பீவாசு, பெரும்பாலும் கமர்சியல் டைரடக்கராக அறியப்பட்டிருப்பதால், இந்த படத்தில் எங்கெனும் பரவியிருக்கும் முன் நவீனத்துவ கோட்பாடுகள் பலருக்கு புரிவதில்லை. மு.ன. என்பது பி.னா. வுக்கு முந்தியது. அதாவது பி.னா.வின் காலகட்டம் ஒரு காலகட்டத்தில் வரக்கூடும் என்பதை பி.னா. வின் காலகட்டத்திற்கு பல நூற்றாண்டு முந்திய காலகட்டத்தில் அறைகூவிய நிலை தான் மு.னா. என்பது சிலேவின் முன் நவீனத்துவ, இடை நவீனத்துவ, நவீனத்துவ, மற்றும் பின் நவீனத்துவ தந்தையான Adinga Gommala வின் அறுதியான வாதம்.
இந்த முன் நவீனத்துவமானது படம் ஆரம்பிக்கும் முன்னரே துவங்கிவிடுகிறது. இந்த படக்கதை மலையாளத்தில் முன்னரே வெளிவந்தது. கதானாயகன் முடிவெட்டி. முன் நவீனத்துவத்துவமும், முடிவெட்டுவதும் ஒன்றே என்பது (இரண்டும் "மு" வில் ஆரம்பிப்பதை கவனியுங்கள்) படத்தை உற்று கவனிக்கும் எவருக்கும் புரியும்.
படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் முகம் பார்க்கும் கண்ணாடி. கண்ணாடியை முன்னாடி பிடித்தால் தான் முகம் தெரியும். பின்னால் பிடித்த்தால் குண்டி தான் தெரியும். ஆனால் நீங்கள் அதை பார்க்க முடியாது. உங்களை பின்னாடி இருந்து பார்ப்பவர்களுக்கு கண்ணாடி இல்லாமலேயே உங்கள் பின்புறம் தெரியும். அவர்களுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆக, பின் நவீனத்துவமா, முன் நவீனத்துவமா என்று வாதிக்கும் முட்டாள்களுக்கு முன் நவீனத்துவமே என்று உணர வைப்பது பீவாசுவின் திறமை.
மற்றொரு முக்கிய பாத்திரமான மீனா, அறிமுக காட்சியில் சட்டியை போட்டு உடைக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது அவர் சட்டியை முன்பக்கமாக போட்டு உடைக்கிறார். பின்பக்கமாக போட்டு உடைக்கவில்லை. இடையிலும் வைத்து உடைக்கவில்லை. இது பி.னா. மற்றும் இ.னா வாதிகளுக்கு பீவாசு தரும் சவுக்கடி.
கதாபாத்திரங்களின் பெயரிலும் கூட, டைரடக்கர் தனது முன் நவீனத்துவ முத்திரையை பதிக்க தவறவில்லை. பால கிருஷ்ணன் என்ற பாத்திரம் படம் நெடுக துன்பத்திலும் துயரத்திலும் வாடுகிறது. பிள்ளைகள் கூட பேச மறுக்கிறார்கள். ஆனால், அசோக் குமார் என்ற பாத்திரம் செல்வம், செல்வாக்கு மிக்கதாக வருகிறது. இதை கவனிக்க வேண்டும். பால் எங்கிருந்து வருகிறது?? மாட்டின் பின்புறமிருந்து வருகிறது. ஆனால், "அ" என்பது தமிழின் முதல் எழுத்து. எல்லாவற்றுக்கும் முன்னால் வரும் எழுத்து.
படத்தில் முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன் பின்புறத்தை அழுத்தமாக முடிவெட்டும் நாற்காலியில் வைக்க, நாற்காலி உடைந்து விடுகிறது. இது படத்தின் முக்கியமான காட்சி. பின் நவீனத்துவ பின்புறங்களால் பெரும் சேதமே என்பது குறிப்பால் உணரப்படுகிறது. இந்த காட்சி முதலாளித்துவ எதிர்ப்பு கம்யூனிசமும் பேசுகிறது!
ஆனால், அதே நாற்காலியை பால கிருஷ்ணன் மீண்டும் தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறான். பின் நவீனத்துவத்தால் சேதமுற்றாலும், முன் நவீனத்துவம் மீண்டும் உயிர் பெறும் என்ற டைரடக்கரின் உள்ளக்கிடக்கை உள்ளங்கை நெல்லிக்கனி!
முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன் ஒரு காட்சியில் "இங்க பாரு ஒம்பதாவது அதிசயம்" என்று தனது முன்புற வேட்டியை தூக்கி காண்பிக்கிறார். ஒன்பதாவது போன்ற அதிசயங்கள் முன் நவீனத்துவம் மட்டுமே காட்ட முடியும் என பின் நவீனத்துவ பிற்போக்குவாதிகளை புறம்காட்ட செய்யும் இடம் இது.
படத்தின் கிளைமாக்ஸ் முன் நவீனத்துவத்தின் உச்சகட்டம். அசோக் குமாராக வரும் ரஜினிகாந்த் (அதாவது முன் நவீனத்துவம்) பால கிருஷ்ணனின் வீட்டுக்கு வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அந்த பாத்திரம் எந்த வழியாக வருகிறது என்பது. ஆம், அவர் வருவது வீட்டின் முன்புற வழி. மேலும் அந்த பாத்திரம் சொல்வது " நான் முன்னாடி போய் ஒனக்கு ஏற்பாடு செய்றென்". பின் நவீனத்துவ பதர்களுக்கு, முன் நவீனத்துவமே இன்றும், என்றும் வழிகாட்ட வேண்டும் என்று பீவாசு படத்தை முடிக்கிறார்.
இப்படி ஒரு முன் நவீனத்துவ காவியத்தை படைத்த பீவாசு சென்ற காலகட்டத்திய, காலம் சென்ற முன் நவீனத்துவ முன்னோடிகளான சிலேவின் Adinga Gommala, பெருவின் Masura-illa Usura, ஃஃப்ரான்ஸின் Dhaadi vachcha Thorஐ, சைனாவின் Oru Mayirum Illeengo ஆகியோர் வரிசையில் இடம் பிடித்துவிட்டார், இது போல் ஒரு படம் இனி அவர் தனது வாழ்னாளில் செய்ய முடியாது, அவர் மட்டுமல்ல இனி எவராலும் செய்ய முடியாது என்பது உறுதி!!!
==================
நன்றி: பீவாசு என்ற பீவாசுவின் சரியான பெயர் உச்சரிப்பை எனக்கு தெரிய செய்த அன்பு நண்பர் "சாத்தான் குளத்தின் வேதம்" ஆசிஃப் மீரானுக்கு.
http://asifmeeran.blogspot.com/2008/08/blog-post_07.html
25 comments:
அய்யா சாமி..
உங்க முன்நவீனத்துவத்துகக்கு ஒரு அளவேயில்லையா ??
மீ த பஷ்டு..
==இந்த படத்தில் எங்கெனும் பரவியிருக்கும் முன் நவீனத்துவ கோட்பாடுகள் பலருக்கு புரிவதில்லை. மு.ன. என்பது பி.னா. வுக்கு முந்தியது.===
நல்ல கண்டுபிடிப்பு..:))
==என்பது சிலேவின் முன் நவீனத்துவ, இடை நவீனத்துவ, நவீனத்துவ, மற்றும் பின் நவீனத்துவ தந்தையான Adinga Gommala வின் அறுதியான வாதம்==
இது எந்த "இடை" ?
என்ன அறுதியான வாதம் ?
ஒரு வித்தியாசமான பார்வை. மு.ந, பி.ந நல்ல அலசல்.
நான் இதுவரைக்கும் எந்த பதிவரின் முழு பதிவுகளையும் படித்ததேயில்லை.ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேனென்று மார்தட்டிக் கொள்ளமுடியும் போல் தெரிகிறது:)
எப்படியோ கொஞ்சம் வித்தியாசமாகத்தான் சிந்திக்கிறீர்கள்.
வாங்க வழிப்போக்கன். இந்த ச்சின்ன பயலின் புதுக்கடைக்கும் வருகை தந்ததுக்கு நன்றி.
//
==என்பது சிலேவின் முன் நவீனத்துவ, இடை நவீனத்துவ, நவீனத்துவ, மற்றும் பின் நவீனத்துவ தந்தையான Adinga Gommala வின் அறுதியான வாதம்==
இது எந்த "இடை" ?
என்ன அறுதியான வாதம் ?
//
முன் நவீனத்துவத்திற்கு அடுத்து வருவது நவீனத்துவம். அதற்கு பின் வருவது பின் நவீனத்துவம். இதற்கு இடையில், அன்றைய கால கட்டத்தில் இருந்த நவீனத்துவம் முன் நவீனத்துவமா, நவீனத்துவமா இல்லை பின் நவீனத்துவமா என்று சுமார் 500 ஆண்டுகள் தீவிர வாத பிரதிவாதங்கள் நடந்தன. அதன் பின், 1713ல், சிலேவின் Ottamaa Odiரு நகரத்தில், இந்த குறிப்பிட்ட கால கட்டத்தை இடை நவீனத்துவம் என்று குறிப்பிட முடிவானது.
சுமார் 500 ஆண்டுகள் உலகை உலுக்கிய இந்த விவாதங்களை சிலேவின் அனைத்து நவீனத்துவங்களின் தந்தை Adinga Gommala தனது Enna Elaவு புத்தகத்தில் சுமார் 13,390 பக்கங்களில் தெளிவாக விவரித்திருக்கிறார்.
பலருக்கு தெரியாத விஷ்யம், புகழ்பெற்ற சப்பானிய இயக்குனரான Ayyaiyo Guroseva வின் பல படங்கள் இடை நவீனத்துவத்த பாணியில் அமைந்தனவே!
//
ஒரு வித்தியாசமான பார்வை. மு.ந, பி.ந நல்ல அலசல்.
//
வாங்க சுன்தர். வருகைக்கு நன்றி!
//
நான் இதுவரைக்கும் எந்த பதிவரின் முழு பதிவுகளையும் படித்ததேயில்லை.ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேனென்று மார்தட்டிக் கொள்ளமுடியும் போல் தெரிகிறது:)
//
வாங்க நடராஜன் சார். கண்டிப்பா நீங்க என்னோட எல்லா பதிவுகளையும் படிச்சிரலாம். ஏன்னா, நாம எழுதுறதே கொஞ்சம். எழுதுறதுக்கு டைமே கெடக்கலீங்க. அப்படின்னு சொல்லலாம், ஆனா உம்ம என்னன்னா, நம்ம சரக்கு அவ்வளவு தான். சட்டில இருந்தால அகப்பைல வரதுக்கு? தவிர எதுனா எழுதலாம்னு ஒரு சூடான மேட்டரோட வந்தா, நம்ம மக்கள் பல பேர் அத ஏற்கனவே கிழிச்சி தொங்க வுட்ருக்காங்க!
//
எப்படியோ கொஞ்சம் வித்தியாசமாகத்தான் சிந்திக்கிறீர்கள்//
அப்டில்லாம் ஒண்ணும் இல்லீங்ணா. குசேலன் பாத்ததுல, மூணு ரவுண்டு வோட்கா அடிச்சி ஏத்தி வச்சிருந்த போதை எறங்கிரிச்சி. அந்த காண்ட எப்டினா காட்டணுமேன்னு இங்க வந்தா பல பேரு குசேலன கபாலத்த பொளந்திருக்காங்க.
சரி, நம்ம காண்ட காட்டியே ஆகணும்டா மக்கா அப்டின்னு போட்டது தான் இந்த பதிவு.
மத்தபடி நாம சிந்திக்கிறதுலாம் இல்லீங்ணா. நம்மல சிந்தனை தொட்டி அதான் Think Tank அப்டினு யார்னா சொல்லிற போறாங்க!
"அது சரி" - என்னங்க இப்படி பேரு வெச்சா நான் எப்படி கூப்பிடறது. ஏதாவது பெயர்ச்சொல் வைக்கலாமே..
"அது சரி" சொன்னாரு..
"அது சரி" பதிவு நல்லாயிருந்தது
"அது சரி" பின்னூட்டம்.
"அது சரி" அது சரி..
இப்படி எழுதுன என்ன மாதிரி ஆளுங்களுக்கு ஒன்னுமே புரியாதே..
இது சரின்னா வேற பேரு வைங்க இல்ல "அது சரி" ன்னா அப்படியே இருக்கட்டும்.
பி.கு: இது இடைநவினத்துவ பின்னூட்டம்.
சாரு மேட்டர் உங்க பதிவு பாத்துத்தான் தெரியும்.
உங்க கேள்விகள் சரியானதே..
நான் விரிவா சாப்ட்வேர் பத்தி ஒரு பதிவு போடலாம்னு நினைக்கிறேன்.
//
"அது சரி" - என்னங்க இப்படி பேரு வெச்சா நான் எப்படி கூப்பிடறது. ஏதாவது பெயர்ச்சொல் வைக்கலாமே..
//
அட, அது நம்மல ஓட்றதுக்கு நாலு பேரு வச்ச பேருங்க. கத எப்டின்னா, நாம ஆஃபிஸ் மீட்டிங்க்ல, எவனையாவது/எவளையாவது மறுத்து சொல்றதுன்னா, வழக்கமா, Thats right, but... அப்படின்னு ஆரம்பிக்கிறது வழக்கம். குறிப்பா, "எவளையாவது"ன்னா இன்னும் கொண்டாட்டம். ஏன்னா, வீக் எண்ட்ல, அந்த ஃபிகரை ...இன்னும் கொஞ்சம் க்ளோஸ் ஆக இது யூஸ் ஆகும். இப்படி பேசி, பேசியே ஆஃபிஸ்ல நம்ம பேரு Mr. Thats Right ஆயிப்பொச்சி.
நீங்க என்னடே என்ன ஓட்றது, எங்கள நாங்களே ஓட்டிக்குவோமுல்லா அப்டின்னுட்டு, அத அப்படியே தமிழ்ப்பண்ணி வச்ச பேரு தான் "அது சரி".
தவிர, மன்னன் படத்துல எங்க தலவரு "ஆங், அது சரி, அது சரி"ன்னு சொல்றதையும் நெனச்சி பாருங்க. அப்பிடியே பெயர் காரணம் "அது சரி"ன்னு சொல்லுவிய.
பேரு தான் அப்பிடியே தவிர, நாம எதையும் "அது சரி" அப்டின்னு ஒத்துகிட்டது இல்லீங்கோ. அதான், பதிவு பேரு "முரண் தொடை"
//
பி.கு: இது இடைநவினத்துவ பின்னூட்டம்.
//
முன் நவீனத்துவமும், இடை நவீனத்துவமும் மீண்டும் முன்னிலை பெறுவது குறித்து சிலேவின் Adingo Gommala தனது 217.9 ஆண்டு கல்லறையிலிருந்து மிகுந்த சந்தோஷப்படுவதாக செய்தி வந்திருக்கிறது. உங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
//
சாரு மேட்டர் உங்க பதிவு பாத்துத்தான் தெரியும்.
உங்க கேள்விகள் சரியானதே..
நான் விரிவா சாப்ட்வேர் பத்தி ஒரு பதிவு போடலாம்னு நினைக்கிறேன்.
//
நல்லா எழுதுங்கணா. நமக்கு சாப்ட்டு பீரு அடிக்கிறது தவிர உருப்படியா எதுவும் தெரிலங்கிறதுனால, சாஃப்டுவேரு பத்தி பெரிசா எழுத முடில. நமக்குத்தான் தெரியலயே ஒழிய நம்ம மக்க எல்லாம் கெட்டிங்க. அவனுவள்ட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது தான் நாம எழுதுறது.
குறிப்பா, அந்த தொழில்ல, நம்ம ஊரு பாடி ஷாப்பர்ஸ்னால எம்புட்டு பிரச்சினை, ஆணிபுடுங்குறதுல மண்ட ஒடயறது, என்ன எளவு பாஷைன்னு தெரியாமலே ஜெர்மனில வேல பாக்குறது, நைட்டு பன்னென்டு மணிக்கு ஆன் சைட்டு கால அட்டெண்ட் பண்றது இப்டி பல பிரச்சின பத்தி கொஞ்சம் தெளிவா எளுதியள்னா புண்ணியமா போகும். நம்ம மக்களும் கொஞ்சம் சந்தொசப்படுவானுவ!
அய்யோ சாமி தலை சுத்துது.......................
Good Article,I tried to understand but couldnt make it..Enagalaiyellam vechi comedey kemedy pannalaiye?..
Note: I like the blog on Charu nivethitha..
என்னா ஒப்பீடு? என்னா ஒப்பீடு?
ஆரம்பமே அசத்தலா இருக்கே? :-)
கலகலக்க வாழ்த்துக்கள்!!!
சே.. தல சுத்துதுபா.! ன்னு எழுதிட்டு பாக்குறேன், பிரபு முந்திகிட்டாரு.!
//
என்னா ஒப்பீடு? என்னா ஒப்பீடு?
ஆரம்பமே அசத்தலா இருக்கே? :-)
கலகலக்க வாழ்த்துக்கள்!!!
//
அழைப்பிணங்கி, வந்து படித்து பின்னூட்டமும் இட்டு, புதிய பதிவர்களையும் வாழ்த்தும் அண்ணன் லக்கி லுக் வாழ்க.
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணாச்சி.
//
சே.. தல சுத்துதுபா.! ன்னு எழுதிட்டு பாக்குறேன், பிரபு முந்திகிட்டாரு.!
//
தல, இது குசேலன் பாத்துட்டு எழுதின விமர்சனமுங்க. சனியன், ஏத்தி வச்சிருன்த போத எல்லாம் வேற எறங்கிருச்சி. வெறும் மண்டயோட எழுதினா நம்ப எழுத்து இப்படி ஆய்டிச்சி. என்ன பண்ண??
//
InBoRn GeNiUs said...
Good Article,I tried to understand but couldnt make it..Enagalaiyellam vechi comedey kemedy pannalaiye?..
Note: I like the blog on Charu nivethitha..
//
வருகைக்கு நன்றி ஜீனியஸ். காமெடில்லாம் ஒண்ணுமில்ல. இது சோதனை, குசேலன் பிராண்ட்!
//
பிரபு said...
அய்யோ சாமி தலை சுத்துது.......................
//
அட, எனக்கும் தாங்க!
வருகைக்கு நன்றி பிரபு.
குசேலனை இப்படி எல்லாம் கூட புரிந்துக்கொள்ள முடியுமா? தலை சுற்றுகிறது. :)
அவளோ தானா இன்னும் ஏதாவது இருக்கா. கலக்கி போறீங்க போங்க.
அது சரி, வாழ்த்துக்கள்
ஐய்யோடா !!!அது சரி!
மொத்தத்தில் குசேலன் படத்துக்குப் போகவேண்டாம் என்று சொல்ல இது ஒரு வழியா.?
சும்மா சொல்லக் கூடாது,ஒவ்வொரு பிரேமிலும் கத்திரி போட்டிருக்கீங்க...சொன்னதெல்லாம் சரியா என்று பார்த்துவிட்டு வந்து அலசுகிறேன்
Post a Comment