Monday, 9 March 2009

மீண்டும் ஒரு முறை!


அதிகம் குடித்து விட்டாய் நண்பா
இன்றைக்கு இது போதும்...
கழுத்துக்கு பின் இதழ் உரசிய‌ ஆங்கில மாதை முத்தமிட்டு...
மெதுவே அவ‌ள் விலக்கி..

கடும் குளிர் வீசும் வீதியில்
ஃபேன்ஸி ய பிஜே க்யூட்டி
காதிருந்தும் செவிடனாய்...
தலை மட்டும் அவள் மறுத்து...
தனியே நடந்த போது...

இடக்கால் வலம் இழுக்க‌
இன்னும் சிறிது தூரம் தான்....
இனி மேல் குடிப்பதில்லை...
குடித்தாலும் நடப்பதில்லை...

என்றும் செய்யும் உறுதியை
மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வேளையில்...

சரி போகலாம் வா...

எங்கிருந்தோ ஒரு குரல்...
இல்லை....மிக அருகாமையில்...

யாரது...

பனி விழும் யார்க் ஷையரின்
இருள் கொட்டும் நேரத்தில்...

இமைகளில் கூட பனித் துகள்கள்..
முகமெங்கும் பனி படர்ந்து...
இதழ் பிரியாமல் சிரித்தாள் அவள்...

எனக்கு தெரியும் அவளை...
இல்லை தெரியாது...
எங்கோ தூர தேசத்தில்
எப்போதோ ஒரு முறை
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்...

நீ....கொஞ்சம் இரு...
இடக்கை துழாவி சிகரெட்டை பற்ற வைத்து
யார் இவள் என்று மூளையின்
இருண்ட பக்கங்களை தேடுகையில்...

மெதுவாக...மிக மெதுவாக...
இல்லை...வேகமாகிறது...
இடப்பக்கத்திலிருந்து ஏதோ வலி...

என்ன அது....
வலக்கை உயர்த்தி...நெஞ்சு பிடிப்பதற்குள்...

இல்லை இனி...
கொட்டும் பனி கண் மூட‌ மெதுவே மரணித்தேன்...
மீண்டும் ஒரு முறை!
=============================

21 comments:

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்குங்க!

அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

குடுகுடுப்பை said...

நாமக்கல் சிபி said...

நல்லா இருக்குங்க!
//

குடுகுடுப்பை said...

மது வரைக்கும் புரியுது.
மாது வந்தோன புரியல

குடுகுடுப்பை said...

அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///

காரியக்கார தமிழன் பேர மாத்திட்டு வாங்க

Sundar said...

கனவில் பிதற்றலா இல்லை குளிரின் விளைவா இல்லை குடியின் போதையா இல்லை மயக்கும் நினைவுகளா?

நசரேயன் said...

இதுக்குதான் என்னை மாதிரி அரை பீர்ரோட நிறுத்திக்கனும்

Mahesh said...

நல்லா இருக்கே....

இனிமே கொஞ்சம் அளவோட நிறுத்திக்கோங்க... :)

அது சரி said...

//
நாமக்கல் சிபி said...
நல்லா இருக்குங்க!
10 March 2009 01:41
//

முதல் வருகைக்கு நன்றி சிபி அண்ணா...அடிக்கடி கடைப்பக்கம் வாங்க...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
நாமக்கல் சிபி said...

நல்லா இருக்குங்க!
//

10 March 2009 02:54

//

நன்றி குக்கு!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
மது வரைக்கும் புரியுது.
மாது வந்தோன புரியல

10 March 2009 02:55

//

அது மாதுவை பார்த்ததால் வந்த மாலை நேரத்து மயக்கமா?

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
அப்பாவி தமிழன் said...

இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///

காரியக்கார தமிழன் பேர மாத்திட்டு வாங்க

10 March 2009 02:55

//

:0))))

அது சரி said...

//
Sundar said...
கனவில் பிதற்றலா இல்லை குளிரின் விளைவா இல்லை குடியின் போதையா இல்லை மயக்கும் நினைவுகளா?

10 March 2009 11:39
//

இந்த மாதிரி கவுஜ எழுதறதுல இது தான் பெரிய வசதி....எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம் :0))

அது சரி said...

//
நசரேயன் said...
இதுக்குதான் என்னை மாதிரி அரை பீர்ரோட நிறுத்திக்கனும்

10 March 2009 16:43
//

எதுக்கு? நாப்பதாயிரம் டாலர் செலவு வைக்கிறதுக்கா? :0))

அது சரி said...

//
Mahesh said...
நல்லா இருக்கே....

இனிமே கொஞ்சம் அளவோட நிறுத்திக்கோங்க... :)

10 March 2009 18:02

//

அடப்பாவிகளா...குடிகாரன்னு பொதுக்குழுவை கூட்டி முடிவே எடுத்துட்டீங்களா?? அக்கிரமமா இருக்கே! :0))

ஆமா, அந்த கடைசி வரிய யாருமே படிக்கலையா? :0)))

குடுகுடுப்பை said...

ஆமா, அந்த கடைசி வரிய யாருமே படிக்கலையா? :0)))

படிச்சேன் ஆனா புரியல.

ஒருவேளை திருப்பி மாதுவை முத்தமிட்டீரோ.

மிஸஸ்.டவுட் said...

//எனக்கு தெரியும் அவளை...
இல்லை தெரியாது...
எங்கோ தூர தேசத்தில்
எப்போதோ ஒரு முறை
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்... //

அவனோ...இல்லை அவரோ ...அல்லது அவர்களோ ...சிலரை முதல் முறை பார்க்கும் போதே "எங்கேயோ பார்த்த மயக்கம்" என்று தோன்றுவது உண்டு .'நச்'
வரிகள் ரசித்தேன்.

//நீ....கொஞ்சம் இரு...
இடக்கை துழாவி சிகரெட்டை பற்ற வைத்து
யார் இவள் என்று மூளையின்
இருண்ட பக்கங்களை தேடுகையில்... //

நீ கொஞ்சம் இரு என்று இதுவரை மூளை பலரை பலரை தேடி இருக்கும் போல ?!!!!!
ஆமாம் என்ன திடீர்னு கவிதை ?
அதுசரிக்கு என்னவோ ஆயாச்சு ?!
எழுதுங்க...எழுதுங்க...எழுதிகிட்டே இருங்க...கவிதை ...நல்லா தான் இருக்கு.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
ஆமா, அந்த கடைசி வரிய யாருமே படிக்கலையா? :0)))

படிச்சேன் ஆனா புரியல.

ஒருவேளை திருப்பி மாதுவை முத்தமிட்டீரோ.
10 March 2009 20:32
//

ஹி ஹி...நான் என்ன அண்ணன் குக்குவா, அடாத பனியிலும் விடாது முத்தமிட?? :0))

நான் ஒண்ணு நினைச்சு எழுதினேன்...இதுவரை படிச்சவங்க எல்லாம், கரெக்டா வேற மீனிங் புரிஞ்சிக்கிட்டாங்க..

அது சரி said...

//
மிஸஸ்.டவுட் said...
//எனக்கு தெரியும் அவளை...
இல்லை தெரியாது...
எங்கோ தூர தேசத்தில்
எப்போதோ ஒரு முறை
ஏற்கனவே பார்த்திருக்கிறேன்... //

அவனோ...இல்லை அவரோ ...அல்லது அவர்களோ ...சிலரை முதல் முறை பார்க்கும் போதே "எங்கேயோ பார்த்த மயக்கம்" என்று தோன்றுவது உண்டு .'நச்'
வரிகள் ரசித்தேன்.
//

முதல் முறை மட்டுமில்ல மிஸஸ் டவுட்....இரண்டாம் முறை பார்க்கும் போதும் எங்கயோ பார்த்திருக்கேனே என்று தோன்றுவது உண்டு...

//நீ....கொஞ்சம் இரு...
இடக்கை துழாவி சிகரெட்டை பற்ற வைத்து
யார் இவள் என்று மூளையின்
இருண்ட பக்கங்களை தேடுகையில்... //

நீ கொஞ்சம் இரு என்று இதுவரை மூளை பலரை பலரை தேடி இருக்கும் போல ?!!!!!
ஆமாம் என்ன திடீர்னு கவிதை ?
அதுசரிக்கு என்னவோ ஆயாச்சு ?!
எழுதுங்க...எழுதுங்க...எழுதிகிட்டே இருங்க...கவிதை ...நல்லா தான் இருக்கு.

13 March 2009 15:34
//

ஓட்டு மொத்த மூளையே இருண்ட பக்கங்களா இருக்கும் போது அப்படித் தான்...இருட்டு ரூம்ல எலிப் புழுக்கையை தேட்ற மாதிரி!

பி.கு. எனக்கு ஒண்ணும் ஆகல...வழக்கம் போல டைம் கெடச்சா கிறுக்கறது தான்..:0)))

வருகைக்கு நன்றி...

நீங்க மட்டும் தான் சொல்வீங்களா, நாங்களும் சொல்வோம்ல...

வாங்க, வாங்க அடிக்கடி வாங்க :0)))

Saravana Kumar MSK said...

நல்லா இருக்குங்க்னா.. :)

மங்களூர் சிவா said...

கடைசி வரைக்கும் அந்த அம்மிணி யாருன்னு சொல்லலையே??

:)))))


நல்லா இருக்கு !