Monday, 8 December 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் நான்கு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.
பாகம் நான்கு - இழந்துவிட்ட இதயம்

இதன் முந்திய பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்.
பாகம் ஒன்று, பாக‌ம் இர‌ண்டு, பாக‌ம் மூன்றுகாருக்கு போன பயல இன்னும் காணமே...அப்பிடியே அடிச்சிட்டு மட்டையாகிட்டானா இல்ல நம்ம கதைய கேட்டு ஓடிட்டானா..ஓடுகாலிப்பய..இவனையெல்லாம் நம்ப முடியாது....இன்னிக்கி நைட்டுக்கு சரக்குக்கு என்ன பண்றது...

வேதாளம் தனது சிந்தனைத் தொட்டியை கலக்கிக் கொண்டிருந்த போது இருட்டில் விக்கிரமன் வருவது தெரிந்தது....

"மாதி...சீக்கிரம் வாப்பு...இப்பிடி கெழவன் மாதிரி நடந்தா எப்பிடி..நீ போன நேரத்துக்கு ஊறல் போட்ருந்தா இன்னேரம் சூடா சரக்கு ரெடியாயிருக்கும்...இம்புட்டு நேரமா.."

"அடிக்கிறது ஓசி சரக்கு அதுல சூடா வேற வேணுமா...ஒனக்கு சீக்கிரமா சங்கு ஊதறேன் பாரு..."

"சங்கெல்லாம் அப்புறம் ஊதலாம்..இப்ப பங்கு போடு...என்ன சரக்கு எடுத்தாந்த?"

"செவிட்டு முண்டமே..அதான் போம்போதே சொன்னேனே...டெக்கீலா.."

"சைடுக்கு? ஊறுகா..லெக் பீசு எதுவும் இல்லியா..."

மாதித்தன் தலையில் அடித்துக் கொண்டான்..

"அட சனியனே.. டெக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷெல்லாம் கெடயாது...வெரல்ல உப்ப தடவி நக்கிக்க வேண்டியது தான்..."

"அப்ப உப்பாவது குடு..."

"இந்த காட்டுல உப்பெடுக்க தண்டி யாத்திரை தான் போணும்... அதெல்லாம் தெனம் குளிக்கிறவங்களுக்கு..நீ ஒன் வெரல சும்மாவே நக்கிக்கலாம்...நீதான் குளிக்கிறதே இல்லியே..."

"தன்னைப் போல் பிறரையும் நினை..நீ ஒன்ன மாதிரி எல்லாரையும் நெனச்சிட்ட போலிருக்கு"

கும்மிருட்டிலும் விக்கிரமனை முறைத்த வேதாளம் டெக்கிலா பாட்டிலை திறந்து அப்படியே ஊற்றிக் கொண்டு.....அலறியது..

"அம்மே...என்ட அம்மே..என்ட அம்மே..ஒன்ட மோன சவட்டி கள‌ஞ்சிட்டானே...அய்யோ...காது எரியுதே....அடேய் மாதி...ஆசிட்ட‌ குடுத்திட்டியாடா..."

"அட‌ச்சீ....வாய‌ மூடு...சொர‌ங்க்ப்பாதை தொற‌க்கிற‌ மாதிரி...டெக்கீலாவெல்லாம் கொஞ்ச‌மா அடிக்க‌ணும்...இப்பிடி மொத்த‌மா கொட்டிக்கிட்டா....அல‌றாத‌..."

இர‌ண்டு காதுக‌ளுக்குள்ளும் விர‌லை விட்டு வேக‌மாய் குடைந்த‌ வேதாள‌ம் த‌லையை உலுக்கிக் கொண்டு விக்கிர‌ம‌னின் கையை பிடித்து ந‌க்க‌ ஆர‌ம்பித்த‌து...

"அய்ய.. க‌ரும‌ம்.... என்ன‌ ப‌ண்ற‌ நீ....கையை விடு மொட்ட‌ கொர‌ங்கே..."
"நீதான‌ சொன்ன‌...உப்ப‌ ந‌க்க‌ணும்னு...அதான்... ப‌ர‌வால்ல‌..ஒங்கையி ரொம்ப‌ உப்பா தான் இருக்கு...குளிச்சி ஒரு மூணு மாச‌ம் இருக்குமா..."

"ஆமா...நான் முழுகாம‌ இருக்கேன்...அதான் குளிச்சி மூணு மாச‌மாச்சி...இன்னும் ஏழு மாச‌ம் இப்பிடித்தான்...அட‌ச்சீ...இப்ப‌ வாய‌ மூடிக்கிட்டு க‌தைய‌ சொல்றியா இல்லியா...."

"வாய‌ மூடிக்கிட்டு எப்பிடி க‌த‌ சொல்ற‌து..."

இளித்த‌ வேதாள‌ம் காதுக‌ளை குடைந்து கொண்டே க‌தையை சொல்ல‌ ஆர‌ம்பித்த‌து...
==============================


செல்லாத்தா செல்ல‌ மாரியாத்தா
எங்க‌ சிந்தையில் வ‌ந்து அருவி நாடி நில்லாத்தா
க‌ண்ணாத்தா உன்ன‌ காணாட்டா
இந்த‌ க‌ண்க‌ள் இருந்து என்ன‌ புண்ணிய‌ம் சொல்லாத்தா
உந்த‌ன் பெருமையை இந்த‌ உல‌குக்கு எடுத்து பாடாட்டா
இந்த‌ ஜென்ம‌ம் எடுத்துஎன்ன‌ புண்ணிய‌ம் சொல்ல‌டி நீயாத்தா.....

எல்.ஆர். ஈஸ்வ‌ரியின் குர‌ல் கேட்டு முந்திய‌ இர‌வில் அண்டா மாப்ள‌ என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ முருகேச‌ன் திடுமென்று விழித்துக் கொண்டான்..

"ச்சே..இந்த‌ திருப்ப‌ர‌ங்குன்ற‌த்தில‌ இது ஒரு தொல்ல‌. ம‌னுச‌ன‌ நிம்ம‌தியா தூங்க‌ விட‌மாட்டாய்ங்க‌...கால‌ங்காத்தால‌...."

இர‌வில் வெகு நேர‌ம் க‌ழித்து தூங்க‌ப்போனது திடீரென‌ அவ‌னுக்கு நினைவு வ‌ந்த‌து..டைம் என்ன‌...வ‌க்காளி...ஒம்போதாச்சா....இன்னைக்கும் ஆஃபிஸ் லேட்டு தானா....எல்லாம் அந்த‌ கும‌ர‌ன் ப‌ய‌லால‌ வ‌ந்த‌து...எங்க‌ அந்த‌ நாயி...

திருக்கும‌ர‌ன் ஒரு மூலையில் சுருண்டு சுக‌மாக‌ தூங்கிக் கொண்டிருந்தான்...

"டேய்...ய்யால‌...எந்திரிடா...டைம் ஒம்போதாச்சி..." கும‌ர‌னின் பின்புற‌த்தில் உதைத்தான்...

கும‌ர‌ன் மேலும் சுருண்டு கொண்டு முன‌கினான்...

"...தூங்க‌ விடுங்க‌டா..."

"டேய் ப‌ன்னி...ஒன‌க்கு தான் இன்னிக்கு முக்கிய‌ம்...வேலையில‌ போய் ஜாய்ன் ப‌ண்ண‌னும்...மணி ஒம்போதுடா...இப்ப‌வே ரொம்ப‌ லேட்டு...இனிமே குளிச்சி நீ எப்ப‌ போயி சேர்ற‌து..."

"என்ன‌து ஒம்போதாச்சா....க‌போதி...சீக்கிர‌மா எழுப்ப‌ வேண்டிய‌து தான‌..." பாதி அவிழ்ந்திருந்த‌ லுங்கியை சுருட்டிக் கொண்டு கும‌ர‌ன் வேக‌மாக‌ எழுந்தான்...

"ஆமா நைட்டெல்லாம் குடி...இப்ப‌ என்ன‌ கொற‌ சொல்லு...சீக்கிர‌மா குளிச்சிட்டு கெள‌ம்புடா...இனிமே ஒங்க‌ வீட்டுக்கு போயி டிர‌ஸ் மாத்தெல்லாம் முடியாது...என் டிர‌ஸை போட்டுக்கிட்டு கெள‌ம்பு...ஒன்னோட‌ ஃபைல் என்னோட‌ ரூம்ல‌ தான‌ இருக்கு?"

"நீ சொன்னாலும் எங்க‌ வீட்டுக்கு போக‌ முடியாது...எங்க‌ அப்சு செருப்போட‌ நிப்பாரு..."

அவ‌ச‌ர‌மாக‌ அவ‌ர்க‌ள் குளித்து விட்டு கிள‌ம்பிய‌ போது ம‌ணி ப‌த்தை நெருங்கியிருந்த‌து...

"மாப்ள‌ அண்டா...ரொம்ப‌ லேட்டாயிடுச்சிடா...மொத‌ நாள் ஜாய்ன் ப‌ண்ற‌துக்கே இப்பிடி லேட்டா போனா வேலையே த‌ர‌மாட்டாய்ங்க‌...என்ன‌ ப‌ண்ற‌து....ஒண்ணு ப‌ண்ணு... பேசாம‌ வ‌ண்டிய‌ ந‌ம்ம‌ ம‌ணிய‌ண்ண‌ மெடிக்க‌ல் க‌டைக்கு விடு..."

"அங்க‌ எதுக்குடா...வ‌ழியில‌ ஒரு குவாட்ட‌ர் போட‌வா..."

"அட‌ச்சீ...அதுக்கில்ல‌...அவ‌ரு க‌டையில‌ கொஞ்ச‌ம் பிளாஸ்திரி..ம‌ருந்தெல்லாம் வாங்கி க‌ட்டுப் போட்டுக்க‌ போறேன்...ஆஃபிஸ்ல‌ போயி வ‌ழியில‌ ஆக்சிடெண்ட் ஆயிடுச்சின்னு ப‌ட‌ம் காட்ட‌ வேண்டிய‌து தான்..."

"ங்கொய்யால‌...பொற‌க்கும் போதே மொள்ள‌மாரின்னா அது நீதாண்டா..."

"நாங்கென்ன வேணும்னா பண்றோம்...எல்லாம் சூழ்நில...லெஃப்ட் ஹாண்டு ஒடஞ்ச மாதிரி சீன் போடணும்...அதனால சட்டைய கொஞ்சம் கிளிச்சிக்கிறேன்..."

"டேய்..அது என் சட்டைடா...."

"அதனால தான கிளிக்கிறேன்.."

மெடிக்க‌ல் ஷாப்பில் பிளாஸ்திரி, ம‌ருந்து வாங்கி போலியாய் க‌ட்டுப் போட்டுக் கொண்டு திருக்கும‌ர‌ன் அலுவ‌ல‌க‌த்தை அடைந்த‌ போது ம‌ணி ப‌தினொன்றாகியிருந்தது...

========================

"என்ன‌ சார் மொத‌ நாள் ஜாய்ன் ப‌ண்ற‌துக்கே இவ்வ‌ள‌வு லேட்டா வ‌ர்றீங்க‌..நீங்க‌ மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்ல‌ தான‌ ஜாய்ன் ப‌ண்றீங்க‌..கொஞ்ச‌ம் இங்க‌ வெய்ட் ப‌ண்ணுங்க‌..நான் உங்க‌ ஹெட் ஆஃபிஸ‌ர்ட்ட‌ பேசிட்டு சொல்றேன்..."

"இல்ல‌ மேட‌ம்...அது வ‌ழியில‌ கொஞ்ச‌ம் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி...அதான் லேட்டு..."

"அதெல்லாம் என்கிட்ட‌ சொல்லாதீங்க‌...உங்க‌ ஹெட் கேப்பாரு...அவ‌ர்ட்ட‌ சொல்லுங்க‌..."

"ச‌ரிங்க‌ மேட‌ம்.."

ம்ம்ம்...பொண்ணு சூப்ப‌ராருக்கு....ரிஷ‌ப்ச‌னிஸ்டின் அழ‌கை திருக்கும‌ர‌ன் ர‌சித்துக் கொண்டிருக்கும் போதே அவ‌ள் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பினாள்..

"உங்க‌ள‌ அனுப்ப‌ச் சொல்றாரு...மேல‌ தேர்ட் ஃப்ளோர்ல‌ அவ‌ரு ஆஃபிஸ்..குருமூர்த்தின்னு நேம் ப்ளேட் இருக்கும்....சீக்கிர‌ம் போங்க‌..."

"ரொம்ப‌ தேங்க்ஸ் மேட‌ம்..."

ம்ம்ம்...ந‌ம்ம‌ ம‌ன‌சு ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்ல‌...திருக்கும‌ரன் லிஃப்டை நோக்கி ந‌ட‌ந்தான்..
.=========================

தேர்ட் ஃப்ளோர்....

S. Guru Murthy M.Tech, MBA
Sr.MANAGER, MARKETING

இது தான் ந‌ம்ம‌ பாஸு ஆஃபிசா...உள்ள‌ ஏதாவ‌து ஒரு சொட்டை உக்காந்திருக்க‌ப் போறான்..மொத‌ நாளே க‌டி தான்...

ட‌க் ட‌க் ட‌க்....

க‌த‌வை த‌ட்டினான்..

"மே ஐ க‌மின் ஸார்..."

"க‌மின்..."

உள்ளே நுழைந்த‌ திருக்கும‌ர‌னுக்கு ச‌ற்று ஏமாற்ற‌மாக‌ இருந்த‌து...குருமூர்த்திக்கு சொட்டையும் இல்லை..கிழ‌வ‌னாக‌வும் இல்லை...ஒரு நாப்ப‌த்த‌ஞ்சி வ‌ய‌சு இருக்குமா...ஆனா அர‌விந்த் சாமி மாதிரி ஸ்டைலா இருக்கான்...இதுக்குன்னே மார்க்கெட்டிங் குடுத்துருப்பாய்ங்க‌...இவ‌ன் வாங்கிக்க‌ன்னு சொன்னா யாரு வேணான்னு சொல்லுவா...

"I'm Gurumurthy....Responsible for Marketing...I assume you are Mr.Thirukkumaran...Please take your seat.."

"Thank you Sir..."

"Sorry for being a bit hasty...but I dont have much time...Let me be straight to the point...This is your very first day...and you're late...infact very late..."

"Sorry Sir...but I had an accident...that's why...."

"I see. I can see that...you still managed to make it...I appreciate it...but hereafter I expect you to be on time...No excuses please...We dont have much time to waste....we have to achieve our target...that's why we recruited more people...."

"I will do my best Sir..."

"That's good....The other engineers joined today are on a factory trip...to see our manufacturing facilities....shop floor...'cos you're late you can't join them... do one thing... you first complete the necessary formalities...After three'o clock I will arrange for a shop floor visit..."

"Thank you Sir..."

இவ‌ய்ங்கெல்லாம் த‌மிழ்ல‌யே பேச‌மாட்டாய்ங்க‌ளா....திருக்கும‌ர‌ன் நினைத்துக் கொண்டிருந்த‌ போது திடீரென்று அவ‌ன் ம‌ன‌தை ப‌டித்த‌தை போல் குருமூர்த்தி த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார்...

"ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட்ல‌ முடிச்சிட்டீங்ளா"

"இல்ல‌ சார்"

"அக்கவுண்ட்ஸ்?"

"அதுவும் இல்ல‌ சார்..."

"ஒக்கே...மொத‌ல்ல‌ அது ரெண்டையும் முடிச்சிருங்க‌...இப்ப‌ இங்க‌ ஒருத்த‌ங்க‌ வ‌ருவாங்க‌...அவ‌ங்க‌ உங்க‌ளை கைட் ப‌ண்ணுவாங்க‌.."

"ஒக்கே சார்"

"உங்க ஏஜ் என்ன...ட்வென்டி ஒன்னா...அப்ப இது தான் ஃபர்ஸ்ட் ஜாப்பா"

"ஆமா சார்..."

"காலேஜ் இந்த‌ இயர் தான் முடிச்சீங்களா.."

"ஆமா சார்"

"விஷ் யூ ஆல் த‌ பெஸ்ட் வித் யுவ‌ர் ஃப‌ர்ஸ்ட் ஜாப்"

"தேங்க் யூ சார்"

பேசிக் கொண்டே குருமூர்த்தி ட‌ய‌ல் செய்ய‌ ஆர‌ம்பித்தார்...

"குருமூர்த்தி ஹிய‌ர்...வைஜெய‌ந்திய‌ என்னோட‌ ஆஃபிஸுக்கு அனுப்புங்க‌..."
என்ன‌டா இது...கைல‌ இவ்ளோ பெரிய‌ க‌ட்டு போட்ருக்கேன்...ஒருத்த‌ன் கூட‌ என்ன‌ ஆச்சின்னு கேக்க‌ மாட்டேங்குறான்...பெரிய‌ இதுன்னு நென‌ப்பு இவ‌ய்ங்க‌ளுக்கு.... நினைவில் மூழ்கியிருந்த‌ திருக்கும‌ர‌ன் வைஜெயந்தி நுழைந்த‌தையும் அவ‌ள் த‌ன‌க்கு பின்னால் நிற்ப‌தையும் க‌வ‌னிக்க‌வில்லை....

"ம்ம்ம்..மிஸ்ட‌ர் திருக்கும‌ர‌ன்...இவ‌ங்க‌ வைஜெய‌ந்தி...அக்க‌வுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்...இவ‌ங்க‌ கூட‌ போங்க‌...எல்லாம் முடிச்சிட்டு திருப்பி இந்த ஆஃபிஸ் வாங்க..."

"ஒக்கே சார்...தேங்க் யூ சார்".

ஆமா..இது பெரிய‌ தாஜ்ம‌ஹாலு...இங்க‌ திருப்பி வராங்க‌...அசுவ‌ராசிய‌மாய் பின்னால் திரும்பிய‌ திருக்கும‌ர‌னின் இத‌ய‌ம் துடிக்க‌ ம‌ற‌ந்த‌து...

யார் இது... பெண்ணா இல்லை போன‌ ஜென்ம‌த்தில் நான் இழ‌ந்துவிட்ட‌ இத‌ய‌மா?


========= மோக‌ வ‌லை இனி விரியும்===================


30 comments:

Chuttiarun said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

பழமைபேசி said...

இது ஒரு மரியாதை நிமித்தமான வருகை! பூர்வாங்கப்பூர்வ வருகை விரைவில்!!

மங்களூர் சிவா said...

/
யார் இது... பெண்ணா இல்லை போன‌ ஜென்ம‌த்தில் நான் இழ‌ந்துவிட்ட‌ இத‌ய‌மா?
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அம்புட்டு அழகா??? சரி இருந்துட்டு போகட்டும்
:))))

மங்களூர் சிவா said...

//
"அட‌ச்சீ....வாய‌ மூடு...சொர‌ங்க்ப்பாதை தொற‌க்கிற‌ மாதிரி...டெக்கீலாவெல்லாம் கொஞ்ச‌மா அடிக்க‌ணும்...இப்பிடி மொத்த‌மா கொட்டிக்கிட்டா....அல‌றாத‌..."
//

ஏகப்பட்ட இன்பர்மேஷன் கிடைக்கும் போல
:)))))))

குடுகுடுப்பை said...

அண்ணே டக்கீலாவுக்கு சைடா ஷகீலாவ தொட்டுக்க்லாமா அண்ணே.

ராஜ நடராஜன் said...

//"அட சனியனே.. டெக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷெல்லாம் கெடயாது...வெரல்ல உப்ப தடவி நக்கிக்க வேண்டியது தான்..."//

இதான் மேட்டரா?அதுனாலதான் கிளாச குப்புறப் போட்டு அதன் உதட்டுல உப்பு முக்கி அப்புறம் டெக்கிலாவ பதம் பாக்குறாங்களா!!!

நசரேயன் said...

டெக்கீலா எப்படி குடிக்கனும்னு நல்லா பாடம் எடுத்தீங்க

நசரேயன் said...

வைஜெய‌நதி பழைய வைஜயந்திமாலவா?

அது சரி said...

//
பழமைபேசி said...
இது ஒரு மரியாதை நிமித்தமான வருகை! பூர்வாங்கப்பூர்வ வருகை விரைவில்!!

//

வாங்க அண்ணாச்சி...அப்புறமா வாங்க.

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
/
யார் இது... பெண்ணா இல்லை போன‌ ஜென்ம‌த்தில் நான் இழ‌ந்துவிட்ட‌ இத‌ய‌மா?
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அம்புட்டு அழகா??? சரி இருந்துட்டு போகட்டும்
:))))

//

வாங்க சிவா...அம்புட்டு அழகுதேன் :0)

அது சரி said...

//
மங்களூர் சிவா said...

ஏகப்பட்ட இன்பர்மேஷன் கிடைக்கும் போல
:)))))))

//

நீங்க மக்களுக்கு ஷேர் மார்க்கெட் பத்தி சொல்றீங்க...அதுல சம்பாதிச்சா எப்பிடி செலவு பண்றதுன்னு நான் சொல்றேன்..:0))

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அண்ணே டக்கீலாவுக்கு சைடா ஷகீலாவ தொட்டுக்க்லாமா அண்ணே.

//

இந்த கேள்வி உங்க தங்கமணிக்கு ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது!

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
//"அட சனியனே.. டெக்கீலாவுக்கு சைட் டிஷ்ஷெல்லாம் கெடயாது...வெரல்ல உப்ப தடவி நக்கிக்க வேண்டியது தான்..."//

இதான் மேட்டரா?அதுனாலதான் கிளாச குப்புறப் போட்டு அதன் உதட்டுல உப்பு முக்கி அப்புறம் டெக்கிலாவ பதம் பாக்குறாங்களா!!!

//
ஆமாங்கன்னா... அதுக்கு தான் டெக்கிலா கிளாசை உப்புல போட்டு வைக்கிறாங்க.. அவசரத்துக்கு கையவும் நக்கிக்கலாம் :))

அது சரி said...

//
நசரேயன் said...
டெக்கீலா எப்படி குடிக்கனும்னு நல்லா பாடம் எடுத்தீங்க

//

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

அது சரி said...

//
நசரேயன் said...
வைஜெய‌நதி பழைய வைஜயந்திமாலவா?

//

ம்ம்ம்ம்....பழைய வைஜயந்தி மாலா தேனிலவு படத்தில எப்பிடி இருந்தாங்க...அப்படி வச்சிக்கலாம்!

பழமைபேசி said...

அண்ணாச்சி, உங்க கொட்டாய்ல அந்த மலையாளப் படம் ஓட்டுறாதா அல்ல சொன்னீக? அது எப்ப வரும்?

என்னது?? படப் பெட்டிய குடுகுடுப்பையாரும், தளபதி நசரேயனுங் கடத்திட்டாங்களா??

உருப்புடாதது_அணிமா said...

ஹி ஹி அடுத்த ஜொள்ளுக்கு சாரி பதிவுக்கு வைடிங்..

உருப்புடாதது_அணிமா said...

அழகை ஆராதிக்க காத்திருக்கிறேன்

உருப்புடாதது_அணிமா said...

மெய்யாலுமே அம்புட்டு அழகா??

உருப்புடாதது_அணிமா said...

ஒட்டு போட்டுட்டேன் ..

உருப்புடாதது_அணிமா said...

தமிலிஷ்ம் தட்டிட்டேன்

உருப்புடாதது_அணிமா said...

எப்படி நம்ம வேகம்?? சும்மா அதிருதுல்ல??

அது சரி said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி, உங்க கொட்டாய்ல அந்த மலையாளப் படம் ஓட்டுறாதா அல்ல சொன்னீக? அது எப்ப வரும்?

என்னது?? படப் பெட்டிய குடுகுடுப்பையாரும், தளபதி நசரேயனுங் கடத்திட்டாங்களா??

//

அந்த படப்பெட்டியை டெக்ஸாஸில இருந்து ஒருத்தரு மொத்தமா ஒன்றரை மாசத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்காராம்....அவரு யாருன்னு எனக்கு தெரியாது :)

சீக்கிரமா அந்த படத்தை திரையிட்டே தீருவேன்!

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
எப்படி நம்ம வேகம்?? சும்மா அதிருதுல்ல??

//

உங்க வேகம் நிஜமாவே அதிருது...காத்தாடிக்கிட்டு இருந்த பதிவ ஒரே நாள்ல ஆறு கமெண்ட் போட்டு கொஞ்சம் சூடாக்கிட்டீங்க...நன்றி..

ஓட்டுப் போட்டதுக்கு சிறப்பு நன்றி! :0))

Saravana Kumar MSK said...

அண்ணே.. சுவாரஸ்யமா இருக்கு வேதாளமும் விக்ரமும் பேசிகொள்வது..

ஆனா.. அதுக்காக முக்கால்வாசி அவங்க பேசிக்கிட்டே இருக்கிறதும், கால் வாசி கதையும், ரெண்டு வாரத்துக்கு அப்பறமா கதைய கண்டினியூ பண்றதும் கொஞ்சம் கூட நல்லா இல்லை..

ஸ்பீட் எடுங்க அண்ணே..

Saravana Kumar MSK said...

உங்க கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் ..

கயல்விழி said...

இன்னும் பாதி கதை பெண்டிங்?

வைஜ் ஒரு குழந்தையின் அம்மா, சரி. திருமணம் ஆகி விட்டதா?

அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
அண்ணே.. சுவாரஸ்யமா இருக்கு வேதாளமும் விக்ரமும் பேசிகொள்வது..

ஆனா.. அதுக்காக முக்கால்வாசி அவங்க பேசிக்கிட்டே இருக்கிறதும், கால் வாசி கதையும், ரெண்டு வாரத்துக்கு அப்பறமா கதைய கண்டினியூ பண்றதும் கொஞ்சம் கூட நல்லா இல்லை..

ஸ்பீட் எடுங்க அண்ணே..

//

என்ன பண்றது...கும்மி அடிக்கிறது நம்ம ரத்தத்திலேயே இருக்கே...அடுத்தவங்க பதிவிலேயே போயி கும்மி அடிப்போம்.. நம்ம சொந்த பதிவை விட்ருவோமா? :))

நீங்க சொன்ன மாதிரி இனிமே ஸ்பீட் எடுக்க ட்ரை பண்றேன்...

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
உங்க கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் ..

//

அப்படியெல்லாம் எதிர்பார்க்கப் படாது...அதெல்லாம் ரொம்ப தப்பு :))

அது சரி said...

//
கயல்விழி said...
இன்னும் பாதி கதை பெண்டிங்?

வைஜ் ஒரு குழந்தையின் அம்மா, சரி. திருமணம் ஆகி விட்டதா?

அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

//

வாங்க கயல்...

இன்னும் பாதி கதை பெண்டிங்....பாதி கதையா?? கதையே இனிமே தாங்க ஆரம்பிக்கும்...இது வரை சொன்னது எல்லாமே Preface தான்.

ஒரு வழியா அடுத்த பாகத்தை இன்னைக்கி எழுதிட்டேன் :0))