Sunday, 24 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் மூன்று

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!


தம்மை ஊதி முடித்த வேதாளம், உடனடியாக மீண்டும் ஒரு தம்மை பற்ற வைப்பதை விக்கிரமாதித்தன் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

"ரொம்ப தம் அடிக்காத தாளமே. கேன்சர் வரும்னு எல்லாரும் சொல்றாங்க".
"மாதித்தா, என் மேல் தான் உனக்கு எவ்வளவு அக்கறை. நீ உண்மையிலேயே ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்".

"ச்சேசே, அப்பிடியெல்லாம் ஒன்னுமில்ல. உன்னை பிடித்து கொண்டுவருவதாக மந்திரவாதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். நீ பாட்டு கேன்சர் வந்து மண்டய போட்டுட்டா அப்புறம் நான் எப்படி வாக்கை காப்பாற்றுவது?"
கேட்ட விக்கிரமாதித்தனை வேதாளம் கடுமையாக முறைத்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த வேதாளத்தை விக்கிரமன் கையுயர்த்தி தடுத்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும் வேதாளமே. உன் வாய்ப்பாட்டை அப்புறம் வைத்துக் கொள். இப்ப கதைக்கு வா. அடிக்கிற குளிரில், எனது காது ஓட்டையில் ஐஸ் கட்டி உண்டாக ஆரம்பித்து விட்டது".
விக்கிரமனை முறைத்தபடி, வேதாளம் கதையை மீண்டும் ஆரம்பித்தது.
================================================


"விக்கிர‌மா, நீ என்றாவ‌து யாரையாவ‌து காத‌லித்து இருக்கிறாயா? பின் இர‌வில் ஆர‌ம்பித்து, அதிகாலையில் முடின்துவிடும் உன‌து அன்றாட‌ காத‌ல்க‌ளை கேட்க‌வில்லை. த‌மிழ் சினிமாக்க‌ளில் வ‌ரும் காத‌லுக்கு ம‌ரியாதை வ‌கை காத‌லை கேட்கிறேன்"

"காத‌லித்திருன்தால் தான் உன‌க்கு தெரியும். ஒருவ‌ரை பார்த்து ஏன் காத‌ல் வ‌ர‌வில்லை என்று ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் சொல்ல‌முடியும். ஆனால், ஏன் காத‌ல் வ‌ருகிற‌து என்று கார‌ண‌ம் சொல்வ‌து க‌டின‌ம். காத‌ல் வ‌ருகிற‌து, அவ்வ‌ள‌வே.அன்த‌ பெண்ணின் முக‌ம் பார்த்தா, அவ‌ள் அகம் பார்த்தா,அவ‌ள் உன்னை திட்டும் மொழி பார்த்தா, இல்லை அண்ணாமலையில் ரஜினிகாந்த் பார்த்தது போல் வேறு எதையாவது பார்த்தா என்று வ‌கைப்ப‌டுத்துவ‌து க‌டின‌ம்."

அப்ப‌டித்தான், விஜியை ரிசீவ் செய்ய‌ ஹீத்ருவில் காத்திருன்த‌ பிரைய‌னுக்கும் உட‌ன‌டியாக‌ காத‌ல் வ‌ன்துவிட்ட‌து. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌னுக்கே தெரியாத‌ போது, அவ‌ன் த‌ன‌து அப்போதைய‌ கேர்ள் ஃபிர‌ண்டை மூன்று நாட்க‌ளுக்கு முன் தான் பிரின்தான் என்ப‌தோ இல்லை அவ‌ன‌து முன்தைய‌ ஆறு காத‌லிக‌ளில் யாருமே இன்திய‌ பெண் இல்லை என்ப‌தோ கார‌ண‌ம் என்று நான் எப்ப‌டி சொல்ல‌ முடியும்? இருக்க‌லாம் இல்லாம‌லும் இருக்க‌லாம்.
அவ‌னுக்கு விஜியை பார்த்த‌வுட‌ன் காத‌ல் வ‌ன்துவிட்ட‌து. அவ்வ‌ள‌வு தான். விஜிக்கும் அவ‌னை பிடித்திருன்த‌து. உட‌னே, ஆஹா, ஒரு திரும‌ண‌ம் ஆன‌ பெண்ணுக்கு எப்ப‌டி ம‌ற்றொரு ஆண்ம‌க‌னை பிடிக்க‌லாம், இன்தியாவின் இர‌ண்டாயிர‌த்து நூற்று ப‌தினேழு புள்ளி எட்டு ஆண்டு க‌லாச்சார‌ம் என்ன‌ ஆவ‌து என்று குதிக்காதே.

ம‌திய‌ம் ஒரு ம‌ணிக்கு ல‌ண்ட‌ன் வ‌ன்து சேர‌ வேண்டிய‌ ஏர் இண்டியா விமான‌ம், கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் 12 ம‌ணி நேர‌ம் லேட்டாக‌ இர‌வு ஒரு ம‌ணிக்கு வ‌ன்து சேர்ன்திருக்கும் போது, த‌ன‌க்காக‌ அவ்வ‌ள‌வு நேர‌ம் காத்திருக்கும் ஒருவ‌னை யாருக்கு தான் பிடிக்காது?

ந‌ள்ளிர‌வில் ல‌ண்ட‌னில் எப்ப‌டி ச‌மாளிப்ப‌து, எங்கே போவ‌து என்ற‌ க‌வ‌லையுட‌ன் வ‌ன்த‌ விஜிக்கு, "Welcome to Britain. I am really sorry that your flight was delayed" என்று அன்த‌ ந‌ள்ளிர‌வில் புன்ன‌கையுட‌ன் வ‌ர‌வேற்ற‌ பிரைய‌னை பிடித்துப் போன‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை. இதே குட‌ன்தையில் க‌டைக்கு போய்விட்டு வ‌ர‌ ஐன்து நிமிட‌ம் லேட்டானாலும் அவ‌ள‌து மாமியார் அன்று முழுக்க‌ பேசும் பேசு தாங்க‌முடியாது என்ப‌தை விஜியின் ம‌ன‌ம் நினைக்க‌ த‌வ‌ற‌வில்லை.

த‌விர‌ 6.2 உய‌ர‌த்தில், ச‌த்ய‌ராஜின் ப‌ட‌ம் அல்ல‌, பிரைய‌ன் ஆண்ட‌ர்ச‌னின் உய‌ர‌ம், 6.2 அடி உய‌ர‌த்தில், அன்த‌ ந‌ள்ளிர‌வு குளிரில், ஸ்டெல்லா ஆர்டிஸ் பிய‌ர் கேனோடு நின்றிருன்த‌ பிரைய‌னை பார்த்து அவ‌ளுக்கு ஆச்ச‌ரிய‌ம். இன்த‌ குளிரில் எப்ப‌டித்தான் குடிக்கிறார்க‌ள்? குளிர்வ‌தால் தான் குடிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள் என்ப‌து பாவம், அன்த‌ குட‌ன்தை த‌மிழ்ப்பெண்ணுக்கு தெரிய‌வில்ல‌.

"Would you like to have a drink?"

ஆண்ட‌ர்ச‌ன் கேட்ட‌ போது விஜி கொஞ்ச‌ம் அதிர்ச்சி அடைன்தாள். இவ‌ன் குடிக்கிற‌து ப‌த்தாதுன்னு, ந‌ம்மை வேறு குடிக்க‌ சொல்கிறானே! எப்ப‌டித்தான் இவ‌ர்களுட‌ன் ஆறு மாத‌ம் குப்பை கொட்ட‌ போகிறேன்?

"No. No. I don't drink. You carry on".

"Err, VeeJee, I meant, would you like to have a coffee?".

விஜிக்கு த‌ன் மீதே சிரிப்பாக‌ வ‌ன்த‌து.

"Oh, Sorry. I thought...."

"No worries VeeJee. I am not taking you to the bar. I am already skint".


இருவ‌ரும் ப‌க்க‌த்தில் இருன்த‌ ஸ்டார் ப‌க்ஸில் காஃபி ஆர்ட‌ர் செய்தார்க‌ள். ஆன்ட‌ர்ச‌ன் பாலும், ச‌ர்க்க‌ரையும் இல்லாத‌ க‌றுப்பு காஃபி குடிப்ப‌தை விஜி ஆச்ச‌ரிய‌த்துட‌ன் பார்த்து கொண்டிருன்தாள். ஏழைக‌ள் ம‌ட்டுமே க‌டுங்காப்பி குடிப்பார்க‌ள் என்று நினைத்து கொண்டிருன்த‌ விஜிக்கு ஆச்ச‌ரிய‌மே!

விக்கிர‌மாதித்தா, விதி ம‌னித‌ர்க‌ள் பிற‌ன்த‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளால் தீர்மானிக்க‌ப்ப‌டுகிற‌தா என்ப‌து என‌க்கு தெரியாது, ஆனால், அன்த‌ ஸ்டார் ப‌க்ஸில் விஜியின் விதி மீண்டும் எழுத‌ப்ப‌ட்டு கொண்டிருன்த‌து.
=====================================


அடுத்த நான்கு வாரங்கள் விஜிக்கு உண்மையிலேயே மிகவும் பிஸியான நாட்கள். தான் கற்றுக்கொள்ள வேண்டியது ஏகப்பட்டது இருப்பது அவளுக்கு தெரிந்தது. பிரையன் ஆண்டர்சன் தான் அந்த டிபார்ட்மெண்டின் முக்கிய புள்ளி என்பதும், அவனுக்கு வேலை நேரம் போக பெண்களை துரத்துவது தான் வேலை என்பதும் விஜிக்கு சொல்லப்பட்டது. ஆனால், அவன் நடந்து கொண்ட விதம், மற்றவர்களை நடத்திய விதம் அவளுக்கு பிடித்திருந்தது. இந்திய வங்கியில், அசிஸ்டண்ட் டெபுடி சீனியர் கிளர்க் ஆக இருந்தாலே மற்றவர்களை துரும்பாக பார்க்கும் மேலதிகாரிகளையே பார்த்திருந்த விஜிக்கு, Head of EMEA ஆக இருந்த பிரையன், மற்றவர்களுக்காக காஃபி வான்கியதும், தினந்தோறும் அவளுக்கு லிஃப்ட் கொடுப்பதும் ஆச்சரியமாக இருந்ததில் தப்பில்லையே விக்கிரமாதித்தா??

ஆனால், அவள் பாருக்கு போவதை மட்டும் தவிர்த்தாள். குறைந்த பட்சம் வாரத்துக்கு இரண்டு முறை டீமில் எல்லாரையும் பாருக்கு அழைத்து போவது பிரையனின் வழக்கமாக இருந்தது. விஜி ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லி தட்டி கழித்து வந்தாள். குடிக்கிற எடத்துக்கு பொம்மனாட்டி போவதாவது? மாமியாருக்கு தெரிந்தால், என் மண்டையை உடைத்து விடுவாள். இவர்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே, என்று விஜி நினைத்து கொண்டாள். தவிரவும், அவளுக்கு குடிப்பவர்கள் மேல் அவ்வளவு மரியாதை இல்லை. அவள் கணவன் ஒருவன் போறாதா, குடிப்பவர்களின் லட்சணத்தை தெரிந்து கொள்ள??


ஆனால், அதற்கும் ஒரு முடிவு வந்தது. அந்த வெள்ளிக்கிழமை அவள் பாருக்கு வராவிட்டால் அவளுடன் யாரும் பேசப்போவதில்லை என்றும், அவளுக்கு யாரும் MiFID பற்றி சொல்லித்தர போவதில்லை என்றும் அன்றைய டீம் மீட்டிங்கில் அவளது தோழி ஜெஸிக்கா அறிவித்தாள். பிரையனும் தன் பங்குக்கு தான் இனிமேல் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கப்போவதில்லை என்று அறிவித்தான்!


விக்கிரமாதித்தா, ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு லண்டனில் வெள்ளையர் செய்த கொடுமை என்று கொதிக்காதே! அவர்கள் கலாச்சாரப்படி, வெள்ளைக்காரனுக்கு கலாச்சாரம் எல்லாம் உண்டா என்று கேட்காதே, அவர்கள் கலாச்சாரப்படி இதெல்லாம் விளையாட்டு. உன்னை வற்புறுத்தி கூப்பிடுகிறார்கள் என்றால், உன்னை அவர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அதனால், கொடுமை என்று கொடிபிடிக்காதே.

ஆனால், விஜிக்கு பாவம் இதெல்லாம் தெரியவில்லை. எங்கே உண்மையிலேயே தன்னை டீமிலிருந்து ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள்...ஆனாலும் அவளுக்கு பாருக்கு போவதில் இஷ்டமில்லை. டிஸ்கோ சாந்திகளும், சிலுக்கு சுமிதாக்களும் தான் பாருக்கு போவார்கள், அம்பிகாக்களும் நதியாக்களும் அம்மன் கோவிலுக்குத்தான் போவார்கள் என்று அவளுக்கு நம்பிக்கை.
அந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. ஜெஸிக்கா அவளை நிஜமாகவே தரதரவென்று பாருக்கு இழுத்து போய்விட்டாள்.
"Dont be silly VeeJee. We are not bad girls" என்று சுய விளம்பரம் வேறு!
=================


அது லண்டனின் காஸ்ட்லி பகுதியான St.James Place ல் இருந்த பார். ப‌ணம் படைத்த பெரிய மனிதர்கள் மட்டுமே அந்த பாருக்கு வர முடியும் என்பதும், அந்த பாருக்கு உள்ளே நுழைய தனிப்பட்ட மெம்பர்ஷிப் வேண்டும் என்பதும், பிரையன் ஆன்டர்சனின் தாய்வழி மாமன் லங்காஷயரின் ட்யூக் என்ப்தால் பிரையனுக்கு அங்கு தனி செல்வாக்கு உண்டு என்பதும் பாவம், குடந்தையிலிருந்து சென்ற விஜிக்கு தெரிய நியாயமில்லை.


ஆனால், பல அறுபது வயதான பெரிய மனிதர்கள் 18 வயது இளம்பெண்களுடன் குடித்தவாறே உல்லாசமாக இருப்பது விஜிக்கு ஆச்சரியாமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. இவர்களுக்கெல்லாம் குடும்பம், குழந்தைகள் என்று எதுவும் கிடையாதா??
அந்த பாரில் இருந்த பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் பிரையனை தெரிந்திருந்தது. பிரையன் ஆன்டர்சன் அவளை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தினான்.


அவள் வயதை ஒத்த, அவளை விட மிக சிறிய வயதுடைய, அவளை விட, அவள் மாமியாரின் வயதையொத்த என்று பல பெண்களும் Lovely girl என்று செல்லமாக அவளை முத்தமிட்டார்கள். சில ஆண்களும் அவளை கன்னத்தில் முத்தமிட்டார்கள். தப்பாக எடுத்துக்கொள்ளாதே விக்கிரமா, நண்பனின் மனைவியை செல்லமாக முத்தமிட வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். அவ்வளவே.
ஆனால், கணவன் தவிர எந்த ஆண்மகனின் ஸ்பரிசமும் படாத விஜிக்கு இது கடுப்பாக இருந்தது. எல்லாம் இந்த பிரையனால் வந்த வினை. இவன் எதற்கு என்னை எல்லாரிடமும் அறிமுகப்படுத்துகிறான்?? கேட்டே விட்டாள்.


"What's going on Brian? Why everyone is kissing me?"
பிரையனின் முகம் மன்னிப்பு கேட்கும் விதமாக மாறியது.

"I am sorry VeeJee. My Fault. Usually, I come to this bar with my girl friend of that time. So, when I introduce you, they think you are my current girl friend. I should have made it clear to them, which I didn't. I apologise".

"mmh. I hope its over now. Can you call me a taxi? I would like to go home".

"I am sorry VeeJee. Looks like I have upset you. I am really sorry".

"Its okay Brian. Its not something you planned".

"VeeJee, I would love to see you stay around for couple of hours. For my sake, please...And I want to talk to you, something personally".

விஜயலட்சுமிக்கு அவன் கெஞ்சுவதை பார்த்து சிரிப்பு வந்தது.

ஒரு பெண் பாஞ்சாலியின் சிரிப்பால், பாரதத்தின் சரித்திரமே மாறியது விக்கிரமா.
இந்த இடத்தில், விஜி சிரித்திருக்காவிட்டால், இந்த கதையும் இல்லை. நானும் நீயும் இந்த நடுக்காட்டில் இதைப்பற்றி பேசிக் கொண்டும் இருக்கப்போவதில்லை.

ஆனால், தனது விதி மாற்றப்பட போவது தெரியாமல் அவள் சிரித்துவிட்டாள்.


"Just for you Brian. What's that you want to talk to me?"

"mmm. errr.... You know VeeJee, I've never been this much reluctant in my entire life"

"I know there are a lot of rumours about me. That I am sleeping around, I am chasing girls etc etc. Most of them are true. Yes, I have slept with many girls. Some of them are girl friends and some of them are paid. "

விஜிக்கு குழப்பமாக இருந்தது. தனது சொந்த குப்பைகளை எல்லாம் ஏன் என்னிடம் கொட்டுகிறான்? ஒரு வேளை அதிகம் குடித்துவிட்டானா?

"I dont claim I am Mr.Nice Guy VeeJee. I know myself. I know I am 32 yars old, and you are 27. I have been with many girls, but I never ever thought of asking them this one question".

"What's that Brian?"

"WILL YOU MARRY ME VEEJEE?"

என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்று ஆன்டர்சன் கேட்டதும், விஜிக்கு அம்மன் கோவில் மணி அறுந்து தலையில் விழுந்தது போல் உலகம் இருண்டது!


"விக்கிரமா, ஏற்கனவே திருமணம் ஆன, ஒரு குடந்தை தமிழ்ப்பெண் இதற்கு என்ன சொல்வாள் என்று நினைக்கிறாய்??"

=============

கதைய கேள்வியுடன் நிறுத்திய வேதாளம், வயிற்றை பிடித்து கொண்டது.


"விக்கிரமா, மதியம் மெக் டொனால்ட்ஸில் ஒரு சிக்கன் பர்கர் சாப்பிட்டது. கொடும் பசி. எனக்கு டின்னருக்கு வாங்கி வரச்சொன்னேனே, வாங்கி வந்தாயா??"
"வாங்கி வந்திருக்கிறேன் வேதாளமே"
"என்ன வாங்கி வந்திருக்கிறாய்? நான் கேட்ட மொகல் பிரியாணியும், பஞ்சாபி சன்னா மசாலாவும் வாங்கி வந்திருக்கிறாயா?? பர்கர் சாப்பிட்டு, சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது"


"என் கஷ்ட காலம், உனக்கு சேவை செய்ய வேண்டிய நிலை. எல்லாம் அந்த கிழட்டு மந்திரவாதியால் வந்தது. இந்த லட்சணத்தில், நடிகன் படத்தில் சத்தியராஜிடம் உள்ளான் கேட்ட கவுண்டமணி போல் நீ கேட்க கூடாது".
சலித்து கொண்ட விக்கிரமாதித்தன், காருக்கு சென்று ஹாட் பேக்கில் வைத்திருந்த பிரியாணியை எடுத்து வந்தான்.


"ஆகா, நிஜமாகவே மொகல் பிரியாணியா? " என்று சப்புக்கொட்டிய வேதாளம், கால்களை மடித்து சம்மணமிட்டு சாப்பிட ஆரம்பித்தது.
விக்கிரமன் தானும் அந்த அத்துவான காட்டில் தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.


============== தொடரும் ==========================


16 comments:

துளசி கோபால் said...

அப்புறம்?????

அது சரி said...

//
துளசி கோபால் said...
அப்புறம்?????
//

அடடா, யார்னா பின்னூட்டம் போடுங்கப்பான்னு இப்பத்தான் வேண்டி விரும்பி கேட்டு ஒரு பதிவு போட்டேன்.

நீங்க அதுக்குள்ள ஒரு பின்னூட்டம் போட்ருக்கீங்க. ரொம்ப நன்றிங்க!

Anonymous said...

Excellent

யாத்ரீகன் said...

hmmmmmm.. aduthu yeppo ?

அது சரி said...

//
Anonymous said...
Excellent

//

பாராட்டுக்கு நன்றி அனானி.

அது சரி said...

//
யாத்ரீகன் said...
hmmmmmm.. aduthu yeppo ?

//

வருகைக்கு நன்றி யாத்ரீகன். அடுத்த பாகத்தை முடிஞ்சா சீக்கிரமே எழுதிருவேன்.!

Manikandan said...

your writing style is good.. Kindly write in english. Or take time to correct the spelling..It is atrociously wrong.

அது சரி said...

//
Manikandan said...
your writing style is good.. Kindly write in english. Or take time to correct the spelling..It is atrociously wrong.

//

வாங்க மணிகண்டன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Spelling mistake...

என்னோட இங்கிலீஷ் தப்புன்றீங்களா?? என்ன சாமி செய்ய சொல்றீங்க. நமக்கு தெரிஞ்ச இங்கிலீஷ் அவ்ளவுதான்! சட்டில இருக்கறது தான அகப்பையில வரும்??

ஒரு வேளை நம்ம தமிழ்ல தப்பு சொல்றீங்களா?? அது, உண்மைய ஒத்துக்கிறேன். சில இடங்கள்ல "லகர"ப்பிழைகள், அந்த கதாபாத்திரங்களின் பேச்சு மொழிக்காக வேணும்னே சொல்றது. நெறையப்பேரு, பழத்தை "பளம்"ன்னு தான் சொல்றாங்க பாஸு!

அப்புறம் சில இடங்கள்ல, எடிட்டர் பிரச்சினை. எனக்கு இன்னும் தமிழ் எடிட்டர் சரியா யூஸ் பண்ண தெர்ல. அதனால் வர்ற பிரச்சினை. ஆனா, டிரை பண்றேன்!

கயல்விழி said...

அது சரி

சில சந்தேகங்கள்
1. ப்ரையனுக்கு லூஸா? எந்த வெளிநாட்டு ஆணும் அத்தனை சீக்கிரம் ஒரு பெண்ணைப்பார்த்து "திருமணம் செய்துக்கொள்ளுகிறாயா" என்ற கேள்வியை கேட்பதில்லை. குறைந்த பட்சம் சில மாதங்களாவது தொடர்ந்து டேட் பண்ணிய பிறகு, அவளைப்பற்றிய விவரங்களை நன்றாக தெரிந்துக்கொண்ட பிறகே இந்த கேள்வி வரும். இது எப்படி?

2. வேதாளம் பேய் தானே, பேய்க்கு எதற்காக ப்ர்கரும், பிரியாணியும்? :)

மங்களூர் சிவா said...

சூப்பர்ங்ணா

அடுத்த பார்ட்க்கு ஓடறேன்

:)))

அது சரி said...

//
கயல்விழி said...
அது சரி

சில சந்தேகங்கள்
1. ப்ரையனுக்கு லூஸா? எந்த வெளிநாட்டு ஆணும் அத்தனை சீக்கிரம் ஒரு பெண்ணைப்பார்த்து "திருமணம் செய்துக்கொள்ளுகிறாயா" என்ற கேள்வியை கேட்பதில்லை. குறைந்த பட்சம் சில மாதங்களாவது தொடர்ந்து டேட் பண்ணிய பிறகு, அவளைப்பற்றிய விவரங்களை நன்றாக தெரிந்துக்கொண்ட பிறகே இந்த கேள்வி வரும். இது எப்படி?


//


மிக‌ச்ச‌ரியான‌ கேள்வி. ப‌ட‌ம் நீள‌மா இருந்தா சில‌ தியேட்ட‌ர் ஆப‌ரேட்டர்க‌ள் அவ‌ங்க‌ளே ரீலை கொஞ்ச‌ம் வெட்டிர்ற‌ மாதிரி, இந்த‌ மொட்டை வேதாள‌ம் சில‌ இட‌த்துல‌ க‌ட் ப‌ண்ணிடுச்சி. விக்கிர‌ம‌னின் அவ‌ச‌ர‌மும் ஒரு கார‌ண‌ம்.

நானும் கேட்டேன். "ஆன்ட‌ர்ச‌ன் இந்த‌ க‌தையில‌ சைடு ரோல் தான் ப‌ண்றான். அவ‌னுக்கு இவ்வ‌ள‌வு போதும்"னு சொல்லிடுச்சி. அத‌னால‌, விஜிக்கும், ஆன்ட‌ர்ச‌ன்னுக்கும் இடையில் ந‌ட‌ ந்த‌ ப‌ல‌ உரையாட‌ல்க‌ள் இட‌ம் பெற‌வில்லை. த‌விர‌ ஆன்ட‌ர்ச‌ன்னோட‌ கேர‌க்ட‌ர் ப‌த்தி ரொம்ப‌ சொல்ல‌ முடிய‌ல‌.//

2. வேதாளம் பேய் தானே, பேய்க்கு எதற்காக ப்ர்கரும், பிரியாணியும்? :)

//

நல்லா கேட்டீங்க‌. ம‌த்த‌ வேதாள‌மெல்லாம் எப்ப‌டியோ தெரிய‌ல‌, ஆனா இந்த‌ வேதாள‌ம் ஒரு தின்னி ப‌ண்டார‌ம்!

அது சரி said...

//
மங்களூர் சிவா said...
சூப்பர்ங்ணா

அடுத்த பார்ட்க்கு ஓடறேன்

:)))

//
வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி சிவா அண்ணாச்சி!

Indian said...

You rock man!!!

அது சரி said...

//
Indian said...
You rock man!!!

//
வருகைக்கு நன்றி இன்டியன் :0)

Syam said...

waiting for the next part.... :-)

Anonymous said...

Excellent Adhu Sari.
I startd readming from one and I am not able to stop ... and I'm keep going.

mappla.