Friday, 22 August 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மனைவியின் காதல் - பாகம் இரண்டு

அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!

"விக்கிரமாதித்தா, தமிழ் கலாச்சாரத்தை பற்றி என்ன நினைக்கிறாய்?"


வேதாளம் கேட்டதும் விக்கிரமாதித்தன் பேயடித்தவன் போலானான்.

தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவானேன், சு.சாமி போல் "பார்க்ககூடாத" கலாச்சார விஷ்யங்களை பார்ப்பானேன்? கொஞ்ச நாட்களுக்கு முன், ஆண் பெண் உறவில் பாதுகாப்பு வேண்டும் என்று குண்டுபூ நடிகை சொல்லப்போய், பல பெண்கள் துடைப்பத்துடன் அவரது வீட்டு வாசலில் தமிழ் கலாச்சாரத்தை நிரூபித்தனர். இதையெல்லாம் நினைவில் ஓட, விக்கிரமாதித்தன் அம்மா முன் நிற்கும் "மூத்த" அமைச்சர் போல் அமைதி காத்தான்.

"மாதித்தா, பயப்படாதே!. நமது கதை தமிழ் கலாச்சாரத்தை பற்றி அல்ல. தமிழ் கலாச்சார காவலர்களை சந்திக்க எனக்கும் துணிவில்லை. ஆனால், நமது கதானாயகி, விஜி என்ற விஜயலட்சுமி, தமிழ்னாட்டில், ஒரு காலத்தில் காவிரி ஓடி வளமான குடந்தையில் தான் பிறந்தாள். 1970களின் வழக்கப்படி, நான்கு ஆண் மக்களுக்கு பிறகு ஐந்தாவதாக பிறந்த ஒரே பெண். அவள் தந்தை ஊரில் முக்கியமான ஆள். அந்த ஊரின் மற்ற எல்லாரையும் போல அவரும் ஒரு விவசாயி."

"அவள் பிறக்கும் போது வளமாக இருந்த குடும்பம், தமிழுக்காக உயிரை கொடுக்கும், ஆனால், மயிரை கூட கொடுக்காத தமிழக அரசியல்வாதிகளாலும், நான்கள் எப்படிப்போனாலும், தமிழ்னாடு நாசமாக போக வேண்டும் என்ற நல்ல தேசிய உணர்வு கொண்ட கன்னட அரசியல்வாதிகள் கைங்கர்யத்தாலும், சுருங்கிப்போன காவிரி போல், வளம் குன்றி ரேஷன் கடையில் கெரசினுக்கு சண்டை பிடிக்கும் குடும்பமாக மாறிப்போனது".
"இதனால் எல்லாம் அவளது தந்தைக்கு ஊரில் இருந்த மதிப்பு குறையவில்லை. இன்னமும் ஊரின் மரத்தடி பஞ்சாயத்துக்கு அவர் தான் தலைவர். ஊரின் கொப்பரங்கண்ட மாரியம்மன் கோவிலுக்கு முதல் மரியாதை அவர் தான்."
விஜியும் இந்த சூழ்னிலையில் தான் வளர்ந்தாள். பெண்கள் எட்டாம் கிளாஸ் படித்தால் போதும் என்று இருந்த ஊரில், டவுனுக்கு சென்று காலேஜ் படித்த மொத்தம் ஏழு பேரில் அவளும் ஒருத்தி."
த‌மிழ் சினிமா ம‌ட்டுமே பார்ப்ப‌தாலோ என்ன‌வோ, அவ‌ளுக்கும் காத‌ல் வ‌ன்த‌து. எல்லா ப‌ட‌த்திலும் வ‌ருவ‌து போல் அது அவ‌ள‌து வீட்டுக்கும் தெரின்த‌து.
விக்கிர‌மா, என்ன‌ ந‌ட‌ன்திருக்கும் என்று நினைக்கிறாய்?? நீ நினைப்ப‌து ச‌ரியே. த‌மிழ்க‌லாச்சார‌ப்ப‌டி, காத‌ல் என்ப‌து க‌டும் குற்ற‌ம். அதுவும் வேறு ஜாதி ஆண்ம‌க‌னை காத‌லிப்ப‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ குற்ற‌ம். வேறு ஜாதி என்பதால் விஜியின் வீட்டிலும், வ‌ச‌தி இல்லாத‌ பெண் என்ப‌தால் அவ‌ள‌து காத‌ல‌ன் வீட்டிலும் க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள்.

ஆனால் அவ‌ள‌து காத‌ல‌ன் ஒன்றும் த‌மிழ் சினிமா காத‌ல‌ன் போல் போராட‌வில்லை. "என்ன‌ ம‌ன்னிச்சிடு விஜி. என‌க்கு வேற‌ வ‌ழி தெரில‌. நான் வேற‌ ஒருத்திய‌ க‌ல்யாண‌ம் செஞ்சிக்கிட்டாலும், உன் நினைவாக‌வே இருப்பேன்" என்று வ‌ஜ‌ன‌ம் பேசி விட்டு, ந‌ல்ல‌ வ‌ர‌த‌ட்ச‌னையுட‌ன் வேறு ஒரு பெண்ணை திரும‌ண‌ம் செய்து, வ‌ழி வ‌ழியாக‌ மூத்தோர்க‌ள் பாடுப‌ட்டு காத்த‌ த‌மிழ் க‌லாச்சார‌த்தை நிலை நாட்டினான்!
விஜியின் த‌ன்தை இவ‌ர்க‌ளுக்கு க‌லாச்சார‌த்தில் என்த‌ வித‌த்திலும் குறைன்த‌வ‌ர் அல்ல‌வே! அவ‌ரும் பாடுபட்டு ஒரு மாப்பிள்ளையை க‌ண்டுபிடித்தார். விஜியின் திரும‌ண‌மும் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ந‌டன்து முடின்த‌து!
=========================
ஆனால் அன்தோ ப‌ரிதாப‌ம். ந‌ய‌ன்தாரா போல் ந‌ல்ல‌ அழ‌கியான‌, அறிவாளியான‌ விஜியின் க‌ண‌வ‌ன் ஒன்றுக்கும் உத‌வாத‌வ‌ன். விவ‌சாயி என்று தான் பெய‌ர். ஆனால், அவ‌ன் நில‌த்தில் புல் ம‌ட்டுமே விளைன்த‌து. என்றாவது அந்த நிலத்தில் உழைத்தால் தானே! ஆனால் பாவம், விஜியின் கணவன் சந்திரனையும் குறை சொல்ல முடியாது. புர‌ட்சி இளைஞ‌ர் ச‌ங்க‌த்தில் சீட்டு விளையாட‌வும், அம்ம‌ன் ஒயின்ஸில் அக்க‌வுண்டில் த‌ண்ணி அடிப்ப‌தும் போக‌, அவ‌னுக்கு நேர‌மே கிடைப்ப‌தில்லை. அவ‌ன் என்ன‌ செய்வான்? ஆனால், அவ‌ன் குடிகார‌ன் என்று ஒப்புக்கொள்ள‌ மாட்டான். அவ‌னுக்கும்(!) ஒரு காத‌ல் தோல்வி இருன்த‌து. புண்ப‌ட்ட‌ நெஞ்சை குவாட்ட‌ர் ஊத்தி ஆத்துறேன் என்ப‌து அவ‌ன் கொள்கை.

திரும‌ண‌ம் ஆன‌ ஆறு மாத‌ங்க‌ளில், க‌ரூர் ச‌ர‌க்கு, த‌ர்ம‌புரி "குடிசை தொழில்" புக‌ழ் குவாட்ட‌ர் அடித்து அவ‌ன‌து குட‌ல் வென்த‌து. க‌ண்க‌ளும் ம‌ங்க‌லாயிற்று. அரைக்க‌ண் க‌ண‌வ‌ன், பேராசை மாமியார், வாய் திறக்கா மாமனார் இவ‌ர்க‌ளை காப்பாற்றும் பொறுப்பு விஜியின் த‌லையில் விழுன்த‌து!
வேக‌மாக‌ சொல்லி வன்த‌ வேதாள‌ம் சிறிது நிறுத்திய‌து.

=====================================
"விக்கிர‌மா, த‌ம்மு வ‌ச்சிருக்கியா?"
"நான் த‌ம் அடிப்ப‌தை குறைத்து கொண்டு வ‌ருகிறேன் வேதாள‌மே".
"அதை எவ‌ன் கேட்டான்? வ‌ச்சிருக்கியா இல்லியா?"
கேட்ட‌ வேதாள‌ம் உரிமையுட‌ன், அவ‌ன‌து ஜாக்கெட் பாக்கெட்டிலிருன்து மால்ப‌ரோவை எடுத்து பற்ற‌ வைத்த‌து.
"கேள் விக்கிர‌மா. குடும்ப‌ பொறுப்பை சும‌க்க‌ நேர்ன்த‌ விஜி, வேலை தேடினாள். செம்மொழி நாட்டின் த‌லை ந‌க‌ர‌மாம், கூவ‌ம் ந‌தியால் ம‌க்க‌ளுக்கு நோயும், அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் அதிகாரிக‌ளுக்கும் ப‌ண‌மும் சேர்ன்த‌ சென்னையில் தான் அவ‌ளுக்கு ஒரு வ‌ங்கியில் வேலை கிடைத்த‌து. அவ‌ள் சென்னையில் த‌ங்கியிருக்க‌வும் நேர்ன்த‌து."
முத‌லில் அவ‌ள‌து க‌ண‌வ‌னுக்கும்,மாமியாருக்கும் சென்னை வ‌ர‌ கொஞ்ச‌மும் விருப்ப‌மில்லை. அவ‌னுக்கு அவ‌ன‌து முன்னாள் காத‌லியின் கால‌டி ப‌ட்ட‌ ம‌ண்ணையும், அக்க‌வுண்டில் குவாட்ட‌ர் த‌ரும் அம்ம‌னையும் (ஒயின்ஸ்) பிரின்து வ‌ர‌ விருப்ப‌மில்லை. அவ‌ன் மாமியாருக்கோ ம‌ரும‌க‌ள் த‌ன்னை ம‌திக்க‌ மாட்டாளோ என்ற‌ ப‌ய‌ம்.
ஆனால், எல்லா கையாக‌லாத‌ ஆண்க‌ளையும் போல‌ அவ‌னுக்கு விஜி மேல் எப்பொழுதும் ஒரு ச‌ன்தேக‌ம். என‌வே ஒரு வ‌ழியாக‌ சென்னைக்கு குடி பெய‌ர்ன்தார்க‌ள்.

க‌தை இத்துட‌ன் நின்றிருந்தால், நான் உனக்கு இந்த டிசம்பர் குளிரில் விஜியின் கதைய சொல்ல நேர்ந்திருக்காது. ஆனால் நிற்க‌வில்லை. அவ‌ள் வேலை செய்த‌ வ‌ங்கி பிரிட்ட‌னில் க‌டை திற‌க்க‌ ஆசைப்ப‌ட்ட‌து. அத‌ற்காக‌ அவ‌ளை ல‌ண்ட‌னுக்கு அனுப்பிய‌து. மாமியார் ம‌ற்றும் ச‌ன்திர‌னின் க‌டும் எதிர்ப்புக‌ளுக்கு ம‌த்தியில், தினம்தோறும் ஃபோனில் பேசுவ‌தாக‌வும், என்த‌ ஆணிட‌மும் பேச‌மாட்டேன் என்றும், இன்ன ப‌ல‌ வாக்குறுதிக‌ளையும் கொடுத்து விஜி ல‌ண்ட‌னுக்கு விமான‌ம் ஏறினாள்.

"விதிக்குத்தான் எத்த‌னை ரூப‌ங்க‌ள் விக்கிர‌மா! த‌மிழ்னாட்டில் ராம‌தாசு, பெங்க‌ளூரில் எடியூர‌ப்பா, டெல்லியில் பிர‌காஷ் கார‌த் உருவில் இளிக்கும் விதி ல‌ண்ட‌னிலும் காத்திருந்தது."


"ஹீத்ரூ விமான‌ நிலைய‌த்தில், விதி விஜியை பிரைய‌ன் ஆண்டர்சன் உருவில் சிரிப்புட‌ன் வ‌ர‌வேற்ற‌து !"

சொல்லி நிறுத்திய வேதாளம், ஊறுகாயை நக்கியபடி, மீதி இருந்த விஸ்கியில் கொஞ்சம் வாயில் கவிழ்த்து கொண்டு, அப்படியே ஒரு தம்மை பற்ற வைத்தது.
வேதாளம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டதை உணர்ந்த விக்கிரமாதித்தன் தானும் ஒரு மால்பரோவை பற்ற வைத்தான்
================== தொட‌ரும் ===================


4 comments:

மங்களூர் சிவா said...

நல்ல கலாச்சாரம், நல்ல கதை.

நெக்ஸ்ட் பார்ட் எப்ப??

துளசி கோபால் said...

mmmmmmm

கயல்விழி said...

நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்திர்ருக்கும் டீஸ்கி பயங்கர காமெடி. எப்படி உங்களை கலாசார போலீஸ் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன். :)

அது சரி said...

//
கயல்விழி said...
நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்திர்ருக்கும் டீஸ்கி பயங்கர காமெடி. எப்படி உங்களை கலாசார போலீஸ் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன். :)

//

அவங்க 4927 நாளைத்தான சொல்லிருக்கான், 4926 நாள சொன்னா தான் சட்டப்படி பிரச்சினைன்னு விட்டுட்டாங்க :0)