Thursday, 26 February 2009

ஆஸ்கர் விருதும் அழுகும் தக்காளியும்

இரண்டு செய்திகள்


செய்தி 1:

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ் தமிழ்


===============

செய்தி 2:

கிணத்துக்கடவு: தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், கிணத்துக்கடவு மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிணத்துக்கடவு பகுதிகளில் 5,005 மற்றும் ஹைபிரட் ரக தக்காளிகள் நல்ல காய்ப்புக்கு வந்துள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஏக்கரில் 10 கிலோ எடையுள்ள 60 கூடை தக்காளி கிடைத்து வருகிறது. விவசாயிகள் மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் கொண்டு வந்து ஏலத்தில் விடுகின்றனர். ஏராளமான கூடைகள் குவிந்ததால் கடந்த 13ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 60 பைசாவுக்கு ஏலம் போனது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஏலத்தில் விடாமல் சுடுகாட்டில் கொட்டிவிட்டு சென்றனர்.

அதன்பின் விவசாயிகள் தக்காளி கூடைகளை மார்க்கெட்டுகு கொண்டு வருவதை குறைத்து வருகின்றனர்.

நன்றி: தினமலர்


==========================

இதுல என்ன உள்குத்துன்னு கேக்குற நண்பர்களுக்கு: உள்குத்து எல்லாம் இல்லீங்ணா ;0) ச்சும்மா ரெண்டு செய்தி...எந்த செய்தி என்ன சொல்லுதுன்னு படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா சரி...
பிஜெபி ஆட்சில இருந்தப்ப ஒண்ணு சொல்வாங்க...
"இந்தியா ஒளிர்கிறது"
கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு தப்பா வரும்!

Saturday, 21 February 2009

ப.சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்


வணக்கம் அப்பச்சி,
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்னு எங்க அப்பத்தா கெளவி சொல்லும்...உள்ளூர்ல ஒங்களுக்கு செல்வாக்கு இருக்கோ இல்லியோ எல்லா கவுருமெண்டுலயும் நீங்க ஒரு பதவி வாங்கிடுறீங்க...அட நம்ம ஊர்க்காரரு கலக்குறாரு அப்பிடின்னு நானும் சொம்மா தான் இருந்தேன்...

பொய்யில மூணு வகை உண்டு...ஒண்ணு பொய்யி, ரெண்டு பச்சைப் பொய்யி...மூணாவது புள்ளி விவரம்...சொன்னது நானில்ல...நமக்கு ஏது அம்புட்டு வெவரம்...எல்லாம் ஒங்க சேக்காளி கலிஞ்சரு ஒங்களைப் பத்தி சொன்னது தான்...

அந்த மூணாவது மேட்டரு அதேங்...புள்ளி வெவரம்...அதுல நீரு கில்லாடின்னு எல்லாருக்கும் தெரியும்...கேக்குறவன் கேணப்பயலா இருந்தா மன்மோகன்சிங்கு தான் பி.எம்.னு சொல்லுவாங்களாம்...அது மாதிரி, நம்ம கூட்டத்துக்கு வந்துருக்கானுவ பின்ன கேணப்பயல் இல்லாம எப்படின்னு ரொம்ப தெகிரியமா நீரு புள்ளி வெவரத்த அள்ளி உட்ருக்கீரூ...ஆனா பாரும்வே, அதுலயும் செல பயக ஓட்டய கண்டு புடுச்சிட்டானுவ...செதம்பரம் பேச்சு பல குத்து வாங்குன பம்பரம் மாதிரி இருக்குலேன்னு நக்கலடிக்கிறானுவ..

என்னலே ரொம்ப பேயுதன்னு சொல்லுதீரு?? கெரகம்...நான் எங்கவே கேட்டேன்...நம்ம பயக ஊரு, நாடு, தட்ஸ்தமிழ், தமிழ்மணம்னு எல்லா எடத்திலயும் கேக்குறானுவ...இந்தா ஒரு பத்து..

1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"

2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"

3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"
4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?

5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??

6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??

7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?

8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??

9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??

10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!

Friday, 20 February 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஒன்பது

முன் அறிவிப்பு : கலாச்சாரம் தான் என் மூச்சு...தெய்வீக காதல் தான் என் பேச்சு...காதல்னா கடவுள்...காமம் ஒரு சைத்தான் என்று பெருமாளுக்கே வைகுண்டம் திறக்கும் கலாச்சார காதலர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.

எச்சரிக்கை : நான் படிக்கிறது ராணி காமிக்ஸ்...இல்லாட்டி சிறுவர் மலர் என்று சொல்லும் குழந்தைகளும் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கணும் அடங்குனாதான் அவ பொம்பள என்று சொல்லும் பெரியவர்களும்...இது உங்களுக்கான கதை அல்ல..மீறிப் படித்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.



எண்ணித் துணிக கருமம்

இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.


முன்கதைச் சுருக்கம்:

எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...

இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்...திருக்குமரனை கண்டு வைஜெய்ந்தியும் மன சஞ்சலம் அடைகிறாள்..அதே சமயம் அவளது மேலதிகாரி குருமூர்த்தியும் அவளை ரகசியமாக காதலிக்கிறார்....

இனி....

================

"சொல்லிக்கிட்டே இருக்கேன்...நீ பாட்டுக்கு படுக்கையை விரிச்சா எப்படி...இப்ப கதைய சொல்லல மொட்ட மண்டைல ஆணி அடிச்சிடுவேன்..."

"ஐயய்ய...நான் என்ன எனக்கா விரிச்சேன்....ஒனக்கு தான் மாதி....கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு....நான் வெளிய போயிட்டு வந்துடறேன்...."

மாதித்தனுக்கு புரிந்தது...

"சரி...சரி...சீக்கிரம் போயிட்டு வா...கதைய முடிச்சின்னா தூங்க போலாம்..."

"இந்தா இப்ப வந்துர்றேன்"

வினாடிகள் நிமிடங்களானது...நிமிடங்கள் மணியானது...

என்ன இந்த சனியனை காணோமோ எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்றது...

கடுப்பான‌ மாதித்தன் காட்டுக்குள் தேட ஆரம்பித்தான்...

எங்கு தேடியும் வேதாளத்தைக் காணவில்லை!!!

"இந்த இருட்டுல இதுக்கு மேல எங்க தேடுறது...மொட்டை சனியன்...திருப்பியும் ஏமாத்திடுச்சி....அந்த தாடிக்கார மந்திரவாதிக்கு என்ன சொல்றது...."

புலம்பிக் கொண்டே விக்கிரமாதித்தன் காரை நோக்கி நடந்தான்...செளத் வேல்ஸில் திடீரென்று பனிமழை கொட்ட ஆரம்பித்தது....

=====================

என்னது வேதாளத்தைக் காணோமா? அப்ப கதை??

கணவன் இறந்தால் அவனுடன் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற காட்டுமிராண்டி பழக்கத்தை விட்டொழித்தோம் என்று நாகரீகத்தை பறைசாற்றிக் கொண்டாலும்....கணவனை இழந்த பெண்கள் கடைசி வரை அவன் நினைவுடன் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டும் என்று உடன்கட்டை ஏற்றப்படுகிறார்கள்...அதெல்லாம் இல்ல...இந்திய சமூகம் ரொம்ப மாறிடுச்சி என்று நீங்கள் மறுக்கக் கூடும்....ஆனால் கணவனை இழந்த பல சகோதரிகள் தினந்தோறும் சமூகத்தால் மனதளவில் உடன்கட்டை ஏற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவர்களைப் போல அவர்களும் ரத்தமும் சதையும் ஆன மனிதர்களே என்பது கூட பலருக்கு மறந்து போகிறது..

உண்மையில் பெரும் தயக்கத்துடன் தான் இந்த கதையை எழுத ஆரம்பித்தேன்..எழுத்து எனக்கு இன்னமும் கைவரவில்லை என்பது மட்டும் காரணம் அல்ல, வைஜெயந்தி திருக்குமரன் வாழ்க்கையில் இருக்கும் வில்லங்கமான விஷயங்களை எழுதுவது, அதிலும் எல்லாருக்கும் புரியும் படி எழுதுவது என்பது என்னால் இயலுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது...

காதல் என்றாலே விபச்சாரமாக பார்க்கும் கலாச்சார காவலர்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு முப்பது வயது கணவனை இழந்த பெண்ணுக்கும், இருபத்தொரு வயது இளைஞனுக்கும் காதல் ஏற்படக்கூடும் என்பதை மனதளவில் கூட யாரும் ஒப்புக் கொள்ள தயாரில்லை...

என் முந்தைய பதிவான பச்சோந்தி என்பதை பலர் வெறும் பீட்டர் விடுவதாக எடுத்துக் கொண்டார்களே தவிர, ஒட்டு மொத்தக் கதையே கடைசி வரியில் தான் வருகிறது என்பதை யாரும் தெரிந்து கொண்டதாக தெரியவில்லை...அல்லது புரியும்படி நான் எழுதவில்லை...

இந்த பிண்ணனியில்,

கதை எழுதுவது கடினம்...உண்மைக் கதை எழுதுவது அதைவிடக் கடினம்...எழுத்து எனக்கு புதிது என்பது மட்டுமல்ல, ஒரு உண்மைக் கதை எழுதுவதற்கு முன் தொடர்புடையவர்களின் ஒப்புதலை பெறுதல் அவசியம் ஆகிறது....

என் முந்தைய தொடரான மனைவியின் காதல்....என்ன தான் மாற்றுப் பெயரில் எழுதினாலும் நெருங்கிய நண்பர்களுக்கு எழுதுவது யார் என்று தெரியாமல் இல்லை...யாருக்கோ நான் சொல்லப் போக அந்த யாரோ இன்னொருவருக்கு சொல்ல என்று சங்கிலித் தொடராய்....."அது சரி" என்றால் யார் என்று பெரும்பாலான நண்பர்களுக்கு இப்பொழுது தெரிந்தே இருக்கிறது...

கதையில் வரும் வைஜெயந்தி எனக்கு நட்பு தான் என்றாலும் திருக்குமரன் வழியே வந்த நட்பு...அவனது தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு தெரியும் என்றாலும் அதை எழுதும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை..ஆனால் மனைவியின் காதல் தொடரை படித்து விட்டு, திருக்குமரனும் முக்கியமாக வைஜெயந்தியும் சம்மதம் அளித்ததன் பெயரிலேயே இந்த தொடர் ஆரம்பித்தது..

ஆனால் வைஜெயந்திக்கு இந்த கதை தொடர வேண்டுமா என்ற ஐயம் வந்திருக்கிறது...."வில்லங்கமா எழுதறன்னு உனக்கு தான் கெட்ட பேரு...எழுதி என்னடா செய்யப் போற‌"

கெட்டப் பெயர், நல்லப் பெயர் பற்றி எனக்கு பெரிய கவலை இல்லாவிட்டாலும், எதற்கு எழுதுகிறேன் என்று எனக்கே இன்னமும் தெரியாத நிலையில் "எழுதி என்ன செய்யப் போற" என்ற வைஜெயந்தியின் கேள்விக்கு என்னிடம் விடையில்லை...

ஆதலால் நண்பர்களே, கதையின் மையப்புள்ளியான வைஜெயந்தியின் வேண்டுகோளின் படி இந்த தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது...

எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பதி ழுக்கு

என்னால் இயன்றவரை யோசித்தே இந்த தொடரை ஆரம்பித்தேன் என்றாலும் தொடர இயலாதது எனக்கு வருத்தமே...அரை குறையாக முடிப்பதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

நன்றி.

(அப்பாடா....ஒரு வழியா ஒழிஞ்சான்டா....அவசரமாக பாட்டிலை திறக்கும் நண்பர்களுக்கு.....அப்படில்லாம் முடிவெடுத்துடாதீங்க...நாங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிட மாட்டோம் :0))

Saturday, 14 February 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் எட்டு

முன் அறிவிப்பு : கலாச்சாரம் தான் என் மூச்சு...தெய்வீக காதல் தான் என் பேச்சு...காதல்னா கடவுள்...காமம் ஒரு சைத்தான் என்று பெருமாளுக்கே வைகுண்டம் திறக்கும் கலாச்சார காதலர்கள் இந்த தொடரை படிக்க வேண்டாம்.

எச்சரிக்கை : நான் படிக்கிறது ராணி காமிக்ஸ்...இல்லாட்டி சிறுவர் மலர் என்று சொல்லும் குழந்தைகளும் பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கணும் அடங்குனாதான் அவ பொம்பள என்று சொல்லும் பெரியவர்களும்...இது உங்களுக்கான கதை அல்ல..மீறிப் படித்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.



மணந்தால் மகாதேவி

இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.


முன்கதைச் சுருக்கம்:

எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...

இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்....அதே சமயம் அவனது மேலதிகாரி குருமூர்த்தியும் வைஜெயந்தியை ரகஸியமாக காதலிக்கிறார்...ஆனால் வைஜெயந்திக்கு ஜெய் என்ற பெயரில் கணவன் இருப்பது தெரிய வருகிறது...

இனி.....
======

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ள இருக்குமாம் ஈறும் பேனும்..."

மாதித்தன் விழித்தான்...

"என்னது...பாட்டில மோந்து பாத்ததுக்கே போதை ஏறிடிச்சா....தமிழ்நாட்டுல ஒரு அம்மா குட்டிக்கதை சொல்ற மாதிரி நீ பழமொழி சொல்ற...."

போதையில் இருந்த வேதாளம் இளித்தது....

"ஆமா அது குட்டிக் கதை...இது புட்டிக் கதை....அய்யா எனக்கு நீதி வழங்குங்க...அம்மா எனக்கு நீதி வழங்குங்க...என் சேலைய உருவிட்டாங்க...என்னா கும்மி என்னா கும்மி....அந்த மம்மி இலங்கை பிரச்சினைல‌ இப்ப சத்தம் இல்லாம டம்மியா இருக்கே...என்ன ஆச்சி மாதி....மம்மிக்கு அறிக்கை எழுதறவரு கையில அம்மி விழுந்துருச்சா..."

"அம்மி விழுந்துச்சோ இல்ல ஆடிட்டர் கதையாகிப் போச்சோ....யாருக்கு தெரியும்...அத விடு...ரெண்டு ரவுண்டு டெக்கீலா அடிச்சதுக்கே ஒனக்கு ஏறிடுச்சா..."

"நான் இந்திய வேதாளம்..."

"என்ன ஒளர்ற...இந்தியாவும் சந்தியாவும் இங்க எங்க வந்திச்சி..."

"அதில்ல...நாங்கெல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்...மொதல்ல பாம்பேல அடிச்சானுங்க...அப்புறம் டெல்லில பார்லிமெண்ட் உள்ள பூந்து அடிச்சானுங்க...அப்புறம் பெங்களூர்ல அடிச்சானுங்க...அப்புறம் திருப்பி பாம்பேல ஓட்டல் பூந்து அடிச்சானுஙக்....எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்....அப்பப்ப அறிக்கை விடுவோமே ஒழிய வேற ஒண்ணும் செய்ய மாட்டோம்...பாகிஸ்தான் காரனுங்க அடிச்சே அசராத நாங்க கேவலம் ஒரு பாட்டில பாத்தா ஓடிடுவோம்....நாங்கெல்லாம் ரொம்ப நல்லவனுங்க..."

"சும்மா சொறியற கொரங்குக்கு செரங்கு வந்துச்சாம்....ஏற்கனவே ஒனக்கு வாய் கிழியும்...இப்ப போதை வேற ஏறிடிச்சா....வெளங்குன மாதிரி தான்...சரி இப்ப கதை சொல்றியா இல்லையா..."

"குட்டிக்கதை குசல குமாரியே சும்மா இருக்கும் போது என்கிட்ட கதை கேட்கிறியே...சரி சொல்றேன்...ஒரு ஊர்ல ஒரு நரியாம்...அதோட சரியாம்..."

"அடிங்க..."

விக்கிரமாதித்தன் எறிந்த குப்பைத் தொட்டியிலிருந்து விலகிக் கொண்ட வேதாளம் தன் மூக்கை சொறிந்தவாறே வைஜெயந்தியின் கதையை தொடர ஆரம்பித்தது.....

======================

பேப்பர் போடுறவங்களுக்கு பீக் அவரு காலைல ஆறு...பால் போட்றவங்களுக்கு காலைல ஏழு...ஸ்கூலுக்கு பீக் அவர் காலைல எட்டரை டூ ஒம்போது...கவருமெண்டு ஆபீசுக்கு பீக் அவரு...அவய்ங்க எப்பவும் லேட்டா தான் வருவாய்ங்க...அதனால பீக் அவரு பத்து மணிக்கு மேல...கோயிலுக்கு பீக் அவர் சாயந்தரம் ஆறு டூ எட்டு...அப்ப பாருக்கு பீக் அவரு?...கோயிலுக்கு போயிட்டு தான் பாருக்கு போக முடியும்கிறதால எட்டு மணிக்கு மேல தான் பாரெல்லாம் பிசி...ஏம்ப்ப்பு ஒரு குவாட்டர சாத்திட்டு அப்புறமா கும்பிட போப்படாதான்னெல்லாம் கும்மி அடிக்கப்படாது....கலாச்சார காவலரெல்லாம் இருக்காய்ங்க...கும்மிருவாய்ங்க... காலைல‌ பத்து மணிக்கு வேல...ஆறு மணிக்கு முருவனோ அம்மனோ அய்யப்பனோ எதுனா ஒரு கோயிலு...எட்டு மணிக்கு மேல குவாட்டரு....இது தான் கலாச்சாரம்னு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் சொல்லி வச்சிருக்காய்ங்களா இல்லியா...கலாச்சாரத்தை காத்துல உட்டுட்டு இப்பிடி தடுக்குல பூந்து தகராறு பண்ணினா எப்பிடின்னேன்??

நம்ம மக்க, அதாங்க போன வருசம் இந்த கதை ஆரம்பிச்சப்ப பார்த்தோமுல்ல திருக்குமரன், அவன் பிரண்டு அண்டா முருகேசன் அப்படின்னு...அவய்ங்க தான்...ரொம்ப நாளா காணாம போயிட்டு இப்ப தான் வர்றாய்ங்க...

இப்ப கூட வத்தலா திருக்குமரனை விட கொஞ்சம் கறுப்பா பாப்பா மாதிரி இன்னொரு பயலும் இருக்கான்...இவன் குமரன், அண்டாவுக்கு ஜூனியர்...அவய்ங்க படிச்ச காலேஜூல இப்ப தான் ஃபர்ஸ்ட் இயர் சேந்துருக்கான்...இவனுக்கு ஒரு சமாச்சாரம் தெரிஞ்சா தந்தி பேப்பருல வந்த மாதிரி மருதை ஃபுல்லா பரப்பிருவான்....அதனால இவன் பேரு...ஆமா, நீங்க நெனச்சது தான்...பய பேரு பீப்பீ....பயலுக்கு பதினாறு வயசு....பாப்பா மாதிரி இருக்கான்..சுள்ளான்னு நெனச்சிராதீங்கப்பு....நல்லா கவனிச்சி வைங்க...இந்த கதைல வில்லனே இந்த பய தான்...

எல்லா பயலும் திருப்பரங்குன்றம் தேரடி தெருவுல இருக்காய்ங்க...கோயிலுன்னு நெனச்சிராதீங்க...அங்க தான் கோல்டன் ஒயின்ஸ் இருக்கு...நைட்டு ஒம்போது மணி...பீக் அவரு பாருங்க...ரொம்ப பிஸியா இருக்கு....குரூப்ல இருக்கறதுலயே சீனியர்ங்கிறதுனால நம்ம அண்டா முருகேசன் தான் ரொம்ப ஆக்டிவ்வா கொரல் குடுக்கிறாரு...

"அண்ணே இங்க ஒரு குவாட்டரு ஓல்டு மங்கு...ரெண்டு முட்டை பொரியல்..ரெண்டு கிங்சு...கொமாரு...ஒனக்கென்ன‌டா..."

"ஒக்காளி...ஒனக்கு தான் இவ்வளவும் சொன்னியா....எனக்கு ஒரு குவாட்டரு ஒல்டு மங்கு சொல்லு..."

"அண்ணே எனக்கு ஒரு பீப்பி கோல்டு மூணு வில்ஸு"

பீப்பீ குரல் கொடுத்தான்...

"ஒன்ன எவன் கேட்டான்...வேணும்னா நீயே வாங்கிக்க..."

"காங்கோவிலே காடு அழிக்கிறார்கள்...கடப்பாவிலே கல்லை உடைக்கிறார்கள்...மெக்சிகோவிலே கோழி பிடிக்கிறார்கள்...சோவியத் யூனியனிலே பனி கொட்டுகிறது...தமிழ் நாட்டில் மழை இல்லை...அதனால் உடன்பிறப்பே நிதி கொடு...உன் கோவணத்தை விற்றாவது நிதி கொடு...நான் குவாட்டர் வாங்கும் அளவுக்காவது நிதி கொடு...."

"பீப்பீன்னு ஒனக்கு பேரு வச்சது சரியா தாண்டா இருக்கு...ஒக்காளி சொந்த காசுல ஒரு குவாட்டர் வாங்க வக்கில்ல...பேச்ச பாரு...இனிமே காசு குடுத்தா தான் ஒனக்கு குவாட்டர்...எவ்வளவு வச்சிருக்க.."

"மூன்றுவா அம்பது காசு...."

"ய்யால‌....மூன்றுவா வச்சிக்கிட்டு குவாட்டர் ஆர்டர் பண்றவன் ஒலகத்துலேயே நீ தான்டா...அது என்ன மூன்றுவா கணக்கு..."

"திரும்பி ஹாஸ்டல் போக டிக்கட் காசுண்ணே..வரும்போது டிக்கட் எடுக்காம வந்துட்டேன்...ஒன்னாருவா மிச்சம்..."

"எவன் எவன் மேலயோ லாரி ஏறுது...ஒம் மேல ஒரு லாரி ஏற மாட்டேங்குதே..."

சலித்துக் கொண்ட அண்டா ஆர்டர் குடுத்தான்...

"அண்ணே....ஒரு பீப்பி கோல்டு மூணு வில்ஸு சேத்துக்கங்க...ஏண்டா சைடு எதுவும் வேணாமா..."

"வேணாம்னே...அதான் ரெண்டு முட்டை பொரியல் சொன்னீங்கள்ல..."

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குமரன் அமைதியாக இருந்தான்...அடுத்தவன் நல்லா இருக்கது எவனுக்கு பிடிக்குது....அண்டாவுக்கு பொறுக்கவில்லை...

"என்ன மாப்ள....அப்பல இருந்து பாக்குறேன்...என்னவோ பன்னி கடிச்ச நாய் மாதிரி ரொம்ப சைலன்டா இருக்க....

குமரன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு கிங்ஸை பற்ற வைத்து இழுத்தான்...

"என்னடா...மொத நாளே ஆஃபிஸ்ல எதுனா பிரச்சினையா...சொல்லு...தட்றதுனா தட்டிறலாம்...."

"இல்லடா....வேற மேட்டர்...."

"வேற மேட்டரா....ஒனக்கெல்லாம் வாழ்க்கைல ரெண்டே பிரச்சினை..ஒண்ணு குவாட்டருக்கு காசு...ரெண்டாவது எதுனா ஜாரி....எதுனா ஜாரி மேட்டரா..."

"ஆமாடா...."

"அடங்கொக்காலி....ஏண்டா மொத நாளேவா...."

ஏற்கனவே ஓசி குவாட்டர் சந்தோஷத்தில் இருந்த பீப்பிக்கு சுதி ஏறியது....

"என்னது ஜாரியா....அண்ணே எவ்வளவு செலவானாலும் பரவால்ல...சொல்லுங்கண்ணே..."

"ஆமா இவரு பெரிய டாட்டா பிர்லா....செலவு பண்ணிருவாரு....பொட்லம் அடிக்கிற தறுதலை....மாப்ள...அது கொசுத் தொல்ல‌...அவன விடு...நீ சொல்லு...என்ன மேட்டரு..."

"இல்ல மச்சான்...ஆஃபிஸ்ல ஒரு பொண்ண பார்த்தேன்...அதான் ஒரு மாதிரி ஆயிடுச்சி..."

"ச்சப்...இவ்ளவு தானா....ஒடனெ ஒனக்கு லவ்வு வந்துருக்குமே..."

"ஆமாண்டா"

"அதான‌....ஒனக்கு லவ்வு வராட்டி தான் அது மேட்டரு....தாயளி நீ லவ் பண்ண பொண்ணெல்லாம் ஒன்ன லவ் பண்ணியிருந்தா மருத ஃபுல்லா ஒன் பொண்டாட்டிங்க தாண்டா இருக்கும்.....இதெல்லாம் ஒரு மேட்டரு...இதுக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வேற உட்டுக்கிட்டு இருக்க...."

"இல்ல மச்சான்....இது வேற மாதிரி....ஒனக்கு புரியாது...."

"வேற மாதிரின்னா....அந்த ஈரோடு ப்ரியாவ நீ லவ் பண்ண மாதிரியா..."

குமரன் அவனது சிகரெட்டை வெறித்துக் கொண்டிருந்தான்...

"இல்லடா....ப்ரியாவ லவ் பண்ணது வேற....ஆனா இது வேற...."

"ஆமா....ஈரோடு வேற...மதுர வேற...அது கொங்கு மண்டலம்...இது தங்கம் வித்த சங்கம்...ச்சீ...ச‌ங்கம் வச்ச தங்கம்...."

பீப்பி ஏதோ உளறினான்...

"எலேய்...கெரகம் புடிச்சவனே...ஒன் பீப்பிய கொஞ்ச நேரம் ஊதாம இருக்கியா....நீ சொல்டா....பொண்ணு யாரு..எந்த ஏரியா..."

"யாருன்னா என்ன சொல்றது...நம்ம ஏரியா தான்...பழங்காநத்தம்...."

"யாருன்னா....என்ன பேருடா..."

"வைஜெயந்தி...."

"வைஜெய‌ந்தியா....வித்தியாசமா இருக்கே...நம்ம ஜாதில இப்பிடி பேரு வைக்க மாட்டாங்களே....வேற ஜாதியா...."

"தெரிலைடா....ஆனா அப்படித் தான் நெனைக்கிறேன்...."

"அப்ப கொஞ்சம் பிரச்சினை தான் மாப்ள...ஒங்க அப்ஸை பத்தி ஒனக்கே நல்லா தெரியும்....ஜாதி சங்கத்துல பெரிய ஆளு....நாமெல்லாம் ஒரே ஜாதின்னு தான் என்னையெல்லாம் உங்க வீட்டுக்குள்ளயே விட்றாரு....அதனால பேசாம மறந்திரு...."

"பிரச்சினை அது இல்லடா...."

"பின்ன...."

"அவளுக்கு...ம்ம்ம்ம்...இல்ல அவங்களுக்கு என்ன விட வயசு கொஞ்சம் ஜாஸ்தி...அப்புறம்..."

"வயசு ஜாஸ்தியா...வெளங்கிரும்....ஒன்ன்னொட சேத்து எனக்கும் செருப்படி நிச்சயம்....என்ன வயசு அந்த பொண்ணுக்கு...."

"சரியா தெரில....இருவத்தேழுன்னு நினைக்கிறேன்..."

"இருவத்தேழா....ஒனக்கு இருவத்தொண்ணு.....அவங்களுக்கு இருவத்தேழா...ரொம்ப ஜாஸ்தியா இருக்கேடா..."

குமரன் தனது சிகரெட்டை ஆழமாக இழுத்தான்....

"பிரச்சினை அது கூட இல்லடா...."

"பின்ன...."

"வைஜெயந்திக்கு கல்யாணம் ஆயிடுச்சி...."

அண்டா முருகேசனின் முகம் ஓல்ட் மங்க் ரம் போல் இருண்டது....

"வேற ஜாதி...வயசு ஜாஸ்தி....கல்யாணம் ஆயிடுச்சி....ஆனா நீ லவ் பண்ற....ஏண்டா ஒனக்கு லூசா இல்ல இந்த நாயி பீப்பீ கூட சேந்து எதுனா பொட்லம் அடிச்சியா...ஒக்காளி...ஊர்ல சொன்னா செருப்பால அடிப்பாய்ங்க....ஒங்க அப்பனுக்கு தெரிஞ்சா மொதல்ல ஒண்ண கொளுத்திருவான்...அடுத்து ஒங்க ஆத்தாவ கொளுத்திருவான்....அப்புறம் கூட இருந்த கொடுமைக்கு என்ன கொளுத்திருவான்"

இது வரை தனது பீப்பி கோல்டில் கவனமாயிருந்த பீப்பீ வாய் திறந்தான்...

"கடலுக்கு ஏதுண்ணே மூடி....காற்றுக்கு யாரு வேலி போட்டாங்க...காதல்ங்கிறது காற்று மாதிரிண்ணே....அதுக்கு கல்யாணம், கணவன்னு எந்த வேலியும் இல்ல....நம்ம குமாரு அண்ணன் காதலிச்சா சேத்து வைக்க இந்த பீப்பீ இருக்காண்ணே...."

"ஆமா....இந்த பன்னாடை இருக்காரு....ஒக்காளி ஓசில குவாட்டரு கெடைச்சா குடிச்சிட்டு சும்மா இரு....மூடி தாடின்னு பேச ஆரம்பிச்சிட்டான்..."

பாரில் எரிந்து கொண்டிருந்த மங்கலான நாற்ப‌து வாட்ஸ் பல்பையும் அதை சுற்றி பறந்த கொசுக்களையும் வெறித்து கொண்டிருந்த குமரன் அடுத்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.....அவன் கண்கள் நிலை குத்தி நின்றிருந்தது....அவன் குரல் மாறியிருந்தது.

"இல்ல மச்சான்....எனக்கு வைஜெயந்தி வேணும்....வயசு வேற, கல்யாணம் ஆயிடுச்சி....இதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்ல....எனக்கு இந்த ஜென்மத்தில வொய்ஃப்னா அது வைஜெயந்தி தான்....மணந்தால் வைஜெயந்தி...இல்லாட்டி வைகை கரையோரம் ஒரு சமாதி...."
=======================

சொல்லிக் கொண்டே வந்த வேதாளம் திடீரென்று நிறுத்தியது....

"டைம் என்ன ஆச்சி மாதி...."

"ம்ம்ம்ம்...ரெண்டு மணி ஆகுது....எதுக்கு...."

"படுக்கைய போட தான்...வேற எதுக்கு...."

"ஆரம்பிச்ச கதைய முடிக்க மாட்டேங்குற...ஒனக்கு தூக்கம் ஒரு கேடா....ஒழுங்கா கதைய சொல்லு...."

விக்கிரமனை அலட்சியம் செய்த வேதாளம் படுக்கைய விரிக்க ஆரம்பித்தது.....

============= தொடரும் ======================