Monday, 31 May 2010

நாரச புனைவுகளும் மாவோயிஸ்ட் பொர்ச்சியும்....

புனைவுகள் எழுதுவதில் ஒரு மிகப்பெரிய வசதி இருக்கிறது. யாரைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமாகவும் எழுதலாம்....தரம் தாழ்ந்து தரை தட்டி, அதற்கு கீழே பாதாள சாக்கடை லெவலுக்கு கீழே இறங்கி கூட எழுதலாம்.

நாம் எவ்வளவு கேவலமாக எழுதியிருக்கிறோம் என்று யாராவது புரிந்து கொண்டால், எலேய் அது வெறும் புனைவுடே...சும்மால்லா எழுதினேன்..நீ கோட்டிக்காரத் தனமா என்ன எளவுல புரிஞ்சிக்கிட்ட..நான் என்ன பண்ணுவேன் என்று எளிதாக விளக்கெண்ணையில் வழுக்கி செல்லும் வெண்ணைக் கட்டி போல நழுவி விடலாம்.

ஆனால், எழுதியவர்களுக்கு தெரியுமே?? உங்களின் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நர்சிம், நீங்கள் எழுதியது வெறும் புனைவு தானா?? ஆம் என்றே நீங்கள் சாதித்தாலும் நீக்கப்பட்ட அந்த இடுகை யாரை குறிக்கிறது என்று உங்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் தெரிந்தே இருக்கிறது.

நம்ப்ப்பி வாசிப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்கிறீர்கள் (நம்ப்ப்பி என்ற அழுத்தம் எழுத்துப்பிழையா இல்லை மதுரை ஸ்டைல் நக்கலா என்ற கேள்வி வேறு எழுகிறது).

நானும் உங்களை நம்ப்பி வாசித்தவன் தான். (இறந்த காலம்). அதன் காரணம் உங்களின் அய்யனார் கம்மா போன்ற வலிமையான எழுத்துக்கள் மட்டுமல்ல, டாக்டர் ஷாலினி, பதிவர் விதூஷ் போன்றவர்களின் பிரச்சினைகளில் நீங்கள் முதல் ஆளாக குரல் கொடுத்ததும், "பெண்பதிவர்கள் என்று பிரித்துப்பார்ப்பது தேவையற்றது என்று நினைக்கிறேன். இங்கே கருத்துகளும், படைப்புகளும் மட்டுமே முக்கியம்", என்று பேட்டியளித்ததும் தான். நீங்களே சொல்வது போல உங்களுக்கு ஒரு மிக நல்ல இமேஜ் இருந்தது என்பது உண்மை. ஆனால், அதை ஒரே நாளில் அடித்து நொறுக்கி கீழே போய்விட்டீர்கள்.

உங்களுக்கும் சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததா என்று எனக்கு தெரியாது. ஆனால், "பகடி, நகைச்சுவை என்ற பெயரில் என் ஆதர்சங்களையும் நான் மதிப்பவர்களையும் கொச்சைப் படுத்தி, என் எழுத்தெல்லாம் திருட்டு என்றெல்லாம் எழுதி, அதை வேறு பெயரில் பதிவிட்டு, பின்னூட்டங்களில் நேரடியாகவே என்னைத் தாக்கிய பொழுது" என்று காரணம் சொல்கிறீர்கள்.

என்ன தான் காரணம் சொன்னாலும் புனைவு என்ற பெயரில் நீங்கள் செய்திருப்பது நியாயப்படுத்தவே முடியவில்லை. ஆனால், நீங்கள் சொல்லியிருப்பது தான் காரணம் என்றால் நீங்கள் இன்னமும் கீழே போகிறீர்கள்!!

பொது வெளியில் வைக்கப்படும் எதுவும் விமர்சிக்கப்படும், கேலி செய்யப்படும்...கம்பனும் பாரதியும் பாலகுமாரனும் சுஜாதாவும் சாரு நிவேதிதாவும் சந்திக்காத விமரசனங்களா? உண்மையோ இல்லையோ, எந்த எழுத்தாளர் மீது திருட்டுக் குற்றச்சாடு இல்லை நர்சிம்?? எல்லாக் கதைகளையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து ஏதோ ஒன்றின் நகல் என்று யாரேனும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்...அதற்காக அப்படி விமர்சனம் செய்பவர்கள் அவுசாரி என்று சொல்வீர்களா??

ஆகப் பெரிய சாரு நிவேதிதா, ஜெயமோகனையே தமிழ்நாட்டில் பல கோடி பேருக்கு தெரியாது. அப்படியெனில் உங்களை எத்தனை பேருக்கு தெரியும்?? இந்த பிரபலத்தன்மைக்கே யாரும் விமர்சித்தால் அவுசாரி என்று "புனைவு" செய்வீர்களானால், உங்களுடன் ஒப்பிடும் போது கருணாநிதியும், ஜெயலலிதாவும் மற்ற அரசியல்வாதிகளும் கடவுளாக தெரிகிறார்கள். எத்தனை குற்றச்சாட்டு வந்தாலும் அவர்கள் யாரும் உங்கள் அளவுக்கு கீழே போய் அவுசாரி என்று பேட்டிக் கொடுப்பதுமில்ல, புனைவு செய்வதுமில்லை!

இது தான் சமயம் என்று வன்மத்துடன் போட்டுத் தாக்குகிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நர்சிம், உங்கள் மீது வன்மம் கொள்ள பலருக்கும் எந்த காரணமுமில்லை. நிச்சயமாக எனக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் கடவுளிலிருந்து கருணாநிதி வரை விமர்சிக்கும் நான் , விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருவரை அவுசாரி என்று அழைப்பதை பார்த்துக் கொண்டு வாயை மூடிக் கொண்டிருந்தால் சேற்றில் புரளும் எருமைக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைக் கண்டிக்காவிட்டால் வேறு எதையும் கண்டிக்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை.

ஸாரி நர்சிம். ஆனால் நீங்கள் எல்லை கடந்து மிகக் கீழே போய்விட்டீர்கள்!

====================

கெடப்பது கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மனையில் வை என்ற கதையாக வினவு இதற்கெல்லாம் காரணம் நர்சிம்மின் ஜாதியே என்று அவர்களின் பார்ப்பனீய‌ பிஸினஸை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எவன் எக்கேடு கெட்டால் என்ன, யார் குடி நாசமானால் என்ன என்று செக்ஸ் டார்ச்சருக்கு ஆளானவர்கள் என்று எந்த பொறுப்பும் இன்றி சில பெண் பதிவர்களின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். நர்சிம்மின் புனைவு வன்புணர்ச்சி என்று சொல்லிக் கொண்டே இவர்கள் அதை விட கேவலமாக இறங்கிப் போகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களின் பெயரை வெளியிட இவர்கள் யார்? இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் வினவு பொறுப்பேற்குமா?

நர்சிம் ஒரு பார்ப்பனராம், அவர் தன் குரு என்று சொல்லும் சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோரும் பார்ப்பனர்களாம்! அப்படியா? நர்சிம்மும், சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் தாங்கள் பார்ப்பனர்கள் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை, அப்படி ஜாதி புத்தி காட்டி எங்கும் நடந்தும் கொண்டதில்லை. அப்படியிருக்க தோண்டித் துருவி அவர்களின் ஜாதியை கண்டுபிடித்து பார்ப்பன சாயம் பூசும் வேலை வினவுக்கு ஏன்? (நானும் கூட ஜ்யோவ்ராம் சுந்தரை குருவாகத் தான் நினைக்கிறேன். ஆனால் அவர் பார்ப்பனர் என்பதே எனக்கு வினவு படித்துத் தான் தெரிகிறது!)

அடுத்து நர்சிம்மின் பார்ப்பனீயத்தை பாதுகாக்கத் தான் இந்து பதிவர்கள் மவுனம் காக்கிறார்களாம். வினவு நக்கீரன் பாணி ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு...அடச்சே...அது கம்யூனிஸ்ட் இல்லியே...சைனாவுக்கு அனுப்பி வையுங்கள்...மாவோ விருது கிடைக்கலாம்.

எல்லாரும் எல்லா விஷயத்திலும் கருத்து சொல்லிக் கொண்டே குந்தியிருக்க எங்களுக்கு கட்சியும் இல்லை, இயக்கமும் இல்லை. மாவோ பேரை சொன்னால் சோறு போட எங்களுக்கு ஆள் இல்லை. நாங்களே வேலை பார்த்து தான் எரிக்க வேண்டும் (இல்லை, ட்ரையினை இல்லை, அடுப்பை சொன்னேன்).இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஆர்வத்தின் பேரில் தான் இந்த எழுத்து வேலை.

நர்சிம்மின் பார்ப்பன புத்தி தான் பெண் பதிவர்களை கேவலமாக எழுத வைக்கிறது என்று சொல்லிக் கொண்டே இந்துப் பதிவர் கலகலப்ரியா என்ற வீராங்கனை என்ற அடைமொழி வேறு. நர்சிம்மின் புனைவு கேவலம் என்றால், தங்களின் கருத்துக்கு மாற்றான கருத்து கொண்டவர் என்று குறிவைத்து தாக்குவதற்கு என்ன பெயர்?? வர்க்க விரோதி?? அழித்தொழிப்பு?? இருக்கலாம்...அது தானே பொர்ச்சி! வாழ்க பொர்ச்சி...இன்னும் சில ட்ரையின்களை கவிழ்ப்போம்...மக்களை கொன்று விட்டு பின்னர் அவர்களுக்காகவே போராடுவதாக கோஷம் போடுவோம்...மாவோவும் ஸ்டாலினும் அப்படித் தானே செய்தார்கள்...அவர்கள் வழியில் நடப்போம்...கவிழட்டும் ரயில்கள்...விழட்டும் பிணங்கள்...பிணங்களின் வாயில் குத்தி நிறுத்துவோம் செங்கொடியை....ஸார் மன்னரின் குழந்தைகள் உட்பட கொன்றழித்த லெனின் வழி நடப்போம்....இருபதாயிரம் போலிஷ் படை வீரர்களை கொன்றழித்த மனித நேய மாவீரன் ஸ்டாலின் வழி நடப்போம்...நாற்பதாயிரம் அறிவுஜீவிகளை கொன்றொழித்து மக்களுக்காக போராடிய மாவோ வழி நடப்போம்...வாழ்க லெனின்....வாழ்க மாவோ...வாழ்க ஸ்டாலின்...வாழ்க பொர்ச்சி! வாழ்க பொர்ச்சி!

Sunday, 16 May 2010

எருமை.


முன்னாள் காதலியின் ஈமெயில்கள்
இன்னாள் மனைவியின் டிவோர்ஸ் நோட்டீஸ்கள்
நேற்றிரவு க்ளப்பில் புதிதாய் பார்த்த பெண்ணின் குறுஞ்செய்திகள்
பெரியாரின் பழைய தொண்டர் கருணாநிதி
புதிதாய் வந்த தொண்டர் குஷ்பு
குழாய் உடைந்து மெக்ஸிகோ வளைகுடாவில் கொட்டும் பெட்ரோல்
பதவி இழந்த ப்ரவுன் பதவி பிடித்த கேமரான்
ஏழாம் தேதி வரை டைம் கொடுக்கும் டாக்ஸ் பில்கள்
என்றைக்கு வேலை முடியும்
எத்தனை சொன்னாலும் புரியாத க்ளையண்ட்

இன்ஷா அல்லா எங்க ப்ராண்ட் பாஸ்மதி அரிசி
அஞ்சு கிலோ வாங்கினா ரெண்டு கிலோ ப்ரீ
எங்க க்ளப்புக்கு ஆறு மணிக்கு முன்னாடி வந்தா
ரெண்டு ஷாட் டக்கீலா ஃப்ரீ
திணிக்கப்பட்ட நோட்டீஸ்கள்
புகையும் சிகரெட் தீர்ந்து போன விஸ்கி
திறந்து வைத்து குடிக்காத பியர்

குளம்பு நனைத்து கால் தாண்டி
தொடை ஏறி அடிவயிறு பரவி முதுகு படர்ந்து
காதுள் நுழைந்து தலை ஏறும்
சேற்றில் மூழ்கி
பெருமழையில் நனைகிறது எருமை.

படம் உதவி: Google.com