Tuesday 13 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள்- காதல் சொல்லி வந்தாய்! - 8

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு,அத்தியாயம் மூன்று,அத்தியாயம் நான்கு, அத்தியாயம் ஐந்து, அத்தியாயம் ஆறு, அத்தியாயம் ஏழு

அத்தியாயம் எட்டு - சுட்ட மண்!

"மாதித்தா...இந்த கேள்விகளுக்கு உனக்கு விடை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிட் அடித்தாவது விடை சொல்ல வேண்டும்...இல்லாவிட்டால் உன் தலை தமிழ்நாட்டு காங்கிரஸ் கோஷ்டிகள் போல் சுக்கு ஆயிரமாக நொறுங்கி சிதறி விடும்...."

வேதாளம் சொன்னதும் மாதித்தன் தலையை தடவிக் கொண்டான்...

"என்ன கருமம்டா இது...என் தலை முதல்வர் பதவி மாதிரி ஆயிப் போச்சே...வர்றவன் எல்லாம் அதுக்கே குறி வைக்கிறான்...சரி சரி கைய அவுத்து விடு...எதுனா சொல்றேன்..."

"அதெல்லாம் அவுக்க முடியாது மாதி...நீ சும்மா வாயில சொல்லு...கையா பேசப் போவுது...."

"அவுத்து விட்டு பாரு....என் கை எப்பிடி பேசுதுன்னு காமிக்கிறேன்..." முறைத்து கொண்டே மாதித்தன் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறிக் கொண்டான்...

"ஏய்ய்....மாதி....இப்ப எதுக்கு பாறையில ஏறுற...ஒபாமாவுக்கெல்லாம் நோபல் குடுத்துட்டாய்ங்க....எங்க முத்தமிழ் வித்தகருக்கு கோயபல்ஸ் விருது கூட குடுக்கலைன்னு எதுனா தற்கொலை செய்ய போறியா...."

"அட சனியனே...அதுக்கெல்லாம் டீக்குடிக்க வேற ஒடன்பொறப்புங்க இருக்காங்க...என்ன பெரிய ஓபாமா...அவருக்கெல்லாம் வேற யார்னா கொடுத்தா தான் விருது...எங்க ஐயாவுக்கு வேணும்னா அவரே குடுத்துப்பாரு...எடுத்துப்பாரு...அப்படி எல்லா விருதும் தீர்ந்து போச்சின்னா கலை உலக படைப்பாளி...டவுசர் கிளிச்ச தொடைப்பாளின்னு எதுனா புதுசா உருவாக்கிடுவோம்....இப்ப ஒனக்கு தீர்ப்பு சொல்லணுமா வேண்டாமா..."

"ஆமா...பெரிய சாலமன் பாப்பையா...அப்படியே சொல்லிட்டாலும்....சொல்லு....சொல்லித் தொலை...."

"நாட்டாம நாஞ் சொல்ற தீர்ப்புக்கு உச்சிபுளிகுடி பண்ணாரி அம்மன் சத்தியமா எட்டு ஊரு பதினெட்டு பட்டியும் கட்டு படணும்...இது நாட்டாமை உத்தரவு உத்தரவு உத்தரவு...."

வேதாளம் குரல் கொடுத்தது...

"நாட்டாம...இன்னும் தீர்ப்பே சொல்லலியே..."

"அடச்சே....எவன்டா அது...காப்பு கட்றதுக்கு முன்னாடியே மாடு அடக்க வர்றவன்...முந்திரிக் கொட்டை மாதிரி....சொல்வோமில்ல..."

அந்த இருட்டில் வேதாளத்தை குத்து மதிப்பாக முறைத்த மாதித்தன் பேச ஆரம்பித்தான்....

========================

"முட்டாள் வேதாளமே...நீ ஆள் தான் மொட்டை...இப்பொழுது உன் அறிவும் மொட்டையாகி விட்டதா இல்லை கள்ளச் சாராயம் காய்ச்சும் போது உன் அறிவையும் அடுப்பில் வைத்து எரித்து விட்டாயா...

சிவராமனை காதலித்த கல்பனாவுக்கு மகேஷை பிடித்திருப்பது சரியா....என்ன கேள்வி இது...உலகத்தின் அடிப்படை சலனம்....ஆதி சிவனின் சலனத்தால் தான் அண்ட சராசரங்களும் விரிந்தது...இது உண்மையோ இல்லையோ சராசரி மனிதனின் சலனம் தான் உலக இயக்கம்....அலையில்லாத கடலும் சலனமில்லாத மனமும் இங்கு இல்லை...மனிதன் சலனமற்று போகும் நாளில் அகில உலகமும் உறைந்து போகும்...ஆசை தான் துன்பத்திற்கு காரணம்....ஆனால் துன்பம் மட்டுமல்ல உலக இயக்கத்திற்கும் அது தான் காரணம்...

கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது உண்மை....சூழ்நிலை காரணம் என்று கடைசியில் அவள் சொல்வது தன்னை தானே ஏமாற்றுவதே...இது சரியா தவறா....உண்மையில் எது சரி எது தவறு...எது இயல்பு எது கட்டமைப்பால் திணிக்கப்பட்டது......வன்முறை இயல்பா இல்லை அஹிம்சை இயல்பா...கல்பனாவுக்கு சிவராமனை பிடித்திருந்தது...அதே சமயம் மகேஷையும் பிடித்திருக்கிறது...சிவராமனை பிடிக்க சில காரணங்கள்....மகேஸ்வரனை பிடிக்க சில காரணங்கள்...மகேஷ் மீது அவளுக்கு ஏன் காதல் வரக் கூடாது என்பதற்கு காரணங்கள் அவளிடம் இல்லை...ஆனால் ஒரு பெண் இரு ஆண்களை காதலிக்க முடியுமா என்றால்...சமூகம் மறுக்கலாம்....இல்லை...முடியாது...நடக்காது....நடக்கக் கூடாது...என்று கலாச்சார காவலர்கள் அலறலாம்...ஆனால் இயற்கை கலாச்சாரங்களுக்கும் அதன் காவலர்கள் என்று தன்னை தானே அறிவித்துக் கொண்டவர்களுக்கும் கட்டுப்பட்டது அல்ல...முடியும்....ஒரு ஆணின் மனம் இரு பெண்களிடம் சலனப்படும் போது பெண்ணின் மனமும் சலனப்படலாம்...படும்....ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற சமூக கட்டுப்பாடே அதை தவறா சரியா என்று கேள்வியாக்குகிறது.....அலை கடலுக்கு அணை கட்ட முடியுமா...கடல் போல மனமும் விடாமல் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது...கண்ணகியின் கணவனுக்கு மாதவியிடம் மன சலனம் என்றால் கல்பனாவுக்கு மகேஷிடம் சலனம்...காதல்....காதலுக்கு என்பதன் வரைமுறை யாருக்கும் தெரியாத போது இது காதல் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்.....காதல் என்பது என்ன....முகத்திரைகளை விலக்கிப் பார்த்தால் அது காமமாகவும் இருக்கலாம்....பல வண்ணம் காட்டும் அப்பட்டமான சுயநலமாகவும் இருக்கலாம்...அல்லது ஸிக்மன்ட் ஃப்ராய்ட் சொல்வது போல நார்ஸிசம்...சுய மோகமாகவும் இருக்கலாம்...

ஆக...சிவராமனை காதலித்த கல்பனா மகேஷிடம் சலனமடைந்தது இயற்கை விதிகளின் படி சரியே....அது சமூக நியதிகளின் படியும், கலாச்சார விதிகளின் படியும் தவறாக இருக்கலாம்...ஆனால் கலாச்சாரங்கள் உருமாறும்...கால தேவனால் என்றாவது ஒரு நாள் உருத்தெரியாமல் அழிக்கப்படும்..சிந்து சமவெளி கலாச்சாரமும் சங்கம் வளர்த்த பாண்டிய கலாச்சாரமும் தஞ்சையில் செழித்த சோழர்களின் கலாச்சாரமும் இன்று கடலுடன் போய்விட்டது..ஆனால் இயற்கை இன்றைக்கும் அலையடித்துக் கொண்டு தான் இருக்கிறது..."

க்கும்....தொண்டைய செருமிக் கொண்ட மாதித்தன் சிறிது நிறுத்தினான்....

"நாட்டாம....தீர்ப்ப முழுசா சொல்லு...அப்ப சிவராமன் மேட்டரு...."

"அட....இருடே...ஒரு தம்ம அடிச்சிட்டு அந்த கேஸை பைசல் பண்ணுவோம்...."

வேதாளம் மாதித்தனுக்கும் சேர்த்து ஒரு தம்மை பற்ற வைக்க குகையில் புகை சூழ்ந்தது....

================================

"அடுத்து சிவராமன்....அவன் கலாச்சார கட்டமைப்புகளின் பிரதிநிதி...ஆனால் அவனது காதல் உச்சமானது....மனித மனத்தின் மற்றொரு விசித்திரம்...விடாது அலை மட்டுமல்ல...மனித மனம் யாருடனாவது எதற்காவது போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறது....போர் போர்...கொல் கொல்...என்றே வாளுடன் அலைகிறது....சிவராமனால் தனக்கு ஒரு போட்டியை சகிக்க முடியவில்லை...கல்பனா தனக்கே என்று தான் வகுத்த எல்லைக்குள் இன்னொருவன் பிரவேசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...அவனை பொறுத்த வரை அது உச்சமான காதல்...மலை உச்சியில் இருப்பவன் கீழே விழுந்தால் மரணிப்பதே நல்லது....அதீத காதலுக்கும் அதீத வெறுப்புக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்...இது விளிம்பு நிலை மனம்...எந்த நேரத்திலும் விளிம்புகளை உடைக்கும்....கல்பாவின் மனம் மகேஷிடம் சலனமடைந்ததுமே சிவராமனின் காதல் செத்து விட்டது...அது சுட்ட மண்....உடைந்த கண்ணாடிகளை கூட உருக்கி மீண்டும் உருவாக்கலாம்...ஆனால் சுட்ட மண்ணில் பயிர் செய்தவர்கள் யார்...சுட்ட மண் செத்த மண்...அதில் எதுவும் வளராது...சிவராமன் காதலித்தது தன்னை காதலித்த கல்பனாவையே...மகேஷையும் காதலிக்கும் கல்பனாவை அல்ல...மலை உச்சியில் இருந்து வீழ்ந்த அவன் காதல் செத்து விட்டது...எதற்காக போரிட்டானோ அந்த காதல் செத்த பின் அவனுக்கு வேலையில்லை...இது புரிந்தே சிவராமன் விலகினான்...அதனால் அவன் விலகியது சரியே...ஆணாதிக்க மனோபாவம் என்று சொல்ல முடியாது...செத்து போன காதலின் துக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்...."

தீர்ப்பு சொல்லி முடித்த விக்ரமாதித்தன் நிறுத்தினான்...

"என்ன வேதாளமே...உன் சந்தேகம் தீர்ந்ததா...."

வேதாளம் மண்டையை சொறிந்தது....

"ஒண்ணியும் பிரியலியே....இப்ப இன்னாங்கிற நீ...சரிங்கிறியா தப்புங்கிறியா...."

"சரியா போச்சி போ...விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு அப்பா அனுமன்னு சொன்னானாம்....கலாச்சார அளவுகோல்களையும் கட்டமைப்பு திணிப்புகளையும் விடுத்து இயற்கையின் விசித்திர ஆட்டங்களின் படி அவர்கள் இருவரும் சரி...சரி...சரி...இது தான் இந்த பதினெட்டு பட்டி பஞ்சாயத்து தீர்ப்பு....சரி சரி...தீர்ப்பு தான் சொல்லிட்டேன்ல...இப்ப கைய அவுத்து விடு...ரெண்டு பேரும் கெளம்பி மந்திரவாதிகிட்ட போலாம்...உன்னை அவன் கிட்ட ஒப்படைச்சிட்டா என் கடமை முடிஞ்சது...."

வேதாளம் நக்கலாக இளித்தது....

"இன்னா மாதி....என்னை என்ன லூசுன்னு நினைச்சியா உன் கூட வர....நான் கெளம்புறேன்...நீ வேணும்னா மந்திரவாதி கிட்ட போ...."

"அட சனியனே...இந்த தடவை நான் அந்த தாடிக்காரனுக்கு என்ன பதில் சொல்ல....சரி இந்த கை கட்டையாவது அவுத்து விட்டுட்டு போ...."

"ஹிஹி..ஹீ....அது மந்திர கயிறு மாதி....நீ பதில் சொன்ன இருபத்தியெட்டாவது நிமிஷம் தானே அறுந்துடும்....அப்படி தான் செட் பண்ணியிருக்கேன்...."

"அது என்ன இருபத்தெட்டு நிமிஷம்...."

"ஓ அதுவா....அது நான் இந்த ஓட்டைக் கார்ல இந்த காட்டை விட்டு ஓட ஆகுற டைம்...."

சொன்ன வேதாளம் குடுகுடுவென்று ஓடி அந்த இருட்டில் மறைந்தது!
============================
அழுகிய தக்காளி...கெட்டுப் போன முட்டை....காலியா போன குவாட்டர் பாட்டில்....விழாத லாட்டரி...பழைய தினத்தந்தி....அரை லோடு செங்கல்... அரை குறையா உடைச்ச கருங்கல்....இது எதுவும் வீசாம அமைதியாய் இருக்கும் தமிழிஷ் தமிழ்மணம் வாக்காள பெருமக்களே....இது வரை நாட்டாமை மாதித்தன் தீர்ப்பை கேட்டீர்கள்...அடுத்து நன்றி நவில வருவது அகில உலக வருத்தப்படாத வாலிபர் சங்க உதவி துணை பொறுப்பு செயலாளரும்....லண்டன் இருபத்தி எட்டாவது வட்ட குஜமுக இணை செயலாளருமான லண்டன் ட்யூப் ரயிலுக்கே டிக்கட் எடுக்காத மாவீரன்... உங்கள் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மக்கள் தொண்டன்....வருங்கால முதல்வர்..."அது சரி" அவர்கள்....

==========================
பதிவர் பேருரை

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாக்காள பெருமக்களே...தாய்மார்களே...தந்தைமார்களே....இளைஞர்களே...இளைஞிகளே...முன்னாள் இளைஞர்களே...இன்றைய பதிவர்களே...எதிர்கால பதிவர்களே...பின்னூட்டம் மட்டுமே எழுதும் பின்னூட்டவாதிகளே....தமிழ் மணமானாலும் சரி, தமிழிஷ் ஆனாலும் சரி...எனக்கு ஓட்டே போடாத எதிர்க்கட்சி நண்பர்களே...

முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்...கல்பனாவும் சிவராமனும் செய்தது சரியா தவறா...சரியோ தவறோ உங்கள் அளவுகோல் என்ன...

நாட்டாமை மாதித்தன் தீர்ப்பு சரியா தவறா...உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...கருத்துக்களை "நாட்டாமை மாதித்தன், நம்பர் 17, அஞ்சாவது குறுக்கு சந்து, ஓல்டு மாங்க் புரம், பிரிஸ்டால், BS1 8VK, யுனைட்டட் கிங்க்டம்" என்ற முகவரிக்கு அனுப்பலாம்...(கண்டிப்பாக ஸ்டாம்ப் ஒட்டவும்)

தவிர, என் எழுத்து பற்றியுமான கருத்துக்களையும் கொட்டலாம்....குறிப்பாக கதையில் எந்த இடம் சொதப்பியது...மொத்தமே சொதப்பல் தான் எதைன்னு சொல்றது என்றால் அதையும் சொல்லலாம்....

உங்களிடம் நன்றி கூறி குவாட்டருக்கு சைடாக வடை வாங்கப் போவது...அன்புடன் "அது சரி"

=======முடிந்தது....ஸ்ஸ்ஸ்...யப்பாடா...=========

36 comments:

அது சரி(18185106603874041862) said...

கலை உலக படைப்பாளின்னா என்ன அர்த்தம்? இவர் படைப்பாளின்னா மத்தவங்க கலை உலகுல என்ன பண்றாங்க? பரோட்டா சுட்றாங்களா?? ஒண்ணூம் புரியலியே...

குடுகுடுப்பை said...

காதல், காமம் , கருமாந்திரம் எல்லாமே சுயநலம்தான். இதில் அவனவன் முடிவு அவனவன் சுயநலத்தை சார்ந்தது . அதுனால நோ கர்த்து, நோ கல்ச்சர்

மங்களூர் சிவா said...

/
அழுகிய தக்காளி...கெட்டுப் போன முட்டை....காலியா போன குவாட்டர் பாட்டில்....விழாத லாட்டரி...பழைய தினத்தந்தி....அரை லோடு செங்கல்... அரை குறையா உடைச்ச கருங்கல்....இது எதுவும் வீசாம அமைதியாய் இருக்கும் தமிழிஷ் தமிழ்மணம் வாக்காள பெருமக்களே...
/

ஹா ஹா

மங்களூர் சிவா said...

நாட்டாமை தீர்ப்பு சூப்பரு!

மங்களூர் சிவா said...

அண்ணே லெட்டரு இன்லேண்ட் கவருல எளுதலாமா இல்ல டிவி சானல்க்கு அனுப்பற ஸ்பெசல் கார்டுல அனுப்பனுமா????

மங்களூர் சிவா said...

/

முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்
/

இப்பிடித்தான் விவேக் ஒரு காமெடில பொண்ணுங்க மனசை புரிஞ்சிக்கனும்னு கெளம்புவாரு :))))))))))))

செம டமாஷா இருக்கும்.

vasu balaji said...

/சமூக கட்டுப்பாடே அதை தவறா சரியா என்று கேள்வியாக்குகிறது...../

நாட்டாமை தீர்ப்புக்கும் இந்த அளவுகோல் பொருந்துமே. அதனால் தீர்ப்புக்கு கட்டுப் படுவது தான் தலைஎழுத்து.

மற்றபடி இந்த ஒரு பாகத்தில் சமுதாயம் குறித்த உங்கள் அலசல் எனக்கு மிகவும் பிடித்தது. பெரும்பாலும் ஒத்துப் போவதும் கூட.

கலகலப்ரியா said...

நாட்டாமை மேல உள்ள நம்பிக்கைல ஓட்டு மட்டும் போட்டாச்சு..! ஆப்ப்ப்பீஸ்ல போய் படிச்சுக்கிறேன்.. ஜூட்..

கலையரசன் said...

கதை சுவாரசியமா இருந்தது!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

கலகலப்ரியா said...

//டவுசர் கிளிச்ச தொடைப்பாளின்னு எதுனா புதுசா உருவாக்கிடுவோம்//
வேஷ்டி கிழிக்க மாட்டாங்களா என்ன.. குசும்புக்கு ஒரு அளவு வேணும் ஐயா..

//ஆனால் துன்பம் மட்டுமல்ல உலக இயக்கத்திற்கும் அது தான் காரணம்... //

அட அட...

//உண்மையில் எது சரி எது தவறு...எது இயல்பு எது கட்டமைப்பால் திணிக்கப்பட்டது//

இததான் மெச்சூரிட்டின்னு சொல்லுவாய்ங்களோ..

//கலாச்சார காவலர்கள் அலறலாம்.//

=))

//கண்ணகியின் கணவனுக்கு மாதவியிடம் மன சலனம் என்றால் கல்பனாவுக்கு மகேஷிடம் சலனம்//

பாலை அலட்சியம் செய்து.. கருவைப் பொதுவில் வைத்த உவமை சிறப்பு..

//காதல் என்பது என்ன....முகத்திரைகளை விலக்கிப் பார்த்தால் அது காமமாகவும் இருக்கலாம்....பல வண்ணம் காட்டும் அப்பட்டமான சுயநலமாகவும் இருக்கலாம்...அல்லது ஸிக்மன்ட் ஃப்ராய்ட் சொல்வது போல நார்ஸிசம்...சுய மோகமாகவும் இருக்கலாம்...//

இது காலம் ரொம்பக் கடந்து தெரிய வருவதுதான் துரதிஷ்டம்.. ஆனாலும்.. துன்பம் போல.. துரதிஷ்டமும் தேவைதான்..

//சிவராமனால் தனக்கு ஒரு போட்டியை சகிக்க முடியவில்லை...கல்பனா தனக்கே என்று தான் வகுத்த எல்லைக்குள் இன்னொருவன் பிரவேசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...அவனை பொறுத்த வரை அது உச்சமான காதல்//

this is called possessiveness.. இதுவும் தேவையானதுதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

//அதீத காதலுக்கும் அதீத வெறுப்புக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்//

இது சத்தியமான வரி..

//அதனால் அவன் விலகியது சரியே//

ஆனாலும் தப்பா சரியான்னு சொல்ல முடியாதே... ஒரு வேளை இவளை விட முடியாதுன்னு உணர்ச்சிவசப்பட்டு விலகாம வேற முடிவு எடுத்திருந்தா.. அது தப்புன்னு சொல்ல முடியுமா..? இல்லாதப்போ.. இது சரின்னும் சொல்ல முடியாதில்ல..

//கலாச்சார அளவுகோல்களையும் கட்டமைப்பு திணிப்புகளையும் விடுத்து இயற்கையின் விசித்திர ஆட்டங்களின் படி அவர்கள் இருவரும் சரி...சரி.//

இது சரி.. ஹிஹி..

//லண்டன் ட்யூப் ரயிலுக்கே டிக்கட் எடுக்காத மாவீரன்//

இரண்டு அடி ஒசரம்னா.. மடகஸ்கார்ல வர்ற குரங்குக் குட்டி கணக்கா பூந்து பூடலாம்ல..

//முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்...//

இவ்வாறான மனப்பக்குவம் உள்ள மனிதம் இந்த உலகிற்கு ரொம்ப ரொம்ப தேவை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.. இந்த இடுகைய நான் தொடர்கிறேன் என்பதில் இந்த நொடியில் பெருமை அடைகிறேன் மிஸ்டர் அது சரி அவர்களே..

//கல்பனாவும் சிவராமனும் செய்தது சரியா தவறா...சரியோ தவறோ உங்கள் அளவுகோல் என்ன... //

=)).. அடக்கடவுளே.. இவ்ளோ நேரம் சொன்னதென்ன.. இதென்ன..? அளவுகோலைக் கையிலெடுக்க நான் யார்..? கல்பனாவுக்கு கல்பனாவும்.. சிவராமனுக்கு சிவராமனும் மட்டுமே அளவுகோலைக் கையிலெடுக்க முடியும்.. சிவராமனை ரொம்பத் தெரியும் என்று கல்பனாவோ.. இல்ல கல்பனாவைத் தெரியுமென்று சிவராமனோ அளக்க ஆரம்பித்தால் பல விபரீத முடிவுகள் தோன்றலாம்.. ! இதில மூன்றாம் நபர்கள் அளவெடுக்க ஆரம்பிச்சா கிழிஞ்சிடாதா..!

//
தவிர, என் எழுத்து பற்றியுமான கருத்துக்களையும் கொட்டலாம்....குறிப்பாக கதையில் எந்த இடம் சொதப்பியது..//

ஒரு இடம் கூட உறுத்தவில்லை..! அருமையான எழுத்து நடை..! நீங்களும் நம்ம favourite எழுத்தாளர் ஆய்ட்டீங்க.. ஓசில படிக்க முடியறது கூடுதல் நன்மை.. :P

//முடிந்தது....ஸ்ஸ்ஸ்...யப்பாடா...//

வடையா குவாட்டரா.. :p

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
காதல், காமம் , கருமாந்திரம் எல்லாமே சுயநலம்தான். இதில் அவனவன் முடிவு அவனவன் சுயநலத்தை சார்ந்தது . அதுனால நோ கர்த்து, நோ கல்ச்சர்

//

நச்சுன்னு கர்த்து சொல்லிட்டு நோ கர்த்துன்னா என்னா அர்த்தம்?? பேஸ் மாட்டேன்...பேஸ் மாட்டேன்னு சொல்லிக்கிட்டே அஞ்சி பக்கத்துக்கு பேட்டி குடுத்த மாதிரி இருக்கே :)))

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
/
அழுகிய தக்காளி...கெட்டுப் போன முட்டை....காலியா போன குவாட்டர் பாட்டில்....விழாத லாட்டரி...பழைய தினத்தந்தி....அரை லோடு செங்கல்... அரை குறையா உடைச்ச கருங்கல்....இது எதுவும் வீசாம அமைதியாய் இருக்கும் தமிழிஷ் தமிழ்மணம் வாக்காள பெருமக்களே...
/

ஹா ஹா
//

நீங்க சிரிக்கிறதை பார்த்தா வீச ரெடியாகிற மாதிரி இருக்கே சிவா ;)))

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
நாட்டாமை தீர்ப்பு சூப்பரு!

//

நன்றி சிவாண்ணே...இந்த வருஷம் உச்சிபுளிகுடி பண்ணாரியம்மன் கோயில்ல உங்களுக்கு தான் பரிவட்டம் ;)))

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
அண்ணே லெட்டரு இன்லேண்ட் கவருல எளுதலாமா இல்ல டிவி சானல்க்கு அனுப்பற ஸ்பெசல் கார்டுல அனுப்பனுமா????

//

எப்பிடியும் நாட்டாமை படிக்க மாட்டாரு...எதுல எழுதுனா என்ன?? ஆனா எதுல எழுதுனாலும் கண்டிப்பா ஸ்டாம்ப் ஒட்டனும்...எங்க ஊரு ராயல் மெயில் ரொம்ப பிரச்சினைல இருக்கு... :))

அது சரி(18185106603874041862) said...

//
மங்களூர் சிவா said...
/

முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்
/

இப்பிடித்தான் விவேக் ஒரு காமெடில பொண்ணுங்க மனசை புரிஞ்சிக்கனும்னு கெளம்புவாரு :))))))))))))

செம டமாஷா இருக்கும்.
//

விவேக் எனக்கு ரொம்ப பிடிக்கும்....மண் சோறு சாப்பிடற மஞ்சுளா...:0)))

நீங்க சொல்ற காமெடியை நானும் பார்த்திருக்கேன்...:0))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
/சமூக கட்டுப்பாடே அதை தவறா சரியா என்று கேள்வியாக்குகிறது...../

நாட்டாமை தீர்ப்புக்கும் இந்த அளவுகோல் பொருந்துமே. அதனால் தீர்ப்புக்கு கட்டுப் படுவது தான் தலைஎழுத்து.

மற்றபடி இந்த ஒரு பாகத்தில் சமுதாயம் குறித்த உங்கள் அலசல் எனக்கு மிகவும் பிடித்தது. பெரும்பாலும் ஒத்துப் போவதும் கூட.
//

நன்றி வானம்பாடிகள் ஸார்...

நாட்டாமை தீர்ப்புக்கு அளவுகோல் எல்லாம் இல்ல...அவரே செஞ்சா தான் உண்டு....:0)) அதுக்காக நீங்க கட்டுப்படணும்னு அவசியம் இல்ல...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
நாட்டாமை மேல உள்ள நம்பிக்கைல ஓட்டு மட்டும் போட்டாச்சு..! ஆப்ப்ப்பீஸ்ல போய் படிச்சுக்கிறேன்.. ஜூட்..

//

நாட்டாமை மாதித்தன் மேல இவ்ளோ நம்பிக்கையா....அவனை மந்திரவாதி கூட நம்ப மாட்டான்...நீங்க எப்படி நம்புறீங்க...

அது சரி(18185106603874041862) said...

//
கலையரசன் said...
கதை சுவாரசியமா இருந்தது!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

//

நன்றி கலையரசன்....உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...

அது சரி(18185106603874041862) said...

கலகலப்ரியா said...

//

//டவுசர் கிளிச்ச தொடைப்பாளின்னு எதுனா புதுசா உருவாக்கிடுவோம்//

வேஷ்டி கிழிக்க மாட்டாங்களா என்ன.. குசும்புக்கு ஒரு அளவு வேணும் ஐயா..

//

அடடா...அவரு வேட்டிய கிளிச்சிட்டு அப்புறம் இருக்க டவுசரையும் கிழிச்சவருங்க...

//
//உண்மையில் எது சரி எது தவறு...எது இயல்பு எது கட்டமைப்பால் திணிக்கப்பட்டது//

இததான் மெச்சூரிட்டின்னு சொல்லுவாய்ங்களோ..
//

ம்ம்ம்....தெரில...மாதித்தனுக்கு மெச்சூரிட்டிலாம் எதுவும் இல்ல...சின்ன பசங்கள்ட்ட ஐஸ்க்ரீம் புடுங்கி திங்கிற ஆள் தான்...இந்த திடீர் மெச்சூரிட்டிக்கு அவனோட தொழில் காரணமா இருக்கலாம்...:0)

//

//கண்ணகியின் கணவனுக்கு மாதவியிடம் மன சலனம் என்றால் கல்பனாவுக்கு மகேஷிடம் சலனம்//

பாலை அலட்சியம் செய்து.. கருவைப் பொதுவில் வைத்த உவமை சிறப்பு..

//

நீங்க இப்படி சொல்றீங்க...ஆனா, மாதித்தனுக்கு கண்ணகி ஹஸ்பன்ட் பேரு மறந்து போயிருச்சோன்னு எனக்கு ஒரு டவுட்டு....:)))

//

//காதல் என்பது என்ன....முகத்திரைகளை விலக்கிப் பார்த்தால் அது காமமாகவும் இருக்கலாம்....பல வண்ணம் காட்டும் அப்பட்டமான சுயநலமாகவும் இருக்கலாம்...அல்லது ஸிக்மன்ட் ஃப்ராய்ட் சொல்வது போல நார்ஸிசம்...சுய மோகமாகவும் இருக்கலாம்...//

இது காலம் ரொம்பக் கடந்து தெரிய வருவதுதான் துரதிஷ்டம்.. ஆனாலும்.. துன்பம் போல.. துரதிஷ்டமும் தேவைதான்..
//

துரதிர்ஷ்டம் என்று நினைப்பது எதிர்காலத்தில் உண்மையில் அதிர்ஷடமாகவும் இருக்கலாம்....

அது சரி(18185106603874041862) said...

கலகலப்ரியா said...

//
//சிவராமனால் தனக்கு ஒரு போட்டியை சகிக்க முடியவில்லை...கல்பனா தனக்கே என்று தான் வகுத்த எல்லைக்குள் இன்னொருவன் பிரவேசிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...அவனை பொறுத்த வரை அது உச்சமான காதல்//

this is called possessiveness.. இதுவும் தேவையானதுதான்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

//

ம்ம்ம்ம்...இல்ல...சிவராமனுக்கு பொஸஸிவ்னஸ் இருந்திருந்தால் பெண் பார்ப்பதையே நிறுத்தி இருப்பான்...அது தான் பொஸஸிவ்னஸ்...இல்லையா? ஆனா இந்த கதையில் வருவது, கோட்டையை காக்க தவறிய தளபதி தற்கொலை செய்து கொள்வது போல...

//

//அதனால் அவன் விலகியது சரியே//

ஆனாலும் தப்பா சரியான்னு சொல்ல முடியாதே... ஒரு வேளை இவளை விட முடியாதுன்னு உணர்ச்சிவசப்பட்டு விலகாம வேற முடிவு எடுத்திருந்தா.. அது தப்புன்னு சொல்ல முடியுமா..? இல்லாதப்போ.. இது சரின்னும் சொல்ல முடியாதில்ல..
//

தப்பு சரி என்று சொல்ல முடியாது தான்...ஆனால் அது இயற்கையா இல்லையா என்று சொல்ல முடியுமே?

//

//லண்டன் ட்யூப் ரயிலுக்கே டிக்கட் எடுக்காத மாவீரன்//

இரண்டு அடி ஒசரம்னா.. மடகஸ்கார்ல வர்ற குரங்குக் குட்டி கணக்கா பூந்து பூடலாம்ல..
//

எப்படியோ சந்தடி சாக்குல என்னை கொரங்குன்னு சொல்லியாச்சி....இப்ப சந்தோஷம் தான...

ரெண்டு அடிலாம் இல்ல...என் கிட்ட ப்ரீ பெய்ட் ஆய்ஸ்டர் கார்டுன்னு ஒண்ணு இருக்கு...அது இருந்தா டிக்கட் எடுக்க வேண்டாம்....அது தான் மாவீரத்தின் ரகசியம் ;))))..

//

//முன்பே சொல்லியது போல, கதை சொல்வதை விட, இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரங்கள் எனும் திரை விலக்கி மனித மனத்தை ஆராயவே நான் முயன்று கொண்டிருக்கிறேன்...//

இவ்வாறான மனப்பக்குவம் உள்ள மனிதம் இந்த உலகிற்கு ரொம்ப ரொம்ப தேவை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.. இந்த இடுகைய நான் தொடர்கிறேன் என்பதில் இந்த நொடியில் பெருமை அடைகிறேன் மிஸ்டர் அது சரி அவர்களே..
//

எல்லாப் புகழும் வேதாளத்துக்கே....ஆனா அதை ரொம்ப புகழாதீங்க...ஏற்கனவே அதுக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி....

//

//கல்பனாவும் சிவராமனும் செய்தது சரியா தவறா...சரியோ தவறோ உங்கள் அளவுகோல் என்ன... //

=)).. அடக்கடவுளே.. இவ்ளோ நேரம் சொன்னதென்ன.. இதென்ன..? அளவுகோலைக் கையிலெடுக்க நான் யார்..? கல்பனாவுக்கு கல்பனாவும்.. சிவராமனுக்கு சிவராமனும் மட்டுமே அளவுகோலைக் கையிலெடுக்க முடியும்.. சிவராமனை ரொம்பத் தெரியும் என்று கல்பனாவோ.. இல்ல கல்பனாவைத் தெரியுமென்று சிவராமனோ அளக்க ஆரம்பித்தால் பல விபரீத முடிவுகள் தோன்றலாம்.. ! இதில மூன்றாம் நபர்கள் அளவெடுக்க ஆரம்பிச்சா கிழிஞ்சிடாதா..!
//

ம்ம்ம்...அளவுகோல்னு சொன்னது கொஞ்சம் சரியான வார்த்தை இல்ல...உங்கள் பார்வையில் என்று இருந்திருக்க வேண்டும்....சரியோ தவறோ ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை உண்டு இல்லையா??

//

//
தவிர, என் எழுத்து பற்றியுமான கருத்துக்களையும் கொட்டலாம்....குறிப்பாக கதையில் எந்த இடம் சொதப்பியது..//

ஒரு இடம் கூட உறுத்தவில்லை..! அருமையான எழுத்து நடை..! நீங்களும் நம்ம favourite எழுத்தாளர் ஆய்ட்டீங்க.. ஓசில படிக்க முடியறது கூடுதல் நன்மை.. :P
//

அடடா...உண்மையில் உங்களைப் போன்ற நண்பர்களின் தொடர் ஊக்குவிப்பால் மட்டுமே இதை எழுத முடிந்தது....ஆக, நன்றி உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்...

//

//முடிந்தது....ஸ்ஸ்ஸ்...யப்பாடா...//

வடையா குவாட்டரா.. :p
//

ரெண்டும் இல்லீங்க...அந்த ரவுண்ட் (மட்டும்) முடிஞ்சது...அவ்ளோ தான்...:0)))

கலகலப்ரியா said...

//மெச்சூரிட்டிலாம் எதுவும் இல்ல...சின்ன பசங்கள்ட்ட ஐஸ்க்ரீம் புடுங்கி திங்கிற ஆள் தான்//

இப்போ நம்பறேன் மெச்சூரிட்டி இல்லைன்னு.. ஐஸ்கிரீம் பறிச்சு தின்னதால இல்ல.. ஐஸ்கிரீம்-ல மெச்சூரிட்டிய போட்டு குதப்பினதால.. :P.. இப்படி இருக்க முடியறதும் மெச்சூரிட்டியாக இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. =)

//மாதித்தனுக்கு கண்ணகி ஹஸ்பன்ட் பேரு மறந்து போயிருச்சோன்னு எனக்கு ஒரு டவுட்டு....:)))//

கண்ணகி பேரு மறக்கிறப்போ அது கவனம் வந்துடுமுங்க..

//
துரதிர்ஷ்டம் என்று நினைப்பது எதிர்காலத்தில் உண்மையில் அதிர்ஷடமாகவும் இருக்கலாம்...//

இதைத்தான் நான் வேற வார்த்தைல சொன்னேனுங்க..

//
ம்ம்ம்ம்...இல்ல...சிவராமனுக்கு பொஸஸிவ்னஸ் இருந்திருந்தால் பெண் பார்ப்பதையே நிறுத்தி இருப்பான்...அது தான் பொஸஸிவ்னஸ்...இல்லையா? ஆனா இந்த கதையில் வருவது, கோட்டையை காக்க தவறிய தளபதி தற்கொலை செய்து கொள்வது போல...//

ஆஹா.. இதுவும் இப்டி பேசிக்கிட்டே போலாமுங்க.. சிவராமனால் முடிஞ்சா நிறுத்தி இருப்பான்.. அது பொஸஸிவ்நெஸ் இல்லைன்னு நீங்க சொன்னா கேட்டுக்கிறோமுங்க.. எதுக்கு வம்பு.. வேதாளத்துக்கு ஒரு தலை ஜாஸ்தி ஆகவா... வேணாம்டி ஆத்தீ..

//தப்பு சரி என்று சொல்ல முடியாது தான்...ஆனால் அது இயற்கையா இல்லையா என்று சொல்ல முடியுமே?//

இயற்கை என்ற வார்த்தை.. நார்மல் என்ற வார்த்தைக்கு மொழிபெயர்ப்பா.. lol? if you ask me.. nothing is abnormal.. !

//இப்ப சந்தோஷம் தான...//

இப்டி "குட்டி" குட்டி சந்தோஷங்கள்தானே வாழ்க்கை.. :P

//எல்லாப் புகழும் வேதாளத்துக்கே....ஆனா அதை ரொம்ப புகழாதீங்க...ஏற்கனவே அதுக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி....//

அட விடுங்க.. இப்டி திமிருள்ள வேதாளங்கள் நிறைய.. இப்போ நான் இல்லையா..ஹிஹி..

//சரியோ தவறோ ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை உண்டு இல்லையா??//

அதானே சொன்னேன்.. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு , வெறுப்பு, பார்வை எல்லாம் உண்டு என்பதுதான் என்னுடைய பார்வை.. =))

//ஆக, நன்றி உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்...//

அட அட அவையடக்கம்.. நன்றிங்கோ..

//
ரெண்டும் இல்லீங்க...அந்த ரவுண்ட் (மட்டும்) முடிஞ்சது...அவ்ளோ தான்...:0)))//

நடத்துங்க..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

ஆஹா.. இதுவும் இப்டி பேசிக்கிட்டே போலாமுங்க.. சிவராமனால் முடிஞ்சா நிறுத்தி இருப்பான்.. அது பொஸஸிவ்நெஸ் இல்லைன்னு நீங்க சொன்னா கேட்டுக்கிறோமுங்க.. எதுக்கு வம்பு.. வேதாளத்துக்கு ஒரு தலை ஜாஸ்தி ஆகவா... வேணாம்டி ஆத்தீ..
//

எத்தனை தலை வளர்ந்தா என்ன?? அதுக்கு அறிவு வளரப் போறது இல்ல...என்னிக்கும் மொட்டைத் தலை தான்...

//
//தப்பு சரி என்று சொல்ல முடியாது தான்...ஆனால் அது இயற்கையா இல்லையா என்று சொல்ல முடியுமே?//

இயற்கை என்ற வார்த்தை.. நார்மல் என்ற வார்த்தைக்கு மொழிபெயர்ப்பா.. lol? if you ask me.. nothing is abnormal.. !
//

நார்மல்னா வழக்கம்னு ஒரு அர்த்தம் இருக்கே...ஒரு பொண்ணு ஒருத்தனை லவ் பண்றான்னு சொன்னா அது நார்மல்...ரெண்டு பேரை லவ பண்ணா அது அன்னேச்சுரல் இல்ல...அதே சமயம் நார்மலும் இல்ல...அதனால, நாட் அன்னேச்சுரல்...இயற்கை :0))

//

//இப்ப சந்தோஷம் தான...//

இப்டி "குட்டி" குட்டி சந்தோஷங்கள்தானே வாழ்க்கை.. :P

//

நல்லா இருங்கப்பா...:)))

//

//எல்லாப் புகழும் வேதாளத்துக்கே....ஆனா அதை ரொம்ப புகழாதீங்க...ஏற்கனவே அதுக்கு மண்டை கர்வம் ஜாஸ்தி....//

அட விடுங்க.. இப்டி திமிருள்ள வேதாளங்கள் நிறைய.. இப்போ நான் இல்லையா..ஹிஹி..
//

ஓஹோ...எனக்கு தெரியலியே.....இந்த லிஸ்ட்ல நான் இல்ல...அது மட்டும் எனக்கு தெரியும்...:)))

கலகலப்ரியா said...

//எத்தனை தலை வளர்ந்தா என்ன?? அதுக்கு அறிவு வளரப் போறது இல்ல...என்னிக்கும் மொட்டைத் தலை தான்...//

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது பரவால்ல.. இது என்ன மொட்டைத் தலைல முடி மாதிரி அறிவு வளருதா..

//அதே சமயம் நார்மலும் இல்ல..//

ஏன் அதே சமயம்.. அப்நார்மலும் இல்லைன்னும் சொல்லி இருக்கலாமில்ல..

//நல்லா இருங்கப்பா...:))//

உங்க ஆசீர்வாதம்.. நன்றிங்கோ..

ராஜ நடராஜன் said...

லேட்டா வந்துட்டோமில்ல:)

ராஜ நடராஜன் said...

//"என்ன வேதாளமே...உன் சந்தேகம் தீர்ந்ததா...."

வேதாளம் மண்டையை சொறிந்தது.... //

நாட்டாமை தீர்ப்ப கேட்ட வேதாளம் மட்டும் மண்டைய சொறியல.

ராஜ நடராஜன் said...

வேதாளம் மாதிரி தீர்ப்பே பிரியல.இதுக்கு மேல தீர்ப்புக்கு தீர்ப்பு இன்னான்னு கேட்டா இன்னா சொல்றது?

முந்தைய காஞ்சு போன பலகாரம் ஏதாவது இருக்குதான்னு பார்க்கப் போறேன்.

ராஜ நடராஜன் said...

ஓ!இந்தக் கதை அன்னபூர்ணாவில காபி குடிச்சிகிட்டே பேசுற கதையில்ல!

ராஜ நடராஜன் said...

முன்னாடி கதைக்கு நான் நீ யின்னு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்றதுக்கு நிறைய பேரு க்யூவில நிற்கிறது தெரிஞ்சது.

மாதி!ஊர் உலகத்துல நடக்கறதை இடுக்கு பொந்து,குறுக்கு சந்துன்னு உட்கார்ந்திருந்து ஒட்டுக் கேட்டதுல சொன்ன கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.

வேதாளம்!சீக்கிரம் கையக் கட்டி காரு டிக்கில மாதிய அமுத்து.இன்னொரு கதை ரெடின்னு சொன்னதும் வாய்க் கட்டை மட்டும் அவிழ்த்து விடு:0)

(ஆமா!இன்னுமா IE? நெருப்பு நரி கடையில போய் கொஞ்சம் வாலிபர் சங்க தலைவரு,கைப்புள்ள யாராவது டீ குடிக்க வர்றாங்களான்னு பார்க்கிறது)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது பரவால்ல.. இது என்ன மொட்டைத் தலைல முடி மாதிரி அறிவு வளருதா..
//

அட...அப்ப நிறைய தலை இருந்தா நிறைய அறிவுன்னு அர்த்தமில்லியா? :0))

//
//அதே சமயம் நார்மலும் இல்ல..//

ஏன் அதே சமயம்.. அப்நார்மலும் இல்லைன்னும் சொல்லி இருக்கலாமில்ல..
//

நார்மல் இல்லைன்னா அப்நார்மல்னு தானே அர்த்தம்...அப்புறம் அப்நார்மலும் இல்லைன்னா....ம்ம்ம்...சோ ராமசாமி பேசற மாதிரி ஆயிடாது??? :0))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
லேட்டா வந்துட்டோமில்ல:)

//

நீங்க எப்பவும் கடை மூடற நேரத்துக்கு தான் சாப்பிட போவீங்க போல :0)))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
//"என்ன வேதாளமே...உன் சந்தேகம் தீர்ந்ததா...."

வேதாளம் மண்டையை சொறிந்தது.... //

நாட்டாமை தீர்ப்ப கேட்ட வேதாளம் மட்டும் மண்டைய சொறியல.

//

தீர்ப்புன்னா அப்படித்தான் இருக்கும்....தெளிவா புரியற மாதிரி இருந்துட்டா அப்புறம் வக்கீலுக்கு எப்படி தொழில் நடக்கும்? :)))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
வேதாளம் மாதிரி தீர்ப்பே பிரியல.இதுக்கு மேல தீர்ப்புக்கு தீர்ப்பு இன்னான்னு கேட்டா இன்னா சொல்றது?

முந்தைய காஞ்சு போன பலகாரம் ஏதாவது இருக்குதான்னு பார்க்கப் போறேன்.

//

கதையை ஆரம்பத்துல இருந்து படிக்கணும்...கடைசி பக்கத்தை புரட்டி முடிவை படிச்சிட்டு ஆரம்பிச்சா இப்பிடித் தான்...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
முன்னாடி கதைக்கு நான் நீ யின்னு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்றதுக்கு நிறைய பேரு க்யூவில நிற்கிறது தெரிஞ்சது.
//

நாலு பேரு நாலு விதமா பேசறதை வச்சித் தான பஞ்சாயத்து ஒரு முடிவெடுக்க முடியும்?? நாந்தான் அவங்களை பேசச் சொல்லி கேட்டுக்கிட்டேன்...:)))

//
மாதி!ஊர் உலகத்துல நடக்கறதை இடுக்கு பொந்து,குறுக்கு சந்துன்னு உட்கார்ந்திருந்து ஒட்டுக் கேட்டதுல சொன்ன கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு.

வேதாளம்!சீக்கிரம் கையக் கட்டி காரு டிக்கில மாதிய அமுத்து.இன்னொரு கதை ரெடின்னு சொன்னதும் வாய்க் கட்டை மட்டும் அவிழ்த்து விடு:0)
//

மாதித்தன் பாவம் பாஸ்....அவனுக்கு தீர்ப்பு சொல்றது தவிர ஏகப்பட்ட வேலை இருக்கு...பஞ்சாய‌த்தெல்லாம் பார்ட் டைம் தான்...

//
(ஆமா!இன்னுமா IE? நெருப்பு நரி கடையில போய் கொஞ்சம் வாலிபர் சங்க தலைவரு,கைப்புள்ள யாராவது டீ குடிக்க வர்றாங்களான்னு பார்க்கிறது)
//

IE, Chrome ரெண்டும் வச்சிருக்கேன்...ஆனா, ஃபார்மெட்டிங் ரொம்ப பிரச்சினையா இருக்கு...குறிப்பா ஸ்பேஸிங்....விண்டோஸ் விஸ்டா பத்தி பேச ஆரம்பிச்சா இன்னைக்கு ஃபுல்லா கெட்ட வார்த்தையா பேசிக்கிட்டு இருப்பேன்....அதனால வேணாம்...

கலகலப்ரியா said...

//அது சரி said...

அட...அப்ப நிறைய தலை இருந்தா நிறைய அறிவுன்னு அர்த்தமில்லியா? :0))

நார்மல் இல்லைன்னா அப்நார்மல்னு தானே அர்த்தம்...அப்புறம் அப்நார்மலும் இல்லைன்னா....ம்ம்ம்...சோ ராமசாமி பேசற மாதிரி ஆயிடாது??? :0))//

இப்டி கேள்வி மேல கேள்வி கேட்டா எப்டி.. ஸோ... ராமசாமி என்னங்க.. இப்போ நான் ஒரே ஒரு கேக்கறேன் பதில் சொல்லுங்க.. "அப்போ நார்மல் இல்லைங்கிறது நார்மல் இல்லையா..?"

எதைப் பார்த்தாலும் நார்மல் இல்லைன்னு சொல்றது தான் தமிழ்நாட்டுல நார்மல்...அப்படி சொல்லாட்டி நீங்க நார்மல் இல்லைன்னு நார்மலா நாங்கெல்லாம் நார்மல்னு நினக்கிறவங்க உங்களுக்கு நார்மலா செர்டிஃபிகேட் குடுக்குறது தான் இங்க நார்மல் :0)))

கலகலப்ரியா said...

ஓ.. நீங்கதான் மிஸ்டர் ஸோ ராமசாமியா.. சாமியோ... தெரியாம போச்சுடா..