என்றைக்கோ ஒரு நாள் இந்த நபரை டிவியில் பார்த்து விட்டு இவன் ஒரு விஷக் கிருமி என்று சரியாக சொன்னவரை மீண்டும் நினைத்துப் பார்க்கத் தான் வேண்டியிருக்கிறது. பெரிய அளவில் விபரம் தெரிந்த பருவம் இல்லையென்றாலும் இப்படி ஒரு நபரை ஒரு காலத்தில் உயர்வாக நினைத்தோமே என்று ஒரு குற்ற உணர்ச்சி நீண்ட காலமாக உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஒரு செயலுக்காகவே இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து எத்தனை முறை என்னை செருப்பால் அடித்துக் கொண்டாலும் பாவம் மிச்சம் இருக்கத்தான் செய்யும்.

நான் ஒன்றும் தேவலோகத்தில் சஞ்சரிக்கவில்லை. செத்தவரின் உடலை தர லஞ்சம் கேட்கும் கடவுள் பக்தி உள்ள கணவான்கள், அறுபது வயது விதவையை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சார காவலர்கள், ஊர்க்கடைகளின் இங்கிலீஷ் போர்டுக்கு தார் பூசி விட்டு தன் பேரன் பேத்திகளுக்கு வடமொழி பெயரிட்டு தமிழ் வளர்க்கும் டாக்டர்கள் என்று பலரையும் பார்த்து தான் இருக்கிறேன்.
ஆனால், அதனினும் கேவலமான மனிதர்களை சந்திக்கக் கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அப்படி யாரேனும் இருப்பார்கள் என்று நினைக்கவும் இல்லை.
ஆனால், அப்படி ஒரு நபர் இருக்கிறார். எந்த ஒரு சபை நாகரீகமும், மனிதாபிமானம் என்ன, மனிதத் தன்மையே இல்லாத விஷக்கிருமிகள் இருக்கத்தான் செய்கின்றன.
மனைவி, துணைவி என்று மூன்று பெண்களுடன் குடும்பம் நடத்திக் கொண்டே ஒருவனுக்கு ஒருத்தி என்று வாய்க் கூசாது கலாச்சாரம் பேசும் அந்த நபர் அரசியல் மேடையில் வாய் திறந்து நரகலை கக்கியிருக்கிறார்.
"இந்த அம்மையார் யார் யாரையோ பார்த்து `பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னார். ஆனால் இவர் காட்டிய பதி பக்தி இதுதான். கணவரை போன்றவருக்கு ஒரு நோய் நொடி என்றதும், அவருக்கு வேலையே வேண்டாம், வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொன்ன உத்தமி"
இது ஒரு மூத்த அரசியல்வாதி, எண்பது அகவையை கடந்தவன் என்று தன்னையே வியந்து கொள்ளும் ஒரு நபர் பேசும் பேச்சா?? கணவரைப் போன்றவர் என்று இந்த நபருக்கு எப்படி தெரியும்?? அப்படி அந்தரங்களில் நுழைந்து பார்த்தால், விபச்சாரியிடம் போய்விட்டு சர்வீஸ் சரியில்லை என்று காசு கொடுக்காது ஓடி வந்த சிலரின் அசிங்கங்களையும் பேச வேண்டி வருமே??
================
இந்த நபரின் வாய்மொழி தான் இப்படி அழுகிய பிணம் போல நாறுகிறது என்றால் அரசியல் செயல்பாடுகளும் அப்படித் தான் இருக்கிறது. எண்பதை கடந்த நோய்வாய்ப்பட்ட, கணவனையும் மகனையும் இழந்து சிறையில் அடைபட்டிருந்த மூதாட்டிக்கு சென்னையில் இறங்க அனுமதியில்லை. அவர் ஒன்றும் அரசியல் நடத்தி ஒரு மகன் முதல்வர், மற்றொரு மகன் மத்திய மந்திரி, மகள் எம்.பி, பேரனுக்கும் மந்திரி பதவி, நாலாயிரம் கோடி சொத்து, ப்ரைவேட் ஜெட், ப்ரைவேட் தீவு என்று குடும்பத்துக்கு சொத்தும் பதவியும் சேர்க்க வரவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு தான் வந்தார்.
ஆனால், அவர் விமானம் விட்டு இறங்கக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது!! இப்படி ஒரு கேவலமான செயலை வேறு எங்கேனும் கேள்விப்பட்டதில்லை. இதை செய்தவர்கள் எப்படிப் பட்ட இழிபிறவிகளாக இருக்க முடியும்??
ஒரு எண்பது வயது நடக்கமுடியாத நோய்வாய்ப்பட்ட மூதாட்டியால் உங்களின் இறையாண்மைக்கும் இன்ன பிற மயிருக்கும் பங்கம் வருமென்றால் என்ன விதமான அரசாங்கம் நாடு அது??
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இன்றைக்கு சொம்பு தூக்கும் கூட்டம் இந்த நபரின் காலை மட்டுமல்ல, கழுவாத பின்புறத்தைக் கூட நக்கலாம்.ஆனால் என்றாவது ஒரு நாள் சரித்திரம் சரியாக எழுதப்படும். அன்றைக்கு உன் பெயர் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உமிழப்படும்!

