சைனாவின் முக்கிய ஏற்றுமதி குறைந்த விலையில் செய்யப்படும் பொருட்கள்..ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி தேயிலை..பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதி ஃஃபினான்ஷியல் ஸெர்விஸஸ்...இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி ஐ.டி. செர்வீஸஸ்...ஆனால் சில நாடுகளின் முக்கிய ஏற்றுமதி தீவிரவாதம் அதனால் ஏற்படும் ஹோல்சேல் மர்டர்!
இந்த கடைசி கேட்டகரியில் வருவது பாகிஸ்தான்..மதவாதத்தையும், தீவிர வாதத்தையும் மட்டுமே ஏற்றுமதி செய்யும் இந்த பாழாய் போன, மனித நாகரீகத்தின் புற்று நோயான இந்த தேசம் அனைத்துலக தீவிரவாதிகளின் தாய்நாடு என்பதை கிட்டத்தட்ட இந்த உலகமே மிகச்சமீப காலமாக புரிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது...
மும்பையில் சில காட்டுமிராண்டி மிருகங்கள், மனித உருவம் தரித்த ஜந்துக்கள் எந்த காரணமும் இன்றி அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும் இந்த தீவிரவாத தேசத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று எனக்குத் தெரியாது... இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை...
ஆனால், சம்பந்தம் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!
ஏனெனில் இந்த தேசத்தின் பின்ணனி அப்படி! ஆஃப்கனில் அமெரிக்க போர் ஆரம்பித்த காலத்திலிருந்து தீவிரவாதிகளின் மயிரைக் கூட புடுங்காமல், அமெரிக்க பணத்தில் கொழுத்த இந்த தேசம், ஆஃப்கனில் தலிபான் தறுதலைகள் ஓரளவு ஒழிக்கப்பட்ட பின், அடுத்து தனது கும்பி கழுவ என்ன செய்வது என்று யோசிப்பதாக தெரிகிறது.. இவர்களிடம் இருக்கும் ஒரே ஏற்றுமதி சரக்கு தீவிர வாதம்...கொன்று குவிப்பது... தங்களிடம் இன்னமும் சரக்கு இருக்கிறது என்று காட்ட இந்த புற்று நோய் தேசமே இதை செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை.
இதில் அந்த அரசுக்கும், ஜனாதிபதி, பிரதமருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட, அந்த அரசு எந்திரங்கள் பயன்படுத்த்ப்பட்டிருக்க கூடும்.. தலிபான் காட்டுமிராண்டிகளின் அதிகாரபூர்வ முதன்மை வேலையாளான ஐ.எஸ்.ஐ யின் பங்கு மிகவும் கேள்விக்குறியது...
அப்பிடியெல்லாம் இல்ல, பாகிஸ்தான் ஒரு புனித தேசம் என்பவர்கள் சில வாரங்களுக்கு முன் சைனா, சவுதி அரேபியா, வேர்ல்ட் பேங்க் என்று கையேந்தியதை ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது...அப்படியே உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பான்மையான ஓநாய்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக சொல்வதையும் நினைவுப்படுத்துவது நல்லது!
ஒட்டு மொத்த உலகத்தையும் ஆஃப்கன் போன்று கற்காலத்திற்கு கொண்டு செல்வதே இவர்களின் நோக்கமாக இருக்கக் கூடும். அதே சமயம் இவர்கள் அணிவது நைக் ஷூஸ், Gap டீ ஷர்ட்! குடிப்பது ஸ்காட்ச் விஸ்கி!
இந்த வெறி பிடித்த மிருகங்களை ஒட்டு மொத்தமாக அழிப்பது இயலாத காரியம் என்றாலும், இந்தியாவை மட்டுமே அடிக்கடி தாக்குவது ஏன்? மும்பை குண்டு வெடிப்பு, அக்ஷர்தாம் தாக்குதல், பெங்களுரில் தாக்குதல்..டெல்லி மார்க்கெட்டில் தொடர் குண்டு வெடிப்பு...இப்பொழுது மீண்டும் மும்பையில் கொலை வெறி!
இவர்களுக்கு தைரியம் தருவது அவர்கள் அடித்திருக்கும் கஞ்சா, அபின் மட்டும் அல்ல, இன்னொரு முக்கிய காரணமும் உண்டு...
அந்த முக்கிய காரணத்திற்கு பல பெயர்கள்...சில உதாரணம்...கையாலாகாத, அறுபது வயதிற்கு மேல் சினிமா கதாநாயகன் ஆக முயற்சிக்கும் சிவராஜ் பாட்டீல்...பார்லிமெண்டை தாக்கி, சில பாதுகாவலர்களை கொன்ற அப்சல் குருவை தூக்கிலிட்டால் சிறுபான்மையினரின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்று ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தையே தீவிரவாதியுடன் இணைக்கும் முட்டாள்களான காங்கிரஸ்...அரசியல் என்றால் எவன் காலையும் நக்குவேன் என்று சொல்லும் கருணாநிதி....
மும்பை பிரச்சினையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு பின்தள்ளப்பட்டு விட்டது.. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த காடுவெட்டு குரு என்ற அன்னை தெரசாவின் மறு பிறவி மீதான வழக்கு வாபஸ் வாங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்...
அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது முன் இருந்த ஜெ. அரசு அல்ல. இதே கருணாநிதி அரசு தான்.. இதற்கு கருணாநிதி அரசு சொல்லிய காரணம்...
"மாவட்ட கலெக்டரை கொல்லும்படி தூண்டினார்...தொகுதி எம்.எல்.ஏ வை கொல்வேன் என்று பேசினார்... மத்திய மந்திரி ராஜா தொகுதிக்குள் வந்தால் உயிருடன் திரும்பி போக முடியாது என்று பேசினார்"
இது சம்பந்தமாக "அன்னை தெரசா" காடுவெட்டி குரு தொடர்ந்த வழக்கு சென்ற வாரம் ஹை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது...காடுவெட்டிகளால் தாங்கள் பேசியதை மறுக்க முடியவில்லை...அவரின் ஒரே வாதம், "அதை நான் பொது மக்களிடம் பேசவில்லை...ஆகவே கலவரத்தை தூண்டினேன் என்று குற்றம் சாட்ட முடியாது"...ஆக, அவர் தான் பேசியதை அவராலே மறுக்க முடியவில்லை!
ஆனால், என்ன ஆச்சரியம்....தொண்ணூற்றேழு வயது கிழவன் ஒரு இரவில் பதினேழு வயது குமரியாக (ஆமாம் கிழவன் குமரன் ஆவது கூட இல்லை, குமரியாகவே ஆகி விட்டான்!) ஆவது போல், ஓரே வாரத்தில் கருணாநிதி அரசு வழக்கை வாபஸ் வாங்கி விட்டது!
இதற்கு காரணம் என்ன? "அன்னை தெரசா" காடுவெட்டியார் தன்னை மிக கேவலமாக பேசியதாக ஒப்பாரி வைத்த கருணாநிதி இன்று மனம் மாறக் காரணம் என்ன? காடுவெட்டியார் நிஜமாகவே அன்னை தெரசா ஆகிவிட்டாரா இல்லை வள்ளலார் ஆகிவிட்டாரா? இல்லை கூட்டணி வைச்சா தான் கட்சி பொழைக்கும், அதுனால, தேசமாவது, பாதுகாப்பாவது...எவன் நாசமா போனா எனக்கென்னா....கூட்டணி வச்சி, நாலு சீட்ட பிடிச்சி அடுத்து சென்ட்ரல்ல எவன் கவர்ன்மென்ட் வந்தாலும் நான் ரெண்டு மினிஸ்டர் போஸ்ட் வாங்கணும் என்ற "உயர்ந்த, கலாச்சாரம் மிக்க" அரசியல் காரணமா??
அதெல்லாம் இருக்கட்டும்...கருணாநிதிக்கும், மும்பை தாக்குதலுக்கும் என்னடா சம்பந்தம்...மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போடுறதே ஒனக்கெல்லாம் வேலையாப் போச்சி... என்று சொல்பவர்களுக்கு...
இருக்கிறது ஐயா, இருக்கிறது! இவர்களின் அரசியலில் தேசப்பாதுகாப்பு சட்டத்தை கேலியாக்கி விட்டார்கள்..பொடா சட்டத்தை வைகோ மீது பாய்ச்சி ஜெ. கேலியாக்கியது போல்..
இப்படி இவர்களுக்கு வேண்டாம் என்றால் ஒருவரை கைது செய்வதும், ஓட்டு பொறுக்க வேண்டுமென்றால் அவரை விடுதலை செய்வதும் என்று விளையாடியே நாசமாக்கி விட்டார்கள்...இந்த பிரச்சினையில், காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தில் உள்ளே அடைத்த கலெக்டரும், மாவட்ட காவல் அதிகாரியும் கேலி பொருளாகி விட்டார்கள்... நாளை ஒருவன் தீவிரவாதி என்று தெரிந்தாலும் அவனை உள்ளே தள்ள மனம், தைரியம் வருமா? எந்த அரசியல் வியாதி சப்போர்டுக்கு வருவான் என்று யாருக்கு தெரியும்?
ஆக, இப்படி அரசியலுக்காக நாட்டையே நாசம் செய்துவிட்டார்கள்...இதில் வயதில் மூத்த அரசியல்வாதி என்பதால்....
கருணாநிதி முதல் குற்றவாளி!