Wednesday, 4 March 2009

இறையாண்மையும் பொறையாண்மையும்!

அண்ணன் பழமைபேசி அவரு பதிவுல ஒரு கேள்வி கேட்ருக்காரு.

// ஒரு இலட்சம் பேர் மூனு வருசத்துக்குள்ள திரும்பி வரப் போறாங்கன்னு புலம்பல். வந்தவங்க இங்க(US)யே இருந்துக்கணும்ன்னு எதிர்பாக்கறாங்களோ?? அதை விடுங்க, வருசம் 65000 பேர், அது போக இதர உள்நுழைவு(L1, B1...)ல எண்ணிலடங்காத பேர் உள்ள வருவாங்களே? அது கண்ணுக்குத் தெரியலையா?? நீங்க எல்லாம் நிர்வாகிகள்தானா?? //

ரொம்ப கரெக்ட்டானா கேள்வி தல! இவங்களுக்கு நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...ஏதோ டி.வி.ல பேச சான்ஸ் கிடைச்சா அள்ளி விட்றது தான்... இந்தியாவுல எந்த புள்ளிவிவரமும் கிடையாது...புள்ளிவிவரத்துக்குன்னு ஒரு அமிச்சரு இருக்காரு...அவரு பேரு வாசனாம்...அவருக்கே அந்த துறைல என்ன செய்யணும்னு தெரியாது...

இந்தியா இன்னும் பொழைச்சு கெடக்குனா, முக்கிய காரணம் மக்கள் இவங்களை எல்லாம் மதிக்கிறதே இல்ல....அலுவாலியா? யாருப்பா அது?? மக்கள் பாட்டு அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு எதுனா வேலை செய்றாங்க...அதனால தான் இந்தியா ஓடுது...

இந்த புள்ளி விவரமும் கிடையாது...எந்த திட்டமும் கிடையாது...

என் பேரு அப்துல் கலாம், அட்ரஸு ஜனாதிபதி பவன் அப்படின்னு ஒருத்தரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாஸ்போர்ட்டே எடுத்தாரு...அப்ப நிர்வாகம் எப்படி டாப்பா இருக்குன்னு பாருங்க!

எம்.கே. நாராயண்னு ஒருத்தரு பாதுகாப்பு செயலரா இருக்காராம்(!)...ஆனா அவ்ரு நாட்டு பாதுகாப்புக்குன்னு இதுவரை என்ன செஞ்சாருன்னு அவருக்கே தெரியாது... இவங்கெல்லாம் தான் இந்தியாவோட நிர்வாகிங்க!

பழமைபேசி அண்ணன் அப்படியே ஓபாமா கூட கம்பேர் பண்ணி ஒரு கேள்வி கேட்ருக்காரு.ஆனாலும் ஓபாமா கூட கம்பேர் பண்றது ரொம்ப ஓவரு....நான் கறுப்பர் இனம், நான் கிறிஸ்டியன், நான் இந்த ஜாதி அப்படின்னு அவரு ஓட்டுக் கேக்கலை..நான் வந்தா இது தான் ப்ளான்...நாட்டை இப்படி தான் நடத்துவேன்னு சொல்லி தான் ஓட்டு கேட்டாரு...

ஆனா இந்தியாவுல எப்படி வோட்டு கேட்கிறாங்க??? நான் ஒங்க ஜாதி....ஒங்க மதம்....நாங்க வந்தா கோவிலு கட்டுவோம்...மத்ய பிரதேஷ், உத்தர்பிரதேஷ்ல பல குழந்தைங்க சாப்பாடு இல்லாம சாவுறத வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லுது...ஆனா இவங்களுக்கு முக்கிய பிரச்சினை கோவில் கட்றது....இதெல்லாம் வெளங்குறதுக்கா??

நாங்க வந்தா இந்த ஜாதிக்கு இத்தினி பெர்சண்ட் இட ஒதுக்கீடு, அதுல இந்த மதத்துக்கு இத்தினி பெர்சண்ட் இட ஒதுக்கீடு (அப்ப மத்தவனெல்லாம் நாண்டுகிட்டு சாவுறதா?)...

இப்ப புதுசா ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க....நீதிபதி பதவில இட ஒதுக்கீடு வேணுமாம்....கொடுக்கலாம் தப்பில்ல...ஆனா கொஞ்சம் யோசிக்கணும்...இருக்கிறதே கொஞ்சம் பதவி...அதுல ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தா எல்லா ஜாதிக்கும் எப்படி கொடுக்கிறது?? அப்ப ஒதுக்கீடு கிடைக்காத ஜாதிக்காரங்க என்ன பண்றது?? நீதிமன்றத்தை புறக்கணிச்சிரலாமா??

தமிழ்நாட்டுக்கு தண்ணி தந்தா செத்துருவோம்னு கர்நாடகாவுல ஒரு விவசாயி தீக்குளிக்குறாரு...தமிழ் படம் ஓட்டுனா தியேட்டரை அடிச்சி நொறுக்குறாங்க...மஹாராஷ்ட்ராவுல மராத்தி தவிர யாரும் இருக்கக் கூடாதுன்னு அடிச்சி வெரட்டுறாங்க...கடலுக்கு போனாலும் பரவால்ல, தமிழ்நாட்டுக்கு போகக் கூடாதுன்னு கேரளாவுல காசு போட்டு தண்ணிய திருப்பி விட்றாங்க....

கர்நாடகாவுல தமிழர்களை அடிச்சி வெரட்டுனப்ப, கேரளாவுல தண்ணி பிரச்சினை பண்ணப்ப....ஆட்சில இருந்தது எல்லாம் காங்கிரசு தான்... ஆனா, இப்ப அவங்க சொல்றாங்க...வை கோ, சீமான் இந்தியாவோட இறையாண்மையை பாதிக்கிற மாதிரி பேசுறாங்களாம்....

பால் தாக்ரே, அச்சுதானந்தன், எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா இவங்க செஞ்சதை விட வைகோ, சீமான் என்ன செஞ்சிட்டாங்க???

என்ன இறையாண்மையோ பொறையாண்மையோ ஒரு மயிரும் புரியல!

20 comments:

பழமைபேசி said...

அண்ணாச்சி, தலை வணங்குறேன்!

குடுகுடுப்பை said...

இறையாண்மையை பாதுகாக்க முலயாம் சிங்கை தமிழக முதல்வராக்குவோம்.

பதி said...

//எம்.கே. நாராயண்னு ஒருத்தரு பாதுகாப்பு செயலரா இருக்காராம்(!)...ஆனா அவ்ரு நாட்டு பாதுகாப்புக்குன்னு இதுவரை என்ன செஞ்சாருன்னு அவருக்கே தெரியாது... இவங்கெல்லாம் தான் இந்தியாவோட நிர்வாகிங்க! //

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... அது தான் அவருடை நாட்டுக்கு (இலங்கை தான்) எத்தனை நன்றி விசுவாசமா வேலை செய்யுறாப்படி??? மத்தபடி பாகிஸ்தான், சீனா ன்னு எல்லாம் 'இந்தி'யாக்காரங்க கிட்ட பேச கூடாது.

//நான் ஒங்க ஜாதி....ஒங்க மதம்....நாங்க வந்தா கோவிலு கட்டுவோம்...மத்ய பிரதேஷ், உத்தர்பிரதேஷ்ல பல குழந்தைங்க சாப்பாடு இல்லாம சாவுறத வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லுது...ஆனா இவங்களுக்கு முக்கிய பிரச்சினை கோவில் கட்றது....//

குழந்தைங்க சாவுறது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா??? அது வளர்ந்த நாட்டுக்கு எத்தனை பிரச்சனை?? கோயில் கட்டினா தான் நாடு சுபிட்சமடையும்னு கூட தெரியாமா ஏன்பா பதிவு எழுதுறீங்க???
சே

//கடலுக்கு போனாலும் பரவால்ல, தமிழ்நாட்டுக்கு போகக் கூடாதுன்னு கேரளாவுல காசு போட்டு தண்ணிய திருப்பி விட்றாங்க....//

இத நினைச்சா தான் ரெம்ப பீலிங்க இருக்கு... கொறைஞ்ச பட்சம் அவிங்க மக்க நடத்துற டீ கடைக்கல உபயோகப்படுத்துறதுக்காவது நம்மளுக்கு கொஞ்சூண்டு தண்ணி தரலாம்..

bala said...

Naan manathil ninaithathai neengal ungal pathivil potturukinga.

Anonymous said...

// கர்நாடகாவுல தமிழர்களை அடிச்சி வெரட்டுனப்ப, கேரளாவுல தண்ணி பிரச்சினை பண்ணப்ப....ஆட்சில இருந்தது எல்லாம் காங்கிரசு தான்... ஆனா, இப்ப அவங்க சொல்றாங்க...வை கோ, சீமான் இந்தியாவோட இறையாண்மையை பாதிக்கிற மாதிரி பேசுறாங்களாம்....

பால் தாக்ரே, அச்சுதானந்தன், எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா இவங்க செஞ்சதை விட வைகோ, சீமான் என்ன செஞ்சிட்டாங்க??? //

அருமை, தொடரட்டும் உங்கள் கேள்விகணைகள். (ஆனா பதில் தான் கெடைக்காது)

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Maduraikkaran said...

Pulambi theerthuttinga!!! Indha seithi vote podum makkalin sindhanaiku ponal nichayam mattram undagum enbathu en nambikkai

மிஸஸ்.டவுட் said...

வேதாளம் எங்க போச்சு ? விக்ரமாதித்தன் எங்க போனான்? இங்க என்ன நடக்குது ஒன்னும் புரியலை!!!

நசரேயன் said...

இறையாண்மை என்ன விலை?

அது சரி said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி, தலை வணங்குறேன்!
04 March 2009 21:33
//

என்னங்ணா இது...தல நீங்க நீங்க போயி தலை வணங்கலாமா??

வருகைக்கு நன்றி!

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
இறையாண்மையை பாதுகாக்க முலயாம் சிங்கை தமிழக முதல்வராக்குவோம்.

04 March 2009 21:45
//

இது குடுகுடுப்பை ஸ்டைல் பஞ்ச்!

அது சரி said...

//
பதி said...
//எம்.கே. நாராயண்னு ஒருத்தரு பாதுகாப்பு செயலரா இருக்காராம்(!)...ஆனா அவ்ரு நாட்டு பாதுகாப்புக்குன்னு இதுவரை என்ன செஞ்சாருன்னு அவருக்கே தெரியாது... இவங்கெல்லாம் தான் இந்தியாவோட நிர்வாகிங்க! //

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... அது தான் அவருடை நாட்டுக்கு (இலங்கை தான்) எத்தனை நன்றி விசுவாசமா வேலை செய்யுறாப்படி??? மத்தபடி பாகிஸ்தான், சீனா ன்னு எல்லாம் 'இந்தி'யாக்காரங்க கிட்ட பேச கூடாது.
//

நீங்க சொல்றது கரீக்ட்டு...அந்த ஆளு வாங்குற காசுக்கு இலங்கை, பாகிஸ்தான், சைனான்னு எல்லா நாட்டுக்கும் ஒழுங்கா தான் வேலை பார்க்கிறார் போலருக்கு!

//நான் ஒங்க ஜாதி....ஒங்க மதம்....நாங்க வந்தா கோவிலு கட்டுவோம்...மத்ய பிரதேஷ், உத்தர்பிரதேஷ்ல பல குழந்தைங்க சாப்பாடு இல்லாம சாவுறத வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லுது...ஆனா இவங்களுக்கு முக்கிய பிரச்சினை கோவில் கட்றது....//

குழந்தைங்க சாவுறது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா??? அது வளர்ந்த நாட்டுக்கு எத்தனை பிரச்சனை?? கோயில் கட்டினா தான் நாடு சுபிட்சமடையும்னு கூட தெரியாமா ஏன்பா பதிவு எழுதுறீங்க???
சே
//

அரசியல்வியாதிகளப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்க!

அது சரி said...

//
bala said...
Naan manathil ninaithathai neengal ungal pathivil potturukinga.

05 March 2009 02:35
//

நன்றி பாலா!

அது சரி said...

//
mpmohankumar said...
// கர்நாடகாவுல தமிழர்களை அடிச்சி வெரட்டுனப்ப, கேரளாவுல தண்ணி பிரச்சினை பண்ணப்ப....ஆட்சில இருந்தது எல்லாம் காங்கிரசு தான்... ஆனா, இப்ப அவங்க சொல்றாங்க...வை கோ,கமல்,ரஜினி,சீமான் இந்தியாவோட இறையாண்மையை பாதிக்கிற மாதிரி பேசுறாங்களாம்....

பால் தாக்ரே, அச்சுதானந்தன், எடியூரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா இவங்க செஞ்சதை விட வைகோ, சீமான் என்ன செஞ்சிட்டாங்க??? //

அருமை, தொடரட்டும் உங்கள் கேள்விகணைகள். (ஆனா பதில் தான் கெடைக்காது)
//

வாங்க மோகன்...அவங்க எனக்கு பதில் சொல்லாட்டியும், எலக்சன்ல மக்களுக்கு பதில் சொன்னா போதும்!

அது சரி said...

//
Maduraikkaran said...
Pulambi theerthuttinga!!! Indha seithi vote podum makkalin sindhanaiku ponal nichayam mattram undagum enbathu en nambikkai
//

வாங்க மதுரைக்கார அண்ணே...வார்த்தைகளுக்கு நன்றி.

அது சரி said...

//
மிஸஸ்.டவுட் said...
வேதாளம் எங்க போச்சு ? விக்ரமாதித்தன் எங்க போனான்? இங்க என்ன நடக்குது ஒன்னும் புரியலை!!!

05 March 2009 10:00
//

வாங்க மிஸஸ்...அது வந்துங்க, வேதாளம் ஓடிப் போயிருச்சா, விக்ரமாதித்தன் அதை தேடி போயிருக்கான்...சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவான்னு நினைக்கிறேன்..

அது சரி said...

//
நசரேயன் said...
இறையாண்மை என்ன விலை?

05 March 2009 19:45
//

காஞ்சி போன பொறை என்ன விலைங்ணா? அதுல ஒரு பாதி விலை போட்டுக்குங்க!

பழமைபேசி said...

நம்பூர் வாசன் அய்யாவிங்களுக்கு கூடுதல் பொறுப்பாமே? ஆமுங்க கூடுதலாத் தொழிலாளர் நலத்துறையும்.... இஃகிஃகி! நீங்க பதிவு போட்டா, நல்லது நடக்கும் போல இருக்கே?!

Saravana Kumar MSK said...

//என்ன இறையாண்மையோ பொறையாண்மையோ ஒரு மயிரும் புரியல!//

same blood..

மங்களூர் சிவா said...

/
மிஸஸ்.டவுட் said...

வேதாளம் எங்க போச்சு ? விக்ரமாதித்தன் எங்க போனான்? இங்க என்ன நடக்குது ஒன்னும் புரியலை!!!
/

ரிப்பீட்டு