Tuesday, 31 August 2010

பம்பரக்கண்ணு..பச்சமொளகா...இஞ்சி மரப்பா....இனிக்க வச்சா... (அ) அய்யாங்...ட்டொய்ங்..4

நம்பினால் நம்புங்கள் நம்பாவிட்டால் நாசமாய் போங்கள். எனக்கும் பாமா விஜயத்துக்கும் கொஞ்சம் கூட ராசியில்லை.பின்னர் என்ன? கலாநிதி மாறன் வழங்கும் சிங்கம் தயாநிதி மாறன் வழங்கும் எந்திரன் எல்லா இடத்திலும் மாஃபியா ப்ரதர்ஸ் இல்லை மாறன் பிரதர்சை பார்த்து கடுப்பாகி பாமா விஜயம் பார்க்க ஆரம்பித்தால் அதையும் நான் கண்டுபிடிக்கவில்லை. டோண்டு ராகவனின் சமீபத்திய பதிவில் லிங்க் இருந்தது. சரி என்று பார்க்க ஆரம்பித்தால் சனியன் முடிய மாட்டேன் என்கிறது. இரண்டு நாட்களாக பார்த்து இன்று முடித்து விடலாம் என்றால் எழவு இன்றைக்கும் பார்க்க முடியாது போலிருக்கிறது. மூன்று கணவன்மார்களில் பாமாவுக்கு யாருடன் தொடர்பு என்று இன்றைக்கும் தெரிய போவதில்லை. ஒரு ஏழை பிச்சைக்கார மொக்கை பதிவனுக்கு தான் எத்தனை பிரச்சினைகள்.

என்ன கேடு என்று கேட்காதீர்கள் அய்யா. சுந்தர்ஜி பஸ்ஸை பார்த்து அய் பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள். அதுவும் பிரபல பதிவர் என்று. எனக்கே தெரியாமல் நான் எப்பொழுது பிரபல‌மாகி தொலைத்தேன் என்று தெரியவில்லை. சரி போய்த் தொலையட்டும் சாருவே பிரபலமாக சிங்கிள் பாட்டில் குத்தாட்டம் போடும் போது மரண மொக்கையன் ஆன எனக்கு என்ன‌ பிரபலமானால் நல்லது தான். நாலு காசு பார்க்கலாம் என்றால் இந்த மெய்நிகர் உலகில் பிரபலமாகி என்ன செய்து தொலைப்பது என்று தெரியவில்லை. சிங்கிள் பாட்டில் ஆட சாருவுக்கு தொடர்ந்து சான்ஸ் கிடைக்குமா என்று கவலையாக இருக்கிறது.

தமிழ்மணத்தில் மகுடம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். மண் குடம் கொடுத்தாலாவது சுண்டக்கஞ்சி காய்ச்சலாம். மகுடத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மெய் நிகர் உலகில் பிரபலமாகி விட்டேனாம்.மெய் உலகத்தில் பிரபலாமானால் என் மெய்யை காட்டி எழவு மெய் நிகர் உலகத்தில் படிப்பவர்களுக்கு தமிழ் வேறு தட்டுப்பாடு. மெய் என்றால் பாடி. அதாவது உடம்பு. என்ன சொன்னேன்? மெய் உலகில் பிரபலமானால் என் மெய்யை காட்டி ஏதாவது விளம்பரத்தில் வந்து கும்பி வளர்க்கலாம். மெய் நிகர் உலகத்தில் பிரபலமாகி என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. சரவணா ஸ்டோர்ஸில் ஜட்டி கூட வாங்க முடியாது. அது என்ன எப்ப பார்த்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் ஜட்டி என்று கேட்கிறார்கள். உலகத்திலேயே தமிழ்நாட்டில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸில் தான் ஜட்டி விலை மலிவு என்று கருணாநிதி ஆதாரத்துடன் அறிக்கை விட்டிருக்கிறார். படித்து தொலையுங்கள். எல்லாத்தையும் மொக்கை பதிவனே சொல்ல முடியாது. இதில் நான் மொக்கையா சாதா மொக்கையா என்று வேறு கேள்வி இருக்கிறது.ஸ்பெஷல் மொக்கை இல்லை. அது தெரியும்.

அது என்னய்யா மெய் நிகர் உலகம்? இங்கு என்ன மெய்யாக இருக்கிறது? ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில். மெய் நிகர் உலகில் எந்திரனுக்கு மாபெரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். மெய் உலகத்திலோ பாடல் வந்த அன்றே பத்து லட்சம் சி.டி. விக்கிறார்கள். சிங்கம் மொக்கை என்றார்கள். அது என்னடாவென்றால் சூப்பர் ஹிட்டாக போகிறது. விஜய் படம் மொக்கை என்று எழுதி விட்டு முதல் ஆளாக பார்க்க போகிறார்கள். கருணாநிதி அந்தோ கதி என்றார்கள். அவரானால் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சவால் விடுவது போல மானாட மயிலாட உளியின் ஓசை என்று இம்சை செய்கிறார்.

பெண் உரிமைக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனிலோ இல்லை சைனாவிலோ எந்த பெண்ணாவது ஜனாதிபதியை விடுங்கள் பொலிட்பீரோ மெம்பராக இருப்பதாக கூட தெரியவில்லை. கம்யூனிஸ்டுகள் எத்தனை வருடம் சோவியத் யூனியனை ஆண்டார்கள்? எத்தனை வருடமாக சைனாவை ஆள்கிறார்கள். அத்தனை வருடத்திலும் தகுதியாக ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை? இது மெய் உலகமா, மெய் நிகர் உலகமா இல்லை பொய் உலகமா. என்ன கருமாந்திரம். வர வர வோட்கா அடித்தால் ஒரு மயிறும் ஏற மாட்டேன் என்கிறது. இல்லாவிட்டால் இப்படி கேள்வி வருமா.மாயா மாயா எல்லாம் மாயா என்று ரஜினிகாந்த் சொன்னால் மனிஷா கொய்ராலா ரொம்ப கிழவியாகிட்டா என்கிறார்கள். வேண்டுமானால் பொய் நிகர் உலகம் என்று சொல்லுங்கள். எல்லாம் மாயா. கேரளா போனால் கிடைப்பது கட்டஞ்சாயா. மொக்கை கவிஞன் என்று ப்ரூவ் பண்ணியாக வேண்டும். வேறு என்ன.

பொய் நிகர் உலகத்தில் என்னவோ செய்கிறார்கள். செய்தால் எனக்கென்ன? எனக்கு மெய் தான் முக்கியம். பாடியை சொல்லவில்லை. மெய் உலகத்தை சொல்கிறேன்.வினவு சொல்கிறார். பெரிய கட்சி சிறிய கட்சி எதை வைத்து அளப்பது. குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வரும் ஆட்களை வைத்து சுந்தர் அளப்பாரா என்று கேள்வி வேறு. அய்யா, சுந்தர் எப்படி அளப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால், மொக்கை பதிவன் எப்படி அளப்பான் என்றால் அந்த கட்சி ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்று தான் அளப்பான். பாதிப்பு என்றால் பொய்நிகர் வாழ் தமிழர்களுக்கு புரிந்து தொலைக்காது என்பதால் இம்பாக்ட். ஒரு கட்சியின் இம்பாக்ட்டை வைத்து தான் அது பெரிய கட்சியா சிறிய கட்சியா இல்லை லெட்டர் பேடு கட்சியா என்று அளப்பது. நீங்கள் ஒட்டு மொத்த சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நான் எதுவும் சொல்லவில்லை. நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். நல்லதோ கெட்டதோ போலி திராவிட குடும்ப கட்சிகளும் தலைவர் சூழ் காங்கிரஸ் கட்சியும் கடப்பாறை பிஜேபியும் ஏற்படுத்தும் பாதிப்பில் சொல்லிக் கொள்ளும் சதவீதமாக கூட நீங்கள் ஏற்படுத்துவதில்லை. அய், நாங்க சிதம்பரத்துல தமிழ் ஓத வைச்சோம் மூணு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செஞ்சி வைச்சோம் என்று சொல்வதெல்லாம் நல்லது தான். ஆனால் உத்தப்புரமும் திண்ணியமும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு போனால் வேறு எங்காவது இருக்கும்.

சூர மொக்கை பதிவன் சொன்னால் என்ன சூத்தை காட்டினால் என்ன என்று நினைக்காதீர்கள். எனக்கு பாராளுமன்றம் என்பதே உங்கள் வழியாக தான் தெரியும். பாராளுமன்றம் பன்றித் தொழுவம் நக்சல் பாரி பாதையே நமது பாதை என்று துண்டு பிரசுரம் விட்டது மக இகவா இல்லை இடது/வலது/போலி/ மார்க்சிய/லெனிய/மாவோயிஸ்ட் அமைப்புகளா? சரி யார் விட்டால் என்ன எனக்கு பாராளுமன்றம் என்பதை விட பன்றித் தொழுவம் எப்படி இருக்கும் என்றே பார்க்கத் தோன்றியது. இதை பார்க்கும் போது நான் ஐந்தாம் கிளாஸ் தான் படித்தேன். கட் அடித்து விட்டு தியேட்டருக்கு போனால் அங்கே சுவற்றில் எழுதி இருந்தது. நான் அஞ்சாங்கிளாஸ் முடித்து இருபது வருடம் ஆகப் போகிறது. இன்னமும் பாராளுமன்றம் இருக்கிறது. அந்த‌ தியேட்டரும் இருக்கிறது. மயிராண்டிகள் என்னை அன்றைக்கு உள்ளே விடவில்லை என்பது வேறு கதை. அப்புறம் சொல்கிறேன்.

பச்சை மிளகாயா பூசணிக்காயா என்றால் சிவப்பு மிளகாய்க்கு என்னாயிற்று. சரி விடுங்கள். அது சிவப்பு மிளகாய் விற்றவர்கள் பிரச்சினை. நமக்கு என்ன. பச்சை மிளகாய் பொய் நிகர் உலகத்தில் இல்லாது மெய் உலகத்தில் இருந்தால் உபயோகம் தான். ரசம் வைக்கலாம். ஆனால் அய் அழகா இருக்கே என்று கண்ணில் தேய்த்தால் அப்புறம் தெரியும் சேதி. விருப்பமிருப்பவர்கள் உங்கள் கண்ணில் தேய்த்துக் கொள்ளுங்கள். என் கண்ணில் தேய்த்து தொலைக்காதீர்கள். நான் கெட்ட வார்த்தை பேசி நீங்கள் கேட்டதில்லை.

நாக்கூசாமல் சொல்கிறார்கள். கூச்சப்பட்டு எழுதுவதில்லையாம். அப்படி எழுதாதவர்கள் மொக்கை பதிவர்களாம். அய்யா புரட்சி போராளிகளே நீங்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக சொன்ன பதிவை எடுத்துக் கொண்டு ஓடி வந்த அல்லக்கைகள் என்ன செய்தார்கள் என்று தெரியுமா? மேல் கீழ் வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் யாருக்காவது புரிகிறதா? மேல் வாய் எனக்கும் புரிகிறது. அது என்ன கீழ் வாய்? நான் கேட்கவில்லை. பொய் நிகர் உலகத்தின் புரட்சி போராளிகள் முன்பு எழுதிய வரிகள் தான். மாவோவின் அபார புரட்சி பற்றி நான் எழுதினால் அசிங்கமாக படம் போடுகிறார்கள். இந்த இடுகையை பெண்களும் படித்து தொலைக்கலாம் என்பதால் அந்த படம் இங்கு வராது. சுருக்கமாக சொன்னால் அந்த படத்தின் அர்த்தம் Cock Suckers. இங்கிலீஷ் தெரியாதவர்கள் யாரிடமும் கேட்டுத் தொலைக்காதீர்கள். இது தான் இவர்களின் புரட்சி. என்ன சொன்னான் என்பதை விடு. சொல்பவனின் கோமணத்தை பிடுங்கு.அம்மணமாக்கு. வாழ்க கொள்கை. வளர்க புரட்சி. எல்லாரும் புரட்சி செய்யுங்கள்.

பொய் நிகர் உலகத்திலேயே இது தான் இவர்களின் பச்சை மிளகாய். அப்படியானால் மெய் உலகத்தில் எப்படி இருக்கும்? புரட்சியை கேள்வி கேட்பவன் நடுத்தெருவில் அம்மணமாக்க படலாம். அது மக்கள் விரோத சிந்தனை இல்லையா என்று கேட்காதீர்கள். அது மக்களுக்கான என்டர்டெயின்மெண்ட். சீசரின் ரோமில் க்ளாடியேட்டர்கள் இருந்தார்கள்.

இதை எழுதியதற்காக நாளை நான் அம்மணமாக இருக்கும் படம் வரலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. பாத்ரூமில் குளிக்கும் போது கூட அம்மணமாக இருக்க முடியவில்லை என்றால் நான் பேசாமல் ஏதேனும் கம்யூனிஸ்ட் நாட்டுக்கே குடியேறி விடலாம். வேறு என்னதான் செய்து தொலைப்பது.

இத்தனை எழுதிய பின்னரும் அது என்ன பச்சை மொளகாய் இஞ்சி மொரப்பா என்று எழவெடுப்பவர்கள் கையில் நிறைய காசிருந்தால் டென், டவ்னிங் ஸ்ட்ரீட் வரவும். அடுத்த மாதம் தேதி தருகிறேன்.இப்பொழுது நான் பாமா விஜயம் பார்க்க வேண்டும். எனக்கு நாகேஷ் மேல் தான் சந்தேகம்.அவருடன் தான் பாமாவுக்கு தொடர்பிருக்க வேண்டும். எதற்கும் முழுதாய் பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்.

பாமா விஜயம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பை சொடுக்கலாம். மேஜர் சுந்தர்ராஜன், நடிகர் கார்த்திக்கின் அப்பா முத்துராமன், நாகேஷ், பாலையா நடித்தது.படம் மிக நீளமாக இருந்தாலும் விஜய் படங்களை விட பெட்டர். இணைப்புக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் டோண்டு ராகவன் அவர்களுக்கு சொல்லவும்.

====================

23 comments:

அது சரி said...

பாமா விஜயத்துல பாலையா கலக்குறாரு.

கலகலப்ரியா said...

||பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள்||

பம்பர் பரிசு...

||அதுவும் பிரபல பதிவர் என்று||

அவங்க பதிவில ஏறுறப்பவே ஃபேமஸ் ஆயிடுவாய்ங்க மக்கள்... இப்போ நான் இல்லையா..

|| இந்த மெய்நிகர் உலகில் பிரபலமாகி என்ன செய்து தொலைப்பது என்று தெரியவில்லை||

நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிட்டு அலையலாம்... இப்போ நான் ... செரி வேணாம்..

|| மண் குடம் கொடுத்தாலாவது சுண்டக்கஞ்சி காய்ச்சலாம். மகுடத்தை வைத்து என்ன செய்யலாம்||

மூஞ்சிய மறைச்சுக்கிட்டு சவுண்டு விடலாமே... ட்ரை ட்ரை...

கலகலப்ரியா said...

|| மெய் உலகில் பிரபலமானால் என் மெய்யை காட்டி ஏதாவது விளம்பரத்தில் வந்து கும்பி வளர்க்கலாம்||

யூ டூ..?!

||ஸ்பெஷல் மொக்கை இல்லை. அது தெரியும்.||

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?!

||ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில்||

அப்டிப் போடு அருவாள...

|| விஜய் படம் மொக்கை என்று எழுதி விட்டு முதல் ஆளாக பார்க்க போகிறார்கள்||

;)) (chuckle chuckle..)

||எத்தனை வருடமாக சைனாவை ஆள்கிறார்கள். அத்தனை வருடத்திலும் தகுதியாக ஒரு பெண் கூடவா கிடைக்கவில்லை?||

ஹைய்யோ ஹைய்யோ...

||அய், நாங்க சிதம்பரத்துல தமிழ் ஓத வைச்சோம் மூணு பேருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செஞ்சி வைச்சோம் என்று சொல்வதெல்லாம்||

அடிச்சு உதைச்சுதானே.....

வானம்பாடிகள் said...

/பாமா விஜயத்துல பாலையா கலக்குறாரு./

அய்யாங் டொய்ங்ல அது சரி கலக்குறாரு.

அந்த ஒன்னுமில்லாத மகுடத்தை வைத்துக் கொண்டு மொக்கை எழுதலாமா என்ற விவாதம் பஸ்,ட்வீட் எல்லாம் பட்டிமன்றம் நடந்து, அது மொக்கையில்லை என்று மூக்குடைபட்டும் ஆகிவிட்டது.

அதென்னமோ தெரியவில்லை யாரோ ஏதாவது சொன்னால் அதை விவாதிப்பதோடு வேடிக்கை கூட பார்க்காமல் வீதியோரம் போகிறவனை இழுத்து வைத்து ஏதாவது சொல்வது. எதிர்கவுஜைக்கு எதிர்கவுஜை எழுதுவது மஹா தப்பு என்று இப்போதுதான் தெரிகிறது. நான் அரசு ஊழியன். அரசியல் சார்பிருக்கக்கூடாது என்று கட்டுப் படுத்தப் பட்டவன். தவிர நான் கொ.ப.செவும் இல்லை. என் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை என் வாசகர்களுக்கு திணிக்க வேண்டிய கட்டாயம் என்ன? அப்படித்தான் செய்ய வேண்டுமெனில் பதிவுலகத்தில் அரசியல் கட்டுரை தவிர வேறு எதுவும் வர முடியாது. பதிலுக்கு சுந்தராவது பூசணிக்காயில் சாம்பார் செய்யலாம்.அல்வா செய்யலாம். பச்சைமிளகாயில் செய்ய முடியுமா என்று எழுதுவாரா தெரியவில்லை. என்னமோ போங்க பாஸ். சும்மா மொக்கை போடுகிறவனை புடிச்சி “அந்த குழந்தையே நீங்கதான் சார்”னு பட்டம் வேற கொடுத்திருக்கார் ஒரு தோழர். நான் எங்க போய் அய்யாங்கறதுன்னு தெரியலை.

கலகலப்ரியா said...

|| நீங்கள் ஒட்டு மொத்த சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்||

இரும்புத்திரை அவர்களின் பதிவில் ஏதோ இருக்கே... தோழர்கள் பயத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்... இதுக்கு பேரு பாதிப்பில்லையா... கேள்வியா கேக்கறீங்க கேள்வீ...

கலகலப்ரியா said...

டைட்டில் ஜோராகீது... என்ஜாய்ட் த போஸ்ட்... சுந்தர் சார் பஸ்ல நீங் லைக்கின மாதிரி... இந்த போஸ்ட் லைக்கோ லைக்கு...

பாமாவிஜயம் பார்த்துட்டு சொல்றேன்...

கும்மி அவசியம்னா அப்புறம் பார்த்துக்கறேன்.. இப்போ தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது...

நன்றி வணக்கம்..

தோழமையுடன்...

வானம்பாடிகள் said...

சார்பு இல்லை என்றால் எதிர்க்கவாவது வேண்டுமாம். நீங்கள் மாவோ,டாவோ,வலது, இடது , நடு செண்டர், தாலிபான், தலீவரு, தலீவி என்று எல்லாரையும் சாடியிருக்கிறீர்கள். நானும் 150 நறுக்கில் கட்சிபேதமில்லாமல் நறுக்கியிருக்கிறேன். அரசியல் கட்சி வேட்பாளர் சரியில்லை என்றால் சுயேச்சைக்கு நான் ஓட்டு போடக்கூடாதா? யார் சுயேச்சையாக நிற்பார்கள் எனத் தெரியாமல் நான் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ எப்படி முடியும்? யாரை வினவ?

நசரேயன் said...

பாமா விஜயத்துல பாலையா ?

வானம்பாடிகள் said...

||ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று எழுதுகிறார்கள். ஊருக்குள் போனால் எல்லா தெருவிலும் ஜாதி சங்கம் தான் இருக்கிறது. சில ஊர்களில் இன்னும் விசேஷம். சங்கத் தெரு என்றே வைத்திருக்கிறார்கள். எல்லா ஜாதிக்கும் ஒரு கட்டிடம். ஒரே தெருவில்||

ஏன் ஏழரையே ஸ்க்ரீன்ஷாட் போட்டிருந்தாரே. ஆளாளுக்கு ஜாதி வெறியோட ஓர்குட்ல அலையறது பத்தி. இன்னைக்கு அப்துல்லாவும் ஸ்க்ரீன்ஷாட் போட்டிருக்கார். நர்சரி ஸ்கூல் அப்ளிகேஷன் ஃபார்மில் கூட ஜாதி ஒழியலை. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவுதான் இருக்கு. இதெல்லாம் மெய்யுலகா மெய் நிகர் உலகா புரியலை.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

பாமா விஜயத்துல பாலையா ?//

நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு. :))

நசரேயன் said...

// நர்சரி ஸ்கூல் அப்ளிகேஷன் ஃபார்மில்
கூட ஜாதி ஒழியலை//

அண்ணே எனக்கு ஒண்ணு கிடைக்குமா ?

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

// நர்சரி ஸ்கூல் அப்ளிகேஷன் ஃபார்மில்
கூட ஜாதி ஒழியலை//

அண்ணே எனக்கு ஒண்ணு கிடைக்குமா ?//

என்னாது. ஜாதியா ஃபார்மா? முதல்ல என்.ஆர்.ஐக்கு ஓட்டு உண்டாம். நீர் என்.ஆர். ஐன்னா அதுக்கு பதிய வழியப்பாரும். காசு கணக்கா WUல வந்தாத்தான் ஓட்டுன்னு சொல்லும்.

முகிலன் said...

நானும் லைக்கினேன். என்னை வினவு பஸ்ல ஏத்தலை.. பிரபலாமாக இன்னும் வளரணுமோ?

வானம்பாடிகள் said...

முகிலன் said...

//நானும் லைக்கினேன். என்னை வினவு பஸ்ல ஏத்தலை.. பிரபலாமாக இன்னும் வளரணுமோ?//

பொழிப்புரை எழுதினால்லாம் நாட் அலவ்ட். எதிர் கவுஜ போட்டீரா? மொக்கை எழுதினீரா?

எம்.எம்.அப்துல்லா said...

அய்யாங்...ட்டொய்ங்
ட்டொய்ங்..அய்யாங்

:)))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

பாமா விஜயம் பாத்துட்டுத்தான் பதிவ படிக்கணுமோ???

வால்பையன் said...

டன் டனா டன்!

basheer said...

பிரபல பதிவர்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

Robin said...

//பெண் உரிமைக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆனால் சோவியத் யூனியனிலோ இல்லை சைனாவிலோ எந்த பெண்ணாவது ஜனாதிபதியை விடுங்கள் பொலிட்பீரோ மெம்பராக இருப்பதாக கூட தெரியவில்லை. // :)

கம்யுனிசத்தில் கேள்வி கேட்பதற்கெல்லாம் உரிமை இல்லை..

Anonymous said...

athu sari, just few things.

1. for this one - caste discrepancies have not been completely abolished. true. but they have decreased. you can compare your generation to that of your father's. otherwise i agree.

2. elara had asked questioned you in the bus about who would be responsible for the death of people. it would be the plan approver(govt/prime minister). if deaths occur due to a wrong policy, the govt is responsible for all of those deaths. one should not introduce drastic changes in the policy without trying them on a small scale basis. if the communist party leader changes everything in a day and people die due to the ensuing poverty, then that leader is responsible for all those deaths. it is like a doctor trying a new medicine without proper testing on his patients and killing them.

மங்களூர் சிவா said...

ஹா ஹா
ROTFL
:)

மங்களூர் சிவா said...

/
||பஸ்ஸு நல்லாருக்கு என்று சொன்னவனை ஏறு ஏறு என்று வினவு பஸ்ஸில் அடித்து ஏற்றியிருக்கிறார்கள்||

பம்பர் பரிசு...
/

ROTFL

Anonymous said...

ராத்திரி கொஞ்சம் அதிகமொ?


"நான் தான், லண்டன்லே இருந்து எழுதூரேன்"