Saturday, 15 November 2008

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு

சட்டக்கல்லூரி கலவரம் பற்றி பல பதிவர்கள் எழுதி தீர்த்து விட்டார்கள்..அதனால் நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்..

வழக்கமாக போலீசுக்கு ஒரு கொள்கை உண்டு. பொது இடத்தில் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இரண்டு ரவுடி கும்பல்கள் சண்டையிட்டு கொண்டால் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள்..இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஏனெனில் எந்த ரவுடி கும்பலில் எவன் செத்தாலும் போலீசுக்கும் சமுதாயத்திற்கும் லாபமே. இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

சட்டக் கல்லூரி கலவரத்திலும் போலீசார் இந்த அணுகுமுறையையே பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. அடிதடி நடந்த இடம் ட்ரெயின் ஸ்டேஷனோ, இல்லை மக்கள் வந்து போகும் இடமோ இல்லை. கல்லூரி உள்ளே நடந்து இருக்கிறது..

சரி, சண்டை போட்டது யார்? படத்தில் ஒருவன் கத்தியுடன் ஓடி வருகிறான்..மற்றொரு கும்பல் உருட்டு கட்டை, இரும்பு கம்பியுடன் திரிகிறது.
உண்மையில் மாணவர்களாய் இருந்தால், கத்தியும் இரும்பு கம்பியும் எப்படி வரும்? ஆக இவர்கள் மாணவர்கள் என்பதை விட, ரவுடிகள் என்பது தான் சரி.

கல்லூரிக்கு வருவதாலேயே எல்லாரும் மாணவ மணிகள் என்று ஆகிவிட முடியாது..ஆக அடித்துக் கொண்டிருப்பது இரண்டு ரவுடி கும்பல்கள் என்று தெரிகிறது.

இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??

நாட்டுக்கு ந‌ஷ்ட‌மா? ச‌முதாயத்திற்கு ந‌ஷ்ட‌மா? ஒரு வேளை அவ‌ர்க‌ள் வீட்டுக்கு வேண்டுமானால் ந‌ஷ்ட‌மாக‌ இருக்க‌லாம்..ஆனால், இத்த‌கைய‌ பிள்ளைக‌ள் இருப்ப‌தை விட‌ இல்லாம‌ல் இருப்ப‌தே நல்லது என்று அவ‌ர்க‌ள் கூட‌ நினைக்க‌க்கூடும்..

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌வுடி கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் ச‌ரி என்று "க‌ண்டுக்காம‌ல்" விட்ட‌ காவ‌ல் துறையை பாராட்டுகிறேன்!

38 comments:

harijana said...

ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு.

சுத்த பேத்தல். உங்களுக்கு நல்லா முத்திருக்கு.

நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.

வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.

பழமைபேசி said...

படம் என்னாச்சுங் அண்ணாச்சி? ஆனா, நான் ஓட்டுப் போட்டுட்டேன்.

குடுகுடுப்பை said...

/இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??/

நீங்க யாருக்கு வோட்டு போடுவீங்க அப்புறம்.

கலவிக்கூடங்களில் சாதி உணர்வை எப்படி ஒழிப்பது.

உங்கள் பதிவில் வஞ்சப்புகழ்ச்சியும் இருக்கிறதா? ஒன்னுமே புரியல

உருப்புடாதது_அணிமா said...

என்ன ஆச்சு தலைவா??
எதுக்கு இந்த எதிர் பதிவு ??

பழமைபேசி said...

எங்க வீட்ல, தங்கமணி படிச்சுட்டு, பதிவை ஆமோதிக்குறாங்க.
அவங்க கிட்ட இருக்குற விரக்திய பிரதி பலிக்குதுன்னு நினைக்குறேன்.

என்க்கு, ஒரு வித எள்ளலா இருக்கு. நான் எப்பவுமே அது சரி அண்ணாச்சியோட பின்னூட்டம் பாத்து இரசிச்சு சிரிக்குற ஆள். இன்னைக்கு அதுவே, பதிவே வந்து இருக்கு. :-o)

Anonymous said...

MANA VIKAARAM kondavaraal mattume ippadi sinthikka mudiyum.

Entha manithanum vaalath thaan aasaaip paduvaan.

Un pillai ippadi irunthaal enna seivaai?

un pillaikal onrai onru adiththu kondaal adiththu saavattum enru paarpaya?

வான்முகிலன் said...

காவல்துறை வேடிக்கை பார்த்தனர் என்பதை விட பார்க்க வைக்கப்பட்டனர் என்பதே சரியான பதில்.

கடந்த காலங்களில் காவல்துறையினருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் கூட ஒரு காரணமே.

ஒருவேளை காவல்துறை அதிகாரிகள் அல்லது காவலர்கள் யாராவது ஒருவர் சட்டக் கல்லூரியில் தனது நிழலைப் படவிட்டிருந்தாலே அந்த கலவரத்தின் போக்கு இரு தரப்பினர் என்பதற்குப் பதிலாக காவல்துறை - சட்டத்துறை மோதலாகவே இருந்திருக்கும். எனவே காவலர்கள் வேடிக்கை பார்க்க வைக்கப்பட்டனர் என்பதே சரி.

குடுகுடுப்பை said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் படிப்பவர்கள் சாதிச்சண்டை போடுவது ஏன்.
மாணவர்கள் சாதிய அரசியலில் ஈடுபட்க்கூடாது என்ற செய்தியாக எடுத்துகொள்ளலாமா?

Anonymous said...

சரியான பதிவு.

போலீஸ் உள்ளே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சட்டக்கல்லூரி மானவர்களுக்குள் நடந்த சிறு ப்ரச்சனையில் அத்து மீறி உள்ளே புகுந்த போலீஸ்காரர்கள் அட்டூழியம். தடியடியில் ஆஆஆறு மாணவர்கள் காயம். போலீஸ் தரப்பில் இருபதே பேருக்கு மட்டும் தான் காயம்னு நியூஸ் வரும்.அந்த மானவர்களே ஒன்று சேர்ந்து 10 பஸ்ஸை அடித்து நொறுக்குவார்கள்.

இது நல்லதுக்குத்தான் இனி இதே போல் பிரச்சனை வந்தால் போலீஸ் உள்ளே எப்படி வரலாம்ன்னு ஒருத்தனும் கேட்க முடியாது.

போலீஸ் துறை எப்படி மட்டமாகி போனதோ அதே போலத்தான் சட்டக்கல்லூரியும்.

ஒரு யோக்கியவானை அங்கு பார்ப்பது கடினம். நடை உடை பாவனை எல்லாவற்றிலும் இறுமாப்பு.

நசரேயன் said...

இது வஞ்சி புகழ்ச்சி அணியா?

அது சரி said...

//
harijana said...
ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு.

//
புதுசா சொல்றேனா? நான் எங்கும் அப்படி சொல்லவில்லை. நீங்களாக நினைத்து கொண்டால் நான் பொறுப்பல்ல.

அந்த கல்லூரியில் நடந்தது பூமி பூஜை என்றா நான் சொன்னேன்? இல்லை நண்பர்களுக்குள் நடந்த சிறு பிரச்சினை என்று சொன்னேனா? எது மறைக்கப்பட்டிருக்கிறது??

//
சுத்த பேத்தல். உங்களுக்கு நல்லா முத்திருக்கு.
//

என்ன‌து முத்திருக்கு??

//
நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.
//

முத‌ல் இர‌ண்டு வ‌ரி நாக‌ரீக‌மாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்.ஆனால் பாவ‌ம், மூன்றாம் வ‌ரியில் உங்க‌ள் உண்மை முக‌ம் வெளி வ‌ந்துவிட்ட‌து.. என்ன‌ செய்ய‌?

உண்மையில், நீங்க‌ள் க‌மெண்ட் போட‌வில்லை என்று யார் அழுதார்க‌ள்? அதைக் கூட‌ விடுங்க‌.. அப்பிடியே பின்னாடி திரும்பி பாருங்க‌.. நீங்க‌ ப‌திவு போட‌லைன்னு எத்த‌னை பேரு ஒப்பாரி வ‌ச்சிக்கிட்டு இருக்காங்க‌.. த‌மிழ்நாடே க‌ண்ணீரும் க‌ம்ப‌லையுமா இருக்கு பாஸு..சீக்கிர‌மா ஒரு பதிவு போடுங்க‌!

//
வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.
//

அடேங்க‌ப்பா..இவ‌ரு தான் ரிச‌ர்வ் பேங்க் க‌வ‌ர்ன‌ரு.. ஏக‌ப்ப‌ட்ட‌ வேலையோட‌ இருக்காரு... அட‌ போங்க‌ப்பு!

அது சரி said...

//
பழமைபேசி said...
படம் என்னாச்சுங் அண்ணாச்சி? ஆனா, நான் ஓட்டுப் போட்டுட்டேன்.

//

மன்னிச்சுக்கங்க மணி அண்ணே.. அதை பத்தி எழுதலாம்னு தான் வந்தேன்..ஆனா திடீர்னு டென்ஷன் ஆயிட்டேன்..

ஓட்டு போட்டதுக்கு நன்றிங்கோ!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...

நீங்க யாருக்கு வோட்டு போடுவீங்க அப்புறம்.

கலவிக்கூடங்களில் சாதி உணர்வை எப்படி ஒழிப்பது.

உங்கள் பதிவில் வஞ்சப்புகழ்ச்சியும் இருக்கிறதா? ஒன்னுமே புரியல

//

இதுக்கு நான் கொஞ்சம் நேரம் கழிச்சி பதில் சொல்றேன் நண்பா.

அப்பிடியே மத்த எல்லா கமெண்டுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சி பதில் சொல்றேன்.

Anonymous said...

Well said Harijana,
ஏதோ புதுசா சொல்றதா நினைத்து நடந்த சம்பவத்தின் கொடுரத்தை மறைக்க என்ன அவசியம் வேண்டிருக்கு.

சுத்த பேத்தல். உங்களுக்கு நல்லா முத்திருக்கு.

நீ எல்லாம் பதிவு போடவில்லை என்று யார் அழுதார்கள்.

வெட்டி வேலையயை விட்டுவிட்டு வேறு வேலை எதாவது இருந்தால் பார்.

I am not sure whether the policeman will just watch if the rowdies are hitting their own son?

Why to talk about that..For eg
if the gundas are trying to kill you and police just watches, will ur father accept that?

No one knows who is good and bad.
when some violence is happening, every one should try to stop them..

Total Bull shit post this one...

sage said...

ஆயுதம் எடுததவங்க எல்லாம் ரவுடீ இல்ல அதை முதலில் புரிஞசீகோ

SurveySan said...

idhuvum nyayamaa padudhu.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
/இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??/

நீங்க யாருக்கு வோட்டு போடுவீங்க அப்புறம்.

கலவிக்கூடங்களில் சாதி உணர்வை எப்படி ஒழிப்பது.

உங்கள் பதிவில் வஞ்சப்புகழ்ச்சியும் இருக்கிறதா? ஒன்னுமே புரியல

//

யாருக்கு வோட்டு போடுவதா? இருபது வயதில் இப்படி கொலை வெறியுடன் கத்தி, உருட்டு கட்டையுடன் அலைபவர்கள், வயதானால் எப்படி இருப்பார்கள்? இவர்கள் சட்டசபைக்கு வந்து சட்டம் இயற்றினால் எப்படி இருக்கும்?

உருட்டு கட்டை, கத்தியினால் எந்த சாதி உணர்வையும் ஒழிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

வஞ்சப்புகழ்ச்சி எதுவும் இல்லை..ஆனால், படிக்க வேண்டிய நேரத்தில் கொலை வெறியுடன் அலைபவர்கள் ஏதோ மாணவ மணிகள் போன்றும், போலீஸ் அவர்களை காக்க தவறி விட்டது போன்றும் சித்தரிப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவ்வளவே!

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
என்ன ஆச்சு தலைவா??
எதுக்கு இந்த எதிர் பதிவு ??

//

ஒன்றும் ஆகவில்லை அணிமா. இது யார் குறித்தும் எதிர்பதிவும் அல்ல. பதிவில் நான் சொல்லியிருப்பது தான் காரணம். கட்டை கத்தியுடன் அலைபவர்களை மாணவர்கள் என்றே என்னால் மதிக்க முடியவில்லை. அதன் விளைவு தான் இது.

அது சரி said...

//
பழமைபேசி said...
எங்க வீட்ல, தங்கமணி படிச்சுட்டு, பதிவை ஆமோதிக்குறாங்க.
அவங்க கிட்ட இருக்குற விரக்திய பிரதி பலிக்குதுன்னு நினைக்குறேன்.
//

அப்பாடா..இப்ப‌டி ஒருத்த‌ராவ‌து ந‌ம‌க்கு ஆத‌ர‌வா இருக்காங்க‌ளே. அவ‌ங்க‌ளுக்கு ரொம்ப‌ ந‌ன்றி சொன்னேன்னு சொல்லுங்க‌!

என‌க்கு விர‌க்தி என்று சொல்ல‌ முடியாது..எரிச்ச‌ல் என்று சொல்ல‌லாம். க‌த்தி, க‌ட்டையுட‌ன் ச‌ண்டை போடுப‌வ‌ர்க‌ள் எந்த‌ வித‌மான‌ மாண‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியும்?

//
என்க்கு, ஒரு வித எள்ளலா இருக்கு. நான் எப்பவுமே அது சரி அண்ணாச்சியோட பின்னூட்டம் பாத்து இரசிச்சு சிரிக்குற ஆள். இன்னைக்கு அதுவே, பதிவே வந்து இருக்கு. :-o)
//

நான் பின்னூட்ட‌ம் இடுவ‌த‌ன் கார‌ண‌மே அது தான். யாரையும் சிரிக்க‌ வைப்ப‌து க‌ஷ்ட‌ம். ஏதோ என்னால் ஆன‌து :0)

அது சரி said...

//
Anonymous said...
MANA VIKAARAM kondavaraal mattume ippadi sinthikka mudiyum.

Entha manithanum vaalath thaan aasaaip paduvaan.

Un pillai ippadi irunthaal enna seivaai?

un pillaikal onrai onru adiththu kondaal adiththu saavattum enru paarpaya?

//

வாங்க அனானி.. எனக்கு மன விகாரமோ இல்லை மாங்கா விகாரமோ இருப்பதாக ஒரு அரிய பெரிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சி செய்து வெளியிட்டதற்கு நன்றி. ஆனால், அடுத்த முறை உங்கள் பெயரையும் சேர்த்து எழுதினால் நன்று!

எந்த மனிதனும் வாழத் தான் ஆசைப்படுவான்.. அதற்காக கத்தியுடன் அடுத்தவனை கொல்ல ஓடுபவன், கட்டையால் அடித்து கொல்பவன் எல்லாம் மனிதன் ஆக ஒப்புக்கொள்ள முடியாது.

இரண்டு பொறுக்கிகள் என் பிள்ளையாக இருந்தாலும் அடித்து கொண்டு செத்தால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

அது சரி said...

//
வான்முகிலன் said...
காவல்துறை வேடிக்கை பார்த்தனர் என்பதை விட பார்க்க வைக்கப்பட்டனர் என்பதே சரியான பதில்.

கடந்த காலங்களில் காவல்துறையினருக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் கூட ஒரு காரணமே.

ஒருவேளை காவல்துறை அதிகாரிகள் அல்லது காவலர்கள் யாராவது ஒருவர் சட்டக் கல்லூரியில் தனது நிழலைப் படவிட்டிருந்தாலே அந்த கலவரத்தின் போக்கு இரு தரப்பினர் என்பதற்குப் பதிலாக காவல்துறை - சட்டத்துறை மோதலாகவே இருந்திருக்கும். எனவே காவலர்கள் வேடிக்கை பார்க்க வைக்கப்பட்டனர் என்பதே சரி.

//

நீங்கள் சொல்வது மிகச்சரியான கருத்து முகிலன்! இவர்கள் அடித்து கொள்வார்கள்..அப்புறம் போலீஸ் அடித்தது என்று அண்ணாசாலையில் பஸ்ஸை எரிப்பார்கள்.. அதே சமயம் இவர்களை மாணவ கண்மணிகள் என்று கொண்டாடவும் வேண்டும்..

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் படிப்பவர்கள் சாதிச்சண்டை போடுவது ஏன்.
மாணவர்கள் சாதிய அரசியலில் ஈடுபட்க்கூடாது என்ற செய்தியாக எடுத்துகொள்ளலாமா?

//

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதும், ஏன் சாதிக்காக போராடுவது கூட தவறு என்று சொல்ல முடியாது. அது அவர்கள் இஷ்டம்.

ஆனால், போராடுகிறேன் பேர்வழி என்று கத்தியுடன் துரத்துவதும், உருட்டு கட்டையால் அடிப்பதும்..இவர்கள் உண்மையில் மாணவர்கள் தானா? இது போராட்டமா இல்லை பொறுக்கித் தனமா?

இதில் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருவர் அறிக்கை விடுகிறார். அரசு மாணவர்களுக்கு படிக்க தான் வழி செய்ய முடியும். அவர்கள் படிக்காமல் கொலை வெறியில் ஈடுபட்டால் யார் என்ன செய்ய முடியும் இல்லை ஏன் செய்ய வேண்டும்?

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல. என்ன செய்கிறோம் என்று தெரிந்தே கொலை செய்ய துடிப்பவர்களை என்ன செய்வது?

அது சரி said...

//
Anonymous said...
சரியான பதிவு.

போலீஸ் உள்ளே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சட்டக்கல்லூரி மானவர்களுக்குள் நடந்த சிறு ப்ரச்சனையில் அத்து மீறி உள்ளே புகுந்த போலீஸ்காரர்கள் அட்டூழியம். தடியடியில் ஆஆஆறு மாணவர்கள் காயம். போலீஸ் தரப்பில் இருபதே பேருக்கு மட்டும் தான் காயம்னு நியூஸ் வரும்.அந்த மானவர்களே ஒன்று சேர்ந்து 10 பஸ்ஸை அடித்து நொறுக்குவார்கள்.

இது நல்லதுக்குத்தான் இனி இதே போல் பிரச்சனை வந்தால் போலீஸ் உள்ளே எப்படி வரலாம்ன்னு ஒருத்தனும் கேட்க முடியாது.

போலீஸ் துறை எப்படி மட்டமாகி போனதோ அதே போலத்தான் சட்டக்கல்லூரியும்.

ஒரு யோக்கியவானை அங்கு பார்ப்பது கடினம். நடை உடை பாவனை எல்லாவற்றிலும் இறுமாப்பு.

//

நான் நினைப்பதை மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்..

ஒட்டு மொத்த எதிர்ப்பு பின்னூட்டங்களுக்கு மத்தியில் உங்கள் ஆதரவுக்கு நன்றி!

அது சரி said...

//
sage said...
ஆயுதம் எடுததவங்க எல்லாம் ரவுடீ இல்ல அதை முதலில் புரிஞசீகோ
//

ஆமாமா... கத்தியுடன் ஓடுபவன் கோழி பிடிக்க ஓடினான். கம்பியால் அடித்தவர்கள் பூமி பூஜை செய்ய குழி வெட்ட நினைத்தார்கள்..

அவர்கள் எல்லாம் ரவுடி இல்ல. கடவுள்னு வச்சிப்போம்.. இப்ப சந்தோஷமா?

அது சரி said...

//
SurveySan said...
idhuvum nyayamaa padudhu.

//

வாங்க சர்வேசன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இப்படி கொலை வெறியில் இருப்பவர்கள் மாணவர்களே இல்லை என்பது தான் என் கட்சி.

பழமைபேசி said...

//ஏன் சாதிக்காக போராடுவது கூட தவறு என்று சொல்ல முடியாது.//

அற வழியில‌, என்னோட எதிர் ஓட்டு பதிவு செஞ்சிக்கிடுறேன்.

அது சரி said...

//
பழமைபேசி said...
//ஏன் சாதிக்காக போராடுவது கூட தவறு என்று சொல்ல முடியாது.//

அற வழியில‌, என்னோட எதிர் ஓட்டு பதிவு செஞ்சிக்கிடுறேன்.

//

அது எப்படி எதிர் ஓட்டு போட்றது? :0)

மாணவர்கள் தங்கள் தங்கள் ஜாதிக்காக போராட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் (அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும்) ஜாதியின் பொருட்டு தவறாக நடத்தப்படுவார்கள் என்றால் அதை எதிர்த்து போராடலாம்..

ஆனால் போராடுகிறேன் பேர்வழி என்று வன்முறையில் ஈடுபடுவதை தான் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவே!

ஆட்காட்டி said...

வேசிகளிடம் போறவனுகள் எதுவுமே பார்ப்பதில்லை. ஏன்? அதை அறிந்து நாமும் அங்கு ஐக்கியமாவோம்.

Shajahan.S. said...

உங்க கருத்தைத்தாங்க இந்த செய்திய படிக்கிற,பாக்குற மக்கள் பிரதிபலிக்கிறாங்க.இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும்,அவர்களுக்கு துணைபோகிற சில ஊடகங்களும் வேணுமின்னே இந்த பிரச்சனையை பெரிது ஆக்குறாங்க! தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

/////இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??///

உனக்குள்ள‌ என்ன பெரிய பருப்புன்னு நினைப்பா!!! ஒழிஞ்சவன விடு. ஒழிச்சவன் மட்டும் உலகத்துல நல்லது பண்ணிடுவனா!!!

ஒருவேளை அவனும் உன்னப்போல வலையம் எழுதுவான். அவனை தட்டி எவன் கேட்ப்பான்.
பிரட்சினையின் வீரியம் தெரியாமல் ம*** போல எழுத்தாதே!!!

அந்நியன்

kavinagam said...

Every day witnesses inumerable atrocities in India. Many of those are reported in a few lines and millions of gruesome atrocities go unnoticed. The media can make sth big sth insignificant.

I request the people to pay similar attention and discussion on thousands of atrocities on dalits, women and tribals in India. Do you think any of those events are less gruesome.

One more thing to be noted. Why does the Govt not spend money and resources on law college like it spends on IIMs and IITs.Is it because those who study in the law colleges are SC/ Bc students.Quality, discipline and motivation and required resources need to be established in law colleges.

Nam-Tamil said...
This comment has been removed by a blog administrator.
Kattavandi said...

கலவரம் வீதிக்கு வராமல் போலீசார் காவல் காத்தார்கள் என்று தான் கொள்ள வேண்டும்.
குறுப்பிட்ட நேரத்திற்கு முன்னமே வந்த போலீஸ் தடியடி நடத்த எவ்வளவு நேரமாகும் (அது தான் இப்போதெல்லாம் போலீஸ் க்கு வாடிக்கையாகி விட்டதே) உள்ளே சென்று தடுத்திருந்தால் இந்த பிரச்சினை வக்கீல்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் பேருந்து மறியல், ரயில் மறியல் என்று பொது மக்களின் அன்றாட வாழ்க்கை இன்றும் சிரமப்பட்டு கொண்டிருக்கும், இப்போது தான் சட்டக்கல்லூரி மாணவர்களின் யோக்கியதை ஆதாரத்துடன் மக்களுக்கு தெரிந்து இருக்கும்.சிலர் தான் இது போன்ற ரவுடி மாணவர்கள் என்றால் மற்ற நல்ல மாணவர்கள் (இந்தியாவின் தூண்கள்) தடுத்திருக்கலாம்.
இந்த கொடூரமான சம்பவத்தை போலீஸ் வேடிக்கை பார்த்தது என்று பலரும் இங்கே கூறுவது, விடியோவை பார்த்ததால் தான் என்று நினைக்கிறேன். இதே சட்டக்கல்லூரி கலவரம், இரு பிரிவு மாணவர்கள் மோதல்,போலீஸ் தடியடி என்று செய்தி வந்தாலும்(தடியடி மட்டும் சன் செய்திகளில் காட்டப்படும். நம்மில் பலரும் வக்கீல்களுடன் சேர்ந்து போலீஸ் அராஜகம் என்று கொதித்து கொண்டு இருப்போம்.அதற்காக நான் முழுவதுமாக போலீஸ் க்கு வக்காலத்து வாங்க வில்லை. சட்டகல்லூரிக்குள் கத்தி பேச வேண்டும் என்று எந்த வாத்தியாராவது சொன்னதை (ரவுடி) மாணவர்கள் தவறாக புரிஞ்சுக்கிட்டான்களோ.

Anonymous said...

Truly said.Police stand on that time is correct. They should not be punished

புதுகை.அப்துல்லா said...

கமலஹாசனின் புகழ் பெற்ற வசனம் ஒன்று உண்டு " போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்கவைங்க" என்று.... இதெல்லாம் படிக்கவச்சாலும் திருந்தாத ஜென்மங்கள்.

புதுகை.அப்துல்லா said...

அன்றைக்கு காவலர்கள் உள்ளே சென்று இருந்தால் இந்நேரம் மாணவர்கள் போராட்டம்னு சொல்லி குறைந்தது 10 சாவுகளாவது தமிழகம் முழுவதும் நடந்து இருக்கும். இன்றைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு காயம்பட்டாலும் உயிரோடு இருக்கிறார்களே. போலிஸ் அந்த இடத்தில் செய்தது சரிதான்.

Sundar said...

உங்க கோபம் புரியுது அதுக்காக இது சரின்னு எனக்கு படலை.
பொதுமக்கள் தலையிடவில்லை என்றால் அதற்க்கு இத்தகைய கருத்து காரணமாக இருக்கலாம். சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கவேண்டியவர்களுக்கு சொந்த கருத்துக்கு இடமில்லை. என்ன செய்ய...அவர்களை பொறுத்தவரை எதுவும் செய்யாமல் விட்டால் ஏற்படும் விளைவுகள் எதாவது செய்ய போனால் ஏற்படும் விளைவுகளை விட தேவலாம் என்ற நிலை தான் உள்ளது. so overall its understandable but not acceptable.

Sundar said...

//One more thing to be noted. Why does the Govt not spend money and resources on law college like it spends on IIMs and IITs.Is it because those who study in the law colleges are SC/ Bc students.Quality, discipline and motivation and required resources need to be established in law colleges.//

wow what an argument...please see return on investment by any measure....to start economic value created, contributions to society.

btw, thanks to folks like you...meritocracy is secondary to vote bank politics. affirmative action is turned into discrimination on minorities. unless those who benefited from reservation in one generation are exempted from using it again for another generation...its the higher 'economic class' ppl in oppressed 'caste' who push the lower 'economic class' ppl in their own caste.

go get a grip on whats happening. it is the 'class' that is ruling, 'caste' is only for voting and dying on the streets for the causes triggered by their 'class' masters.