Tuesday 24 March 2009

நடிகர்கள் அறிவற்றவர்களா? பதிவர் மாதவராஜுக்கு சில பதில்கள்!

தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க முன், அறிவு என்பதன் அளவு கோல் என்ன?? எதைக் கொண்டு அறிவை அளப்பீர்கள்?? மாடு மேய்ப்பவர்களுக்கு கணிப்பொறி தெரியாது ஆனால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா இல்லை கணிப்பொறிக் காரர்களுக்கு கட்டிடம் கட்ட தெரியாது என்பதால் அவர்களை அறிவற்றவர்கள் என்பீர்களா?? என்ன தான் அளவுகோல்? சமூகப் பார்வையா?? அப்படியானால், நடிகர்களைத் தவிர தமிழ்நாட்டில் எல்லாருக்கும் சமூகப்பார்வை இருக்கிறதா??
சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு??

சினிமா என்பது வியாபாரம்...வியாபாரம் மட்டுமே...ஒரு பேங்கருக்கும், மீன்பிடிப்பவருக்கும், காய்கறி விற்பவருக்கும், ஆசிரியருக்கும், டாக்டருக்கும் எப்படி அவையெல்லாம் ஒரு தொழிலோ அப்படியே சினிமாவும்....நடிகர்கள் தங்கள் வேலையை செய்கிறார்கள்...உங்களுக்கு பிடித்தால் பாருங்கள்...மக்களுக்கு பிடிக்கவில்லையேல் எப்படிப்பட்ட நாயகனாய் இருந்தாலும் ஓரம்கட்டப்படுவான்...

சிம்புவும், விஜயும் "இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என்று சொல்கிறார்களாம், மாதவ ராஜ் வருத்தப்படுகிறார்...

வேறு என்ன சொல்லச் சொல்கிறீர்கள் சாமி?? "நான் போன படத்துல நடிச்சேன்ல, அதே மாதிரி டான்ஸு, பழிவாங்குறக் கதை, வேற ஒண்ணும் புதுசா இல்ல" என்றா?? எந்த வியாபாரத்தில் இப்படி சொல்கிறார்கள்??

பிரபலமான கதாநாயகர்களுக்கு சமூகப் பார்வை இல்லை என்கிறார்.....அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்ற எல்லோரையும் போலவே தீவிரமான கருத்துக்கள் இருக்கலாம்...அதை படத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?? எம்.ஆர்.ராதா சொல்லியிருக்கலாம்..அவர் காலம் வேறு...இன்றைக்கு விஜயோ, சிம்புவோ எம்.ஆர்.ராதா போல் கருத்து சொன்னால் நீங்கள் படம் பார்ப்பீர்களா? இல்லை அதை கேட்டு யாராவது திருந்தப் போகிறார்களா?? இன்றைக்கும் சாமியாருக்கு பாத பூஜை செய்ய வரிசையில் நிற்கிறார்கள்...பெரியார் சொல்லியும் திருந்தாத இவர்கள் விஜயோ சிம்புவோ சொல்லி திருந்தப் போகிறார்களா?? குஷ்பு சொன்ன ஒரு கருத்துக்கு "பலத்த" வரவேற்பளித்த சமூகம் ஆயிற்றே இது?? தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என்று ரஜினி சொன்ன ஒரு கருத்தால் தானே பல பிரச்சினைகள் எழுந்தது?? ஈழப்பிரச்சினையில் கருத்து சொன்னதால் அல்லவா சீமான் உள்ளே இருக்கிறார்??

கருத்து சொல்லு, சமூகக் கருத்து சொல்லு என்று நடிகர்களை குறை சொல்லுமுன், உங்களையே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்...நடிகர் சொன்னால் நீங்கள் மாறப் போகிறீர்களா? நடிகர் கருத்து சொல்லி அவர் கார், வீடு கொளுத்தப்பட்டால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்??

இரண்டு படம் வெற்றி அடைந்துவிட்டால் போதும், உடனே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள், முதல்வர் ஆக விரும்புகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டு...இதை மாதவராஜ் மட்டும் சொல்லவில்லை...இன்னும் பலர், சுப்ரமணிய சாமியிலிருந்து ராமதாஸ் வரை சமுதாய அதிகாரிகளாய் தங்களை தாங்களே நியமித்துக் கொண்ட பலர் சொல்லுவது இது..

ஆனால், கேள்வி என்னவென்றால்...எந்த ஒரு தொழிலும் வெற்றிப் பெற்ற ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்புவது இயற்கை...அப்படி ஒரு உந்துதல் இல்லாதவர்கள் ஒன்று (உண்மையான) சாமியார்கள் இல்லை ஜடம்... நடிகனாய் வெற்றி பெற்ற ஒருவன் அடுத்த கட்டமாய் அரசியலை நினைப்பது தவறா?? முதல்வராய் ஆக வேண்டும் என்று ஒரு டாக்டருக்கு, ஒரு பேங்கருக்கு, ஒரு எழுத்தாளருக்கு ஆசை வரும்போது நடிகருக்கு வந்தால் என்ன தவறு? மக்களுக்கு விருப்பமிருந்தால் முதல்வர்...இல்லையேல் அடையாளம் காணாது போவார்கள்...சிவாஜியிலிருந்து, ஜானகி அம்மையார், பாக்யராஜ், ராம ராஜன் என்று அரசியலில் தோல்வி அடைந்த பட்டியல் நீளம்...

அடுத்து மாதவராஜ் சொல்லும் குற்றச்சாட்டு, உண்மையில் நடிகர்கள் மீது அல்ல, மக்களையே அவமானப்படுத்துவதாக தோன்றுகிறது..

// மக்களின் ரசனையை ஒரு அங்குலம் கூட உயர்த்தாமல், போட்டதைத் தின்னும் இழிபிறவிகள் போல இந்தக் கதாநாயகர்கள் தமிழ் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். //

விஜய், சிம்பு படம் பார்ப்பவர்களை, இல்லை கமர்ஷியல் படம் பார்ப்பவர்களை குறித்து நீங்கள் சொல்லியிருந்தால், நீங்கள் நடிகர்களை அல்ல, மக்களை இழிபிறவிகள் என்று அழைக்கிறீர்கள்..உங்கள் ரசனைக்கு ஒத்துவராதவர்கள், உங்களைப் போன்றே சிந்தனை இல்லாதவர்கள் இழிபிறவிகள் என்றால், உங்களையும் இன்னும் சிலரையும் தவிர மற்ற எல்லாரும் இழிபிறவிகள் ஆகிவிடுவார்களே??

இது மிக மோசமாக இருக்கிறது....நான் நாசமா போனதுக்கு காரணமே அவன் தான் என்று பொறுப்பை அடுத்தவர் தலையில் சுமத்தும் மனநிலை...ஏன் யாரோ வந்து உங்கள் ரசனையை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? விஜயோ, சிம்புவோ இல்லை எந்த ஒரு நடிகராவது நீங்கள் வேறு படம் பார்க்ககூடாது என்று தடை விதித்தார்களா? இல்லையே?? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் பாருங்கள் ஐயா...அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள்...வியாபாரத்தில் இந்த சரக்கு விற்கும் என்ற எண்ணத்தில் தான் படம் எடுக்கிறார்கள்...விற்காவிட்டால் தோல்வி தான்..

அடுத்து ரசனையை உயர்த்துவது என்றால் என்ன?? யாருடைய ரசனை உயர்ந்த ரசனை? ஜெய மோகனை கேட்கலாமா? சாரு நிவேதிதா? எது உயர்ந்த ரசனை என்று யார் வரையறை செய்வது?? மத்திய அரசா? மாநில அரசா? இல்லை இதற்கென்று ஒரு அமைச்சரை நியமிக்கலாமா?? அதை அறிவு ஜீவிகள் கொண்டு நிரப்பலாமா?? ஓ, மீண்டும் ஒரு பிரச்சினை... அறிவை எதைக் கொண்டு தீர்மானிப்பது??

காலையில் ஆறு மணிக்கு எழுந்து பன்னிரெண்டு மணி நேரம் பஞ்சு மில்லில் வேலைப் பார்ப்பவன் போக்கிரி போல் ஒரு படம் பார்ப்பானா இல்லை வீடு போல் ஒரு படம் பார்ப்பானா? நொந்து நூலாகியிருப்பவன் ஐம்பது ரூபாய் கொடுத்து மற்றவர்கள் நொந்து நூலாவதை பார்க்க வேண்டிய அவசியம் என்ன??

விஜய் படம் பார்ப்பதும், சிம்பு படம் பார்ப்பதும் தாழ்ந்த ரசனை என்று உங்களை நினைக்க வைப்பது எது?? இது உயர்ந்த தரம் இது தாழ்ந்த தரம் என்று எப்படி உங்களால் நிர்ணயிக்க முடிகிறது??? எனக்கு பிடித்தது உயர்ந்த தரம் மற்றவையெல்லாம் தாழ்ந்த தரம் என்றால், அது பாஸிஸத்தின் இன்னொரு முகம் அல்லவா?

அவரவருக்கு பிடித்த படத்தை அவர்கள் பார்க்கிறார்கள்....பிடிக்காவிட்டால் படம் தோல்வி...இதில் இந்த படத்தை தான் பார்க்க வேண்டும், தமிழ் சினிமாவின் கதாநாயகர்களுக்கு அறிவில்லை என்று சொல்ல நீங்கள் யார் நான் யார்?

கடைசியாக ஒன்று....

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!

தொடர்புடைய பதிவுகள்:

தமிழ்ச்சினிமாவில் அறிவற்றவர்கள் கதாநாயகர்கள், கதாநாயகர்களை அறிவற்றவர்கள் என்று சொன்னது தவறா?

61 comments:

பதி said...

பல தளங்களைத் தொட்டுச் செல்கின்றது இந்தப் பதிவு !!!

ஆம், அறிவின் அளவுகோல் என்ன??? ;)

அருண்மொழிவர்மன் said...

உங்கள் பதிவுடன் நிறாஇய இடங்களில் ஒத்துப்போகின்றேன்

துளசி கோபால் said...

அது சரி அது சரின்னு சொல்லவைக்கும் பதிவு.

அடேங்கப்பா!!!!

பழமைபேசி said...

வணக்கம்!

நசரேயன் said...

வணக்கம் அண்ணாச்சி

Sundar சுந்தர் said...

:) அது சரி !

SUREஷ்(பழனியிலிருந்து) said...

(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)

Anonymous said...

சற்றே வித்தியாசமான சிந்தனை உங்களது, ஆனால் மன்னிக்கவும் பல இடங்களில் ஒன்று பட முடியவில்லை...

பேங்க், காய்கறி போன்ற தொழில்களைப் போல் சினிமாவும் தொழிலாக இருந்தாலும், சினிமாவிற்கென்று இருக்கும் மிகப் பெரிய சிறப்பு, அதில் ஏற்படும் பல விஷயங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்வில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது, ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது...

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள், சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கத் தெரிந்த ரசிகர்களுக்குதான் பொருந்துமே ஒழிய, சினிமாவை படு பயங்கரமாக ஆராதிக்கிற ரசிகர்களுக்குப் பொருந்தாது...

நீங்கள் ஒத்துக் கொள்கிறிர்ர்களோ இல்லையோ, சினிமாதான், நன்கு படித்த மனிதர்களின் மனதில் கூட பெண் விடுதலை, திருநங்கைகள் என்று பல விஷயங்களில் மனதில் பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளனர்...

எல்லா தொழில்களிலும், அவர்கள் லாபத்துகாக இயங்கும் உரிமை இருக்கிறது, அதே சமயம் அவர்களுக்குரிய சமூகக் கடமையும் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது (ஒரு மருத்துவர் தான் லட்சக் கணக்கில் பணம் கட்டி படித்தவர் என்பதற்காக காய்ச்சலுக்காக மட்டும் பல மடங்கு பணம் வாங்குவது உரிமையில் சேராது அல்லவா...)

அதேபோல் நீங்கள் சொல்லியிருப்பது, இரண்டு எல்லைகளில் இருந்து பேசுகிறீர்கள், அதாவது அவர்கள் இப்போது இருக்கும்நிலையிலேயே இருப்பது அல்லது மக்களுக்கான ஆக்கப் பூர்வமான போரட்டங்களில் களத்தில் குதிப்பது என்று...

நாம் கேட்பது என்றால் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும், ஆனால் சினிமாவில் நடிகனாக இருக்கும் போது, மக்களின் ரசனையை மேம்படுத்த கொஞ்சமேனாச்சும் ஆக்கப் பூர்வமான முயற்சியை எடுப்பது, அல்லது குறைந்தது, சில மறைமுக எண்ணங்கள் கொடுக்காமல் இருப்பது.....

புரிதலுக்கு நன்றி...

கிரி said...

உண்மையில் மிக சிறப்பான பதிவு.

உங்களுடைய அனைத்து கருத்துகளுடனும் நான் ஒத்து போகிறேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

Anonymous said...

//In the end, we remember not the words of our enemies, but the silence of our friends - Martin Luther King Jr//- நல்லா இருக்கு.

மாதவராஜ் மற்றும் நான் நீங்கள் எல்லாரும் பணம் கொடுத்து படம் பாக்கிறோம்.நீங்கள் நானும் வேண்டுமானால் கணினி தட்டிக்கொண்டு பொழப்பை ஓடிவிடுவோம் ஆனால் ஒருநாள் சம்பளத்தை அப்படியே சினிமா திரைஅரங்கில் கொடுக்கும் மக்களையும் கானமுடிகிரதல்லவா?..அவர்களுக்கு இந்த அறிவிலிகள் என்ன செய்ய போகிறார்கள்.. அதனால் நமக்கு உரிமை உள்ளது விமர்சனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர் அவர் விருப்பம். சொல்வது நமது கடமை..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!

இந்த குரல் நாங்களும் படித்துள்ளோம்..

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

podhigai thendral said...

வணக்கம்.
தொடரட்டும் உங்கள் பயணம்

Anonymous said...

மன்னிக்கவும் பல இடங்களில் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

ஒரு பேங்க் கிளர்க்குக்கோ, காய்கறி விற்பவருக்கோ, மளிகைக் கடைகாரருக்கோ இருக்கும் அதே லைம் லைட்தான் சினிமாக்காரர்களுக்கும் குறிப்பாய் கதாநாயகர்களுக்கும் இருக்கிறதா?

இவர்களில் எவருடைய பிறந்த நாளுக்கு ஊர் ஊராய் தெருத் தெருவாய் போஸ்டர் அடித்து ஒட்டப்படுகிறது. தலைவன் வாழ்க என்று அடித் தொண்டையிலிருந்து குரல் எழுப்பி கோஷமிட கூட்டம் கூடுகிறது.

வாழ்வின் அடிமட்ட நிலையிலிருக்கும் எத்தனையோ பேர் தனது சுய செலவீனங்களை செய்யாமல் தனது நடிகர்களுக்கு விளம்பரமென்று செலவு செய்து விட்டு இன்னமும் அடிமட்டத்திலேயே இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யோசிக்கையில் போதைப் பழக்கத்திற்கும் இந்த நடிகர்களின் மீதான பித்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

பெண்களை கேவலமாய், ரசிகர்களின் உள் விகாரங்களிற்கு தீனி போடும் வகையிலே அங்க அசைவுகளையும், விரக தாபங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் நடிக்க மாட்டேன் / இயக்க மாட்டேன் என்று எத்தனை நடிகக்ர்கள் / இயக்குநர்கள் சொல்லுவார்கள்.

விபச்சாரத்திற்கு அடுத்த படியாய் வேறு எந்தத் தொழிலில் பெண்கள் போகப்பொருளாய் மட்டுமே பார்க்கப் படுகிறார்கள். உலகத் திருத்த கிளம்பிப் போகின்ற கதாநாயகன் தான் சார்ந்த துறையை திருத்த நினைக்காவிடின் அவன் மேல் ஏன் விமர்சனம் செய்யக் கூடாது?

ஒரு பிரபல கதாநாயகன் நடிக்கும் படத்தின் தயாரிப்புச் செலவில் ஏறக்குறைய பாதி அவனது சம்பள இத்யாதிகளுக்காகவே செலவாகிறது. அதிக செலவுகளுடன் எடுக்கப்படும் படம் லாபம் ஈட்ட வேண்டி அதிக விலையில் வினியோகஸ்தர்களுக்கும் தொடர்ச்சியாக தியேட்டர்களுக்கும் கொடுக்கப் படுகிறது. தான் லாபம் ஈட்ட அதிக பட்ச விலையில் டிக்கட்டுகள் பார்வையாளார்களின் தலையில் கட்டப் படுகின்றது.

பார்வையாளர்கள் மட்டுமே பாதிக்கப்படும் இத் தொடர் நிகழ்வின் தொடக்கப் புள்ளி எங்கிருக்கிரது?

காவிரி நீர் பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை, ஜெயமோகன் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்காக மேடை போட்டு கூட்டம் கூட்டி சத்தம் போட்டது பாங்க் உத்தியோகஸ்தர்களா, மாடு மேய்ப்பவர்களா? காய்கறி விற்பவர்களா? பொதுப் பிரச்சினைகள் குறித்து வாய் திறக்கும் எவருக்கும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

இந்த மாதிரி படம் இதுவரை உலகத்திலேயே வந்ததில்லை. இது பயங்கர வித்தியாசமான படம் என்று பேரரசுவும் பரத்தும் ஒன்றாய் உட்கார்ந்துக் கொண்டு அரைமணி நேரம் தொடர்ச்சியாய் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அதையும் ரசிக்க ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் அது இன்னமும் சி(ப)லருக்கு கேனைத்தனமாகத்தான் பட்டுக் கொண்டிருக்கிறது.

அட எல்லாத்தையும் விடுங்க. எத்தனை பேங்க்காரர்கள் / உத்தியோகஸ்தர்கள் / காய்கறி காரர்கள் / இப்போதிருந்தே இன்னும் சில காலம் கழித்து அரசியலில் குதிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்?

என்னைப் பொறுத்த வரை தான் சார்ந்த துறையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சிறு முயற்சியைக் கூட செய்யாதவன் அல்லது செய்ய விரும்பாதவன் மோசமானவனே.

ராஜ நடராஜன் said...

தமிழ் சமூகத்தில் முக்கியமான ஒரு அங்கமான சினிமாவை மாதவராஜும்,நீங்களும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது வரவேற்க தக்கது.

நான் மாதவராஜ் கட்சி வக்கீலாய் உங்களை அப்புறமா வந்து சந்திக்கிறேன்:)

Anonymous said...

சொல்ல மறந்த ஒன்று.

//சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!//

இந்த வரிகளுக்கு மேலே உள்ளவற்றை உங்களது தனிப்பட்ட கருத்துக்கள் என்ற முறையிலே மாற்றுப் பார்வையாயினும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்தக் குறளின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீகள். விமர்சனம் தவறா? தீவிரமாய் விமர்சனமே செய்யக் கூடாதா? இல்லை திரைத் துறையில் இருப்பவர்தான் இன்னொரு படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமா? அல்லது ஒரு படத்தை விமர்சனம் செய்பவர் குறைந்த பட்சம் ஒரு குறும்படத்தையாவது எடுத்திருக்க வேண்டுமா? ரொம்ப தீவிரமாய் எழுதிக் கொண்டே வரும் போது இந்த வரிகளும் சேர்ந்து வந்து விழுந்து விட்டன என்றுதான் தோன்றுகிறது.

ஒவ்வொரு பட வெளியீட்டு விழாக்களின் போதும் நாயகன் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு, மியூசிக் டைரக்டரு 3 நாள் தூங்காம இருந்து மியூசிக் போட்டாரு. ஹீரோவும் ஹீரோயினும் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட லொக்கேஷனை கண்டு பிடிக்க டைரக்டர் நாய் படாத பாடு பட்டு ரொம்ப கஷ்டப்பட்டு நியூசிலாந்தில லொக்கேஷனைக் கண்டுபிடிச்சாங்க என்பது மாதிரியான அபத்தமான பேட்டிகளைப் படிக்கும் போதும் பார்க்கும் போதும் 'என்னமோ காசே வாங்காம செஞ்சு கொடுக்கற மாதிரி ஏன் இவ்வளவு அலட்டல்? லட்ச லட்சமாய், கோடி கோடிகளாய் வாங்கறீங்க இல்லை. கொஞ்சமாச்சும் மெனக்கெடுங்களேன்" என்றும் யப்பா யாராவது கொஞ்சம் நார்மலாதான் பேட்டி கொடுங்களேன்பா என்றுதான் கத்தத் தோன்றுகிறது. :)

Anonymous said...

நல்ல எழுத்து ந்டை இருக்கிறது. ஆனால் ரொம்பக் குறுகலான பார்வை. பண்படாத கருத்துக்கள்.
ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லியே ஆக வேண்டும் என்ற வேகம் மட்டுமே தெரிகிறது.

//சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?? //

சத்தம் போட்டுச் சிரிக்க வைத்தீர்கள்!

ராஜ நடராஜன் said...

//சினிமா என்பது வியாபாரம்...வியாபாரம் மட்டுமே...ஒரு பேங்கருக்கும், மீன்பிடிப்பவருக்கும், காய்கறி விற்பவருக்கும், ஆசிரியருக்கும், டாக்டருக்கும் எப்படி அவையெல்லாம் ஒரு தொழிலோ அப்படியே சினிமாவும்..//

வியாபாரத்திலும் ஒரு Business ehtics இருக்கணுங்க.நேத்தைக்கு கோவையில் மதுக்கரையில் ஒரு உணவகத்தில் காக்கா பிரியாணி போட்டுட்டாங்களாம்.வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ன்னு எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா?

நடிகன் என்பதை விட திரை உலகிற்கு ஒரு சமூக அக்கறை இருக்க வேண்டும்.அந்த சமூக அக்கறையே மேலே சொன்ன வியாபார நீதி.

ராஜ நடராஜன் said...

//சிம்புவும், விஜயும் "இது வரைக்கும் தமிழில் வந்திராத டிஃப்ரண்டான மூவி இது, இதுவரை நான் நடித்திராத டிஃபரண்டான கேரக்டர் இது, தமிழ்ச் சினிமாவுல ரொம்ப வித்தியாசமா என்னைப் பாக்கப் போறீங்க” என்று சொல்கிறார்களாம், மாதவ ராஜ் வருத்தப்படுகிறார்... //

வியாபாரத்தை விளம்பரப் படுத்தட்டும்.தவறில்லை.ஆனால் விளம்பரப்படுத்திய மாதிரி பொருளும் தரமாய் இருக்கவேண்டும் என நுகர்வோன் நினைப்பதில் என்ன தவறு?

(தரத்திற்கும் என்ன அளவுகோல் எனக் கேட்டு விடாதீர்கள்:)

கடையில் என்ன விற்குதோ அதைத்தானே வாங்க முடியும்!

ராஜ நடராஜன் said...

//பிரபலமான கதாநாயகர்களுக்கு சமூகப் பார்வை இல்லை என்கிறார்.....அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்ற எல்லோரையும் போலவே தீவிரமான கருத்துக்கள் இருக்கலாம்...//

சட்டியில இருந்தாதான் அகப்பையில் வரும்:)

ராஜ நடராஜன் said...

//பெரியார் சொல்லியும் திருந்தாத இவர்கள் விஜயோ சிம்புவோ சொல்லி திருந்தப் போகிறார்களா??//

அந்த மனுசன் பாவம் தள்ளாத வயசிலும் வண்டி கட்டிகிட்டு ஊர் ஊரா பெரிய மைதானம் எங்க கிட்டும்ன்னு சுத்திகிட்டிருந்தாரு.நடிகர்கள் வீட்டுக்குள்ளேயல்லவா புகுந்து விடுகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

குஷ்பு,ரஜனி,சீமான் எழுத்தில் உடன்படுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//விஜய் படம் பார்ப்பதும், சிம்பு படம் பார்ப்பதும் தாழ்ந்த ரசனை என்று உங்களை நினைக்க வைப்பது எது??//

என்னைப் பொருத்தவரையில் ரசிகன் தான் என்னோட பலம்டா போன்ற பாடல்களும்,நடிப்பின் முகபாவங்களும்,ரஜனி சார் பண்ணினார்ன்னு அடிக்கிற காப்பியும்,முட்டாள்தனமான டெய்லர் தைச்ச கதைகளும்.

ராஜ நடராஜன் said...

//இரண்டு படம் வெற்றி அடைந்துவிட்டால் போதும், உடனே அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள், முதல்வர் ஆக விரும்புகிறார்கள் என்று அடுத்த குற்றச்சாட்டு...இதை மாதவராஜ் மட்டும் சொல்லவில்லை.//

என்னைப் பொறுத்தவரையில் கலைஞரின் சகுனித்தனத்தால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததே தவறு.அதைத் தொடர்ந்து ஜெயலலிதா என்னும் சூறாவளி.இவர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட இப்போதைய விஜயகாந்த்,சரத்குமார் யாரும் நம்பிக்கை ஊட்டவில்லை.தகப்பனார்களின் உழைப்பால் உயர்ந்து இப்பொழுதிருந்தே சிலர் உரம் போட்டு செடி வளர்த்துக்கொண்டுள்ளார்கள். சமூக உழைப்பால் சமூக சிந்தனையோடு யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கப்பட வேண்டியதே.ஆனால் சினிமாவில் நடிப்பது அரசியலில் புகுவதற்கு குறுக்கு வழி என்ற எழுதப்படா விதி மாற்றப்படவேண்டும்.

ராஜ நடராஜன் said...

எந்த ஒரு விவாதத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் அது சரி என்ற நீதியும் நியாயமும் எங்கோ மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.அதைக் கண்டுபிடிப்பது பதிவுப் பக்கம் வருபவர்களின் பொறுப்பு.

(ஆமா!சில பெருந்தகைகள் வந்தேன்,வணக்கம் சொல்லி ஓடிப் போய் விடுகிறார்களே அது ஏன்:))

Anonymous said...

இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..
தமிழ் படங்களுக்கு தமிழிலில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன் பிரச்சினை நடந்ததே...
சண்டியர் என்று தமிழில் பெயர் வைத்தும் கூட சாதி சாயம் பூசி விருமாண்டி என்று மாற்ற வைத்தவர்கள் தான் நாம்.

இதைப் பற்றி சத்யராஜ் மகாநடிகன் ஒரு படத்தில் காட்டமாக வசனம் பேசியிருப்பார். "ஏன்டா உங்க கட்சி பேரை நீங்க இப்படி வைக்க கூடாது என்று நாங்க (நடிகர்கள்) என்னிக்காவது சொல்லியிருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா படத்தோட பேரை மாத்த சொல்றீங்க?" என்று.

அருமையான பதிவு நண்பரே.. இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..
தமிழ் படங்களுக்கு தமிழிலில் தான் பேர் வைக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன் பிரச்சினை நடந்ததே...
சண்டியர் என்று தமிழில் பெயர் வைத்தும் கூட சாதி சாயம் பூசி விருமாண்டி என்று மாற்ற வைத்தவர்கள் தான் நாம்.

இதைப் பற்றி சத்யராஜ் மகாநடிகன் ஒரு படத்தில் காட்டமாக வசனம் பேசியிருப்பார். "ஏன்டா உங்க கட்சி பேரை நீங்க இப்படி வைக்க கூடாது என்று நாங்க (நடிகர்கள்) என்னிக்காவது சொல்லியிருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா படத்தோட பேரை மாத்த சொல்றீங்க?" என்று.

அருமையான பதிவு நண்பரே..

குடுகுடுப்பை said...

சினிமா நடிகர்கள் எதை வேண்டுமானாலும் வியாபாரமாக்கலாம். அதே வியாபாராத்தை அரசியலுக்கும் முதலீடாக்குவது.போலி நம்பிக்கைகளை தருவது ஏற்றுக்கொள்ள முடியாது.இரண்டிற்கும் தனித்தனி அளவுகோள் வேண்டும். ஒரு டாக்டர் தன் தொழிலை அரசியல் மூலதனமாக்குவதில்லை. (உம்)இரண்டு அரசியல் நிஜ டாக்டர்கள். தன் தொழிலை பயன்படுத்தி மூளைச்சலைவை செய்து அரசியல் செய்வது தவறு.

Anonymous said...

//இந்த குரல் நாங்களும் படித்துள்ளோம்..//

மன்னிக்க வேண்டும் "குறள் ".

உங்களின் பதிவை நீங்களே மீண்டும் படித்து பாருங்கள்..

தோழமையுடன்

முகமது பாருக்

Good citizen said...

மாதவராஜ் ஒரு மறியாதைகுறிய பதிவர்,அவர் சொல்ல வந்ததைச் சரியாக சொல்லவில்லை என்பதுதான் என் கருத்து.அவர் சொல்ல வந்தது தமிழ் சினிமாவின் தரம் என்பது என் கணிப்பு.அதை அவர் நடிகர்கள் அறிவிளிகள் அதுஇது என்றுகுழப்பிவிட்டார்.அவருக்கு நானிட்டப் பீன்னூட்டத்தில் நான் உங்கள் கருத்தை ஒத்துக்கொள்வது போலத்தான் பதிலிட்டிருக்கிறேன்
ஆனால் முற்றிலும்ல்ல. பிழைப்பு
என்பதற்காக எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என்பதை என்னாலும்
ஏற்றுக்கொள்ள முடியாது.ராஜ நடராஜன் கேட்டிருகிறார் பாருங்கள் ஒரு கேள்வி.வியாபரம் என்பதற்காக
பிரியானிக்கு பதில் காக்காய் பிரியானி போட்டால் சரியா என்று ,,சரியான கேள்வி,ஒரு தலைச்சிறந்த நடிகன்
இந்த சமுதாயத்தைப் பலவிதங்களில்
பாதிப்படைய செய்கிறான்,,உடை,
நடை, ஸ்டைல் ,மேண்ரிசம் என்று
பல பாதிப்புகள்....
ஆனால் நடிகன் என்பது ஒரு உயற்ந்த பதவி.அதற்கு கண்டிப்பாய் ஒரு சமுதாயப் பார்வை வேண்டும்
நீங்கள் சொல்வதுபோல் பொழுதுப்
போக்கு என்பற்காக நடிகன் அவிந்த்து
போட்டுக்கூட ஆடுவான் நீங்கள் ஏன்
பார்க்கிறீர்கள் என்று கேட்பது சமுதாய பார்வை ஆகாது.
உங்களுக்கு திருமாணமாகிவிட்டதா?
குழந்தைகள் உள்ளதா? நாளைக்கு
உங்கள் மகன் சினிமாவின் பதிபபால்
உங்களுக்கு முன்னால் சிகிரட்டைத்
தூக்கிப் போட்டுப் பிடித்தால் ஏற்றுக்
கொள்வீர்களா?
மற்றப்படி நடிகனுக்கு அறிவு,திறமை
போன்ற கருத்துகளில் நான் உங்கள்
கருத்தோடு ஒத்துப்போகிறேன்
சினிமா மாற வேண்டுமெறால்
சமுதாயத் தரம் மற வெண்டும்
அதற்கு நடிகனோடு நாமும் மாற
வேண்டும்

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Good different analysis.

Directly the violence shown in movies is shaping the attitude towards violence as code of conduct to be "Hero", is developed. Common public looks at the charcterisation of an actor and never goes into person's attibutes of an Actor. Yes MGR was viewed as saviour, one who will come and save common man, poor, woman when troubled by villain. MGR's songs with high moral values have never reached the public, if it would have been then the responsbility of common public would have gone up valuing man's dutry to save, take care of mother, father at old age, take care of sister.

Periyar for how long you guys are going to hold the flag of Periyar Periyar, Was there any other person to hurt the feelings of a person by verbally abusing better than Him till now. Periyar is still not a better radical leader always to a major part of his level. Ofcourse his earlier day strategies and focus is really more power oriented. First of all who is he to call a common man as "fool", could he change any one by simply using slogans like, "Kadavulai nambukiravan muttal". His own strategy to use this powerful abusinve language resulted in no change except hypocratci politician here his own beliefs failed worse than a common man who belives in God, super natural power.

ப்ரியமுடன் வசந்த் said...

nuchunn nethi pottula adikkura maathiri sonneenga pathivu eluthuravan mattum arivaaliyilla

என்.இனியவன் said...

அட உங்கட கருத்து நல்லா இருக்கே.

Mahesh said...

அது (எல்லாமே) சரி !!

அது சரி(18185106603874041862) said...

//
பதி said...
பல தளங்களைத் தொட்டுச் செல்கின்றது இந்தப் பதிவு !!!

ஆம், அறிவின் அளவுகோல் என்ன??? ;)
24 March 2009 22:04
//

வாங்க பதி...

அறிவின் அளவுகோல் என்னன்னு எனக்கும் தெரியலீங்க...தெரிஞ்சா ஏன் இவ்ளோ பெரிய பதிவு போட்றேன்?? :0)

அது சரி(18185106603874041862) said...

//
அருண்மொழிவர்மன் said...
உங்கள் பதிவுடன் நிறாஇய இடங்களில் ஒத்துப்போகின்றேன்

24 March 2009 22:39
//

நன்றி அருண்மொழிவர்மன்...

அது சரி(18185106603874041862) said...

//
துளசி கோபால் said...
அது சரி அது சரின்னு சொல்லவைக்கும் பதிவு.

அடேங்கப்பா!!!!

25 March 2009 00:15
//

டீச்சரே அதுசரின்னு சொல்லிட்டாங்க...இனிமே எத்தினி பேரு எவ்ளோ திட்டினாலும் பரவாயில்ல...:0)

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
வணக்கம்!

25 March 2009 00:36
//

வணக்கமுங்க _/\_

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
வணக்கம் அண்ணாச்சி
//

வணக்கமுங்க _/\_

அது சரி(18185106603874041862) said...

//
Sundar said...
:) அது சரி !

25 March 2009 01:26

//

வாங்க சுந்தர்...:0))

அது சரி(18185106603874041862) said...

//
SUREஷ் said...
(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)

25 March 2009 01:55
//

படிச்சேங்க...ஆனா நீங்க கடைசியா கேட்ருக்க கேள்விக்கு எனக்கு விடை தெரியலை..

அது சரி(18185106603874041862) said...

//
நரேஷ் said...
சற்றே வித்தியாசமான சிந்தனை உங்களது, ஆனால் மன்னிக்கவும் பல இடங்களில் ஒன்று பட முடியவில்லை...
//

கருத்து மாறுபாடு இருந்தா தப்பே இல்லீங்க...

//
பேங்க், காய்கறி போன்ற தொழில்களைப் போல் சினிமாவும் தொழிலாக இருந்தாலும், சினிமாவிற்கென்று இருக்கும் மிகப் பெரிய சிறப்பு, அதில் ஏற்படும் பல விஷயங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்வில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது, ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது...

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள், சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்கத் தெரிந்த ரசிகர்களுக்குதான் பொருந்துமே ஒழிய, சினிமாவை படு பயங்கரமாக ஆராதிக்கிற ரசிகர்களுக்குப் பொருந்தாது...

நீங்கள் ஒத்துக் கொள்கிறிர்ர்களோ இல்லையோ, சினிமாதான், நன்கு படித்த மனிதர்களின் மனதில் கூட பெண் விடுதலை, திருநங்கைகள் என்று பல விஷயங்களில் மனதில் பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளனர்...

எல்லா தொழில்களிலும், அவர்கள் லாபத்துகாக இயங்கும் உரிமை இருக்கிறது, அதே சமயம் அவர்களுக்குரிய சமூகக் கடமையும் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது (ஒரு மருத்துவர் தான் லட்சக் கணக்கில் பணம் கட்டி படித்தவர் என்பதற்காக காய்ச்சலுக்காக மட்டும் பல மடங்கு பணம் வாங்குவது உரிமையில் சேராது அல்லவா...)

அதேபோல் நீங்கள் சொல்லியிருப்பது, இரண்டு எல்லைகளில் இருந்து பேசுகிறீர்கள், அதாவது அவர்கள் இப்போது இருக்கும்நிலையிலேயே இருப்பது அல்லது மக்களுக்கான ஆக்கப் பூர்வமான போரட்டங்களில் களத்தில் குதிப்பது என்று...

நாம் கேட்பது என்றால் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும், ஆனால் சினிமாவில் நடிகனாக இருக்கும் போது, மக்களின் ரசனையை மேம்படுத்த கொஞ்சமேனாச்சும் ஆக்கப் பூர்வமான முயற்சியை எடுப்பது, அல்லது குறைந்தது, சில மறைமுக எண்ணங்கள் கொடுக்காமல் இருப்பது.....

புரிதலுக்கு நன்றி...

25 March 2009 03:06
//

சினிமாவுக்கு இந்த ஸ்பெஷல் அந்தஸ்து கொடுத்தது நாம் தான் இல்லையா?? காவிரிப் பிரச்சினை, ஈழப்பிரச்சினை என்று பல பிரச்சினைகளுக்கு ஏன் டாக்டர்கள் சங்கத்திடமோ, டீச்சர்கள் சங்கத்திடமோ, மில் முதலாளிகள் சங்கத்திடமோ ஏன் யாரும் கருத்து கேட்பதில்லை??

சினிமாவுக்கு கொடுக்கும் இந்த சிறப்பு மரியாதையை நிறுத்தினாலே நீங்கள் சொல்லும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படலாம்..

மக்களுக்கு பிடித்தது தான் அவர்களது ரசனை...இதில் எதை மேம்படுத்துவது?? போக்கிரி போன்ற படங்களும் சூப்பர் ஹிட்டாகிறது...ஆனால் அடி, தடி, சண்டை, பஞ்ச் டயலாக் இல்லாத ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களும் வெற்றி அடைகிறது...இதில் எந்த ரசனையை எங்கே உயர்த்த??

அது சரி(18185106603874041862) said...

//
கிரி said...
உண்மையில் மிக சிறப்பான பதிவு.

உங்களுடைய அனைத்து கருத்துகளுடனும் நான் ஒத்து போகிறேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

25 March 2009 05:40
//

வருகைக்கு நன்றி கிரி...புரிதலுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி...

குடுகுடுப்பை said...

கவுஜ எழுதிருக்கேன் அப்படியே குகு பார்ட் 2 போட்டிருக்கேன். படிச்சு புரிந்து கொள்ளவும்.

அது சரி(18185106603874041862) said...

//
முகமது பாருக் said...
//In the end, we remember not the words of our enemies, but the silence of our friends - Martin Luther King Jr//- நல்லா இருக்கு.

மாதவராஜ் மற்றும் நான் நீங்கள் எல்லாரும் பணம் கொடுத்து படம் பாக்கிறோம்.நீங்கள் நானும் வேண்டுமானால் கணினி தட்டிக்கொண்டு பொழப்பை ஓடிவிடுவோம் ஆனால் ஒருநாள் சம்பளத்தை அப்படியே சினிமா திரைஅரங்கில் கொடுக்கும் மக்களையும் கானமுடிகிரதல்லவா?..அவர்களுக்கு இந்த அறிவிலிகள் என்ன செய்ய போகிறார்கள்.. அதனால் நமக்கு உரிமை உள்ளது விமர்சனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர் அவர் விருப்பம். சொல்வது நமது கடமை..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!

இந்த குரல் நாங்களும் படித்துள்ளோம்..

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)
//

வாங்க முகமது பாருக்...உங்கள் கருத்துக்கு நன்றி...

//
ஆனால் ஒருநாள் சம்பளத்தை அப்படியே சினிமா திரைஅரங்கில் கொடுக்கும் மக்களையும் கானமுடிகிரதல்லவா?..அவர்களுக்கு இந்த அறிவிலிகள் என்ன செய்ய போகிறார்கள்..
//

என்னங்க இப்படி கேக்கறீங்க?? அவங்களுக்கு பிடிச்சி தான படம் பார்க்கப் போறாங்க?? ரெண்டு படம் நல்லா இல்லாட்டி அப்புறம் அந்த ஹீரோ படத்தைப் பார்க்க அவங்களே போக மாட்டாங்க...பணம் கொடுப்பது படம் பார்க்கத் தான?? அப்புறம் எதுக்கு நடிகர்கள் எதுனா செய்யணும்னு எதிர்பார்க்க முடியும்??

படம் பார்க்கிறதே ஒரு வகை மது மாதிரி தான்....ஒரு மூணு மணி நேரம் கவலையை மறந்து இருக்கறதுக்கு...படத்தையும் பார்த்துட்டு, அப்புறமும் நடிகர்கள் எதுனா செய்யணும்னு எப்படிங்க கேக்கிறது??

அது சரி(18185106603874041862) said...

//
podhigai thendral said...
வணக்கம்.
தொடரட்டும் உங்கள் பயணம்

25 March 2009 06:25
//

வருகைக்கு நன்றி பொதிகைத் தென்றல்...

முடிஞ்ச அளவுக்கு தொடர ட்ரை பண்றேன் :0))

அது சரி(18185106603874041862) said...

//
நந்தா said...
மன்னிக்கவும் பல இடங்களில் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
//

மொதல்ல வருகைக்கு நன்றி நந்தா...அடுத்து உங்கள் கருத்து மிக்க நன்றி..
//

//
ஒரு பேங்க் கிளர்க்குக்கோ, காய்கறி விற்பவருக்கோ, மளிகைக் கடைகாரருக்கோ இருக்கும் அதே லைம் லைட்தான் சினிமாக்காரர்களுக்கும் குறிப்பாய் கதாநாயகர்களுக்கும் இருக்கிறதா?
//

ரேஸில் ஓடுகிற குதிரைக்கு அதிக விளம்பரம் இருக்கத்தான் செய்யும் நந்தா...அவர்களுக்கே மார்க்கெட் போனால் சீந்துவாரில்லாமல் போகிறார்களே??

//
இவர்களில் எவருடைய பிறந்த நாளுக்கு ஊர் ஊராய் தெருத் தெருவாய் போஸ்டர் அடித்து ஒட்டப்படுகிறது. தலைவன் வாழ்க என்று அடித் தொண்டையிலிருந்து குரல் எழுப்பி கோஷமிட கூட்டம் கூடுகிறது.

வாழ்வின் அடிமட்ட நிலையிலிருக்கும் எத்தனையோ பேர் தனது சுய செலவீனங்களை செய்யாமல் தனது நடிகர்களுக்கு விளம்பரமென்று செலவு செய்து விட்டு இன்னமும் அடிமட்டத்திலேயே இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யோசிக்கையில் போதைப் பழக்கத்திற்கும் இந்த நடிகர்களின் மீதான பித்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
//

இது நடிகர்களின் தவறா இல்லை அப்படி பித்து பிடித்து இருப்பவர்கள் தவறா?? தவிர, நான் இதைக் குறித்து பெரிதாய் பதிவில் சொல்லவில்லை...வேண்டுமானால் இன்னொரு முறை, இன்னொரு பதிவில்...

//
பெண்களை கேவலமாய், ரசிகர்களின் உள் விகாரங்களிற்கு தீனி போடும் வகையிலே அங்க அசைவுகளையும், விரக தாபங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் நடிக்க மாட்டேன் / இயக்க மாட்டேன் என்று எத்தனை நடிகக்ர்கள் / இயக்குநர்கள் சொல்லுவார்கள்.

விபச்சாரத்திற்கு அடுத்த படியாய் வேறு எந்தத் தொழிலில் பெண்கள் போகப்பொருளாய் மட்டுமே பார்க்கப் படுகிறார்கள். உலகத் திருத்த கிளம்பிப் போகின்ற கதாநாயகன் தான் சார்ந்த துறையை திருத்த நினைக்காவிடின் அவன் மேல் ஏன் விமர்சனம் செய்யக் கூடாது?
//

இந்த கேள்விக்கு சிம்பிளான பதில்...இந்திய படங்களில் ஆங்கில படங்களில் வருவது போன்ற படுக்கையறைக் காட்சிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன...ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் காதல் ஏற்படுகிறது என்ற இயல்பான விஷயத்தை அவர்கள் ஒரு டின்னர் முடிந்து படுக்கையறையை காட்டி முடித்து விடுகிறார்கள்...ஆனால் அந்த வழியில்லாததால் இந்திய படங்களில் இது போன்ற விரக தாப பாடல் காட்சிகள்..

பெண்கள் போகப் பொருளாக காட்டுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...ஆண்/பெண் உடற்கவர்ச்சி என்ற இயற்கையான விஷயத்தை மிகைப்படுத்தி காட்டுகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்...

//
ஒரு பிரபல கதாநாயகன் நடிக்கும் படத்தின் தயாரிப்புச் செலவில் ஏறக்குறைய பாதி அவனது சம்பள இத்யாதிகளுக்காகவே செலவாகிறது. அதிக செலவுகளுடன் எடுக்கப்படும் படம் லாபம் ஈட்ட வேண்டி அதிக விலையில் வினியோகஸ்தர்களுக்கும் தொடர்ச்சியாக தியேட்டர்களுக்கும் கொடுக்கப் படுகிறது. தான் லாபம் ஈட்ட அதிக பட்ச விலையில் டிக்கட்டுகள் பார்வையாளார்களின் தலையில் கட்டப் படுகின்றது.

பார்வையாளர்கள் மட்டுமே பாதிக்கப்படும் இத் தொடர் நிகழ்வின் தொடக்கப் புள்ளி எங்கிருக்கிரது?
//

இதைத் தான் நான் வியாபாரம் என்று சொல்கிறேன்..மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் இருக்கும் பொருளுக்கு, சினிமா என்று மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இப்படித் தான் நடக்கிறது...சென்னையில் ரியல் எஸ்டேட் என்ன விலை??

//
காவிரி நீர் பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை, ஜெயமோகன் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்காக மேடை போட்டு கூட்டம் கூட்டி சத்தம் போட்டது பாங்க் உத்தியோகஸ்தர்களா, மாடு மேய்ப்பவர்களா? காய்கறி விற்பவர்களா? பொதுப் பிரச்சினைகள் குறித்து வாய் திறக்கும் எவருக்கும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
//

வாய் திறக்கும் பட்சத்தில் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை...ஆனால், அவர்கள் வாய் திறந்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல என்பது தான் என் கருத்து..

//
இந்த மாதிரி படம் இதுவரை உலகத்திலேயே வந்ததில்லை. இது பயங்கர வித்தியாசமான படம் என்று பேரரசுவும் பரத்தும் ஒன்றாய் உட்கார்ந்துக் கொண்டு அரைமணி நேரம் தொடர்ச்சியாய் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அதையும் ரசிக்க ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் அது இன்னமும் சி(ப)லருக்கு கேனைத்தனமாகத்தான் பட்டுக் கொண்டிருக்கிறது.
//

அட என்னங்க நீங்க...அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க...ஏன்னா அவங்களுக்கு அவங்க பொருள் விக்கணும்...அது விளம்பரம்...உதறிட்டு போங்க...

//
அட எல்லாத்தையும் விடுங்க. எத்தனை பேங்க்காரர்கள் / உத்தியோகஸ்தர்கள் / காய்கறி காரர்கள் / இப்போதிருந்தே இன்னும் சில காலம் கழித்து அரசியலில் குதிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்?

என்னைப் பொறுத்த வரை தான் சார்ந்த துறையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சிறு முயற்சியைக் கூட செய்யாதவன் அல்லது செய்ய விரும்பாதவன் மோசமானவனே.
//

நல்ல கேள்வி...பேங்க் மேனேஜர் அடுத்து ரீஜினல் மேனேஜராக ப்ளான் பண்ணலாம்...காய்கறி விக்கிறவரு அடுத்து சூப்பர் மார்க்கெட் திறக்க யோசிக்கலாம்....அது அவர்களது அடுத்தக் கட்டம் என்று அவர்களே தீர்மானிப்பது....அது போல நடிகன் தனது அடுத்தக் கட்டம் அரசியல் என்று தீர்மானித்தல் அதில் தவறென்ன?? மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் முடிந்து விட்டது....

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
தமிழ் சமூகத்தில் முக்கியமான ஒரு அங்கமான சினிமாவை மாதவராஜும்,நீங்களும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது வரவேற்க தக்கது.

நான் மாதவராஜ் கட்சி வக்கீலாய் உங்களை அப்புறமா வந்து சந்திக்கிறேன்:)

25 March 2009 06:53
//

விவாதிக்கும் நோக்கமெல்லாம் இல்லீங்கண்ணா... நேற்று அவர் பதிவை படித்தேன்...அவர் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை...சரி யார்னா பின்னூட்டத்தில் சொல்லியிருப்பாங்கன்னா, யாரும் சொல்லலை...சரி நாமளாவது சொல்லுவோம்னு அவர் பதிவில் பின்னூட்டம் இட எழுதியது இது...அவரது பதிவை விட மிக நீளமாக ஆகிவிட்டதால் தனியே போட வேண்டியதாகி விட்டது...

பிடிக்காவிட்டால் படம் பார்க்க மாட்டேன்...அதனால சினிமா பற்றி விவாதித்து என்ன செய்வது??

அது சரி(18185106603874041862) said...

//
நந்தா said...
சொல்ல மறந்த ஒன்று.

//சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!//

இந்த வரிகளுக்கு மேலே உள்ளவற்றை உங்களது தனிப்பட்ட கருத்துக்கள் என்ற முறையிலே மாற்றுப் பார்வையாயினும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்தக் குறளின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீகள். விமர்சனம் தவறா? தீவிரமாய் விமர்சனமே செய்யக் கூடாதா? இல்லை திரைத் துறையில் இருப்பவர்தான் இன்னொரு படத்தை விமர்சனம் செய்ய வேண்டுமா? அல்லது ஒரு படத்தை விமர்சனம் செய்பவர் குறைந்த பட்சம் ஒரு குறும்படத்தையாவது எடுத்திருக்க வேண்டுமா? ரொம்ப தீவிரமாய் எழுதிக் கொண்டே வரும் போது இந்த வரிகளும் சேர்ந்து வந்து விழுந்து விட்டன என்றுதான் தோன்றுகிறது.
//

நந்தா,

மிக நிச்சயமாய் சொல்கிறேன்...யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற அர்த்தத்தில் நான் அந்த குறளை எழுதவில்லை...அந்த குறளின் அர்த்தம், எனக்கு தெரிந்த அளவில், சொல்வது ரொம்ப ஈஸி, ஆனா செய்யுறது தான் கஷ்டம்...

அது போல, சமூக பிரச்சினைகளில், சமூக பார்வையுடன் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்வது எளிது...ஆனால், நடிகர்களோ இல்லை மற்ற பிரபலங்களோ சமூக கருத்துகள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையிலா தமிழ்நாட்டு சமூக சூழ்நிலை இருக்கிறது??

சாதிக் கொடுமைகளைப் பற்றி, விஜயோ இல்லை வேறு ஒரு நடிகரோ குரல் கொடுத்தால் என்ன நடக்கும்?? ஏதாவது ஒரு ஜாதிக் காரர்கள் அவர் படம் ஓடும் தியேட்டரை அடித்து நொறுக்குவார்கள்...படப்பெட்டியை கடத்திக் கொண்டு ஓடுவார்கள்...என் ஜாதியை அவமானப்படுத்தி விட்டார் என்று அவருக்கு ஃபட்வா விதிப்பார்கள்....

இப்படி ஒரு சூழ்நிலையில், அவர்களுக்கு கருத்து இருந்தாலும் சொல்ல முடியுமா??

இதைச் சொல்லத்தான் அந்த குறள்...

அது சரி(18185106603874041862) said...

//
Deepa said...
நல்ல எழுத்து ந்டை இருக்கிறது. ஆனால் ரொம்பக் குறுகலான பார்வை. பண்படாத கருத்துக்கள்.
ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லியே ஆக வேண்டும் என்ற வேகம் மட்டுமே தெரிகிறது.

//சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?? //

சத்தம் போட்டுச் சிரிக்க வைத்தீர்கள்!

25 March 2009 07:10
//

வாங்க தீபா...

குறுகலான பார்வை...பண்படாத கருத்துக்கள்...எனக்கு தோன்றியதை எழுதினேன் என்பதால் அது எப்படி இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...ஆனால், ஏட்டிக்கு போட்டியாக சொல்லி சாதிக்கப் போவது என்ன??

அறிவை அளப்பதற்கு அளவு கோல் என்ன என்பதையும், எது தரம், எது தரமில்லை என்று எப்படி யார் தீர்மானிப்பது என்பதையும் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்...நானும் தெரிந்து கொள்கிறேன்...
ஆனால் ஒன்று, இது இப்படித் தான் இருக்க வேண்டும் இப்படித் தான் வாழ வேண்டும் என்று தன் கருத்தை அடுத்தவர் மீது திணிப்பது தான் கடைசியில் ஆஃப்கனின் தலிபான்களாக போய் முடிகிறது..

//
//சமூகப்பார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?? //

சத்தம் போட்டுச் சிரிக்க வைத்தீர்கள்!
//

சிரிக்க வைக்கிறது கஷ்டம்...எப்படியோ ஒருவரை சிரிக்க வைத்தது எனக்கு மகிழ்ச்சியே...அப்படியே, அறிவுக்கும் சமூகப்பார்வைக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்கினால் நானும் சந்தோஷப்படுவேன்...:0))

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
//சினிமா என்பது வியாபாரம்...வியாபாரம் மட்டுமே...ஒரு பேங்கருக்கும், மீன்பிடிப்பவருக்கும், காய்கறி விற்பவருக்கும், ஆசிரியருக்கும், டாக்டருக்கும் எப்படி அவையெல்லாம் ஒரு தொழிலோ அப்படியே சினிமாவும்..//

வியாபாரத்திலும் ஒரு Business ehtics இருக்கணுங்க.நேத்தைக்கு கோவையில் மதுக்கரையில் ஒரு உணவகத்தில் காக்கா பிரியாணி போட்டுட்டாங்களாம்.வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்ன்னு எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா?

நடிகன் என்பதை விட திரை உலகிற்கு ஒரு சமூக அக்கறை இருக்க வேண்டும்.அந்த சமூக அக்கறையே மேலே சொன்ன வியாபார நீதி.

25 March 2009 07:37
//

உங்கள் ஒப்பீட்டில் ஒரு தவறு உள்ளது நடராஜன்....தமிழ்ப்படம் என்று விளம்பரப்படுத்தி விட்டு தெலுங்கு படத்தை காண்பித்தால் காக்கா பிரியாணி ஒப்பீடு சரியாக வரும்...ஆனால் தமிழ்ப்படம் தானே காண்பிக்கிறார்கள்??
வேண்டுமானால் பிரியாணி நல்லா இருக்கும்னு சொன்னாங்க, ஆனா நல்லா இல்லைன்னு சொல்லலாம்...என்ன செய்றது அது அவங்கவங்க டேஸ்டை பொறுத்தது இல்லையா??

எனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்காது...அதுக்காக சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்கள் திருந்த வேண்டும் என்று நான் சொல்ல முடியுமா??

சமூக அக்கறை திரை உலகிற்கு மட்டுமல்ல எல்லாருக்கும் வேண்டும்...ஆனால் திரைப்படங்களில் நடிகர்கள் சமூக கருத்துகள் சொல்லவில்லை என்பதாலேயே அவர்களுக்கு அக்கறையில்லை, அறிவு இல்லை என்று ஆகிவிடுமா??

ஒரு காய்கறிக்காரருக்கு தி.மு.க, அதிமுக மேல் தீவிர கருத்துக்கள் இருக்கலாம்..ஆனால் அதை அவர் வெளிப்படையாக செய்தால் அவர் வியாபாரம் என்ன ஆகும்?? அவருக்கே அப்படி என்றால், பலரும் கவனிக்கும் நடிகருக்கு???

நான் சொல்ல வருவது இது தான்....நடிகரோ இல்லை வேறு யாருமோ சமூக கருத்துக்கள் சொன்னால் அதை ஒரு கருத்தாக மட்டுமே எடுத்துக் கொண்டு விவாதிக்க தமிழ் சூழ்நிலை இல்லை...கொடும்பாவி கொளுத்தவே தயாராக இருக்கிறார்கள்...

இதில் கருத்து சொல்லு என்று நடிகரை எப்படிக் கேட்க முடியும்??

அது சரி(18185106603874041862) said...

ஸ்ஸ்ஸ்...யப்பா ரொம்ப டயர்டா இருக்குப்பா....மீதி பின்னூட்டங்களுக்கு சிறிது நேரம் கழித்து பதில் சொல்கிறேன்...அனைவரும் மன்னிக்கவும்...

KarthigaVasudevan said...

////சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்!//

இந்தக் குறளோடு ஒத்துப் போகிறேன் .

நிகழ்காலத்தில்... said...

புரிந்து கொண்டேன்.....

வாழ்த்துக்கள்.

Anonymous said...

முதலில் உங்கள் பதிலுக்கு நன்றி..

//என்னங்க இப்படி கேக்கறீங்க?? அவங்களுக்கு பிடிச்சி தான படம் பார்க்கப் போறாங்க?? ரெண்டு படம் நல்லா இல்லாட்டி அப்புறம் அந்த ஹீரோ படத்தைப் பார்க்க அவங்களே போக மாட்டாங்க...பணம் கொடுப்பது படம் பார்க்கத் தான?? அப்புறம் எதுக்கு நடிகர்கள் எதுனா செய்யணும்னு எதிர்பார்க்க முடியும்?? //

இது நீங்க யாருக்கு சொல்றீங்க?..நீங்களும் நானும் வேற, நடுத்தர வயசுகாரர்க்களுக்கு சரி..ஏனா இந்த வயதில் கண்டிப்பாக புரிதல் ஓரளவு கிடைத்து விடும்..ஆனால் 16 இருந்து 23 வரை வயசு உள்ள அடுத்த தலைமுறைக்கு இந்த நடிகர்களின் செயலால் அவர்களின் சிந்தனை கேள்விக்குறி ஆகி வருகிறது..இதில் எந்த மாற்றுக்கருதோ இல்லை.. நானும் நீங்களும் அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள்தான்.தென்தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையை அடுத்து உள்ள இடங்களில் இந்த அறிவிலிகளின் படம் திரைக்கு வரும்போது இவர்களின் முகம் பதிந்த படங்களை தனது உடையில் அணிந்து (உண்மையில் பாக்க பரிதாபமா இருக்கும்ங்க) காட்டுக்கத்து கத்துவார்கள் இவர்களுக்கு அந்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க..இத அந்த நடிகர்களுக்கு தெரியாமல் நடக்கிறது என சப்பைக்கட்டு கட்டாமல் குறைந்த பட்சம் நம்மை நம்புவர்களுக்கு சரியான வழியை அமைத்துத் தரவேண்டியது அவர்களின் கட்டாயம் ஆகிவிடுகிறது..இதற்கு நல்ல உதாரணம் தோழர் மாதவராஜ், நீங்கள் மற்றும் நான் மட்டுமே விவாதம் செய்கிறோமே தவிர அந்த நடிகர்கள் இதைக் குறித்து எந்த கவலையும் அடைவதில்லை..

//படம் ஒரு மது மாதிரி தான்....ஒரு மூணு மணி நேரம் கவலையை மறந்து இருக்கறதுக்கு...படத்தையும் பார்த்துட்டு, அப்புறமும் நடிகர்கள் எதுனா செய்யணும்னு எப்படிங்க கேக்கிறது??//

மதுதான் ஆனால் அந்த மதுவில் இருந்துதான் நாட்டை ஆண்டவர்கள் ஆள்பவர்கள், முதலில் தனது ஆர்வத்தால் உள்ளே வருபவர்கள் குடிக்க குடிக்க பிறகு முதல்வர் ஆசை சமீத்தில் உள்ள நடிகர்களும் இதே ஆசை அதனால் இவர்கள் மேலே விவாதம் செய்வது நமது கடமை தட்டிக்கழிக்க முடியாது தோழரே..

பின்குறிப்பு: மதுவில் இதை குடித்தால் உடலுக்கு கேடு என்று விளம்பரம் இருக்கும் இல்லையெனில் இத்தனை சதவீதம் ஆல்ககால் இருக்கும் என்று போட்ருக்கும்..

தோழமையுடன்

முகமது பாருக்

ராஜ நடராஜன் said...

//எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.//

குடுகுடுப்பையார் வீட்டுக்குப் போனேன்.உங்கள் வாசகம் கண்ணில் பட்டது.அப்படியே பின்னூட்டங்களையும் மேஞ்சிட்டுப் போகிறேன்.

(மக்கள் நல்லாவே அடிச்சு ஆடறாங்க:))

அது சரி(18185106603874041862) said...

//
முகமது பாருக் said...
முதலில் உங்கள் பதிலுக்கு நன்றி..

இது நீங்க யாருக்கு சொல்றீங்க?..நீங்களும் நானும் வேற, நடுத்தர வயசுகாரர்க்களுக்கு சரி..ஏனா இந்த வயதில் கண்டிப்பாக புரிதல் ஓரளவு கிடைத்து விடும்..ஆனால் 16 இருந்து 23 வரை வயசு உள்ள அடுத்த தலைமுறைக்கு இந்த நடிகர்களின் செயலால் அவர்களின் சிந்தனை கேள்விக்குறி ஆகி வருகிறது..இதில் எந்த மாற்றுக்கருதோ இல்லை.. நானும் நீங்களும் அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள்தான்.தென்தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையை அடுத்து உள்ள இடங்களில் இந்த அறிவிலிகளின் படம் திரைக்கு வரும்போது இவர்களின் முகம் பதிந்த படங்களை தனது உடையில் அணிந்து (உண்மையில் பாக்க பரிதாபமா இருக்கும்ங்க) காட்டுக்கத்து கத்துவார்கள் இவர்களுக்கு அந்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க..இத அந்த நடிகர்களுக்கு தெரியாமல் நடக்கிறது என சப்பைக்கட்டு கட்டாமல் குறைந்த பட்சம் நம்மை நம்புவர்களுக்கு சரியான வழியை அமைத்துத் தரவேண்டியது அவர்களின் கட்டாயம் ஆகிவிடுகிறது..இதற்கு நல்ல உதாரணம் தோழர் மாதவராஜ், நீங்கள் மற்றும் நான் மட்டுமே விவாதம் செய்கிறோமே தவிர அந்த நடிகர்கள் இதைக் குறித்து எந்த கவலையும் அடைவதில்லை..

//படம் ஒரு மது மாதிரி தான்....ஒரு மூணு மணி நேரம் கவலையை மறந்து இருக்கறதுக்கு...படத்தையும் பார்த்துட்டு, அப்புறமும் நடிகர்கள் எதுனா செய்யணும்னு எப்படிங்க கேக்கிறது??//

மதுதான் ஆனால் அந்த மதுவில் இருந்துதான் நாட்டை ஆண்டவர்கள் ஆள்பவர்கள், முதலில் தனது ஆர்வத்தால் உள்ளே வருபவர்கள் குடிக்க குடிக்க பிறகு முதல்வர் ஆசை சமீத்தில் உள்ள நடிகர்களும் இதே ஆசை அதனால் இவர்கள் மேலே விவாதம் செய்வது நமது கடமை தட்டிக்கழிக்க முடியாது தோழரே..

பின்குறிப்பு: மதுவில் இதை குடித்தால் உடலுக்கு கேடு என்று விளம்பரம் இருக்கும் இல்லையெனில் இத்தனை சதவீதம் ஆல்ககால் இருக்கும் என்று போட்ருக்கும்..

தோழமையுடன்

முகமது பாருக்
26 March 2009 04:49
//

வாங்க பாருக்....நீங்க கேட்கிற கேள்விக்கு நீங்க எழுதுனதுலயே விடை இருக்கு...

//
நானும் நீங்களும் அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள்தான்.தென்தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையை அடுத்து உள்ள இடங்களில் இந்த அறிவிலிகளின் படம் திரைக்கு வரும்போது இவர்களின் முகம் பதிந்த படங்களை தனது உடையில் அணிந்து (உண்மையில் பாக்க பரிதாபமா இருக்கும்ங்க) காட்டுக்கத்து கத்துவார்கள் இவர்களுக்கு அந்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க
//

இப்படி சொல்லும் நீங்கள் அதற்கு முந்திய வரியிலேயே விடையை சொல்கிறீர்கள்...

//
நீங்களும் நானும் வேற, நடுத்தர வயசுகாரர்க்களுக்கு சரி..ஏனா இந்த வயதில் கண்டிப்பாக புரிதல் ஓரளவு கிடைத்து விடும்.
//

நாமும் அப்படி இருந்தவர்கள் தான்..நானோ நீங்களோ இன்னமும் அதை செய்கிறோமா? அந்த வயதில் அப்படித் தான் இருப்பார்கள்...16 வயது ஆள் அறுபது வயதுக்காரரை போல் சிந்தித்தால் இழப்பு அவனுக்கு தான்...44 வருடங்களுக்கான வாழ்க்கை இழப்பு!!

வயது மாறும் போது அவர்களுக்கும் புரிதல் வரும்...அதிகம் கவலைப்பட தேவையில்லை என்பது எனது கருத்து...

முருகன் ஜெயராமன் said...

சினிமாநடிகர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது,அரசியல்வாதியிடம் எதிர்பார்த்து ஏமாந்துதானே,அடுத்த முதல்வரை திரையுலகில் தேடுகிறான்.

அது சரி(18185106603874041862) said...

வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி...

ஹேமா said...

அதுசரி,வணக்கம்.இன்றுதான் உங்கள் பதிவுகள் பக்கம் வந்திருக்கிறேன்.
முதல் கண்ணில் படும் பதிவே கொஞ்சம் சூடாகத்தான் இருக்கிறது.

நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.எங்கள் வாழ்வோடு ஒட்டி பயன்படுவது அளவுகோல்.திரைப்படம் பார்க்க மட்டும் இல்லை.வாழ்வை நிதானத்தோடு திட்டமிட்டு ஓட்டிச் செல்ல நிச்சயம் அளவுகோல் தேவை.
யோசித்துச் செயல்பட வைக்கும் பதிவு.யாரையும் எதையும் குறை சொல்ல வேண்டாம்.எங்களைச் சரியாக்கி வைத்துக்கொள்வதே நல்லது.

முகமது பாருக் said...

யப்பா!!!..நம்ம முதல்வர் கலைஞர் 'கருணா'நிதி மாதிரி கேள்விக்கு பதில் சொல்வது (அதாவது சம்பந்தமே இல்லாம) போல எதையாவது சொல்லப்பிடாது..ஏதோ ஒரு தலைப்பை போட்டாச்சு கடைசி வரை அதை சமாளித்தே ஆகவேண்டும் என்று நினைப்புதான் உங்களுக்கு..

//நாமும் அப்படி இருந்தவர்கள் தான்..நானோ நீங்களோ இன்னமும் அதை செய்கிறோமா? அந்த வயதில் அப்படித் தான் இருப்பார்கள்...16 வயது ஆள் அறுபது வயதுக்காரரை போல் சிந்தித்தால் இழப்பு அவனுக்கு தான்...44 வருடங்களுக்கான வாழ்க்கை இழப்பு!!

உங்க நகைசுவை உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்..

வயது மாறும் போது அவர்களுக்கும் புரிதல் வரும்...அதிகம் கவலைப்பட தேவையில்லை என்பது எனது கருத்து..//

படிப்பை தொடர முடியாமல் சிறுவயது முதலே வேலையை தேடி ஓடும் மக்களை சொன்னேன். வயது மாறும் போது புரியுமா? அவர்களுக்கு புரியக்கூடாதுன்னு தானே இந்த அறிவிலிகள் ஆட்டம்போடுதுங்க..

அய்யா //.

16 வயது ஆள் அறுபது வயதுக்காரரை போல் சிந்தித்தால் இழப்பு அவனுக்கு தான்...44 வருடங்களுக்கான வாழ்க்கை இழப்பு!!//

இந்த வரிக்கு தானே அவரின் பதிப்பு..சினிமா கூத்தாடிகள் தன்னை மறந்து செயல்படுவதால் தான் வந்தது இந்த விவாதம்..சிந்தனை பார்பவனுக்கு மட்டுமா?..

நல்லா இருப்பீங்க இதுக்கு நீங்க பதில் போடவேண்டாம்..புரிந்தால் போதும்..

தோழமையுடன்

முகமது பாருக்

Cable சங்கர் said...

அருமையான எதிர்பதிவு.

Anonymous said...

சில விஷயங்களில் ஒத்து போகிறேன். மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் நம் நாட்டில் நடிகர்களுக்கு கொஞ்சம் பொறுப்பு வேண்டும். ஏன் என்றால் ரசிகர்கள் ஊடகங்கள் நடிகர்களுக்கு அதிகமான முக்கியவத்துவம் தருவதால் வரும் பிரச்சினை இது. நடிகர்களையும் மற்றவர்களை போல பார்க்கும் போது நடிகர்களிடம் பொறுப்புணர்ச்சியை எதிர் பார்க்க தேவை இல்லை என்பது என் கருத்து.