இந்த திமூக்கா காரவுக இருக்காகளே அவங்களுக்கு எதுனா கோவம் வந்துட்டா அடிக்கடி அறிக்கை விட்றாங்க...ஜெயலலிதா அப்பிடி என்ன பொரச்சி பண்ணிட்டார்...அப்புறம் என்ன பொரச்சி தலைவின்னு...
எரும மாடு மல்லாக்க படுத்தா எலிக்குட்டி வந்து ஐ லவ் யூ சொல்லுமாம்...அது மாதிரி ஆயிரம் பொரச்சி பண்ணிட்டு தலீவி அமேய்திய இருக்கதுனால இந்த மாதிரி எல்லாம் கேள்வி வருது...
ஒண்ணா ரெண்டா அப்பு....அதுக்கெல்லாம் கணக்கில்ல...ஆனா உங்க வாய அடைக்கிறதுக்காக...
ஒங்க அண்ணாதுரை நெடுஞ்செழியன எப்பிடி கூப்டாரு?? தம்பி வா...தலைமை ஏற்க வா அப்படின்னாரு...ஆனா பொரச்சி தலைவி என்ன சொன்னாங்க....தலை மயிரு உதிர்ந்து போச்சி...உதிர்ந்த மயிர்கள்னு சொன்னாரா இல்லியா?? இம்புட்டி தெகிரியம் ஒங்க பார்ட்டில யாருக்காவது இருக்காப்பு?? இன்னும் எஸ்.டி.எஸ்சுன்னு ஒரு எழுவது வயசு ஆள காருக்கு பின்னாடி ஓடி வர வச்சி எக்ஸசைஸ் பண்ண விட்டது....அவரை ஜீப்புல ஃபுட்போர்டு அடிக்க வச்சதுன்னு ஏகப்பட்ட பொரச்சி இருக்கு...
ஒங்களுக்கெல்லாம் பீரு தெரியும்...டாஸ்மாக்கு பாரு தெரியும்...ஆனா மோரு மேட்டரு தெரியுமான்னேன்?? சானகி அம்மான்னு ஒருத்தங்க தான் எம்ஜியாருக்கு மோருல விஷம் வச்சி அவருக்கு டிக்கட் வாங்கி கொடுத்துட்டாங்கன்னு அந்த காலத்திலேயே அறிக்கை விட்டவங்க எங்க தலீவி...ஒங்காளு கலீஞ்சருக்கு இந்த மோரு மேட்டரு தெரியலியே??
மெட்ராஸுல சனம் கூடிப் போச்சி அதுனால ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாதிரி துணை நகர(க)ம் அமைக்கலாம்னு கோடிக் கணக்குல செலவு பண்ண ஒங்காளு திட்டம் போடுறாரு...ஆனா கருணாநிதி குடும்பம் மெட்ராஸ விட்டு வெளிய போயிடுச்சின்னா சனத்தொகை கொறைஞ்சிடும்னு எங்க அம்மா சொன்னாங்களா இல்லியா?? அவங்க அறிவு ஒங்களுக்கு யாருக்காவது இருக்காலே??
சனத் தொகை கூடுது கூடுதுன்னு கூப்பாடு போடுறியளே...நீங்கள்லாம் வெறும் காகிதப் புலிகள் ஓய்...பொரச்சி தலைவி மாதிரி மகாமக கொளத்துல எறங்கி அப்படியே கொஞ்சம் பேரு ஈசனை பாக்க டிக்கட் வாங்கி குடுத்தாங்களே...இப்பிடி நேரடியா நடவடிக்கையில எறங்குற மொதல்வர இந்த தமிழ்நாடு பாத்துருக்கா??
உள்ளூர்ல இருந்து செக்கு வந்தாலே எனக்கெல்லாம் பயமாருக்கு...எந்த பய என்ன வில்லங்கமோன்னு...ஆனா அவங்க வெளிநாட்டுல இருந்து செக்கு வந்தாலும் அனுப்புன பய யாருன்னு தெரியாட்டியும் துணிச்சலா அதை அவங்க பேருல பேங்குல போட்டவுங்க...
அதெல்லாம் சரி தான்...பொருளாதாரம் பத்தி ஒங்க அம்மாவுக்கு என்னடே தெரியும்னு சில பயக கேக்குறானுவ...பத்தாயிரம் சம்பளம் வாங்கியே பத்தாம் தேதிக்கு மேல ஒரு ரூவா அரிசி தான் சாப்பிட வேண்டி இருக்கு....அவங்க அப்படியா?? ஒரு ரூவா சம்பளம் வாங்கியே கொட நாடு எஸ்டேட் வாங்கினவுங்க...எல்லாப் பயலும் அவங்க கிட்ட போயி டூசன் படிங்கலே..அப்பவாவது ஒங்களுக்கு வெளங்குதான்னு பாப்பம்...
நீங்க ஆச்சிக்கு வந்தா கல்வித்துறைக்கு ஒரு மந்திரிய போடுவீங்க...ஆனா கன்னத்துல அறைஞ்சிருக்கறதுக்குன்னே ஒரு மந்திரிய நியமிச்சவுங்க அவங்க...ஒங்காளும் தான் எத்தினி தடவ சி.எம்மா வந்துட்டாரு?? ஒரு தடவையாவது இப்படி ஒரு அமைச்சரை நியமிச்சி மக்கள் சேவை செஞ்சிருக்காரா???
கட்டிங் ப்ளேயரை காதுக்குள்ள உட்ட மாதிரி இருந்தாலும் எங்காளு கவுஜ எளுதுவாரு...கத எளுதுவாரு...பொரச்சி தலீவி என்ன பண்ணிட்டாங்கன்னு கேக்கப்படாது...அவங்க பொரச்சி நடிகையா இருந்த காலத்துலேயே கல்கில ஒரு தொடர் கதை எழுதுனவங்க...அவங்க பண்ண பொரச்சிய இப்பக்கூட எனக்கு எழுதக்கூசுது.....ஆன அவங்க அந்த பொரச்சிய அப்பவே பண்ணிருக்காங்க...காலக்கொடுமை அந்த பொரச்சிய முழுசா முடிக்கலை...ஏன்னா கல்கி அந்த தொடரை பாதியிலேயே நிறுத்திட்டாங்க...
பட்டியல் போட்டா போயிக்கிட்டே இருக்கும்டே...அதனால கடேசியா ஒண்ணு...ஒங்காளும் தான் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவதிலருந்து எலக்சன்ல நிக்கறாரு....ஆனா ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது அவரால தோக்க முடிஞ்சிருக்கா?? அவரும் ஊரு விட்டு ஊரு நின்னு பாத்தாரு...ம்ஹூம்...ஒண்ணும் முடியல... ஆனா எங்க பொரச்சி தலைவிய பாருங்க...ஆஸ்கர்ல ரகுமான் ரெண்டு அள்ளுன மாதிரி சி.எம்மா இருக்கும் போதே ஒரே தேர்தல்ல ஆண்டிப்பட்டி, பர்கூர்னு ரெண்டு எடத்துல தோத்து பொரச்சி பண்ணாங்க.. ...முடிஞ்சா ஒங்க தலீவர இத பீட் பண்ண சொல்லுங்க...அப்புறம் பேசலாம்...
46 comments:
Pirathamar aaaki puratchi!
semma kuthuley...(calendar-a)poratti poratti kuthreenga
எஸ்கேஏஏஏஏஏப்
பொரச்சி வாழ்க
காங்கிரசும் கருனானிதியும் நகமும் சதையும் போல...
இருக்கட்டும்...தமிழக மக்கள் தேவையற்ற "நகத்தை" வெட்டி எறிவோம்!
என்ன செய்வது ?
என் நெஞ்சல்லாம் எரிகிறது....
நான் காரைக்காலில் வசிக்கிரேன்:ஒரு நாளைக்கு 5 மணி நேரம், தமிழ் ஈழம் சம்பந்தமாக ....பார்க்கிறென்...படிக்கிறென்....தமிழக அரசியல் கட்சிகல் இதில் பிழைப்பு நடத்தும்போது ...மனசு வலிக்கிரது....அதனால் இப்படி எழுதினேன்....
k.pathi
karaikkal
தொடரட்டும் புரட்சிகள்... ஆனா ஆள விடுங்க சாமி
உண்மையிலேயே பொரட்சிதான்...
செம ரகளை!
அதுசரி, ரொம்ப நக்கல் தான் போங்க, உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் ஒத்துக்கிறேன்.
அப்புறம் அந்த வளர்ப்பு மகன் உடன் பிறவா சகோதரி சம்பந்தப்பட்ட புரட்சியை எல்லாம் விட்டுட்டீங்களே!
பொரச்சினா பொறச்சி அது இல்ல பொறச்சி!
//"செல்வி.ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று அழைப்பது தவறா??"//
தவறே இல்லை
யாருக்கும் தலைவணங்கா சிங்கங்களை காலில் விழ வைச்ச புரட்சி எங்கே?
ஆகாயம் வரை கட் அவுட் வைத்த புரட்சி எங்கே??
ஆகா! கலக்கல்!!
ஆகா! கலக்கல்!!
சூப்பர் தல, கலக்கீட்டீங்க. இன்று முதல் நீங்கள் புரட்சி பதிவர் அது சரி என அழைக்கபடுவிராக :)
//
பழமைபேசி said...
Pirathamar aaaki puratchi!
26 March 2009 22:35
//
ஆமாங்க...அவங்க என்ன ஒரு பொரச்சியை முடிச்சிட்டு ஓய்வெடுக்க கொடநாடு போறவங்கன்னு நினைச்சீங்களா?? ஓயாது பொர்ச்சி பண்றவங்க அவங்க!
//
Shrek said...
semma kuthuley...(calendar-a)poratti poratti kuthreenga
26 March 2009 23:48
//
காலண்டரை பொரட்டி பொரட்டி குத்துறதா?? உங்க கமெண்ட் நல்லா காமெடியா இருக்குங்க...:0))
//
குடுகுடுப்பை said...
எஸ்கேஏஏஏஏஏப்
27 March 2009 00:35
//
என்னங்க...வருங்கால முதல்வர் ஒரு முன்னாள் முதல்வர பத்தி கருத்து சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்களே :0))
//
நசரேயன் said...
பொரச்சி வாழ்க
27 March 2009 00:51
//
அது!! பாத்தீங்களா...வலைத் தளபதி வணங்காமுடி நசரேயனையே வாழ்கன்னு சொல்ல வச்சிட்டாங்க....அதாங்க பொர்ச்சி....
//
ttpian said...
என்ன செய்வது ?
என் நெஞ்சல்லாம் எரிகிறது....
நான் காரைக்காலில் வசிக்கிரேன்:ஒரு நாளைக்கு 5 மணி நேரம், தமிழ் ஈழம் சம்பந்தமாக ....பார்க்கிறென்...படிக்கிறென்....தமிழக அரசியல் கட்சிகல் இதில் பிழைப்பு நடத்தும்போது ...மனசு வலிக்கிரது....அதனால் இப்படி எழுதினேன்....
k.pathi
karaikkal
27 March 2009 01:43
//
உங்கள் எண்ணங்கள் புரிகிறது பதி...இத்தனை நாட்களாய் போர்னா மக்கள் சாவத்தான் செய்வாங்க என்று அகங்காரத்துடன் பேசி விட்டு இப்பொழுது அரசியலுக்காக உண்ணாவிரதம் இருந்த இந்த புரட்டுத் தலைவியை பார்த்து வந்த எரிச்சலால் எழுதிய பதிவு இது!
//
எட்வின் said...
தொடரட்டும் புரட்சிகள்... ஆனா ஆள விடுங்க சாமி
27 March 2009 04:47
//
வாங்க எட்வின்...என்னங்க...ஆட்டோ அனுப்பியே பொர்ச்சி செஞ்ச தலீவி உங்க வீட்டுக்கும் ஆட்டோ அனுப்பிருவாங்கன்னு எஸ்கேப் ஆயிட்டீங்களா?? :0))
//
மோனி said...
உண்மையிலேயே பொரட்சிதான்...
27 March 2009 05:11
//
வாங்க மோனி.. இவ்ளோ பொர்ச்சி செஞ்சிட்டு அவங்க எவ்ளோ அடக்கமா வருஷத்துல பதினொரு மாசம் கொடநாட்டுல ஓய்வு எடுக்கறாங்க பார்த்தீங்களா??
//
Joe said...
செம ரகளை!
27 March 2009 05:17
//
எதுங்க ஜோ?? அவங்க பண்ணிருக்க அளவிட முடியாத பொர்ச்சிகள் தான?? :0))
//
கும்மாச்சி said...
அதுசரி, ரொம்ப நக்கல் தான் போங்க, உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் ஒத்துக்கிறேன்.
27 March 2009 05:25
//
வாங்க கும்மாச்சி....ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருவீங்க?? அப்புறம் கன்னத்துல அறையற மினிஸ்டரு ஒங்களுக்கு எதிரா "கன்னத்தில் அறைந்து கொள்ளும்" போராட்டம் ஆரம்பிச்சிடுவாரு....
//
தமிழ் நாடன் said...
அப்புறம் அந்த வளர்ப்பு மகன் உடன் பிறவா சகோதரி சம்பந்தப்பட்ட புரட்சியை எல்லாம் விட்டுட்டீங்களே!
பொரச்சினா பொறச்சி அது இல்ல பொறச்சி!
27 March 2009 08:25
//
நல்ல கேள்வி தாங்க தமிழ்நாடன்...ஆனா அவங்க பண்ணிருக்கற புரட்சிகள்ல எதை எடுக்கறது எதை விடுறதுன்னே தெரிலைங்க...அவ்வளவு புரட்சி பண்ணிருக்காஙக்...அதை எழுதறதுக்கு திருப்பி புள்ளையாரு கொம்பை தான் ஒடைக்கணும்...(அவரு தான் மகாபாரதம் எழுதினாராமே??)
//
உருப்புடாதது_அணிமா said...
//"செல்வி.ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்று அழைப்பது தவறா??"//
தவறே இல்லை
27 March 2009 09:47
//
அது!!
//
Anonymous said...
யாருக்கும் தலைவணங்கா சிங்கங்களை காலில் விழ வைச்ச புரட்சி எங்கே?
ஆகாயம் வரை கட் அவுட் வைத்த புரட்சி எங்கே??
27 March 2009 10:46
//
அதெல்லாம் எழுத முடியலீங்க...அப்புறம் பதிவு பார்ட் ஒண்ணு, பார்ட் ரெண்டுன்னு முடிவே இல்லாம போயிரும்...
//
ஜோதிபாரதி said...
ஆகா! கலக்கல்!!
27 March 2009 15:01
//
வாங்க ஜோதிபாரதி அண்ணே...புரட்சித் தலைவி கலக்காத கலக்கா??
//
ச்சின்னப் பையன் said...
ஆகா! கலக்கல்!!
27 March 2009 16:30
//
வாங்க சின்னப் பையர்..(பையன்னு எப்படிங்க சொல்றது??)..வருகைக்கு நன்றி...
//
Bleachingpowder said...
சூப்பர் தல, கலக்கீட்டீங்க. இன்று முதல் நீங்கள் புரட்சி பதிவர் அது சரி என அழைக்கபடுவிராக :)
27 March 2009 16:50
//
வாங்க பவுடர் அண்ணே...
என்னது புரட்சிப் பதிவரா?? அய்யோ ஏங்க எம் மேல உங்களுக்கு இந்த கொலை வெறி?? ஏற்கனவே புரட்சித் தலைவி,புரட்சித் தலைவர், புரட்சித் தமிழன், புரட்சிக் கலைஞர், புரட்சித் தளபதி, புரட்சி புண்ணாக்கு வியாபாரின்னு தமிழ்நாட்டுல புரட்சி கணக்கு வழக்கில்லாம நடக்குது....இதுல புரட்சிப் பதிவர் வேறயா??
வேணாம்ணே, என்ன விட்டுடுங்க...:0))
புரட்சித் தலைவியின் புரட்சிகளை புரிந்து கொண்டு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...புரட்சித் தலைவியின் ஆட்சி அடுத்து எப்பொழுதாவது மலர்ந்தால் இந்த பதிவை படித்த அனைவருக்கும் கன்னத்தில் அறைந்து கொள்ளும் (உங்க கன்னத்துல தான்...) வாய்ப்பு வழங்கப்படும் :0))
அது சரி said...
//
குடுகுடுப்பை said...
எஸ்கேஏஏஏஏஏப்
27 March 2009 00:35
//
என்னங்க...வருங்கால முதல்வர் ஒரு முன்னாள் முதல்வர பத்தி கருத்து சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்களே :0))
//
நாங்கெல்லாம் மாமாதாசு மாதிரி எப்படியாவது ஓட்டே இல்லாம மொதல்வர் ஆக நெனக்கிறோம். அதுனாலா நடுநிலைதான்.
ஏம்லே என்னலே ஆச்சு ? பொறத்தால திரும்பிப் பாருலே ஆட்டோ வருதாலே !!! ஒரே திகிலா இருக்குலே இத்தப் படிங்கங்காட்டியும் ...(சும்மா இந்த ஸ்லாங் ட்ரை பண்ணிப் பார்த்தம்லே ...நல்லாத்தேன் இருக்குலே )
இந்தப் பதிவு எப்ப?கண்ணுல மாட்லயே!பதிவில பொரட்சி தலவி பற்றி இம்புட்டு சொல்லியிருக்கீக,இதெல்லாம் சனத்துக்கு நாபகமா இருக்கப் போவுது?
ஊட்டுட்டுக்குப் போனதில யாரு வீட்டு சமையலு நல்லாயிருக்குன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்.வந்து ருசி பார்த்துட்டுப் போங்க:)
ஊட்டுட்டுக்குப் போனதில யாரு வீட்டு சமையலு நல்லாயிருக்குன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்.வந்து ருசி பார்த்துட்டுப் போங்க:)
அரசியல்...!
//
குடுகுடுப்பை said...
அது சரி said...
//
குடுகுடுப்பை said...
எஸ்கேஏஏஏஏஏப்
27 March 2009 00:35
//
என்னங்க...வருங்கால முதல்வர் ஒரு முன்னாள் முதல்வர பத்தி கருத்து சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்களே :0))
//
நாங்கெல்லாம் மாமாதாசு மாதிரி எப்படியாவது ஓட்டே இல்லாம மொதல்வர் ஆக நெனக்கிறோம். அதுனாலா நடுநிலைதான்.
//
இதப் பத்தி அப்புறம் பேசலாம் :0))
//
மிசஸ்.தேவ் said...
ஏம்லே என்னலே ஆச்சு ? பொறத்தால திரும்பிப் பாருலே ஆட்டோ வருதாலே !!! ஒரே திகிலா இருக்குலே இத்தப் படிங்கங்காட்டியும் ...(சும்மா இந்த ஸ்லாங் ட்ரை பண்ணிப் பார்த்தம்லே ...நல்லாத்தேன் இருக்குலே )
28 March 2009 13:09
//
வாங்க மிஸஸ் தேவ்...
உங்க ஸ்லாங் நல்லா தான் இருக்கு...ஆனா யார்னா திருநெல்வேலிக்காரங்க தான் கன்ஃபர்ம் செய்ய முடியும் :0))
//
ராஜ நடராஜன் said...
ஊட்டுட்டுக்குப் போனதில யாரு வீட்டு சமையலு நல்லாயிருக்குன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன்.வந்து ருசி பார்த்துட்டுப் போங்க:)
30 March 2009 08:29
//
வந்துட்டேண்ணே....உங்க சமையலும் நல்லா இருந்துச்சி :0)
//
ஹேமா said...
அரசியல்...!
30 March 2009 13:09
//
வாங்க ஹேமா...
அவங்க செஞ்ச பொரட்சியெல்லாத்தையும் அரசியல்னு ஒரே வார்த்தையில சொல்லிட்டீங்களே...கன்னத்தில அறையுற (முன்னாள்) மந்திரி இன்னைக்கு முழுக்க அவரு கன்னத்துல அறைஞ்சிக்கிட்டு இருந்ததா கேள்வி...:0))
ஆகா, அருமை. பத்திரமா இருக்கீங்க தானே?
அண்ணாச்சி, நீங்க பதிவெழுதி ரெண்டு வாரம் ஆச்சு....
அண்ணே.. அப்பாலிக்கா எப்போ எழுதுவீங்க..!!
:)))))))))))))))
பொரச்சி வாழ்க
Post a Comment