Friday 6 March 2009

தமிழர்களுக்கு உரிமை இல்லை - மொரார்ஜி தேசாயின் முட்டாள் தனம்!


மொரார்ஜி தேசாய்னு ஒரு நல்லவரு வல்லவரு இருந்தாரு...இந்திரா காந்தியவே எதிர்த்து நின்னவருன்னு பெருசுங்க எல்லாம் சொல்வாங்க...அவரு தன் பிஸ்ஸை தானே குடிப்பாருன்னு அவரப்பத்தி ஒரு நியூஸு கூட உண்டு...

அப்படிப்பட்ட "ஒண்ணுக்கு" புகழ் மொரார்ஜி தேசாய் விகடனுக்கு 1987ழுல ஒரு பேட்டி குடுத்துருக்காரு....படிச்சி பார்த்தா....எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாத ஒரு மனிதன் பிரதமர் பதவிக்கு போறது இந்தியா மாதிரி சாபக்கேடுள்ள நாட்ல மட்டும் தான் முடியும்...

விகடன் பேட்டி முழுசா இங்க எழுதக் கூடாதுங்கிறதுனால...ஒரு பகுதி மட்டும்...

கேள்வி: ஸ்றீலங்காவின் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டிருக்கவே கூடாது.

கேள்வி: சமீபத்தில் இந்திய அரசு உதவியளித்தது கூடவா??
பதில்: ஆமாம்..இந்தியா இதை செய்திருக்கக் கூடாது..நம் மக்கள் வேறு நாட்டில் இருந்தால் மெஜாரிட்டியின் ஆதிக்கத்தையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விரும்பவில்லையென்றால் திரும்பி விட வேண்டியது தானே? பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு ஸ்ரீலங்கா உதவி செய்தால் நாம் ஒப்புக் கொள்வோமா?

கேள்வி: தமிழர்களுக்கு அரசாங்கம் சில அடிப்படை உரிமைகளைக்கூட வழங்கவில்லையே?

பதில்: அடிப்படை உரிமை இல்லாமலா ஆறு தமிழ் மந்திரிகள் அந்த அரசாங்கத்தில் உள்ளனர்?

கேள்வி: அவர்கள் சிங்கள அரசின் நடவடிக்கைகளை ஒப்புக் கொள்பவர்கள் ஆயிற்றே?

கேள்வி: நான் உங்கள் கருத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன். தமிழன் என் பதால் biased opinion உங்களுக்கு உள்ளது. நான் அங்கு சென்றபோது கூடத் தமிழர்களிடம் கூறினேன். லங்கா அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், நான் உதவிக்கு வரு வதாக உறுதியளித்தேன். ஆனால், தீவிரவாதி களின் நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை.

கேள்வி: லங்கா அரசாங்கம் பொதுமக்களை அல்லவா படுகொலை செய்கிறது?

பதில்: பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது.

அதாவது இந்த மொக்கையனுக்கு இலங்கை பிரச்சினை பற்றி ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை...முதலில் ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல...அவர்கள் தமிழர்களே தவிர இந்தியர்கள் அல்ல‌!!. பல நூற்றாண்டுக்கு முன்னரே, சொல்லப் போனால் இந்தியாவில் ஆங்கில ஆட்சி ஏற்படும் முன்னரே இலங்கையில் உரிமையுடன் இருந்தவர்கள். பல தலைமுறையாக, இலங்கையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே வாழ்பவர்கள்...அவர்ககுக்கு இந்திய பாஸ்போர்ட்டோ இந்திய குடியுரிமையோ இல்லை....ஒருவர் ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் அந்த நாட்டின் குடிமகன் ஆகிறார் என்று உலக நாடுகள் பலவும் ஏற்றுக் கொண்ட அடிப்படை மனித நாகரீகம் கூட இந்த மனிதரிடம்(???) இல்லை!

அடுத்து....சிங்களர்கள் மெஜாரிட்டியாம்...அதனால் அடங்கி போக வேண்டுமாம்...மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை...தன் உரிமையை கேட்டால் கூட மொரார்ஜி போன்ற பதவிக்காக வால் பிடிப்பவர்களுக்கு அது தீவிரவாதமாக படுகிறது...

முக்கியமாக கவனிக்க வேண்டியது...லங்கா அரசாங்கம் பொதுமக்களை படுகொலை அல்லவா செய்கிறது என்ற கேள்விக்கு இந்த நல்லவனின் பதில்... "பொதுமக்கள் தீவிரவாதிகளைத் தனிப் படுத்த வேண்டும். தீவிரவாதிகள் என்றும் மெஜாரிட்டியல்ல! பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக தீவிரவாதம் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்களுக்கு உண்மையில் அரசாங்கத்துடன் ஒத்துப்போக விருப்பமிருந்தால் தீவிரவாதம் அதைத் தடுக்க விடக்கூடாது."

அதாவது....அரசாங்கம் படுகொலை செய்கிறதே என்ற கேள்விக்கு இவரின் பதில்...அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்! தாய் முன்னிலையில் மகளை கற்பழித்தாலும், குழந்தைகள் முன்னிலையில் தாயை கற்பழித்தாலும் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துப் போக வேண்டும்....மொரார்ஜியாக இருந்தால் அப்படி தான் செய்வார்!!!

இந்த பேட்டி கொடுக்கப்பட்ட 1987ல்...ஈழத்தமிழர் துயரம் உச்சமாக இருந்த வருடங்கள் 1980கள்...அந்த சூழ்நிலையில், இப்படி ஒரு ஆதிக்க வெறி பிடித்த பேட்டி கொடுக்க வேண்டுமானால், ஒன்று இந்த நபருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்...இல்லை, இவர் ஹிட்லரின் நெருங்கிய தோழராய் இருக்க வேண்டும்!

அதெல்லாம் சரி, "பிஸ்ஸு" புகழ் மொரார்ஜி தேசாய் செத்து சுண்ணாம்பாயி பல வருஷம் ஆயிடுச்சி...இப்ப எதுக்கு இந்த பதிவுன்னு கேக்குறவங்களுக்கு...

இருக்கிறது நண்பர்களே....இந்த நபர் இந்தியாவின் பிரதமராக இரண்டு வருடம் சாணி கொட்டியதாக தெரிகிறது...

நாட்டின் பிரதமராக இருந்த ஒரு நபருக்கே ஈழப்பிரச்சினை பற்றியோ, மனித உரிமைகள், உலக சமுதாயம் ஏற்றுக் கொண்ட நடைமுறைகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருக்கும் போது, இன்றைக்கு அரசு நடத்திக் கொண்டிருக்கும் பல்வேறு நபர்களுக்கு என்ன விதமான அறிவு இருக்க முடியும்??

22 comments:

வெத்து வேட்டு said...

then Praba is the only wiseman in the world?
:)

Anonymous said...

அவரு சொல்வது சரிதான். இப்போது ஈழதமிழர் இந்தியாவை மானங்கெட்ட நாடு எனச் சொல்ல இதுதான் காரணம்!!!

Anonymous said...

ராஜிவ் காந்தி, மொரார்ஜி தேசாய் சொன்னா மாதிரி மூடிகிட்டு, எப்படியோ போய் தொலைங்க என்று இருநதிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

குடுகுடுப்பை said...

அவரு பொதுமக்கள் என்று சொன்னது சிங்கள மக்களை குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன். அனைவருக்கும் சம உரிமை என்ற நிலை இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது எல்லோரும் 'பொது'மக்களாக இருந்திருப்பார்கள்.அதனைப்பற்றி யாரும் பேசுவதே இல்லை.

குடுகுடுப்பை said...

எப்படியோ சண்டையை நிறுத்தி அனைத்துத்தரப்பும் மனித உயிர்கள் பலி போவதை தடுத்தால் நல்லது.

நசரேயன் said...

இன்னும் கொஞ்சம் நாள்ல டமில் நாட்டுல நமக்கே உரிமை இருக்குமோ என்னவோ!!!!

Anonymous said...

//முதலில் ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல...அவர்கள் தமிழர்களே தவிர இந்தியர்கள் அல்ல‌!!.//

அப்புறம் இநதிய பிரதமர் எதுக்கய்யா அவுங்களப் பத்தி கவலைபடனும், குழப்புறீங்களேய்யா!!!!

பழமைபேசி said...

நல்ல தகவல் அண்ணாச்சி!

v.pitchumani said...

தேசாயின் கூற்று தவறு. எந்த நாடும் தனது பகுதியை பிரித்து கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள் . போராடிதான் பெற வேண்டும். திபெத் தலாய் லாமாவுக்கு அடைக்கலம கொடுக்கும் இந்தியா நம்மை கண்டு கொள்ளாது.அதன் வெளியுறவுக் கொள்கைக்கு ஒத்து போனால் ஆதரவு இல்லையென்றால் ஆப்புதான்

வெத்து வேட்டு said...

உங்கள் எல்லாருக்குமே ஏன் இந்தியா ஈழ தமிழருக்கு ஆப்பு வைத்துன்னு தெரியாதா?

சின்ன பாண்டி: உங்களுக்கு ஆனாலும் குசும்பு .. தமிழருன்னா உலகமே தூக்கி தலையிலே வைக்கனும்னு தெரியாதா? :) :)

LKritina said...

Morarji ex PM of India is an utter idiot; He is a total ignorant eelam tamils issues; just forget this guy and let us think ahead!!!

அது சரி(18185106603874041862) said...

//
வெத்து வேட்டு said...
then Praba is the only wiseman in the world?
:)
//

வாங்க வெத்துவேட்டு...நீ ஒரு லூசான்னு இந்த தடவை கேக்காம விட்டுட்டீங்க! :0)

பிரபாகரன் பத்தி நான் எதுவுமே சொல்லலையே...மொரார்ஜி தேசாய் முட்டாள்தனமா பேசிருக்காருன்னு சொன்னா, அது ஏன் முட்டாள்தனம் இல்லைன்னு நீங்க நிரூபிச்சா அது ஓக்கே, நான் திருத்திக்க தயார்....ஆனா, பிரபாகரன் பத்தி நான் எதுவுமே சொல்லாம இருக்கும் போது, அப்ப பிரபாகரன் தான் உலகத்திலேயே அறிவாளியா கேள்வி கேக்குறீங்க!

சரி, கேட்டுட்டீங்க, எனக்கு தெரிஞ்ச பதில சொல்லிடுறேன்...ஒருத்தர் அறிவாளிங்கறதுக்கு என்ன அளவு கோல்?? பொதுப் புத்தி படி பார்த்தா, பிரபாகரன் அறிவாளி இல்ல....அவருக்கு அறிவு இருந்தா, இன்னேரம் ஒரு கட்சி ஆரம்பிச்சி,முதல்வ்ரா இருந்திருப்பாரு....தன் மனைவியை மகளிர் அணித் தலைவியா ஆக்கிருப்பாரு...மகனை இளைஞர் அணித் தலைவரா ஆக்கிருப்பாரு...அப்படியே, இன்னொரு மகனை கொழும்புக்கு அனுப்பி, அங்க ஒரு மந்திரி போஸ்டு வாங்கிருப்பாரு...

இது எதுவுமே அவருக்கு செய்யத் தெரியலை...அப்ப அவருக்கு அறிவு இருக்கா? நீங்களே சொல்லுங்க!!

ஆனா, அவருக்கு சுய மரியாதை இருக்கு...மானம் இருக்கு...அது மட்டும் தான் எனக்கு தெரியுது!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
அவரு சொல்வது சரிதான். இப்போது ஈழதமிழர் இந்தியாவை மானங்கெட்ட நாடு எனச் சொல்ல இதுதான் காரணம்!!!
06 March 2009 22:37
//

அவங்க சொல்றதுலையும் ஒரு அர்த்தம் இருக்கு!

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
ராஜிவ் காந்தி, மொரார்ஜி தேசாய் சொன்னா மாதிரி மூடிகிட்டு, எப்படியோ போய் தொலைங்க என்று இருநதிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

06 March 2009 22:48
//

நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியுது...அதை நீங்க வெளிப்படையா சொன்னா நான் பதில் சொல்ல தயார்!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அவரு பொதுமக்கள் என்று சொன்னது சிங்கள மக்களை குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன். அனைவருக்கும் சம உரிமை என்ற நிலை இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது எல்லோரும் 'பொது'மக்களாக இருந்திருப்பார்கள்.அதனைப்பற்றி யாரும் பேசுவதே இல்லை.
//

வாங்க குடுகுடுப்பை...

அவரு சொன்னதை பார்த்தா அவரு சிங்கள மக்களை சொன்ன மாதிரி எனக்கு தெரியலை....

மொரார்ஜி தேசாய் சொன்னதுல ஒரு முக்கியமான விஷயம்...இலங்கை பிரச்சினைக்கு அடிப்படை காரணம் ஜே.வி.பியும் ஜெயவர்தனேவும்கிறதை வசதியா மறைச்சிட்டு பேசுறது திருட்டு தனம்! அதனால் தான் இந்த பதிவே!

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
எப்படியோ சண்டையை நிறுத்தி அனைத்துத்தரப்பும் மனித உயிர்கள் பலி போவதை தடுத்தால் நல்லது.

06 March 2009 22:50
//

இது தான் எல்லாருடைய விருப்பமும்...ஆனால், அதைக் கூட வெளிப்படையாக சொல்ல முடிகிறதா?? பொறையாண்மையை பாதிப்பதாக கேஸ் போடுகிறார்கள்....

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
இன்னும் கொஞ்சம் நாள்ல டமில் நாட்டுல நமக்கே உரிமை இருக்குமோ என்னவோ!!!!

06 March 2009 22:51
//

நீங்க கேட்ருக்கது ரொம்ப ஆழமான கேள்வி...எதிர்காலம் எனக்கு பிரகாசமா தெரியலை!

Anonymous said...

தமிழர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. அன்புடன் பழகிய அயலாருக்காக உயிரையும் கொடுக்கும் தமிழன் (இந்தியத்தமிழன்)
2. அயலாரிம் அன்புடன் பழகி, அவர்களால் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவர்களுக்கே சத்தமில்லாமல் துரோகம் செய்யும் தமிழன் (ஈழத்தமிழன்).

அது சரி(18185106603874041862) said...

//
-சின்னபாண்டி said...
//முதலில் ஈழத் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல...அவர்கள் தமிழர்களே தவிர இந்தியர்கள் அல்ல‌!!.//

அப்புறம் இநதிய பிரதமர் எதுக்கய்யா அவுங்களப் பத்தி கவலைபடனும், குழப்புறீங்களேய்யா!!!!

06 March 2009 23:06
//

இந்திய பிரதமர் எதுக்கு அவங்களைப் பத்தி கவலைப்படணும்.....நல்ல கேள்வி....

ஆனா, இந்திய பிரதமர் கவலைப்படணும்னு நான் எங்கயுமே சொல்லலையே!

ஏதோ டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போன மாதிரி "பிடிக்காட்டி திரும்பி வரவேண்டியது தான"ன்னு இந்த எல்லாம் தெரிஞ்ச அறிவாளி சொல்றது தான் கடுப்பா இருக்கு!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
நல்ல தகவல் அண்ணாச்சி!
//

இந்த தகவலுக்கு நன்றி விகடனுக்கு!

அது சரி(18185106603874041862) said...

//
v.pitchumani said...
தேசாயின் கூற்று தவறு. எந்த நாடும் தனது பகுதியை பிரித்து கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள் . போராடிதான் பெற வேண்டும். திபெத் தலாய் லாமாவுக்கு அடைக்கலம கொடுக்கும் இந்தியா நம்மை கண்டு கொள்ளாது.அதன் வெளியுறவுக் கொள்கைக்கு ஒத்து போனால் ஆதரவு இல்லையென்றால் ஆப்புதான்

07 March 2009 00:32
//

வாங்க பிச்சுமணி...நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்....ஆனா, இந்தியாவுக்கு உருப்படியா எந்த வெளியுறவு கொள்கையும் இருக்க மாதிரி தெரியலையே!

Mahesh said...

என்னண்ணே... ரொம்ப கோவமா இருக்காப்ல இருக்கு? இங்க சீட்ல இருக்கற எந்த மாங்கா மடயனுக்கும் ஒரு மண்ணுந் தெரியாது. நாமதான் இப்பிடி பொலம்பிக்கிட்டுருப்போம்...

:(