Monday 14 September 2009

ரஜினிகாந்தும் ராகுல் காந்தியும் பின்னே ஒரு சுண்டெலியும்!

வருகிறது வருகிறது என்றார்கள்....வந்தே விட்டது பொயல்...சூறாவளியாய் சுழன்றடித்ததில் தமிழ்நாட்டில் கப்பல்கள் கவிழ்ந்து கிடக்கின்றன...கொடிமரங்கள் குப்புற விழுந்து விட்டன...பேயாய் பெய்த மக்கள் மழையில் பிற கட்சிகள் கரை சேர தள்ளாடுகின்றன...

இது வானிலை வர்ணனை அல்ல....சமீபத்தில் சொல்ட்டி சொல்ட்டி அடித்த ராகுல் காந்தி என்ற சூறாவளியால் ஏற்பட்ட சேதாரக் கணக்கு....

கட்சியே இல்லாத கார்த்திக்கை விட ராகுல் வந்த இடமெல்லாம் மக்கள் வெள்ளம்...சென்ற இடமெல்லாம் திருவிழா கூட்டம்...மீனவர்களில் சிங்கள குண்டடிப் பட்டு செத்தவர்கள் போக மற்றவர்களுக்கெல்லாம் திருவிழா...வயல் காய்ந்து போய் வாங்கிய கடன் கொடுக்க முடியாமல் தூக்கில் தொங்கிய விவசாயிகள் தவிர மற்றவருக்கெல்லாம் பொங்கல்....

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி...வரலாறு காணா வெற்றி...பகைவர் நடுங்க வைக்கும் வெற்றி.... நான் சொல்லவில்லை....தன் சேலம் தொகுதியில் தானே ஜெயிக்க முடியாத வெற்றித் திருமகன், வீரத் திருமகன் தங்கபாலு அறிக்கையாக அலறுகிறார்...

தான் வீசிய வேகத்தில் சூறாவளிக்கே கொஞ்சம் தள்ளாட்டம் வந்து விட்டது...தள்ளாட்டமா இல்லை வாரிசு திமிரா என்று தெரியவில்லை....ஆனால் ரஜினிகாந்த் பற்றி முத்து உதிர்த்துவிட்டு போயிருக்கிறார்... "குற்றப் பிண்ணனி உள்ளவர்கள், க்ரிமினல்கள் தவிர யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் சேரலாம்...அதனால் ரஜினிகாந்தும் சேரலாம்" என்ற ரீதியில் திருவாய் மலர்ந்திருக்கிறார்....

என்றைக்காவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்திருந்தால் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியும்....எவனோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து அது தன் ஐடியா என்று அலட்டிக் கொள்பவர்களுக்கு எதிர்பாராத கேள்வி வந்தால் இப்படி உளறல் தான் வரும்....மிகத் திறமையாக பேசுவதாக எண்ணிக் கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார்....

அடடா...என்ன கருணை...என்ன இரக்கம்....இவர் கட்சியில் சேர ரஜினிகாந்த் க்யூவில் நிற்கிறார்...கால் வலிக்க நிற்கிறார்...தினம் தினம் கண்ணீரும் கம்பலையுமாக பேட்டி கொடுக்கிறார்....

அய்யா, எங்களை ஆதரித்து வாய்ஸ் கொடுங்கள் என்று கதறியது ரஜினிகாந்த் தானே...அண்ணாமலை சைக்கிள் அதற்காகவாவது ஓட்டுப் போடுங்கள் என்று அறிக்கை விட்டது மூப்பனாரும் சிதம்பரமும் இல்லை...

நாட்டு பாதுகாப்புக்கு பீரங்கி...போஃபர்ஸிடம் லஞ்சம் வாங்கிய தேசத் துரோகி....இவர் போன்ற கேவலமானவரிடம் வேலை பார்க்க முடியாது என்று ரஜினியை எதிர்த்து தான் வி.பி.சிங் பதவியை விட்டெறிந்தார்...ராஜீவின் கரங்கள் கறையற்றவை!

இந்திரா காந்தி இறந்த அன்று டெல்லியில் மட்டும் எட்டாயிரம் சீக்கியர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாக இன்னமும் சீக்கியர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்...ஆனால் ஆலமரம் சாய்ந்தால் மண் அதிரத்தான் செய்யும் என்று சொன்ன அரக்க உள்ளம் ரஜினி...ராஜீவ் காந்தி அல்ல!

லோட்டஸ் என்ற பெயரில் ஸ்விஸ் பேங்க் அக்கவுன்ட் ரஜினிகாந்துடையது....குவாட்ரோச்சியை சி.பி.ஐ. தொடர்ந்து தப்ப விடுவது ரஜினிகாந்தின் கட்டளையின் பேரில்....இட்டாலி குவாட்ரோச்சிக்கும் சென்னை ரஜினி காந்தும் உறவு முறை....இத்தாலி அன்னை சோனியாவுக்கு இது எதுவும் தெரியாது....

ஈழப் படுகொலையில் இந்திய ராணுவம் ரஜினி சொன்னபடியே செயல்பட்டது......ரஜினிகாந்த் உத்தரவால் தான் ஈழத் தமிழர்களை குடும்பம் குடும்பமாக குழந்தைகளை கூட உயிருடன் புதைத்த சிங்கள இனவெறி அரசை பாராட்டி இந்திய இனவெறி அரசு ஐநாவில் ஓட்டுப் போட்டது........அன்னை சோனியா கருணை உள்ளம் மிக்கவர்...

இத்தனை குற்றப்பிண்ணனி உடைய ரஜினிகாந்த்தையும் பெரிய மனதுடன் தன் குடும்ப கட்சியில் சேர்க்க சூறாவளி முன்வந்திருக்கிறது...

யானை கீழே படுத்தா எலி ஏறி விளையாடுமாம்!!!
(படம் உதவி: Google.com)

27 comments:

குடுகுடுப்பை said...

இந்தப்பதிவிலே எதுக்கு ரசினிகாந்தம். அவரு காங்கிரஸ்ல சேரமாட்டார்னு என்னா நிச்சயம். குறைந்தபட்சம் கூட்டனி வைக்க மாட்டாரா?..

அரசியல்னாலே அலர்ஜியா இருக்குதுப்பா. எப்ப என்னா நடக்கும்னே தெரியல

குடுகுடுப்பை said...

மொத்தத்தில் ராகுல் எதிர்பார்ப்பது இந்திரா போன்ற எதிர்க்கமுடியாத ஒரு நிலை. எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சி.

vasu balaji said...

யம்மா! என்னா அடி! தங்கபாலு, வாசன் தவிர யாராவது ஒழுங்கா மொழி பெயர்த்து சொன்னா நல்லா இருக்கும்.

Anonymous said...

super yes,
rahul does not even know about the crime stories of Congress because appo avaru romba chinnapullai illaya?
Muthale raahul kolluthathta, patti, appa vukku poranthutta kaaranuthkku mattume arasiyale thalaivaraave irukkurathu criminal kutram illaya?
Ivaru, karthik chidambaram ellam thalaimai pathavikku vanthaa eppadi samanyan valvai purindhu kolvaargal. vaarisu arasiyal yaar seydhaalum indha parandha bharatha naatila Criminals thaan.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
இந்தப்பதிவிலே எதுக்கு ரசினிகாந்தம். அவரு காங்கிரஸ்ல சேரமாட்டார்னு என்னா நிச்சயம். குறைந்தபட்சம் கூட்டனி வைக்க மாட்டாரா?..
//

இந்த பதிவே தேவையில்லாமல் ரஜினிகாந்தை க்ரிமினல்களுடன் ஒப்பிட்டு பேசியதின் எதிர்வினை தான்...குற்றப்பிண்ணனி பற்றி பேசுபவர்களின் புனித பிண்ணனி பற்றிய சில எண்ணங்கள் மட்டுமே...

ஒரு வேளை ரஜினிகாந்த் காங்கிரஸில் சேரும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு இன்னொரு இடுகை வரும்!!! ஆனால், புனித பசுவின் பின்புறம் பற்றிய கருத்து மாறாது!

//
அரசியல்னாலே அலர்ஜியா இருக்குதுப்பா. எப்ப என்னா நடக்கும்னே தெரியல

//

ஒரு வருங்கால முதல்வர் பேசுற பேச்சா இது??? உங்களை சீக்கிரமா கட்சிய விட்டு நீக்கணும் போலருக்கே :))))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
மொத்தத்தில் ராகுல் எதிர்பார்ப்பது இந்திரா போன்ற எதிர்க்கமுடியாத ஒரு நிலை. எதிர்க்கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சி.

14 September 2009 21:55
//

Every one have rights to dream :))))

Just somebody should tell him that, Rajiv Gandhi entered politics after Indira Gandhi's death...He faced an election right after it, and won nearly 400+ seats mostly because of sympathy wave...In the next election, the party won only 190+ and had to support V.P.Singh govt...The fame will not last forever if you dont deliver...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
யம்மா! என்னா அடி! தங்கபாலு, வாசன் தவிர யாராவது ஒழுங்கா மொழி பெயர்த்து சொன்னா நல்லா இருக்கும்.

14 September 2009 22:01

//

வாங்க வானம்பாடிகள்... கருத்துக்கு நன்றி...

இதை மொழிபெயர்த்து சொல்றதை விட, அவருக்கு யார்னா பேசக் கத்துக்குடுத்தா ரொம்ப நல்லாருக்கும்!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
super yes,
rahul does not even know about the crime stories of Congress because appo avaru romba chinnapullai illaya?
Muthale raahul kolluthathta, patti, appa vukku poranthutta kaaranuthkku mattume arasiyale thalaivaraave irukkurathu criminal kutram illaya?
Ivaru, karthik chidambaram ellam thalaimai pathavikku vanthaa eppadi samanyan valvai purindhu kolvaargal. vaarisu arasiyal yaar seydhaalum indha parandha bharatha naatila Criminals thaan.

14 September 2009 22:52
//

வாங்க அனானிமஸ்...கருத்துக்கு நன்றி...

வாரிசு அரசியல் மட்டுமல்ல...புனித பசு வேஷம் தான் எரிச்சலாக இருக்கிறது....

அது சரி(18185106603874041862) said...

to receive follow up comments...

மு.இரா said...

அய்யா, ரஜினி ஒரு சினிமா நடிகர், பிழைப்பு அவர் தொழில் எல்லாம்... ராகுல் அவர்கள் அரசியல்வாதி... அவர் பிழைப்பும் அதுதான்... அவரவர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்கள்.... நாம்தான் இவர்களை பற்றி பேசி.... வெட்டி வேலை செய்கிறோம்.... யோசிங்க அய்யா....

கலகலப்ரியா said...

எப்டிங்க இப்டி எல்லாம்.. சும்மா அதிருதில்ல...

பாருங்க அந்த ராகுல் காந்திஜி முகத்தில பால் வடிஞ்ச கரை கூட போகலைங்க.. அந்த குழந்தைய போயும் போயும்.. அவ்வ்வ்வ்வ்...

சிரிக்கிறதா அழுறதான்னே தெரியலீங்க..

(ஆமா நீங்க அஞ்சு பின்னூட்டம் போட்டு.. யாரோ அஞ்சு பின்னூட்டம் போட்டா.. மொத்தம் ஆறு பேரு தானுங்களே... அது எப்டிங்க 'பத்து பேரு என்ன சொல்றாங்கன்னா' ன்னு சொல்லுவீங்க...)

ராஜ நடராஜன் said...

நசரேயன் வீட்டுக்குப் போயிட்டு உங்க இடுகையின் முந்திய பின்னூட்டம் மறுபடியும் இட்டுட்டு இங்கே.

இடுகை மனதை பிரதிபலிக்கிறது.வாரிசு அரசியல் இந்தியாவுக்கு நல்லதல்ல என்று நினைத்தாலும் அதுதான் சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகிறது.

இருந்தும் எளிதாக உரித்து தின்னும் வாழைப்பழம் மாதிரி இருந்த தமிழகத்தை பலாப்பழம் மாதிரி கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு இலங்கை சார்ந்த காங்கிரஸின் கடந்த கால செயல்பாடுகள் தமிழகத்தை ராகுலின் அரசியல் சதுரங்கம் வெல்வது எளிதாக இருக்கப் போவதில்லை.

இதற்கு சான்றாக நேற்று ராஜிவ் காந்தியின் சிலை உடைப்பு ராஜ் டி.வி செய்திகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/In the next election, the party won only 190+ and had to support V.P.Singh govt.../

ஒரு தகவல் பிழை : they did not support v.p. singh government, but, later supported chandrasekhar government :)

வரதராஜலு .பூ said...

//என்றைக்காவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்திருந்தால் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியும்....எவனோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து அது தன் ஐடியா என்று அலட்டிக் கொள்பவர்களுக்கு எதிர்பாராத கேள்வி வந்தால் இப்படி உளறல் தான் வரும்....மிகத் திறமையாக பேசுவதாக எண்ணிக் கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார்....//

உண்மை.

இவர் பேசியது முழுக்க முழுக்க உளரலே.

என் நடை பாதையில்(ராம்) said...

இம்புட்டும் ரஜினியா செஞ்சாரு .......? எனக்கு தெரியாம போச்சே (ஹி.. ஹி... )

Mahesh said...

ராஹுல் இன்னிக்கு மட்டுமா உளர்றாரு??????

KarthigaVasudevan said...

:(

அது சரி(18185106603874041862) said...

//
மு.இரா said...
அய்யா, ரஜினி ஒரு சினிமா நடிகர், பிழைப்பு அவர் தொழில் எல்லாம்... ராகுல் அவர்கள் அரசியல்வாதி... அவர் பிழைப்பும் அதுதான்... அவரவர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்கள்.... நாம்தான் இவர்களை பற்றி பேசி.... வெட்டி வேலை செய்கிறோம்.... யோசிங்க அய்யா....

15 September 2009 02:35

//

மு.இரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் கருத்து யோசிக்க வேண்டியதே....ஆனால், என்னைப் பற்றியே யோசித்து கொண்டிருக்க முடியாதே :0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
எப்டிங்க இப்டி எல்லாம்.. சும்மா அதிருதில்ல...

பாருங்க அந்த ராகுல் காந்திஜி முகத்தில பால் வடிஞ்ச கரை கூட போகலைங்க.. அந்த குழந்தைய போயும் போயும்.. அவ்வ்வ்வ்வ்...

சிரிக்கிறதா அழுறதான்னே தெரியலீங்க..
//

ஆமால்ல...நெஜமாவே அவரு கொய்ந்த தான்...அவர்கிட்ட போயி இவ்ளோ நீளமா பேசிட்டேனே :)))

//
(ஆமா நீங்க அஞ்சு பின்னூட்டம் போட்டு.. யாரோ அஞ்சு பின்னூட்டம் போட்டா.. மொத்தம் ஆறு பேரு தானுங்களே... அது எப்டிங்க 'பத்து பேரு என்ன சொல்றாங்கன்னா' ன்னு சொல்லுவீங்க...)
//

அது வந்துங்க...ம்ம்ம்...அது வந்து...நான் போட்ற ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு ஆளுக்கு சமம்...அதனால அப்படித் தான்...ஸ்ஸ்ஸ்...யப்பா..கூட்ட கழிக்க தெரியாம எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு :)))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
நசரேயன் வீட்டுக்குப் போயிட்டு உங்க இடுகையின் முந்திய பின்னூட்டம் மறுபடியும் இட்டுட்டு இங்கே.

இடுகை மனதை பிரதிபலிக்கிறது.வாரிசு அரசியல் இந்தியாவுக்கு நல்லதல்ல என்று நினைத்தாலும் அதுதான் சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகிறது.

இருந்தும் எளிதாக உரித்து தின்னும் வாழைப்பழம் மாதிரி இருந்த தமிழகத்தை பலாப்பழம் மாதிரி கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு இலங்கை சார்ந்த காங்கிரஸின் கடந்த கால செயல்பாடுகள் தமிழகத்தை ராகுலின் அரசியல் சதுரங்கம் வெல்வது எளிதாக இருக்கப் போவதில்லை.

இதற்கு சான்றாக நேற்று ராஜிவ் காந்தியின் சிலை உடைப்பு ராஜ் டி.வி செய்திகள்.

//

வாங்க நட்ராஜ் அண்ணே...நீங்க சொல்லி தான் எனக்கு மேட்டர் தெரியும்...அப்புறம் தான் இவரோட பழைய கதை எல்லாம் ஞாபகம் வந்தது...அதனால உங்களுக்கு சிறப்பு நன்றி...

பலாப்பழமா?? தனியா நின்னா பலாக் கொட்டை கூட கிடைக்காது...நின்னு தான் பார்க்கட்டுமே!

அது சரி(18185106603874041862) said...

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
/In the next election, the party won only 190+ and had to support V.P.Singh govt.../

ஒரு தகவல் பிழை : they did not support v.p. singh government, but, later supported chandrasekhar government :)

15 September 2009 10:00
//

திருத்தத்திற்கு நன்றி சுந்தர்ஜி...நீங்கள் சொல்வது சரி...

Congress lost the election...V.P.Singh formed a govt with the support of Communist and BJP...Later, congress , under the leadership of "Mr.Clean" Rajiv Gandhi broke this coalition with the help of then Deputy Prime Minister Devilal, and made Chandra Shekar as Prime Minister with Congress's outside support with wafer thin majority.

Ironically, Under heavy pressure from Congress and ADMK, Chandrashekar's minority govt. with only 50 MPs on its fold dismissed then Tamilnadu govt headed by DMK which actually had more than 2/3 majority in TN assembly...Just an example of how democratic Congress and Rajiv Gandhi was!

However, Rajiv Gandhi was not happy being opposition leader, so he soon pulled the carpet under Chandrashekar for personal non-reasons which forced Chandrashekar's govt. to resign leaving the country with no proper govt, and forcing an expensive general election on the country....

So goes the history of Rajiv Gandhi and Congress.....

அது சரி(18185106603874041862) said...

//
Varadaradjalou .P said...
//என்றைக்காவது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்திருந்தால் எப்படி பேசுவது என்ன பேசுவது என்று தெரியும்....எவனோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து அது தன் ஐடியா என்று அலட்டிக் கொள்பவர்களுக்கு எதிர்பாராத கேள்வி வந்தால் இப்படி உளறல் தான் வரும்....மிகத் திறமையாக பேசுவதாக எண்ணிக் கொண்டு உளறிக் கொட்டியிருக்கிறார்....//

உண்மை.

இவர் பேசியது முழுக்க முழுக்க உளரலே.

//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரதராஜூலு...

அது சரி(18185106603874041862) said...

//
ராம்... said...
இம்புட்டும் ரஜினியா செஞ்சாரு .......? எனக்கு தெரியாம போச்சே (ஹி.. ஹி... )

//

அப்படித்தான் ராகுல்ஜி நினைச்சிக்கிட்டு இருக்காரு ராம்!

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
ராஹுல் இன்னிக்கு மட்டுமா உளர்றாரு??????

//

அட...அவரு எப்பவுமே இப்படித் தானா?? நான் இப்ப தான் கவனிக்க ஆரம்பிச்சேன்...இனிமே பார்க்கலாம்...

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
:))))))))))))))

//

நன்றி சிவாண்ணா...

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...
:(

//

வருகைக்கு நன்றி மிஸஸ்.தேவ்..

கலகலப்ரியா said...

// ஆமால்ல...நெஜமாவே அவரு கொய்ந்த தான்...அவர்கிட்ட போயி இவ்ளோ நீளமா பேசிட்டேனே :)))//

தோடா சிறுவர் அணில இருக்கிற நீங்களே கொயந்த கிட்ட பேசலைன்னா.. எப்டி..

// அது வந்துங்க...ம்ம்ம்...அது வந்து...நான் போட்ற ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு ஆளுக்கு சமம்...அதனால அப்படித் தான்...ஸ்ஸ்ஸ்...யப்பா..கூட்ட கழிக்க தெரியாம எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு :)))//

அட ராவணா... எல்லாரும் இங்க பின்னூட்டம் போடுறாங்கன்னா நீங்க குட்டி போடற மாதிரி ஆள் போடுறீங்க.. ஹும்.. நடக்கறது நடக்கட்டு...