Wednesday, 17 November 2010

கலாச்சாரமும் சில கழிசடைகளும் (அ) இது தாண்டா விபச்சாரம்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி. மண்ணே இல்லாத காலத்தில் தோன்றி என்ன மயிரை தின்றார்கள் என்று தெரியவில்லை. அது போய் தொலையட்டும்.  படி தாண்டா பத்தினி. இப்படி ஒரு சொல்லாடல் புனிதமான கலாச்சாரம் என்று இன்று பலரும் மயிரை தட்டிக் கொள்ளும் புடுங்கி கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. அது என்ன படி தாண்டா பத்தினி? அப்போ தாண்டி கடைக்கு போனா? படிக்க போனா? அவங்க எல்லாரும் விபச்சாரியா? இன்றைக்கு படிக்கவும் வேலைக்கும் போகாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? அய்யோ எங்க கலாச்சாரம் புனித கலாச்சாரம் என்று ஊளையிடும் கும்பல் இந்த அளவுகோலை ஏற்குமா?

புருஷன் செத்துட்டா பொண்டாட்டி உடன்கட்டை ஏறிடணும். இல்லாட்டி அந்த பெண்ணின் தலையை மொட்டையடிச்சி வெள்ளை சேலை கொடுத்து இருட்டில் உட்கார வைத்ததும் இந்த கலாச்சாரம் தான். அப்படி கணவனை இழந்த பெண் எதிரில் வந்து விட்டால் முண்டச்சி மூஞ்சில முழிச்சா போற காரியம் வெளங்குமா என்று அசிங்கப்படுத்தியதும் இந்த புடுங்கி கலாச்சாரம் தான். கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.

ஒரு காலத்தில் ஊரெல்லாம் குடுமி.பின்னர் பாகவதர் க்ராப் தான் பாப்புலர். இன்றைக்கு மிலிட்டரி கட்டிங். கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம். 

திருமணம் ஆயிரம் காலத்து பயிரோ இல்லை ஆறுமாசத்து மயிரோ ஆனால் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட சில சமூகங்களில் தாய்மாமனுக்கு முதல் உரிமை என்று மணம் செய்வார்கள். சில சமூகங்களில் அது மிகவும் தவறான விஷயம். சில திருமணம் மூன்று நாள். சில ஒரு வேளையில் முடியும். காதல் திருமணம் செய்தால் ஆள் வைத்து வெட்டிப் போடுவது ஒரு கும்பல் என்றால் நல்லா இருந்தா சரி என்று வாழ்த்துபவர்கள் ஒரு விதம். 

இரண்டு பேருக்கு பிடித்து போனால் அதில் திருமணம் என்ற ஃபார்மாலிட்டி எதற்கு என்று வாழ்வது அவர்கள் விருப்பம். மனம் ஒத்து போகாமல் வேண்டா வெறுப்பாக குடித்தனம் நடத்துவதை விட லிவிங் டுகெதர் எந்த விதத்தில் மோசமாக போய்விட்டது?

பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று வன்முறையாக அரை நிர்வாணமாக அலைய விட்டதும் இதே கழிசடை கலாச்சாரம் தான். பாட்டு கத்துக்கறதும் பவுடர் போடறதும் தேவடியா செய்றது என்று சொன்னதும் இதே கலாச்சாரம் தான். இதை மாற்ற முயன்ற போதும் இதே போன்று பல பன்றிகள் ஊளையிட்டு தான் இருக்கும். கல்யாணம் செய்வதோ செய்யாமல் சேர்ந்து வாழ்வதோ அவரவர் விருப்பம். அதெல்லாம் விபச்சாரம், ஆனால், நாங்கல்லாம் ரொம்ப கல்ச்சர்ட் என்று சொல்லும் கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று சொல்லுமோ? தன் அம்மாவோ தங்கையோ பாட்டு பாடினால் அவர்களை விபச்சாரி என்று சொல்வார்கள் போல.

எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு. சிலர் திருமணம் அவசியம் என்று நினைக்கிறார்கள். சிலர் மனம் ஒத்துப் போனால் திருமணம் அவசியமல்ல என்று நினைக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்த பன்றிகள் லிவிங் டுகெதர் விபச்சாரம் என்றும் அதை ஆதரிப்பவர்கள் விபச்சாரிக்கு பிறந்தவர்கள் என்றும் தங்கள் வக்கிரத்தை வாந்தி எடுத்து ஊளையிடுகிறது. அப்படி பார்த்தால் காலையில் மணம் முடித்து அன்றே இரவில் மணவாழ்க்கையை ஆரம்பிக்கும் கலாச்சாரம் கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் என்று யாரேனும் சொல்லிவிடக்கூடும்.

அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம். லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.

டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.

38 comments:

கலகலப்ரியா said...

உச்சி மண்டைல ஓங்கி அடிச்சுச் சொன்ன மாதிரி இருக்கு...

ஆனா.. இதுக்கும் சொல்லுவாங்க.. நாகரீகமா சொல்லல... கருத்தில உண்மை இல்ல.. அதனாலதான் மசிரு மட்டைன்னு வார்த்தை யூஸ் பண்றோம்ன்னு...

கொஞ்ஞ்சமாவது டீ"செண்ட்" அடிச்சிருக்கலாமே..

vasu balaji said...

/திருமணம் ஆயிரம் காலத்து பயிரோ இல்லை ஆறுமாசத்து மயிரோ ஆனால் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறது./

திருமணம் மட்டுமல்ல கலாச்சாரமும். சேலம் பக்கம் சம்சாரி வெள்ளை ஜாக்கட் போடலாம். வடஆற்காட்டு புள்ளைய கட்டிக்கிட்டு அங்க போய் அதப் போட்டா அங்க அது அவிசாரின்னு அடையாளம். நம்ம ஊர்ல விதவைக்கு வெள்ளைச் சீலைன்னா ஆந்திராவில கல்யாணப் பொண்ணுக்கு வெள்ளைச் சீலைதான்.

vasu balaji said...

/மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும்./

இன்னைக்கு அய்யோ போச்சேன்னு அலறினாலும் தனக்குன்னு வரும்போது வேற வழியில்லாமல் மாற்றிக் கொள்வதும் அதற்கு நொண்டிச்சாக்கு சொல்வதும் ரொம்ப சுலபம். தமிழ்நாட்டு கலாச்சாரம்டி நாம. பாவாடை தாவணி, புடவைதான் கட்டணும்னு கண்டிஷன் போட முடியுமா? வடநாட்டு கலாச்சாரம் சூடிதார் நம்ம கலாச்சாரத்தை அழிக்க வந்த யமன்னா தூங்குறப்ப கல்லைத் தூக்கி போடுவாங்க.

vasu balaji said...

சூடிதார் போடுறவங்க சொல்லுவாங்க. சாரியாம் சாரி, இடுப்பு தெரியுது. முதுகு தெரியுது. கலாச்சாரம் என்னாவறதுன்னு. ஜீன்ஸ் 150ரூக்கு வாங்கி பாண்டி பஜார்ல அரை மணியில தைக்க முடிஞ்சா அதும் சம்மதம். இதுக்கு விளக்கம் வேற எழவு. நீ கலியாணம் பண்ணா ஏன் சொல்ல போறோம். பண்ணாம சேர்ந்திருந்தா சொல்லுவோமாம். அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்க்கறதும் அதுல நொண்ணை சொல்றதும் என்ன கலாச்சார எழவோ தெரியல.

dondu(#11168674346665545885) said...

ஒரு உண்மையை நாம் மறக்கக் கூடாது. லிவிங் டுகதரிலும் ஆணுக்குத்தான் அதிக சௌகரியம். பெண்ணுக்கு பாதுகாப்பு கம்மிதான்.

சம்பந்தப்பட்ட பெண் இதை ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

vasu balaji said...

//அது அவரவர் விருப்பம்.//

இதற்கு ஒருத்தர் கேட்டார். தனி மனித சுதந்திரம்னு தெருவுல நிர்வாணமா போவீங்களான்னு. சாமி அடுத்தவங்கள பாதிக்கிற எதுவும் தனி மனித சுதந்திரம் இல்லை. நீங்க சொல்றது அடுத்த வீட்டுக்காரன் கலியாணம் பண்ணாம சேர்ந்திருந்தா யாரை பாதிக்குதுன்னா பொதுவா ஊர்ல ஒரு மாதிரி பேசுவாங்களாம். கலாச்சாரத்தை எதிர்க்கிறீங்களான்னா இல்லைப்பா. அது நல்லதுன்னு படுறவங்க அதும்படி நடக்கட்டும். அது வேணாம்னு சொல்றவங்கள இழிவாப் பேச உங்களுக்கு என்ன உரிமைன்னுதான் சொல்றோம்னா, அவங்க இஷ்டத்துக்கு விடுங்கன்னா அது சரிதாங்க, ஆனாலும் அதப் பார்த்து மத்தவங்க கெட்டுப் போவாங்களேவாம். அப்ப கலாச்சாரத்துல ஏதோ ஒன்னு எப்படா ஓடலாம்னு நினைக்க வைக்குது. அத கட்டி புடிச்சி மல்லு கட்டுறீங்கன்னு ஒத்துக்கறீங்களான்னா அது அப்படி இல்லையாம்.

vasu balaji said...

அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம். //

Well said.

shrek said...

அடிச்சி தூள் ப‌ண்ணிட்ட‌ மாம்மே....
அத‌க‌ள‌ம் hats off
ரொம்ப‌ தெளிவா எழுதி இருக்கீங்க‌, (அந்த‌ லூசுங்க‌ளுக்கும் புரியும் ப‌டி)
ஆனா மாட்டேன்னு அட‌ம் பிடிக்க‌ர‌ கேசுங்க‌ள‌ ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாது

பிரபாகர் said...

மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள், ஆணி அடித்தார்போல்.

பிரபாகர்...

Thekkikattan|தெகா said...

சரி, தினசரிகளில் தினமும் நாண்டுகிட்டு செத்த செய்தி படிக்கிறோமே அதன் ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்று யோசித்தோமா?

பாகியில் ஹானர் கில்லிங் என்பது தேடிப்போய் சம்பந்தப்பட்டவரை/வளை வெட்டிப் போட்டு வருவது லைசென்ஸ்டு கொலை என்றால், நம்மூரில் மறைமுகமா ஒரு குடும்பமே நடு வீட்டில் நாண்டுகிட்டு செத்துப் போவதில் நம் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது என்பதனை உணர்கிறோமா?

அது ஏன் அவர்கள் சாக வேண்டுமென்ற கட்டாயத்தை நாம் உருவாக்கிக் கொடுக்கிறோம்? அது அந்த தனிப்பட்ட குடும்பம் முகம் கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டிய விசயமில்லையா?

Kavithayini said...

நெத்தியடி..

யாருக்கு எப்பிடிக் குடுக்கணுமோ அப்பிடிக் குடுத்துருக்கீங்க..

ஆனா இதெல்லாம் உரைக்குமா அந்தத் தடித் தோலுக்காரங்களுக்கு?

Katz said...

nadakkattum

தனி காட்டு ராஜா said...

//கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.//

//கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம். //

உண்மை தான் தல .....

//ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்த பன்றிகள் லிவிங் டுகெதர் விபச்சாரம் என்றும் அதை ஆதரிப்பவர்கள் விபச்சாரிக்கு பிறந்தவர்கள் என்றும் தங்கள் வக்கிரத்தை வாந்தி எடுத்து ஊளையிடுகிறது//

//அப்படி பார்த்தால் காலையில் மணம் முடித்து அன்றே இரவில் மணவாழ்க்கையை ஆரம்பிக்கும் கலாச்சாரம் கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் என்று யாரேனும் சொல்லிவிடக்கூடும்.//

//என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம்//

//லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.//

வலைத்தளம் கிடைத்து விட்டால் இந்த பன்றிகள் என்ன வேண்டுமானாலும் எழுதும் போல ...

http://thanikaatturaja.blogspot.com/2010/11/blog-post_8153.html

Unknown said...

வழக்கம்போல மிளகாய் கடித்ததுபோல காரமான அதுசரியின் பதிவு..

இப்பிடித்தான் இவிங்களுக்கு செருப்படி குடுக்கணும்

கோவி.கண்ணன் said...

ரொம்ப கோவமாக இருக்கிங்கப் போல சமூகத்தின் மீது ......

ஆண் சமூகம் ஆக்கி வைத்தச் சட்டங்கள் என்ன செய்வது !:)

Unknown said...

உங்க பாயிண்ட் சிம்பிள்: லிவிங் டுகெதர் ஒரு பெர்சனல் மாட்டர். அதில் மற்றவருக்கு இடமில்லை.

இதைச்சொல்ல இவ்வளவு பில்ட அப்பா?

லிவிங் டுகெதர் எதற்காக என்று நீங்கள் ஆராயவில்லை.

ஆணும் ஆணும் என்றால் ஒன்றுமில்லை. பெண்ணும் பெண்ணுமென்றாலும் டிட்டோ.

ஆணும் பெண்ணும் என்றால் எதற்கு என்ற கேள்வி வரும். செக்ஸ் கண்டிப்பாக அதில் உண்டு. செக்ஸ் வித்தவுட் சில்ரன் என்றால் ஓகே. மற்றவர் தலையிட அவசியமில்லை.

வித் என்றால்?

அக்குழந்தைகள் சார்பாக சமூகம் கேள்வி எழுப்பலாம்.

உங்கள் குழந்தைகள் சரிதான். அவை தறுதலைகளாக அலையும்போது சமூகம் எட்டிப்பார்க்கும். கேள்வி கேட்கும்.

என்ன பதில் சொல்வீர்கள்? இந்த மாதிரி மசுரு...எக்செட்ராவா?

NONO said...

உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன். இப்படி பட்டவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் கட்டாயமாகவேண்டும், அப்போதாவது திருந்துவார்களா எனப் பார்க்கலாம்!

லெமூரியன்... said...

வணக்கம் தலைப்பை பார்த்துதான் உங்க தளத்திற்கு வருகிறேன். முதல் தடவையும் கூட..!
இதற்கு முந்தய இந்த கருத்திற்கு தொடர்பான பதிவுகளை நான் படித்து பார்க்கவில்லை. சில விஷயங்களை வேகமாக சொல்வதை விட ஆழமாக சொல்லலாம் நண்பரே.
ஒரு வேளை முந்தய தொடர் பதிவுகள் அதிகம் உங்களை கொதிப்படைய செய்யும் வண்ணம் இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
போகட்டும். ஆதி தமிழ் கலாசாரத்தில் படிதாண்டா பத்தினிஎல்லாம் கிடையாது நண்பரே...அப்பொழுது பெண்களுக்கு மிக மிக சுதந்திரம் கொடுத்த கலாசாரம் நமது.....வாஸ்கோடகாமா தனது பயண குறிப்பில் தஞ்சைப் பற்றி கூறும் பொழுது இங்குள்ள மக்கள் செக்ஸ் விஷயத்தில் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக குறிப்பிடுகிறார்..மேலும் இங்குள்ள பெண்கள் பருத்த மார்பகங்களை கொண்டுள்ளார்கள் என்றும் உப குறிப்பு...வாழ்வியல் முறை என்று பார்த்தால்....சில ஆதி கால தமிழர் பண்டிகையின் போது வோலையில் தங்களின் துணைவியின் பெயரை எழுதி ஒரு பானைக்குள் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க பட்ட மாற்றானின் மனைவியோடு அவளின் முழு சம்மதத்தோடு அந்த இரவை கழிக்கும் பழக்கம் நமது மூத்தக் குடி கலாசாரத்தில் இருந்தது.....மேலும் மன்னர் காலத்தில் மன்னர் நகர்வலம் போகும் பொழுது உயர்சாதிக் குடியிருப்பின் மாடங்களில் நின்று உயர்சாதி மனைவிகள் மன்னனின் அன்றைய இரவை கழிக்க தவம் கிடந்த வரலாறுகள் கொண்டதுதான் நமது கலாசாரம்....
மேலும் தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்ந்தெடுத்து சேர்ந்து வாழ்ந்த கலாச்சாரமும் நமது தமிழர் கலாச்சாரம்தான்....பல்வேறு இனங்கள் தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்ததும் மேலும் முகலாயர்கள் வடக்கின் படையெடுத்து ஆட்சி ஆரம்பமான பொழுது எழுந்த வீச்சுதான் இன்று கலாசார காவலர்கள் கூச்சல் போடும் நவீன தமிழ் கலாசாரம்......சுருக்கமாக இப்படி சொல்லலாம்.....வாழ்வியல் முறையில் எகிப்து கலாச்சாரத்திற்கு சற்றேறக் குறைய சிறிய மாற்றங்களை கொண்டதுதான் நமந்து மூத்த குடியின் கலாசாரம்......நமது ஆதி கால மருத்துவத்தில் பால் வினை நோய்களுகுண்டான அத்தனை மருந்துகளும் அப்பொழுதே இருந்தன....வேறெந்த இனத்திலும் இவ்வளவு முன்னேறிய மருத்துவமும் கூட இருந்ததில்லை அக்காலத்தில்......

மேலும் சேர்ந்து வாழ்தல் என்பது வெறும் உடலுரவிர்க்கானது மட்டுமே என்ற தவறான புரிதகள் இங்கு உள்ளது......திருமணம் என்ற ஒரு வட்டதிற்குள வராமல் காலம் முழுவதும் சேர்ந்து வாழ் முயற்சிப்பதே சேர்ந்து வாழும் கலாசாரம் வெளிநாட்டில்....மிகவும் தவிர்க்க முடியாமல் பிரிந்து செல்லும் ஜோடிகளே அதிகம் அங்கு....அன்றி இன்று ஒருவன் நாளை ஒருத்தி என்று இங்கு இவர்கள் நினைப்பது போல்லல......அகாசியும் ஸ்டெபியும் எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னரே மனம் செய்து கொண்டார்கள்.......சமீபத்தில் படித்த செய்தியின் படி முப்பது வருடம் சேர்ந்து வாழ்ந்து வயோதிகத்திர்க்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு முதிய ஜோடி மேற்கில் கடைசியாக மனம் முடித்து கொண்டு சந்தோஷ பட்டிருக்கிறார்கள்.......

சரியான புரிதகள் இன்றி உணர்ச்சியின் வயப் பட்டு விடும் சக தமிழர்களை ஏன் திட்ட வேண்டும்??? :) :) சற்று முதுகில் வருடிக் கொடுத்து புரியவைத்தால்....மனம் மாறி மண்டியிட்டு விடுவார்கள்... :) :) :) :) தமிழர் குணம் அது.....

சொல்ல வந்ததை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்....கொஞ்சம் இனிய சொற்களை சேர்த்திருக்கலாம் நண்பரே..!

லெமூரியன்... said...
This comment has been removed by the author.
அது சரி(18185106603874041862) said...

கலகலப்ரியா,

நன்றி. பன்றிகளிடம் பேசும் போது பன்றிகளின் மொழியில் தான் எழுத வேண்டியிருக்கிறது. இது முழுக்க முழுக்க வக்கிரம் பிடித்த பன்றிகளுக்காக எழுதப்பட்ட இடுகை.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//அது அவரவர் விருப்பம்.//

இதற்கு ஒருத்தர் கேட்டார். தனி மனித சுதந்திரம்னு தெருவுல நிர்வாணமா போவீங்களான்னு. சாமி அடுத்தவங்கள பாதிக்கிற எதுவும் தனி மனித சுதந்திரம் இல்லை. நீங்க சொல்றது அடுத்த வீட்டுக்காரன் கலியாணம் பண்ணாம சேர்ந்திருந்தா யாரை பாதிக்குதுன்னா பொதுவா ஊர்ல ஒரு மாதிரி பேசுவாங்களாம். கலாச்சாரத்தை எதிர்க்கிறீங்களான்னா இல்லைப்பா. அது நல்லதுன்னு படுறவங்க அதும்படி நடக்கட்டும். அது வேணாம்னு சொல்றவங்கள இழிவாப் பேச உங்களுக்கு என்ன உரிமைன்னுதான் சொல்றோம்னா, அவங்க இஷ்டத்துக்கு விடுங்கன்னா அது சரிதாங்க, ஆனாலும் அதப் பார்த்து மத்தவங்க கெட்டுப் போவாங்களேவாம். அப்ப கலாச்சாரத்துல ஏதோ ஒன்னு எப்படா ஓடலாம்னு நினைக்க வைக்குது. அத கட்டி புடிச்சி மல்லு கட்டுறீங்கன்னு ஒத்துக்கறீங்களான்னா அது அப்படி இல்லையாம்.
//

அதெல்லாம் சப்பைக்கட்டு. உள்ளிருக்கும் வக்கிரத்தை பல நாய்கள் வாந்தி எடுக்கின்றன. இந்த நாய்களின் கலாச்சாரம் அவ்வளவு தான்.

அது சரி(18185106603874041862) said...

//
dondu(#11168674346665545885) said...
ஒரு உண்மையை நாம் மறக்கக் கூடாது. லிவிங் டுகதரிலும் ஆணுக்குத்தான் அதிக சௌகரியம். பெண்ணுக்கு பாதுகாப்பு கம்மிதான்.

சம்பந்தப்பட்ட பெண் இதை ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார்,

நீங்கள் சொல்வது உண்மை. லிவிங் டுகெதர் அதன் சாதக பாதகங்களை அலசி சம்பந்தபட்டவர்க்ளே முடிவெடுக்க வேண்டியது தான். ஆகவே நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று.

ஆனால், இது தான் சாக்கு என்று பன்றிகள் வாந்தி எடுப்பதை குறித்து தான் இந்த இடுகை.

அது சரி(18185106603874041862) said...

//
shrek said...
அடிச்சி தூள் ப‌ண்ணிட்ட‌ மாம்மே....
அத‌க‌ள‌ம் hats off
ரொம்ப‌ தெளிவா எழுதி இருக்கீங்க‌, (அந்த‌ லூசுங்க‌ளுக்கும் புரியும் ப‌டி)
ஆனா மாட்டேன்னு அட‌ம் பிடிக்க‌ர‌ கேசுங்க‌ள‌ ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாது

17 November 2010 23:08
//

நன்றி ஷ்ரெக். புரியாமல் இல்லை. வக்கிரங்களை வெளிக்கொட்ட இது ஒரு சந்தர்ப்பம் என்று தான் சில உயிரிகள் பதிவு எழுதுகின்றன.

(ஆமா, உங்களை என்ன ரொம்ப நாளா காணோம்? எக்ஸாம்ல பிஸியா?)

அது சரி(18185106603874041862) said...

//
shrek said...
அடிச்சி தூள் ப‌ண்ணிட்ட‌ மாம்மே....
அத‌க‌ள‌ம் hats off
ரொம்ப‌ தெளிவா எழுதி இருக்கீங்க‌, (அந்த‌ லூசுங்க‌ளுக்கும் புரியும் ப‌டி)
ஆனா மாட்டேன்னு அட‌ம் பிடிக்க‌ர‌ கேசுங்க‌ள‌ ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாது

17 November 2010 23:08
//

நன்றி ஷ்ரெக். புரியாமல் இல்லை. வக்கிரங்களை வெளிக்கொட்ட இது ஒரு சந்தர்ப்பம் என்று தான் சில உயிரிகள் பதிவு எழுதுகின்றன.

(ஆமா, உங்களை என்ன ரொம்ப நாளா காணோம்? எக்ஸாம்ல பிஸியா?)

அது சரி(18185106603874041862) said...

//
பிரபாகர் said...
மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள், ஆணி அடித்தார்போல்.

பிரபாகர்...

17 November 2010 23:16
//

நன்றி பிரபாகர் அண்ணா.

அது சரி(18185106603874041862) said...

//
Thekkikattan|தெகா said...
சரி, தினசரிகளில் தினமும் நாண்டுகிட்டு செத்த செய்தி படிக்கிறோமே அதன் ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்று யோசித்தோமா?

பாகியில் ஹானர் கில்லிங் என்பது தேடிப்போய் சம்பந்தப்பட்டவரை/வளை வெட்டிப் போட்டு வருவது லைசென்ஸ்டு கொலை என்றால், நம்மூரில் மறைமுகமா ஒரு குடும்பமே நடு வீட்டில் நாண்டுகிட்டு செத்துப் போவதில் நம் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது என்பதனை உணர்கிறோமா?

அது ஏன் அவர்கள் சாக வேண்டுமென்ற கட்டாயத்தை நாம் உருவாக்கிக் கொடுக்கிறோம்? அது அந்த தனிப்பட்ட குடும்பம் முகம் கொடுத்து பார்த்துக் கொள்ள வேண்டிய விசயமில்லையா?

17 November 2010 23:40
//

அது தான் கலாச்சாரம் பாஸ். அதை தட்டிக் கேட்டால் நீங்கள் விபச்சாரி.

அது சரி(18185106603874041862) said...

//
Kavithayini said...
நெத்தியடி..

யாருக்கு எப்பிடிக் குடுக்கணுமோ அப்பிடிக் குடுத்துருக்கீங்க..

ஆனா இதெல்லாம் உரைக்குமா அந்தத் தடித் தோலுக்காரங்களுக்கு?

18 November 2010 06:05
//

நன்றி கவிதாயினி.

மனிதர்கள் யோசிப்பார்கள். மனித உருவில் இருக்கும் வக்கிரங்களுக்கு உரைக்காது.

அது சரி(18185106603874041862) said...

//

தனி காட்டு ராஜா said...
//கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.//

//கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம். //

உண்மை தான் தல .....
//

தனிக்காட்டு ராஜா,

தொடுப்புக்கு நன்றி. படித்து பார்த்தேன். சில இடங்களில் கருத்து மாறுபாடு இருந்தாலும் உங்கள் இடுகையுடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//
Katz said...
nadakkattum

//

நல்லது நடந்தா சரிங்க.

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
வழக்கம்போல மிளகாய் கடித்ததுபோல காரமான அதுசரியின் பதிவு..

இப்பிடித்தான் இவிங்களுக்கு செருப்படி குடுக்கணும்

18 November 2010 06:58
//

நன்றி முகிலன். யாருக்கு என்ன மொழி புரியுமோ அதே மொழியில் பேச முயற்சிக்கிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//

கோவி.கண்ணன் said...
ரொம்ப கோவமாக இருக்கிங்கப் போல சமூகத்தின் மீது ......

ஆண் சமூகம் ஆக்கி வைத்தச் சட்டங்கள் என்ன செய்வது !:)

18 November 2010 07:40
//

அப்படில்லாம் இல்லங்க கோவி.
கருத்துக்கு மாற்று கருத்து சொன்னாலே விபச்சாரம் என்று சொல்லும் உயிரினங்கள் பற்றி எழுதினால் இப்படி தான் வருகிறது. :(

அது சரி(18185106603874041862) said...

//
malar said...
உங்க பாயிண்ட் சிம்பிள்: லிவிங் டுகெதர் ஒரு பெர்சனல் மாட்டர். அதில் மற்றவருக்கு இடமில்லை.

இதைச்சொல்ல இவ்வளவு பில்ட அப்பா?
//

மலர்,

லிவிங் டுகெதர் பெர்சனல் மேட்டர். ஆனால் நான் அது மட்டும் சொல்லவில்லை. கலாச்சாரம் என்பதே மாறிக் கொண்டு தான் இருக்கும். இதில் என்ன பில்டப் என்று எனக்கு புரியவில்லை.

//
லிவிங் டுகெதர் எதற்காக என்று நீங்கள் ஆராயவில்லை.

ஆணும் ஆணும் என்றால் ஒன்றுமில்லை. பெண்ணும் பெண்ணுமென்றாலும் டிட்டோ.

ஆணும் பெண்ணும் என்றால் எதற்கு என்ற கேள்வி வரும். செக்ஸ் கண்டிப்பாக அதில் உண்டு. செக்ஸ் வித்தவுட் சில்ரன் என்றால் ஓகே. மற்றவர் தலையிட அவசியமில்லை.
//

ஸ்ட்யிங் டுகெதர் வேறு, லிவிங் டுகெதர் வேறு. ஒரு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதையோ, ஏன் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதையோ லிவிங் டுகெதர் என்று சொல்லமுடியாது. அது ஸ்டெயிங் டுகெதர் தான். லிவிங் டுகெதர் என்ற வார்த்தையின் அர்த்தமே திருமணம் என்ற சடங்கு இன்றி வாழ்க்கை நடத்துவது தான். இதில் செக்சும் அடக்கமே. இதில் என்ன ஆராய்வது என்று எனக்கு புரியவில்லை.

//
வித் என்றால்?
அக்குழந்தைகள் சார்பாக சமூகம் கேள்வி எழுப்பலாம்.

உங்கள் குழந்தைகள் சரிதான். அவை தறுதலைகளாக அலையும்போது சமூகம் எட்டிப்பார்க்கும். கேள்வி கேட்கும்.
என்ன பதில் சொல்வீர்கள்? இந்த மாதிரி மசுரு...எக்செட்ராவா?
//

முதற் கேள்வி, இந்தியாவில் இன்றைக்கு எத்தனை லிவிங் டுகெதர் மக்கள் இருக்கிறார்கள்? 100? 200? அப்படியானால் இந்தியாவில் தறுதலைகளே இல்லையா? இத்தனை தறுதலைகளும் லிவிங் டுகெதர் கப்பிள்ஸ்க்கு பிறந்தவையா? எல்லாம் நீங்கள் சொல்லும் அக்கறை மிக்க சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமணத்தில் பிறந்தவர்கள் தானே?

லிவிங் டுகெதரையும் தறுதலை பிள்ளைகளையும் முடிச்சிடாதீர்கள். ஒருவர் தறுதலையாக போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

சமூகம் கேள்வி எழுப்புவது கூட ஒன்றுமில்லை. ஆனால் விபச்சாரம் என்றால்????

அது சரி(18185106603874041862) said...

//
NONO said...
உங்கள் கருத்துடன் ஒத்துபோகிறேன். இப்படி பட்டவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் கட்டாயமாகவேண்டும், அப்போதாவது திருந்துவார்களா எனப் பார்க்கலாம்!

18 November 2010 11:44
//

நன்றி நோனோ.

பாடம் சொல்லியெல்லாம் பலனில்லை. தெரியாதவர்களுக்கு மட்டுமே பாடம் பலனளிக்கும். வக்கிரத்தை கொட்டும் பன்றிகள் அதனால் மாறப்போவதில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
லெமூரியன்... said...
//

லெமூரியன்,

வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் எனக்கு தெரியாதவை. அதற்கு மீண்டும் நன்றி.

அன்றைக்கு அப்படி இருந்த கலாச்சாரம் நடுவில் வேறு விதமாக மாறி இன்றைக்கு இப்படி இருக்கிறது. கலாச்சாரம் என்பதே நிலையில்லாதது. ஆக, நான் சொல்வதை தான் நீங்களும் சொல்கிறீர்கள்.

//
சரியான புரிதகள் இன்றி உணர்ச்சியின் வயப் பட்டு விடும் சக தமிழர்களை ஏன் திட்ட வேண்டும்??? :) :) சற்று முதுகில் வருடிக் கொடுத்து புரியவைத்தால்....மனம் மாறி மண்டியிட்டு விடுவார்கள்... :) :) :) :) தமிழர் குணம் அது.....
//

சில இடுகைகளை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவை சரியான புரிதல் இன்றி எழுதப்பட்ட இடுகைகள் அல்ல. வக்கிரம் பிடித்த தெருநாய்கள் தனிமனித தாக்குதல் நடத்தி வாந்தி எடுத்த இடுகைகள்.

Thekkikattan|தெகா said...

அவை தறுதலைகளாக அலையும்போது சமூகம் எட்டிப்பார்க்கும். கேள்வி கேட்கும்.
என்ன பதில் சொல்வீர்கள்? இந்த மாதிரி மசுரு...எக்செட்ராவா?//

இதுவரையிலும் கோவில்களிலும், பேருந்துகளிலும், புகைவண்டியிலும், பொது மக்கள் கூடுமிடங்களிலும் உரசிப் பார்ப்பது, தடவிப்பார்ப்பது, பிக்பாக்கெட் அடிப்பது, அரசியலின் மூலமாக 000க்கள் தீர்ந்து போகிற அளவிற்கு திருடுவது எல்லாம் எதில் வருகிறது. மிக்க சமூகப் பொறுப்பான கேள்விதான்... கவலைப்பட வேண்டியதில்ல அதற்கான சட்டங்கள் எல்லாம் வந்திரும்.

ஏன்யா, சேர்ந்து வாழணுங்கிறவிங்க என்ன ஒன்னாப்பு இரண்டாப்பு புள்ளைங்களா... கழுதை வயசில நல்லா சம்பாரிச்சிக்கிட்டு ரெண்டு பேரும் என்னவா, எப்படியா வாழப் போறோம்னு அவன் சந்தோஷத்தை தேடிப் போனா - நமக்கு என்னப்பா. எனக்கு புரியவேல்ல ஏன் இப்படி வாந்தி எடுக்கிற ரேஞ்சிற்கு இங்க குதிக்கிறாங்கன்னு...

Thekkikattan|தெகா said...

ஒருவன் எது போன்ற சூழல்களில், வளர்ப்பில் தறுதலையாக பரிணமிக்கலாம் என்பதற்கான பதிவு இங்கே rather a warning bell :) பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

ILLUMINATI said...

நாயடி! :)

கபீஷ் said...

ஏன் இத்தன சூடு அதுசரி? யாருக்கு சொல்றீங்கன்னு புரியல. அவங்கவங்க அனுபவத்த பொறுத்து, மனப்பக்குவத்த பொறுத்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விசயத்துலயும் ஒரு கருத்து வச்சிருப்பாங்க. எதுவும் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி தெரியாம தானே இருப்பாங்க. சரி தப்பு எல்லாம் யார் சொல்றது? அளவுகோல் இருக்கா என்ன?:)