Thursday, 26 February 2009

ஆஸ்கர் விருதும் அழுகும் தக்காளியும்

இரண்டு செய்திகள்


செய்தி 1:

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ் தமிழ்


===============

செய்தி 2:

கிணத்துக்கடவு: தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், கிணத்துக்கடவு மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிணத்துக்கடவு பகுதிகளில் 5,005 மற்றும் ஹைபிரட் ரக தக்காளிகள் நல்ல காய்ப்புக்கு வந்துள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஏக்கரில் 10 கிலோ எடையுள்ள 60 கூடை தக்காளி கிடைத்து வருகிறது. விவசாயிகள் மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் கொண்டு வந்து ஏலத்தில் விடுகின்றனர். ஏராளமான கூடைகள் குவிந்ததால் கடந்த 13ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 60 பைசாவுக்கு ஏலம் போனது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஏலத்தில் விடாமல் சுடுகாட்டில் கொட்டிவிட்டு சென்றனர்.

அதன்பின் விவசாயிகள் தக்காளி கூடைகளை மார்க்கெட்டுகு கொண்டு வருவதை குறைத்து வருகின்றனர்.

நன்றி: தினமலர்


==========================

இதுல என்ன உள்குத்துன்னு கேக்குற நண்பர்களுக்கு: உள்குத்து எல்லாம் இல்லீங்ணா ;0) ச்சும்மா ரெண்டு செய்தி...எந்த செய்தி என்ன சொல்லுதுன்னு படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா சரி...
பிஜெபி ஆட்சில இருந்தப்ப ஒண்ணு சொல்வாங்க...
"இந்தியா ஒளிர்கிறது"
கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு தப்பா வரும்!

Saturday, 21 February 2009

ப.சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்


வணக்கம் அப்பச்சி,
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்னு எங்க அப்பத்தா கெளவி சொல்லும்...உள்ளூர்ல ஒங்களுக்கு செல்வாக்கு இருக்கோ இல்லியோ எல்லா கவுருமெண்டுலயும் நீங்க ஒரு பதவி வாங்கிடுறீங்க...அட நம்ம ஊர்க்காரரு கலக்குறாரு அப்பிடின்னு நானும் சொம்மா தான் இருந்தேன்...

பொய்யில மூணு வகை உண்டு...ஒண்ணு பொய்யி, ரெண்டு பச்சைப் பொய்யி...மூணாவது புள்ளி விவரம்...சொன்னது நானில்ல...நமக்கு ஏது அம்புட்டு வெவரம்...எல்லாம் ஒங்க சேக்காளி கலிஞ்சரு ஒங்களைப் பத்தி சொன்னது தான்...

அந்த மூணாவது மேட்டரு அதேங்...புள்ளி வெவரம்...அதுல நீரு கில்லாடின்னு எல்லாருக்கும் தெரியும்...கேக்குறவன் கேணப்பயலா இருந்தா மன்மோகன்சிங்கு தான் பி.எம்.னு சொல்லுவாங்களாம்...அது மாதிரி, நம்ம கூட்டத்துக்கு வந்துருக்கானுவ பின்ன கேணப்பயல் இல்லாம எப்படின்னு ரொம்ப தெகிரியமா நீரு புள்ளி வெவரத்த அள்ளி உட்ருக்கீரூ...ஆனா பாரும்வே, அதுலயும் செல பயக ஓட்டய கண்டு புடுச்சிட்டானுவ...செதம்பரம் பேச்சு பல குத்து வாங்குன பம்பரம் மாதிரி இருக்குலேன்னு நக்கலடிக்கிறானுவ..

என்னலே ரொம்ப பேயுதன்னு சொல்லுதீரு?? கெரகம்...நான் எங்கவே கேட்டேன்...நம்ம பயக ஊரு, நாடு, தட்ஸ்தமிழ், தமிழ்மணம்னு எல்லா எடத்திலயும் கேக்குறானுவ...இந்தா ஒரு பத்து..

1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"

2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"

3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"
4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?

5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??

6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??

7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?

8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??

9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??

10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!