Saturday, 3 January 2009

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஆறு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.


இந்த கதையின் முந்திய பாகங்களை இங்கே படிக்கலாம்.


பாகம் ஒன்று, பாகம் இரண்டு, பாகம் மூன்று, பாகம் நான்கு, பாகம் ஐந்துமுன்கதைச் சுருக்கம்: எடின்பரோவில் தன் அன்றைய கேர்ள் ஃப்ரண்டுடன் ரெஸ்டாரன்டில் இருக்கும் விக்கிரமாதித்தனை வேதாளத்தை பிடித்து வரும்படி மந்திரவாதி தொந்தரவு செய்கிறான்....வேதாளத்தை பிடிக்க செளத் வேல்ஸில் இருக்கும் ப்ரெக்கன் ரேஞ்சஸ் காட்டுக்கு செல்லும் விக்கிராமாதித்தனிடம் வேதாளம் வைஜெயந்தியின் கதையை சொல்கிறது...

இருப‌த்தொரு வ‌ய‌தான‌ திருக்கும‌ர‌ன் த‌ன‌து முத‌ல் வேலையில் சேர‌ அலுவ‌ல‌க‌ம் செல்கிறான்..அங்கு அவ‌ன‌து மேல‌திகாரி குருமூர்த்தி அவ‌னுக்கு வைஜெய‌ந்தியை அறிமுக‌ப்ப‌டுத்தி வைக்கிறார்...வைஜெய‌ந்தியை பார்க்கும் திருக்கும‌ரன் அவள் மேல் காதல் கொள்கிறான்....அதே சமயம் அவனது மேலதிகாரி குருமூர்த்தியும் வைஜெயந்தியை ரகஸியமாக காதலிக்கிறார்....

இனி.....

===========================

பேய் வரும் நேரம்!


என்னதிது....நாமளும் கதை சொல்லிக்கிட்டு இருக்கோம்..ஆனா ரொம்ப நேரமா இந்த மாதிப்பய கிட்ட இருந்து ஒரு சத்தத்தையும் காணோம்...அப்பிடியே தூங்கிட்டானா....

"ஏய்....எந்திரியப்பு....கதை ஆரம்பிச்ச ஒடனேயே இப்பிடி தூங்கினா எப்பிடி..."

கடுப்பான வேதாளம் மாதித்தனின் தலையை பிடித்து உலுக்கியது...

"அடச்சே....சனியனே கைய எடு...நாட்டுல குடிக்கவும் விட மாட்டேங்கிறானுங்க...தூங்கவும் விட மாட்டேங்கிறானுங்க....இனிமே லவ் பண்ணக்கூட இவனுங்க கிட்ட பெர்மிஷன் வாங்கணுமாட்ருக்கு....அதுக்கும் அது கலாச்சாரமில்லன்னு சொல்லுவானுங்க போலருக்கு...."

இதை எதிர்பார்க்காத வேதாளம் தாடியை சொறிந்து கொண்டது....

"ஏய்....என்னப்பு....இப்பிடி கடுப்படிக்கிற....காதலிக்க பெர்மிஷன் குடுக்கறதுன்னா அதுக்கும் பத்து பெர்சன்ட் கேப்பானுங்களே...."

"காதலிக்கிறதுக்கென்ன‌....இனிமே நீ வெளிய போயி சைட் அடிக்கக் கூட கமிஷன் கேப்பாணுங்க...அதெல்லாம் இருக்கட்டும்...ஒனக்கென்ன....கதைய சொல்ல வேண்டியது தான....எதுக்கு என் மண்டைய உலுக்குற..."

"இல்ல நீ தூங்கிட்டியான்னு பாத்தேன்..."

"என்னாத்துக்கு....தூங்கினதும் என் டவுசர கழட்டிக்கிட்டு ஓடிறலாம்னு நெனச்சியா...."

"அடச்சே.....என்ன இப்பிடி அசிங்கப்படுத்திட்டியே....டவுசர கழட்றது...கோமணத்த அவுக்கறது....வேட்டிய கிளிக்கிறது....இதெல்லாம் என் பொழப்பு இல்ல....இதுக்கெல்லாம் நீ தமிழ்நாட்டுக்கு தான் போகணும்...."

"எதுக்கு....யாராவது என் டவுசர கிழிக்கிறதுக்கா.....டவுசர் இருக்கட்டும்....இப்ப நீ கதைய சொல்ல போறியா இல்லியா...."

"சொல்றேன்ப்பு....நீ ஏஞ் டவுசர அவுத்துறாத‌...." தன் அழுக்கு ஜீன்ஸை கெட்டியாக பிடித்து கொண்ட வேதாளம் கதையை தொடர ஆரம்பித்தது....

===========================

திருக்குமரனை அழைத்து சென்ற வைஜெயந்திக்கு சிரிப்பாக இருந்தது...

அவளை ஆண்கள் ஆர்வத்துடன் பார்ப்பது புதிதல்ல..தான் அழகாய் இருப்பது அவளுக்கும் தெரியும்..அழகாய் இருக்கும் எதையும் மீண்டும் பார்க்கவே எல்லாரும் விரும்புகிறார்கள்..ஆனால் யாரும் இப்படி திகைத்துப் போய் நின்றதில்லை....ஒரு வேளை இவன் அவருக்கு தெரிந்தவனாக இருப்பானோ...

ஸ்கூல் பையன் போல் தன் பின்னால் வந்து கொண்டிருக்கும் திருக்குமரனிடம் திரும்பினாள்....

"ஏங்க குமரன்...என்னை முன்னாடி எங்கயாவது பாத்திருக்கீங்களா..."

"இல்லீங்க....அது வந்து....."

"அப்ப ஏன் அப்படி ஸ்டன் ஆகி நின்னீங்க.....நான் கூட நீங்க ஜெய்யோட க்ளோஸ் ஃப்ரன்டுன்னு நெனச்சேன்...."

குமரனுக்கு அவளை பார்க்க முடியவில்லை...தலை குனிந்து கொண்டான்....

"அது....அது வந்து....இல்ல..ஸாரி மேடம்...உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சி....அதான்...ஆனா....ஜெய்ங்கிறது யாரு மேடம்...."

வைஜெயந்தி தலையில் கை வைத்துக் கொண்டாள்....

"சரியாப் போச்சி....நீங்க இன்னைக்கி தான் ஜாய்ன் பண்றீங்க...உங்களை குழ‌ப்பிட்டேன் போலருக்கு.....ஜெய் என்னோட ஹஸ்பென்ட்... சரி சரி...நீங்க வாங்க....இது தான் என்னோட டேபிள்..."

குமரனுக்குள் ஏதோ இடம் பெயர்ந்தது...

"உங்க அக்கவுண்ட், அட்ரஸ் டீட்டெய்ல்ஸ் எல்லாம் வேணும்...உங்க வீடு எங்கருக்கு...."

"திருப்பரங்குன்றம் மேடம்...."

"திருப்பரங்குன்றமா....பக்கத்துல தான்....நான் பழங்காநத்தம்....அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க....எந்த பேங்க்..."

"மெஜுரா பேங்க்....டூ செவன் சிக்ஸ் ஃபோர் ஒன் எய்ட் த்ரீ மேடம்...."

வைஜெயந்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.....அந்த கண்கள்...வேண்டாம்...குமரன் முகத்தை திருப்பிக் கொண்டான்...

"மேடமெல்லாம் வேண்டாம்...நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க...."

"சரிங்க மேடம்.....ஸாரி....உங்க பேரு......ஸாரி....அது....."

என்ன ஆயிற்று இவனுக்கு.....ஒரு வேளை உடல்நிலை சரியில்லையோ....

"வைஜெயந்தி....நீங்க வைஜெயந்தின்னே கூப்பிடலாம்...."

"சரிங்க மேடம்....ஸாரி...வைஜெயந்தி மேடம்....இல்ல...வைஜெய்ந்தி..."

வைஜெயந்திக்கு அவன் அவஸ்தை விளையாட்டாக இருந்தது....

"யப்பா....ஒரு வழியா சொல்லீட்டீங்க...நான் உங்கள திருன்னு கூப்டலாமா...அது என்ன கைல கட்டு..."

"ரோடு பைக்ல விழுந்திடுச்சி....இல்ல...பைக் ரோட்ல விழுந்திடுச்சி..."

ஏன் இவன் இப்படி உளறுகிறான்...ஒரு வேளை இவன் இயல்பே இது தானா....இவன் எப்படி மார்க்கெட்டிங்கில்... என்னைக் கண்டு உளறுகிறானா....இதற்கு முன் இப்படி உளறியது ஒரே ஒரு ஆள்....ஜெய்...அது காதல் உளறல்...ஜெய்...எப்படி இருக்கிறாய்....ஒரு வேளை இவனும்....ச்சே...இருக்காது...இவன் வயசு என்ன....என் வயசு என்ன....என் புத்தி ஏன் இப்படி போகிறது....

"நல்லா விழுந்துச்சி....கைய பாத்துக்கங்க...."

"சரிங்க மேட....வைஜெயந்தி...."

"குட்....நீங்க இன்னொரு கேள்விக்கு பதில் சொல்லலை...."

ஆயிரத்து எட்டாவது முறையாக திருக்குமரன் விழித்தான்...

"என்ன முழிக்கிறீங்க.....உங்கள நான் திருன்னு கூப்பிடலாம்ல?"

திரு!...திரு!....திருக்குமரனுக்கு இனித்தது...அவன் பிறந்ததிலிருந்து யாரும் அவனை திரு என்று கூப்பிட்டதில்லை....வீட்டில் குமரன்....நண்பர்களுக்கு கொமாரு...கடுப்பானால் டமாரு....ஆனால் திரு? இதுவரை யாருமில்லை...

அன்றைய தினத்தில் முதல் முறையாக அவனுக்கும் சிரிப்பு வந்தது....

"திரு....நல்லாருக்கு....நீங்க திருன்னு கூப்பிடுங்க...இல்லாட்டி தெருன்னு கூப்பிடுங்க.....நீங்க எப்பிடி கூப்ட்டாலும் நல்லா தான் இருக்கு...."

வைஜெயந்திக்கு அப்பாடா என்றிருந்தது.....

"தெருனெல்லாம் கூப்பிட மாட்டேன்....கவலைப்படாதீங்க....இதுல ஒரு சைன் பண்ணுங்க.....அவ்வளவு தான்....உங்க ஸர்டிஃபிகேட் எல்லாம் எடுத்துக்கிட்டு ஹெச்.ஆர். போங்க...அங்க நாராயணன் இருப்பாரு....அவர் மீதிய பாத்துப்ப்பாரு...எதுனா பிரச்சினைன்னா என்கிட்ட வாங்க....நான் ஹெல்ப் பண்றேன்...."

"சரிங்க மேடம்....இல்ல...வைஜெயந்தி...உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"நோ ப்ராப்ளம்....ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் செகன்ட் ஃப்ளோர்..."

திரும்பி நடந்த திருக்குமரனை பார்த்து வைஜெயந்தியின் மனதில் அலையடித்தது....ஜெய்யும் இப்படித் தான்...ஜெய்....என்ன செய்து கொண்டிருக்கிறாய்....

======================

வேகமாக சொல்லிக் கொண்டு வந்த வேதாளம் திடீரென நிறுத்திக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தது....

"மொட்டை....என்ன வவ்வால் மாதிரி மேல பாக்குற....எதுனா கோமணம் பறக்குதா...இல்ல புதுசா எவனாவது கட்சி ஆரம்பிச்சி கொடி ஏத்திட்டானா...."

"இல்ல....மழை வர்ற மாதிரி இருக்கு....அதான்...."

"அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல.....அது யாரு ஜெய்....எங்க போனான் அந்த மண்டையன்..."

விக்கிரமன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ச‌ட சடவென்று மழைக் கொட்ட ஆரம்பித்தது.....

மாதித்தன் சலித்துக் கொண்டான்....

"கிழிஞ்சது போ....குடி தாங்கின ஐயாவோட அரசியலும் செளத் வேல்ஸ் மழையும் ஒண்ணு தான் போலருக்கு....எப்ப வரும்...எங்க போகும்...எவன் கூட போகும்னு எவனுக்கும் தெரியாது...."

"எவன் கூட போகும்னு எவனுக்கும் தெரியாதா.....ரொம்ப அசிங்கமா இருக்கே..."

"அத விடு....அது எவன் கூடயோ போகுது...இப்ப நாம எங்க போறது...."

"ஒவ்வொரு எலக்ஷனுக்கும் போறதுக்கு எடமிருக்கறப்ப நமக்கு எடமில்லையா....இப்பிடியே இன்னும் கொஞ்சம் காட்டுக்குள்ள போனா ஒரு குகை இருக்கு....அங்க மழை பெய்யாது....வா போலாம்....."

இளித்த வேதாளம் விக்கிரமனை கும்மிருட்டில் காட்டுக்குள் கூட்டிச் சென்றது...

======மோகம் என்னும் மாயப்பேய்....இனி வரும்=======

37 comments:

குடுகுடுப்பை said...

நானும் உங்கள இனி "திரு" ன்னே கூப்பிடறேன்.

அதிரை ஜமால் said...

மோகத்தை கொன்றுவிடு - அட ஏங்க

அதிரை ஜமால் said...

\\முன் அறிவிப்பு 2\\

அருமையான அறிவிப்பு

உருப்புடாதது_அணிமா said...

உள்ளேன் ஐயா

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
நானும் உங்கள இனி "திரு" ன்னே கூப்பிடறேன்.

04 January 2009 03:17
///

சரியாப் போச்சி....ஆப்பு வைக்காம விடமாட்டீங்க போலருக்கே....அப்பப்ப திருதிருன்னு முழிக்கிறதுனால என்னையும் திருன்னு கூப்பிடலாம்..:))

Jaypee said...

essoose me, one doubt pa, intha kadai entha kalakatathula nadakuthu???.

உருப்புடாதது_அணிமா said...

நேத்து கொஞ்சம் வேலை...
அது தான் சீக்கிரமா போயிட்டேன்..

உருப்புடாதது_அணிமா said...

இந்த பாகத்துல உங்க டச் பாக்க முடியுது..

உருப்புடாதது_அணிமா said...

///======மோகம் என்னும் மாயப்பேய்....இனி வரும்=======///


சீக்கிரம் வரட்டும்...
அதுக்கு தானே இவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருக்கோம்..

உருப்புடாதது_அணிமா said...

மொத ஆறு பாகமும் ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகத்திலே போயிடுச்சி..


சீக்கிரம் கதைக்கு வாங்க...

உருப்புடாதது_அணிமா said...

//Jaypee said...

essoose me, one doubt pa, intha kadai entha kalakatathula nadakuthu???.///இது ஒரு நல்ல கேள்வி...
இதுக்கு நீங்க நம்ம அண்ணன் எழுதுன பழைய கதைகளை படிச்சா புரியும்...

உருப்புடாதது_அணிமா said...

நீங்க இப்படி டிஸ்கி போடலாம்..

"நவீன விக்கிரமாதித்தன் கதைகள் ” படிப்பது மன நோய்க்கு வழிவகுக்கும்..

ராஜ நடராஜன் said...

//"அடச்சே.....என்ன இப்பிடி அசிங்கப்படுத்திட்டியே....டவுசர கழட்றது...கோமணத்த அவுக்கறது....வேட்டிய கிளிக்கிறது....இதெல்லாம் என் பொழப்பு இல்ல....இதுக்கெல்லாம் நீ தமிழ்நாட்டுக்கு தான் போகணும்...." //

கலாச்சாரக் காவலர்களை அவமதித்த விக்கிரமாதித்தனையும்,வேதாளத்தையும் தமிழகம் செல்ல விசா அனுமதி வேண்டுகிறேன்.

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு.

# _ # _ # _ # _ # _ # _

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மோகன் said...

ம்ம், இப்போ சூடு புடிக்க ஆரம்பிச்சி இருக்கு.

மோகன் said...

அதுசரி நண்பரே, குடுத்த அவார்ட திரும்ப வாங்கற பழக்கம் எனக்கு இல்லைங்க.
நானே வெக்கம் இல்லாம அவார்ட வாங்கினப்புறம் உங்களுக்கு என்ன? உங்க நவீன விக்கிரமாதித்தன் கதைகளுக்கு இதை விட நல்ல விருது கெடைக்கணும்.
சந்தேகமே பட வேண்டாம். உங்க பிளாக் நல்ல பிளாக் தான்.
நீங்க ரிடர்ன் பண்ணுற விருதை வாங்க மறுக்கரதுக்கு என்னை மன்னிச்சிகோங்க.அந்த விருது உங்களுக்கு தான்.

அது சரி said...

//
அதிரை ஜமால் said...
மோகத்தை கொன்றுவிடு - அட ஏங்க
//

வாங்க ஜமால் அண்ணே....

மோகத்தை எதுக்கு கொல்லணும்னு.....கதையை தொடர்ந்து படிங்களேன்....பின்னாடி வரும் :0))

அது சரி said...

//
Jaypee said...
essoose me, one doubt pa, intha kadai entha kalakatathula nadakuthu???.
//

வாங்க ஜே.பி. அய்யா :)))

இந்த கதை, சுந்தர சோழரின் கடைசி காலத்தில், ஆனால் ஆதிக்க கரிகாலர் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய சோழ ஆட்சியில் நடக்கிறது :0)))

கதை மாந்தர்களின் அடையாளத்தை காக்கும் பொருட்டு பாண்டி நாட்டு தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது...அப்படியே அவர்களின் அடையாளங்களும்...கதை நடக்கிறது 1997ன்னு வச்சிக்கங்க :0))

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
நேத்து கொஞ்சம் வேலை...
அது தான் சீக்கிரமா போயிட்டேன்..
//

எது...மீதி இருந்த விஸ்கியை முடிக்க வேண்டியிருந்ததா?? ;))

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
இந்த பாகத்துல உங்க டச் பாக்க முடியுது..
05 January 2009 10:17
//

ஆனா எனக்குத் தான் அது என்ன என்னோட டச்சுன்னு தெரில...சரி விடுங்க..உங்களுக்காவது தெரியுதே :0))

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
///======மோகம் என்னும் மாயப்பேய்....இனி வரும்=======///


சீக்கிரம் வரட்டும்...
அதுக்கு தானே இவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருக்கோம்..
05 January 2009 10:18
//

பேய் வரணும்னா இருட்டா வேண்டாமா??? பேய்க்கும் ஒரு மூடு வந்தா தான் வரும் :)))

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
மொத ஆறு பாகமும் ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகத்திலே போயிடுச்சி..


சீக்கிரம் கதைக்கு வாங்க...
05 January 2009 10:23
//

இது கொஞ்சம் பெரிய கதைங்கண்ணா....கொஞ்சம் தப்பா போச்சின்னா செக்ஸ் கதை மாதிரி ஆயிடும்...அதனால கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் சொல்ல வேண்டியிருக்கு...

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
நீங்க இப்படி டிஸ்கி போடலாம்..

"நவீன விக்கிரமாதித்தன் கதைகள் ” படிப்பது மன நோய்க்கு வழிவகுக்கும்..
05 January 2009 10:34
//

ஏன் இந்த கொலை வெறி??

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
//"அடச்சே.....என்ன இப்பிடி அசிங்கப்படுத்திட்டியே....டவுசர கழட்றது...கோமணத்த அவுக்கறது....வேட்டிய கிளிக்கிறது....இதெல்லாம் என் பொழப்பு இல்ல....இதுக்கெல்லாம் நீ தமிழ்நாட்டுக்கு தான் போகணும்...." //

கலாச்சாரக் காவலர்களை அவமதித்த விக்கிரமாதித்தனையும்,வேதாளத்தையும் தமிழகம் செல்ல விசா அனுமதி வேண்டுகிறேன்.
05 January 2009 11:28
//

எதுக்கு....அது ரெண்டுகிட்ட இருக்கறதும் ஒரே ஒரு டவுசர்....அதையும் கழட்டிறாலாம்னு திட்டமா??? ஒங்க திட்டம் பலிக்காது சாமி :0))

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
நல்லா இருக்கு.

# _ # _ # _ # _ # _ # _

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
05 January 2009 12:07
//

வாங்க சிவா அண்ணாச்சி...

வாழ்த்துகளுக்கு நன்றி...அப்படியே உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :0)

அது சரி said...

//
மோகன் said...
ம்ம், இப்போ சூடு புடிக்க ஆரம்பிச்சி இருக்கு.
05 January 2009 14:11
//

வாங்க மோகன்...அப்பப்ப சூடு மாறும்...அன்னிக்கி அடிக்கிற சரக்க பொறுத்தது அது :))

அது சரி said...

//
மோகன் said...
அதுசரி நண்பரே, குடுத்த அவார்ட திரும்ப வாங்கற பழக்கம் எனக்கு இல்லைங்க.
நானே வெக்கம் இல்லாம அவார்ட வாங்கினப்புறம் உங்களுக்கு என்ன? உங்க நவீன விக்கிரமாதித்தன் கதைகளுக்கு இதை விட நல்ல விருது கெடைக்கணும்.
சந்தேகமே பட வேண்டாம். உங்க பிளாக் நல்ல பிளாக் தான்.
நீங்க ரிடர்ன் பண்ணுற விருதை வாங்க மறுக்கரதுக்கு என்னை மன்னிச்சிகோங்க.அந்த விருது உங்களுக்கு தான்.
05 January 2009 14:11
//

அட...உங்களுக்கு வாங்க தகுதியிருக்குங்க...நீங்க நல்லா தான் எழுதிரீங்க...ஆனா எனக்கு....???

ம்ம்ம்ம், நீங்க சொல்றதுனால நான் வாங்கிக்கிறேன்...சீக்கிரமா இது பத்தி எழுதறேன்...

விருதுக்கு நன்றி :0)))

கபீஷ் said...

தாமதமான வருகைக்கு மாப்பு! ஆனா நான் கதைய இன்னும் படிக்கல உ-அ மாதிரியே. அவர் படிச்ச மாதிரி உதார் விடுறத நம்பிடாதீங்க.

நீங்க நல்லாத்தான் எழுதியிருப்பீங்கன்னு இப்பவே அட்வான்ஸா சொல்லிக்கறேன்.

ரொம்ப நல்லாருக்குங்க!!!

Saravana Kumar MSK said...

லேட்டா வந்துட்டேன்.. கொஞ்சம் பணிசுமை..

வேதாளம், விக்ரம், கதை.. நல்ல மிக்ஸ்.. கலக்கல் அதுசரி அண்ணா...

Saravana Kumar MSK said...

சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதவும்.. :)

அது சரி said...

//
கபீஷ் said...
தாமதமான வருகைக்கு மாப்பு! ஆனா நான் கதைய இன்னும் படிக்கல உ-அ மாதிரியே. அவர் படிச்ச மாதிரி உதார் விடுறத நம்பிடாதீங்க.

நீங்க நல்லாத்தான் எழுதியிருப்பீங்கன்னு இப்பவே அட்வான்ஸா சொல்லிக்கறேன்.

ரொம்ப நல்லாருக்குங்க!!!
05 January 2009 22:59
//

என்ன கொடுமை கபீஷ் இது....இதுக்கு நீங்க படிச்சிட்டே கமெண்ட்டிருக்கலாம்...:))

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
லேட்டா வந்துட்டேன்.. கொஞ்சம் பணிசுமை..

வேதாளம், விக்ரம், கதை.. நல்ல மிக்ஸ்.. கலக்கல் அதுசரி அண்ணா...
06 January 2009 01:51
//

வருகைக்கு நன்றி சரவணன்...அடுத்த பாகம் விரைவில்!

கயல்விழி said...

அதுசரி

நான் கவனித்ததில் இது வரை "வேலைக்கு லேட் ஆன திருக்குமரன், கையில் பொய் கட்டுடன் வேலைக்கு போக அங்கே வைஜைந்தி என்ற பெண்ணைப்பார்த்து காதல்(?) வயப்படுகிறான். அவள் திருமணமானவள், ஜெய் எங்கே என்று தேடுகிறாள்(?). அவள் மீது எம்டிக்கு ஒரு கண்.

இதை இத்தனை எப்பிசோடாக எழுத ரொம்ப திறமை வேண்டும், நிச்சயம் அந்த அவார்டுக்கு எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. அடுத்த பார்ட்டுக்காக காத்திருக்கிறேன்.

அது சரி said...

//
கயல்விழி said...
அதுசரி

நான் கவனித்ததில் இது வரை "வேலைக்கு லேட் ஆன திருக்குமரன், கையில் பொய் கட்டுடன் வேலைக்கு போக அங்கே வைஜைந்தி என்ற பெண்ணைப்பார்த்து காதல்(?) வயப்படுகிறான். அவள் திருமணமானவள், ஜெய் எங்கே என்று தேடுகிறாள்(?). அவள் மீது எம்டிக்கு ஒரு கண்.

இதை இத்தனை எப்பிசோடாக எழுத ரொம்ப திறமை வேண்டும், நிச்சயம் அந்த அவார்டுக்கு எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. அடுத்த பார்ட்டுக்காக காத்திருக்கிறேன்.
07 January 2009 01:07
//

நீங்க சொல்ற மாதிரியும் எழுதலாம்...ஆனா அது கதை சொல்ற மாதிரி இருக்காது...செய்திச் சுருக்கம் வாசிக்கிற மாதிரி இருக்கும் :0))

நீங்க சொல்றது ராஜேஷ்குமார் ஸ்டைல்....நான் எழுதறது அதுசரி ஸ்டைல்..இது எப்பிடி இருக்கு :0)))

வருகைக்கு நன்றி...பாராட்டுகளுக்கு மிக்க நன்றி....அடுத்த பாகம் மே பி இந்த வீக் என்ட்...

கயல்விழி said...

நான் எழுதியது போரிங் ஸ்டைல். அப்படி கதை எழுதினால் நானே படிக்க மாட்டேன். நீங்க உங்க ஸ்டைலிலேயே கதை எழுதுங்க.

பதிவுக்கு சம்மந்தமில்லாத கேள்வி: அது என்ன உங்க பெயர் "அதுசரி"?

"விக்ரமாதித்யன்" "வேதாளம்" இதை எல்லாம் விட்டு நீங்க இந்த பெயர் தேர்ந்தெடுக்க காரணம் ஏதாவது இருக்கா?
(பர்சனல் கேள்வியாக இருந்தால் மன்னிக்கவும், ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்தது)

அது சரி said...

//
கயல்விழி said...
பதிவுக்கு சம்மந்தமில்லாத கேள்வி: அது என்ன உங்க பெயர் "அதுசரி"?

"விக்ரமாதித்யன்" "வேதாளம்" இதை எல்லாம் விட்டு நீங்க இந்த பெயர் தேர்ந்தெடுக்க காரணம் ஏதாவது இருக்கா?
(பர்சனல் கேள்வியாக இருந்தால் மன்னிக்கவும், ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்தது)
07 January 2009 23:06
//

ச்சேசே அது பெர்சனல் எல்லாம் இல்லீங்க...மன்னிப்புக்கெல்லாம் அவசியமில்ல...

அது சரி? ரொம்ப ச்சப்பை ரீஸன்.. அது என்னை நக்கல் பண்ண ஃப்ரண்ட்ஸ் வச்ச பேரு...

ஆஃபிஸ்ல பெரும்பாலும் மீட்டிங்க்ல டெய்லி சண்டை நடக்கும்....அப்ப யார் சொல்றதாவது தப்புன்னு தோணினா நான் பெரும்பாலும் That's Right, but....அப்படின்னு தான் ஆரம்பிப்பேன்.... இப்பிடி பேசியே எனக்கு நிக் நேம் Mr. That's right...அப்படின்னு வச்சிட்டாங்க... அதை அப்படியே தமிழ் படுத்தி "அது சரி"....

தவிர இதுல இன்னொரு வசதியும் இருக்கு..."அது சரி" அப்படிங்கறது ஒரு பெயர்ச்சொல்லே இல்லை...அதனால அதுக்கு ஜாதி, மதம், இனம், மொழின்னு எந்த அடையாளமும் இல்ல.....எனக்கு ரொம்ப சூட் ஆகறதுனால அதையே யூஸ் பண்றேன்...

நல்ல வேளையா எங்க அப்பாவுக்கு இந்த ஐடியா எல்லாம் இல்ல...அதனால எனக்கு அவர் வேற பேரு வச்சிட்டாரு....நான் என்னோட ஒரிஜினல் பேரைக்கூட என்னோட ப்ளாக்லயே எழுதிருக்கேன்....Just for fun....நல்ல வேளையா அதை யாரும் கண்டுபிடிக்கலை :0)))

விக்கிரமாதித்தன், வேதாளம் எல்லாம் திடீர்னு எழுதும்போது வந்த ஐடியா...ப்ளாக் ஆரம்பிக்கும் போது அந்த ஐடியாவே இல்லை!

Sundar said...

caught with the other parts...waiting for more.