Saturday, 12 September 2009

அதிரடி ராகுல்! அதிர்ச்சியில் ஓபாமா!!!

புளுகார் வரும்போதே அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி...அவனுக்கு யாரோ ஆப்பு வச்சான் வாச்சான் வச்சான்டி என்று ஆடிக் கொண்டே வந்தார்..

"என்ன ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...நைட்டு டாஸ்மாக்கு ஊர்வலமோ " என்றோம் நக்கலாக...

நம்மை முறைத்தார் புளுகார்...

"பேச்சுக்கு மட்டும் கொறச்ச இல்ல...எங்கய்யா நான் கேட்ட ஐபாடு...."

நீயே ஒரு பாடு...ஒனக்கு எதுக்கு ஐபாடு...நினைத்தாலும் நாம் வெளியில் சொல்லவில்லை....என்ன இருந்தாலும் சீனியர் புலனாய்வு புளுகர்...

"இந்தாரும்...நீர் கேட்ட ஐபாடு...உம் பிட்டை இனி நீ போடு" என்று முந்திய வாரம் பர்மா பஜாரில் வாங்கிய பழைய டூப்ளிகேட் ஐபாடை நீட்டினோம்...

புளுகாரின் முகம் செத்த எலியை பார்த்த கிழட்டு பூனை போல மலர்ந்தது....

"கேட்டத கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டீர்....அதனால் சொல்றேன்....நம்ம ராகுல் காந்திய பார்த்து ஓபாமா அதிர்ச்சியில இருக்காராம்..."

ராகுல் காந்தியையும் தங்கபாலுவையும் கண்ணம்மா பேட்ட கவுன்சிலர் கூட கண்டுக்க மாட்டேங்கிறான்...இது என்ன புது பிட்டு...

நம் அதிர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "அது என்ன கதை" என்றோம்...

"அப்படிக் கேளும்...சொல்றேன்....நம்ம ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணத்தில இருக்காரு இல்லியா?"

"ஆமா...அப்படித்தான் அவங்க கட்சி காரங்க மட்டும் சொல்லிக்கிறாங்க...அதுக்கு இன்னா இப்ப?"

"அவரு சூறாவளியா சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிச்சதில அய்யா திமுக, அம்மா திமுக, தேமுதிக, பாமக கொடி மரமெல்லாம் சாஞ்சிருச்சாம்..."

"அப்ப காங்கிர'ஷூ', பாஜாக்கா கொடி மரமெல்லாம்...."

"அவங்களுக்கு தமிழ்நாட்டுல ஏதுய்யா கொடியும் மரமும்...இருந்தால்ல சாய்றதுக்கு.." என்று முறைத்த புளுகார் அவரே தொடர்ந்தார்...

"அய்யா, அம்மா, வைத்தியரு, கேப்புடன்னு, ஆணழகன் நடிகர், லெட்டர் பேடு கார்த்திக்கு எல்லாரும் ஆடிப் போயிருக்காங்களாம்...இதுல கார்த்திக்கு மட்டும் தான் கொஞ்சம் தெம்பா இருக்கறதா கேள்வி...என் கட்சில இருக்கறதே நான் மட்டும் தான்...மத்தவய்ங்களை அப்பப்ப வாடகைக்கு தான் எடுக்கறேன்...அதனால என் கட்சில இருந்து யாரும் காங்கிரஷூக்கு போக மாட்டாங்கன்னு சொல்றாராம்...."

"அதெல்லாம் இருக்கட்டும்...இதுல ஓபாமா எங்க வந்தார்...."

"முட்டாள் மாதிரி கேள்வி கேக்காதீர்....இன்னைக்கு தமிழ்நாடு....அடுத்த வருஷம் தமிழ்நாட்டுல காங்கிரஸ் ஆட்சி...தங்கபாலு சி.எம்...இரண்டு வருஷம் கழிச்சி அமெரிக்க அதிபர் தேர்தல்ல ராகுல் நின்னு தனக்கு போட்டியா வந்துடுவார்னு ஓபாமா அரண்டு போய் கிடக்கிறாராம்...ஏற்கனவே ராகுலுக்கு அமெரிக்காவுல பயங்கர செல்வாக்கு...."

"என்னது அமெரிக்காவுலயா..." நம்மால் நம்ப முடியவில்லை...

குடித்து குடித்து எப்பொழுதும் பாதி மூடி இருக்கும் விழிகளை திறக்க முயன்று தோற்ற புளுகார் தொடர்ந்தார்....

"ஆமாவோய்....மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வழி வந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சில வாரிசு அரசியலுக்கு இடமில்லைன்னு அதிரடி செஞ்சதும் ஓபாமா அதிர்ச்சியில உக்காந்துட்டாராம்....அந்த அதிர்ச்சியோடவே ராகுலுக்கு அமெரிக்காவுலயும் இந்தியாவுலயும் இருக்க செல்வாக்கு பத்தி உளவு பார்க்க சி.ஐ.ஏவுக்கு உத்தரவு போட்ருக்காரு..."

"அட...விஷயம் அவ்வளவு தூரம் போயிடுச்சா...சி.ஐ.ஏ என்ன சொல்லிச்சாம்..."

"அது தான் நம்ப முடியாத செய்தி....சி.ஐ.ஏ சொல்ற கணக்குப்படி இந்தியாவுல ராகுலுக்கு முப்பத்தி ஏழு பேரும், அமெரிக்காவுல இரண்டரை பேரும் ஆதரவு கொடுக்குறாங்களாம்..."

"அதென்ன...இரண்டரை கணக்கு??"

"அதுக்கும் சி.ஐ.ஏ விளக்கம் சொல்லிருக்கு...ஆதரவு தர்ற இரண்டரை பேருல ஒரு பொண்ணுக்கு ஒன்றரை வயசு தான் ஆகுது...ராகுலுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறதை எதிர்ப்பார்க்காத வெள்ளை மாளிகை வட்டாரம் நடுங்கிகிட்டு இருக்காம்..."

"நீர் சொல்றதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே" என்றோம் சந்தேகமாக...

"நீர் நம்ப மாட்டீர்னு எனக்கு நல்லாத் தெரியும்...ஒரு க்ளூ...ராகுலுக்கும் காங்கிரஷூக்கும் நெருக்கமான ஒரு கான் நடிகர் சமீபத்துல அமெரிக்கா போனார்...அங்க அவரை ரெண்டு மணி நேரம் ஏர்போர்ட்ல ஜட்டியோட தேவுடு காக்க வச்சிட்டாங்க...இது ராகுலை வெறுப்பேத்த ஓபாமா செஞ்ச சதின்னு கதர்சட்டைங்க எல்லாம் பொலம்பிக்கிட்டு இருக்காம்...."

நம்மை நோக்கி கண் சிமிட்ட முயன்ற புளுகார் மப்பு தலைக்கேறி தடாலென்று தரையில் விழுந்தார்!

============
போதையில் புளுகார் புலம்பிய கொசுறு:

ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் என்று எல்லா மக்களையும் டாஸ்மாக் நோக்கி திருப்பத் தான் அரசு பால்விலையை உயர்த்தி விட்டது என்று தைலாபுர ரெண்டு ரூவா டாக்டர் போராட்டம் நடத்த தயாராகிறாராம்...இதை அறிந்த குடிமகன்கள் குவாட்டர் விலையும் ஒசந்துடுமோ என்று கவலையில் இருக்கிறார்களாம்!!

25 comments:

அது சரி said...

நமக்கு நாமே...திருமங்கலம் ஃபார்முலா....

குடுகுடுப்பை said...

தனிப்பெரும் கட்சியான கு.ஜ.மு.க வை புளுகார் ஏனோ மறந்துவிட்டார்.

கு.ஜ.மு.க இந்தப்பதிவை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.

சஞ்சய் காந்தின்னு ஒருத்தரு தருமபுரிலேந்து உங்கள நோக்கி கிளம்பி வந்துட்டே இருக்கார்.

வால்பையன் said...

//ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் என்று எல்லா மக்களையும் டாஸ்மாக் நோக்கி திருப்பத் தான் அரசு பால்விலையை உயர்த்தி விட்டது என்று தைலாபுர ரெண்டு ரூவா டாக்டர் போராட்டம் நடத்த தயாராகிறாராம்...இதை அறிந்த குடிமகன்கள் குவாட்டர் விலையும் ஒசந்துடுமோ என்று கவலையில் இருக்கிறார்களாம்!!//\எனக்கும் அதே டவுட்டு தான் தல!

ஊர்சுற்றி said...

ஹிஹிஹி.... நல்லா சொல்லியிருக்கீங்க!

மிஸஸ்.தேவ் said...

"எங்க ராகூலுகாந்தி அம்பாசமுத்திரம் கவருமண்டு இஸ்கூல்ல எட்டாப்பு படிக்கிறான் ...ராஜீவு காந்தி மாறியே அம்பூட்டு செவப்பா இருப்பான் எம்பேரன் ராகூலுகாந்தியும் "

கொய்யாப் பழம் விக்க ஒரு பாட்டி வருவாங்க எங்க ஊருக்கு கடமலைகுண்டுலருந்து (இது ஊர் பேருங்க) அவுக சொன்னது தான் இது.

நேரு குடும்பம் எவ்ளோ ரீச் ஆயிருக்கு பாருங்க கட்டக் கடைசி மலையடிவாரக்கிராமத்துல கூட.

ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஸ்டார் வேல்யூ இதானோ?!

Mahesh said...

ஜூ.வி. லண்டன் பதிப்பா? நடத்துங்க...

கலகலப்ரியா said...

//ஆதரவு தர்ற இரண்டரை பேருல ஒரு பொண்ணுக்கு ஒன்றரை வயசு தான் ஆகுது//

செல்லாது செல்லாது.. இதெல்லாம் அரைக் கணக்கில சேராது..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...//

:-ssssss...

siruthai said...

http://siruthai.wordpress.com/2009/09/11/தமிழக-அடிமைகளை-நாடிபிடித/

சங்கா said...

நக்கல்/நையாண்டி நல்லாருக்கு!

மங்களூர் சிவா said...

/
Mahesh said...

ஜூ.வி. லண்டன் பதிப்பா? நடத்துங்க...
/

:))))))))))
ROTFL

ராஜ நடராஜன் said...

இது எப்ப இருந்து :)

தமிழ் நாட்டுல திண்ண எப்ப காலியாகுமுன்னு எல்லோரும் கணக்கு போடறது நல்லாவே தெரியுது.

இதுல காங்கிரஸ்ல இரண்டு நிகழ்வு என்னன்னா அண்ணாச்சி வசந்த் ஒரு மாநாடு நடத்தியிருக்காரு.இளங்கோவன் இன் மைனஸ் தங்கபாலு குழு.

அடுத்து நம்ம அண்ணாத்தே ராகுலு தமிழக விஜயம்.இதுல விஜய்,ரஜனிக்கு காங்கிரஸில் இணைய அழைப்பு.விஜய் சரி!ஆனா கொடுமை என்னன்னா ரஜனிய காங்கிரஸில் இணைய அழைப்பு.அதுவும் எப்படி?கிரிமினலா இல்லாதவரை யாரும் காங்கிரஸில் இணையலாம்.I think rajani is not a criminal ன்னு அழைப்பு விட்டத எத்தன பேரு கவனிச்சாங்களோ!அம்புட்டு தூரத்திலிருந்து வந்துட்டு கருணாநிதிய ஏன் கண்டுக்கலைன்னு நிருபர் கேள்வி வேற!

(வந்ததுக்கு ஏதோ பத்தவச்சுட்டுப் போறேன்)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
தனிப்பெரும் கட்சியான கு.ஜ.மு.க வை புளுகார் ஏனோ மறந்துவிட்டார்.

கு.ஜ.மு.க இந்தப்பதிவை முற்றிலுமாக புறக்கணிக்கிறது.
//

தலைவரே...இப்படில்லாம் தானே வந்து தலைய கொடுக்க கூடாது...உங்கள பத்தியும் புளுகார் கிட்ட மேட்டர் இருக்கு....வேணாம்னு பார்க்கிறேன்...:0)))

//
சஞ்சய் காந்தின்னு ஒருத்தரு தருமபுரிலேந்து உங்கள நோக்கி கிளம்பி வந்துட்டே இருக்கார்.
//

வரட்டும்...வரட்டும்...வேணும்னா பஸ் காசு இல்லாட்டி பெட்ரோல் காசு குடுத்துரலாம்...:0)))

அது சரி said...

//
வால்பையன் said...
//ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகள் என்று எல்லா மக்களையும் டாஸ்மாக் நோக்கி திருப்பத் தான் அரசு பால்விலையை உயர்த்தி விட்டது என்று தைலாபுர ரெண்டு ரூவா டாக்டர் போராட்டம் நடத்த தயாராகிறாராம்...இதை அறிந்த குடிமகன்கள் குவாட்டர் விலையும் ஒசந்துடுமோ என்று கவலையில் இருக்கிறார்களாம்!!//\எனக்கும் அதே டவுட்டு தான் தல!

12 September 2009 06:25
//

இங்க குடிமகன்களை யார் கண்டுக்கிறா...நம்ம கவலை நமக்கு... :0)))

அது சரி said...

//
ஊர்சுற்றி said...
ஹிஹிஹி.... நல்லா சொல்லியிருக்கீங்க!

12 September 2009 07:21
//

வாங்கண்ணே...ஊர் நாடெல்லாம் எப்படி இருக்கு :0))

அது சரி said...

//
மிஸஸ்.தேவ் said...
"எங்க ராகூலுகாந்தி அம்பாசமுத்திரம் கவருமண்டு இஸ்கூல்ல எட்டாப்பு படிக்கிறான் ...ராஜீவு காந்தி மாறியே அம்பூட்டு செவப்பா இருப்பான் எம்பேரன் ராகூலுகாந்தியும் "

கொய்யாப் பழம் விக்க ஒரு பாட்டி வருவாங்க எங்க ஊருக்கு கடமலைகுண்டுலருந்து (இது ஊர் பேருங்க) அவுக சொன்னது தான் இது.

நேரு குடும்பம் எவ்ளோ ரீச் ஆயிருக்கு பாருங்க கட்டக் கடைசி மலையடிவாரக்கிராமத்துல கூட.

ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஸ்டார் வேல்யூ இதானோ?!

12 September 2009 09:04
//

அட...நாஞ்சொல்றதும் அது தான்....

அமெரிக்காவுலயே செல்வாக்கு இருக்கும் போது ஆண்டிப்பட்டில என்ன??

அது சரி said...

//
Mahesh said...
ஜூ.வி. லண்டன் பதிப்பா? நடத்துங்க...

12 September 2009 19:10
//

மகேசு அண்ணே...இது லண்டன் பதிப்பில்ல....ராகுலோட தொண்டன் பதிப்பு...அவர் பொகளை பரப்புறதே என் வாள்க்கை...வாள்க காங்கிரஷூ....வலர்க ராகுல் பொகள்....

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//ஆதரவு தர்ற இரண்டரை பேருல ஒரு பொண்ணுக்கு ஒன்றரை வயசு தான் ஆகுது//

செல்லாது செல்லாது.. இதெல்லாம் அரைக் கணக்கில சேராது..

12 September 2009 19:43

//

ஏஞ் செல்லாது?? மூணு வயசான ரெண்டு பசங்களை ரெண்டு ஆளுன்னு கணக்கு பண்ணும் போது, ஒன்றரை வயசு பொண்ணை அரைன்னு கணக்கு பண்ணா என்ன தப்பு???

காங்கிரஷூ இளைஞர் அணில கணக்கெல்லாம் எந்த பாரபட்சமும் காட்டாம தான் செய்வாங்க...

அது சரி said...

//
கலகலப்ரியா said...
//குடுகுடுப்பை said...//

:-ssssss...

12 September 2009 19:43

//

எதுக்கு இந்த ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு பிரியலியெ...கு.கு.தலீவரே ஒங்களுக்கு பிரிஞ்சது??? :0)))

அது சரி said...

//
siruthai said...
http://siruthai.wordpress.com/2009/09/11/தமிழக-அடிமைகளை-நாடிபிடித/

12 September 2009 20:08

//

லின்க்குக்கு நன்றி சிறுத்தை...படிச்சிட்டு சொல்றேன்...

அது சரி said...

//
சங்கா said...
நக்கல்/நையாண்டி நல்லாருக்கு!

13 September 2009 03:25

//

வாங்க சங்கா...உண்மைய சொன்னா நையாண்டின்னு சொல்லிட்டீங்களே :0)))

அது சரி said...

//
மங்களூர் சிவா said...

:))))))))))
ROTFL
//

அய்...சிவாண்ணே....எங்கண்ணே நெம்ப நாளா உங்களை பார்க்க முடியலை...

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
இது எப்ப இருந்து :)

தமிழ் நாட்டுல திண்ண எப்ப காலியாகுமுன்னு எல்லோரும் கணக்கு போடறது நல்லாவே தெரியுது.

இதுல காங்கிரஸ்ல இரண்டு நிகழ்வு என்னன்னா அண்ணாச்சி வசந்த் ஒரு மாநாடு நடத்தியிருக்காரு.இளங்கோவன் இன் மைனஸ் தங்கபாலு குழு.

அடுத்து நம்ம அண்ணாத்தே ராகுலு தமிழக விஜயம்.இதுல விஜய்,ரஜனிக்கு காங்கிரஸில் இணைய அழைப்பு.விஜய் சரி!ஆனா கொடுமை என்னன்னா ரஜனிய காங்கிரஸில் இணைய அழைப்பு.அதுவும் எப்படி?கிரிமினலா இல்லாதவரை யாரும் காங்கிரஸில் இணையலாம்.I think rajani is not a criminal ன்னு அழைப்பு விட்டத எத்தன பேரு கவனிச்சாங்களோ!அம்புட்டு தூரத்திலிருந்து வந்துட்டு கருணாநிதிய ஏன் கண்டுக்கலைன்னு நிருபர் கேள்வி வேற!

(வந்ததுக்கு ஏதோ பத்தவச்சுட்டுப் போறேன்)

13 September 2009 11:15
//

வாங்க நடராஜன்....நீங்க என்ன இப்படி திடீர்னு காணாப் போயிட்டீங்க??

அந்த க்ரிமினல் மேட்டர்....ராகுல் அப்படியா சொன்னார்?? லின்க் இருந்தா கொடுஙக்ளேன்..

பதி said...

:-))))

ராஜ நடராஜன் said...

//அந்த க்ரிமினல் மேட்டர்....ராகுல் அப்படியா சொன்னார்?? லின்க் இருந்தா கொடுஙக்ளேன்..//

லின்ங் நாந்தான்.இல்லாட்டி ராஜ் டி.வியில ராகுல் திருவாய் மொழிந்ததை பதிவு செஞ்சு வச்சிருப்பாங்க.