் போகுமிடம் எனக்குத் தெரியாது
வந்து கொண்டே தான் இருக்கின்றன பூனைகள்
இப்படியே போனது சில நாட்கள்
அன்றைக்கு
அத்தனை பூனைகளையும்
தின்று செரித்து
வெறுமனே சோம்பிக் கிடந்தது அந்தப் பூனை.
எல்லாவற்றையும் தின்றேன்
இனி நீதான் மிச்சம்.
எழுந்து வந்தது என்னைக் கண்டு.
நீளமாய் கால்கள்
இரவால் செய்தது போல ஒரு நிறம்
பற்களும் கூட.
முன்பொரு முறை பார்த்திருக்கிறேன் எங்கோ
அதற்கு கண்ணே இல்லை.
வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.
Wednesday, 17 November 2010
கலாச்சாரமும் சில கழிசடைகளும் (அ) இது தாண்டா விபச்சாரம்
புருஷன் செத்துட்டா பொண்டாட்டி உடன்கட்டை ஏறிடணும். இல்லாட்டி அந்த பெண்ணின் தலையை மொட்டையடிச்சி வெள்ளை சேலை கொடுத்து இருட்டில் உட்கார வைத்ததும் இந்த கலாச்சாரம் தான். அப்படி கணவனை இழந்த பெண் எதிரில் வந்து விட்டால் முண்டச்சி மூஞ்சில முழிச்சா போற காரியம் வெளங்குமா என்று அசிங்கப்படுத்தியதும் இந்த புடுங்கி கலாச்சாரம் தான். கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.
அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம்.
லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.
டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.
Monday, 18 October 2010
எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும்
இந்த கதை எதுக்கு என்றால் நேற்றிலிருந்து எனக்கு பரவை முனியம்மாவை கொஞ்சம் கூட பிடிக்காமல் போய்விட்டது. அவனவன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்கிறான் என்றால் எனக்கு மட்டும் எவ்ளோ செலவானாலும் பரவால்ல என்று அடுத்தவர்கள் சூனியம் வைக்கிறார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. என் புத்தியை சொல்ல வேண்டும். ஒரு பாப்கார்னுக்கும் கறுப்பு காஃபிக்கும் ஆசைப்பட்டு எவனாவது எந்திரன் பார்ப்பானா?
====================================
Thursday, 14 October 2010
கள்ளி
கடித்து செல்லும் ஒட்டகங்கள்
திசை இல்லாத திசையில் கிளம்பி
மணல் போர்வை மூடும் காற்றின் இரவுகள்
தானும் நிழலும் தவிர தனியே
தினமும் புதிய முள்ளுடன்
வளர்ந்து கொண்டே இருக்கிறது கள்ளி.
Thursday, 23 September 2010
ஆசை
உருவம் காட்டிய கண்ணாடி உடைத்து
சிதறிப் போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
ஏதேனும் ஒன்று காணாமல் போகும்.
=========================================
Monday, 13 September 2010
சிலுவை
Friday, 10 September 2010
என் பெயரில் ஒரு போலி : எச்சரிக்கை பதிவு
கையை பிடிச்சு இழுத்த கதை கிடைக்கவில்லையோ என்னவோ என்னைப் போலவே பெயருடன் ஒரு போலி கிளம்பி வந்திருக்கிறது. நான் "அது சரி" என்று பெயர் வைத்திருந்தால் அந்த போலி "Adhusari" என்று பெயருடன் திரிகிறது.
எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்று எந்த தறுதலை ரூம் போட்டு யோசித்ததோ இதை எழுதும் இன்றைக்கு 10/09/2010 அன்று சுட சுட ஒரு போலி ப்ரஃபைலை ஏற்படுத்தி என் பெயரில் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறது.
அதனால் வேறு வழியின்றி எனது ஃப்ரஃபைல் பெயருடன் எனது ப்ரஃபைல் ஐ.டியும் இணைத்து " அது சரி(18185106603874041862)" என்ற பெயரில் மட்டுமே எனது பின்னூட்டங்கள் வரும். வேறு எந்த பெயரிலும் வந்தாலும் அது போலியின் பின்னூட்டம். அதை நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த போலி உயிரினத்தின் கமெண்டுக்கு நான் பொறுப்பல்ல.
ஆனால், இந்த ஐ.டியையும் இணைத்து போலி பெயரை உருவாக்குவது பெரிய காரியமல்ல. இந்த போலிகளை கண்டுபிடிக்க ஒரே வழி ஏற்கனவே டோண்டு ராகவன் அவர்கள் சொன்ன எலிக் குட்டி சோதனை தான். ப்ரஃபைல் பெயர் மீது மவுஸை வைத்தால் அது என் ப்ரஃபைலுக்கு செல்ல வேண்டும். எனது ப்ரஃபைலில் "முரண்தொடை, வருங்கால முதல்வர்" என்று இரண்டு தளங்கள் இருக்கும். இது தான் அது நான் இட்ட பின்னூட்டம் என்பதற்கு ஒரே அடையாளம்.
நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. அதனால் உங்கள் தளங்களில் என் பெயரில் பின்னூட்டம் வந்தால் தயவு செய்து அதை செக் செய்யுங்கள்.
இங்கே இணைத்திருப்பது எனது ப்ரஃபைலின் படம். பெரிதாக்க க்ளிக் செய்யவும்.
அடுத்து அந்த போலியின் ப்ரஃபைல். இதை பார்க்க இங்கே சுட்டவும். பெரிதாக்கி அந்த ப்ரஃபைல் என்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். போலியின் நோக்கம் புரியும். எட்டே முக்கால் மணிக்கு ப்ரஃபைலை உருவாக்கி உடனே ஓடோடிப் போய் நண்பர் கலகலப்ரியாவின் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. அடுத்து பதிவர் மதார் அவர்களின் பதிவிலும் ஒரு பின்னூட்டம். மதாரின் பதிவில் ஆன பின்னூட்டத்தின் காரணம் யூகிக்க கஷ்டமில்லை. நேற்று இரவு குருஜி சுந்தரின் பஸ்ஸில் வினவு இடுகையில் எப்படி அவரது பெயரை இழுத்தார்கள் என்று கேள்வி கேட்டதன் பலன். அந்த வினோத உயிரி இதை கவனித்து மதாரின் பதிவில் போய் என் பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. (இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கூகிள் பஸ்ஸிலும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக அறிமுகமே இல்லாத நபர்களை தவிர்க்கலாம். இது வேண்டுகோள் மட்டுமே.)
==============================
Tuesday, 31 August 2010
பம்பரக்கண்ணு..பச்சமொளகா...இஞ்சி மரப்பா....இனிக்க வச்சா... (அ) அய்யாங்...ட்டொய்ங்..4
Thursday, 19 August 2010
புரட்சி செய்வது எப்படி (அ) அய்யாங்...டொய்ங்.. 3
Wednesday, 18 August 2010
எந்திரனும் ஏழைப் பங்காளன்களும் (அ) அய்யாங்...டொய்ங்.. 2
Monday, 9 August 2010
பார்த்த ஞாபகம்
Wednesday, 4 August 2010
எக்ஸ்டஸி....
இலை மறந்து பட்சியின் கண் பார்..
வில் வளைத்து அம்பு தொடுத்து குறி வை...
உண் உடுத்து புணர்
ஓடுவது ஆறு தேங்குவது சாக்கடை
பின் கால் வை முன்னே செல்...
கொள்ளியிடு வம்சம் வளர்
காதல் செய் உயிரென உருகு
துரோகம் செய் கடமை புரி
பொய் சொல் உண்மை உயிர்
எக்ஸ்டஸி எடு மேலே போ...
கீழ் அழுந்து அது ப்ரோஸாக்கின் காலம்
கக்கக்கப்போ
கருத்துக்களை கச்சிதமாக
கவ்விக் கொள்கிறீர்கள் போங்கள்.
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா
அமெரிக்கா ஆஸ்த்ரேலியா பிரிட்டன்
மற்றும் உலக நாடுகளெங்கும்
உற்சாக விற்பனை.
======================
Sunday, 25 July 2010
ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..
என்ன சொல்ல வந்தேன். ஆமாம். தமிழின் வளமை. ஆறு மணி நேரம் பிச்சை எடுக்கிறேன் என்று நான் எழுதினேன். அதாவது எனக்கு ஆறு மணி நேரம் தேவை என்று. அதையே ஃபோன் செய்து, ஆறு மணி நேரமாக பிச்சை எடுக்கறீங்க? ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அரை மணி நேரத்தில் பிச்சை கிடைக்குமே என்கிறார்கள்.
அதை விடுங்கள். எனக்கு இந்தி தமிழ் மலையாளம் இப்படி பல மொழி தெரியும். எனக்கு சிலே மொழியில் எழுத வேண்டும். ஆனால் சிலேயில் என்ன மொழி பேசுகிறார்கள் என்றே தெரிந்து தொலைக்க் மாட்டேன் என்கிறது. அமெரிக்காவின் உத்தரவுப்படி சிலேவில் யாருமே பேசுவதில்லை.
இப்படி நண்பர்களே இல்லாததால், டெல்லியிலிருக்கும் போதே யார் என்ன சொன்னாலும் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொல்லி விடுவேன். அன்று கூட அப்படித் தான் ஒரு ஜந்தர் மந்திர் ரோடில் ஒரு பஞ்சாபி காரன் என்னவோ சொன்னான். எனக்கு பஞ்சாபி தெரியாது. ஆனால் அவன் பஞ்சாபியில் தான் பேசுகிறான் என்றும் தெரியாது. அதனால் நண்பன் என்னவோ சொல்கிறான் சொல்லிவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். நான் இப்படி இருப்பதால் கதவை இறுக்கு பூட்டாத நேரங்களில் சித்யானந்தர் கூட டோரு நீ ஒரு குழந்தை என்பார். அப்போது பஞ்சிதா யாரென்றே எனக்கு தெரியாது.
நான் ரஞ்சனாவிடன் சொல்லி விட்டேன். இதோ பார். நான் எழுதுவதை எந்த மொழியில் எழுதினாலும் எவனும் படிக்க மாட்டான். அதனால் தான் தமிழில் எழுதுகிறேன். இங்கே கொஞ்சம் பேராவது படிக்கிறார்கள். தமிழ் இலக்கிய சூழல் நாசமாகி விட்டது. இருநூறு வருடமாக தினம் முப்பது மணி நேரம் எழுதும் ஒருவன் ஒரு ஃபெராரி கார் கூட வாங்க முடியவில்லை. இந்த நாடு உருப்படுமா? தமிழர்கள் கலாச்சாரம் இல்லாத மொன்னைகள். அவர்களுக்கு பெராரி கார் தெரியாது. ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ என்று பெரீஸ் பிஸ்கட் தான் தெரியும்.
Tuesday, 13 July 2010
அறிவுஜீவி அண்ணன் சிவராமனுக்கு.....
முக்கிய அறிவிப்பு: எனக்கும் "அன்பின்" அண்ணன் சிவராமன் அவர்களுக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையோ இல்லை வாய்க்கா வரப்பு தகராறோ இல்லை...எனக்கு பாப்லோ நெருதா, பூக்கோ, போர்ஹே, உம்பர்ட்டோ எக்கோ என்று எவரையும் தெரியாது....ஆனால், சாத்தான் வேதம் ஓதுவதை போன்ற ஆதாரமற்ற, போகிற போக்கில் அள்ளி விடும் இடுகைகளை ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இடுகை...
நான் கேப்பிடலிஸ்ட் என்பதும், போலி நாட்டாமைகளை எனக்கு பிடிப்பதில்லை என்பதும் மற்றொரு காரணம்.
//''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.
//
போலியோ மருந்து கண்டுபிடிக்கும் முன் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? இப்பொழுது எத்தனை பேருக்கு அந்த நோய் வருகிறது? அப்படியே வந்தாலும் எந்த நாடுகளில் வருகிறது? அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக நாடுகளிலா?
//அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...
//
உங்கள் வாதமே உங்கள் முகத்தில் அறைகிறது...உங்கள் வாதப்படி, உலகம் முழுவதும் அம்மை தடுப்பூசி போடப்படுகிறது...ஆனால், அம்மைத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்களா? அப்படியானால், இந்தியாவில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் ஆறு கோடியாக இருக்கலாம்...ஆனால் உண்மை அப்படி இல்லை...இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 110 கோடி...(இல்லை, இந்த எண்ணிக்கையும் பார்ப்பானீய பொய் என்பீர்களா?)
//மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது. //
கம்யூனிஸ நாடுகளால் ஒரு கருமமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக எவன் எதை கண்டுபிடித்தாலும் அய்யோ முதலாளித்துவம் சுரண்டுகிறது என்று பின்புறத்தில் அடித்துக் கொண்டே அதை திருடும் சோவியத் மனப்பான்மை தவிர இந்த வரிகளில் வேறு எதுவும் இல்லை.
உங்களுக்கு ஒரு ஐடியா.... கம்யூனிஸ கருணைக் கடவுள் ஸ்டாலின் பற்றி போலந்தில் போய் பிரச்சாரம் செய்து பாருங்கள்...ஒரு செருப்பல்ல, ஒரு லட்சம் செருப்புகள் உங்கள் முகத்தில் எறியப்படும்...
//மருந்துகள் என்பன மருத்துவர்களாலேயே தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட முறை அழித்து துடைக்கப்பட்டு -
மருந்தை தயாரிக்க தொழிற்சாலைகளும், விற்பனை செய்ய மருந்துக் கடைகளும் உருவாகின. அதாவது மருந்து என்பது பண்டமாகியது. //
மருந்துகள் ஒற்றை மருத்துவனால் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே ஆதிக்க மனப்பான்மை...தவிர, அன்றைக்கிருந்த மக்கள் தொகை என்ன? இன்றைக்கிருக்கும் மக்கள் தொகை என்ன? ஒற்றை மருத்துவனை நம்பி அழிந்து போன கிராமங்கள் எத்தனை?
//1763ல் சலிசிலிக் அமிலத்தின் மருத்துவப் பண்புகள் உணரப்பட்டன. 1817ல் அபினியிலிருந்து மார்பினும், அடுத்த ஆண்டே நக்ஸ்வாமிகாவிலிருந்து ஸ்டிரைசினும், 1820ல் சின்கோனா மரப்பட்டையிலிருந்து கொயினாவும் பிரித்தெடுக்கப்பட்டது.//
உணரப்பட்டன? ஒற்றை வரியில் திருட்டு தனமாக கடப்பதில் இருந்தே தெரிகிறது உங்கள் நேர்மைத்திறம்...
இவை எதுவும்....மார்க்ஸாலோ எங்கல்சாலோ சொல்லப்படவில்லை...மாவோவாலும், லெனினாலும் கண்டுபிடிக்கப்படவில்லை...விடாத ஆராய்ச்சியாலும், அந்த ஆராய்ச்சியை நடத்த முதலீடு செய்த சிலராலும் தான் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர ஓவர்நைட்டில் உணரப்படவில்லை......துண்டு பிரச்சாரம் செய்பவர்கள் எதையுமே கண்டுபிடித்ததாக சரித்திரம் பதிவு செய்யவில்லை...
//இந்தியாவிலிருந்து ரூபார்பும், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னாவும், ஜப்பானிலிருந்து பச்சைக் கற்பூரமும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து நட்மெக்கும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட மருந்துகள் மீண்டும் இதே நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. //
விவசாயிடமிருந்து நெல்லை வாங்கி, அரவை மில்கள் விவசாயிக்கே அரிசி விற்கின்றன....இதில் என்ன தவறு?? நெல்லை யாரும் தின்ன முடியாது...
//மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.//
ஏன் உங்கள் துண்டு பிரச்சார பீரங்கியை முடுக்கி விட்டு, மஞ்சள் காமாலை ஆட்கொல்லி நோயல்ல, அது ஒரு வரம் என்று பிரச்சாரம் செய்திருக்கலாமே?
உணவு முறையை ஒழுங்குபடுத்துவது நோய்வராமல் வேண்டுமானால் தடுக்கலாம்...ஆனால் நோய் வந்தவர்களுக்கு என்ன செய்வது? எல்லாரும் அவனவன் பிரச்சினையை அவனே பாத்துங்கங்க..இருந்தா இருங்க செத்தா சாவுங்க என்று விட்டுவிடுவது பைத்தியக்கார அரசாங்கம் செய்யும்...இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்யும் (ஆனால், பொலிட்பீரோ மெம்பர்கள் சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)...
ஆனால், கொஞ்சமாவது பொறுப்புள்ள அரசாங்கங்கள் அப்படி இருக்க முடியாது.
//தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...//
பொத்தாம் பொதுவாக தடை செய்யப்பட்ட மருந்து...வழக்கமான உங்கள் யோக்யதை தெளிவாக தெரிகிறது...
என்ன மருந்து தடை செய்யப்பட்டது? என்ன காரணங்களால், எந்த வயதான, எந்த உடற்கூறு உள்ள நபர்களுக்கு தடை செய்யப்பட்டது? எந்த ஆதாரமும் தராது எதற்கு உளறி வைக்கிறீர்கள்?
//'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' பொது புத்தியில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும்.//
மீண்டும் முட்டாள்தனமான வாதம்...
உண்மையல்ல என்று ஸ்டேட்மென்ட்...தொடர்ந்து "தடுத்து நிறுத்தியது எவ்வளவு உண்மையோ" என்ற சொல்லாடல்... அப்படியானால், நிறுத்தியது என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள்...
ஆக, இந்த தடுப்பூசிகள் உண்மையிலேயே சில நோய்களை வராது தடுத்திருக்கின்றன அல்லது குணப்படுத்தியிருக்கின்றன...ஆனால், இப்படி தடுப்பூசிகள் இல்லையென்றால் மட்டும் இந்த புதிய நோய்களோ இல்லை வேறு புதிய நோய்களோ வந்திருக்காது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
//எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. //
ஆமாம்...தானாகவே ஏற்படும்...(அப்புறம் எதற்கு இவர்களால் தோன்றியது, அவர்களால் ஏற்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?) தானாகவே மறையும்...
ஆனால், அப்படி மறைவதற்கான காலம் என்ன? போலியோ நோய் வந்தவர்களின் கால்கள் என்றைக்கு நேராகி இருக்கின்றன? யானைக்கால் வியாதி என்றைக்கு தானாகவே குணமாகும்? எய்ட்ஸ் வந்தவர்களில் எத்தனை பேருக்கு தானாகவே குணமாகி இருக்கிறது??
//1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...//
சரி, இதற்கு என்ன ஆதாரம்? பைத்தியக்காரனின் திருமொழிகளை மட்டுமே ஆதாரமாக கொள்ள முடியாது. தவிர, 1950களில் உலக மக்கள் தொகை என்ன? இன்றைக்கு மக்கள் தொகை என்ன? எத்தனை சதவீதம்? இன்றைக்கு போலியோ நோய் கண்டவர்களின் எண்ணிக்கை என்ன?
அப்படிப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகம்? மருந்து பயன்படுத்தும் ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளிலா இல்லை மருந்து வாங்க வசதியில்லாத மூன்றாம் உலக, கம்யூனிஸ்டுகளால் நாசம் செய்யப்பட்ட நாடுகளிலா?
//அம்மோனியம் சல்பேட் - வயிறு குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவும்.//
அம்மோனியம் சல்பேட் : இது நைட்ரஜன், ஹைட்ரஜன், கந்தகம், ஆக்ஸிஜனின் கூட்டுக் கலவை...கத்தரிக்காயில் கந்தகம் இருக்கிறது...குடிக்கும் நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இருக்கின்றன...முட்டையிலும் கோழிக்கறியிலும் இருக்கும் எல்லாப் புரோட்டீன்களுக்கும் அடிப்படை நைட்ரஜன்...நடைமுறையில் பலரும் பல விதத்தில் அம்மோனியம் சல்ஃபேட் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...எத்தனை பேர் நரம்பு மண்டலத்தில் விஷம் பரவி இருக்கிறது?
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு பொருட்களும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையாகவே உருவாவது, அல்லது உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது...மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் கூட கார்ஸியோஜெனிக் தான்...புற்று நோய் வரவைக்கும் தன்மை கொண்டது...அரிப்பு தன்மை கொண்டது...அதனால் சுவாசிக்காமல் நிறுத்தி விடலாமா?
உங்களின் மற்ற திரிபு வாதங்கள் கம்யூனிஸ்டுகளின் துண்டு பிரச்சாரம் தான்...அதற்கு வழக்கம் போல எந்த மரியாதையும் கிடையாது. முடிந்தால் ஆதாரம் கொடுங்கள்...
//சுற்றுப்புற சீர்கேட்டை களையாமல் -
ஏகாதிபத்தியங்களுக்கு கூஜா தூக்கியபடி வலம் வருகிறதே ஆளும் வர்க்கம்...
இவர்களால்தான் தடுப்பூசி வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்ளை லாபமும் பன்னாட்டு நிறுவனங்கள் அடைகின்றன. மக்களும் கொத்து கொத்தாக பலவித நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை இனியும் அனுமதிக்கத்தான் வேண்டுமா?//
சுற்றுப்புற சீர்கேட்டை களைய வேண்டியது தான்...ஆனால் இன்றைக்கு சுற்றுப்புறத்தை சீர்கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சைனா...உங்களை போன்ற கம்யூனிஸ்டுகள் அதை முதலில் சரி செய்யலாம்...ஆனால் மாட்டீர்கள்...ஊருக்கு உபதேசம், பொலிட்பீரோ மெம்பருக்கு ஏசி கார் என்பது தானே கம்யூனிஸம்!
உங்கள் ஒட்டு மொத்த இடுகையும் குப்பை என்பதை நிறுவ ஒரு எளிய கேள்வியே போதும். ஐம்பது வருடங்களுக்கு முன் மனிதர்களின் ஆயுட்காலம் என்ன? இன்றைக்கு ஆயுட்காலம் என்ன? அன்றைக்கு கொள்ளை நோயால் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு எத்தனை கிராமங்களுக்கு அந்த கதி ஏற்படுகிறது?
மீண்டும் மீண்டும் கம்யூனிஸமும், நீங்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்யும் முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...
ஆனால், ஒரு ஆச்சரியம்...எப்படி இதுவெல்லாம் பார்ப்பானீயம், ஆணாதிக்கம், சாதி வெறி என்று நிறுவாது விட்டீர்கள்? ஒரு வேளை இரண்டாம் பாகம் வருகிறதோ?
பின்குறிப்பு: போர்ஹெ தெரியாதவர்களுக்கும் பூக்கோ படிக்காதவர்களுக்கும் நாட்டாமை சிவராமன் பதில் சொல்வதில்லை என்பதால் இவை பதில் எதிர்பார்த்து வைக்கப்பட்ட கேள்விகள் அல்ல... நாட்டாமைகளின் முகம் எத்தனை போலியாக உளுத்துப் போயிருக்கிறது என்பதை காட்டவே இந்த கேள்விகள் ...
மருத்துவ ரீதியான விளக்கங்களுக்கு டாக்டர் ப்ருனோவின் இந்த இடுகையை பார்க்கவும்...டாக்டர் ப்ரூனோ உண்மையான டாக்டர்...திடீர் நாட்டாமை, போலி பகுத்தறிவுவாதிகள் போல போலி டாக்டரோ இல்லை திடீர் டாக்டரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
====================================