Thursday, 19 August 2010

புரட்சி செய்வது எப்படி (அ) அய்யாங்...டொய்ங்.. 3

இனிமேல் புரட்சியைப் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். பொலிட்பீரோவை கூட்டி எடுத்த இறுதி முடிவு. பின்னர் என்ன ஐயா? மாவோவின் புரட்சி பற்றி எழுதினாலும் எழுதினேன் புரட்சின்னா என்ன, எப்படி புரட்சி செய்வது என்று துளைத்து எடுக்கிறார்கள். மொபைல் ஃபோனை ஆஃப் பண்ணி வைப்பது எனக்கு பிடிக்காது. கால் மேல் கால் போட்டால் அந்த காலை சொல்லவில்லை, என்ன செய்வது? வேறு வழியில்லாமல் ஆஃப் செய்து விட்டேன்.

புரட்சி பற்றி என்னை எழுத தூண்டியதே முகிலன் தான். சரி அவர் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் புரட்சிக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை ஏற்காமல் அவரை மிடில் கிளாஸ் முகிலன் என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் கூட பெரிய ஆச்சரியம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சுயமாக யோசித்து லெனின் சொன்னதை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்.

சரி போய்த் தொலையட்டும், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் கடன் வாங்கி எழுதுபவன் இதை எழுத மாட்டேனா? எழுதித் தொலைக்கலாம் என்றால் புரட்சி எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அய்யா அது என்ன கத்தரிக்காயா வெண்டைக்காயா இல்லை மலிவு விலையில் விற்க சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டியா? புரட்சி ஐயா புரட்சி. அன்னம்மா கிழவி மீனு மீனு என்று விற்றதை போல‌ இப்பொழுதெல்லாம் இணையத்தில் புரட்சி புரட்சி என்று கூவிக் கூவி விக்கிறார்கள்.சில மண்டபங்களில் கூட விற்பதாக கேள்வி. எனக்கு இதில் பெரிய பிரச்சினை இருக்கிறது. இணைய புரட்சிகளில் எது போலிப் புரட்சி எது போளிப் புரட்சி என்று ஒரு எழவும் தெரியவில்லை. அதையெல்லாம் நம்பி ஏமாந்து போய் அப்புறம் கமிஷனர் ஆஃபிஸில் க்யூவில் நின்று தொலைக்காதீர்கள்.

புரட்சி எப்படி இருக்கும் என்றால் கொஞ்சம் உருளைக் கிழங்கு சைஸில் ஆனால் சிவப்பாக இருக்கும். சக்கரை வள்ளிக் கிழங்கை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். அய்யா அது ஸ்வீட் பொட்டட்டோ. சிவப்பாக இருப்பது ஸ்வீட்டாம். அறிவு உள்ளவர்கள் வெள்ளைக்காரனின் வர்க்க விரோத போக்கை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். இல்லை, புரட்சி இன்னும் நல்ல சிவப்பாக இருக்கும் என்றால் அப்ப பீட்ருட்டு என்கிறாள் லூஸி. எங்கு போய் முட்டிக் கொள்ள?

இப்படி புரட்சியை கண்டுபிடிப்பதே பெரும் பிரச்சினை என்பதால் வாங்கப் போகும் போது ஏற்கனவே புரட்சி செய்தவருடன் போவது நல்லது. அதுவும் கூட்டுப் புரட்சி செய்தவராய் இருந்தால் இன்னும் உத்தமம். அது என்ன கூட்டு புரட்சி.எல்லா எழவையும் நானே சொல்லித் தொலைக்கிறேன். பொறுங்கள். புரட்சி செய்ய பொறுமை அவசியம். கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது என்றாலும் அவர்களே பொறுமையாக இருக்கும் போது உங்களுக்கு என்ன?

புரட்சியை கொண்டு வந்தால் மட்டும் போதாது.அதை செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது. முதலில் புரட்சியை நீள வாக்கில் கத்தரிக்காயை போல அரிந்து கொள்ளுங்கள். நல்ல உயர்தர சிவப்பு ஒயின் எடுத்து அதில் தடவுங்கள். ஃப்ரெஞ்ச் ஒயினோ சிலே ஒயினாகவோ இருப்பது உத்தமம். ஏழைகளாக இருப்பவர்களும் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் டாஸ்மாக் சரக்கில் ஊற வைக்கலாம். சுவை கொஞ்சம் மட்டம் தான். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அளவு புரட்சி செய்வதே பெரிய விஷயம் என்பதால் ‍பரவாயில்லை. அதற்காக வெள்ளை ஒயின் சேர்ப்பது வர்க்க விரோத மனப்பான்மை. அப்படி செய்பவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

புரட்சி ஒரு பக்கம் ஊறும் போது ஒரு பெரிய வெங்காயம் ஆமாம் பெரியார் சொன்ன அதே வெங்காயம் தான். வெங்காயத்தை கண்டுபிடித்ததே பெரியார் தான் என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை கெடுக்க நான் தயாரில்லை. பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள். எட்டு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி, ஆறு பல் பூண்டு, சோம்பு, சீரகம், கொஞ்சம் வறுத்த வெந்தயம், ஆந்திரா குண்டு மிளகாய் பதினெட்டு எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் அரைத்த பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி அது வதங்கும் போதே ஒரு கொத்து கறுவேப்பிலையும் சேருங்கள். நன்றாக வதங்கியதும் புரட்சி ஊறிக் கொண்டிருக்கும் சிவப்பு ஒயினை இதில் கொட்டி அப்படியே மசாலா சேர்த்து வெட்டி வைத்த புரட்சியையும் சேர்த்து நன்றாக தளதளவென்று சிவப்பாக வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் ஐயா. நீங்கள் புரட்சி செய்து விட்டீர்கள். இதையே ஏழைகளின் கல்யாணத்திலோ அம்மனுக்கு ஆடி மாசம் கூழ் ஊத்தும் போதோ செய்தால் அது கூட்டுப் புரட்சி.

புரட்சி செய்வது எப்படி என்று நான் சொன்னால் அதுல கோழிக்கறி போட்டா சூப்பரா இருக்கும் என்கிறாள் ஜெயந்தி. அய்யா, புரட்சி செய்வதே கோழிக்கறி வாங்க முடியாத ஏழைகளுக்காக‌ தான். இதில் கோழி சேர்க்கலாமா என்று கொழுப்பெடுத்தவன் தான் சொல்வான். புரட்சி காலையில் பூரிக்கு நன்றாக இருக்கும். பூரி செய்ய முடியாது புரட்சி மட்டும் செய்பவர்கள் அதை மட்டுமே கூட தின்னலாம். அதிகம் போனால் பின்பக்கம் புடுங்கி விடும் என்பதால் கொஞ்சமாக தின்பது நலம்.

நான் இப்படி மாய்ந்து மாய்ந்து புரட்சி செய்வது பற்றி எழுதினால் பார்ப்பானீய ஆணாதிக்க தொழிலாளர் விரோத தேசிய இனங்களை ஒடுக்கிய கஸின் கோயம்பத்தூரில் இருந்து போன் செய்து எந்திரன் பாட்டு கேட்டியா ச்சும்மா அதிருதுல்ல என்கிறான். எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?

43 comments:

அது சரி(18185106603874041862) said...

அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள். உடனடியாக அரைக் கிலோ புரட்சி செய்து வரலாற்றில் இடம் பெறுங்கள்.

நசரேயன் said...

புரட்சிகரமான சமையல் குறிப்பு

Unknown said...

Innaikke naan en bus ai kootti perukki blogla ethiduren

MSK / Saravana said...

பொர்ச்சி வீரன் அதுசரி, வால்க. ஒலிக.

குடுகுடுப்பை said...

நானும் ஒரு யோசனை வெச்சிருந்தேன்,புர்ச்சி காலமா இருக்கிறதாலா அப்புறமா எழுதறேன். முதலியம் என்னை வேலை செய்ய அழைக்கிறது.

குடுகுடுப்பை said...

புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி,புரட்சிநடிகர்,புரட்சித்திலகம் இதெல்லாம் புரட்சில வ்ராதா?

குடுகுடுப்பை said...

சூப்பர்ஸ்டார புரட்சிஸ்டாரா மாத்தி புரச்சி பண்ணலாமா?

Anonymous said...

அப்பா சாமி, சிரிச்சு முடியல. சரி, சிவப்பு கலர்ல உருளைக்கிழங்கே (ஸ்வீட் பொட்டேட்டோ இல்லை) இருக்கு. அதை வைத்து செய்யலாம் தானே?

எம்.எம்.அப்துல்லா said...

இஃகிஃகிஃகி

Anonymous said...

இல்லை. உங்க பதில் வரும் வரை காத்திருக்க முடியாது. கடுமையான புரட்சிப் பசி எனக்கு இப்பொழுது. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

Anonymous said...

செய்து ருசித்தாயிற்று. அருமையான சுவையான எளிமையான இந்தக் குறிப்புக்கு மிக்க நன்றி புரட்சிப் பங்காளரே!

Unknown said...

//Anonymous said...
இல்லை. உங்க பதில் வரும் வரை காத்திருக்க முடியாது. கடுமையான புரட்சிப் பசி எனக்கு இப்பொழுது. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
20 August 2010 00:05
Anonymous said...
செய்து ருசித்தாயிற்று. அருமையான சுவையான எளிமையான இந்தக் குறிப்புக்கு மிக்க நன்றி புரட்சிப் பங்காளரே!
20 August 2010 00:07//

ரெண்டு செகண்ட்ல செஞ்சி சாப்புடுற அளவுக்கு அவ்வளவு எளிமையா புரச்சி?

Mahesh said...

அய்யோ... புர்ச்சி செய்யறது இம்புட்டு சுளுவா?:)))))))))

Mohan said...

புரட்சியைப் பற்றி இதற்கு மேல் யாராலும் எளிமையாக விளக்க முடியாது :-)

vasu balaji said...

//வேறு வழியில்லாமல் ஆஃப் செய்து விட்டேன். //

புரட்சிக்கு அஸ்திவாரம்:)

புரட்சி சமையல் அபாரம். ஆனா புரட்சி தோல்வியா முடியக் காரணம் தெரிந்துவிட்டது. முக்கியமான உப்பைச் சேர்க்காவிட்டால் எப்படி ஐய்யா சுரணை இருக்கும். சுரணையில்லாமல் என்ன புரட்சி வேண்டியிருக்கிறது?

போகட்டும். தாளிக்கவாவது தெரிய வேண்டாமா. தாளிக்கிற தாளிப்பில என்ற மிரட்டல் இல்லாமல் என்ன புரட்சி?

புரட்சி பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும் என்பதிலிருந்தே தமிழனுக்கு புரட்சி சரிவராது என்ற கருத்து தெளிவாக்கப் பட்டிருக்கிறது.

//எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?//

கையைக் காலைக் கட்டிப்போட்டு 24 மணிநேரம் உச்ச அளவில் எந்திரன் பாட்டைக் கேட்கச் சொல்லலாம்.

யப்பா சாமி! முடியல:))))

Robin said...

//கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது// :)

Anonymous said...

புரட்ட்சி புரட்டுதுங்க

Prathap Kumar S. said...

சமையல் புரட்சி ஓங்குக...

அய்யா இந்த புரட்சி கூட தொட்டுக்கு எதை வச்சுக்கலாம்னு சொல்லவே இல்லையே...

கலகலப்ரியா said...

:-ssssss... (நான் எதுக்கும் அப்புறம் பின்னூட்டறேனே..)

வால்பையன் said...

//பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள்.//


பெரியாரின் குறுக்கு வெட்டு தோற்றம் பற்றி பள்ளி பாடபுத்தகத்தில் வரப்போகுதாம்!

:)

எம்.எம்.அப்துல்லா said...

வேதாளம்..

எனக்கும் ஒரு புர்ச்சி பார்சல்ல்ல்ல்

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
புரட்சிகரமான சமையல் குறிப்பு
//

ஆமா, ஆனா நீங்க பஸ்ல போட்ட சமையலை விட நல்லாருக்கும். :)

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
Innaikke naan en bus ai kootti perukki blogla ethiduren

//

இதெல்லாம் முன்னாடியே செய்றதில்ல?

அது சரி(18185106603874041862) said...

//

Saravana Kumar MSK said...
பொர்ச்சி வீரன் அதுசரி, வால்க. ஒலிக.

//

ஆகா...யாருப்பா அங்க, நம்ம சரவணனுக்கு ஒரு சோடா குடுங்க :))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நானும் ஒரு யோசனை வெச்சிருந்தேன்,புர்ச்சி காலமா இருக்கிறதாலா அப்புறமா எழுதறேன். முதலியம் என்னை வேலை செய்ய அழைக்கிறது.

//

அதை பாருங்க பாஸ். வேலை பார்த்தா தான் நமக்கெல்லாம் சோறு.

அது சரி(18185106603874041862) said...

//

குடுகுடுப்பை said...
சூப்பர்ஸ்டார புரட்சிஸ்டாரா மாத்தி புரச்சி பண்ணலாமா?

//

இன்னுமா மாத்தலை?

அது சரி(18185106603874041862) said...

//

எம்.எம்.அப்துல்லா said...
இஃகிஃகிஃகி

//

நீங்க பழமைபேசி கூட சேந்து ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க. இப்படியா சிரிக்கிறது?

அது சரி(18185106603874041862) said...

//

Anonymous said...
இல்லை. உங்க பதில் வரும் வரை காத்திருக்க முடியாது. கடுமையான புரட்சிப் பசி எனக்கு இப்பொழுது. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

//

அடடா...இப்படி அவரசப்பட்டா எப்படி? உங்க கேள்வியை மாவட்டத்துக்கு அனுப்பி, அவரு மாநிலத்துக்கு அனுப்பி, மாநிலம் மத்திய தலைமைக்கு அனுப்பி, மத்தியம் அதை மாவோவுக்கு அனுப்பி பதில் வாங்க வேண்டாமா?

இப்ப பாருங்க, நீங்க செஞ்சது போலி புரட்சின்னு மாவோ சொல்லிட்டாரு..இப்ப என்ன பண்றது?

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
//Anonymous said...
இல்லை. உங்க பதில் வரும் வரை காத்திருக்க முடியாது. கடுமையான புரட்சிப் பசி எனக்கு இப்பொழுது. செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
20 August 2010 00:05
Anonymous said...
செய்து ருசித்தாயிற்று. அருமையான சுவையான எளிமையான இந்தக் குறிப்புக்கு மிக்க நன்றி புரட்சிப் பங்காளரே!
20 August 2010 00:07//

ரெண்டு செகண்ட்ல செஞ்சி சாப்புடுற அளவுக்கு அவ்வளவு எளிமையா புரச்சி?

//

எளிமையா இருந்தா தான் பாஸ் எல்லாரும் செய்ய முடியும்.

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
அய்யோ... புர்ச்சி செய்யறது இம்புட்டு சுளுவா?:)))))))))
//

செஞ்சி பாருங்க மகேஷ். அப்புறம் உங்களுக்கே தெரியும்...:)))

அது சரி(18185106603874041862) said...

//

KarthigaVasudevan said...
:)))

//

:))))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...

புரட்சி சமையல் அபாரம். ஆனா புரட்சி தோல்வியா முடியக் காரணம் தெரிந்துவிட்டது. முக்கியமான உப்பைச் சேர்க்காவிட்டால் எப்படி ஐய்யா சுரணை இருக்கும். சுரணையில்லாமல் என்ன புரட்சி வேண்டியிருக்கிறது?
//

நீங்கள் கேட்டதும் நானும் எல்லாரிடமும் விவாதித்து விட்டேன். உப்பு போடும் படி, லெனினோ இல்லை மாவோவோ எங்கும் சொன்னதாக தெரியவில்லை. அதனால் அப்படி உப்பு போட்டு செய்வது போலி புரட்சியாக இருக்க முடியும் என்று கருதப்படுகிறது.

//
புரட்சி பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும் என்பதிலிருந்தே தமிழனுக்கு புரட்சி சரிவராது என்ற கருத்து தெளிவாக்கப் பட்டிருக்கிறது.
//

புரட்சிக்கு மட்டுமல்ல, பூரிக்கும் இன, மத, மாநில வேறுபாடு கிடையாது என்று ஸ்டாலின் இதை அன்றே தீர்த்து விட்டாரே? அவர் தீர்த்த பலரில் இதுவும் ஒன்று என்பதால் நிறைய பேருக்கு இது தெரியவில்லை.

//
//எந்திரனை எதிர்த்து வெடித்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சி பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த வர்க்க விரோதிகளை என்ன செய்யலாம்?//

கையைக் காலைக் கட்டிப்போட்டு 24 மணிநேரம் உச்ச அளவில் எந்திரன் பாட்டைக் கேட்கச் சொல்லலாம்.

//

இல்லாட்டி சைபீரியாவுக்கு அனுப்பலாம். எந்திரன் பாட்டை கேக்குறதும் சைபீரியாவில சட்டை இல்லாம பிச்சை எடுக்கறதும் ஒண்ணு தான். கொடுமையா இருக்கு எழவு.

அது சரி(18185106603874041862) said...

//
Robin said...
//கம்யூனிஸ்டுகளை பாருங்கள். புரட்சி வருது புரட்சி வருது என்று எத்தனை காலமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போன இடமெல்லாம் வறட்சி தான் வந்தது// :)

//

நன்றி ராபின். :))

அது சரி(18185106603874041862) said...

//
A.சிவசங்கர் said...
புரட்ட்சி புரட்டுதுங்க

//

பாஸ்,

நான் செய்யறது எப்படின்னு தான் சொன்னேன். உங்களை யாரு அதை சாப்பிட சொன்னா? :)))

அது சரி(18185106603874041862) said...

//

நாஞ்சில் பிரதாப் said...
சமையல் புரட்சி ஓங்குக...

அய்யா இந்த புரட்சி கூட தொட்டுக்கு எதை வச்சுக்கலாம்னு சொல்லவே இல்லையே...

//

பிரதாப் அண்ணே,

அக்கிரமா கேள்வி கேக்க கூடாது. புரட்சியே தொட்டுக்கிறதுக்கு தான். இதுக்கு எப்படி தொட்டுக்க? சரி, வேணும்னா நாலு மிளகாய சுட்டு கடிச்சுக்கங்க. இன்னும் காரமா இருக்கும். :))

அது சரி(18185106603874041862) said...

//

கலகலப்ரியா said...
:-ssssss... (நான் எதுக்கும் அப்புறம் பின்னூட்டறேனே..)

//

சரி சரி...பொறுமையா வாங்க.

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
//பெரியாரையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இல்லை வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள்.//


பெரியாரின் குறுக்கு வெட்டு தோற்றம் பற்றி பள்ளி பாடபுத்தகத்தில் வரப்போகுதாம்!

:)

//

கழக ஆட்சிலயா? :)))

அது சரி(18185106603874041862) said...

//

எம்.எம்.அப்துல்லா said...
வேதாளம்..

எனக்கும் ஒரு புர்ச்சி பார்சல்ல்ல்ல்

//

எச்சூஸ்மி...நான் என்ன இங்கே புரட்சி கிடைக்கும்னா போர்டு போட்ருக்கேன்? பார்சலாம்ல பார்சலு...வேணும்னா அவங்கவங்களே புரட்சி பண்ணிக்க வேண்டியது தான். நான் விக்கிறா மாதிரி இல்ல. :))

அது சரி(18185106603874041862) said...

//

மங்களூர் சிவா said...
:)))))))))

//

:)))))

கலகலப்ரியா said...

இன்னொரு வாட்டி படிச்சிட்டு சொல்றேனே.. :o)

கலகலப்ரியா said...

http://kalakalapriya.blogspot.com/2010/08/blog-post_21.html

படிச்சிட்டேன்..

நர்சிம் said...

;)

http://urupudaathathu.blogspot.com/ said...

அவ்வ்வ்வ்...

இதுல இவ்ளோ இருக்கா???

:-))