Monday, 9 August 2010

பார்த்த ஞாபகம்


அப்படி ஒன்றும் அடிக்கடி தேடுவதில்லை
ஆனாலும் சொல்லாமல் தான் நினைவில் வருகிறது
இங்கு தான் எங்கோ.
ஆனால் எங்கு வைத்தேன் எப்பொழுது வைத்தேன்
நீ சிறுசாருக்கச்ச பாத்திருக்கேன்
அது ஆச்சே ரொம்ப நாள் என்றாள் அம்மா
நான் பார்க்கவேயில்லை என்கிறாள் கேத்தி
போனாப் போகுது விடு
அதான் நிறைய இருக்கே என்றான் ஐஸின் மேல் விஸ்கி ஊற்றிய நண்பன்
நீண்ட நேரம் புலம்பிய பின்
சரி எப்படி இருக்கும் சொல்லு தேடிப் பார்க்கலாம்.
எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்.

===================

17 comments:

கலகலப்ரியா said...

hmmm...

கலகலப்ரியா said...

செரி வேற வழி இல்ல... நல்லா இருக்கு அப்பு... செம விறுவிறுப்பு... ஆரம்பத்ல இருந்து கடைசி வரை.. :))))

vasu balaji said...

/போனாப் போகுது விடு அதான் நிறைய இருக்கே என்றான் ஐஸின் மேல் விஸ்கி ஊற்றிய நண்பன்/

/நீ சிறுசாருக்கச்ச பாத்திருக்கேன்அது ஆச்சே ரொம்ப நாள் என்றாள் அம்மா/

/எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்./

என்ன என்னன்னு தேட வைத்து கடைசியில் என் முகம்:) நல்லாருக்கு

KarthigaVasudevan said...

//போனாப் போகுது விடு அதான் நிறைய இருக்கே என்றான் //

எத்தனை முகங்கள்,கணக்கு எதுவும் வச்சிருந்தா அதையும் பதிவு பண்ணுங்க.

முகம் தாண்டிய முகங்கள்
அகக் கண்ணாடிகள் ; நல்லா இருக்கு கவிதை ,ஆமா இது கவிதையா?!

Unknown said...

கலக்கல் கவிதை.

Santhini said...

Wow....wonderful. Nacchunnu ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் கவிதை.

Mahesh said...

சூப்பர் !!

வால்பையன் said...

//எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்.//


எனக்கும் தான்!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
செரி வேற வழி இல்ல... நல்லா இருக்கு அப்பு... செம விறுவிறுப்பு... ஆரம்பத்ல இருந்து கடைசி வரை.. :))))
//

என்னவோ கத்திய காட்டி மிரட்டினா மாதிரி என்ன வேற வழி இல்ல? சரி சரி, நீங்க உண்மைய சொல்றீங்கன்னு நம்ப ட்ரை பண்றேன்.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...

என்ன என்னன்னு தேட வைத்து கடைசியில் என் முகம்:) நல்லாருக்கு

//

என் முகம் நல்லாருக்குன்னு நீங்க உங்க முகத்தை சொல்றீங்களா இல்லை கவுஜ பத்தி சொல்றீங்களா? ஒண்ணியிம் புரியலையே...

அது சரி(18185106603874041862) said...

//
KarthigaVasudevan said...
//போனாப் போகுது விடு அதான் நிறைய இருக்கே என்றான் //

எத்தனை முகங்கள்,கணக்கு எதுவும் வச்சிருந்தா அதையும் பதிவு பண்ணுங்க.

முகம் தாண்டிய முகங்கள்
அகக் கண்ணாடிகள் ; நல்லா இருக்கு கவிதை ,ஆமா இது கவிதையா?!

//

என்னது கணக்கா? ஸாரி...நான் அதுல ரொம்ப வீக்கு.. (அப்போ கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எல்லாம் ஸ்ட்ராங்கன்னு கேக்க வேணாம்.)

இது கவிதையா? ம்ம்க்கும்..? எனக்கே தெரியாம தான கிறுக்கல்கள்னு லேபிள் போட்ருக்கேன்?

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
கலக்கல் கவிதை.

//

நன்றி முகிலன். டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் தடை செய்யப்படுகின்றனன்னு ஒரு போர்டு போடணும் போலருக்கே :)))

அது சரி(18185106603874041862) said...

//
Nanum enn Kadavulum... said...
Wow....wonderful. Nacchunnu ....

//

நன்றி கடவுள். நீங்க என்ன எதுவும் எழுத மாட்டேங்கறீங்க? ரொம்ப நாளாச்சே?

அது சரி(18185106603874041862) said...

//

வெறும்பய said...
கலக்கல் கவிதை.

//

நன்றி வெறும்பயல்.

உங்க பேரு எனக்கு பிடிச்சிருக்கு :))

அது சரி(18185106603874041862) said...

//

Mahesh said...
சூப்பர் !!

//

நன்றி மகேஷ்.

அது சரி(18185106603874041862) said...

//
வால்பையன் said...
//எத்தனை முயற்சித்தும் நினைவில் வரவே இல்லை என் முகம்.//


எனக்கும் தான்!

//

எனக்கே வரலை. அப்புறம் எப்படி உங்களுக்கு வரும்? இன்னா வெளாடுறீங்களா?