Wednesday, 18 August 2010

எந்திரனும் ஏழைப் பங்காளன்களும் (அ) அய்யாங்...டொய்ங்.. 2

நாலு நாள் ஊரில் இல்லாமல் திரும்பி வந்து பார்த்தால் எந்திரனை எதிர்த்து இணையத்தில் புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். ஒரு வேளை படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ என்று தேடிப் பார்த்தால் ஒன்றும் இல்லை. பொரச்சி வருகுது பொரச்சி வருகுது என்று ஏழைப் பங்காளர்கள் அட்வான்ஸாகவே ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. அவர்களும் எவ்வளவு நாள் தான் காத்திருப்பார்கள்?

இதைச் சொன்னால் ஆமா நான் கூட ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன், சிவாஜி வந்து ரெண்டு வருஷம் ஆச்சு என்கிறார் முகிலன். அய்யா, நான் அதைச் சொல்லவில்லை. ஒரிஜினலாக ஒரு புரட்சி வரப் போகுது என்று கம்யூனிஸ்டுகள் ரொம்ப நாளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பிரகாஷ் காரத் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். அதெப்படி சொல்லலாம் என்று அவர் மீது பாய்ந்து தொலைக்கிறார்கள் ஆதிக்க வாதிகள். அவர் சொல்வதில் தவறென்ன? அவர் என்ன தானாகவா சொல்கிறார்? அவருக்கு முந்தி இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்ற தோழர் அதையே தான் சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஒரிஜினல் இல்லை. மாவோ சொன்னதாக அவர் சொன்னார். மாவோ லெனின் சொன்னதை சொன்னார். லெனின் ஜார் மன்னரின் கடைசி குழந்தை வரை கொன்று மனித நேயத்தை நிலை நாட்டிய பின் புரட்சி வென்றது என்று அறிவித்து விட்டார்.

அதெப்படி குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மனித நேயம் என்று கேட்கிறார்கள் பாசிஸ்டுகள்.லெனின் சொன்னதை கேள்வி கேப்பவனுக்கு சுய அறிவு இல்லை. மார்க்ஸ் என்ன சொல்லியிருக்கிறார்? மாவோ என்ன செய்தார்? இது எதுவும் தெரியாமல் ஓசியில் ப்ளாக்கும் ஓட்டை கம்ப்யூட்டரும் இருக்கிறது என்று வாதாட கிளம்பி விடுகிறார்கள்.

சொந்தமாக சிந்திப்பவர்கள் மாவோ சொன்னதை ஏற்று நடப்பார்கள். செய்த‌தை திரும்பி செய்து தங்கள் தெருவில் புரட்சி புரிவார்கள். அப்படி மாவோ என்ன செய்து விட்டார் என்று கேவலமாக பேசுகிறார்கள்.

மாவோ மக்களுக்காக உயிரை கொடுத்துப் போராடியவர் என்று நான் சொன்னால் ஆமா, மக்கள் உயிரைத் தானே என்று நக்கல் செய்கிறார்கள். மாவோ தன் உயிர் மற்றவர் உயிர் என்று பிரித்து பார்த்ததில்லை. அதனால் தான் புரட்சி முழு வெற்றி பெறும் முன்னரே ஷியாங்க்‍ கே ஷேக்கை எதிர்த்து நடந்த போரில் ஒரு லட்சம் பேரை பட்டினி போட்டு கொன்றார். மக்கள் செத்தால் என்ன, புரட்சி ஜெயிக்க வேண்டும்.

ஊரையெல்லாம் காப்பாற்றும் ரங்கநாதனே அக்கடா என்று படுக்கும் போது மாவோவுக்கு களைப்பு வராதா? பாவம் அவரும் எவ்வளவு நாள் தான் போராடுவார் எத்தனை பேருக்கு தான் புரட்சி செய்வார்? சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள். ஒரு லட்சம், ரெண்டு லட்சம், பத்து லட்சம் ஒரு கோடி. ம்ஹூம். சீனாவில் மக்கள் தொகையோ பெருகிக் கொண்டே போகிறது. மக்களுக்காக மக்களால் அரசு நடத்தும் சிந்தனைத் தொட்டி (Think Tank) மாவோ சிந்தித்தார், செயல்பட்டார், அடுத்த புரட்சியை மலர வைத்தார். பிள்ளை பெறுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். ஆஹா, இதுவல்லவா புரட்சி இது எனக்கு தெரியாது போயிற்றே என்று லெனின் மாஸ்கோவில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து நொந்து கொண்டார். நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் சொன்னால் மயிராண்டி குடிச்சிட்டு ஒளறாதடே. நம்மூரு சேப்பு சட்டைங்க நல்லவனுவ என்கிறான் "டயரு" தங்கராஜ். அவன் சொல்வதும் கூட உண்மை தான். டாட்டாவுடன் ஒப்பந்தம் போட்டு நந்திகிராமத்தில் அடிதடி நடத்தினார்களே தவிர, மாவோ போல நந்திகிராம் மக்களை பட்டினி போட்டு கொல்லவில்லை. ஏழைப்பங்காளர்களுக்கு புரட்சி செய்ய வாய்ப்பு தராமல் மக்கள் ஊரை விட்டு ஓடிவிட்டார்களாம். அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்? இந்தியா விளங்குமா? உருப்படுமா?

32 comments:

அது சரி(18185106603874041862) said...

கரம் சிரம் புறம் நீட்டாதீர். கருணாநிதியை திட்டாதீர்.

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸபா... ஒரே மூச்சில படிச்சு முடிச்சிட்டேன்...

மார்க்ஸ்.. லெனின்... கருணாநிதி... இது மட்டும்தான் புரியுது...

மத்தபடி எழுத்தைப் பத்தி சொல்லணும்னா... நீரோட்டம் போன்ற எழுத்து நடை.. (ஓட்டம் அப்டின்னு சொல்லிட்டு நடைன்னு சொல்றதான்னு எல்லாம் குற்றம் கண்டுபுடிக்கப்டாது..)

செம ஃப்ளோ... அப்டின்னு சொல்ல வந்தேன்..

நசரேயன் said...

புரட்சி புயலா இருக்கு

குடுகுடுப்பை said...

சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள்.//

ஏன் பகல்ல சும்மாதான் இருந்தாங்களா? என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறீங்க.

குடுகுடுப்பை said...

நல்லவேளை நான் 1917க்கு முன்னாடி பிறக்கல.

குடுகுடுப்பை said...

இப்பவும் இந்தியாவின் கமிச்சி கட்சிகாரங்க நல்லவர்கள் என்பது என் புரிதல், அவர்கள் தெரிவிக்கும்/போராடும் அனைத்திலும் நியாயம் இருக்கும் , ஆனால் அவர்கள் கொடுக்க நினைக்கும் தீர்வு இன்றைய நிலைய விட கொடுரமானது.(கியூபா, வடகொரியா, இங்கேயெல்லாம் போய் பாத்திட்டு உயிரோட வந்தியான்னு சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது, நானெல்லாம் பெரிய பயந்தாங்க்கொள்ளி)

MSK / Saravana said...

:)
:(

Unknown said...

//இப்பவும் இந்தியாவின் கமிச்சி கட்சிகாரங்க நல்லவர்கள் என்பது என் புரிதல், அவர்கள் தெரிவிக்கும்/போராடும் அனைத்திலும் நியாயம் இருக்கும்//

இதுல எதுவும் உள்குத்து இல்லையே?

Unknown said...

யோவ் டெல்டா,, நீரு நம்ம லைன்ல குறுக்க வந்துட்டேருக்கா. ஒரு நா இல்ல ஒரு நா அந்த எம்மியெம் கைல இருக்கிற டுப்பாக்கியைப் புடுங்கி உன்ன டப்புனு சுட்டுட்டுப் போயிக்கே இருக்கப் போறேன்.

Unknown said...

நான் எழுதனும்னு வச்சிருந்த புரட்சி பற்றிய புண்ணிய காவியத்தை இப்பிடி நீங்க எழுதினது கருத்துத் திருட்டாகாதா?

அது சரி(18185106603874041862) said...

//

கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸபா... ஒரே மூச்சில படிச்சு முடிச்சிட்டேன்...

மார்க்ஸ்.. லெனின்... கருணாநிதி... இது மட்டும்தான் புரியுது...

மத்தபடி எழுத்தைப் பத்தி சொல்லணும்னா... நீரோட்டம் போன்ற எழுத்து நடை.. (ஓட்டம் அப்டின்னு சொல்லிட்டு நடைன்னு சொல்றதான்னு எல்லாம் குற்றம் கண்டுபுடிக்கப்டாது..)

செம ஃப்ளோ... அப்டின்னு சொல்ல வந்தேன்..

//

ஓடுறது ஆறு...பட், ஆக்சுவலா ஓடுறது நீரு......:)))

நன்றி ப்ரியா. (ஆமா, கருணாநிதி எங்க வந்தாரு? )

அது சரி(18185106603874041862) said...

//

நசரேயன் said...
புரட்சி புயலா இருக்கு

//

வைக்கோ பத்தில்லாம் இங்கன‌ பேசப்படாது...

அது சரி(18185106603874041862) said...

//

குடுகுடுப்பை said...
சீனர்கள் இருட்டானால் சும்மா இருக்க மாட்டேன்கிறார்கள்.//

ஏன் பகல்ல சும்மாதான் இருந்தாங்களா? என்னமோ தெரிஞ்ச மாதிரி பேசறீங்க.

//

அது வேறயா? எனக்கு தெரியாதே? :))

தலைவரே, நீங்க சீன சுற்றுப்பயணம் போனவருன்னு எனக்கு தெரியும். இது பத்தி நீங்க ஒரு போஸ்ட் எழுதுங்க...பப்ளிஷ் பண்ணிடுவோம் :)))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
நல்லவேளை நான் 1917க்கு முன்னாடி பிறக்கல.

//

யூ த எஸ்கேப்...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
இப்பவும் இந்தியாவின் கமிச்சி கட்சிகாரங்க நல்லவர்கள் என்பது என் புரிதல், அவர்கள் தெரிவிக்கும்/போராடும் அனைத்திலும் நியாயம் இருக்கும் , ஆனால் அவர்கள் கொடுக்க நினைக்கும் தீர்வு இன்றைய நிலைய விட கொடுரமானது.(கியூபா, வடகொரியா, இங்கேயெல்லாம் போய் பாத்திட்டு உயிரோட வந்தியான்னு சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது, நானெல்லாம் பெரிய பயந்தாங்க்கொள்ளி)

//

இதுக்கு பதில்...அய்யாங்...டொய்ங் 3ல் வரும்.

அது சரி(18185106603874041862) said...

//

Saravana Kumar MSK said...
:)
:(

//

சரவணா,

என்ன சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருதா? :)))

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
//இப்பவும் இந்தியாவின் கமிச்சி கட்சிகாரங்க நல்லவர்கள் என்பது என் புரிதல், அவர்கள் தெரிவிக்கும்/போராடும் அனைத்திலும் நியாயம் இருக்கும்//

இதுல எதுவும் உள்குத்து இல்லையே?

//

தலைவரே வீட்டுல, ஆஃபிஸ்ல, அரசியல்லன்னு குத்து வாங்கிட்டு இருக்காரு...அவரு ஏன் உள்குத்து வைக்கப் போறாரு?

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
யோவ் டெல்டா,, நீரு நம்ம லைன்ல குறுக்க வந்துட்டேருக்கா. ஒரு நா இல்ல ஒரு நா அந்த எம்மியெம் கைல இருக்கிற டுப்பாக்கியைப் புடுங்கி உன்ன டப்புனு சுட்டுட்டுப் போயிக்கே இருக்கப் போறேன்.

//

நீரு இப்பிடி பண்ணிப் போடுவேருன்னுட்டு தான அதுல குண்டு போடாது வெச்சிருக்கேன்? அது வெறும் துப்பாக்கிவே...வேணும்னா பழைய இரும்புக்கு போடலாம்...

அது சரி(18185106603874041862) said...

//

முகிலன் said...
நான் எழுதனும்னு வச்சிருந்த புரட்சி பற்றிய புண்ணிய காவியத்தை இப்பிடி நீங்க எழுதினது கருத்துத் திருட்டாகாதா?

//

இது ஆக்சுவலா உண்மை தான். உங்க இடுகை படிச்சிட்டு, அதுக்கு காரணமான இடுகையையும் அதுல இருக்க பின்னூட்டமும் படிச்சிட்டு தான் அய்யாங்னு ஆயிடுச்சு...

ஆனா, நீங்க மாவோ பத்தி எழுதப் போறீங்கன்னு எனக்கு தெரியாதே :( அதனாலென்ன? மாவோ போனா லெனின் இருக்காரு, நம்மூரு தா. பாண்டி இருக்காரு...

பழமைபேசி said...

@@ குடுகுடுப்பை

இந்தக் கதையெல்லாம் வேணாம்!!!

அது சரி அண்ணாச்சி,

மேல சொன்ன ஆளை வுட்றாதீங்க... தஞ்சாவூர் இவர்.... இதுல உங்களுக்கு ஒரு துப்பு (clue) இருக்கு... பிடிச்சுகுங்க...

குடுகுடுப்பை said...

'Anaithilum thavaru '.
most of the causes could be right
for example Maoist protest to keep their land
is correct but the solution could address to empower
the tribal ppl education , job , health and rights on
their minerals etc

குடுகுடுப்பை said...

Yov pazahasu naan undu en katchi undunnu
irikken

vasu balaji said...

டொய்யாய்ங்...அய்ங் எழுதாமல் விட்ட ஓர வஞ்சனை ஏன்?:))
/அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்? இந்தியா விளங்குமா? உருப்படுமா?/

ஏன் உருப்படணும். உருப்பட்டா அப்புறம் திரும்ப எப்புடி புரட்சி வரும்?=))

/நன்றி ப்ரியா. (ஆமா, கருணாநிதி எங்க வந்தாரு? )/

கரம் சிரம் புறம் நீட்டாதப்போ:))

vasu balaji said...

டொய்யாங்..அய்ங் எழுதுவேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு எழுதாமல் ஓர வஞ்சனை செய்ததும் இல்லாமல் அய்யாங்..டொய்ங்..2 எழுதியதன் காரணம் என்ன? இப்படியெல்லாம் கேட்பதால் நான் ஏழைத் தமிழ் எழுத்தாளன் ஆக முடியுமா? அல்லது கார்ப்பரேட் அடிவருடியா? அய்யோ..குழப்பமா இருக்கே:))). ரங்கநாதர் தூங்குகிறார் என்று எப்படி சொல்வீர்கள். சிந்தனையில் இருக்கலாம். அப்படியே தூங்கினாலும் தூங்கவிட்டதற்கு யார் பொறுப்பு?

Robin said...

Super :)

கலகலப்ரியா said...

||நன்றி ப்ரியா. (ஆமா, கருணாநிதி எங்க வந்தாரு? )||

இங்கே...>>>


||அது சரி said...

கரம் சிரம் புறம் நீட்டாதீர். கருணாநிதியை திட்டாதீர். ||

உண்மைத்தமிழன் said...

அது சரி ஸார்..

அது சரி..!

NO said...

//
மாவோ மக்களுக்காக உயிரை கொடுத்துப் போராடியவர் என்று நான் சொன்னால் ஆமா, மக்கள் உயிரைத் தானே என்று நக்கல் செய்கிறார்கள். மாவோ தன் உயிர் மற்றவர் உயிர் என்று பிரித்து பார்த்ததில்லை. அதனால் தான் புரட்சி முழு வெற்றி பெறும் முன்னரே ஷியாங்க்‍ கே ஷேக்கை எதிர்த்து நடந்த போரில் ஒரு லட்சம் பேரை பட்டினி போட்டு கொன்றார். மக்கள் செத்தால் என்ன, புரட்சி ஜெயிக்க வேண்டும். //

எங்கள் புரட்சி சிகரம் தோழர் ஜோசப் ஸ்டாலினை கண்டுகொள்ளாமல் விட்டதை வன்மையாக கண்டிக்கேறேன்! அவர் செய்த சாதனைகள் யாவற்றையும் பற்றி ஒன்றும் சொல்லாமல் அவரின் சீடரான தோழர் மாவோவை பற்றி மட்டும் பேசும் நீங்கள் ஒரு கடைந்தெடுத்த பாசிச அமெரிக்க அடிவருடி என்பதையும் உலகத்திற்கு அம்மபலப்படுத்துவேன்!

வாழ்க புரட்சி... வாழ்க புரட்சி வாழ்க புரட்சி...........................

வாழ்க வாழ்க இந்தியாவை ஒழிக்க நினைத்த மாவோ
ஒழிக ஒழிக இந்தியர்கள் பலர் மற்றும் எங்களையும் மாவோவையும் துதிக்காத பிற்போக்குகூட்டங்கள்

ஒழிக ரஜினி ஒழிக நீங்கள் ஒழிக எல்லோரும்.......

வால்பையன் said...

//நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.//


ஹாஹாஹாஹா!

அப்போ பொரட்சி, இப்போ இலவசமா தல!

அரசியல்வியாதிகள் எதையாவது செஞ்சிகிட்டு தான் இருக்காங்க!

வால்பையன் said...

//அறிவு கெட்ட தனமாக மக்கள் இப்படி இருந்தால் புரட்சி எப்படி ஐயா வரும்?//


புரட்சின்னு ஒரு படம் எடுத்தா அது தியேட்டருக்கு கண்டிப்பா வரும்!

Unknown said...

படிச்சு முடிச்சிட்டேங்க

மங்களூர் சிவா said...

//நல்லவேளை எதையாவது வெட்ட சொல்லி புரட்சி செய்யவில்லையே என்று மகிழ்ந்த சீனர்கள் பத்திரமாக பொத்திக் கொண்டு புரட்சி வாழ்க என்று குரல் கொடுத்தார்கள்.//

ROTFL
:))))))))))))