அறிவிப்பு 1: இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் (விக்கிரமாதித்தன், வேதாளம், மந்திரவாதி தவிர்த்து) அனைத்தும் உண்மையே! மிக முக்கியமாக, எனது பாதுகாப்பு கருதி, பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.
அறிவிப்பு 2: மாமனார், மாமியார் கடந்த 4927 நாட்களாக குளிக்கவில்லை, பல் துலக்கவில்லை, என்றாலும் நான் அவர்களது கால்களை கழுவி, அதை எனது தலையில் தெளித்து கொள்வேன், கணவன் குடித்து கும்மி அடித்துவிட்டு வீடு வர எவ்வளவு நேரமானாலும், நான் விழித்திருந்து அவன் வந்த பின், பின் தூங்கி முன் எழுவேன், ஏனெனில் அது தான் இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரம்என்று நினைக்கும் பெண்களும்,அத்தகைய இந்திய, தமிழ், மனுதர்ம கலாச்சாரத்தை என் மனைவி/இரண்டாம் மனைவி/ எதிர் வீட்டுக்காரன் மனைவி பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்!
இரண்டு ப்ளேட் மொகல் பிரியாணியையும், நாலு ப்ளேட் காளான் ஃபிரையையும் (பேலன்ஸ்டு டயட்டாம்), பாத்தி கட்டி வெட்டி முடித்த வேதாளம், ஆவ்வ்வ்வ் என்ற ஏப்பத்துடன் மீண்டும் ஒரு தம்மை பற்ற வைத்தது.
டயட்டில் இருப்பதால், வெறும் பாயில்ட் ரைசையும், உப்பில்லாத தயிரும் சாப்பிட்டு முடித்த விக்கிரமன் வேதாளத்தை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த வேதாளத்துடன் கூத்தடித்து கொண்டிருந்ததில், அந்த ஸ்பானிஷ் சிட்டை எவன் தள்ளிக்கொண்டு போனானோ! அவனவன் கவலை அவனுக்கு! இந்த வேதாளமோ கதையை முடித்தபாடாக தெரியவில்லை. என்ன செய்வது?
"முட்டாள் வேதாளமே. கொட்டி கொண்டாயல்லவா? கதையை தொடர வேண்டியது தானே?"
"அவசரப்படாதே விக்கிரமா. பிரியாணி எந்த கடையில வாங்குன? அந்த பாகிஸ்தான் பாய் கடையிலா? ரொம்ப நல்லா இருக்கு, ஆனா, நம்ம தலப்பா கட்டி நாயுடு பிரியாணி மாதிரி வராது. அடுத்த தடவை வரும்போது எங்கனா கெடைக்குமான்னு ட்ரை பண்ணி பாரேன்"
" நேரம் சரியில்லாட்டி, சனீஸ்வரன் ஒத்த கால நின்னு ஒண்ணுக்கடிப்பாராம்! தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணிக்கு உன் தலையத்தான் அடகு வைக்கனும். ஏன், உன் தலைவன் அந்த தாடிக்கார கிழட்டு மந்திரவாதியை கேட்க வேண்டியது தானே?"
"யார், அந்த செவிட்டு கிழவனா? அவனுக்கு மந்திரத்தில் மாங்காயே வரவைக்க தெரியாது. அவனா பிரியாணி வரவைப்பான்? வேணும்னா எனக்கு கால்ல பெரிய ஆணி வரவைப்பான். வெளக்கெண்ண மண்டையன்".
"ஏய் மொட்டை வேதாளமே. நீ நேரத்தை கடத்துகிறாய். கதையை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் உனது கொம்பை அறுத்து விடுவேன்"
மனோகரா சிவாஜி குரலில் விக்கிரமாதித்தன் கத்துவதை பார்த்த வேதாளம், அவனுக்கு பயந்தது போல் நடித்துக் கொண்டே கதையை மீண்டும் ஆரம்பித்தது.
========================================================
"மாதித்தா, நீ ஜெயகான்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படித்து இருக்கிறாயா? முறைக்காதே. நானும் படித்ததில்லை."
"ஆனால், சில நேரங்களில், சில மனிதர்கள் எது செய்தாலும் இல்லை எதுவும் செய்யாவிட்டாலும் தப்பாகி விடுகிறது".
WILL YOU MARRY ME VEEJEE?
என்ற பிரையனின் கேள்வி விஜியை உண்மையில் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுவரை அவளை யாரும் இப்படியொரு கேள்வி கேட்டதில்லை. தமிழ்னாட்டில், பெண்களின் சம்மதத்தை கணவனாகப்போகும் ஆண்மகன் தானே கேட்பது வழக்கமில்லை. தவிர, இன்திய கலாச்சாரப்படி, பெரும்பாலும் பெண்ணின் சம்மதத்தை கேட்பதில்லை. இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் என்று அவளுக்கு யாரும் சொல்லியும் தரவில்லை.
அதனால், அவள் என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றாள். ஆனால், ஆன்டர்சன் தவறாக புரின்து கொண்டான்.
"I know VeeJee. I know India. Your parents are not going to agree. But its all about you. If you say yes, let me speak to them. I am sure, I can convince them".
இன்த இடத்தில் நீ ஒன்றை கவனிக்க வேண்டும் மாதித்தா. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு "செருப்பு பிஞ்சிரும்" என்று வழி வழியாக வன்த உடனடி பதிலை சொல்வது தான் தமிழ்னாட்டு பெண்களின் வழக்கம். அவள் என்த பதிலும் சொல்லாததற்கு திகைப்பு மட்டுமல்ல, அவளுக்கு தெரியாமலேயே ஆன்டர்சன் மீது அவளுக்கு இருன்த ஒருவித ஈர்ப்பும் காரணம் என்று சொல்லலாம். இதை தொடர்ன்து பால குமாரனை படித்த தமிழர்கள் புரின்து கொள்வார்கள்.
ஒரு வழியாக விஜி திகைப்பிலிருன்து மீண்டாள்.
"I am already married Brian".
இப்பொழுது திகைப்பது பிரையனின் முறை.
"What... Oh Jesus..... oh no, oh no. I am sorry...I never... never knew this....believe me, you never told me".
"Ofcourse, you never asked me a question like this before".
"errr, yeah, yes. stupid me, I should 'ave. I never thought about it. I am really sorry VeeJee. But I 'ave to say, I am in love with you".
"I like you too Brian. But remember, I am married.".
விக்கிரமா, நல்ல நாகரீகமான ஆண்மகன் இத்துடன் விலகி இருப்பான். ஆனால், மனித மனம் வித்தியாசமானது. அருகில் இருக்கும் மானை விட, தூரத்தில் ஓடும் மானை துரத்தும் விசித்திரங்களை மனிதர்கள் மட்டுமே செய்ய முடியும்.
ஆன்டர்சன் மனிதன் மட்டுமல்ல, தான் நல்ல நாகரீகமான ஆண்மகன் என்று கூட அவன் ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை. தான் அடைய நினைப்பதை அடைபவன் தான் ஆண்மகன் என்பது அவன் கொள்கை. தவிரவும், காதல் என்றால், குமரக்கடவுளே குறவன் ஆகும்போது, ஆன்டர்சன் தனது நாகரீக முகமூடிகளை தூக்கியெறின்ததில் வியப்பில்லை. பல மனிதர்கள் காதலுக்காக பறக்கும் விமானத்திலேயே ஃபுட் போர்ட் அடிக்க தயாராக இருக்க, இது கூட செய்யாவிட்டால் எப்படி?
"mmmh, VeeJee.... ah, its your personal life. But if I can ask..... ah, are you.... happily married?"
இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் என்று விஜி சொல்லியிருக்க முடியும். ஆனால், அவளால் அப்படி சொல்ல முடியவில்லை.
"mmh, sort of..... well, not really".
"ah,.....then why are you sticking with him? Is he any good?"
"You won't understand it Brian. It's India. It's the way of life, or you can say thats the culture. Whether he is good or not, we dont leave our husband".
"Are you saying you are going to live with him even though you are not happy and waste your entire life? Forgive me, but I dont understand it"
"Thats what I told you. You wont understand it. It is the choice, because it is the ONLY choice".
"You are wrong VeeJee. Certainly wrong. You are beautiful. You know it. You can choose anyone of your liking and get out of this marriage".
"And how do I face my parents? How do I face my brothers? Above all, what would I tell my husband? What our neighbours will think of me? "
"So, is that all you are living for? For your parents, your brothers and what to tell your husband? or what some xyz will think of you?"
"Thats your way of saying Brian. But I would say, I am caring for them".
"I dont know, but I think you are deceiving yourself".
"May be I am, may be not. But it doesn't matter Brian. It's India, not London. In anycase, its too late, and I am very tired. Shall I go home?"
ஆன்டர்சனுக்கு ஏமாற்றமே. ஆனால், இதற்கு மேலும் விஜியை கட்டாயப்படுத்த அவனுக்கு மனமில்லை.
"Sure VeeJee. I'll arrange a taxi for you. Thanks for coming out".
"You are a great guy Brian. I am sorry if I have upset you. But please understand my situation".
"Its alright VeeJee. To be honest, I am upset. Very upset. But I wont blame you for that. After all, its my fault".
"I am sorry Brian".
அதற்குள் டாக்ஸி வன்துவிடவே அவர்களால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
==========================================
Alright என்று விஜியிடம் சொல்லிவிட்டானே தவிர, உண்மையில் பிரையனுக்கு அன்று இரவு எதுவும் ரைட்டாக இல்லை. 17 வயதிலிருன்து அவன் என்த பெண்ணாலும் நிராகரிக்கப்பட்டதில்லை. அதற்கு காரணம், அவனது அன்தஸ்தும், ட்யூக் ஆஃப் லங்காஷயரின் நெருங்கிய உறவினன் என்பது மட்டுமல்ல, அவனது அழகிய தோற்றமும் ஒரு காரணம் என்பது அவன் நம்பிக்கை.
அது மட்டுமல்ல. அவனுக்கு வேறொரு பிரச்சினையும் இருன்தது. 18 வயதிலிருன்து ஒரு பெண் இல்லாமல் "தூங்கி" அவனுக்கு பழக்கமில்லை. பாருக்கு சென்று விட்டு என்த பெண்ணும் இல்லாமல் திரும்பி வருவது இது தான் அவனுக்கு முதல் முறை. வழக்கமான தனது "ஏஜென்சிக்கு" ஃபோன் செய்து ஒரு "இரவுப்" பெண்ணை வரச்செய்தான். அவள் அசத்தும் அழகுடையவள் தான். ஆனால், பாதி "காரியத்தில்" அவனுக்கு விஜியின் நினைவு வன்துவிட்டது. அன்த பெண்ணை திரும்பி போகச் சொல்லிவிட்டான். அன்த பெண் தன்னிடம் தான் ஏதோ தவறு இருக்கிறதோ என்று பல முறை சாரி சொல்லிவிட்டு போனாள்.
அன்றைய இரவு அவனால் தூங்க முடியவில்லை. விஜி இல்லாமல் தனது வாழ்க்கையே அர்த்தமில்லாததாக அவனுக்கு தோன்றியது.
தான் ஒரு புலி வேட்டையை ஆரம்பித்திருப்பது புரின்தது. வாழ்க்கையில் முதல் முறையாக தோற்றுவிடுவோமோ என்ற பயமும் அவனுக்கு வன்தது.
=====================================
கதை சொல்லுவதை நிறுத்திய வேதாளம், விக்கிரமனின் ஜாக்கெட்டை தடவி மீண்டும் ஒரு தம்மை பற்ற வைத்தது.
"விக்கிரமா, நீ பல தடவை புலி வேட்டைக்கு போயிருக்கிறாய். உண்மையைச் சொல். புலி வேட்டைக்கு போகும் எவருக்கும், புலியை வேட்டையாடுவதை விட, முழுதாக திரும்பி வரவேண்டும் என்ற உதறல் இருக்கும் தானே?""அன்த உதறல் தான், பிரையனை அன்று இரவு தூங்க விடாமல் செய்தது. அவனுக்கு அது புரியவில்லை. தவிர, நீ அவனது வயதையும் கவனிக்க வேண்டும். 32 வயது என்பது ஒருவித இரண்டும் கெட்ட நிலை. இன்னும் காலம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய இளம் வயதும் இல்லை. எல்லாம் முடின்துவிட்டது என்று ஒதுங்கக்கூடிய முதிய வயதும் இல்லை".
"வேதாளமே, உன் மன உளவியல் அறிவை காட்டியது போதும். கதைக்கு வா. ஓசியில் கிடைத்தது என்று ஓயாமல் ஊதிக்கொண்டு வேறு இருக்கிறாய்".
"ம்க்கும். தினம் ஒரு பெண்ணுடன் படுக்கையில் உருளும் உன்னிடம் சொன்னேன் பார். நான் அடுத்த பிறவியில் ஆடிட்டராக பிறன்து யாராவது ஒரு அம்மாவிடம் செருப்பால் தான் அடி வாங்க போகிறேன்!"
நக்கலடித்த வேதாளம் கதையை தொடர்ன்தது.
============================================
"மாதித்தா, இதுவரை நடன்தது சரி. இனிவரும் கதையை யாரேனும் கலாச்சார காவலர்களிடம் சொல்லிவிடாதே. சில இடிப்பு புகழ்வாதிகள் உனது தலையை கடப்பாறையால் இடித்துவிடுவார்கள்".
"அடுத்த வன்த நாட்களுக்கு ஆன்டர்சனால் விஜியை பார்க்க முடியவில்லை. பார்த்தாலும், அவள் எதுவும் பேசவில்லை.வழக்கமாக, தினன்தோறும், அவன் தான் அவளுக்கு லிஃப்ட் கொடுத்து, அவளது ஹோட்டலில் இறக்கி விடுவது வழக்கம். அன்த வாரம் முழுவதும் அதையும் தவிர்த்துவிட்டாள்".
ஆன்டர்சனுக்கு பொறுக்கவில்லை. அன்று மாலை அவளது சீட்டுக்கு சென்றான்.
"I am going home VeeJee. Can I drop you at the hotel?"
"Oh, thanks Brian. I am going to be late. I have some more documents to read. You, have a nice evening. I'll see you tomorrow".
"mmh. VeeJee.... Can I ask you something? Why are you avoiding me?"
"oh, No. I am not avoiding you Brian. Why should I? Its just.... I have a bit of things to do".
"Come on VeeJee. I know. Ever since I spoke to you on that Friday, you dont want to talk to me anymore"
"errr Brian, its not so..."
பிரையன் சிரித்தான்.
"If that's the case, you would come with me now. I know you have plenty of time to read that document".
"ah, well, alright. You are such a demanding boss".
பிரையனுக்கு பயங்கர சன்தோஷம். ஒரு வழியாக அவள் மீண்டும் பேசிவிட்டாளே!
பிரையனின் கார் அவளது ஹோட்டலை நெருங்கியது.
"VeeJee, I am very tired. I can do with a coffee. Can you buy me a coffee? You see, you actually owe me a coffee. Remember, I bought you one at Heathrow?"
விஜியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
"Is this your way of getting me talking Brian?"
"Errr, no. I'm just trying to call in my debts".
விஜியால் இதை மறுக்க முடியவில்லை. பெரும்பாலும், தூண்டில் என்று தெரியாமலே மீன்கள் கடித்துவிடுகின்றன். ஆனால், சில நேரங்களில் தூண்டில் என்று தெரின்தும் தப்பி விடலாம் என்று கடிக்கின்றன். விஜி இதில் இரண்டாவது வகை.
அந்த ஹோட்டலிலேயே இருந்த ரெஸ்டாரண்டில் இருவருக்கும் காஃபி வாங்கினாள்.
ஆன்டர்சன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"I am sorry about that Friday VeeJee. I hope you did'nt miss understand me. I was not trying to get in your pants".
"ah, leave it Brian. I didn't take it wrong. ".
"That's.... amm, thanks VeeJee. I hope, I am not haraasing you. Its not my idea. But I 'ave to be honest. I ......mmm, still in love with you".
விஜயலட்சுமிக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
"விக்கிரமா, செருப்பு பிஞ்சிடும் என்று அவளது தாய்மார்களும், பாட்டிமார்களும், பாட்டியின் பாட்டிகளும் சொல்லி வந்த தமிழ் பண்பாட்டு வசனத்தை அவளால் இங்கு சொல்ல முடியவில்லை என்பதை நீ கவனிக்க வேண்டும்".
"So, VeeJee, just being funny.... hypothetically, lets say.... if you are a single, will you date me??"
"mmmh, ah.... Brian, I.... dont know. hypothetically..... you are being hoest with me. so to be honest...... well, yes"
ஆன்டர்சனுக்கு Dow Jones Index அரை மணி நேரத்தில் ஐனூறு பாய்ண்ட் மேலே சென்றது போல் சந்தோஷமாக இருந்தது.
"oh, thats very nice of you VeeJee. I am really happy now"
"so you can't date me, because you are married, sametime, its not a happy marriage?"
"mmh.... yes"
"VeeJee, If I can say this......Why shouldn't you think for yourself? You don't have to stuck up with an unhappy marriage for your entire life. Do you want to waste your life?"
"But Brian...... I told you... I have to think about my parents.."
ஆன்டர்சன் அவளை இடைமறித்தான்.
"Of course. but not at the expense of your entire life. Also, in what way they are going to lose? Do you think they honestly want their only daughter to be stuck up with an unhappy marriage for her life? It sounds like life imprisonment to me"
"What about my husband...."
"I can't say VeeJee. You are not happy with him anyway. You dont 'ave to sacrifice your life for someone you dont love"
"You can say all those things Brian. But only I know the depth of problems. You know nothing about India, our culture or anything about it so to speak of.".
"oh, come on VeeJee. Let me put it straight. If we can sort out the problems, will you come out of this marriage? Do you really love me?"
"விக்கிரமாதித்தா, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்ற தமிழ் பழமொழியோ, இல்லை மனது வைத்தால் ஆண்டிப்பட்டியிலேயே அம்மாவை தோற்கடிக்க முடியும் என்றோ ஆன்டர்சன் கேள்விப்பட்டதில்லை என்பதால், அவன் அதை தான் செய்து கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்ல முடியாது.
காதலிப்பது சுகம் விக்கிரமா. காதலிக்கப்படுவது அதைவிட சுகம். தான் காதலித்த காதலனும் கைவிட்டான். கட்டிய கணவனுக்கு காதல் என்றாலே என்னவென்று தெரியவில்லை. ஒரு காதலுக்காக ட்ராய் நகரமே அழிந்தது.ரோம பேரரசே வீழ்ந்தது எனும் போது விஜியின் மனதை நீ புரிந்து கொள்ள முடியும்"
"mmmmh, Brian.... its ....difficult.... to say. But.... Yes"
"Oh my god..... Oh my god.... you are actually saying you love me...oh, honey, I love you so much. I love you like I've never loved anything ever before".
விஜிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பிரையனை பார்க்கவும் துணிவில்லை. தான் செய்வது சரியா தவறா என்ற பயத்தில் தலை குனிந்து, தலையை முழங்காலில் புதைத்திருந்தாள்.
பிரையன் அவளை தூக்கி நிறுத்தி, அழுத்தமாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
"oh, love... I am yours. now. forever. I promise. I will speak to your parents and husband. I am sure, I can convince them. Let me sort out all the problems".
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு பிரையன் விடை பெற்று சென்றான்.
சொல்லி விட்டாளே தவிர, விஜிக்கு அடி வயிற்றில் பயப்பந்து உருண்டு கொண்டே இருந்தது..எப்படி கணவனிடம் சொல்வது? எப்படி பெற்றவர்களிடம் அனுமதி கேட்பது??
அடுத்து வந்த நாட்களில் பிரையன் வேகமாக செயல்பட்டான். அவளை தனியாக இந்தியாவுக்கு அனுப்ப அவனுக்கு விருப்பமில்லை.
"I don' know much about India VeeJee. But I 'ave read stories about women being in sort of house arrest. They may not allow you leave home at all. I am not ready to lose my love".
ஆன்டர்சனின் பிடிவாதத்தால், அவர்கள் இருவரும் அந்த சனிக்கிழமை இந்தியாவிற்கு பறப்பது என்று முடிவாயிற்று. முதலில் சென்னைக்கும், அடுத்து அவளது பெற்றோரை சந்திக்க குடந்தைக்கும் செல்வது என தீர்மானித்தார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அவளையும், ஆன்டர்சனையும் வரவேற்க யாருமில்லை. தன்னை வரவேற்க ஆன்டர்சன் 12 மணி நேரம் ஹீத்ரூவில் காத்திருந்தது அவளுக்கு நினைவில் வந்தது.
ஆன்டர்சனுடன் தனது வீட்டுக்கு போவதில் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அவன் பார்க் ஷெராட்டனில் தங்கிக்கொள்ள அவள் மட்டும் வீடு சேர்ந்தாள்.
அங்கு அவளது கணவனைப் பற்றிய முக்கிய செய்தி அவளுக்கு காத்திருந்தது!!
====================================================
"விக்கிரமா, மனித மனம் என்பது அலைபாய்வது. இன்று விரும்புவதையே நாளை வெறுக்கும்.இன்று வெறுப்பதையே நாளை மிகத்தீவிரமாக விரும்பும். காய்ந்து போன காவிரியில், கர்னாடக புண்ணியத்திலோ, கடும் மழையாலோ, எதிர்பாராத வெள்ளம் பெருக்கெடுத்து அழுக்குகளை அடித்து செல்வது போல், மனித மனமும் நிலை மாறக்கூடியது".
தத்துவத்தை கொட்டி முடித்த வேதாளம் கதையை நிறுத்தியது.
"என் மனத்தை பற்றிய மனக்கவலை உனக்கு வேண்டாம் வேதாளமே. நான் உன்னையும், அந்த தாடிக்கார சண்டாள மன்திரவாதியையும் ஒரு போதும் விரும்ப போவதில்லை".
"உன்னைப் பற்றி யார் கவலைப்பட்டது மாதித்தா. என் மனம் இப்பொழுது சூடாக ஒரு காஃபியை விரும்புகிறது. ஏற்பாடு செய்ய முடியுமா??"
"ஹூம். அஞ்சு நாளக்கி முன் அரசனா, எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்"லக்குபாய் பதக் லஞ்ச வழக்கில் மாட்டிக்கொண்ட நரசிம்ம ராவ் போல, விக்கிரமாதித்தன் புலம்பிக் கொண்டே காஃபியை எடுக்க காருக்கு சென்றான்.
==================== தொடரும் ==================================
33 comments:
மாதித்தா,
மடவேதாளமே
பதிவருக்கு
ஒரு 'ஓ' போடுங்க!
// siva gnanamji(#18100882083107547329) said...
மாதித்தா,
மடவேதாளமே
பதிவருக்கு
ஒரு 'ஓ' போடுங்க! //
ஓஓஓஓஓ!!!
:-)...
ரியலி கெட்டிங் சீரியஸ்......
நல்லவேளை விஜிக்குக் குழந்தைங்க ஏதும் இல்லைதானே?
அது சரி
ஒரு வித்யாசமான சப்ஜெக்ட் எடுத்து எழுதியதற்காக பாராட்டுக்கள்! நீங்களும் வழக்கம் போலவே காதல் கதைகளை எழுதாமல் சமூகம் ஒப்புக்கொள்ளாத வகை பதிவை எழுதி இருக்கிறீர்கள்.
இங்கே விஜி செய்வதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. தமிழ் கலாச்சாரத்தில் பல சமயம் திருமணம், என்ற பெயரில், சம்மந்தமில்லாத ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரே வீட்டில் வற்புறுத்தி வாழ வைக்கிறார்கள். அந்த காலம் மாதிரியல்ல, இந்த காலத்தில் வாய்புகளும், எக்ஸ்போஸ்சரும் அதிகம்(விஜிக்கு கிடைத்தது மாதிரி).
எனவே கல்லானாலும் கணவன், மண் ஆனாலும் மனைவி என்று யாரும் வாழ்வது இல்லை.
என்னுடைய கடைசி வரிக்கு ஒரு விளக்கம்
"யாரும் வாழ்வதில்லை" என்றால், வெளிப்படையாக நிறைய பேர் ஒப்புக்கொள்வதில்லையே தவிர, மனதுக்குளாவது இப்படி ஏதாவது செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். நான் சொல்வது புரியவில்லையா? ரொம்ப நல்லது :) :)
மீண்டும், அழகான எழுத்துநடை அதுசரி அவர்களே :)
/
siva gnanamji(#18100882083107547329) said...
மாதித்தா,
மடவேதாளமே
பதிவருக்கு
ஒரு 'ஓ' போடுங்க!
/
ரிப்பீட்ட்டு போட்டுக்கிறேன்
Man,
awesome..pl. continue..I'm so impressed by your casual narration..
Man,
awesome..pl. continue..I'm so impressed by your casual narration..
முரண் தொடை நன்றாக உள்ளது. வேதாளத்தை சேர்த்தது க்தையின் சுவை.
அடுத்த பார்ட் எப்போது வரும்?
//
siva gnanamji(#18100882083107547329) said...
மாதித்தா,
மடவேதாளமே
பதிவருக்கு
ஒரு 'ஓ' போடுங்க!
//
வருகைக்கு நன்றி சிவ ஞானம்ஜி. அடிக்கடி வாங்க :0)
//
விஜய் ஆனந்த் said...
// siva gnanamji(#18100882083107547329) said...
மாதித்தா,
மடவேதாளமே
பதிவருக்கு
ஒரு 'ஓ' போடுங்க! //
ஓஓஓஓஓ!!!
:-)...
//
அடடா, வாங்க விஜய் ஆனந்த். நீங்க தான் லக்கி லுக் சொன்ன அந்த பின்னூட்ட சூறாவளியா??
சூறாவளி நம்ம கடைப்பக்கமும் அடிச்சதுல எனக்கு சந்தோஷமே! அடிக்கடி வீசுங்க!
//
துளசி கோபால் said...
ரியலி கெட்டிங் சீரியஸ்......
நல்லவேளை விஜிக்குக் குழந்தைங்க ஏதும் இல்லைதானே?
//
வாங்க துளசி கோபால். இந்த கதை நடந்த காலத்துல விஜிக்கு குழந்தைகள் ஏதும் இல்ல.
//
கயல்விழி said...
அது சரி
ஒரு வித்யாசமான சப்ஜெக்ட் எடுத்து எழுதியதற்காக பாராட்டுக்கள்! நீங்களும் வழக்கம் போலவே காதல் கதைகளை எழுதாமல் சமூகம் ஒப்புக்கொள்ளாத வகை பதிவை எழுதி இருக்கிறீர்கள்.
இங்கே விஜி செய்வதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. தமிழ் கலாச்சாரத்தில் பல சமயம் திருமணம், என்ற பெயரில், சம்மந்தமில்லாத ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரே வீட்டில் வற்புறுத்தி வாழ வைக்கிறார்கள். அந்த காலம் மாதிரியல்ல, இந்த காலத்தில் வாய்புகளும், எக்ஸ்போஸ்சரும் அதிகம்(விஜிக்கு கிடைத்தது மாதிரி).
எனவே கல்லானாலும் கணவன், மண் ஆனாலும் மனைவி என்று யாரும் வாழ்வது இல்லை.
//
எனக்கும் காதல் கதை எழுதலாம்னு ஆசை தான். ஆனா, நமக்கு காதல் பத்தி எதுவுமே தெரியாதே! வேணும்னா நான் (சிகரெட்) ஊதல் பத்தி எழுதலாம் :0)
//
கயல்விழி said...
என்னுடைய கடைசி வரிக்கு ஒரு விளக்கம்
"யாரும் வாழ்வதில்லை" என்றால், வெளிப்படையாக நிறைய பேர் ஒப்புக்கொள்வதில்லையே தவிர, மனதுக்குளாவது இப்படி ஏதாவது செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். நான் சொல்வது புரியவில்லையா? ரொம்ப நல்லது :) :)
//
கலாச்சார காவலர்களுக்கு பயந்துட்டீங்க போல இருக்கு? :0) ரஜினி மாதிரி விளக்கம் குடுக்குறீங்க :0)
நீங்க சொல்றது சரி தான். விஜியின் கதை கிட்டத்தட்ட எல்லா தெருவிலும் இருப்பது.
//
கயல்விழி said...
மீண்டும், அழகான எழுத்துநடை அதுசரி அவர்களே :)
//
என்னது, "அவர்களே"வா?? விட்டா, பொன்னாடைன்னு ஒரு கதர் துண்ட போத்தி, முதுபெரும் பதிவர்னு மூலைல உக்கார வச்சிடுவீங்க போலிருக்கே! அநியாயம் பண்ணாதீங்க. நானே இப்பத்தான் தட்டு தடுமாறி எழுத ஆரம்பிச்சிருக்கேன்!
அவர்களே, சுண்ணாம்பில்லா சுவர்களே எல்லாம் வேண்டாம், சும்மா பேர சொல்லியே கூப்பிடுங்க!
:0)
//
Ilavennila said...
Man,
awesome..pl. continue..I'm so impressed by your casual narration..
//
வருகைக்கும் பாராட்டு வரிகளுக்கும் நன்றி இள வெண்ணிலா.
அடிக்கடி வாங்க!
//
குடுகுடுப்பை said...
முரண் தொடை நன்றாக உள்ளது. வேதாளத்தை சேர்த்தது க்தையின் சுவை.
//
வாங்க குடுகுடுப்பை அண்ணாச்சி.
குடுகுடுப்பைக்காரருக்கு வேதாளம் பிடிக்கும்னு எனக்கு தெரியுமே! :0)
//
கயல்விழி said...
அடுத்த பார்ட் எப்போது வரும்?
//
ஆர்வத்திற்கு நன்றி கயல்விழி.
அது பாருங்க, இந்த விக்கிரமாதித்தன் இருக்கானே வெட்டிப்பய. ஒரு வேலையும் இல்லாம ஊர சுத்துறான்.
ஆனா, வேதாளத்துக்கு மந்திரவாதி வேல குடுத்து பென்ட கழட்றானா, அதனால, மீதி கதைய இந்த வீக் எண்டுக்குள்ள சொல்றதா சொல்லிருக்கு.
Superrr dude.. kalakureenga.. so much fun..;) first time in your blog.. but I think I'll keep visiting for this 'maathi' & 'thalam' :)..
Miga arumayana Nadai. you have great potential to be a very good writer
congrats... keep it up..
Ravi
//you have great potential to be a very good writer//
இதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்
செம ரகளையா இருக்குங்க உங்க ஸ்டைல். அப்புறம் நீங்க செலக்ட் பண்ணி இருக்கும் சப்ஜெக்ட்டும்.
//நான் அடுத்த பிறவியில் ஆடிட்டராக பிறன்து யாராவது ஒரு அம்மாவிடம் செருப்பால் தான் அடி வாங்க போகிறேன்!"//
செம நக்கல் இதெல்லாம்
கலக்குங்க பாஸ்.
அடுத்த பார்ட் waitteees...
ஆமா, பாகிஸ்தானி பிரியாணி எண்ணைல (டால்டா ?) மிதக்குமாமே ?
No wonder, பதான்களெல்லாம் வீரபாகு மாதிரி இருக்காங்க.
//நான் அடுத்த பிறவியில் ஆடிட்டராக பிறன்து யாராவது ஒரு அம்மாவிடம் செருப்பால் தான் அடி வாங்க போகிறேன்!"//
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.கதையை விட எனக்கு அதில் நடுவே வரும் comments ரொம்ப பிடித்திருக்கிறது.
english dialogues are really great.excellent observation. were you there around them all the time??? if you say, its just a story & dialogues just came up; then you try writing for english magz/tv.
Shrek
(note, i didn't put no smily in there, you know what i mean)
//
sarav said...
Superrr dude.. kalakureenga.. so much fun..;) first time in your blog.. but I think I'll keep visiting for this 'maathi' & 'thalam' :)..
//
வாங்க சரவ், வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி!
அடிக்கடி வாங்க!
//
Anonymous said...
Miga arumayana Nadai. you have great potential to be a very good writer
congrats... keep it up..
Ravi
//
வாங்க ரவி. வாழ்த்துக்கு நன்றி. நாம ரைட்டர் எல்லாம் இல்லங்க. அதுக்கெல்லாம் நல்லா எழுதுறவுங்க நெறயப்பேரு இருக்காங்க.
கிறுக்குறது தான் நமக்கு பழக்கம்.
//
நந்து f/o நிலா said...
//you have great potential to be a very good writer//
இதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்
செம ரகளையா இருக்குங்க உங்க ஸ்டைல். அப்புறம் நீங்க செலக்ட் பண்ணி இருக்கும் சப்ஜெக்ட்டும்.
//நான் அடுத்த பிறவியில் ஆடிட்டராக பிறன்து யாராவது ஒரு அம்மாவிடம் செருப்பால் தான் அடி வாங்க போகிறேன்!"//
செம நக்கல் இதெல்லாம்
கலக்குங்க பாஸ்.
//
வாங்க நந்து சார். பாராட்டுகளுக்கு நன்றி.
நம்புங்க பாஸ், அந்த செருப்பு பயத்தினால தான் நான் ஆடிட்டருக்கே படிக்கல.
(இல்லாட்டி மட்டும் படிச்சிருப்பியா?.. யார்யா அது, சந்துல லாரி ஓட்றது?)
//
Indian said...
அடுத்த பார்ட் waitteees...
ஆமா, பாகிஸ்தானி பிரியாணி எண்ணைல (டால்டா ?) மிதக்குமாமே ?
No wonder, பதான்களெல்லாம் வீரபாகு மாதிரி இருக்காங்க.
//
வாங்க இந்தியன். வருகைக்கு நன்றி.
பாகிஸ்தானி பிரியாணில அவ்வளவா ஆயில் இருக்காது. மற்ற ஐட்டம் எல்லாம் பயங்கர ஆயில் தான். ஒரு கறி வாங்குனா, அதுல இருக்க ஆயில வச்சி நாலு நாளக்கி நாம கார் ஓட்டலாம்.
ஆனா அது பாகிஸ்தானி ஹோட்டல்னு இல்ல, எல்லா இன்டியன் ரெஸ்டாரன்டும் அப்படி தான்.
ரெஸ்டாரன்ட் நடத்துறேன்னுட்டு, பெட்ரோல் பங்க் நடத்திட்டு இருக்கானுங்க!
//
பாபு said...
//நான் அடுத்த பிறவியில் ஆடிட்டராக பிறன்து யாராவது ஒரு அம்மாவிடம் செருப்பால் தான் அடி வாங்க போகிறேன்!"//
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.கதையை விட எனக்கு அதில் நடுவே வரும் comments ரொம்ப பிடித்திருக்கிறது.
//
வாங்க பாபு. வருகைக்கு நன்றி.
அந்த கமெண்ட்லாம் அந்த மொட்டை வேதாளம் அப்பப்ப கொட்றது. கருத்து கந்தசாமி அது :0)
//
Anonymous said...
english dialogues are really great.excellent observation. were you there around them all the time??? if you say, its just a story & dialogues just came up; then you try writing for english magz/tv.
Shrek
(note, i didn't put no smily in there, you know what i mean)
//
வாங்க Shrek. I take your words as a compliment. Thanks!
என்னது அப்சர்வேஷனா?? வாத்தியாரு காதுல குச்சை விட்டு கொடஞ்சாலே அவரு சொல்றத கவனிக்காத பய நாம, இதையெல்லாம் எங்க கவனிக்க போறோம்?? சில டயலாக்ஸ் விஜியே சொன்னது. மீதி வேதாளமா சொல்றது :0)
The storey is really touching.
Yah, I am like that Viji but no Anderson came to me. Yes, my family-mom, dad, as eldest of the clan, my down cousins this that, they were writing the fate of my life. When I corrected, had to lose my dad due to heart attack.
Still I am tempting guys younger than me, no one has time fully for me. "Vaalvin Nathikaraiyil thanimayil Naan.... inum ethanai nalo?"
Post a Comment