Thursday, 21 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதலன் - பாகம் ஒன்று

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்
என்று நினைக்கும் பெண்களும்,
அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,
தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
"மாதித்தா, உஜ்ஜைனியிலிருந்து பிரிட்டனுக்கு ஓடி வந்து விட்டதால் தப்பி விட்டதாக நினைக்காதே. மந்திரவாதிக்கு நீ கொடுத்த வாக்கை இன்னமும் நீ நிறைவேற்றவில்லை. உடனடியாக என்னை சந்தி. மேலும் விபரங்கள் அடுத்த செய்தியில்".

==========
விக்கிரமாதித்தனுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த வேதாளமும் அந்த நாதாரி மந்திரவாதியும் விட்ட பாடாயில்லை. இதில் இந்த வேதாளம் SMS அனுப்பும் அளவுக்கு முன்னேறி விட்டது. எவனிடம் மொபைல் ஃபோனை ஆட்டை போட்டதோ?
வேதாளம் சொன்ன இடம் வழக்கம் போல, ஷெஃப்பீல்ட் அடுத்து அறுபது மைல் தாண்டி ஒரு காடு. வேதாளம் என்ன ஹில்டன் ஹோட்டலுக்கா அழைக்கும்? வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும்.
விக்கிரமாதித்தன் இப்பொழுதெல்லாம் குதிரை ஓட்டுவதில்லை. அதுவும் தவிர, யார்க்ஷையரில் குதிரைக்கு எங்கே போக??அத‌னால், த‌ன‌து புத்த‌ம் புதிய‌ BMW 320 யை கிள‌ப்பினான்.
‍‍‍‍‍‍‍‍=========================
"வா மாதித்தா, வா. பார்த்து சில‌ நூற்றாண்டு இருக்குமா?"
வேதாள‌ம் தான் ஒரு ம‌ர‌த்திலிருன்து த‌லை கீழாக‌ தொங்கிய‌ப‌டி கூவிய‌து. விக்கிர‌மாதித்த‌ன் குர‌ல் வ‌ன்த‌ திசையை பார்த்தான். வேதாள‌ம் விசித்திர‌மாக‌ உட‌ல் முழுதும் மூடிய‌ ஒரு ஓவ‌ர் கோட்டும், கொம்புக‌ளுக்கு காலுக்கு போடும் சாக்ஸும் மாட்டிய‌ப‌டி ஒரு பெரிய‌ ம‌ர‌த்தின் அடிக்கிளையில் த‌லை கீழாக‌ தொங்கிக் கொண்டிருன்த‌து!
"முட்டாள் தாள‌மே! உன் வ‌ர‌வேற்புக்காக‌ நான் வ‌ர‌வில்லை. எத‌ற்காக‌ என்னை வ‌ர‌ச் சொன்னாய்? நான் இப்பொழுது தான் ராம‌தாசு, ல‌ல்லு பிர‌சாத், மாயாவ‌தி வ‌கைய‌றாக்க‌ளின் தொல்லை இல்லாம‌ல் நிம்ம‌தியாக‌ இருக்கிறேன். உன‌க்கும் அன்த‌ ம‌றை க‌ழ‌ண்ட‌ கிழ‌ட்டு ம‌ன்திர‌வாதிக்கும் அது பொறுக்க‌வில்லையா?? அது ச‌ரி, இது என்ன‌ விசித்திர‌மான‌ உடை? கொம்புக்கு சாக்ஸு?"
"மாதித்தா, நீ உணர்ச்சி வசப்படுவதில் வைகோவுக்கு நிகர் என்று அடிக்கடி நிரூபிக்கிறாய். அவர் போலவே உனது வாக்கையும் மறந்து விடுகிறாய். அது உன் போன்ற அரசியல்வாதிகளுக்கு சகஜமே. போகட்டும். என் உடை பற்றி உனக்கு ஏன் இந்த கவலை? உனக்கு மட்டும் தான் குளிருமோ? இந்த பிரிட்டனில் அடிக்கும் ஊதக்காற்றில் கிட்னிக்கு உள்ளே இருக்கும் யூரின் கூட உறைந்து விடும் போலிருக்கிறது. அது தான் இந்த ஓவர் கோட்".
"உன் பாழாய்ப் போன கொம்புக்கு எதுக்கு சாக்ஸ்?"
"என்ன மாதித்தா? என்னையும் உஜ்ஜைனி மக்கள் என்று நினைத்தாயா? அவர்கள் தான் எதற்கு உறை மாட்ட வேண்டுமோ, அதற்கு மாட்டாமல், மக்கள் தொகையை பெருக்கிவிட்டார்கள். ஆனால், நான் எனக்கு முக்கியமான இடத்தில் மாட்டி இருக்கிறேன்"
"என்ன எளவோ! எப்படி SMS அனுப்பினாய்? மொபைல் ஃபோனை எவனிடமிருந்து ஆட்டையை போட்டாய்??"
"மாதித்தா, மீண்டும் மீண்டும் தவறு செய்கிறாய். நான் திருடவில்லை. எவனோ ஒருத்தன் ஃபோனை பாரில் மறந்து வைத்துவிட்டான். அவ்வளவே. என் கஷ்ட காலம், அவன் ஒரு மிஸ்டு கால் மொள்ளமாரி போலிருக்கிறது. Pay and Go அக்கவுண்டில் அம்பது பென்ஸ் தான் இருந்தது. அதனால் தான் உன்னை அழைக்கவில்லை. இல்லாவிட்டால் நான் அழைத்திருப்பேன். குறுஞ்செய்தி அனுப்பியிருக்க மாட்டேன். என்னையும் மிஸ்டு கால் கொடுக்கும் தமிழ்னாட்டு கயவன் என்று நினைக்காதே!"
விக்கிரமாதித்தனுக்கு எரிச்சலாக் இருந்தது. இந்த வேதாளம் பேசுவதை எல்லாம் கேட்க வேண்டிய தலைவிதி. நாடாறு மாதம், காடாறு மாதம் என்று இந்த நாடோடி வாழ்க்கை தேவையா?
"அசட்டு வேதாளமே, உன் சொந்த கதை சோக கதை கேட்க நான வரவில்லை. என்னை எதற்கு வரச் சொன்னாய்?"
"அவசரப்படாதே மாதித்தா. சொல்கிறேன். அதற்கு முன் நான் வான்கி வரச்சொன்ன விஷ்யங்கள்...."
விக்கிரமாதித்தன் தனது தோள்ப்பையிலிருந்து ஒரு ஸ்காட்ச் விஸ்கியும், ஒரு பாக்கெட் ஊறுகாயும் எடுத்து நீட்டினான்.
"தேங்க்ஸ் மாதி. என்ன தான் இருந்தாலும் ஓல்டு மங்க்கும், பூண்டு ஊறுகாயும் அடிச்ச மாறி வராது, என்ன சொல்ற?" (இன்த‌ வேதாள‌த்திட‌ம் இது ஒரு புது பிர‌ச்சினை. த‌ண்ணி அடித்தால், ரொம்ப்ப்ப்ப்ப‌ ஃபிர‌ண்ட்லியாகி விடும்!)
சப்பு கொட்டியபடியே, வேதாளம் அரை பாட்டில் விஸ்கியை முடித்தது.
"மாதி, நீயும் ஒரு ரவுண்டு அடியேன். குளுருக்கு எதமா இருக்கு".
"ஒரு மண்ணும் வேணாம். நான் திருப்பி வீட்டுக்கு கார் ஓட்டணும். இது என்ன, இந்தியான்னு நெனச்சியா? போலிஸ்காரனுக்கு ஒரு குவாட்டரை குடுத்து கரெக்ட் பண்ண?. சரி சரி, ரவுண்டு முடிஞ்சதில்ல. இப்ப சொல்லு. எதுக்கு என்ன வர சொன்ன? சீக்கிரம் சொன்னின்ன, நான் பாட்டுக்கு இப்பிடியே போய்க்கினே இருப்பேன்".
வேதாளம் வாயை துடைத்து கொண்டது. "ஸ்ஸ், அப்பாடா, ஒரு ரவுண்டு அடிச்சாதான் மனசே தெளிவாவுது. இன்னா சொள்ர மாதி??"
"இன்னா கேட்ட, மேட்ரா? வருவேமில்ல? எதுக்கு இப்பிடி காசுக்கு வந்த அயிட்டம் மேறி குதிச்சினுக்கீர??"
விக்கிர‌மாதித்த‌ன் பெரும் க‌டுப்பானான். முழுசா ஒரு அரை பாட்டில் விஸ்கிய‌ முழுங்கிட்டு இன்த‌ வேதாள‌ ந‌க்க‌ல‌ பாரேன். ம்ம், ப‌க்க‌த்து ஃப்ளாட் ஸ்பானிஸ் குட்டிய‌ க‌ண‌க்கு ப‌ண்ணிட்டு இருக்க‌ வேண்டிய‌ இன்த‌ டைம்ல‌, இன்த‌ வேதாள‌த்தோட‌ கூத்த‌டிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. எல்லாம் விதி!
"மாதித்தா, நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. ஆனால், கேட்ப‌து தான் பிரிய‌ல‌. நான் ஒரு க‌தை சொல்லி கேள்வி கேட்ப‌தும், நீ ப‌தில் சொல்வ‌து தான் தானே ந‌ம‌து வ‌ழ‌க்க‌ம். அது உன‌க்கு ம‌ற‌ன்துவிட்ட‌தா?"
"ச‌ரி, உன‌து எழ‌வெடுத்த‌ க‌தையை சொல். பீ. வாசுவின் குசேல‌ன் க‌தை போல் இல்லாம‌ல், க‌த‌ ப‌றையும் போள் மாதிரி இருன்தால் ச‌ன்தோஷ‌மே"
"ம்ம். புது ப‌ட‌மெல்லாம் பாத்துட்ட‌ போல‌ இருக்கு. இருக்க‌ட்டும். ந‌ம்ம‌ க‌தை வ‌ழ‌க்க‌ம் போல‌ ஒரு கோக்கு மாக்கான‌ க‌தை தான்."
"க‌தைக்கு வா தாள‌மே".
"உன் அவ‌ச‌ர‌ம் புரிகிற‌து மாதித்தா. அன்த‌ ஸ்பானிஷ் சிட்டை எவ‌னாவ‌து இன்னைக்கி நைட்டு த‌ள்ளிக்கினு போயிருவானோ என்று நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. அத‌னால் க‌தைக்கு வ‌ருகிறேன்."
"அத‌ற்கு முன் உன‌க்கு விதி முறைக‌ளை நினைவுப‌டுத்துகிறேன். என்னை ம‌ன்திர‌வாதியிட‌ம் ஒப்ப‌டைத்தால் தான் உன‌க்கு விடுத‌லை.ஆனால், என்னை அழைத்து செல்லும் போது எக்கார‌ண‌ம் கொண்டும் உன் ம‌வுன‌ம் க‌லைய‌க்கூடாது. க‌லைன்தால் நான் மீண்டும் ம‌ர‌த்திற்கு வ‌ன்து விடுவேன். நியாப‌க‌ம் இருக்கிற‌தா?"
"எல்லாம் இருக்கிற‌து. உன் க‌தைக்கு வா".

====
விக்கிரமாதித்த‌னின் அவ‌ச‌ர‌த்தின் ரகசியத்தை ர‌சித்த வேதாள‌ம் தொண்டையை க‌னைத்த‌ப‌டி க‌தையை ஆர‌ம்பித்த‌து.
"விக்ர‌மாதித்தா, த‌மிழ் க‌லாச்சார‌ம் ப‌ற்றி நீ என்ன‌ நினைக்கிறாய்??"
======== தொட‌ரும் ============

15 comments:

துளசி கோபால் said...

:-)))))

யாத்ரீகன் said...

awaiting further :-)

அது சரி said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்.

இப்ப ரெண்டாம் பாகமும் போட்ருக்கேன். நீங்க ஸ்மைலி போட்ருக்கதனால சொல்றேன், இது நெசமாவே காமெடி கத இல்ல.

அது சரி said...

வருகைக்கு நன்றி யாத்ரீகன்.

கத இனிமே தான் ஆரம்பிக்க போகுது. படிச்சிட்டு சொல்லுங்க‌

மங்களூர் சிவா said...

கலக்கல்
:-))))))

மங்களூர் சிவா said...

கலக்கல்,
ரெண்டாவது பார்ட்டுக்கு போறேன்

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
கலக்கல்,
ரெண்டாவது பார்ட்டுக்கு போறேன்

//

சிவா அண்ணாச்சி, நீங்க தானா? நீங்களே தானா??

மூத்த பதிவராயிருந்தாலும், புதிய பதிவுகளுக்கும் வந்து வாழ்த்தும் உங்களுக்கு நன்றி!!!

மங்களூர் சிவா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அதுசரி. படிச்சி சிரிச்சிகிட்டே இருந்தேன்.

நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்.

மூத்த பதிவர், புதியவர்னு எல்லாம் எதும் இல்ல

சீர்ஸ்ஸ்ஸ்ஸ்!

கயல்விழி said...

அதுசரி

புது பதிவரா நீங்கள்? நம்புவது சிரமமாக இருக்கிறது. அற்புதமான எழுத்து நடை, அடுத்த பாகத்துக்கு போகிறேன்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

"விக்ர‌மாதித்தா, த‌மிழ் க‌லாச்சார‌ம் ப‌ற்றி நீ என்ன‌ நினைக்கிறாய்??"
//

விக்ரமாதித்யன் : அதுவா வேதாளம் அதைப்பற்றி நீ மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யாவைத்தான் கேட்க வேண்டும்

அது சரி said...

//
கயல்விழி said...
அதுசரி

புது பதிவரா நீங்கள்? நம்புவது சிரமமாக இருக்கிறது. அற்புதமான எழுத்து நடை, அடுத்த பாகத்துக்கு போகிறேன்.

//

அழைப்பிற்கிணங்கி வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கயல்விழி.

அது சரி said...

//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
"விக்ர‌மாதித்தா, த‌மிழ் க‌லாச்சார‌ம் ப‌ற்றி நீ என்ன‌ நினைக்கிறாய்??"
//

விக்ரமாதித்யன் : அதுவா வேதாளம் அதைப்பற்றி நீ மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யாவைத்தான் கேட்க வேண்டும்

//

எதுக்கு, அவரு வேதாளம் கொம்புல டின்னு கட்டவா? அதுவே பாவம், மொட்டத்தலையோட அலையுது. அதையும் கெடுத்துரிவிங்க போலிருக்கு.

வருகைக்கு நன்றி அப்துல்லா சார்.

அமர பாரதி said...

// நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. ஆனால், கேட்ப‌து தான் பிரிய‌ல‌. //

இதுதான் சூப்பர்.

அது சரி said...

//
அமர பாரதி said...
// நீ நினைப்ப‌து என‌க்கு தெரிகிற‌து. ஆனால், கேட்ப‌து தான் பிரிய‌ல‌. //

இதுதான் சூப்பர்.

//

வாங்க பாரதி. அடிக்கடி வாங்க!

Syam said...

//இது நெசமாவே காமெடி கத இல்ல.
//

though its not meant for comedy, your way of narration is really superb...keep going...