Friday 26 December 2008

ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சு


யானையை பிடிக்காதவர்கள் யார்? என் அம்மா போல்...நான் கொடுத்த பத்து பைசாவிற்கு தலை தடவிய யானை...என்னடா ஒரே ஒரு வாழைப்பழம் தானா...ஓரக்கண்ணால் நக்கலாக சிரித்தாலும் துதிக்கையால் என் தோள் தட்டிய யானை...ஏழு வயதில் வகுப்பில் முதல் ராங்க் வாங்கியதற்காக என் தந்தை தோள் தழுவியதை விட இன்னமும் மறக்காமல் இருக்கிறது... நான் எவ்ளோ பெரிய ஆள்...நீயெல்லாம் சும்மா சுள்ளான் என்று பலம் காட்டாமல் யப்பா, யப்பா என்று நான் அலற அலற துதிக்கையால் வாரி மத்தகத்தின் மேல் தூக்கி வைத்துக் கொண்ட யானை...ஒரு வேளை யானை என்னை அணைத்து முத்தமிடுவதாகக் கூட நினைத்து கொண்டிருக்க கூடும்....சிலரது அன்பு நமக்கு புரிவதில்லை...புரிந்த போது அவர்கள் இருப்பதில்லை...
ஜெயமோகனின் மத்தகத்தை யானை காதலின் பேரிலேயே படிக்க ஆரம்பித்தேன்..ஆனை ஆனை அழகர் யானை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை..
இப்படி சிறுபிள்ளையாக ஆரம்பித்தது விரைவில் மாறியது...வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...
கேசவன் யானையின் தலைமைப் பாகனான ஆசான்...அவருக்கு அடுத்த நிலையின் அருணாசலம் அண்ணன்...அடுத்து யானை மேய்க்கும் பரமன்...அவனுக்கும் அடுத்த நிலையில் சுப்புக் கண்....மூன்றாம் நிலையில் இருக்கும் பரமன் சொல்வதாகவே கதை நிகழ்கிறது...
ஆசான் "சவமே" என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக அவரது காலை முறிக்கும் கேசவன்...சுப்புக்கண் தன் முன்னால் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான் என்பதற்காக அவன் அருகில் வந்தால் விரட்டி அடிக்கும் கேசவன்...
// சுப்பு நடுங்கியபடி கைகளை மார்பில் வைத்துக்கொண்டு மெல்ல அலைநாக்குகள் ததும்பிய நீர் விளிம்புவரை வந்தான். அவன் நீரில் கால் வைக்கவும் கேசவன் பயங்கரமாகப் பிளறியபடி எழுந்தான். நீரலைகள் எழுந்து மணல் விளம்பை நக்கின. //
// ஆசானே.. ஆனை என்னை கொன்னு போடும். என்னை கொன்னு போடும் ஆசானே. வயசான அம்மை இருக்கா ஆசானே” என்று கெஞ்சி அழுதான். நான் கேசவனைப் பார்த்தேன். பக்கவாட்டில் நன்றாக மல்லாந்து கிடந்தான். பக்கவாட்டு நெற்றிக்குழியில் நீர் தேங்கியிருந்தது. சிறிய கண்களைச் சுற்றி சருமம் சுருங்கி விரிந்தது. அவனுடைய உடலே சுப்புக்கண்ணை கவனிக்கிறது என்று எனக்குத் தெரியும். சுப்புக்கணின் கால்கள் நீரைத் தொட்ட அந்தக் கணமே யானை பிளிறி எழும். .....கனத்த கால்கள் மணலில் கிருகிருவென பள்ளம் செய்ய மெதுவாக நடந்து சுப்புக்கண்ணை நோக்கிச் சென்றது.
.... சுப்புக்கண் அப்படியே தரையோடு தரையாக விழுந்து கிடந்தான்...
....என் உடலில் நாற்றம் அடித்தது. கீழே மணலில் சுப்புக்கண் பேதி போயிருந்தான். //
// பிற யானைகளுக்குப் போல ‘காலெடுத்தானே’ ‘கையெடுத்தானே’ ‘வலத்தானே’ ‘இடத்தானே’ என்றெல்லாம் கத்தக் கூடாது, சொல்லக்கூடாது. துரட்டியும் குத்துக்கம்பும் எடுப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது. //
கேசவனின் பெரிய தம்புரானின் மறு உருவம்...ஆளும் தம்பிரானின் ஆத்ம ஸ்நேகிதன்..ராஜ ஸ்நேகிதம்...ராஜ கல்பனை பெற்ற யானை.அதன் மத்தகத்தின் மீது தம்புரானை தவிர யாரையும் அது அனுமதிப்பதில்லை...
//
அந்த உத்தரவு எப்படி கேசவனுக்குத் தெரிந்தது என்பதே ஆச்சரியம்தான். வேறு எவரையும் தன் மத்தகத்தின் மீது ஏறுவதற்கு கேசவன் அனுமதித்தததில்லை. சட்டென்று பயங்கரமாக பளிறியபடி கொம்பு குலுக்கிய கேசவன் ஓரடி பின்னால் வைத்தான். கோபம் கொண்ட ·பல்குனன் நாயர் தன் உடைவாளை உருவியபடி ”எந்தடா?” என்று கேட்டபடி ஆசானை வெட்ட வருவதற்குள் கேசவன் மீண்டும் பிளிறியபடி துதிக்கையால் பல்குனன் நாயரை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். நாயர் தெறித்துப் பின்னாலிருந்த கல்தூணில் மண்டை அடித்து கீழே விழுந்து மூர்ச்சையானான் //
// கோபமாக உள்ளே வந்த இளையதம்புரான் ”கேசவனுடே மீதெ திடம்பும் ஞானும் அல்லாதே ஆரும் கேறல் அருது எந்நு சொன்னது என்னுடெ ராஜ கல்பனை. அது கடந்நவன் ஆரெந்நாலும் மரணம் அவனுடெ விதி. ஆருக்குண்டு மறு வாக்கு? ம்ம்? //
// சொல்லும் பொருளும் அறிஞ்š நான் சொல்லுந்நேன். கேசவன் நம்முடைய ஆனை. அவனுடெ மீதே நாம் அல்லாதே ஓராளும் கயறுக இல்ல” என்றார். //
இப்படி ராஜ மரியாதையுடன் வலம் வரும் கேசவன் மீது ஆசான், பாகன்கள் என்று யாரும் ஏறி விடமுடியாது...ஆனால் அவனுக்கோ கரடிக்குளம் நாராயணன் என்ற யானையை மிஞ்சி விட ஆசை... பாகன் பரமனும் அருணாசலம் அண்ணனும் நட்பு..ஆனால் அருணாசலத்தின் காதலியை பரமன் மிரட்டி அடைகிறான்...
// அருணாச்சலம் அண்ணா தணிந்து, ”மக்கா லே, நீ எனக்க தம்பியில்லா? அவ உனக்கு அம்மையப் போலாக்கும் லே” என்றார். ”அந்தச் சோலியே வேண்டாம். நடக்குமா நடக்காதா சொல்லும்” என்றேன். //
// அருணாச்சலம் அண்ணன் சட்டென்று என் கால்களைப் பற்றிக் கொண்டார். இருட்டில் அவரது கண்கள் பளபளவென்று ஈரமாக இருப்பதைக் கண்டேன். அவர் கைகைள் என் கால்களில் சூடாகப் பதிந்தன. ”தம்பி, உன்னை என் சொந்தத் தம்பியாட்டு நெனைச்சியேம்ல… வேண்டாம்ல… மகாபாவம்ல. //
முதலில் சாவேன் என்று மிரட்டி பின்பு பரமனுடன் உடன்படும் அருணாசலத்தின் காதலி...
// அவள் தரையிலேயே கிடந்தாள். நான் அவள் கைகளைப் பற்றித் தூக்கி எடுத்தேன். வியர்த்துக் குளிர்ந்த உடம்பு நீரில் வந்த வாழை போலிருந்தது... ”என்னை கொல்லப்படாது… என்னையும் என் பிள்ளையையும் நாசம் பண்ணிப்பிடாது… நான் செத்திருவேன்….கூடப்பிறப்பா நினைக்கணும்…தம்புரானே….உங்கள தெய்வமா கும்பிடுதேன்” என்று என்னை உந்தி நெளிந்தபடி கண்ணீர் வழியச் சொன்னாள். அவளைப் பேசவே விடக்கூடாது என்று இறுகப் பிடித்து இழுத்துப் பாயில் தள்ளினேன். ”அய்யோ வயித்தில பிள்ள… பாத்து” என்று அவள் பதறிக் கெஞ்ச ஆரம்பித்தாள். //
இப்படி செய்யும் பரமன் அடுத்து அருணாசலத்திற்கு மேலும் பெரும் துரோகம் செய்கிறான்...அவரது மனைவியை தான் பெண்டாள்கிறான்...கோயில் நகையை திருடுகிறான்...
// அவரது கண்கள் மூன்று மாதம் தாண்டாத குழந்தையின் பனிபடர்ந்த விழிகளுடன் இருந்தன. ”ஓடிவாங்க ஓடி வாங்க… அண்ணனை ஆனை தூக்கிப் போட்டுட்டுது… அய்யோ” என்று கதறியபடி நான் தோப்புக்குள் நுழைந்து நெய்யாற்றின்கரை கோயிலை நோக்கிச் ஓடினேன். //
இதையெல்லாம் ஒட்டியோ என்னவோ கேசவன் பரமனை அருகிலும் நெருங்க விடுவதில்லை...பரமனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுப்புக்கண் (மரண பயத்துடன் கதையில் அறிமுகமாகும் அதே சுப்புக்கண்!!) அதிகாரம் பெறுகிறான்...
// அவனுக்குத் தெரியாமலிருக்காது. ஒரு மாதமாக என்னை கேசவன் அருகிலேயே விடுவதில்லை. என்னுடைய வாசனை கிடைத்தாலே முன்னங்காலை தூக்கி வைத்து ம்ம் என்று ஒலியெழுப்பும். //
கேசவனின் பாடும் சுகமில்லை...தம்புரானுக்கு உடல் நிலை சரியில்லாது போக, அவரின் மகனின் அதிகாரம் ஏற்படுகிறது...அவனுக்கோ குதிரைகளே பிரியம்....அப்பொழுது தான் கேரளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆங்கிலேயர் ஸ்னேகிதம்...யானையை பிடிப்பதில்லை...தம்புரான் இறக்க அங்கு செல்லும் கேசவனுக்கு செல்லும் கேசவனுக்கு பல்வேறு அனுபவங்கள்...
// உள்ளே இருந்து இளையதம்புரான் வருவதைக் கண்டேன். அவர் கையில் நீளமான துப்பாக்கி இருந்தது. மூக்குத் துளைபோல இரட்டைக் குழல்கொண்ட தோள் உயரமான துப்பாக்கி. பழுத்த மூங்கில் நிறமான குழாய். ஈட்டி மரத்தாலான மட்டை. அதை தோளில் தூக்கியபடி வந்த தம்புரான் வாசலில் நின்று கடும் கோபத்தில் முகம் சுளித்து, ”போ.. போடா” என்றார். //
// அவர் துப்பாக்கியை நீட்டியபடி மேலும் பின்னகர்ந்து குறி பார்த்தார். //
// இளைய தம்புரான் அந்தக் துப்பாக்கியின் கீழே உள்ள வளையத்துக்குள் சுட்டுவிரலால் அழுத்த அது மூடி திறந்து கொள்ளும் ஒலி கேட்டது. //
ஐயோ கேசவா என்று மனதில் ஒலி எழுந்த நேரத்தில் கேசவனின் முடிவு..... ஜெயமோகன் ஊசி ஏற்றுகிறார் என்று நினைத்திருந்த நேரத்தில் ஒரே நேரத்தில் பல வாள்களை வீசுகிறார்... மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை..... யானைக் கதையாக படிப்பவர்களுக்கு முடிவில் கதை முற்றிலும் ஒரு புதிய கோணம் காட்டுகிறது.. நட்பு, துரோகம்,சூழ்நிலைக்கேற்ப மாறும் கற்பு, நான்கு வருணங்கள், தொடர்ந்து கைமாறும் அதிகாரம்...வர்க்க பேதத்தை உடைப்பதில் ஆங்கிலேய ஆட்சியின் மறைமுக பங்கு...உண்மையில் முடிவில் தான் இந்த கதை ஆரம்பிக்கிறது....
சூரியனுக்கு டார்ச் அடிப்பது அனர்த்தம் என்று தெரிந்தாலும் ஜெயமோகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
இவ்வளவு சொல்லிவிட்டு இதை சொல்லாவிட்டால் நன்றியாகாது...ஓரளவு ஜெயமோகனை படித்திருந்தாலும்....நான் இந்த கதை படிக்க முக்கிய காரணம் திரு. சுரேஷ் கண்ணன் அவர்களின் இந்த பதிவே... சுரேஷ் கண்ணனுக்கு நன்றி!

சமீப காலமாகவே எனக்கு தெரிந்த மிஸஸ்.டவுட் அவர்களும் மத்தகம் குறித்து மிக அழகாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
ஜெயமோகனை படிக்க விரும்புபவர்கள் தயவு செய்து அவர் தளத்திலேயே படித்து கொள்ளுங்கள்....
மத்தகத்தின் சுட்டிகள்

37 comments:

குடுகுடுப்பை said...

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான். நேரம்(அனுமதின்னும் வெச்சுக்கலாம்) கெடச்சா படிக்கிறேன்.
குகு

புதுகை.அப்துல்லா said...

சீக்கிரமே படிச்சுடுருறேன்

பழமைபேசி said...

கொட்டாய்ல போயிப் படத்தப் பாத்துட்டு வந்து, அப்புறமா ஞாயத்துல கலந்துகிடலாம்...போய்ட்டு வாறேன்.

கபீஷ் said...

விமர்சனம் நல்லா இருக்கு! முதல் பத்தி அழகா இருக்கு:-)

கபீஷ் said...

//எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான். நேரம்(அனுமதின்னும் வெச்சுக்கலாம்) கெடச்சா படிக்கிறேன்.
குகு//

:-):-)

ரவி said...

கஷ்டப்பட்டு காப்பி பேஸ்ட் பண்ணதுக்கு நன்றி !!!!!!!1

நசரேயன் said...

படிச்சுட்டு சொல்லுறேன்

MSK / Saravana said...

படிச்சிட்டு சொல்றேன்.. :)

அது சரி(18185106603874041862) said...

//
வருங்கால முதல்வர் said...
எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான். நேரம்(அனுமதின்னும் வெச்சுக்கலாம்) கெடச்சா படிக்கிறேன்.
குகு
//

என்னது...அது சரி எழுத்தாளாரா? யார் இப்படி வதந்திய கெளப்புறது??? தம்மடிக்கிற நேரத்துல சும்மா ஜல்லியடிக்கிறவனெல்லாம் எழுத்தாளர் ஆனா....வேணாம், நிஜ எழுத்தாளர்களை இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தாதீங்க :0)

வருகைக்கு நன்றி சீனியர் முதல்வரே!

அது சரி(18185106603874041862) said...

//
புதுகை.அப்துல்லா said...
சீக்கிரமே படிச்சுடுருறேன்
//

சீக்கிரமா படிச்சி பாருங்கண்ணே...எனக்கு பிடிச்சிருந்தது...உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க!

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
கொட்டாய்ல போயிப் படத்தப் பாத்துட்டு வந்து, அப்புறமா ஞாயத்துல கலந்துகிடலாம்...போய்ட்டு வாறேன்.
//

பாருங்கய்யா பாருங்க...பாத்துட்டு வந்து பஞ்சாயத்துல நாலு வார்த்தை சொல்லுங்க!

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
விமர்சனம் நல்லா இருக்கு! முதல் பத்தி அழகா இருக்கு:-)
//

வாங்க கபீஷ்....வருகைக்கு நன்றி...

மொத பத்தி அழகா இருக்கா? ஜெய மோகன் பத்தி எழுதறதுக்காவது நமக்கு கொஞ்சம் தகுதியிருக்கான்னு டவுட்ல இருந்தேன்...நீங்க சொன்னதும் சந்தோஷமாயிருக்கு...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
//எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான். நேரம்(அனுமதின்னும் வெச்சுக்கலாம்) கெடச்சா படிக்கிறேன்.
குகு//

:-):-)
//

இதே தாங்க....அந்த கமெண்ட் படிச்சதும் எனக்கும் சிரிப்பு வந்துருச்சி :))

அது சரி(18185106603874041862) said...

//
செந்தழல் ரவி said...
கஷ்டப்பட்டு காப்பி பேஸ்ட் பண்ணதுக்கு நன்றி !!!!!!!
//

வாங்கண்ணே...வருகைக்கு நன்றி...

நீங்க காப்பி பேஸ்ட் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டீங்க....மக்கள் எல்லாம் நான் ஏதோ இந்த பதிவையே வேற எங்கனா இருந்து காப்பி அடிச்சதா நினைக்காம‌ இருந்தா சரி!

அது சரி(18185106603874041862) said...

// நசரேயன் said...
படிச்சுட்டு சொல்லுறேன்
//

நிதானமா படிச்சிட்டே சொல்லுங்க நசரேயன்!

அது சரி(18185106603874041862) said...

//
Saravana Kumar MSK said...
படிச்சிட்டு சொல்றேன்.. :)
//

பாருங்க..படிங்க...அப்புறமா வந்து சொல்லுங்க...ஆனா இன்னைக்கி நைட்டுக்குள்ள சொல்லுங்க...ஒண்ணும் அவரசமில்ல! :))

குடுகுடுப்பை said...

கலக்குங்க தல நீங்க.

http://urupudaathathu.blogspot.com/ said...

பதிவு ரொம்ப "சிறுசாக" இருப்பதால், அப்புறம் வந்து படிக்கிறேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//வருங்கால முதல்வர் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான்.///

அண்ணன் சொன்னா கரீக்டா தான்பா இருக்கும் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

சிறுசா பதிவு இருந்தால், என்னால் படிக்க முடிவது இல்லை, அடுத்த பதிவாவது "பெருசா "போடுங்கள் ..

இந்த பதிவ படிக்க எனக்கு ஒரு மாசம் விடுப்பு வேண்டும் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

யானை பற்றிய உங்கள் குறிப்பு கவிதை ...
அன்பான நிமிடங்கள், அழகான நியாபகங்கள்

கயல்விழி said...

//வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...
//

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//
//
உருப்புடாதது_அணிமா said...
பதிவு ரொம்ப "சிறுசாக" இருப்பதால், அப்புறம் வந்து படிக்கிறேன் ..
29 December 2008 12:16
//

என்னா வில்லத்தனம் :0))

பெரிசா எழுதுனா இம்மாம் பெரிசாங்கிறது....சிறிசா எழுதுனா இவ்வளவு தான் சரக்காங்கிறது......இதெல்லாம் ரொம்ப அநியாயமா படல??

அது சரி(18185106603874041862) said...

//
உருப்புடாதது_அணிமா said...
//வருங்கால முதல்வர் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான்.///

அண்ணன் சொன்னா கரீக்டா தான்பா இருக்கும் ..
29 December 2008 12:17
//

எது....எனக்கு ஆப்பு வைக்கணும்கிறதா??? இப்பவே நெலவரம் கலவரமா இருக்கு...இதுல இது வேறயா??

அது சரி(18185106603874041862) said...

//
உருப்புடாதது_அணிமா said...
யானை பற்றிய உங்கள் குறிப்பு கவிதை ...
அன்பான நிமிடங்கள், அழகான நியாபகங்கள்
29 December 2008 12:25
//

நன்றி அணிமா.....யப்பா, யப்பான்னு அலறுனது யானை தான்கிற உண்மை நான் மறைச்சிட்டேன்...இது தான் சரித்திரத்தை திரிக்கிறதுங்கிறது :0))

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.
30 December 2008 23:02
//

ஏற்கனவே தமிழில் புலமை கெடையாது...அதில் அத்தனை பெரிய கட்டுரைகள்...அறிவுத்திறன் இல்லை...

என்னது ஜெயமோகனை இந்த தாக்கு தாக்குறீங்க...சாரு நிவேதிதா கூட இப்பிடி திட்டலை...

:0))

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.
30 December 2008 23:02
//

ஒரு வேளை நீங்க உங்களைப் பத்தி சொல்லியிருந்தா....

பின்ன நாங்க மட்டும் என்ன ரொம்ப புலமையோட படிக்கிறோமா??? எல்லாம் ஒரு நாலு ரவுண்ட் வோட்கா ஏத்திட்டு எழுத்துக் கூட்டி படிக்கிறது தான்...:0))

ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....அந்த EJB 3.0 spec ஃபுல்லா படிச்சீங்க??? அதுக்கு ஜெயமோகன் நூறு மடங்கு பெட்டர்!

கயல்விழி said...

அதுசரி
புலமை, அறிவுத்திறன் - இதெல்லாம் என்னைப்பற்றியே சொல்லிக்கொண்டது :)

//ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....//

படித்தேன் சரி, முழுதாக படித்ததாக யார் சொன்னது? எல்லாம் அரை குறை, ஏதோ அதிர்ஷ்டத்தில் பாஸ் பண்ணியாச்சு. அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டியது, அதனால் கடனே என்று படித்தேன். ஆனால் சாரு, ஜெயமோகன் கட்டுரைகள் எல்லாம் பொழுது போக்குக்காக படிப்பது, அதனால் ரொம்ப போர் அடிக்கும் கட்டுரைகளை படிப்பதில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

//ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....//

படித்தேன் சரி, முழுதாக படித்ததாக யார் சொன்னது? எல்லாம் அரை குறை, ஏதோ அதிர்ஷ்டத்தில் பாஸ் பண்ணியாச்சு. அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டியது, அதனால் கடனே என்று படித்தேன். ஆனால் சாரு, ஜெயமோகன் கட்டுரைகள் எல்லாம் பொழுது போக்குக்காக படிப்பது, அதனால் ரொம்ப போர் அடிக்கும் கட்டுரைகளை படிப்பதில்லை.
31 December 2008 00:20
//

என்னது...பாஸ் பண்ணிட்டீங்களா??? இதுல எல்லாமா பரிட்சை வைக்கிறாங்க?? ரொம்ப கொடுமையா இருக்கே....அந்த ஸ்பெக் எல்லாம் புத்தகமா போடா தலையணையா வச்சி நல்லா தூங்கலாம்...படிக்கெல்லாம் முடியாது... :0))

நீங்க சொல்றதும் சரி தான்...ரொம்ப நீளமா படிச்சா நானும் தூங்கிடுவேன் :))

வருண் said...

ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்து.

வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.

அவரை நான் குறை சொல்லவில்லை. நமக்கு ஞானம் பத்தாதுங்கோ இவர் கதை எல்லாம் படிக்க! :(

அது சரி:

உங்க தளத்திற்கு முதல் முறையா வருகிறேன் :) அதுவும் புத்தாண்டு அன்று. :-)

Anonymous said...

அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன். விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

Anonymous said...

சரியான இணைப்பு

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதுசரி அண்ணா..

அது சரி(18185106603874041862) said...

//
வருண் said...
ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்து.

வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.

அவரை நான் குறை சொல்லவில்லை. நமக்கு ஞானம் பத்தாதுங்கோ இவர் கதை எல்லாம் படிக்க! :(

அது சரி:

உங்க தளத்திற்கு முதல் முறையா வருகிறேன் :) அதுவும் புத்தாண்டு அன்று. :-)
//

ஆச்சரியமா இருக்கே தல....என்ன நம்ம கடைப் பக்கமெல்லாம் வர்றீங்க?? எதுனா தப்பா வழி மாறி வந்துட்டீங்களா??? :0))

போர் அடிக்குதுன்னு நீங்க சொல்றத ஒத்துக்கலாம்....எனக்கும் ஜான் க்ரைஷம் மாதிரி எழுத்து போரடிக்குது....என்ன செய்ய?

//
வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.
//

வேற யாரையாவது கொல்றதுக்கு இது பெட்டர் :))

உங்கள் வரவு நல்வரவாகுக!

அது சரி(18185106603874041862) said...

//
Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதுசரி அண்ணா..

02 January 2009 12:29
//

வாழ்த்துக்கு நன்றி சரவணன்...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அது சரி(18185106603874041862) said...

//
pathivu said...
அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன். விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்
//

என்னது....எனக்கெல்லாம் விருதா.....டரியலை கெளப்புறீங்களே....வந்து பார்த்துடறேன் :))

குடுகுடுப்பை said...

ஜெயமோகன் எழுத்து போரடிச்சா எல்லா குகு எழுத்த படிக்க ஓடியாங்கப்பா