Sunday, 27 July 2008

தெருக் குரல்!

படிங்க. பிடிச்ச சிரிங்க. இல்லாட்டி திட்டாதிங்க.

அதிகாரம் - ஒன்று
  • அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம் குவாட்ட‌ரில்
    ஓல்டு மாங்க்கே த‌லை

  • குவாட்டரினால் ஆனபயன் என்கொல்
    குடித்த‌பின் போதை ஏறாவிடில்

  • குழ‌லினிது யாழினிது என்பார் ஓசியில்
    ஒரு நாளும் குவாட்ட‌ர் காணாத‌வ‌ர்

  • குடிப்பார் இலாத‌ காஸ்ட்லி பார்
    குடிப்பாரி ல‌னும் கெடும்

  • குவாட்ட‌ரில் பெரிசு ஓசி குவாட்ட‌ர்
    அக்குவாட்ட‌ர் குவாட்ட‌ரில் எல்லாம் த‌லை.

  • குவாட்ட‌ருக்கு முக்கிய‌ம் ஊறுகாய்
    ம‌ற்ற‌வை யெல்லாம் நீர‌ பிற‌


  • ம‌ல‌ர்மிசை ஏகினாலும் அதிக‌ம் குடித்தார்
    ந‌டுத்தெருவில் புர‌ண்டுருள்வார்

  • த‌ன‌க்குவ‌மையில்லா ஒல்ட் மாங்க் அடித்தால‌ல்லால்
    ம‌ன‌க்க‌வ‌லை மாற்ற‌ ல‌ரிது

  • குடிக்கா நண்ப‌ன் துணை சேர்ன்தார்க்க‌ல்லால்
    மீண்டு வீடுசேர்த‌ல் அறிது


  • வ‌சை பெருங்க‌ட‌ல் நீன்துவார் நீன்தார்
    பார் சென்று சேரா த‌வ‌ர்


  • Monday, 21 July 2008

    சாரு நிவேதிதாவுக்கு சில கேள்விகள்!

    இதை படிப்பதற்கு முன், தயவு செய்து சாரு நிவேதிதா-வின் இந்த "கோணல்" பக்கத்தை படித்து விடுங்கள்.
    http://charuonline.com/july08/india.html

    அன்பின் சாரு,
    உங்கள் வலை பக்கத்தை படிக்கும் மூன்று லட்சம் பேரில் நானும் ஒருவன். உங்கள் அளவுக்கு எனக்கு உலக ஞானமோ, இலக்கிய அறிவோ கிடையாது. ஒட்டகத்தை படத்தில் மட்டுமே பார்த்திருக்கும் ஒண்ணாம் கிளாஸ் பையன் போல் எனக்கு எல்லாம் "இலக்கியம்" என்று எழுதி தான் பழக்கமே தவிர இலக்கியம் எழுதி பழக்கமில்லை. எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.

    ஆனாலும், உங்களின் இந்தியா இந்த "செத்த முளை" காரனுக்கும் சில கேள்விகள் வந்து விட்டன. எழுதுவதும், வாசிப்பதும் மட்டுமே வாழ்க்கை என்று உளமார உறுதி கூறும் நீங்கள் பதில் சொல்வீர்களா?
    1. இந்தியாவில் இனி மின்சாரமே கிடையாது, இருண்டு போய்விடும் என்று பூச்சாண்டி காட்டுகிறது காங்கிரஸ் - // இப்பொழுது சென்னையில் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் கரண்ட் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? தமிழ் நாட்டின் பல கிராமங்களில் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிலை இருப்பது உங்களுக்கு தெரியுமா? கூபாவில் மட்டும் பிரச்சினை இல்லை சாரு, தமிழ் நாட்டிலும் பல பிரச்சினைகள் உள்ளது.
    2. நம்மாழ்வார் சொல்வது - வட துருவத்திலும், தென் துருவத்திலும் பனி உருகுகிறது. // இதன் முக்கிய காரணம், பெட்ரோல் போன்ற பொருட்களே. இதாவது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் எழுப்பத்தறு சதவிதம் அனல் மின்சாரம் இதில் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா? இதை மற்ற வேண்டுமானால், மாற்று ஏறி சக்தி அவசியம். சூர்யா மின்சாரமும், மாற்ற மாற்று முயற்சிகளும் எந்த அளவு பயன் கொடுக்கும்? ஒரு மெகா வாட் சுயர மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு என்ன? அதன் சுற்று சுழால் பாதிப்புகள் என்ன? ஒரு ஊர் முழுக்க கண்ணாடி வைத்து சூர்யா மின்சாரம் தயாரித்தல் எந்த பதிப்பும் இருக்கத?
    3. தோரியம் - நீங்கள் முன் வைக்கும் தீர்வு தோரியம். அணு மின்சாரம் தயாரிக்க தோரியத்தை முதலில் பிரிக்க வேண்டும். பின்னர் செரிவுட்ட வேண்டும். இன்னும் பல வேண்டும்கள். இதற்கான தொழில் நுட்பம் இந்தியாவில் உள்ளதா?
    4. அடுத்து, சாப்ட்வேர் எஞ்சியர்கள் மீதான உங்கள் வெறுப்பு. ஒன்று சொல்லுங்கள் சாரு, எந்த வேலைக்கும் போக மறுத்து இருக்கும் நீங்கள், எப்படி வேலை செய்யும் மக்களை கேவலமாக எழுதுகிறீர்கள்? அவனவன் பிரச்சினை, அவன் பார்த்து கொள்கிறான். நீங்களே சொல்வது நீங்கள் பிச்சை காரன் என்று. ஆக, எல்லாரும் பிச்சை எடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா? இது தான் நீங்கள் சொல்லி எழுதி வரும் கலாச்சார உணர்வுடன் இருப்பதா?
    5. சாப்ட்வேர் எஞ்சியரின் சம்பளம் தான் உங்கள் பிரச்சினை என்றால், கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள். ஒரு கம்பெனி லாபம் வருவதால் தான் கொடுக்கிறார்கள். அது அரசு பணமும் அல்ல, மக்கள் பணமும் அல்ல.
    6. இந்தியாவில் வரி கட்டுபவர்களில், மாத சம்பளக்காரர்கள் அதிகம். இதாவது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் பஸ்ஸில் போவதில்லை, எங்கு போனாலும் ஆட்டோ தான். சரி, ஆனால், அந்த ஆட்டோ போகவும் ஒரு ரோடு வேண்டும். அந்த ரோடு போட பணம் வேண்டும். அந்த பணம் வரிபனத்தில் இருந்து தான் வர வேண்டும். இது என்றாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?
    7. குமாஸ்தாக்கள், கூலிகள், அடிமைகள் என்று நீங்கள் துப்பும் அந்த மக்களின் உழைப்பால் தான் நாடு நடத்த படுகிறது. கூபாவில் இருந்தோ, பாரிஸ் சில் இருந்தோ யாரும் நடத்தவில்லை.
    8. அடுத்து உங்களின் அற்புதமான ஐடியா, சாப்ட்வேர் எஞ்சினியர்களை வைத்து தோரியம் மூலம் மின்சாரம் தயாரிப்பது. ஆகா! சாப்ட்வேர் எஞ்சியரிங் பற்றி உங்களுக்கு எந்த விஷயமாவது தெரியுமா? அணு உலையின் முக்கியமன விஷயம் சாப்ட்வேர் அல்ல, அதன் செறிவூட்டும் சைக்லோத்ரன் என்றால் உங்களுக்கு புரியுமா? இது நீங்கள் சொன்ன கயஸ் தியரி - வண்ணத்து பூச்சி கதை போல் உள்ளது. வண்ணத்து பூச்சி ஆப்பிரிக்காவில் சிறகடித்தல் கேரளாவில் பூகம்பம் ஏற்படாது. கயஸ் தியரி யின் கம்ப்யூட்டர் சிமுலேஷன் வண்ணத்து பூச்சி யின் இறக்கை போல் இருப்பதால் தான் அதற்கு பட்டர் பிளை எபாக்ட் என்று பெயரே தவிர, வண்ணத்து பூச்சிக்கும், கயஸ் தியரி க்கும் எந்த தொடர்பும் இல்லை.
    9. முக்கியமான கேள்வி. நீங்கள் கொண்டாடும் கம்யுனிசம் ஆண்ட நாடுகள் எல்லாம் நாசமாய் போனது என்? பல நாடுகளில் மக்கள் புலம் பெயர்வது என்?
    10. அது சரி, சைனாவின் ராணுவ பட்ஜெட்டை நீங்கள் எப்பொழுது பார்வையிட்டீர்கள்? சொல்லவே இல்ல? கம்யுனிச செத்த மூளைகள் உங்களை எப்படி அனுமதித்தார்கள்?

    முடிந்தால் பதில் சொல்லுங்கள். சும்பனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னாலும, சரி தான்.

    Sunday, 20 July 2008

    சிபு சோரன் மீண்டும் மத்திய மந்திரி?

    இந்தியர்கள் அடிக்கடி தம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லி கொள்ளும் விஷயம் "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு". முப்பது கோடி மக்கள் முன்று தலை முறையில், நுறு கோடி ஆவதில் என்ன பெருமையோ எனக்கு தெரியாது, நிற்க, பிரச்சினை இந்தியர்களின் "பெருக்கும்" திறமை பற்றி அல்ல.

    ஆனால், இந்த "மிகப்பெரும்" ஜனநாயகத்தில் தான் சிபு சோரன் என்ற கொலை குற்றவாளி மத்திய மந்திரி ஆக முடிகிறது. மந்திரி ஆக இருந்து கொண்டே தலை மறைவும் ஆக முடிகிறது. பின்னர் மீண்டும் மந்திரி ஆக முடிகிறது.

    ஒரு நாட்டின் மந்திரி என்பவன் அந்த நாட்டின் பிரதிநிதி என்று கொண்டால், இந்தியாவின், நூறு கோடி இந்தியர்களின் பிரதிநிதி ஒரு கொலை காரன். தலை மறைவாக இருந்தவன்.
    கலாசாரத்தில் கரை கடந்தவர்கள் என்று மார் தட்டி கொள்ளும் மயி..ங்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

    இது தான் இப்படி என்றால், தா. பாண்டியன் என்று ஒரு செத்த முளை கம்யூனிஸ்ட். அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்க அவர் சொல்லும் காரணம், அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தால், பாகிஸ்தானில் புகுந்து தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்கிறார். அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் நுழைவதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அதனால் நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்கிறோம்.

    ஆகா, இப்படி ஒரு அருமையான விளக்கம் செத்த முளை காரன் களால் தான் சொல்ல முடியும்! சைனாவில் இருந்து அதிக பிரஷர், அதனால் தான் என்று இந்த செத்த மூளையாழ் சொல்ல முடியுமா?

    இது தான் இப்படி என்றால், முன்றாவது அணி என்று ஒரு நாதாரிகளின் அணி. காங்கிரசை கவிழ்த்து விட்டு இவர்கள் முன் வைப்பது பிரதமராக மாயாவதி!. இந்த அணியின் முற்கால சாதனை, தேவ கவுடா என்ற ஒரு மோசடியை பிரதமராக ஆக்கியது!

    கொலை காரங்களும், கொள்ளை காரிகளும் மந்திரிகளாகவும், முதல்வர்களாகவும் இருக்கும் ஒரு ஜன நாயகத்தில் என்ன பெருமை என்று ஒரு இழாவும் எனக்கு புரியவில்லை.

    சரி, போகட்டும். ஜன நாயகம் ஜன நாயகம் என்று மாரையும் மற்றவைகளையும் தட்டி கொள்ளும் ஜன நாயகத்தில் மக்கள் நிலை தான் எப்படி இருக்கிறது? ஜெயாவை விமர்சித்தல் ஆட்டோ வருகிறது. ஆடிடோருக்கு செருப்படி விழுகிறது. அழகிரியை விமர்சித்தல் பத்திரிக்கை ஆபீஸ் தீப்பிடிக்கிறது. கருணாநிதியை விமர்சித்தல், வேண்டாம், அவர் உடனடியாக ஆரிய சதி என்று குக்குரல் இடுவார்.

    கொலைகாரன் களையும், கொல்லைகரிகளையும் அதிகாரத்தில் வைத்து இருக்கும் இந்திய ஜனாயகம் ஒரு பெருமையா?

    வெளியே சொல்லாதீர்கள் . சூத்தால் சிரிப்பார்கள்!

    மீனவர் கொலை - கருணாநிதியின் அடுத்த மோசடி!

    காலம் காலமாக சுட்டு கொள்ளப்படும் மீனவர் பிரச்சினை இப்பொழுது த்தான் கருணாநிதியின் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. உடனடியாக இதை திஇர்க்க முடிவெடுத்தார். எப்படி? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம். இனி, இலங்கை இராணுவம் தமிழ் மீனவர்களை கொன்று குவிக்காது. இந்திய அரசு உடனடியாக இதற்கு ஒரு முற்று புள்ளி வைத்து விடும். எல்லாம் ஏமாந்த தமிழின் கனவில்!

    குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வேண்டும் என்றால், உடனடியாக டெல்லி பறக்கும் கருணா, இதற்கு கடிதம் எழுதுகிறார். வேண்டுகோள் வைக்கிறார். நான்காவது முறையாக முதல்வர் ஆக இருக்கும் கருணாநிதி இதற்கு முன் செய்தது என்ன? 1970களில கச்ச தீவு இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டது. சரி! அதற்கு பின் பல முறை முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கும்(!) கருணாநிதியும், ஜெயாவும் செய்தது தான் என்ன? மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதும், அதற்கு இவர்கள் ஏதோ பிச்சை காசை நிவாரணம் என்று விட்டேரிவதும் தான்!
    இதற்கு நிரந்தர தீர்வாக கச்ச தீவை மீட்க கருணா முயற்சி எடுப்பாரா? மாட்டார். ஏனெனில், அது மத்திய மந்திரி பதவிகளுக்கு ஆபத்தாக முடியும். அவருக்கு பதவி தான் முக்குயமே ஒழிய, எவன் எப்படி செத்தால் என்ன? எவன் குடும்பம் சொத்துக்கு வழியில்லாமல் நாசமாய் போனால் என்ன? தன் குடும்பத்தில் எல்லாரும் மந்திரி பதவியுடன் இருந்தால் போதும்.
    இருக்கட்டும். ஆனால், இப்படி அடிக்கடி நாடகம் நடத்தி தமிழ்ர்களை முட்டாள் ஆக்க முயற்சிக்க வேண்டுமா?
    இதுவும் கூட விஜயகாந்த் போராடிய பின், மீனவர்கள் போராட்டம் அறிவித்த பின்!

    நடத்துங்கள் உங்கள் நாடகங்களை. தமிழ் மக்களை முட்டாளாக நினைக்கும் உங்களையும் உங்கள் கோஷ்டி, குடும்பத்தையும் தமிழ்ர்கள் முட்டாளாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?