மனைவியிடம் சண்டையிட்டு
தனித்தே புரண்டு படுத்த ஒரு பின்னிரவில்
என் பிணங்கள் மூடி தூர்ந்து போன என் கல்லறையின்
மண் விலக்கி வெளி வந்த அவன்
என் முகம் தொட்டு கதை சொல்ல ஆரம்பித்தான்.
கடவுள் கதை நிறைய உண்டு
காதல் கதை உனக்கே தெரியும்.
பாட்டி சொன்ன கதையல்ல
பார்க்கப் போகும் கதையும் அல்ல.
கடுவன் பூனை தாய்ப் பூனை
குட்டிப் பூனை
காமத்தில் கால்பரவாது செல்லும் பூனை
பல திருட்டுப் பூனைகள்
திருடுவது பூனை குணம்
கருமமே கண்ணாய் சில பூனைகள்
கனவிலே சில பூனைகள்
எந்நேரமும் மீசை முறுக்கி சில பூனைகள்
வெள்ளை கறுப்பு பழுப்பு என்று பல நிறம்
எல்லாப் பூனையும் தினம் வரும்
தினம் போகும்.
வருமிடம் போகுமிடம் எனக்குத் தெரியாது
வந்து கொண்டே தான் இருக்கின்றன பூனைகள்
இப்படியே போனது சில நாட்கள்
அன்றைக்கு
அத்தனை பூனைகளையும்
தின்று செரித்து
வெறுமனே சோம்பிக் கிடந்தது அந்தப் பூனை.
எல்லாவற்றையும் தின்றேன்
இனி நீதான் மிச்சம்.
எழுந்து வந்தது என்னைக் கண்டு.
நீளமாய் கால்கள்
இரவால் செய்தது போல ஒரு நிறம்
பற்களும் கூட.
முன்பொரு முறை பார்த்திருக்கிறேன் எங்கோ
அதற்கு கண்ணே இல்லை.
வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.
Tuesday, 23 November 2010
Wednesday, 17 November 2010
கலாச்சாரமும் சில கழிசடைகளும் (அ) இது தாண்டா விபச்சாரம்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி. மண்ணே இல்லாத காலத்தில் தோன்றி என்ன மயிரை தின்றார்கள் என்று தெரியவில்லை. அது போய் தொலையட்டும். படி தாண்டா பத்தினி. இப்படி ஒரு சொல்லாடல் புனிதமான கலாச்சாரம் என்று இன்று பலரும் மயிரை தட்டிக் கொள்ளும் புடுங்கி கலாச்சாரத்தில் தான் இருக்கிறது. அது என்ன படி தாண்டா பத்தினி? அப்போ தாண்டி கடைக்கு போனா? படிக்க போனா? அவங்க எல்லாரும் விபச்சாரியா? இன்றைக்கு படிக்கவும் வேலைக்கும் போகாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? அய்யோ எங்க கலாச்சாரம் புனித கலாச்சாரம் என்று ஊளையிடும் கும்பல் இந்த அளவுகோலை ஏற்குமா?
புருஷன் செத்துட்டா பொண்டாட்டி உடன்கட்டை ஏறிடணும். இல்லாட்டி அந்த பெண்ணின் தலையை மொட்டையடிச்சி வெள்ளை சேலை கொடுத்து இருட்டில் உட்கார வைத்ததும் இந்த கலாச்சாரம் தான். அப்படி கணவனை இழந்த பெண் எதிரில் வந்து விட்டால் முண்டச்சி மூஞ்சில முழிச்சா போற காரியம் வெளங்குமா என்று அசிங்கப்படுத்தியதும் இந்த புடுங்கி கலாச்சாரம் தான். கலாச்சாரம் கலாச்சாரம் என்று ஊளையிடும் பன்றி கூட்டம் இன்றைக்கு இதை சொன்னால் செருப்படி தான் விழும்.
லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.
டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.

ஒரு காலத்தில் ஊரெல்லாம் குடுமி.பின்னர் பாகவதர் க்ராப் தான் பாப்புலர். இன்றைக்கு மிலிட்டரி கட்டிங். கலாச்சாரம் உண்மையிலேயே மயிறு மாதிரி தான். மயிறு போலவே அதுவும் மாறிக் கொண்டே தான் இருக்கும். மொட்டை அடிப்பதோ கொண்டை வளர்ப்பதோ அவனவன் இஷ்டம்.
திருமணம் ஆயிரம் காலத்து பயிரோ இல்லை ஆறுமாசத்து மயிரோ ஆனால் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட சில சமூகங்களில் தாய்மாமனுக்கு முதல் உரிமை என்று மணம் செய்வார்கள். சில சமூகங்களில் அது மிகவும் தவறான விஷயம். சில திருமணம் மூன்று நாள். சில ஒரு வேளையில் முடியும். காதல் திருமணம் செய்தால் ஆள் வைத்து வெட்டிப் போடுவது ஒரு கும்பல் என்றால் நல்லா இருந்தா சரி என்று வாழ்த்துபவர்கள் ஒரு விதம்.
இரண்டு பேருக்கு பிடித்து போனால் அதில் திருமணம் என்ற ஃபார்மாலிட்டி எதற்கு என்று வாழ்வது அவர்கள் விருப்பம். மனம் ஒத்து போகாமல் வேண்டா வெறுப்பாக குடித்தனம் நடத்துவதை விட லிவிங் டுகெதர் எந்த விதத்தில் மோசமாக போய்விட்டது?
பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று வன்முறையாக அரை நிர்வாணமாக அலைய விட்டதும் இதே கழிசடை கலாச்சாரம் தான். பாட்டு கத்துக்கறதும் பவுடர் போடறதும் தேவடியா செய்றது என்று சொன்னதும் இதே கலாச்சாரம் தான். இதை மாற்ற முயன்ற போதும் இதே போன்று பல பன்றிகள் ஊளையிட்டு தான் இருக்கும். கல்யாணம் செய்வதோ செய்யாமல் சேர்ந்து வாழ்வதோ அவரவர் விருப்பம். அதெல்லாம் விபச்சாரம், ஆனால், நாங்கல்லாம் ரொம்ப கல்ச்சர்ட் என்று சொல்லும் கும்பல் தங்கள் வீட்டு பெண்கள் மேலுடை அணியக்கூடாது என்று சொல்லுமோ? தன் அம்மாவோ தங்கையோ பாட்டு பாடினால் அவர்களை விபச்சாரி என்று சொல்வார்கள் போல.
எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு. சிலர் திருமணம் அவசியம் என்று நினைக்கிறார்கள். சிலர் மனம் ஒத்துப் போனால் திருமணம் அவசியமல்ல என்று நினைக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில் வக்கிரம் பிடித்த பன்றிகள் லிவிங் டுகெதர் விபச்சாரம் என்றும் அதை ஆதரிப்பவர்கள் விபச்சாரிக்கு பிறந்தவர்கள் என்றும் தங்கள் வக்கிரத்தை வாந்தி எடுத்து ஊளையிடுகிறது. அப்படி பார்த்தால் காலையில் மணம் முடித்து அன்றே இரவில் மணவாழ்க்கையை ஆரம்பிக்கும் கலாச்சாரம் கூட்டிக் கொடுக்கும் கலாச்சாரம் என்று யாரேனும் சொல்லிவிடக்கூடும்.
அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம்.
அஞ்சு பவுன் குறையுது பைக் வாங்கி கொடுத்தா தான் தாலிக் கட்டுவேன்னு சில சொறி நாய்ங்க எழுந்து போகுதே அது தாண்டா விபச்சாரம். பிடிக்காத ஒருத்தனுக்கு விடாப்பிடியா கல்யாணம் பண்ணி வைக்கிறானுங்களே அது வற்புறுத்தி விபச்சாரம். விதவை பெண்ஷனுக்கு லஞ்சம் கேக்குறானே அது பட்டப்பகல் விபச்சாரம். என் கருத்துக்கு ஒத்துக்காட்டி நீ விபச்சாரிக்கு பொறந்தவன்னு எவனாவது சொல்றானே அவன் செய்றது தான் விபச்சாரம்.
லிவிங் டுகெதரை ஆதரிப்பவன் விபச்சாரிக்கு பிறந்தவன் என்றால் நானும் சொல்வேன்,நீ விருந்தாளிக்கு பிறந்தவன். என் வீடு விபச்சாரம் நடக்கும் வீடு என்றால் உன் வீடு கூட்டிக் கொடுக்கும் வீடு. என்னாலும் பேச முடியும்.
டிஸ்கி: இவ்விடம் வக்கிரம் பிடித்த நாய்களுக்கு நாய்களின் பாஷையிலும் சொறி சிரங்கு மனநோய் பன்றிகளுக்கு பன்றியின் பாஷையிலும் பதில் சொல்லப்படும்.மைனஸ் ஓட்டு போடுபவர்களைப் பற்றி உதிர்ந்த மயிரளவும் எனக்கு கவலையில்லை.
Labels:
இன்னபிற,
கருமம்,
கலாச்சாரம்
Subscribe to:
Posts (Atom)