Sunday 29 June 2008

இளைய ராஜாவும், திருவாசகமும்

குடிப்பதில் உள்ள அடுத்த பிரச்சினை எவனையாவது திட்ட வேண்டும் என்று தோன்றும். மதுரை பக்கம் "வஞ்சி புட்டான்" அப்படிம்பாங்க. பொன்னமராவதி பக்கம் சோத்துக்கு தொட்டு கொள்வதை "வெஞ்சனம்" னு சொல்வாய்ங்க. நமெக்கல்லாம் குடிச்சா எவனையாவது "வஞ்சி புடுறது" தான் வெஞ்சனம். வழக்கமா கூட படிக்கிற ஜாரிங்களை (ஜாரின்னா என்னன்னு தெரியுமில்ல?? ) திட்றதுல ஆரம்பிக்கும். ங்கோத்தா, அவளுக்கு பெரிய .... நெனைப்பு.... நம்ம பக்கத்தில தான் அவளுக்கு லைன் வுட்ற பார்டி உக்காந்திருப்பான். (அதுக்காக தான ஆரம்பிச்சதே!) . அவன் அவளுக்கு சப்போர்ட்டா வருவான். (உன்னை மாறி நாய்க்கெல்லாம் அவள பத்தி என்ன தெரியும்.... ) அப்படியே அவனை சூடேத்தி விட்டு, அடுத்த ரவுண்ட் கரெக்ட் பண்றதுக்கு இது ஒரு வழி. இன்னும் நெறைய வழி இருக்கு. வெறும் மூன்ருவா எடுத்து போய்ட்டு, ஒரு குவாட்டர் ஓல்ட் மங்கும், பரோட்டாவும் அடிக்கிறதெல்லாம் தொழில் ரகசியம். தெரியாதவங்களுக்கு அப்புறம் சொல்றேன்.


இப்ப, நம்ம ராசா மேட்டருக்கு வருவம். ஒரு காலத்தில நமக்கும் ராசா மியூசிக் புடிக்கும். ஏன்ன்னா அப்பெல்லாம் ராசா மட்டும் தான் மியூசிக் போடுவாரு. வாரம் நாலு படம், நாய் குட்டி போட்ட மாற்றி அவர் மியூசிக்ல ரிலீஸ் ஆகும். நாமளும் ஆக வழி இல்லாம அந்த படத்தை பாத்து தொலைப்போம். (அந்த ஊருல குடிக்கின்றது, சினிமா தவிர வேற பொழுது போக்கு? ).


ஆக, இப்படி நம்ம இசை ரசனை, இசை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தது.(?!!)

1 comment:

Sundar சுந்தர் said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள். பயன்பாட்டுக்கு தான் மொழியே தவிர மொழியை மட்டும் பிரதானமாக நினைத்தால் மொழிக்கு தான் பாதிப்பு. எல்லாவிதமான மாறுதல்களையும் உள்வாங்கி பிரதிபலிப்பதால் தான் ஆங்கிலத்திற்கு இவ்வளவு வளர்ச்சி. புலம் பெயர்வது, பல பின்னணி மக்களுடன் கூடி வாழ்வது இன்றைய சமூகத்தில் எந்த அளவு நிதர்சனமோ அந்த அளவு நிதர்சனம் பல மொழி கல்வியும், பல மொழி பயன்பாடும்.