Tuesday, 9 March 2010

ஷூத்தலை சாத்தானாரும் விண்ணைத் தாண்டி வருவாயாவும்...

பன்னி கடித்தவனிடம் எப்படி கடித்தது எங்கே கடித்தது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான்...அது மாதிரி எனக்கும் எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை..

சரி, கருமத்தை எங்கே ஆரம்பித்தால் என்ன?? எங்கிருந்து ஆரம்பித்தாலும் சாக்கடை சாக்கடை தான்...ஆனால் இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்று ஒரு த்ராபையான க்ராபிக்ஸ் உடன் ஆரம்பிக்கிறது....அவ்தார் போன்ற படங்கள் க்ராஃபிக்ஸில் கலக்கும் போது இப்படி கேவலமாகவும் க்ராஃபிக்ஸ் செய்யலாம் என்று நிரூபிக்கிறார்கள்....அடுத்து ஷகிலா போஸ்டர் தின்ற கழுதை தானே ஷகிலா என்று நினைத்துக் கொண்டு வளைந்து நெளிந்து போஸ் கொடுப்பது போல "யங் சூப்பர் ஸ்டார்" சிலம்பரசன் என்று டைட்டில் கார்டு....லிட்டில் சூப்பர் ஸ்டாரிலிருந்து ப்ரமோஷன்...இன்னும் கொஞ்ச நாள் கழித்து "கெழட்டு டூப்பர் ஸ்டார்" என்று டைட்டில் போடுவார்கள்...

சரி கதை?? அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத கதை இல்லை...ஊரில் எந்த வேலைக்கும் போகாது, எதையும் ஒழுங்காக செய்யாது அப்பன் ஆத்தா காசில் தின்று கொண்டு, என் கஷ்டத்தை எவனுமே புரிஞ்சிக்க மாட்டேங்குறான் என்று தாடி வளர்த்துக் கொண்டு திரியும் பல்லாயிரம் தறுதலைகளை ஒரு குவாட்டர் வாங்கிக் கொடுத்து "ஏண்டா, இப்படி திரியறே" என்று ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கிரையென பின்மாயும் காலம் வரை அவன் அவளை எப்படியெல்லாம் காதலித்தான் என்று கதை சொல்லிக் கொண்டே இருப்பான்...

அவ அன்னிக்கி அப்படி லைட்டா திரும்பி பார்த்தா பாரு....சான்ஸே இல்ல...எனக்கு ரெண்டு வாரம் தூக்கமே இல்லடா...லவ்வுன்னா சும்மா அப்படியே தூக்கணும் மச்சான்...அப்படியே பொரட்டி போடணும்...அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் மச்சான்...இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பான்....கடைசியாக வாந்தியும் எடுப்பான்...

கவுதம் மேனனின் வாந்தி தான் கதை....உங்களுக்கு இருக்கும் ஒரே வேலை சன் டிவி சீரியல் பார்ப்பது தான் என்றால் இந்த கதைக்காக மாதம் ஒரு மானாட மயிலாட, வாரம் ஒரு பாராட்டு விழா என்று பொது வாழ்வில் உருகும் கருணாநிதி போல மெழுகாக உருகலாம்...என்ன கருமம்...எனக்கு வேறு வேலைகள் இருந்து தொலைப்பதால் என்னால் முடியவில்லை...ஒரு முழம் ஏறினால் பத்தடி சறுக்குகிறது....காலையில் சரியாக இருக்கும் மார்க்கெட் மதியம் "பொரட்டி போடுகிறது"...இல்லாவிட்டால் அப்படியே எதிர்பக்கமாக "தூக்குகிறது"
..டவுசர் கிழிந்து தொங்குகிறது....நாளைக்கு மார்க்கெட் திறந்தால் அந்த கிழிந்த டவுசரும் இருக்குமா இல்லை கோமணம் தான் மிஞ்சுமா என்று தெரியவில்லை...இதில் கவுதம் மேனனின் "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" வாந்தியை எப்படி துடைக்க?

சரி, கதை தான் அப்படி தீராக்குடிகாரனின் வாந்தி போல இருக்கிறது என்றால்...."வெரலு வித்த" காட்டப்படாது என்று சொல்லி விட்டார்கள் போல...சிம்பு என்ற சூப்பர் இஸ்டாரு ரொம்பவே நடிக்க ட்ரை பண்ணுகிறார்...இந்தா நடிக்கப் போறேன்...இந்த நடிக்கப் போறேன் என்று....கடைசி வரை! த்ரிஷா இப்படியே நடித்தால்(!) இன்னும் இரண்டு படத்தில் அன்னை தெரசா வேடத்தில் புக் செய்ய க்யூவில் நிற்பார்கள்...பிடித்து வைத்த இரண்டு ப்ளாஸ்டிக் பொம்மை போல வந்து போவதற்கு பெயர் ஒலகத் தரமான நடிப்போ என்னவோ?? எனக்கு ஒலகப்படம், ஒலக எளக்கியம் என்று ஒரு எளவும் தெரியாததால் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவர்களுக்கு இந்த படத்தை பார்க்க டிக்கட் வாங்கி தருகிறேன்...

கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!

ஊர் பக்கம் ஏதோ சொல்வார்கள்...பன்றியோட சேந்த கன்றும் ‍‍‍______(Fill up the blanks) தின்னுச்சாம்....கதை தான் இப்படி குடிகாரனின் பொலம்பலாக இருக்கிறது என்றால் எசைப் பொயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை...எசையெல்லாம் மறந்து விட்டதா இல்லை இந்த வாந்திக்கெல்லாம் எசைக்க வேண்டியிருக்கிறதே என்று பக்கத்து வீட்டு எருமையை கீபோர்டில் ஓட விட்டு விட்டு அவர் ஓடி விட்டாரா என்று தெரியவில்லை...(ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஓனர் செம்மொழி கண்டு செந்தமிழ் வளர்க்கும் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்!)...படத்தில் கன்னா பின்னாவென்று சத்தம் ச்சே...இசை...வருகிறது...கோமணப் பெண்ணே கோமணப் பெண்ணே என்று ஒரு பாடல்...என்னடா எழவு இது...இப்பிடில்லாமா பாட்டு எழுதுவாய்ங்க என்று கவனித்து கேட்டால் அது கோமணப் பெண்ணே இல்லை...ஓமனப் பெண்ணே!....

கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!

படத்தில எல்லாமே நெகடிவ்வா...ஒண்ணு கூட பாசிட்டிவ் இல்லியான்னு கேட்டா....இருக்கு...கதாநாயகனோட (ம்ம்ம்க்கும்...பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய கதாநாயகன்!) ஃப்ரண்டா ஒரு கேமரா மேன் வராரு...அவரு பேசுறது சென்னைத் தமிழ் மாதிரி இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.....ஆனா எலிஃபன்டுக்கு கர்சீப்ல கோமணம் கட்ன மாதிரி....மூணு மணி நேர படத்துல ரொம்ப கொஞ்ச நேரம்....

என்ன எழவுடா இது...ஒன் பொலம்பல படிக்கிறதுக்கு அந்த கருமம் பிடிச்ச படத்தையே பார்த்துடலாம் போல இருக்கே...இப்ப நீ என்ன தான் சொல்றன்னு கேக்குறீங்களா?? சரி, நீங்க கேக்குறதுன்னால சொல்றேன்...

படம் குப்பை...பின்பக்கம் துடைக்க கூட உதவாத ப்ளாஸ்டிக் குப்பை....

ஆனா, உங்களுக்கு ஒலகத்துல வேற எந்த கவலையும் இல்ல...வேற எந்த பிரச்சினையும் இல்ல...நீங்க உலகத் தமிழர்...ஆனந்த விகடன் தான் உங்க இதயத் துடிப்புன்னா ஒங்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்....கலையோட உச்சம்.....காதலோட மிச்சம்...(இன்ன பிற கருமாந்திரங்களை நீங்களே ஃபில்லப் செஞ்சுக்கங்க...ஒங்களுக்குத் தான் வேற வேலை இல்லியே!)

மீதிப் பேருக்கு...இந்த படத்தை பார்க்கிறதை விட, தண்ணி லாரில அடிபட்டு செத்துப் போகலாம்! விண்ணைத் தாண்டி வருவாயா...சனியனை மண்ணைத் தோண்டி புதை! அவ்ளோ தான்....

========================
கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு:

எனக்கு உண்மையில் என் நண்பர்களை குறித்து பயமாயிருக்கிறது...என் மீது என்ன கடுப்போ தெரியவில்லை, பயங்கர கொலைவெறியில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது....இல்லாவிட்டால் இந்த த்ராபையான படத்தை "நல்லாருக்கு" என்று பார்க்க சொல்வார்களா??

இந்த கலைக்காவியத்தை பார்த்து விட்டு ரஞ்சிதா படம் பார்த்த நித்யானந்தன் போல டென்ஷனாகி "இனிமே செய்வியா...இனிமே செய்வியா" என்று என் ட்ரைனரால் அடித்துக் கொண்டதில் ஷூவின் பாட்டம் பிய்ந்து தொங்குகிறது...என் தலை ஷூ ஷேப்புக்கு மாறிவிட்டது...தலை போனா பரவால்லை...பட்...டியர் ஃப்ரண்ட்ஸ்...ஷூ வாங்க ஒரு £273.55 அனுப்பி வைங்க!

(ஆமா, சாரு மட்டும் தான் ரெண்டாயிரத்துக்கு ஜட்டி போடுவாரா? நான் போட்ற ஷூவே இருபதாயிரம்...பட்...நான் ஒரு ஏழை பிச்சைக்கார பதிவன்னு சொன்னா நீங்க நம்பித் தான் ஆகணும்)
========================