Monday, 13 April 2009

அகில இந்திய அரசியலை திசை திருப்பிய சரத்குமார்!இந்தியா ஒளிர்கிறது என்று கும்மி அடித்து கடந்த தேர்தலில் நொண்டி ஆன பா.ஜ.க என்னும் கட்சி அகில உலக சரத்குமார் ரசிகர் மன்ற நிறுவனத் தலைவர் சரத்குமாரின் சமத்துவ மொக்கை ச்சீ சமத்துவ மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கு முயன்றது எல்லாருக்கும் தெரிந்ததே...

இந்த கூட்டணியை உலகமே எதிர்பார்த்த நிலையில்.....

திருமங்கலம் இடைத் தேர்தலில் 800 ஓட்டுகள் பெற்று சுயேச்சையை விட கொஞ்சமே கொஞ்சம் குறைவான ஓட்டுகள் என்ற சாதனை செய்த‌ சரத்துடன் சேர்ந்து தமிழ்நாடு/பாண்டிச்சேரியின் நாற்பது தொகுதிகளையும் இருட்டுக்கடை அல்வா போல் அள்ளி விடலாம்....ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென்னகமெங்கும் மக்கள் படை கொண்ட சமத்துவ மொக்கை கட்சியின் துணையுடன் தென்னகத்தை தேங்காய் பத்தை போல சுருட்டி விடலாம்... சரத் மொக்கை கட்சி துணையுடன் அடுத்த இந்திய ஆட்சி நமதே என்று மனப்பால் குடித்த பா.ஜ.க வுக்கு தனித்தே போட்டி என்று சரத்குமார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்...

சரத்தின் இந்த அதிரடி கடப்பாறை புகழ் அத்வானியை இடி போல் தாக்கியது...அதிர்ச்சியில் வாஜ்பேயி நடக்கவே ஆரம்பித்து விட்டார் என்று டெல்லியின் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

சரத்தின் இந்த அதிரடி முடிவால் இந்திய அரசியலே மாற்றி எழுதப்பட்டு விட்டது...தென்கிழக்கு ஆசியாவில் அரசியல் சூறாவளி வீசக்கூடும் என்று புலம்பினாலும்....சமத்துவ மொக்கை கட்சி போனால் என்ன....நாடாளும் மொக்கை கட்சி தலைவர் கார்த்திக்கை கண்டுபிடித்து கூட்டணி அமைத்தே தீருவோம்....அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு மந்திரி பதவி உறுதி...கடைசி வரை அவரை கண்டு பிடிக்க முடியாவிட்டால் லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட விசய. டி. ராசேந்தரின் லட்சிய தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போம் என்று அத்வானின் சென்னை தொண்டர் சூளுரைப்பதாக நமது நிருபர் "எழுத்தாணி" எருமை தெரிவிக்கிறார்....48 comments:

Saravana Kumar MSK said...

ஹி ஹி ஹி..
:)

சுட்டி குரங்கு said...

hahaha !! nice one !!
இன்னா மேட்டர் ன்னா சித்திக்கு முதுகு வலியாம். அதுனால 2 seat ள்ள 1 seat உம் காலி.இது தான் இப்படி ஒரு இடி விழ காரணம் ஆதி போச்சு .

பழமைபேசி said...

அண்ணாச்சி... நீங்க எந்த தொகுதியில நிக்கப் போறீக?

கபீஷ் said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி... நீங்க எந்த தொகுதியில நிக்கப் போறீக?
//

நீங்க நிக்கற தொகுதிக்குப் பக்கத்து தொகுதியிலன்னு சொல்ல சொன்னாரு

குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க தனித்தே போட்டியிடுகிறது என்பதை ஆனித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜக்கம்மா
தலைவர்
குஜமுக

குடுகுடுப்பை

பொதுச்செயலாளர்

ஜி said...

ultimate thala....

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Anonymous said...

உங்களது எழுத்து நடை ஹி.. ஹி... ஹி... வைக்கிறது. சூப்பர். ஆனால், திருமங்கலத்தில் சரத்குமார் கட்சி 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதற்கும்... சில நூறு ஓட்டுக்கள் குறைந்ததற்கும் அண்ணன் அழகிரியே காரணம் என்றே கருதுகிறேன்.

Joe said...

பாவம் சரத்! பேசாமே நாட்டாமை பார்ட்-2 எடுக்க போயிருக்கலாம்.
அரசியலுக்கு வந்து இப்படி சின்னா பின்னமாகனுமா?

அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

ராஜ நடராஜன் said...

எவ்வளவு வேணும்னாலும் அடிங்ண்ணா!தாங்கிக்குவாரு!ஆனா தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மொட்டை போடுறீங்களே:)

சூரியன் மொட்டைல பிரபலமானதால தேர்தல் மொட்டையும் பிரபலமாகிடும்ன்னு நினச்சா சூரியன் மொட்டை சம்பாதிச்சுக் கொடுத்த பணமெல்லாம் தேர்தல் மொட்டையாக்கிடுமின்னு அடுத்த மாசம் தெளிந்திடும்.

ராஜ நடராஜன் said...

அரசியலுக்கு வந்தவுடனே பழைய டயலாக்குகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மறந்து போவது எப்படின்னு இன்னும் எனக்குப் புரியவில்லை.

எம்.ஜி.ஆரை மனதில் நினைத்துக் கொண்டு அரசியலில் இறங்கும் நடிகர்களை நினைத்தால் கான மயிலாட கண்டிருந்த வான்கோழிதான் நினைவுக்கு வருது.

ராஜ நடராஜன் said...

//சரத் மொக்கை கட்சி துணையுடன் அடுத்த இந்திய ஆட்சி நமதே என்று மனப்பால் குடித்த பா.ஜ.க வுக்கு தனித்தே போட்டி என்று சரத்குமார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்... //

அண்ணே!கவுண்டமணி அண்ணே! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா டயலாக் பதிவுலகில் எத்தனை பேருக்கு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமா விளங்குது:)

ராஜ நடராஜன் said...

படத்திலுள்ள சரத் குமார் எழுத்து பேட் லேபில்ன்னு தெரியாம பிளாக் லேபில் நினைப்பிலே சிரிக்கிறாரே மனுசன்.

ஆமா!கஷ்டப்பட்டு காசு சம்பாதிச்சுட்டும் கூப்பிடாம சேவ செய்யறேன்னுட்டு வந்துடராங்களே நடிகர்கள் அது ஏன்?

ரித்திஷாவது பிரியாணி பொட்டலமெல்லாம் கொடுத்து படம் பார்க்க வச்சாருன்னு பக்கத்து வீட்டு பதிவர்கள் சொல்றாங்க.அதனால அவரு ஜெயிச்சாலும் ஜெயிச்சுடுவாரு:)

Anonymous said...

கைப்புள்ள

ஏய் இவன் நமக்கு போட்டியா இருப்பான் போல ....எவ்வள்ளவு அடிச்சாலும் தாங்குறானே..

சென்ஷி said...

ஹா ஹா ஹா ...

செம்ம கலாய்ச்சல் செஞ்சுட்டீங்க :-))

Suresh said...

:-) ha ha ha நல்ல கலாய்

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html

Pathikumar said...

:)

//கடப்பாறை புகழ் அத்வானியை இடி போல் தாக்கியது...அதிர்ச்சியில் வாஜ்பேயி நடக்கவே ஆரம்பித்து விட்டார் என்று டெல்லியின் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...//கலக்கல்....

//திருமங்கலம் இடைத் தேர்தலில் 800 ஓட்டுகள் பெற்று சுயேச்சையை விட கொஞ்சமே கொஞ்சம் குறைவான ஓட்டுகள் என்ற சாதனை செய்த‌ சரத்//அப்போ வரப் போற எலக்சன்ல யாரு அதிக ஓட்டு வாங்குவாங்க? பாஜகாவா இல்ல சமகவா? ;)

எம்.எம்.அப்துல்லா said...

athu sari

:)))

மிஸஸ்.தேவ் said...

என்ன இப்பலாம் அரசியல் நெடி மாத்திரமே தூக்கலா இருக்கு இந்தப் பக்கம்?! கொஞ்சம் வேதாளத்தையும் விக்கிரமனையும் கூட கண்ல காட்டலாம்.தவறே இல்லை அதுசரி ,

மிஸஸ்.தேவ் said...

//குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க தனித்தே போட்டியிடுகிறது என்பதை ஆனித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜக்கம்மா
தலைவர்
குஜமுக

குடுகுடுப்பை

பொதுச்செயலாளர்//

ஜக்கம்மா யாருங்கண்ணா ?செந்தில் வாழைப் பழ காமெடி போல குடுகுடுப்பை இங்க இருக்கார் அப்போ ஜக்கம்மா எங்க? அதாங்க நான்ன்னு பதில் சொல்வீங்களோ?

அது சரி said...

என்ன நடக்குது இங்க????? எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்!
மாஞ்சி மாஞ்சி எளக்கிய தரமா எழுதுனா நாப்பது பேர் தான் படிக்கிறாங்க.. நாலு பின்னூட்டம் வர்றதே பெரும்பாடா இருக்கு....

கடைய தெறந்து நெம்ப நாளாச்சே...எலித் தொல்லை ஜாஸ்தி ஆயிடுமேன்னு நேத்து நைட்டு தூங்கறதுக்கு முன்னாடி ஒரு மொக்கையை எறக்கிவிட்டா இன்னிக்கி கடைல ஒரே கும்பலா இருக்கு....

கடைக்கு வந்தவங்க எண்ணிக்கை சரத்துக்கு ஓட்டு போட்டவங்க எண்ணிக்கையை விட அதிகமாயிருக்கும் போலருக்கு!

இந்த இடுகை எதனால சூடாச்சி?? ஒண்ணுமே புரியலை!

அது சரி said...

வந்தவங்க எல்லாருக்கு நன்றி....தமிழ்மணத்துலயும், தமிழிஷ்லயும் ஓட்டுப் போட்டவங்களுக்கு இஸ்பெசல் நன்றி.....

விளக்கமான பதில் கும்மிகள் இன்னும் சிறிது நேரத்தில்.....

வருங்கால முதல்வர் said...

நம்ம குருப்புல சேர சொல்லுங்க அவர வருங்கால முதல்வரா ஆக்கிருவோம்.

Suresh said...

:-) சரியான நகைச்சுவை பதிவு

நானும் ஒரு ராமதாஸ் பதிவு போட்டு இருக்கேன் வந்து பார்ங்க தலைவா

Anonymous said...

ஹோஹோ, இப்போ இலங்கை பிரச்சினையால தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டு இருக்காராமே?

Anonymous said...

^^ இது ஒரு வேளை ஸ்ரீலங்க அரசியலை திசை திருப்ப இருக்குமோ?

அது சரி said...

//
Saravana Kumar MSK said...
ஹி ஹி ஹி..
:)
13 April 2009 23:47
//

வாங்க சரவணா...

அது சரி said...

//
சுட்டி குரங்கு said...
hahaha !! nice one !!
இன்னா மேட்டர் ன்னா சித்திக்கு முதுகு வலியாம். அதுனால 2 seat ள்ள 1 seat உம் காலி.இது தான் இப்படி ஒரு இடி விழ காரணம் ஆதி போச்சு .

14 April 2009 00:08
//

வாங்க சுட்டி குரங்கு...(ஆஹா என்ன அருமையான பேரு :0))

அது சரி said...

//
பழமைபேசி said...
அண்ணாச்சி... நீங்க எந்த தொகுதியில நிக்கப் போறீக?

14 April 2009 00:17

//

நான் நம்ப குடுகுடுப்பையார் கூட பேச்சுவார்த்தை நடாத்திட்டு இருக்கேன்...எப்படியும் மூணு ஒதுக்குவாருன்னு நினைக்கிறேன்..அதுல செலக்ட் பண்ணி எதுனா ஒண்ணு!

அது சரி said...

//
கபீஷ் said...
//
பழமைபேசி said...
அண்ணாச்சி... நீங்க எந்த தொகுதியில நிக்கப் போறீக?
//

நீங்க நிக்கற தொகுதிக்குப் பக்கத்து தொகுதியிலன்னு சொல்ல சொன்னாரு

14 April 2009 00:39
//

வாங்க கபீஷ்...என்னங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
கு.ஜ.மு.க தனித்தே போட்டியிடுகிறது என்பதை ஆனித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜக்கம்மா
தலைவர்
குஜமுக

குடுகுடுப்பை

பொதுச்செயலாளர்

14 April 2009 02:12
//

அதெல்லாம் சரி தலைவரே...எப்பிடின்னா எனக்கு ஒரு சீட்டாவது குடுங்க..நான் நிச்சயம் 800 வோட்டுக்கு மேல வாங்குவேன்...

அது சரி said...

//
ஜி said...
ultimate thala....

14 April 2009 02:42

//

வாங்க ஜி :0))

அது சரி said...

//
globen said...
உங்களது எழுத்து நடை ஹி.. ஹி... ஹி... வைக்கிறது. சூப்பர். ஆனால், திருமங்கலத்தில் சரத்குமார் கட்சி 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதற்கும்... சில நூறு ஓட்டுக்கள் குறைந்ததற்கும் அண்ணன் அழகிரியே காரணம் என்றே கருதுகிறேன்.

14 April 2009 04:03

//

வாங்க குளோபன்...

அழகிரி அதிரடியால சரத்குமாருக்கு கொஞ்சம் ஓட்டு கொறஞ்சது உண்மை தான்...ஆனா நூறு வோட்டு குறைஞ்சிடுச்சிங்கறது ரொம்ப ஓவர்...மிஞ்சி போனா ஒரு அஞ்சாறு வோட்டு கொறஞ்சிருக்கும்...:0))

அது சரி said...

//
Joe said...
பாவம் சரத்! பேசாமே நாட்டாமை பார்ட்-2 எடுக்க போயிருக்கலாம்.
அரசியலுக்கு வந்து இப்படி சின்னா பின்னமாகனுமா?

அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

14 April 2009 05:43

//

வாங்க ஜோ..

அவரு அரசியலுக்கு வர்றது நல்லது தாங்க....அப்படியாவது நடிக்கிறதை விட்டுட்டாருன்னா எவ்ளோ பேரு சந்தோஷப்படுவாங்க?? முக்கியமா ப்ரட்யூசருங்க!

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
எவ்வளவு வேணும்னாலும் அடிங்ண்ணா!தாங்கிக்குவாரு!ஆனா தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே மொட்டை போடுறீங்களே:)

சூரியன் மொட்டைல பிரபலமானதால தேர்தல் மொட்டையும் பிரபலமாகிடும்ன்னு நினச்சா சூரியன் மொட்டை சம்பாதிச்சுக் கொடுத்த பணமெல்லாம் தேர்தல் மொட்டையாக்கிடுமின்னு அடுத்த மாசம் தெளிந்திடும்.
//

வாங்க நடராஜன் அண்ணே...

நான் மொட்டை போடலைங்க...அவசரத்துக்கு அந்த படம் தான் நெட்ல கிடைச்சிது..:0))

அது சரி said...

//
ராஜ நடராஜன் said...
அரசியலுக்கு வந்தவுடனே பழைய டயலாக்குகள் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மறந்து போவது எப்படின்னு இன்னும் எனக்குப் புரியவில்லை.
//

அதுக்கு பேரு தான் செலக்டிவ் அம்னீஷியா...அட...இவங்க வசனம் பேசறதே அதுக்குத் தான?? :0))

அது சரி said...

//
Anonymous said...
கைப்புள்ள

ஏய் இவன் நமக்கு போட்டியா இருப்பான் போல ....எவ்வள்ளவு அடிச்சாலும் தாங்குறானே..

14 April 2009 07:28
//

எவ்ளோ அடிச்சாலும் அவரு தாங்குவாரு...பலசாலி நடிகராச்சே..

அது சரி said...

//
சென்ஷி said...
ஹா ஹா ஹா ...

செம்ம கலாய்ச்சல் செஞ்சுட்டீங்க :-))

14 April 2009 09:01
//

வாங்க சென்ஷி...அடிக்கடி வாங்க...

அது சரி said...

//
Suresh said...
:-) ha ha ha நல்ல கலாய்

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html

காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
//

வாங்க சுரேஷ்...உங்க பதிவு பயங்கர கலர்ஃபுல்லா இருக்குங்க..

அது சரி said...

//
Pathikumar said...
:)

//கடப்பாறை புகழ் அத்வானியை இடி போல் தாக்கியது...அதிர்ச்சியில் வாஜ்பேயி நடக்கவே ஆரம்பித்து விட்டார் என்று டெல்லியின் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...//கலக்கல்....

//திருமங்கலம் இடைத் தேர்தலில் 800 ஓட்டுகள் பெற்று சுயேச்சையை விட கொஞ்சமே கொஞ்சம் குறைவான ஓட்டுகள் என்ற சாதனை செய்த‌ சரத்//அப்போ வரப் போற எலக்சன்ல யாரு அதிக ஓட்டு வாங்குவாங்க? பாஜகாவா இல்ல சமகவா? ;)
//

வாங்க பதிகுமார்..

பா.ஜ.க அதிக வோட்டு வாங்குறது கஷ்டம்ங்க...அவங்க குறைஞ்ச பட்சம் ஆயிரத்துக்கு மேல வாங்கணும்....

சரத்துக்கு அந்த பிரச்சினையெ இல்ல...அவரு 801 ஓட்டு வாங்கினாலே அவரு கட்சிக்கு மாபெரும் முன்னேற்றம் தான?? :0))

அது சரி said...

//
எம்.எம்.அப்துல்லா said...
athu sari

:)))
//

வாங்க அப்துல்லா அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சி...நல்லாருக்கீங்களா? :0))

அது சரி said...

//
மிஸஸ்.தேவ் said...
என்ன இப்பலாம் அரசியல் நெடி மாத்திரமே தூக்கலா இருக்கு இந்தப் பக்கம்?! கொஞ்சம் வேதாளத்தையும் விக்கிரமனையும் கூட கண்ல காட்டலாம்.தவறே இல்லை அதுசரி ,
//

வாங்க மிஸஸ்.தேவ்..

அரசியல் பதிவு எழுதறதுக்கு காரணம் ரொம்ப மோசமான மூட்ல இருக்கறது தான்... நல்ல மூட்ல இருந்தா எதுனா ஒழுங்கா எழுதலாம்...இப்ப இருக்க மூட்ல இப்படி தாங்க வருது :0(

தவிர வேதாளம் கதை எழுதறதுனா தொடரா தாங்க எழுத முடியும்...டைம் பெரிய பிரச்சினையா இருக்கு...பின்னூட்டத்துக்கு மறுமொழி சொல்லவே மூணு நாளாவுது...இதுல நான் எங்க போய் தொடர் கதை எழுத??

அது சரி said...

//
மிஸஸ்.தேவ் said...
//குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க தனித்தே போட்டியிடுகிறது என்பதை ஆனித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜக்கம்மா
தலைவர்
குஜமுக

குடுகுடுப்பை

பொதுச்செயலாளர்//

ஜக்கம்மா யாருங்கண்ணா ?செந்தில் வாழைப் பழ காமெடி போல குடுகுடுப்பை இங்க இருக்கார் அப்போ ஜக்கம்மா எங்க? அதாங்க நான்ன்னு பதில் சொல்வீங்களோ?

14 April 2009 13:26
//

குஜமுக கட்சியில தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், பொதுச் செயலாளர், கொள்கைப் பரப்பு செயலாளர், வட்டம், ஒன்றியம், தொண்டர் எல்லாமே பெருந்தலைவர் குடுகுடுப்பையார் தான்...

குடுகுடுப்பையும் அவர் தான்...சக்கம்மாவும் அவர் தான்...ஏன் போஸ்டர் ஒட்றது..வரவேற்பு வளைவு கட்றது கூட அவர் தான்...எல்லாமே அவர் தான்...:0))

அது சரி said...

//
வருங்கால முதல்வர் said...
நம்ம குருப்புல சேர சொல்லுங்க அவர வருங்கால முதல்வரா ஆக்கிருவோம்.
//

அவரு வருங்கால பிரதரமாக போறாரு...நீங்க வேற!

கட்சில சேத்துருவோம்...ஆனா உங்க கோஷ்டில சேக்கிறதா இல்ல தளபதி நசரேயன் கோஷ்டில சேக்கிறதா?? :0))

அது சரி said...

அப்பாடா...எல்லாருக்கும் மறுமொழி சொல்லியாச்சி...ஞான் தூங்கப் போகுது...:0))))

Anonymous said...

yo thambi how u doing? r u still in china/??

Anonymous said...

//அப்பாடா...எல்லாருக்கும் மறுமொழி சொல்லியாச்சி...ஞான் தூங்கப் போகுது...:0))))//

இல்லை, எனக்கு இன்னும் பதில் சொல்லலை. இது அநியாயம்.

மங்களூர் சிவா said...

செம கலக்கல்
:)))))))))))

ROTFL