Saturday 14 March 2009

ரஜினி அரசியலுக்கு வரலாமா?


எனக்கு ரஜினிகாந்த்தை பிடிக்கும்...எவ்வளவு பிடிக்கும் என்றால்...மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் என்று கேட்ட ஸ்ரீநிதியிடம் சொன்னது போல்...இரண்டு கைகளையும் அகல விரித்து...இவ்ளோ பிடிக்கும் என்று சொல்ல தோன்றுகிறது...

ஒருவரை ஏன் பிடிக்கவில்லை என்று சொல்வது சுலபம்...சிரிப்பது பிடிக்கவில்லை...நடப்பது பிடிக்கவில்லை...ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை....எண்ணி முடியா காரணங்கள்...எல்லையில்லா பட்டியல் அது... ஆனால் ஒருவரை ஏன் பிடிக்கிறது என்பதற்கு காரணம்...எப்படி சொல்வது?

ரஜினியை ஏன் பிடிக்கிறது என்பதற்கு பெரிய காரணம் எதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை...நடிப்பா?? இருக்க முடியாது...ரஜினியை விட மிகச்சிறந்த நடிகர்கள்...மார்லன் பிரான்டோ...அல் பசினோ...ராபர்ட் டி நீரோ...ரஸல் க்ரோ...இன்னும் பலர்...ஆனால் அதிகம் சொல்ல தேவையில்லை...கமல்ஹாசன்...ஆஸ்கர் விருது...ஆப்பம் சுட்ற ஆயா விருது...எந்த விருதும் தேவையில்லை...சிகரங்களை கடந்த உண்மையான கலைஞன்...பதினாறு வயதினிலே சப்பாணி ஆரம்பித்து...தசாவதாரம் பல்ராம் நாயுடு வரை...சிகரங்களை கடப்பது மட்டுமல்ல...மற்றவர்கள் ஏற புதிய சிகரங்களை படைக்கும் கலைஞன்... ஆனால், கமல்ஹாசன் மீது ஒரு மிகச்சிறந்த கலைஞன் என்ற மரியாதை மட்டுமே இருக்கிறது....என்னோட பிரண்ட்...ரொம்ப மேல போயிட்டான்...என்று சொல்ல தோன்றவில்லை... ரஜினி என்ன ஸ்பெஷல்??

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.யார், சிவாஜி..சிவக்குமார், ஜெய்சங்கர்...கதாநாயகன் ஆகணும்னா சிவப்பா அழகா இருக்கணும்...நல்லவனா இல்லாட்டியும் பரவால்லை...நல்லவனா நடிக்கணும்...என்று இருந்த தமிழ் சினிமாவை... ஆள் கறுப்பு...கலைந்த தலை...ஸ்க்ரீன்ல வர்றதே கையில ஒரு தம்மோட தான்...அப்படி ஒண்ணும் உயரமில்லை...சிரிச்சா எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி அழகா இல்ல...ஒரு வில்லத்தனம் தான் தெரியுது... தமிழ் சினிமாவை தலைகீழாக புரட்டி போட்டதினால் பிடித்திருக்கிறதா??

இல்லை ரஜினி ஒரு மென்டல்...ரொம்ப குடிச்சி மூளை கெட்டு போயிடுச்சி...எப்பவும் போதை தான்...இப்ப பெரிய ஓபனிங் மோகனுக்கு தான்...எல்லா படமும் நூறு நாள்..லேடீஸ் எல்லாம் அவ்ளோ க்ரேஸ்...இன்னும் ரெண்டு படம்...அப்பறம் மோகன் தான் சூப்பர் ஸ்டார்... ஆனந்த் பாபு தான் இப்ப சூப்பர் ஸ்டார்...அவரு டான்ஸுக்குன்னே படம் ஓடும்.. ராமராஜன் தான் இன்னிக்கு தமிழ்நாட்டுல டாப்...ஏ, பி, சி, டின்னு எல்லா சென்டர்லயும் ஹிட்டாகிற மாஸ் ஹீரோ...அடுத்த சி.எம்மே அவரு தான்...ரஜினி எல்லாம் சும்மா...இனிமே எதுனா அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க வேண்டியது தான்....

ரஜினியின் முடிவுரை...ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல...ஒருவர் அல்ல..இருவர் அல்ல‌....பல முறை, பலரால் எழுதப்பட்டிருக்கிறது...

ஆனால், ரஜினி இன்னமும் இருக்கிறார்...அவருக்கு முன்னால் வந்த, பின்னால் வந்த, அவரை ஒழிக்க முற்பட்ட, ஒழிந்து விடுவார் என்று மகிழ்ந்த பலரும்...எங்கே இருக்கிறார்கள்??? அவர்களின் முகவரி என்ன??

ரஜினி அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி அதிரடி அறிக்கைகள் விட்டதில்லை..அடுத்த சி.எம். நான் தான் என்று ரகசியமாக அமைச்சரவை அமைப்பதில்லை..

யோசித்துப் பார்த்தால்...எத்தனை முறை ஜெயித்தாய் என்பது முக்கியமல்ல, எத்தனை முறை வீழ்ச்சியில் இருந்து எழுந்தாய் என்பது தான் உன் பலம் என்ற தோல்வியில் இருந்து எழும் குணமே எனக்கு ரஜினியிடம் அதிகம் பிடித்திருக்கிறது... (முதல்வர் கருணாநிதியிடம் எனக்கு பிடித்ததும் இது தான்..)

அதிகம் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வரலாமா?? வந்தால்??.... ரஜினி தமிழன் அல்ல...தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும்...ஆனால், சம்யுக்தா, சங்கமித்ரா என்று பேரக் குழந்தைகளுக்கு பெயர் வைத்துவிட்டு, தெருவில் இருக்கும் மளிகைக்கடையின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் சில டாக்டர்கள்(மருத்துவராம்!) தார் பூசிக் கொண்டிருக்கிறார்கள்...அவர்கள் பெயரே ராமதாஸ் என்று இருக்கக் கூடும்.இதில் தாஸ் என்பது தமிழா என்று கேட்டால் கலாச்சார கடவுள்களான அவர்கள் உங்கள் தாயாரின் கற்பை கேள்வி கேட்கக் கூடும் என்பதால் அதை விட்டு விடலாம்...ஆனால், தமிழ் நாட்டை இதுவரை ஆண்டவர்களால் பாலாறும் தேனாறும் ஓடி விட்டதா?? சரி, முதல்வரை விடுங்கள்...பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தமிழர்கள் தானே இல்லை அவர்களும் வேறா? பல தொகுதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா இல்லை ஒரு ரூபாய் அரிசிக்கு வரிசை நிற்கிறதா??

ரஜினி எந்த சமூக தொண்டும் ஆற்றவில்லை..அவர் மக்கள் சேவை செய்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்...உண்மை தான்..ஆனால், இந்திரா காந்தியிலிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜி.கே.வாசன், தயாநிதி மாறன்....இவர்களெல்லாம் ஆற்றிய மக்கள் சேவை என்ன? இதில் மக்களை சந்தித்து எம்.பி.ஆனவர்களாவது பரவாயில்லை...ஆனால், ராஜ்ய சபா எம்.பி. ஆகி, முதல் முறையிலேயே மிக முக்கியமான மத்திய மந்திரி பதவியை பிடித்த அன்புமணி போன்றவர்கள் ஆத்திய (எழுத்துப் பிழை அல்ல!) மக்கள் சேவை என்ன??

நடிகன் நாடாள்வதா என்று ஜெயலலிதாவின் கூட்டணியிலும், கருணாநிதியின் கூட்டணியிலும் மாறி மாறி இருந்த சில அரசியல் ஓடுகாலிகளின் கேள்விக்கு பதில் அவசியமில்லை....அம்மாவிடம் போனால் "அய்யா என் கோமணத்தை கழட்ட பார்த்தார்...அதனால் அன்பு சகோதரியிடம் வந்து விட்டேன்" என்று அறிக்கை விடுவார்கள்...சில மாதங்கள் கழித்து மீண்டும் அய்யாவிடம் வருவார்கள்....அப்படியானால் கோமணம்?? இந்த முறை அய்யா கோமணத்தை கழட்டினாலும் பரவாயில்லை என்று வந்து விட்டார்களா? அய்யா கழட்டி விட்டாரா இல்லையா? அம்மணமாக நிற்கிறார்களா??

எந்த இடத்தில் அதிகம் விலை படியுமோ அங்கு செல்வது தான் விபச்சாரத்தின் வியாபார லட்சணம் என்பதால் அதை விட்டு விடலாம்....

ஆனால், மிகப்பெரிய கேள்வி....நடிகன், தமிழன் இல்லை என்ற கேள்விகளை ஒதுக்கி விட்டு....ரஜினிக்கு உண்மையிலேயே அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறதா? திறமை இருக்கிறதா???

தகுதி.....தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், தமிழனாய் பிறக்காவிட்டாலும்...தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கு கழிப்பவர்...கருணாநிதி, ஜெயலலிதா அடுத்து தமிழகத்தின் ஆறு கோடி மக்களுக்கும் அறிமுகமானவர்...ஆறு வயது குழந்தையிலிருந்து தொன்னூறு வயது கிழவர் வரை எல்லாருக்கும் தெரிந்த முகம்...தாத்தவால் இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளை மத்திய மந்திரி ஆகும் சில தயாநிதிகளை விட, தமிழக மக்களுக்கு அதிகம் தெரிந்த முகம்...என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று சொன்ன மருத்துவர் தந்தையால் ரகஸியமாக ராஜ்ய சபா எம்.பி.ஆக்கப்பட்டு, அடுத்த நாள் அமைச்சர் ஆகும் அன்புமணிகளை விட எல்லாருக்கும் தெரிந்த முகம்...தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து, தமிழ் மக்களாலேயே வாழ வைக்கப்படும் ரஜினிக்கு தகுதி இல்லை என்று சொல்லிவிட முடியாது....

ஆனால் திறமை.....இது மிகப்பெரிய கேள்வி... உண்மையில் ஒரு அரசை நடத்த ரஜினிக்கு திறமை இருக்கிறதா?? ரஜினி தன் ரசிகர்களை சந்தித்தே பல வருடம் ஆகிறது...இப்படி பட்ட ஒருவர் மக்களை எப்படி சந்திப்பார்??

அரசியலில் எல்லோருக்கும் நல்லவராக எப்போதும் இருக்க முடியாது...ஆனால், ரஜினிக்கோ எல்லோருக்கும் நல்லவராக இருக்கும் ஆசை இருக்கிறது....ஜெயலலிதாவும் நட்பு...கருணாநிதியும் நட்பு....அத்வானியும் நட்பு...சிதம்பரமும் நட்பு....இப்படி எல்லோருக்கும் நல்லவராய் இருக்க நினைக்கும் ஒருவரால் அவர்களை எதிர்த்து அரசியல் நடத்த முடியுமா??

அடுத்து...அரசியலுக்கு வரும் பட்சத்தில் ரஜினியின் திட்டங்கள் என்ன?? உள்ளிருந்தே அரிக்கும் எய்ட்ஸ் நோய் போல் எங்கும் பரவியிருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பார்?? அரசின் வருவாயில் அறுபது சதவீதத்தை சம்பளமாக பெற்றாலும் லஞ்சம் வாங்குவது எங்கள் பிறப்புரிமை என்று போராடும் அரசு ஊழியர்களை எப்படி சமாளிப்பார்??

புற்று நோய் போல பரவி வரும் ஜாதி சங்கங்கள், ஜாதிக் கட்சிகள்...ரஜினிக்கு ஏதேனும் தெளிவு உண்டா??

இன்றைக்கும் தினம் இருபது ரூபாய்க்கு வேலைப்பார்க்கும் மக்கள் தமிழகத்தில் உண்டு...இலவசமாய் டி.வி.,இலவசமாய் ஜட்டி என்று கோஷம் தவிர்த்து, பொருளாதார ரீதியாய் நிரந்தர தீர்வு??

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் பட்சத்தில், ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்...தன்னை உருவாக்கிய சமூகத்திற்கு ஏதேனும் திரும்ப செய்வது ஒவ்வொருவரின் கடமை....

நான் தலீவரு, என் மகன் இளைய தலீவரு, அவன் மகன் இளைஞர் அணி தலீவரு...அவனோட மகன் சிறுவர் அணித் தலீவரு....எங்க ஜாதி தான் தமிழ்நாட்டுல பெரிய ஜாதி....எங்களுக்கு எல்லாதுலயும் அறுவது சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கணும்...வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை....நான் ஒரு வக்கீலு....கோர்டுல என்னா வேணும்னாலும் பண்ணுவேன்....எம்மெல யாராவது கைய வச்சா மெட்ராஸுல எந்த பஸ்ஸும் ஓடாது....நான் போலீசு....மணல் கடத்துறலருந்து...ஆள் கடத்துறது வரை எனக்கு மாமூல் வரணும்....நான் மினிஸ்டரு...தலீவருக்கு கால் புடிக்கிறது...கட்டை பஞ்சாயத்து பண்றது என் தொழிலு....

இப்படியே போகும் அரசியலில், ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர முடியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வர முடியும் என்றால் ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை!

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது


==================================


19 comments:

பழமைபேசி said...

எம்மாம் பெரிய பதிவு...இருங்க மட்டையப் போட்டுட்டு வர்றேன்...

நசரேயன் said...

வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க..

நசரேயன் said...

யாரு வேணுமுனாலும் அரசியலுக்கு வரலாம் நாடு ஆளலாம்

நாமக்கல் சிபி said...

/எம்மாம் பெரிய பதிவு...இருங்க மட்டையப் போட்டுட்டு வர்றேன்...//

:)

பழமை பேசி,

நீங்க இந்தப் பதிவையெல்லாம் பார்த்ததில்லையா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க கூட அரசியலுக்கு வரலாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

வாவ்...

சூப்பர் பதிவு...

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க..///

நானும் மறுக்கா கூவிக்கிறேன்ன்ன்ன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

//எவ்வளவு பிடிக்கும் என்றால்...மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் என்று கேட்ட ஸ்ரீநிதியிடம் சொன்னது போல்...இரண்டு கைகளையும் அகல விரித்து...///

அட இத பார்ரா....

அப்பியே ஆரம்பிச்சிட்டீங்க போல

http://urupudaathathu.blogspot.com/ said...

அரசியல் தலைவர்கள் மேல் இவ்ளோ காண்டா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//"ரஜினி அரசியலுக்கு வரலாமா?"//

வரட்டுமே..

அது சரி said...

ரொம்ப லேட்டா பதில் சொல்றதுக்கு அல்லாரும் மன்னிக்கோனும்...

அது சரி said...

//
நசரேயன் said...
வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க..
19 March 2009 00:39
//

சீக்கிரம் வாங்க...கட்சி ஆரம்பிச்சிரலாம்...

அது சரி said...

//
நசரேயன் said...
யாரு வேணுமுனாலும் அரசியலுக்கு வரலாம் நாடு ஆளலாம்
//

இது தான் என் கருத்தும்...கொல்லைப்புறமாக மகனை ராஜ்ய சபா எம்.பி.ஆக்கி மந்திரியாக்குவதை விட, மக்களை நேரடியாக சந்திப்பதே உயர்ந்த விஷயம்....

அது சரி said...

//
நாமக்கல் சிபி said...
/எம்மாம் பெரிய பதிவு...இருங்க மட்டையப் போட்டுட்டு வர்றேன்...//

:)

பழமை பேசி,

நீங்க இந்தப் பதிவையெல்லாம் பார்த்ததில்லையா?

19 March 2009 01:59

//

வாங்க சிபி...உதவிக்கு நன்றி...என்னை விட பெரிசா பதிவு போட்றவங்க நிறைய பேரு இருக்காங்க...பழமை பேசி அண்ணன் அதையெல்லாம் படிச்சா டர்ராயிடுவாரு...:0))

அதுக்காக நான் செய்றது சரின்னு சொல்ல வரலை...ஏதோ எனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்...

அது சரி said...

//
SUREஷ் said...
நீங்க கூட அரசியலுக்கு வரலாம்
//

வாங்க சுரேஷ்...

எனக்கும் ஆசை தான்...ஆனா எனக்கு கருணாநிதி மாதிரி ஒரு தாத்தாவோ இல்ல ராமதாஸ் மாதிரி ஒரு அப்பாவோ இல்ல...

அதனால நானெல்லாம் அவ்வளவு ஈஸியா அரசியலுக்கு வந்து மறு நாளே மந்திரியாக முடியாது....:0))

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
வாவ்...

சூப்பர் பதிவு...
//

ஆஹா, வந்துட்டீங்களா தல....என்னங்க, ரொம்ப நாளா ஆளைக் காணோம்??? இடைவெளி விட வேண்டியது தான்...அதுக்காக இப்பிடியா???

அது சரி said...

//
உருப்புடாதது_அணிமா said...
//எவ்வளவு பிடிக்கும் என்றால்...மூன்றாம் வகுப்பு படிக்கும் போது உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் என்று கேட்ட ஸ்ரீநிதியிடம் சொன்னது போல்...இரண்டு கைகளையும் அகல விரித்து...///

அட இத பார்ரா....

அப்பியே ஆரம்பிச்சிட்டீங்க போல
//

ஹி ஹி....நாமெல்லாம் ஸ்கூல்ல சேர்றதே அதுக்குத் தான :0)))

நீங்க திருச்சியில எந்த ஸ்கூலு?? செயின்ட் ஜோசஃப்??

Anonymous said...

i have no comments, as i dont want to create political enemies in future.

VM kudukuduppai

Anonymous said...

அது சரி, ரஜினி பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் எவ்வளவு தூரம் பிரகாசிக்க முடியும் என்று தெரிய வில்லை!