Sunday, 4 October 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்! - 6

அத்தியாயம் ஆறு - நீ துரோகி!

முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு, அத்தியாயம் மூன்று,அத்தியாயம் நான்கு, அத்தியாயம் ஐந்து




"இதோட மூணாவது ரவுண்டு...மூணு ரவுண்டு எட்டு பவுண்ட்....நாலு சிகரெட் எண்பது பென்ஸ்....சைடுக்கு ஒரு ஒரு பவுண்ட்...எட்டு...ஒன்னு...ஒம்போது...ஒம்போது பவுண்ட் எண்பது பென்ஸ்...எடுத்து வை மாதி...அப்ப தான் அடுத்த ரவுண்ட் ஊத்துவேன்..."

"என்னது காசா..."

"பின்ன...வர்றவனுக்கெல்லாம் ஓசில ஊத்தி கொடுக்க நான் என்ன ஜாதிக் கட்சியா நடத்துறேன்...காச எடுப்பூ...."

"அதெல்லாம் பைசா பேறாது...குடிச்சதுக்கும் நீ சொல்ற கதையை கேட்டதுக்கும் சரியா போச்சி....வேணும்னா காந்தி கணக்குல எழுதிக்க.....இப்ப‌ அவுத்து விட்டின்னா நான் பாட்டு போய்க்கிட்டே இருப்பேன்..."

வேதாளம் நீண்ட பெருமூச்சு விட்டது....

"ம்ம்ம்....வோட்டு போட்றதுக்குத் தான் காசு கேக்குறானுங்கன்னா இப்ப கதை கேட்கவுமா....ஒரு காலத்துல நான் கதை சொன்னா அம்புட்டு பேரு...இப்ப காசு குடுத்து கதை கேட்க ஆள் கொண்டு வர வேண்டியதாருக்கு...என் பொழப்பு இப்பிடி மாபெரும் மாநாடு நடத்துற கட்சி மாதிரி கேவலமாயிடுச்சே...சரி சரி...வாங்கின காசுக்கு சத்தம் இல்லாம கதை கேட்பேன்னு குவாட்டர் பாட்டில் மேல சத்தியம் பண்ணு...."

"பண்ணிட்டா போச்சி...எங்களுக்கெல்லாம் சத்தியமும் சைட் டிஷ்ஷும் ஒன்னு...அப்பப்ப நக்கிப்போம்...."

மாதித்தன் பாதி முடிந்திருந்த விஸ்கி பாட்டில் மீது அடித்து சத்தியம் செய்தான்...

"பொய் சத்தியம் செஞ்சவனுக்கு டாஸ்மாக்குல கூட‌ எடம் கிடைக்காது பாத்துக்க..."

அலுத்துக் கொண்ட வேதாளம் கதையை மீண்டும் ஆரம்பித்தது....

=====================================

"கணக்கெல்லாம் பார்த்திட்டியாடா......மாலு என்னவோ கம்ப்யூட்டர் க்ளாசுக்கு கட்டணும்னு சொன்னா...அதுக்கு ஒரு தொள்ளாயிரம் வேணும்...."

"ப்பச்ச்...நீயே எடுத்துக்கம்மா...எல்லாம் அந்த பீரோவுல தான் இருக்கு..."

"ஆமா...ஏண்டா எப்ப பார்த்தாலும் உர்ருன்னு இருக்க...எதுனா ஒடம்பு சரியில்லையா..மணி தான் ஒம்பதரை ஆச்சே...மெஸ்ஸை மூடிட்டி நீ வேணா போய் படு...நான் இந்த பாத்திரத்தையெல்லாம் கழுவி வைக்கணும்...."

சரியில்லை தான்...உடம்பு இல்லை...மனசு...ஏனோ பயமாய் இருக்கிறது...ச்சே...என்ன இது...அதான் கல்பா சொன்னாளே...பிடிக்கலைன்னு சொல்லிடறேன்னு....அப்புறம் என்ன...இன்னும் ஃபோன் வரலை...கொஞ்ச நேரம் வெய்ட் செஞ்சி பார்க்கலாம்...பத்து மணி ஆகட்டும்...

"இன்னும் அரை மணி நேரம் ஆகட்டும்மா...பத்து மணிக்கு மூடலாம்...யார்னா வருவாங்க..."

"சீக்கிரம் மூடினா கழுவி வச்சிட்டு படுக்க போகலாம்னு பார்த்தேன்.....ஆங்...ஃபோன் அடிக்குது...எடுத்து யாருன்னு பாரு..."

மாலதியின் அறையிலிருந்து ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டது....

பத்து மணி ஆகப் போவுது....கல்பாவா...செல்லுக்கு தான ஃபோன் பண்றேன்னு சொன்னா...இல்ல...ஃபோன் பண்றேன்னு சொன்னா...செல்லுக்குன்னு சொல்லலை...ஆனா எப்பவும் செல்லுக்கு தான பண்ணுவா....இல்ல வேற யாராவதா... சிவராமன் குழப்பத்துடன் ஃபோனை எடுத்தான்....

"ஹலோ..."

"ஹலோ...யாரு...சிவராமனா...சிவா...நாந்தான் மாமா பேசறேன்..."

கல்பனாவின் அப்பா.

====================================

இதை எதிர்பார்க்கவில்லை...கல்பனா தான் ஃபோன் செய்திருக்க வேண்டும்...திடீரென்று அவள் அப்பா ஏன்....கல்பா அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று சொல்லி....பெரிய பிரச்சினை ஆகிவிட்டதா...அவராக சொல்லட்டும்... சிவராமன் சமாளித்துக் கொண்டான்...

"ஆ...ம்ம்..ஆமா மாமா...சிவா தான் பேசறேன்...வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா..."

"எல்லாம் நல்லாதாம்ப்பா இருக்காங்க...அம்மா எப்படி இருக்காங்க...நீ எங்க இப்பல்லாம் வீட்டு பக்கமே வர்றதில்லை..."

சண்டை போடப் போகிறார் என்று எதிர்பார்த்தால் நல்லா பேசுறாரே....ஒரு வேளை கல்பா எதுவுமே சொல்லலியோ...

"அது...வேலை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி...அதான்...என்ன விஷயம் மாமா...அம்மாவை கூப்பிடவா..."

"இருக்கட்டும்ப்பா...எல்லாம் நல்ல விஷயம் தான்...கல்பனாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம்...மார்கழி முடிஞ்சதும் கல்யாணம்....மாப்ள அமெரிக்காவுல பேங்க்குல வேலை பார்க்கிறாரு...ரொம்ப நல்ல எடம்...எனக்கு கூடமாட ஒத்தாசையா நீயும் உங்க அம்மாவும் தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்...அதுக்குத் தான் கூப்பிட்டேன்..."

என்ன இது...சிவராமனுக்கு கால்கள் லேசாக‌ நடுங்கியது...எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும்....ஃபோன் ஏன் வழுக்குகிறது....கல்பனா எதுவுமே சொல்லலியா...இல்லை...எல்லாரும் சேந்து அவளை மிரட்டி வச்சிட்டாங்களா...லவ் பண்றதுக்கு இந்தாளுக்கும் தெரியுமே...என்ன கொழுப்பிருந்தா எனக்கே ஃபோன் பண்ணி ஹெல்ப் பண்ண சொல்வான்...இனிமே பேசாம இருந்தா ஏறி மிதிச்சிட்டு போயிருவானுங்க...

சிவராமனின் குரல் சூடாக வழிந்தது...

"என்ன மாமா...எதுவுமே தெரியாத மாதிரி பேசறீங்க...நானும் கல்பாவும் லவ் பண்றோம்...இது உங்களுக்கும் தெரியும்...அத்தைக்கும் தெரியும்...கோயம்புத்தூர்ல எல்லாருக்கும் தெரியும்...இப்ப ஃபோன் பண்ணி வேற மாப்பிள்ளை பார்த்திருக்கேன்...நீ வந்து பந்தக்கால் நடுன்னு கூப்டுறீங்க...என்ன நக்கல் பண்றீங்களா..."

எதிர்முனையில் நீண்ட அமைதி... சாம பேத தான தண்டம்...சொன்னவன் அதிபுத்திசாலி...சாமத்திலும் பேதத்திலும் சாயாவிட்டால் தானம்...தானமும் தோற்றால் மட்டுமே தண்டம்...கல்பனாவை ஜெயிக்க சாமம் பேதம்...சிவராமனை ஜெயிக்க தானம்...விளக்கை அணைத்தால் எல்லா ஆம்பிளையும் ராமன்...அவசியம் வந்தால் ஒவ்வொரு மனிதனும் சாணக்கியன்...

கல்பனாவின் அப்பா காய் நகர்த்த ஆரம்பித்தார்...

"சிவா...என்னப்பா இது...உன்னை சின்னப் பையன்லருந்து தெரியும்...உங்க அப்பா போனதுக்கப்புறம் உன்னை படிக்க வைச்சவன் நான்...எத்தனை தடவை எங்க வீட்டுக்கு வந்துருக்க...எங்க வீட்லயே சாப்பிட்டுட்டு அப்படியே தூங்கிருவ...ஞாபகம் இருக்கா...அடிக்கடி வரப் போக, நீ உறவுங்கிறது கூட எங்களுக்கு மறந்து போச்சு.....எங்க வீட்ல‌ ஒருத்தனாத் தான் ட்ரீட் பண்றோம்...கல்பனாவும் உன்னை ஒரு நல்ல ஃப்ரண்டா தான் பார்க்கிறா...நீ ஏன் அதை லவ்வுன்னு எடுத்துக்கற...சரி...விடு...உன்னையும் குறை சொல்ல முடியாது...வயசுக் கோளாறு..."

"ஃப்ரண்ட்ஷிப் மட்டும் தான்னு கல்பா உங்கள்ட்ட சொன்னாளா? அவளை பேச சொல்லுங்க...உங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு..."

"ம்ம்ம்...கல்பனா உன்னை பத்தி எதுவும் சொல்லலை சிவராமா...நீ நல்ல ஃப்ரண்டா இல்லாட்டியும் பரவால்ல...நல்ல மனுஷனா இரு...அவளுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...சரின்னுட்டா...நீ ஏன் குறுக்க நிக்கிற..."

"நீங்க என்ன மிரட்டினீங்கன்னு யாருக்கு தெரியும்...கல்பனாவை பேச சொல்லுங்க...இல்லாட்டி நான் இப்பவே கெளம்பி வர்றேன்...நீங்க என்ன பண்ணுவீங்கன்னு பார்க்கலாம்..."

"என்ன சிவா கலாட்டா பண்றியா...நீ பண்ணுவ...உன்னையெல்லாம் நம்புனதே தப்பு...பெத்த பொண்ணை மெரட்டி கல்யாணம் பண்ணி வைக்கிற அளவு நான் கேவலமானவன் இல்ல....கல்பனாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு....நீயே அவள்ட்ட கேட்டுக்க‌...கல்பா...இந்தா நீயே உன் ஃபரண்டு கிட்ட சொல்லு...உனக்கு மகேஷை பிடிச்சிருக்குன்னு நல்லா தெளிவா உறைக்கிற மாதிரி சொல்லு....குறுக்க நிக்க வேணாம்னு சொல்லு...."

"சிவா...நான் கல்பனா பேசறேன்..."

மிகத் தொலைவிலிருப்பது போல் மெல்லியதாக கல்பனா....

"சொல்லு கல்பா...உன்னை மிரட்டினாங்களா...யார் என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம்...தைரியமா சொல்லு..."

"இல்ல சிவா...யாரும் மிரட்டலை...."

சிவராமனுக்கு குரல் நடுங்கியது....

"அப்ப...அப்ப....அந்த மகேஷை உனக்கு பிடிச்சிருக்கா...."

"ஆமா..."

=================================

பெண் பார்த்து விட்டு போய் ஒரு வாரம் ஆகிவிட்டது...தேதி குறித்துவிட்டார்கள்...இன்னும் ரெண்டு வாரத்தில்.....கல்பனா மகேஸ்வரன்...

கல்பனா குழம்பிக் கொண்டிருந்தாள்...

மகேஷை பிடிச்சிருக்கு...ஆனா சிவாவையும் பிடிச்சிருக்கே...மகேஷை பிடிக்கலைன்னு சொல்ல காரணமே இல்ல...சிவாவை பிடிச்சிருக்குன்றதை தவிர...எப்படி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்...சிவாவை லவ் பண்ணா மகேஷை எப்படி பிடிச்சிருக்க முடியும்...ஒரு வேளை...அவன் சிவாவை விட அழகா இருக்கான்...அமெரிக்காவில வேலை...ச்சே...இல்ல...எனக்கு அது தோணவே இல்ல...

என்னமோ மகேஷை பிடிச்சிருக்கு...அதே மாதிரி சிவாவையும் பிடிச்சிருக்கு....சிவாவை ஏன் பிடிச்சிருக்கு...ரொம்ப நாள் பழக்கம்...ஃப்ரண்ட்...அவன்கிட்ட எல்லாத்தையும் பேசலாம்...அந்த முன் கோபம்...அப்புறம் ஸாரி...எல்லாம் பிடிச்சிருக்கு....மகேஷ்...ம்ம்....ஒரு மாதிரி துறுதுறுன்னு இருக்கான்...சிவா ஒரு ரிவர் மாதிரி...மகேஷ் கொஞ்சம் கடல் மாதிரி....ரெண்டு பேரையுமே பிடிச்சிருக்கு...

அது எப்படி கல்பா...ஒரு பொண்ணு எப்படி ரெண்டு பேரை லவ் பண்ண முடியும்...

லவ்வுன்னு யார் சொன்னா...பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்...ஒரே ஒருத்தரை தான் பிடிச்சிருக்கணுமா...ஏன் ரெண்டு பேரை பிடிச்சிருக்குன்னு சொல்லக் கூடாதா...

அப்ப லவ் வேற பிடிச்சிருக்குன்னு சொல்றது வேறயா...லவ் என்ன கெட்ட வார்த்தையா...நீ பிடிச்சிருக்குன்னு சொல்றது எந்த அர்த்தத்தில....உண்மைய சொல்லு கல்பா....நீ ரெண்டு பேரையும் லவ் பண்றியா....

ச்சே...அது அசிங்கமா இருக்கே...எப்படி ரெண்டு பேரை லவ் பண்ண முடியும்...

என்ன தப்பு கல்பா...காஃபியும் பிடிக்கும்...டீயும் பிடிக்கும்....ஆண் குழந்தையையும் பிடிக்கும்...பெண் குழந்தையும் பிடிக்கும்...அம்மாவும் பிடிக்கும்...அப்பாவும் பிடிக்கும்...அப்ப சிவராமனும் பிடிக்கும்...மகேஷும் பிடிக்கும்...இதுல என்ன தப்பு...இல்லைன்னு சொல்றியா...அப்ப நீ சொன்னதுல எது உண்மை எது பொய் கல்பா....நீ சிவராமனை லவ் பண்றேன்னு சொன்னது உண்மையா இல்ல மகேஷை பிடிச்சிருக்குன்னு சொன்னது பொய்யா...சரி, நீ சிவராமனை லவ் பண்றது தான் உண்மைன்னு வச்சிக்குவோம்....அப்ப மகேஷை ஜஸ்ட் பிடிச்சிருக்கா இல்ல லவ் பண்றியா...எதுனா ஒண்ணு தான் சாய்ஸ்...

சிவராமனோட ஏழு வருஷம் லவ் கல்பா..ஜஸ்ட் பிடிச்சிருக்குன்னு உன்கிட்ட நீயே பொய் சொல்லாத.....எத்தனை ப்ளான் பண்ணிருப்பீங்க...அழகா ரேஸ் கோர்ஸுல ஒரு ஃப்ளாட்...குட்டி குட்டியா பசங்க....ஊட்டி, கொடைக் கானல், ப்ளாக் தண்டர் வருஷா வருஷம் டூர்...அன்னபூர்ணா மாதிரி ஒரு பெரிய ஹோட்டல்...எப்படியாவது ஒரு ஃபோர்ட் கார்....

எல்லாத்தையும் மறந்துடுவியா கல்பா....உன்னால சிவராமனை விட்டுட முடியுமா...அமெரிக்காவுல போய் கார், பங்களா...பளபளப்பா புருஷன்...உன்னால வாழ முடியுமா...ஃபோர்ட் காரை பார்க்கும் போதெல்லாம் உனக்கு உறுத்தாது??...

நீ செல்ஃபிஷ்...துரோகி கல்பா...நட்புத் துரோகி...காதல் துரோகி...மகேஷ் , சிவராமன் ரெண்டு பேரும் அவங்க சைட்ல கரெக்ட்...நீ தான் தப்பு...

இல்ல...சிவராமனை மறந்துட்டு என்னால வாழ முடியாது...மனசுல உறுத்திக்கிட்டே இருக்கும்...அது மகேஷுக்கும் துரோகம்...வேணாம்...மகேஷ் கிட்ட எப்படியாவது சொல்லிக்கலாம்...சிவராமன்கிட்ட பேசினா என்ன....இப்ப டைம்...எட்டு மணி ஆகுது...சிவா இப்ப மெஸ்ல பிஸியா இருப்பானே...இருக்கட்டும்....

நைன் எய்ட் நைன் ஃபோர் ட்டூ நைன் ஃபைவ் நைன் ஃபைவ் ஒன்...

கல்பனா தன் மொபைல் போனில் சிவராமனின் எண்களை அழுத்த ஆரம்பித்தாள்....

======================

"சார்...இங்க கொஞ்சம் சாம்பார்...அடுத்து நாலு இட்லி சொல்லிடுங்க..."

"சார்...நமக்கு பில்லு எவ்வளவு....ஏதோ ஃபோன் அடிக்குது பாருங்க..."

Kalpa Calling....Kalpa Calling.... சிவராமன் தன் மொஃபைல் ஃபோனை வெறித்தான்...

கல்பா...ஏன் பேச வேண்டும்....பேச என்ன இருக்கிறது....இல்லை...கல்பாவிடம் பேசாமல் இருக்க முடியாது....

"ஹலோ...சிவராமன் ஹியர்..."

"சிவா...நான் கல்பா...உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...."

சிவராமனுக்கு கசப்பாக இருந்தது....

"என்ன பேசணும்....கல்யாணத்துக்கு பந்தக்கால் நட நான் வரணுமா...."

அமைதி....

"இல்ல சிவா...இந்த கல்யாணத்தை நிறுத்தணும்..."

======================== தொடரும் =====================

(பின் குறிப்பு: ஆணி அதிகமாகி என் பாடி பஞ்சர் ஆகிவிட்டதால் கடந்த சில நாட்களாக அதிகம் படிக்க முடியவில்லை...எதுவும் எழுதவும் முடியவில்லை...தாமதத்திற்கு நண்பர்கள் மன்னிப்பார்களாக...Also sorry for this such a long post...நீ அப்படியே எழுதிட்டாலும்.. வெளங்கிரும்...சந்தோஷமா இருந்தம்டே என்பவர்கள் துக்கத்தில் அடுத்த குவாட்டரை ஆர்டர் செய்க‌!)


33 comments:

அது சரி(18185106603874041862) said...

கருணாநிதிக்கு தமிழக அரசு விருது :0)))))))))))

பழமைபேசி said...

பின்ன தமிழக அரசுக்கு கருணாநிதி விருதுன்னா நீங்க நினைச்சீங்க??

பழமைபேசி said...

ச்சே, மனுசனை அங்க இங்க உட்டு டரியல் பண்றாங்கப்பா.... கல்பா, நீ நடுத்தெருவில் நிற்கக் கடவது!!

விக்கிரமாதித்தா, நீ அது சரி அண்ணாச்சியை உடனே தூக்கிக் கொண்டு ஓடு!!

Unknown said...

கல்பாவை மகேசும் சிவராமனும் அம்போ என்று விட்டுட்டு போயிடனும்.

vasu balaji said...

ரொம்ப ஆழமான தீம். நல்லா கொண்டு போறீங்க பார்க்கலாம்.

கலகலப்ரியா said...

//சாம பேத தான தண்டம்...சொன்னவன் அதிபுத்திசாலி...சாமத்திலும் பேதத்திலும் சாயாவிட்டால் தானம்...தானமும் தோற்றால் மட்டுமே தண்டம்...கல்பனாவை ஜெயிக்க சாமம் பேதம்...சிவராமனை ஜெயிக்க தானம்...விளக்கை அணைத்தால் எல்லா ஆம்பிளையும் ராமன்...அவசியம் வந்தால் ஒவ்வொரு மனிதனும் சாணக்கியன்...//

எப்டிங்க..

//மகேஷை பிடிச்சிருக்கு...ஆனா சிவாவையும் பிடிச்சிருக்கே...மகேஷை பிடிக்கலைன்னு சொல்ல காரணமே இல்ல...சிவாவை பிடிச்சிருக்குன்றதை தவிர...எப்படி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்...சிவாவை லவ் பண்ணா மகேஷை எப்படி பிடிச்சிருக்க முடியும்...ஒரு வேளை...அவன் சிவாவை விட அழகா இருக்கான்...அமெரிக்காவில வேலை...ச்சே...இல்ல...எனக்கு அது தோணவே இல்ல..//

இம்சைப்பா..

//குட்டி குட்டியா பசங்க//

=)).. சாரி.. இத பார்த்தும் சிரிச்சிட்டேன்..

//"இல்ல சிவா...இந்த கல்யாணத்தை நிறுத்தணும்..."//

அட ச்சை..

//ஆணி அதிகமாகி என் பாடி பஞ்சர் ஆகிவிட்டதால் கடந்த சில நாட்களாக அதிகம் படிக்க முடியவில்லை...எதுவும் எழுதவும் முடியவில்லை.//

ஆஹா.. அப்டின்னா புல்லா எழுதி முடிச்சிடுங்கையா.. மாசக்கணக்கா இடைவெளி விடுறது ரொம்ப மோசம்பா.. இத முதல்லையே சொல்லி இருந்தா படிக்காம இருந்திருக்கலாம்.. இப்டி இடைல கல்பனா மாதிரி எங்களையும் குழப்பி உங்களையும் குழப்பினா நல்லாவா இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
பின்ன தமிழக அரசுக்கு கருணாநிதி விருதுன்னா நீங்க நினைச்சீங்க??

04 October 2009 23:42
//

அப்படி ஏதும் விருது இல்லை போலருக்கே...இருந்தா அதையும் எடுத்துண்டிருப்பாங்க...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
ச்சே, மனுசனை அங்க இங்க உட்டு டரியல் பண்றாங்கப்பா.... கல்பா, நீ நடுத்தெருவில் நிற்கக் கடவது!!
//

அடப்பாவமே...கல்பா மேல ஏன் இவ்ளோ கோவம்???

//
விக்கிரமாதித்தா, நீ அது சரி அண்ணாச்சியை உடனே தூக்கிக் கொண்டு ஓடு!!
//

ஹலோ...கதையை ஒழுங்கா படிக்கணும்...மாதித்தனையே வேதாளம் கட்டி வச்சிருக்கு...அப்புறம் எங்க அவன் என்னை தூக்கறது??

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
கல்பாவை மகேசும் சிவராமனும் அம்போ என்று விட்டுட்டு போயிடனும்.
//

அப்படியும் ஆகலாம் முகிலன் :0)))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
ரொம்ப ஆழமான தீம். நல்லா கொண்டு போறீங்க பார்க்கலாம்.

//

நன்றி வானம்பாடிகள்...வேதாளம் கதையை எப்படி கொண்டு போகுதுன்னு நானும் ஆர்வத்தோட இருக்கேன்...:)))

அது சரி(18185106603874041862) said...

கலகலப்ரியா said...

//
//குட்டி குட்டியா பசங்க//

=)).. சாரி.. இத பார்த்தும் சிரிச்சிட்டேன்..
//

ஸ்ஸ்ஸ்...தியேட்டர்ல சீரியஸான சீன் ஓடிக்கிட்டு இருக்கும்போது இப்படியெல்லாம் சிரிக்கப்படாது....அப்புறம் "இது சீரியசான சீன்...இங்கே சிரிக்காதீர்கள்"னு கார்டு காட்ட வேண்டி வரும்!

//

//"இல்ல சிவா...இந்த கல்யாணத்தை நிறுத்தணும்..."//

அட ச்சை..
//

இந்த ச்சை எதுக்கு??

//
ஆஹா.. அப்டின்னா புல்லா எழுதி முடிச்சிடுங்கையா.. மாசக்கணக்கா இடைவெளி விடுறது ரொம்ப மோசம்பா.. இத முதல்லையே சொல்லி இருந்தா படிக்காம இருந்திருக்கலாம்.. இப்டி இடைல கல்பனா மாதிரி எங்களையும் குழப்பி உங்களையும் குழப்பினா நல்லாவா இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//

ஃபுல்லா ஆகிட்டா அப்புறம் எங்க இருந்து எழுதறது?? ஓ...இது வேற ஃபுல்லா...

நானெல்லாம் எழுதறதே நாலு பேரை குழப்பறதுக்கு தான்...எல்லாரும் குழம்பினா நல்லாத் தான் இருக்கு ;0)))

குடுகுடுப்பை said...

இது கரிக்டூ, ஆனாங்காட்டி இந்தக்கல்யாணத்தை நிறுத்தினா பத்தாது எல்லாக்கல்யாணத்தையும் நிறுத்தனும்.

இறைவா நீ மெஸேஜ் அனுப்பி வை சீக்கிரம்.

பழமைபேசி said...

//அடப்பாவமே...கல்பா மேல ஏன் இவ்ளோ கோவம்???
//

பின்ன? புடிச்சா ஒருத்தனை உறுதியாப் பிடிக்க வேணாமா?? பாவம் சிவா! நான் அடுத்த மாசம் ஊருக்குப் போகும் போது, போயிப் பாக்கணும் அவனை....

நசரேயன் said...

//மகேஷை பிடிச்சிருக்கு...ஆனா சிவாவையும் பிடிச்சிருக்கே...மகேஷை பிடிக்கலைன்னு சொல்ல காரணமே இல்ல...சிவாவை பிடிச்சிருக்குன்றதை தவிர...எப்படி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்...சிவாவை லவ் பண்ணா மகேஷை எப்படி பிடிச்சிருக்க முடியும்...ஒரு வேளை...அவன் சிவாவை விட அழகா இருக்கான்...அமெரிக்காவில வேலை...ச்சே...இல்ல...எனக்கு அது தோணவே இல்ல...//

பல பாலிவுட் படங்களுக்கு கதை இருக்கும் போல

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
இது கரிக்டூ, ஆனாங்காட்டி இந்தக்கல்யாணத்தை நிறுத்தினா பத்தாது எல்லாக்கல்யாணத்தையும் நிறுத்தனும்.

இறைவா நீ மெஸேஜ் அனுப்பி வை சீக்கிரம்.

//

என்ன மெஸேஜ் அனுப்பினாலும் உங்களுக்கு யூஸ் இல்லியே தலைவரே...என்ன பண்ணலாம்??

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//அடப்பாவமே...கல்பா மேல ஏன் இவ்ளோ கோவம்???
//

பின்ன? புடிச்சா ஒருத்தனை உறுதியாப் பிடிக்க வேணாமா?? பாவம் சிவா! நான் அடுத்த மாசம் ஊருக்குப் போகும் போது, போயிப் பாக்கணும் அவனை....

//

பார்த்தா கல்பனாவை கேட்டதா சொல்லுங்க....:0)))

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
//மகேஷை பிடிச்சிருக்கு...ஆனா சிவாவையும் பிடிச்சிருக்கே...மகேஷை பிடிக்கலைன்னு சொல்ல காரணமே இல்ல...சிவாவை பிடிச்சிருக்குன்றதை தவிர...எப்படி பிடிக்கலைன்னு சொல்ல முடியும்...சிவாவை லவ் பண்ணா மகேஷை எப்படி பிடிச்சிருக்க முடியும்...ஒரு வேளை...அவன் சிவாவை விட அழகா இருக்கான்...அமெரிக்காவில வேலை...ச்சே...இல்ல...எனக்கு அது தோணவே இல்ல...//

பல பாலிவுட் படங்களுக்கு கதை இருக்கும் போல

//

அட...நீங்க எங்கருந்து வந்தீங்க...ரொம்ப நாளா ஆளையே காணோம்?? நான் கூட அரசியல்லருந்து நீங்க விலகிட்டதா நினைச்சேன்...

ஆமாங்க...இது மாதிரி மெகா சீரியல் கதை நிறைய இருக்கு...யார்னா ப்ரட்யூசர் சிக்கினா அமுக்கி கொண்டு வாங்க...உங்களுக்கு பத்து பெர்சன்ட் கமிஷன்...

:0)))

கலகலப்ரியா said...

aahaa.. shelfari kavanap paduththitteenga.. irunga namma shelf etti parkkaren..

அது சரி(18185106603874041862) said...

நேத்தி ச்சும்மா இந்த ஐடியா வந்துச்சி...ஸ்கூல் பையன் மாதிரி சும்மா ஷோ தான்...

சீக்கிரம் உங்க செல்ஃபை திறங்க...நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்னு எனக்கும் க்யூரியஸா இருக்கு....

கலகலப்ரியா said...

ada neenga vera.. naama 2007 laye open pannittomla..

கலகலப்ரியா said...

http://www.shelfari.com/o1517684275 hihi..

அது சரி(18185106603874041862) said...

ஓ...கொஞ்சம் இருங்க...பார்த்திட்டு சொல்றேன்....

அது சரி(18185106603874041862) said...

அய்யோ....நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா....

நீங்க பெரிய ஆளா இருக்கீங்க...ஷிட்னி ஷெல்டன், அயன் ராண்ட்,அகதா க்றிஸ்டி...இது தவிர எதுவும் எனக்கு தெரியலை...

அது சரி(18185106603874041862) said...

German....all i know is, Guten Morgen(??), Guten Tag...That's all...

கலகலப்ரியா said...

athu pothum.. atha vachchithaan inga niraiya peru pozhaippu nadaththikkittirukkaainga.. =))

அது சரி(18185106603874041862) said...

அப்போ நான் ஜெர்மனி/ஆஸ்ட்ரியா/ஸ்விஸ் வந்தா சோத்துக்கு பிரச்சினையில்லை...:0))

கொஞ்ச நாள் முன்னாடி ஜெர்மன் படிக்க ஆரம்பிச்சேன்...அப்படியே நின்னு போச்சி...திருப்பி ஆரம்பிக்கணும்...

கலகலப்ரியா said...

switz thaanungo.. germany & austriala kooda.. soththukku probs illa.. :p.. naan italian aarambichchen.. thirumbi aarambikkirathaa illa.. sonia auntykku hindithaan puriyumaam.. hindi padikkalaaminnirukken.. =))..

அது சரி(18185106603874041862) said...

அவங்களுக்கு ஹிந்தி புரியுமா?? யாரு இப்படி புரளிய கிளப்பி விட்டது???

நான் ஸ்பானிஷ் படிக்கப் போறேன்...இங்கிலீஷ் படிச்சி முடிச்சதும் ;0))

கலகலப்ரியா said...

cha.. moththathla yaarum damil padikkirathaa illa.. ennai thavira.. uruppatta maathirithaan tamil.. avvvv.. aiyo naan escape.. appaalikka vanthu bathil poduren..

அது சரி(18185106603874041862) said...

அட...தமிழும் படிச்சிக்கிட்டு தாங்க இருக்கேன்...என்ன....எழுத்துக்கூட்டி படிக்க நெம்ப நாளாவுது...

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா... நம்ம பாப்பாவுக்கு டமில் வராதுன்னு பெருமையா சொல்லி சொல்லியே புள்ளைங்கள இப்புடி கெடுத்து வச்சிருக்காய்ங்கப்பு.. ஹும் நீங்க கூட்டுங்க.. எழுத்த..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸ்ஸப்பா... நம்ம பாப்பாவுக்கு டமில் வராதுன்னு பெருமையா சொல்லி சொல்லியே புள்ளைங்கள இப்புடி கெடுத்து வச்சிருக்காய்ங்கப்பு.. ஹும் நீங்க கூட்டுங்க.. எழுத்த..

11 October 2009 18:54
//

நான் தமிழை தான் எழுத்துக் கூட்டி படிக்கிறேன்னு யார் சொன்னா?? எல்லாத்தையும் அப்படித் தான் படிக்கிறேன்... எனக்கு டமில், இங்கிளீபீஸ், ஹிந்தி எதுவும் வராது...

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் இந்த ஆட்டத்துக்கு வரல.. செரி நீங்க அதுங்க கிட்ட போய்க்கோங்க..