Sunday 11 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்! -7

மீண்டும் அதே கோயம்புத்தூர்....அதே சாய்பாபா காலனி..அழும்

குழந்தைகள்...சிரிப்புடன்...சிந்தனையுடன்...சுடிதார்...சேலை...சில ஜீன்ஸ் பெண்கள்...வயது வித்தியாசமில்லாமல் ஜீன்ஸ் ஆண்கள்...வித்தியாசமாய் சில வேட்டிகள்....இட்லி...தோசை...பூரி...உப்புமா...பொங்கல்...ஃபுல் மீல்ஸ்...அதே அன்னபூர்ணா...அதே அழுத்தமான காஃபியின் வாசம்...எதுவும் மாறவில்லை...சிரிப்பிற்கும் அழுகைக்கும் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அர்த்தம் இன்றி காலதேவனின் நடனம் நடந்து கொண்டே இருக்கிறது...குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்....இன்றைக்கு ஒரே வித்தியாசம் அன்னபூர்ணா தவிர வெளியே மற்ற இடங்கள் இருண்டிருக்கிறது...ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் பிரச்சினை...சாய்பாபா காலனி, பாப்பாநாயக்கன் பாளையம், லட்சுமி மில்.. காந்திபுரம்...எல்லா இடங்களும் இருட்டில்....

ஊசியாய் குத்தும் மார்கழி மாத ஈரக்காற்றும்...கண்ணில் அப்பிய கருமை போல இருட்டும்...இருட்டும் ஊசியும் வெளியே மட்டுமா....

சிவராமன் கல்பனாவை வெறித்துக் கொண்டிருந்தான்...

எத்தனை பேச்சு...எத்தனை சிரிப்பு...விளையாட்டாய் எத்தனை பொய்கள்...ஏன்டா எனக்கு காஃபி சொன்ன...நீயே குடி...தான் தின்னி...நீ தான காஃபி கேட்ட...அது அப்போ...எனக்கு இப்ப காஃபி வேணாம்...ஐஸ் க்ரீம் வேணும்...இதே அன்னபூர்ணாவில் பொய்யாய் எத்தனை சண்டைகள்...சிவா...உனக்கு பையன் வேணுமா இல்ல பொண்ணு வேணுமா...வேணாம் நீ சொல்லாத...எனக்கு பொண்ணு தான் வேணும்...சானியா மீர்ஸா மாதிரி டென்னிஸ்ல பெரிய ஆளாக்கணும்...அப்புறம் பர்த் டே எல்லாம் ரெஸ்டென்ஸில தான் கொண்டாடணும்...ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்......அதென்ன ஸான்ஸ்க்ரிட்டும் ஸ்பானிஷும்....அதெல்லாம் கேக்காத....எனக்கு பிடிச்சதை என் பொண்ணுக்கு சொல்லிக் குடுப்பேன்...உனெக்கென்ன...நீ ஹோட்டலை பார்த்துட்டு இரு...

இதே கல்பனா பேசியது....எது உண்மை...எது பொய்...உண்மையில் உண்மை என்ற ஒன்று உண்டா...அன்று உண்மை...இன்று இல்லை...நிஜம் நிறம் மாறுமா...நிறம் மாறினால் அது நிஜமாகுமா...

"காஃபி ஆறுது கல்பனா..."

"ம்ம்ம்....."

கல்பனா....இந்த ஏழு வருடத்தில் சிவராமன் கல்பனா என்று சொல்லியதே இல்லை....கல்பா....

"சொல்லு கல்பனா...கல்யாணத்தை நிறுத்தணும்னு சொன்ன....ஆனா வந்ததில இருந்து எதுவும் பேசமாட்டேங்கற..."

கல்பனா சிவராமனை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...குரல் தடுமாறியது....

"ஸாரி சிவா...."...

"ஸாரி...எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா....எதுக்கு இந்த ஸாரி..."

கல்பனாவின் அழகிய முகம் அழுவது போல் மாறியது....உதட்டை கடித்துக் கொண்டாள்....

"நீ நம்ப மாட்ட...ஆனா நிஜமாவே ஸாரி சிவா...எங்க அப்பா கெஞ்சினாரு...உனக்கு பின்னாடி ரெண்டு தங்கச்சிங்க...நித்யாவையும் நந்தினியையும் நினைச்சி பாரு....எனக்கு ஹெல்ப் பண்ணுன்னு கெஞ்சினாரு...அதான்....நான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்....ஆனா...என்னால....நீ....உனக்கு த்ரோகம் பண்ண முடியாது சிவா...கில்ட்டி ஃபீலிங்...வேணாம்....என்னால மகேஷை கல்யாணம் செஞ்சிக்க முடியாது...ப்ளீஸ்...நான் மகேஷ் கிட்ட பேசிக்கிறேன்...நீ மட்டும் என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு...இந்த மேரேஜை நிறுத்தனும்...."

சிவராமனுக்குள் ஏதோ புரண்டது....

எத்தனை நாள் கனவு...இந்த கைப்பிடிக்க எத்தனை நாள்....

"கல்பனா....இல்ல....கல்பா...என்னால உன்னை வெறுக்க முடியாது கல்பா....இன்னைக்கி இல்ல...என்னைக்கும்...நீ என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும்....ஸிம்பிள்...அன்ட் ஸ்ட்ரைட்...ஐ லவ் யூ...ஐ லவ் மை கல்பா...."

கல்பனா இதை எதிர்பார்க்கவில்லை...இத்தனை லவ்வா....நான் என்ன சொன்னாலும் உன்னால் சகிக்க முடியுமா...கடவுளே...உன்னை காயப்படுத்திவிட்டேன்...ஸாரிடா....ஐ லவ் யூ...லவ் யூ ஸோ மச்.......இனிமே பாரு....லவ்வுன்னா என்னன்னு உனக்கு காட்டுரேன்...இந்த மேரேஜ் மட்டும் நிக்கட்டும்....இந்த கல்பா எப்படி லவ் பண்றேன்னு உனக்கு காட்டுறேன்....அப்படி ஒரு லவ் நீ எங்கயும் பார்க்க மாட்ட...

கல்பனாவின் முகம் பிரகாசமானது....

"தேங்க்ஸ் சிவா...ஐ லவ் யூ டூ....லவ் யூ ஸோ மச்..."

கல்பனாவின் கைகள் சிவராமனின் கைகளை இறுக்க பற்றி கொண்டன...

=================================

இந்த வியர்வை....வியர்வை வெறுப்பானது என்று சொன்னவன் எவன்....காதலில் இதயம் வியர்க்கும் போது வெறுப்பவன் எவன்....இதயத்தின் வியர்வை காதல்.....உதடுகளின் துடிப்பு காதல்....கேசத்தின் அலைதல் காதல்...கைகளின் இறுக்கம் காதல்....இந்த ஸ்பரிசம்....இந்த ஸ்பரிசத்திற்காக எத்தனை நாள் தவமிருந்தேன் கல்பா....உன் மென்மையான இந்த கைகளை இப்படி இறுக்கி பிடிக்க எத்தனை நாள்....எத்தனை இரவுகள்....காலங்களை கணக்கெடுத்தால் கால தேவனின் கணக்கு புத்தகம் நிரம்பி விடும்...காலம்.....காலம்....கல்லால் மண்ணால் ஆன கோட்டைகளை மட்டும் அது சிதைக்கவில்லை....வாளும் வேலும் கொண்ட பேரரசுகள் மட்டும் மண்ணாகவில்லை....கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை....மண்ணான மனக் கோட்டைகள் கால தேவனுக்கே மறந்து போயிருக்கும்....

"ஆனா கல்பா...."

கல்பனாவின் கைகள் சிவராமனை மேலும் இறுக்கியது...

"என்ன ஆனா...."

சிவராமன் ஆறிப் போய் கொண்டிருந்த காஃபியை வெறித்தான்....

"உனக்கு நிஜமாவே அந்த மகேஷை பிடிச்சிருக்கு....உண்மையா இல்லியா....உனக்கு கில்ட்டி ஃபீலிங் கல்பனா....சிவராமன் கிட்ட ப்ராமிஸ் செஞ்சோமே.....இப்ப மகேஷை மேரேஜ் பண்ணிக்கிட்டா உறுத்துமேன்னு கவலை....நான் உண்மையை சொல்லட்டுமா...நீ லவ் பண்றது மகேஷை தான்....சிவராமனை இல்ல....எனக்கு தெரியல‌ கல்பா....என் கிட்ட என்ன தப்புன்னு தெரியல....எப்படி அமெரிக்கா போறதுன்னு தெரியல...எப்படி பணம் சேர்க்கிறதுன்னு தெரியல....ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்....எப்ப முடியும்னு தெரியலை...ஆனா....இன்னைக்கு....இன்னி தேதிக்கு....என்னால அமெரிக்க மகேஷோட போட்டி போட முடியலை...முடியாது...இப்ப முடியாது...."

கல்பனாவின் முகம் வெளிறியது....

"சிவா...ப்ளீஸ்....புரிஞ்சிக்கயேன்.....இந்த பொண்ணு பார்க்கிறதையே நான் ஒத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.....ஆனா நீ சரின்னு சொன்னியே....அப்புறம் தான ஒத்துக்கிட்டேன்....சரி....நான் தப்பு...தப்பு பண்ணிட்டேன்....கொஞ்சம் யோசிச்சி பாரு சிவா....நீ என்னை நெஜமாவே ஹேட் பண்றியா....கல்பா இல்லாம உன்னால முடியுமா...நீ என்னை லவ் பண்ணவே இல்லியா..."

சந்தோஷத்தில் மட்டும் தான் சிரிக்க முடியும் என்று சொன்னது யார்?? மரணத்திலும் சிரித்த மனிதர்கள் இருக்கிறார்கள்.....கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல....

சிவராமன் சிரித்தான்.....

"இல்ல கல்பா...முடியாது....ஒரு வேளை அடுத்த ஜென்மத்துல முடியுமோ என்னவோ....ஆனா இந்த ஜென்மத்துல என்னால கல்பாவை வெறுக்க முடியாது....ஏன்னா நான் லவ் பண்றேன்....கல்பாவை லவ் பண்றேன்...இன்னிக்கும்....ஆனா....நான் லவ் பண்ண கல்பா என்னை லவ் பண்ணலை...அவளுக்கு மகேஷை பிடிச்சிருக்கு....அப்ப நான் என்ன செய்ய....விலகிடணும் இல்லியா....ஏன்னா அது தான் லவ்....உனக்கு லவ்வுன்னா என்னன்னு தெரியுமா கல்பா....காதலுக்காக காதலை துறத்தல்....நல்லா இரு கல்பனா.....மறந்துடு..மகேஷை கல்யாணம் செஞ்சிக்க....அமெரிக்கா போ...உன்னோட ஸிஸ்டர்ஸ்க்கு ஹெல்ப் பண்ணு....உனக்கு டாட்டர் தான பிடிக்கும்....அழகா பெத்துக்க....டென்னிஸ் கத்துக்குடு...சானியா மீர்ஸா என்ன...வீனஸ் வில்லியம்ஸ்...செரீனா வில்லியம்ஸ் மாதிரி ஆக்கு....ஸ்பானிஷ்...ஸான்ஸ்க்ரிட் கத்துக்குடு....சிவராமன்....ம்ம்ம்.....அழுக்கு ஜீன்ஸ்...பழைய ஓட்டு வீடு...இட்லி தோசை பூரி பொங்கல்....எங்கயோ பாப்பநாயக்கன் பாளையத்துல மெஸ் நடத்துற ஒருத்தன்...ஒரு வகையில உறவு முறை...மத்தபடி யார் அவன்....ஒரு பேட் எபிசோட்...கெட்ட கனவு....மறந்துடு கல்பா...முடியும்....உன்னால முடியும்...."

சிவராமனை இறுக்க பிடித்திருந்த கல்பனாவின் கைகள் அன்னபூர்ணாவின் ஏசியிலும் கல்பனாவுக்கு வியர்த்திருந்தது....

"சிவா....நீ ரொம்ப டென்ஷனாயிருக்க....ப்ளீஸ்....எனக்காக...கொஞ்சம் புரிஞ்சிக்கயேன்...."

"இல்ல கல்பா....எனக்கு புரியுது....என்ன கொஞ்சம்... இல்ல‌ இல்ல...ரொம்ப ரொம்ப லேட்...நான் கல்பனாவை லவ் பண்ணது, பண்றது எவ்வளவு உண்மையோ அதே அளவு கல்பனா சிவராமனை லவ் பண்ணலைங்கிறதும் உண்மை...."

சிவராமன் எழுந்திருந்தான்....

"சிவா...என்னை விட்டுட்டு போறியா...."

"ஆமா கல்பனா...எனக்கு வேற வேலையிருக்கு....மெஸ்ஸுக்கு போணும்....கணக்கு பார்க்கணும்....நாளைக்கு மெஸ் திறக்க எல்லாம் ரெடியா இருக்கான்னு செக் பண்ணனும்....மெஸ் நடத்திறது பேங்க் வேலை மாதிரி இல்ல கல்பனா....எல்லாம் நான் தான் செய்யணும்...."

"சிவா.....அது வந்து...."

"வேணாம் கல்பனா....நீ எதுவும் சொல்ல வேணாம்....கல்யாண பொண்ணு....எதுக்கு கஷ்டப்படுற...."

"நீ என் கல்யாணத்துக்கு வருவியா சிவா....."

எழுந்திருந்த சிவராமன் நின்றான்.....

"இல்ல....முடியாது....என்னால முடியாது....அம்மாவையும் மாலதியையும் அனுப்பலாம்......ஆனா மாலதிக்கு நம்ம விஷயம் எல்லாம் தெரியும்....அவ வர மாட்டா....அம்மா மட்டும் வருவாங்க....கடைசியா ஒண்ணு....ஏழு வருஷ பழக்கத்தில....உனக்கு ப்ளஸ்டூல மேத்ஸ் சொல்லிக் கொடுத்தவங்கிற முறைல கேக்குறேன்....எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிவியா கல்பா...."

"என்ன சிவா இது...."

"செய்றேன்னு சொல்லு....."

"சரி செய்றேன்...என்ன ஹெல்ப்..."

"ரொம்ப பெரிசு இல்ல....இனிமே எனக்கு ஃபோன் செய்யாத....மகேஷுக்கு அது பிடிக்காது.....பதிலுக்கு....என்னால....ம்ம்ம்...இந்த மெஸ்க்காரன் என்ன தரமுடியும்.... எதுவும் தர முடியாது.....ஆனா என்னோட வாழ்த்துக்கள்....ஹாப்பி மேரீட் லைஃப் மிஸஸ் கல்பனா மகேஸ்வரன்...."

கல்பனாவின் பதிலுக்கு காத்திராமல் சிவராமன் வெளியேறினான்....அவனைச் சுற்றிலும் மார்கழி மாத இருள் சூழ்ந்தது.....

==========================

"கதை அவ்ளோ தான் மாதி...." என்றது வேதாளம்...

"ஏய்யப்பா...எவ்ளோ பெரிய கதை....ஆனா பாவம் சிவராமன்...கடைசில அவன் லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சே...."

"ம்ம்ம்க்கும்....இதை சொல்லத் தான் உன்ன இவ்ளோ செலவு பண்ணி கடத்திட்டு வந்தாங்களாக்கும்....எனக்கு வேற டவுட்டு...."

"என்னது....செலவு பண்ணி கடத்திட்டு வந்தியா....ஒரு ஒடைஞ்சி போன ஃபோர்டு ஃபியஸ்டா காரு....அழுக்கு கோட்டு....இதுக்கு பேரு செலவா....."

"அய்யய்ய....ஓன்னோட பெரிய கதையா போச்சி....அதை விடு....எனக்கு இப்ப ஒரு உண்ம தெரிஞ்சாகனும்...."

"ஆமா....இவரு பெரிய பராக் ஓபாமா...இவருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்....சரி சொல்லு....என்னது அது....."

"சிவராமனை காதலிப்பதாக சொன்ன கல்பனா மகேஷை பிடிச்சிருக்குன்னு சொன்னது சரியா? அப்படி சொன்னாலும் அவள் சூழ்நிலையின் காரணமாகவே சொல்ல நேரிடுகிறது...பின்னர் அவள் தன் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கிறாள்...ஆனாலும் சிவராமன் அவளை புறக்கணிக்கிறான்....சிவராமன் செய்தது சரியா? இது தான் எத்தனை பெண்களை வேன்டுமானாலும் காதலிக்கலாம், மனைவி, துணைவி என்று முத்தமிழ் வித்தகனாக விளக்கம் கொடுக்கலாம் ஆனால் ஒரு பெண் மனதாலும் மற்றவனை நினைக்கக் கூடாது என்ற ‌ திமிர் பிடித்த ஆணாதிக்க மனோபாவம் அல்லவா?....மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."

====நாட்டாமை மாதித்தனின் தீர்ப்பு அடுத்த அத்தியாத்தில் ==========

26 comments:

அது சரி(18185106603874041862) said...

Jesus Christ....half an hour to write the episode...one hour to format...Internet Explorer explorer is the mother of all shit! Microsoft sucks big time....

அது சரி(18185106603874041862) said...

ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பின்னூட்டம் போட்டா என்ன தப்பு?? இதையெல்லாம் கயமைத் தனம்னு எவன் சொன்னது???

கலகலப்ரியா said...

//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//

இது இது இதுதான் அதுசரி டச்..

//ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்//

அர்ர்ர்... முதல் இடுகைப் பின்னூட்டத்ல சொன்ன ஸ்பானிஷ்க்கும் இதுக்கும் எதாவது கனெக்சன் இருக்குதுங்களா..

//எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா...//

சபாஷ்.. நல்லா கேக்குறாய்ங்கப்பா ...

//கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை//
அவ்வ்வ்வ்வ்... :(((..

//கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல.... //

என்னையும் போல..

//"கதை அவ்ளோ தான் மாதி...//

இன்னது.. விளையாடுறீங்களா.. நாட்டாமை என்ன முடிவு சொல்லுறாரோ.. அதுக்குள்ளார தலைய சீவிப்டுவேன்.. ஒழுங்கா தீர்ப்ப.. ச்சே கதைய மாத்தி சொல்லுங்க.. மாதி.. :((

கலகலப்ரியா said...

//மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் //

நான் இதுக்காக ஒரு இடுகை போட வேண்டி வரும்.. =))

dondu(#11168674346665545885) said...

கல்பனாவை உண்மையாக காதலிக்கும் சிவராமன் அவளது ஆழ்மனதை புரிந்து கொண்டான். ஒரு குழந்தை மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் மனம் மாறும் கல்பனாவும் அவனுக்கு தேவை இல்லைதான்.

அவர்கள் பிரிவதே இருவருக்கும் நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//

இது இது இதுதான் அதுசரி டச்..

//

அது இன்னா டச்சோ...நமக்கு பிரியலீங்க...

//

//ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஸ்பானிஷும் ஸான்ஸ்க்ரிட்டும் சொல்லி கொடுக்கணும்//

அர்ர்ர்... முதல் இடுகைப் பின்னூட்டத்ல சொன்ன ஸ்பானிஷ்க்கும் இதுக்கும் எதாவது கனெக்சன் இருக்குதுங்களா..
//

இருக்கு....இல்ல....அதை விடுங்க...இது கல்பனா சிவராமன் பிரச்சினை...நமக்கு என்ன...:0))

//

//எதுக்கு ஸாரி கல்பனா...என் கூட பழகினதுக்கா....இல்ல அந்த மகேஷை பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியே அதுக்கா...//

சபாஷ்.. நல்லா கேக்குறாய்ங்கப்பா ...
//

ஆமா...சிவராமன்களுக்கெல்லாம் கேள்வி கேக்கத் தான் தெரியும்...பதில் சொல்லி பழக்கம் இல்ல...தருமி பரம்பரை :)))

//

//கால தேவனின் கரங்கள் உடைத்த காதல் கோட்டைகள் கணக்கில் இல்லை//
அவ்வ்வ்வ்வ்... :(((..

//

இந்த அவ்வ்வ்வ் எதுக்குன்னு புரியலியே...

//
//கடும் கோபத்திலும் துக்கத்திலும் சிரிக்க முடியும்....சிதம்பரம் நடராஜர் போல.... //

என்னையும் போல..
//

ரெளத்ரம் பழகும் தீவிரவாதின்னு மனசுல வந்துச்சி...வேணாம்னு விட்டுட்டேன்....

//

//"கதை அவ்ளோ தான் மாதி...//

இன்னது.. விளையாடுறீங்களா.. நாட்டாமை என்ன முடிவு சொல்லுறாரோ.. அதுக்குள்ளார தலைய சீவிப்டுவேன்.. ஒழுங்கா தீர்ப்ப.. ச்சே கதைய மாத்தி சொல்லுங்க.. மாதி.. :((

//

என்னது....கதையை இன்னும் இழுக்கறதா....என்னடா இன்னும் செங்கல் வரலியேன்னு நானே சந்தோஷத்துல இருக்கேன்...இதுக்கு மேல இழுத்தா செங்கல் என்ன....கருங்கல்லே வரும்....ஏற்கனவே குடுகுடுப்பையார் ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...

அப்புறம் ஒரு சின்ன திருத்தம்...கதையை சொல்றது மாதித்தன் இல்ல...வேதாளம்....

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் //

நான் இதுக்காக ஒரு இடுகை போட வேண்டி வரும்.. =))

//

ஆஹா...மாதித்தன் எப்படியும் வேண்டா வெறுப்பா தான் பதில் சொல்ல போறான்....அவனுக்கு பதிலா யார்னா விடை சொன்னா நல்லா தான் இருக்கும்...ட்ரை செய்ங்க ப்ரியா...மாதி உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பான்....அப்படியே வேதாளமும்....:0)))

(ஆனா ஒரு ச்சின்ன ப்ராப்ளம்...வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!)

அது சரி(18185106603874041862) said...

//
dondu(#11168674346665545885) said...
கல்பனாவை உண்மையாக காதலிக்கும் சிவராமன் அவளது ஆழ்மனதை புரிந்து கொண்டான். ஒரு குழந்தை மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் மனம் மாறும் கல்பனாவும் அவனுக்கு தேவை இல்லைதான்.

அவர்கள் பிரிவதே இருவருக்கும் நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

//

அட....டோண்டு சார்...நீங்கள்லாம் இதை படிக்கிறீங்கன்னு வேதாளத்துக்கு தெரியாது....தெரிஞ்சா அது சொல்ற கதையை கேக்குறதுக்கு இத்தினி பேரான்னு சந்தோஷப்படும்....

அப்புறம்...நீங்க சொல்ற தீர்ப்பும் நல்லாத் தான் இருக்கு....ஆனா நாட்டமை மாதி என்ன தீர்ப்பு சொல்றாருன்னு தெரியலியே....:0)))

கலகலப்ரியா said...

//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...//

உங்க பயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க.. தினமலர் நியூஸ் எல்லாம் நம்பிக்கிட்டு..

//அப்புறம் ஒரு சின்ன திருத்தம்...கதையை சொல்றது மாதித்தன் இல்ல...வேதாளம்....//

அட நீங்க வேற.. தீர்ப்பு சொல்ல போறது மாதி தானுங்களே.. அது தீர்ப்போ கதையோ.. அவிங்கதான் சொல்லணும்..

//ரெளத்ரம் பழகும் தீவிரவாதின்னு மனசுல வந்துச்சி...வேணாம்னு விட்டுட்டேன்....//

ஆமாம் அதான் எனக்கும் கண்ணுக்கு தெரியல..

//வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!//

இதில ஒரு சின்ன திருத்தம்.. இந்த ஜாக்கிரதைய வேதாளம் கிட்ட சொல்லுங்க.. ஹிஹி.. நம்மள கடத்தினா வேதாளமோ.. வெண்குரங்கோ.. அவிங்களுக்குதான் ஆபத்து..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய சொல்லி அவங்க பதிலைக் கேட்டேன். அவங்க பதில்.

சிவராமன் செய்தது சரியே: இந்தக் கதையின் போக்கில் சிவராமன் கல்பனாவைக் காதலித்திருக்கிறானே ஒழிய, கல்பாவுக்கு சிவா மேல் இருந்தது அத்தை மகன் என்ற பாசம் தானே ஒழிய காதலில்லை. அப்படி காதல் இருந்திருந்தால் அவள் மகேசை பிடித்திருப்பதாக சொல்லியிருக்க மாட்டாள். சிவராமன் அவளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பதால்தான் அவள் தன்னைவிட மகேசை மிகவும் விரும்பியிருக்கிறாள் என்று கண்டுகொள்கிறான். அவன் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனாக இருந்திருந்தால் கல்பா இன்னொருவனை மணக்க சம்மதித்துவிட்டாள் என்ற போதே அவளை மறந்து வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பான்.
கல்பனா மகேசை திருமணம் செய்ய சம்மதித்தது தவறே: அவள் அப்படி சம்மதம் தெரிவிக்கும் முன் அவளுக்கும் சிவராமனுக்கும் இருக்கும் காதலை (அல்லது பிரியத்தை) மகேசிடமும், மகேசைப் பிடித்திருப்பதை சிவாவிடமும் சொல்லி, தன் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவள் செய்தது சுயநலமே.

சத்தியமா நான் இப்பிடி நினைக்கவே இல்லிங்க. எங்க தங்கமணி நிறைய படிக்க மாட்டாங்க. ஆன திடீர்னு தீர்ப்பு எல்லாம் கலக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். (நானும் எப்பிடியாவது அவங்களை பதிவுலகத்துக்கு கூட்டிய்ந்துறனும்னு பாக்குறேன். ம்ஹூம். நகட்ட முடிய மாட்டேங்குது)

vasu balaji said...

வழக்கு தீர்ப்பாகாத நிலையில் கருத்துச் சொல்லுவது சட்டப்படி குற்றம் என்பதால் கருத்து தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

மங்களூர் சிவா said...

/
உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."
/
:))))))))))))))

இருவரின் முடிவும் practical thats it.

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//ஒரு லோடு கருங்கல்லுக்கு ஆர்டர் பண்ணியிருக்கதா நியூஸ் வந்துச்சி...//

உங்க பயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சுங்க.. தினமலர் நியூஸ் எல்லாம் நம்பிக்கிட்டு..
//

ஆஹா..அந்த கருங்கல் மேட்டர் தினமலர்ல வந்துருச்சா...அவய்ங்க உண்மையை தவிர வேற எதுவும் போட மாட்டாய்ங்களே...எனக்கு பீதியா இருக்கு....:0))

//

//வேதாளம் அடுத்த கதைக்கு உங்களை கடத்தி விடை சொல்ல வைக்கலாம்...ஜாக்கிரதை!//

இதில ஒரு சின்ன திருத்தம்.. இந்த ஜாக்கிரதைய வேதாளம் கிட்ட சொல்லுங்க.. ஹிஹி.. நம்மள கடத்தினா வேதாளமோ.. வெண்குரங்கோ.. அவிங்களுக்குதான் ஆபத்து..

//

அப்ப ரைட்டு...எனக்கென்ன வந்துச்சி...உங்க பாடு வேதாளம் பாடு...நீங்க சந்திரமுகிய பார்த்திருக்கீங்க....ஆனா உங்களுக்கு வேதாளம் பத்தி தெரியாது...மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
நம்ம தங்கமணிக்கிட்ட இந்த கதைய சொல்லி அவங்க பதிலைக் கேட்டேன். அவங்க பதில்.

சிவராமன் செய்தது சரியே: இந்தக் கதையின் போக்கில் சிவராமன் கல்பனாவைக் காதலித்திருக்கிறானே ஒழிய, கல்பாவுக்கு சிவா மேல் இருந்தது அத்தை மகன் என்ற பாசம் தானே ஒழிய காதலில்லை. அப்படி காதல் இருந்திருந்தால் அவள் மகேசை பிடித்திருப்பதாக சொல்லியிருக்க மாட்டாள். சிவராமன் அவளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பதால்தான் அவள் தன்னைவிட மகேசை மிகவும் விரும்பியிருக்கிறாள் என்று கண்டுகொள்கிறான். அவன் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனாக இருந்திருந்தால் கல்பா இன்னொருவனை மணக்க சம்மதித்துவிட்டாள் என்ற போதே அவளை மறந்து வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பான்.
கல்பனா மகேசை திருமணம் செய்ய சம்மதித்தது தவறே: அவள் அப்படி சம்மதம் தெரிவிக்கும் முன் அவளுக்கும் சிவராமனுக்கும் இருக்கும் காதலை (அல்லது பிரியத்தை) மகேசிடமும், மகேசைப் பிடித்திருப்பதை சிவாவிடமும் சொல்லி, தன் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அவள் செய்தது சுயநலமே.

சத்தியமா நான் இப்பிடி நினைக்கவே இல்லிங்க. எங்க தங்கமணி நிறைய படிக்க மாட்டாங்க. ஆன திடீர்னு தீர்ப்பு எல்லாம் கலக்கிடுவாங்க. அவங்களைப் பத்தி ஒரு தனி பதிவே போடலாம். (நானும் எப்பிடியாவது அவங்களை பதிவுலகத்துக்கு கூட்டிய்ந்துறனும்னு பாக்குறேன். ம்ஹூம். நகட்ட முடிய மாட்டேங்குது)

//

அடேங்கப்பா...விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி முகிலன்...உங்க மிஸஸ் சொல்லி இருக்கது எல்லாம் சரியான பாய்ண்ட்...ஆனா பாருங்க...நாட்டாமை விக்ரமாதித்தன் கொஞ்சம் வில்லங்கமான ஆளு....போதைல ஒரு தீர்ப்பு சொல்லிட்டு தெளிஞ்சதும் "நாட்ட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு" தானே போராட்டம் பண்ற டைப்பு....ம்ம்ம்....என்ன சொல்றான்னு நானும் பார்க்கிறேன்...:0))

(அப்படியே உங்க மிஸஸையும் எழுத சொல்லலாமே..எழுதுங்கப்பா...)

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
வழக்கு தீர்ப்பாகாத நிலையில் கருத்துச் சொல்லுவது சட்டப்படி குற்றம் என்பதால் கருத்து தீர்ப்புக்கு காத்திருக்கிறது.

//

வானம்பாடிகள் ஸார்,

இப்பிடியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது...இங்க என்ன சுப்ரீம் கோர்ட்டா நடந்துக்கிட்டு இருக்கு...கட்ட பஞ்சாயத்து சார்...கட்ட பஞ்சாயத்து....நாலு பேரு நாலு விதமா பேசினா தான நாட்டமை ஒட்டுக் கேட்டு ஒரு முடிவுக்கு வரமுடியும்?? :0))

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
/
உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."
/
:))))))))))))))

இருவரின் முடிவும் practical thats it.

//

வாங்க சிவாண்ணே...

ரெண்டு பேரு முடிவும் ப்ராக்டிகல்னு கேசை முடிச்சிருவீங்க போலருக்கே...இப்படியெல்லாம் நாட்டாமை பொழைப்பை கெடுக்கப்படாது...:0)))

கலகலப்ரியா said...

//மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!//

அடேங்கப்பா..! மில்லியன் தலை தாங்கிய வில்லியன் போல..! பார்க்கலாம் ஒரு தலை.. :-s

vasu balaji said...

சிவராமனுக்கு காதல் இருக்கலாம் புரிதல் இல்லை. கல்பனா காதலித்தது சிவராமனை. சம்மதம் சொன்னதற்கு காரணம் தங்கைகளை நினைத்தாக இருக்கலாம். கல்பனா மகேசிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.
(சாட்சி: நிலம் நோக்குவது முகத்தை மறைப்பதற்காக இருக்கலாம். சம்மதம் சொல்லும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. குழப்பம் இருந்திருக்கலாம்.) பிறகு காதலின் ஆழம் அதன் தாக்கம் அதற்கு மிஞ்சி எதுவும் முக்கியமில்லை என்ற தீர்மானம், சிவராமனை மறக்க முடியாது என்று புரிய வைத்தது. சிவராமனுக்கு காதல் இருந்திருக்கலாம். காதல் புரியவில்லை. ஆணாதிக்கமா? கோபமா? இது அவுட் ஆஃப் சிலபஸ்.

குடுகுடுப்பை said...

இதுல எனக்கு ஒரு கர்த்தும் இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//மோசமானவய்ங்கள்ல முக்கியாமானவய்ங்களுக்கு தல அது!//

அடேங்கப்பா..! மில்லியன் தலை தாங்கிய வில்லியன் போல..! பார்க்கலாம் ஒரு தலை.. :-s

//

ம்ம்ம்...சொன்னா நீங்க கேக்கிற மாதிரி இல்ல....வேதாளத்துக்கு இன்ஃபார்ம் செய்யறேன்...என்ன பண்ணுதுன்னு பார்க்கலாம்....:0))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
சிவராமனுக்கு காதல் இருக்கலாம் புரிதல் இல்லை. கல்பனா காதலித்தது சிவராமனை. சம்மதம் சொன்னதற்கு காரணம் தங்கைகளை நினைத்தாக இருக்கலாம். கல்பனா மகேசிடம் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.
(சாட்சி: நிலம் நோக்குவது முகத்தை மறைப்பதற்காக இருக்கலாம். சம்மதம் சொல்லும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. குழப்பம் இருந்திருக்கலாம்.) பிறகு காதலின் ஆழம் அதன் தாக்கம் அதற்கு மிஞ்சி எதுவும் முக்கியமில்லை என்ற தீர்மானம், சிவராமனை மறக்க முடியாது என்று புரிய வைத்தது. சிவராமனுக்கு காதல் இருந்திருக்கலாம். காதல் புரியவில்லை. ஆணாதிக்கமா? கோபமா? இது அவுட் ஆஃப் சிலபஸ்.

//

நன்றி வானம்பாடிகள் ஸார்...

உங்களையும் சேத்து நாலு பேர் நாலு விதமா சொல்லிருக்காங்க...:0))

மாதித்தன் தீர்ப்பு நகல் இப்ப தான் கிடைச்சுது....அடுத்த எபிசோட் எழுதிட்டேன்...படிச்சிட்டு சொல்லுங்க...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
இதுல எனக்கு ஒரு கர்த்தும் இல்லை.

//

கருத்துக்கு நன்றி தலைவரே :0))

ராஜ நடராஜன் said...

//ஓபாமாவுக்கு நோபல் குடுக்கும் போது எனக்கு நானே பின்னூட்டம் போட்டா என்ன தப்பு?? இதையெல்லாம் கயமைத் தனம்னு எவன் சொன்னது???//

ஒபாமாவுக்கு முன்னாலேயே நிறைய பேரு நோபல் வாங்கி நோபல் பெயரை உயர்த்திட்டாங்க.சரி அத விடுங்க.

தனக்குத் தானே திட்டத்தை கயமைத் தனம் என்று தென்னிந்திய திரைப்பட சங்கம் மாதிரி யாரு மைக் போட்டு திட்டியது?

ராஜ நடராஜன் said...

//குப்பை கோபுரம் ஏறும்...கோபுரம் குப்பையாக நசுக்கப்படும்...இரவுகள் விடியும்....பகல் அழிந்து இருள் சூழும்...//

நக்கீரா!பொருள் குற்றம் காண துணைக்கு வா!

குப்பை எப்படி கோபுரம் ஏறும்?கோபுரம் குப்பையிலிருந்து இருள் சூழும் வரைக்கும் மட்டும் பரிசு கொடு மன்னா!

Anonymous said...

கல்பனா வேதாளத்தை மணந்து கொள்வது தான் நல்லது.