இரவானாலும் பரவாயில்லை
இன்னும் கொஞ்ச தூரம் தான்...
இடப்பக்கம் திரும்பி சில காதங்கள் நடந்து
மூன்றாவது மரம் தாண்டியதும் வலப்பக்கம் போ...
உன் வலப்பக்கமா என் வலப்பக்கமா
ஏதோ வலது ஏதோ இடது
போகச் சொன்னவன் யாரென்று தெரியவில்லை
போகும் இடமும் சொல்லவில்லை...
இல்லாத இடத்துக்கு போகாத வழி...
இருக்கிறதா இல்லையா...
ஆனாலும் ஆரம்பித்தாயிற்று
போய்த் தான் ஆக வேண்டும்...
கனவுகளே இல்லாமல்
கணக்கில்லா இரவுகள்
கழிந்தன இப்படியே...
இடப்பக்கம் திரும்பி வலப்பக்கம் திரும்பி
மீண்டும் வலது, மீண்டும் இடது...
இப்படியே போனால்
எல்லையில்லா பெருவெளியின்
இல்லாத எல்லைகள் முடியும் இடம் எது...
அங்குலமாய் நிலம் கடக்கும் வேளையில்
காதருகே உரசிச் சென்றது காற்று..
காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே....
==================================
(கடைசி வரி பட்டினத்தாருடையது...இந்த கிறுக்கலின் அடிப்படை அதுவே..)
படம் உதவி: Flickr.com
(This is a repost as I am away from home....As usual, it would be really helpful if any of my friends can link this in Tamil manam/Tamilish...Much appreciated. Thanks)
22 comments:
நான் திட்ட வரலை.. என்ன ஒரே கவுஜ மயமா இருக்கு
காலத்துலே சேருங்க ஓட்டு போடா வாரேன்
தமிழ்ல எழுதி இருக்கீங்கன்னு புரிய்து சாமி
செல்வ கருப்பையா உங்களத்தவிர இந்தக்கவிதை யாருக்கும் புரியாது, நீங்க எங்கிருந்தாலும் உடனே வரவும்
கவிதை புரியாட்டி எல்லாரும் கமெண்ட் படிங்க, அதுல சரக்கே இல்லாட்டியும் புரியும்
இல்லாத சொர்க்கத்தை தேடி இந்த மனுசப்பதருங்க அலையுறத சொல்றீங்களா?
//காலத்துலே சேருங்க ஓட்டு போட வாரேன்//
அந்த பயம் இருந்தா சரி...இஃகிஃகி!
//
நசரேயன் said...
நான் திட்ட வரலை.. என்ன ஒரே கவுஜ மயமா இருக்கு
23 March 2009 21:51
//
ச்சும்மா அப்பிடி போகிற போக்கில கவுஜ தான் எழுத முடியும்...:0))
திட்டாததுக்கு நன்றி தல!
//
நசரேயன் said...
காலத்துலே சேருங்க ஓட்டு போடா வாரேன்
//
காலத்துல சேக்கிறதுன்னா என்ன?
//
குடுகுடுப்பை said...
தமிழ்ல எழுதி இருக்கீங்கன்னு புரிய்து சாமி
23 March 2009 22:00
//
இது குடுகுடுப்பை பிராண்ட் நக்கல்...உங்கள்ட்ட பிடிச்சதே இது தான் :0))))
//
குடுகுடுப்பை said...
செல்வ கருப்பையா உங்களத்தவிர இந்தக்கவிதை யாருக்கும் புரியாது, நீங்க எங்கிருந்தாலும் உடனே வரவும்
23 March 2009 22:02
//
ம்ம்ம்ம்....போன தடவை "மீண்டும் ஒரு முறை"ன்னு கிறுக்கினது எனக்கு மட்டும் தான் புரிஞ்சது...அதனால இந்த தடவை கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணேன்...ச்சே...ரெண்டு தடவை எடிட் பண்ணியும் தப்பாயிடுச்சி போலருக்கே....அடுத்த தடவை இன்னும் ஸ்ட்ரெயிட்டா ட்ரை பண்றேன்...:0))
//
குடுகுடுப்பை said...
இல்லாத சொர்க்கத்தை தேடி இந்த மனுசப்பதருங்க அலையுறத சொல்றீங்களா?
23 March 2009 22:08
//
எப்படி வேணும்னாலும் வச்சிக்கலாம்...எழுதிய பின் எழுத்து வாசிப்பவனின் சொந்தம்...அதற்கு எழுதியவன் விளக்கம் சொல்லக் கூடாதுன்னு எங்கியோ படிச்ச ஞாபகம்...(ஜ்யோவ்ராம் சுந்தரோட பதிவாயிருக்கலாம்)...
ஒரு தெருவுல பாதி இருட்டும், பாதி வெளிச்சமும், பெரும் மழையும், மழையில் நகரும் நத்தைகளும், கடும் ஊதக் காற்றும் அடிக்கும் போது ஒரு முதிய பெண் தன் கைவண்டிய தள்ளிக் கொண்டு போனால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? தெரு இருட்டா இருக்கிறது என்றா? வெளிச்சமாயிருக்கிறது என்றா? அந்த தெருவில் மழை பெய்கிறது என்றா இல்லை காற்றடிக்கிறது என்றா? நத்தைகள் மழையில் நகருகின்றன என்று உங்களுக்கு தோன்றுமா இல்லை வெளிச்சத்தில் இருந்து இருள் நோக்கி கொட்டும் மழையில் ஒரு பழுத்த இலை நத்தை போல் மெல்ல நகர்கிறது என்று தோன்றுமா??
//
பழமைபேசி said...
//காலத்துலே சேருங்க ஓட்டு போட வாரேன்//
அந்த பயம் இருந்தா சரி...இஃகிஃகி!
23 March 2009 22:13
//
அண்ணனை நான் முழுமனதுடன் வழிமொழிகிறேன் :0)))
//ஆனாலும் ஆரம்பித்தாயிற்று
போய்த் தான் ஆக வேண்டும்... //
ஆனாலும் ஓபன் செய்தாயிற்று
படித்துதான் ஆக வேண்டும்
ஆனாலும் படித்தாயிற்று
கமென்ட் செய்துதான் ஆகவேண்டும்
ஆனாலும் கமென்ட் செய்தாயிற்று
ஆகவே
எஸ்கேப்....
//
மோனி said...
//ஆனாலும் ஆரம்பித்தாயிற்று
போய்த் தான் ஆக வேண்டும்... //
ஆனாலும் ஓபன் செய்தாயிற்று
படித்துதான் ஆக வேண்டும்
ஆனாலும் படித்தாயிற்று
கமென்ட் செய்துதான் ஆகவேண்டும்
ஆனாலும் கமென்ட் செய்தாயிற்று
ஆகவே
எஸ்கேப்....
24 March 2009 06:34
//
பிடிக்கலைங்கிறத ரொம்ப நக்கலா சொல்லியிருக்கீங்க...உங்க நக்கல் எனக்கு பிடிச்சிருக்கு :0))
இந்தக் கவிதைக்கான படமே ஒரு கவிதை மாதிரி தான் தோனுது, படம் சொல்லும் அல்லது தூண்டும் சிந்தனைகள் அமானுஷ்யமா இருக்கே ,எங்க இருந்து எடுத்தீங்க இதை?
/
அங்குலமாய் நிலம் கடக்கும் வேளையில்
காதருகே உரசிச் சென்றது காற்று..
/
காத்து வாங்க அம்புட்டு தூரம் போவணுமா ஆப்பீஸர்?????
எனக்கு வேற எதுவும் புரியலை
:))
romba arumainga... enna solla vareengannu appuram padichchu parkkaren..! =)
கதையில தான் நிறைய திருப்பம் இருக்கும்னு யார் சொன்னது. கவிதையிலேயே எவ்வளவு திருப்பம். ம்ம். பொழிப்புரை போட்றுங்க எதுக்கும்.:))
//
கலகலப்ரியா said...
romba arumainga... enna solla vareengannu appuram padichchu parkkaren..! =)
//
Thanks....Actually, its not saying anything :0)
//
வானம்பாடிகள் said...
கதையில தான் நிறைய திருப்பம் இருக்கும்னு யார் சொன்னது. கவிதையிலேயே எவ்வளவு திருப்பம். ம்ம். பொழிப்புரை போட்றுங்க எதுக்கும்.:))
//
திருப்பம் இல்லாட்டியும் நாங்கெல்லாம் வலுக்கட்டாயமா திரும்ப வைப்போம் :0))
// அது சரி said...
//
கலகலப்ரியா said...
romba arumainga... enna solla vareengannu appuram padichchu parkkaren..! =)
//
Thanks....Actually, its not saying anything :0)//
apppudiyaa... appachcheri..!
Post a Comment