Saturday, 30 August 2008

வேடிக்கை மனிதர்கள்!

முதலில் எழுதும் எண்ணமில்லை. எழுதி என்ன ஆகப்போகிறது? என்னை எழுத வைத்தவர்கள் இதை படிக்கப் போவதுமில்லை.
நீங்கள் குடித்ததுண்டா? காஃபி, டீயை கேட்கவில்லை. ஆல்கஹால் ஏதேனும், ஒரு முறையாவது குடித்ததுண்டா??

இல்லவே இல்லையா? நீங்கள், நீங்கள் தான் எனக்கு வேண்டும். உங்களுடன் தான் பேச விரும்புகிறேன்.

உங்களை யாராவது குடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்?? குடிக்காதவர்கள் அயோக்கியர்கள், குடும்பத்தை கெடுப்பவர்கள் என்று குற்றம் சாட்டினால் என்ன சொல்வீர்கள்??
குடிக்காமல் இருப்பது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்ல மாட்டீர்களா??

அப்படி இருக்கையில், எனக்கு புரியவில்லை, குடிப்பவர்கள் எல்லாம் சமூக வியாதிகள், இழிவானவர்கள் என்ற பிம்பம் ஏன்? யாரேனும் உண்மையை சொல்லுங்கள், குடிக்காதவர்கள் அனைவரும் நல்லவர்களா?

ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? கையில் காசில்லாததால், குடிக்காதவனுமா?? ஒரு ப்யூன் 200 ரூபாய் தான் ல‌ஞ்ச‌ம் வாங்குறான், ஆனால், க‌லெக்ட‌ர் 50,000 கேக்குறான், ப்யூன் தான் ரொம்ப‌ நல்ல‌வ‌ன் என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து.

இவ‌ர்க‌ள் த‌ரும் அட்வைஸ்க‌ள் க‌டும் கொலை வெறியை தான் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌.

"காசு கொழுப்பு உன‌க்கு".

என்ன‌வோ, இவ‌ன் என‌க்கு பிச்சை போடுவ‌தைப் போல!

இல்லை, இவர்களுக்கு உண்மையில், யார் மீதாவது எந்த அக்கறையாவது உண்டா? சாணி வீச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்ற சந்தோஷமே!

இவர்கள் சித்தரிப்பது போல, ஒருவன் நாள் முழுவதும், வேண்டாம், தினந்தோறும் குடித்தால், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் ஷேர் மார்க்கெட்டில் இருக்க முடியுமா? இல்லை, 66 கிலோ என்று எடையை மெய்ன்டெய்ன் செய்ய முடியுமா?? சாணி வீச ஏதோ ஒரு சாக்கு, அவ்வளவே!

தின‌மும் உண்ப‌தும், உற‌ங்குவ‌தும், க‌ண‌வ‌ன்/ம‌னைவியுட‌ன் முயங்குவதும் தான் வாழ்க்கை என்று இருக்கும் இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சொல்ல‌ முடியாதா??

தேடி சோறு நித‌ம் தின்று

ப‌ல‌ சின்ன‌ஞ்சிறு க‌தைக‌ள் பேசி,

ம‌ன‌ம்வாடி துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று,

ந‌ரைகூடி கிழ‌ப்ப‌ருவ‌ம் எய்தி,

கொடுங்கூற்றுக்கு இரையென‌ பின் மாயும்

வேடிக்கை ம‌னித‌ர் போல‌

வீழ்வெனென்று நினைத்தாயோ,

சொல்ல‌டி ப‌ராச‌க்தி!

என்று பார‌தி, இவ‌ர்க‌ளை தான் பாடினான் என்று எங்க‌ளுக்கு திருப்பி சொல்ல‌ தெரியாதா??
அவ‌ன‌வ‌ன் வாழ்க்கை, அவ‌ன‌வ‌ன் வ‌லி, அவ‌ன‌வ‌ன் வ‌ழி!

விட்டு விடுங்க‌ள்.

அடுத்து, காதல் பற்றி இவர்கள் பேசி வருவது.

...வேண்டாம், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

(க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ ந‌ட‌ந்த‌ த‌னிப்ப‌ட்ட‌ பிர‌ச்சினை, வலியின் விளைவே இந்த‌ ப‌திவு. என‌க்கு டைரி எழுதும் ப‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால், இங்கு எழுதிவிட்டேன். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌வும்!)

22 comments:

அது சரி said...

இந்த பதிவிற்கு தனிப்பட்ட சிலர் அனுப்பிய ஈ.மெயிலும், எனது கடந்த சில பதிவுகளுக்கு சிலர் ஃபோன் செய்து திட்டியதும் தான் உடனடிக்காரணம்! என்றாலும், தனிப்பட்ட ஒரு விஷயத்தை பதிவிட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன்!

Anonymous said...

well said. same blood.

குடுகுடுப்பை said...

குடிப்பது ஒரு பழக்கம், அயோகியத்தனம் ஒரு குணம், இந்த குணம் பழக்கம் பார்த்தெல்லாம் இருபதில்லை. அப்படியே குடிப்பது அயோகியத்தனம் என்று யாரேனும் வாதிட்டால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அது அவனை மட்டுமே பாதிக்கிற ஒரு விஷயம், அதனை விமர்சித்தால் நீங்கள் எதிர் விமர்சனத்தை எதிர் பார்த்தே இருங்கள்.

Sundar said...

குடிப்பது தனிப்பட்ட உரிமை தான். ஆனால் அந்த தனியுரிமை, ஒருவருக்கு உள்ள மற்ற கடமைகளிலோ அல்லது, அவரை சார்ந்தவர்களையோ பாதிக்கும் பொது, அந்த பழக்கத்தை கட்டுப்படுத்தாவிடில் ரொம்பவும் தனிப்பட்டவராகவேண்டி வரும். யார் சொல்கிறார்கள் என்பதை விட, அவர் சொல்வதில் எந்த அளவு, நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, மற்றவற்றை தள்ளுபடி பண்ணிவிட வேண்டியது தானே!

Anonymous said...

//என‌க்கு டைரி எழுதும் ப‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால், இங்கு எழுதிவிட்டேன். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌வும்!)//

ப்ளாகுங்கறதே அப்படி ஆரம்பிச்சதுதாங்க!

தமிழ் பதிவுகளப் பாத்து அது ஏதோ சிறுபத்திரிகை நடத்துவது போல என எண்ணிவிடாதீர்கள்.

பாய்ஸ் படத்துல சொல்ற மாதிரி "அனத்துங்க மங்களம் ஸார், அனத்துங்க". அப்படியாச்சும் மனபாரம் குறையும்.

பாபு said...

"ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? "

குடிக்கும் பழக்கம் இல்லாத எவ்வளவோ பேர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்.
அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எல்லா பழக்கமும் நல்ல பழக்கம் தான்

r.selvakkumar said...

//அப்படி இருக்கையில், எனக்கு புரியவில்லை, குடிப்பவர்கள் எல்லாம் சமூக வியாதிகள், இழிவானவர்கள் என்ற பிம்பம் ஏன்? யாரேனும் உண்மையை சொல்லுங்கள், குடிக்காதவர்கள் அனைவரும் நல்லவர்களா?

ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? கையில் காசில்லாததால், குடிக்காதவனுமா?? ஒரு ப்யூன் 200 ரூபாய் தான் ல‌ஞ்ச‌ம் வாங்குறான், ஆனால், க‌லெக்ட‌ர் 50,000 கேக்குறான், ப்யூன் தான் ரொம்ப‌ நல்ல‌வ‌ன் என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து.//
அருமையான, நியாயமான வாதம், நிதானமான வாதம்.

ஆனால் குடி, நிதானத்தை இழக்கச் செய்யக் கூடியது. உங்களது அடுத்த வரியைப் போல.
//இவ‌ர்க‌ள் த‌ரும் அட்வைஸ்க‌ள் க‌டும் கொலை வெறியை தான் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌.//

துளசி கோபால் said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....

நான் இதுவரை இத்தனை வயசுக்குக் குடிச்சதே இல்லை.

இப்பச் சொல்லுங்க நான் தெய்வமா?

அது சரி said...

//
Anonymous said...
well said. same blood.

//
வாங்க அனானி. நீங்களும் நம்ம கட்சியா??

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
குடிப்பது ஒரு பழக்கம், அயோகியத்தனம் ஒரு குணம், இந்த குணம் பழக்கம் பார்த்தெல்லாம் இருபதில்லை. அப்படியே குடிப்பது அயோகியத்தனம் என்று யாரேனும் வாதிட்டால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அது அவனை மட்டுமே பாதிக்கிற ஒரு விஷயம், அதனை விமர்சித்தால் நீங்கள் எதிர் விமர்சனத்தை எதிர் பார்த்தே இருங்கள்.

//

வாங்க குடுகுடுப்பை. மிகச்சரியான வாதம். நான் சொல்வதும் இதே தான்.

அது சரி said...

//
Sundar said...
குடிப்பது தனிப்பட்ட உரிமை தான். ஆனால் அந்த தனியுரிமை, ஒருவருக்கு உள்ள மற்ற கடமைகளிலோ அல்லது, அவரை சார்ந்தவர்களையோ பாதிக்கும் பொது, அந்த பழக்கத்தை கட்டுப்படுத்தாவிடில் ரொம்பவும் தனிப்பட்டவராகவேண்டி வரும். யார் சொல்கிறார்கள் என்பதை விட, அவர் சொல்வதில் எந்த அளவு, நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, மற்றவற்றை தள்ளுபடி பண்ணிவிட வேண்டியது தானே!

//

வாங்க சுந்தர். வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரியே. எக்காலமும் குடித்து விட்டு, கடமைகளை செய்யாதிருப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.

ஆனால், எனது கோபம், குடிப்பவன் ஒழுக்கக்கேடானாவன் என்று சித்தரிக்கும் தமிழ் நாட்டின் போலி கலாச்சாரத்தின் மீதும், அதன் காவலர்களாக தங்களை தாங்களே நியமித்து கொண்டிருக்கும் அயோக்கியர்கள் மீதும் தான்.

எனது இந்த பதிவுக்கு மிக முக்கிய காரணம் ஒரு பெண். அந்த பெண்ணிடம் நான் சொன்னதையே இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

என்ன தான் உதறிவிட்டு போனாலும், அட்டைகள் எனக்கு அருவெறுப்பைத் தான் ஏற்படுத்துகின்றன!

அது சரி said...

//
Anonymous said...
//என‌க்கு டைரி எழுதும் ப‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால், இங்கு எழுதிவிட்டேன். ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன்னிக்க‌வும்!)//

ப்ளாகுங்கறதே அப்படி ஆரம்பிச்சதுதாங்க!

தமிழ் பதிவுகளப் பாத்து அது ஏதோ சிறுபத்திரிகை நடத்துவது போல என எண்ணிவிடாதீர்கள்.

பாய்ஸ் படத்துல சொல்ற மாதிரி "அனத்துங்க மங்களம் ஸார், அனத்துங்க". அப்படியாச்சும் மனபாரம் குறையும்.

//

வாங்க அனானி. உங்க காமெடி சென்ஸ் சூப்பர். அந்த படத்தில எனக்கு பிடிச்ச இன்னொரு வசனம்,

"புரியுது சார். உங்க லவ்வர் மடியிலேயே எதாவது வேல கெடைக்குமான்னு தேடியிருக்கீங்க"

அது சரி said...

//
பாபு said...
"ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? "

குடிக்கும் பழக்கம் இல்லாத எவ்வளவோ பேர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்.
அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத எல்லா பழக்கமும் நல்ல பழக்கம் தான்

//
வாங்க பாபு. உங்க கருத்து தான் எனது கருத்தும். அடுத்தவனுக்கு கஷ்டம் குடுக்காதவரை, அடுத்தவன் விஷயத்துல தலையிடாதீங்க, அவ்வளவு தான். என்னவோ தெரியல, நம்ம மக்களுக்கு அடுத்தவங்கள பத்தி பேசாட்டி தலை வெடிச்சிருமாட்ருக்கு.

அது சரி said...

r.selvakkumar said...
//அப்படி இருக்கையில், எனக்கு புரியவில்லை, குடிப்பவர்கள் எல்லாம் சமூக வியாதிகள், இழிவானவர்கள் என்ற பிம்பம் ஏன்? யாரேனும் உண்மையை சொல்லுங்கள், குடிக்காதவர்கள் அனைவரும் நல்லவர்களா?

ஒரு நாளும் ஆல்கஹாலை தொட்டதில்லை என்பது மட்டுமே ஒருவரை தெய்வத்தின் அவதாரமாக்கி விடுமா?? கையில் காசில்லாததால், குடிக்காதவனுமா?? ஒரு ப்யூன் 200 ரூபாய் தான் ல‌ஞ்ச‌ம் வாங்குறான், ஆனால், க‌லெக்ட‌ர் 50,000 கேக்குறான், ப்யூன் தான் ரொம்ப‌ நல்ல‌வ‌ன் என்று சொல்வ‌து போல் இருக்கிற‌து.//
அருமையான, நியாயமான வாதம், நிதானமான வாதம்.

ஆனால் குடி, நிதானத்தை இழக்கச் செய்யக் கூடியது. உங்களது அடுத்த வரியைப் போல.
//இவ‌ர்க‌ள் த‌ரும் அட்வைஸ்க‌ள் க‌டும் கொலை வெறியை தான் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌.//

====

வாங்க‌ செல்வ‌க்குமார். நிதான‌ம் இழ‌க்க கூடிய‌ அள‌வுக்கு நான் குடிப்ப‌தில்லை. அப்ப‌டி யாரேனும் குடித்தால், அவ‌ர்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பிர‌ச்சினை ஏற்ப‌டாத‌வ‌ரை என‌க்கு அக்க‌றை இல்லை!

கொலை வெறி என்ப‌து, குடித்து விட்டு நிதான‌ம் இழ‌ந்த‌தால் ஏற்ப‌ட்ட‌த‌ல்ல‌. முதுகுக்கு பின் புற‌ம்பேசும் அசிங்க‌மான‌ ம‌னித‌ர்க‌ளை க‌ண்ட‌தால்!

அது சரி said...

//
துளசி கோபால் said...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....

நான் இதுவரை இத்தனை வயசுக்குக் குடிச்சதே இல்லை.

இப்பச் சொல்லுங்க நான் தெய்வமா?

//

வாங்க துளசி கோபால்.
நீங்க தெய்வமா? எனக்கு தெரியலீங்க. ஆனா, தெய்வமா இருந்தாலும் ஆபத்து தான். பழனி முருகன் முதுகை சுத்தமா சுரண்டிட்டாய்ங்க!

மங்களூர் சிவா said...

:))))

தப்பே இல்லை!

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
:))))

தப்பே இல்லை!

//

வாங்க சிவா அண்ணாச்சி!

ஆதரவுக்கு நன்றி தல :0)

Sundar said...

////ஆனால், எனது கோபம், குடிப்பவன் ஒழுக்கக்கேடானாவன் என்று சித்தரிக்கும் தமிழ் நாட்டின் போலி கலாச்சாரத்தின் மீதும், அதன் காவலர்களாக தங்களை தாங்களே நியமித்து கொண்டிருக்கும் அயோக்கியர்கள் மீதும் தான். //
உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. தனியுரிமைகள் குறித்து moral policing செய்வதில் பலர் உண்மையில் hypocrites என்பது என் கருத்து. பல வருஷம் முன் சைவம்-அசைவம் குறித்த விவாதம் எனக்கு ஞாபகம் வருது. கட்டி போட்டு வளர்த்து, பின், அதன் அனுமதி இன்றி எடுக்கப்படும் மாட்டு பால் குடிப்பவர்களுக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் அருவருப்பாக பட்டால் அது ஒரு hypocritic நிலைப்படாகத்தான் எனக்கு தெரிகிறது என்றேன். //

Prabakar Samiyappan said...

நண்பா .. தப்பே இல்லை .. குடித்துவிட்டு மற்றவர்களை சீண்டாத வறை தப்பே இல்லை .. ஆனா ஒன்னு மட்டு உண்மை .. ஒரு சில ஆட்கள் குடித்து விட்டு தான் பல உண்மை கலை சொல்வார்கள் [ ஸாரி உளருவார்கள் ] ..

Anonymous said...

Adhu Sari,
How this "image" got developed in tamil nadu ? just think then you will find the answer.

Once in a while, during festival seasons I used to go down to my native village. I am a drinker. I consume atleast 90 - 120 per day during night time. Nobody knows that I am a drinking ( especially my daughters; ofcourse except my wife )

This deepavali when I was there, All the youngsters in my street just wished me and so I also. They asked lots of queries about IT and other markets in the world which explained with patients ( Ofcourse, I didn't have much work to do.. ). They keenly watched everything.

The same day some bloody guy ( perhaps their fried ) came from chennai and wants to prove that he is earning money, he bought bagpiper and gave it to all youngsters during night time.

Thats all after that all the nonsences started. They started talking rubbish about everybody in the street including me..

Now, tell me how the society will treat about "kudikaran"

only few people enjoys this and that is the most precious thing in the world. If you give me a gift that I can live 100 years without liquor, I don't want that.

ராஜ நடராஜன் said...

விவாதத்திற்குரிய பதிவு என நினைக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை குடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள்,குடிக்காத யோக்கியர் கொள்கையில் மாறுபடுகிறேன்.அதே சமயம் குடிரகசியம் புரியாமல் தமிழ்சமுதாயம் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டதும் குடிக்கு அவமானமாகப் போனது ஒரு காரணமாக இருக்கலாம்.சினிமாக் கதாநாயகர்களைப் பாருங்கள்.பாட்டிலை எடு ஒரே மொடக்குத்தான் முழு பாட்டிலும் காலி.மேலும் சிலருக்கு மது மனச்சிதைவை ஏற்படுத்துகிறது.ஐரோப்பியக் குளிருக்கும் அமெரிக்க தரம் பிரித்தலுக்கும் குடி உகந்ததே எனக் கூறலாம்.ஆனால் தமிழ்நாட்டுக்கு டாஸ்மார்க் சரிப்பட்டு வருவதில்லை.

ராஜ நடராஜன் said...

//only few people enjoys this and that is the most precious thing in the world//

The core issue of the topic:)